16.9.26

குழந்தைகள், வயதானவர்கள் யாரை கவனித்துக் கொள்வது கடினம்? + சரோஜாதேவி பகுதி 16

 

கேள்வி பதில்கள் : 

பானுமதி வெங்கடேஸ்வரன் : 

எந்த விஷயங்களில் உங்களை பூமர் என்று உங்களை சுற்றியிருப்பவர்கள் கருதுகிறார்கள்?

நீங்களே உங்களை பூமர் என்று நினைக்கும் தருணங்கள் உண்டா?

# காதில் விழுவதெல்லாம் உண்மை என்று நம்பி கலக்கமடைவதை சுட்டிக் காட்டி " இது பூமர்த்தனம் " என்று சொல்லும் போது அது சரி என்றே எனக்கும் தோன்றும்.

& சுற்றியிருப்பவர்கள் கருதுவது எதுவும் எனக்குத் தெரிவதில்லை. நான் சந்திப்பது நெருங்கிய உறவினர்களையும் , எப்போதாவது நண்பர்களையும். 

நானே என்னை இதுவரை பூமர் என்று நினைத்தது இதுவரை இல்லை. 

குழந்தைகள், வயதானவர்கள் யாரை கவனித்துக் கொள்வது கடினம்?

# வயதானவர்களை கவனித்துக் கொள்வது சிரமம் என்று நினைக்கிறேன்.  சிறு குழந்தைகளை கவனிக்க வேண்டிய நாட்களில் நமக்கு உடல் மனம் இரண்டுமே வலுவாக இருக்கும்.

& வயதானவர்கள் என்னும் வயதான குழந்தைகளை கவனித்துக்கொள்வதுதான் கடினம். 

குழந்தை வளர்ப்பில் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் எவை?

# அவர்கள் தவறு செய்யும் போது அதை சாந்தமாக ஆனால் உறுதியாகத்  திருத்த வேண்டும்.  நல்ல விஷயங்களை அலுப்படிக்காமல் உணர்த்த வேண்டும்.

குழந்தைகளுக்கு எதை கற்றுத்தர வேண்டும் தன்னம்பிக்கையா கடவுள் நம்பிக்கையா?

& கடவுள் நம்பிக்கையால் வருகின்ற தன்னம்பிக்கையை. 

நெல்லைத்தமிழன் : 

1 பாவ புண்ணியம் பற்றிப் பேசும் நாம், ஒவ்வொரு செயலைச் செய்யும் போதும் இது நல்ல செயலா இல்லை கெட்ட செயலா என்று பார்த்துப் பார்த்துச் செய்கிறோமா?  

# நான் அப்படித்தான் செய்கிறேன்.  சில விஷயங்களில் அசிரத்தை இருக்கும் போது அதை உணர்ந்து சரி செய்து கொள்கிறேன்.

& எனக்கு எப்போதும் வருகின்ற சந்தேகம் : கரப்பான் பூச்சிகளை கண்டவுடனேயே Hit அடித்துக் கொல்கிறேனே இது பாவமா அல்லது புண்ணியமா? 

2.தானம் என்பது என்ன? பாத்திரமறிந்து பிச்சையிடு என்பதன் அர்த்தம் என்ன? ஏன் தான தர்மம் என்று சேர்த்துச் சொல்கிறோம்?

# இல்லாதவனுக்குக் கொடுப்பது தானம்.  ஊர்ப் பொதுக் கிணறு அமைப்பது தர்மம். 

குடிகாரனுக்கு பண உதவி செய்தால் அவன் மேலும் குடித்து தன்னை மோசமாக்கிக் கொள்வான்.  அப்படிப்பட்ட தானத்தால் பயனில்லை. எனவேதான் பாத்திரமறிந்து பிச்சை இடு என்று சொல்லப் பட்டது.

& மகாபாரதத்தில் கர்ணன் இறக்கும் சமயத்தில் கண்ணனைக் கேட்கிறான் : " நான் தான தர்மங்கள் செய்யவில்லையா - எனக்கு ஏன் இந்த நிலை? " என்று. 

அதற்கு கண்ணன், " நீ செய்தது தானம் மட்டுமே. பாண்டவர்களுக்கும், திரௌபதிக்கும் நீ செய்தது எதுவுமே தர்மம் இல்லை. அதர்ம வழியில் நடந்ததால் உனக்கு இந்த நிலை. " 

3.பிராமணன் சொத்து சேர்த்து வைத்துக்கொள்ளக் கூடாது என்பது சாஸ்திரம். அதை நம்மால் ஏன் பின்பற்ற இயலவில்லை?

 # நாம் பிராமணர்களல்லாமல் போனதுதான் காரணம்.

& சார் நாம இருப்பது இருபத்து ஓராம் நூற்றாண்டு. இப்போ இந்த சாஸ்திரம் எல்லாம் பார்ப்பவர்கள் சரியான பைத்தியங்கள்! 

4.உங்கள் வாழ்க்கையில் உங்களால் மறக்க இயலாத உதவியைச் செய்தவர் யார்? அல்லது உதவி செய்ய முயற்சித்தவர் யார்? அதுபற்றி விவரிக்க இயலுமா? 

# பெரிய அளவில் உதவி பெறத் தேவையில்லாமலே என் வாழ்க்கை கழிந்திருக்கிறது. கடவுளுக்கு நன்றி. மற்றபடி கல்யாணம் போன்ற செலவுகள் வரும்போது நண்பர்கள் ஏனென்று கேளாது எவ்வளவு வேண்டுமானாலும் கடன் கொடுத்து வட்டி இல்லாமல் நான் சொன்ன போது திரும்ப வாங்கிக் கொண்டார்கள். அவர்களுக்கு நான் என்றென்றும் நன்றி கடன் பட்டிருக்கிறேன். அதை அவ்வப்போது நினைத்தும் பார்த்திருக்கிறேன். 

நான் சற்று புத்திசாலி. நன்றாக முன்னுக்கு வர முடியும் என்று எனக்கு சில ஆசிரியர்கள் தைரியம் கொடுத்தார்கள். அவர்கள் ஆசியினாலோ என்னவோ என் வாழ்வு பெரிய சிக்கல் இல்லாமல் இருந்து வந்திருக்கிறது. இதற்கு நன்றி சொல்ல கூட எனக்கு சந்தர்ப்பம் இல்லை. அது என் வாழ்வில் ஒரு நிரந்தர ஏமாற்றம்.‌

& என் பையன் மேல் படிப்புக்காக அமெரிக்கா சென்றபோது தாராளமாக பண உதவி செய்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள்தான் மறக்க இயலாத உதவியை செய்தவர்கள். 

5. நண்பர்கள் ஒருவனது வாழ்க்கையை பிரகாசிக்கச் செய்கிறார்களா இல்லை உறவினர்களா?

# நம் வாழ்க்கை மேம்படுமாறு நாம் உணர்வது நல்ல நண்பர்களால் மட்டுமே. உறவினர்கள் நம்மை சிலாகித்து பேசுவதும் ஊக்கம் தரும் என்றாலும் நல்ல நண்பர்கள் நமக்கு நல்லதே நினைக்கிறார்கள் என்பது வாழ்க்கையின் மிகப்பெரிய ஆசீர்வாதம்.

= = = = = = = = =

படமும் பதமும் : 

என்னுடைய பொசிஷனுக்காக (அதாவது நான் வேலை பார்த்த நிறுவனத்தில் என்னுடைய நிலைக்காக) எனக்கு எந்த கிஃப்ட் அல்லது சலுகைகள் வந்தாலும் நான் எடுத்துக்கொள்ள மாட்டேன். எனக்கு நிறைய அஃபீஷியல் கெஸ்ட் மற்றும் பல வெளி அலுவலகம் தொடர்புடைய ஆட்கள் வருவார்கள். அவர்களை நான் எங்கள் ரெஸ்டாரண்டுகளுக்கோ இல்லை வேறு இடங்களுக்கோ உணவிற்கு அழைத்துச்செல்லலாம். ஆனால் பெரும்பாலும் நான் அப்படிச் செய்வதில்லை. நான்  ப்யூர் வெஜ் என்பதும் ஒரு காரணம் (ஹாஹா). எனக்கு சில நேரங்களில் மொபைல் பரிசாக வரும். அல்லது வேறு பொருட்கள். எல்லாவற்றையும் ஹெட் ஆபீஸுக்கு அனுப்பிவிடுவேன்.  ஒரு தடவை மேலே உள்ள ஃப்ரூட் கொத்து பெரிய கம்பெனியிலிருந்து எனக்கு அனுப்பியிருந்தார்கள். அப்போது என் அம்மா பஹ்ரைனுக்கு வந்திருந்தார். அதனால் என் பாஸிடம் படத்தை அனுப்பி இதை மாத்திரம் நான் வீட்டுக்கு எடுத்துச் செல்லவா என்று கேட்டேன். இந்த மாதிரி சின்ன விஷயத்துக்கு எதற்கு அனுமதி கேட்கிறாய் என்று சொல்லிவிட்டான். பிறகு இதனை வீட்டிற்கு எடுத்துச் சென்றேன்.


நான் இந்தப் பழக்கொத்தில் எதையும் சாப்பிடவில்லை. இதுபோல ஒரு முறை ரெட் வெல்வெட் கேக் மிகப் பெரியது எனக்கு வந்தது. என் குடும்பம் அப்போது என்னுடன் பஹ்ரைனில் இல்லை. என் பெண், ரெட் வெல்வெட் கேக் என்பது மிகவும் சுவையாக இருக்கும், தனித்துவம் வாய்ந்தது என்று சொன்னாள். எனக்கு அதில் ஆர்வம் இருந்ததில்லை. அதனால் என் அலுவலகத்தில் உள்ளவர்களை எடுத்துக்கொள்ளச் சொல்லிவிட்டேன். அதன் படம் எங்காவது எடுத்திருந்தால் பகிர்கிறேன்.

= = = = = = = = = = = = =

KGG பக்கம் : 

சரோஜாதேவி தொடர் கதை 

சென்ற வாரம் - சுட்டி : பகுதி 15 : ஆனந்தின் சம்மதம். 

இனி 

இந்த வாரப் பகுதி. 

பகுதி 16 : நிச்சயதார்த்தம் 

திட்டமிட்டபடியே நிச்சயதார்த்தம் திருவல்லிக்கேணியில் இருந்த ஒரு கல்யாணமண்டபத்தில் விமரிசையாக நடைபெற்றது. 

ஜயராமனின் உறவினர்கள், நண்பர்கள், பாபா, வீணா , விமலா இருவரின் தோழிகள், ஆனந்த் குடும்பத்தின் உறவினர்கள் நண்பர்கள் (நாநாவும் வந்திருந்தான்) என்று பலரும் வந்திருந்தனர். 

நடக்கும் நிகழ்ச்சிகளை, ஆனந்த் அமெரிக்காவிலிருந்து வீடியோ கால் வழியாகப் பார்த்துக்கொண்டிருந்தான். 

அடுத்த மாதம் 14 ஆம் தேதி முகூர்த்தம் வைப்பதாக  லக்னப் பத்திரிக்கையில் குறிப்பிட்டார்கள். 

லக்னப் பத்திரிக்கை எழுதப்பட்டு இரு தரப்பிலும் இருந்த மூத்த உறவினர் கையெழுத்து இட்டார்கள். 

காலை டிஃபன், மதியம் சாப்பாடு எல்லாம் தடபுடலாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.  

காலை டிஃபன் சாப்பிட்ட பின் கை கழுவ சென்றபோது நாநாவிற்கு முன்பாக கியூவில் நின்றிருந்தவர் " .. .. அதெல்லாம் நீ கவலைப் படாதே .. ..  .. ..  எப்படியும் நிறுத்திவிடுவேன். நான் எடுத்து அனுப்பும் படங்களை மட்டும் நீ பார்த்து, உன் திறமையைக் காட்டு - அப்புறம் அவ உனக்குத்தான் .. .. " என்றார். 

நாநாவிற்கு இந்த உரையாடல் விசித்திரமாகப் பட்டது. பேசியவர் யார் என்று பார்த்தான். 

முன்பின் பார்த்திராதவர். கை கழுவி முடித்தபின் பேசியவரின் பின்பாக விரைவாக நடந்து, அவர் உட்கார்ந்த பிறகு, அவர் முன்பு சென்று, கூட்டத்தை ஃபோட்டோ எடுப்பவன்போல அவரை ஒரு ஜும் ஷாட் எடுத்தான். 

பிறகு, பாபாவிடம் அவர் படத்தைக் காட்டி, இவர் யார் என்று கேட்டான் நாநா. 

பாபா, " இவர்தான் வீணாவின் தாய் மாமா - நான், நீ இங்கே வந்த அன்று சொன்னேனே சேலம் மாமா - தெருவில் இறங்கி ஒரு லவ் ஜோடியைக் கண்டித்துவிட்டு - விஷயம் விபரீதம் ஆகும் என்று தெரிந்தவுடன் ஊருக்கு ஓடிப்போனவர். ஏன் கேட்கிறாய்? " 

" ஒன்றும் இல்லை - சும்மா தெரிந்துகொள்ளத்தான் கேட்டேன்" என்றான் நாநா. ஆனால் அதற்குப் பின் அந்த சேலம் மாமாவின் நடமாட்டாங்களையும் அவர் நிச்சயதார்த்த நிகழ்வுகளை  மொபைல் போனில் படம் எடுப்பவைகளையும் உன்னிப்பாக கவனித்தான். அவர் வீணா பேசுவது சிரிப்பது எல்லாவற்றையும் cover செய்வது நாநாவின் கவனத்தை பெற்றது. நாநா அவருடைய சில நடவடிக்கைகளை தன்னுடைய செல் போனில் ஃபோட்டோ மற்றும் வீடியோ பிடித்துக்கொண்டான். 


= = = = = = = = = = = =

நிச்சயதார்த்தம் நன்றாக நடந்து முடிந்தது. 

உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் விடைபெற்றுச் சென்றனர். 

ஆனந்தின் பெற்றோர்கள் அங்கிருந்து  கோவை செல்ல கிளம்பினார்கள். புறப்படுவதற்கு முன்பு, ஆனந்த் கல்யாணம் நடக்க இவ்வளவு முயற்சிகள் எடுத்த பாபா & நாநா இருவருக்கும் நன்றி தெரிவித்தார்கள். 

" நீங்க ரெண்டு பேரும் எப்போ கல்யாணம் செய்துகொள்வதாக இருக்கிறீர்கள்? " என்று கேட்டார் ஆனந்தின் அப்பா. 

" எங்களுக்குப் பிடிச்ச பெண்ணா கிடைக்கும்போது " என்று சொல்லிச் சிரித்தான் நாநா. 

(தொடரும்) 

36 கருத்துகள்:

  1. புகைப்படம் எடுக்கும்போது இந்த ஆங்கிளில் புகைப்படம் எடுப்பவரை இப்போதுதான் காண்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. வயதானவர்களைக் கவனித்துக்கொள்வதுதான் சிரம்ம். குழந்தைகள் அறியாமல் தவறுகள் செய்யும் (எதையேனும் வாய்ல போட்டுக்களது, மேலே உள்ள பொருட்களை இழுப்பது, கிச்சன் மேடையை எம்பி ஏற முயற்சித்து அடிபட்டுக்கொள்வது எனப் பல). அதை கவனமாக்க் கண்காணித்துத் திருத்திவிடலாம். பெரியவங்களை சுலபமா பார்த்துக்க முடியாது. நம்மை அவங்க சின்னவங்களாப் பார்ப்பதாலும் அவங்கள்ட இயல்பா நமக்கு இருக்கும் மரியாதை கலந்த பயம். குழந்தைகளிடம் நமக்கு அசூயை ஏற்படாது, எதற்குமே. ஆனால் பெரியவங்களிடம் அப்படி அல்ல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழந்தைகள் ஈரக் களிமண். வளைக்கலாம். பெரியவங்க பெரும்பாலும் காய்ந களிமண் அல்லது கல். வளைப்பது அபூர்வம்.

      நீக்கு
  3. குழந்தைகளுக்கு பயமின்மையும், அவங்களே முயற்சித்துப் பெறும் அனுபவத்தையும் (மரத்தில் ஏற முயல்வது போன்று) நம் கண்காணிப்பில் கற்றுத்தருவது முக்கியம்னு சொல்றாங்க. கடவுள் பக்தி ஒழுக்கம் போன்றவற்றை நாம் கற்றுத்தர இயலாது (படிப்பித்து). நம்மைப் பார்த்து கற்றுக்கொள்ளும். நாம் செய்யாத ஒன்றை அவங்க செய்யமாட்டாங்க. கடவுள் பக்தி இதற்குப் பொருந்தும்.

    பதிலளிநீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. தான தர்மம் பற்றிய உரையாடல் சிறப்பு...

    பதிலளிநீக்கு
  6. நான் கேட்க நினைத்ததெல்லாம் பானுமதி கேட்டுவிட்டார்.
    நெல்லையும் நாளோடும் பொழுதோடும் கேட்டிருக்கார். :}

    பதில்கள் சுவாரசியம். குழந்தைகளைக் கவனிப்பது சுலபம். ஏனெனில் அவர்களுக்கு ஒவ்வொன்றும் புதிது. ஆச்சரியம். சந்தோஷம். வியப்பு. ஆகவே எளிதில் அவர்களை நம் வசப்படுத்திச் சமாளிக்க முடியும். வேண்டாதவற்றிலிருந்து அவர்கள் கவனத்தைத் திருப்ப முடியும்.

    ஆனால் வயதானவர்கள் அனுபவம் மிக்கவர்கள். நாம் சொல்வதை எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் பிடித்த முயலுக்குக் காலே இல்லை என்னும் ரகம். சாப்பாட்டிலிருந்து ஒவ்வொன்றுக்கும் அவர்கள் எளிதில் சமாதானம் ஆக மாட்டார்கள். ஆனால் அதுவே அக்கம்பக்கத்து வீடுகளில் இருந்து எது வந்தாலும் மிகவும் ஆவலும் ஆர்வமும் காட்டி, அது வரை இவற்றை எல்லாம் பார்த்தே இராத மாதிரி நடந்துப்பாங்க. பொதுவாக எல்லோருக்கும் இது தான் கை வந்த கலை.

    ஆனால் இப்போதெல்லாம் நானே அந்தப் பெரியவங்க ஸ்தானத்தில் இருக்கிறபடியால் இதைப் பத்தி நான் ஏதுவும் சொல்லுவது சரியாய் இருக்காது. மேலே சொன்னது என்னோட சின்ன வயசில் பெரியவங்களுடன் ஏற்பட்ட அனுபவங்கள்.
    என்னைப் பொறுத்தவரை என் ருசிக்கு நானே சமைச்சுக்கிறேன். காலை காஃபியில் இருந்து இரவு உணவு வரை. படுக்கை போடாமல் இருக்கணும் என்பதே பிரார்த்தனை. மற்றபடிப் பெரும்பாலும் எனக்கெனக் கொடுக்கப்பட்டிருக்கும் அறையை விட்டு ஸ்வாமிக்கு விளக்கேற்றச் செல்வதோடு சரி. கணினியும் நானும் தான். எதையும் காதில் போட்டுக் கொண்டு மனசைக் குழப்பிக்கிறதில்லை. நான் இல்லைனாலும் குடும்பம் நடக்கும் என்பதைப் புரிந்து கொண்டு நடந்துக்கறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நான் இல்லைனாலும் குடும்பம் நடக்கும் என்பதைப் புரிந்து கொண்டு// சூப்பர் சூப்பரான வரி இது. 60 வயதாகிவிட்டாலே இப்படித்தான் இருக்கணும்னு பலர் சொல்றாங்க. இன்னொன்று என்ன சொல்றாங்கன்னா.... ஆபீஸ் வேலை, பொசிஷனைப் பற்றி பீத்திக்கக்கூடாது, அது கடந்த காலம்னு ஏத்துக்கணும்னும் சொல்றாங்க

      நீக்கு
  7. இப்போதைய என் போன்ற பெரியவங்க இப்படித் தான் நடந்துப்பாங்கனும் நினைக்கிறேன். ஏனெனில் என்னோட வயசுக்கு இப்போது இருப்பவங்க அனைவரும் ஓரளவு படிச்சு உலக அனுபவம் பெற்று மாமியார், மாமனாரிடம் பெரும்பாலும் அடிபட்டு, மிதிபட்டு மீண்டு வந்திருப்பார்கள். அவர்களுக்குப் பெரியவங்களைச் சமாளிக்கிறதுக்கு இந்தக் காலப் பிள்ளைகளால் எந்த அளவுக்கு முடியும் என்பது புரிந்திருக்குமே. எவற்றில் பிள்ளைகளை எதிர்பார்க்கலாம், எவற்றில் எதிர்பார்க்கக் கூடாது, எந்த அளவுக்கு அவங்க குடும்ப விவகாரங்களில் தலையிடலாம் என்பதெல்லாம் இப்போதுள்ள வயதான பெற்றோர் நன்கு அறிந்திருப்பார்கள்.

    பதிலளிநீக்கு
  8. தானம், தர்மம் குறித்த வேறுபாடுகளைச் சொன்னதுக்கு நன்றி. ஆனால் இப்போதைய காலத்தில் கண்ணன் கர்ணனுக்குச் சொன்னது எல்லோருக்கும் பொருந்தாது. ஏனெனில் இப்போதெல்லாம் அதர்ம வழியில் நடந்தால் தான் பிரபலம் ஆக முடியும். அதுவும் கோயில்களை எப்படியாவது சிறுமைப் படுத்துபவர்களே சிறந்த தலைவர்கள் ஆவார்கள்.

    சில சமயம் நாம் செய்யும் செயல் பாவம் என்பதைத் தெரிந்து கொண்டே செய்வோம். அதற்கேற்றாற்போல் "தன்னைக் கொல்ல வரும் பசு"வைக் கூடக் கொல்லலாம் என்றும் சொல்லிட்டுப் போயிருக்காங்க. :(

    உதவினு பார்த்தால் நான் படிக்கும் காலம் எனக்குப் பேருதவி செய்த என்னோட ஆசிரியர் திரு கணபதி சுப்ரமணியம் என்னும் கோபால் சார் தான். என்னோட பொது அறிவை மட்டும் வளர்க்கவில்லை அவர். எஸ்.எஸ்.எல்.சி. வரை படிப்பதே பெரும்பாடாக இருந்தது எனக்கு. அப்போது அவர் நான் பள்ளியில் தொடர்ந்து படிக்கப் பேருதவி செய்ததோடு பின்னரும் அவரோட "மஹா கணபதி டெக்னிகல் இன்ஸ்டிட்யூட்"இல் என்னைச் சேர்த்துக் கொண்டு சம்பளம் வாங்காமல் படிக்க வைத்தார். பரிக்ஷைக்கான பணம் மட்டும் அப்பா கட்டணும் என்கிற நிலைமை. ஆனால் அப்போவும் என்னோட பெரியப்பா பெண், வேலை பார்த்ததால் அவர் கொடுப்பார். அதிகமெல்லாம் இல்லை அப்போது பத்து ரூபாய் தான் பரிக்ஷைக்கட்டணம். நான் டைப்பிங் மட்டும் அங்கே படிக்கலை. சுருக்கெழுத்து, அக்கவுன்டன்சி எனப் பலதும் படிச்சேன். எல்ல்லாவற்றுக்கும் கட்டணமே வாங்காமல் சொல்லிக் கொடுத்ததோடு பரிக்ஷை சமயம் என்னைத் தனியாக வரச் சொல்லியும் சொல்லிக் கொடுப்பார்.

    அதோடு எனக்கு இன்னிக்குக் கொஞ்சமானும் பொது அறிவு, நாட்டு நிலவரம் ஆகியவை தெரியுது எனில் அதற்குக் காரணமும் அவரே. இந்தியச் சுதந்திரத்தின் பின்னணி, நேரு, காந்தி ஆகியோரால் விளைந்த விளைவுகள், படேலை காந்தி தவிர்த்தது, படேல் உள்துறை அமைச்சராக இருந்து கொண்டு சமஸ்தானங்களை இந்தியாவோடு சேர்த்து ஒருங்கிணைந்த பாரதமாக உருவாக்கியது, காஷ்மீர் அரசர் இந்தியாவோடு சேர வந்தப்போ ஆக்ஷேபித்த நேருவையும், அதனால் விளைந்த விளைவுகளையும் எங்களுக்கு எடுத்துச் சொல்லி இருக்கார். காஷ்மீரில் இந்து அரசர், முஸ்லிம் குடிமக்கள்.முதல் முறை காஷ்மீருக்காகச் சண்டை வந்தப்போ ஜெனெரல் கரியப்பாவை நேரு அவமானம் செய்ததுனு பல விஷயங்கள். எழுதிண்டே போகலாம். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளக்கமான கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
    2. @Gouthaman Sir, Check your mail. :)

      நீக்கு
    3. பார்த்தேன். 6 கேள்விகளுக்கு அடுத்த புதன் கிழமை பதில் அளிப்போம்.

      நீக்கு
    4. நேரு இப்போதிருந்தால் பிடித்து, கிம் ஜாங் உன்னிடம் கொடுத்துவிடலாம்.

      நீக்கு
    5. :))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))000

      நீக்கு
  9. பெரியவர்களை சமாளிப்பது என்பது சிரமம்தான். ' 'நான் தனியே இருந்துக்குவேன் எனக்கு ஒருவரின் உதவியும் வேண்டாம்' என டூஸ் சொல்பவர்களையும் கண்டிருக்கிறோம்.

    கதை நன்றாகப் போகிறது நிச்சயதார்த்தமும் முடிந்துவிட்டது.

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  11. கேள்விகளும் பதில்களும் அருமை.

    #// வயதானவர்களை கவனித்துக் கொள்வது சிரமம் என்று நினைக்கிறேன். சிறு குழந்தைகளை கவனிக்க வேண்டிய நாட்களில் நமக்கு உடல் மனம் இரண்டுமே வலுவாக இருக்கும்.//

    உண்மை.

    //& வயதானவர்கள் என்னும் வயதான குழந்தைகளை கவனித்துக்கொள்வதுதான் கடினம். //

    மிக மிக உண்மை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வயதானவர்கள் அவர்களுக்கு உடல் பலம் இருக்கும் போது குடும்பத்திற்கு உழைக்க தயங்க மாட்டார்கள். ஆனால் உடல் நலம் குறைந்து விட்டால் பிள்ளைகள், மருத்துவர்கள் சொல்வதை கேட்க வில்லை என்றால்தான் பார்த்து கொள்வது சிரமம்.

      இப்போது பார்த்து கொள்ள ஆள் போடுகிறார்கள். குழந்தைகள் அன்பாய் பேசினால் போதும். வயது, வியாதி காரணமாய் சில பெரியவர்கள் கோபமாய் செயல் படுவார்கள்,சிலர் பொறுமையாக இருப்பார்கள் இறைவன் நாமங்களை சொல்லி கொண்டு, நாம் குழந்தைகளை சிரம படுத்துகிறோம் என்று வருந்துவார்கள்.

      சில குடும்பங்களில் வயதானவர்கள் குழந்தைகளை பார்த்து கொண்டு வீட்டு வேலைகளையும் பார்த்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், சிலர் துன்ப படுகிறார்கள்.


      நீக்கு
  12. படமும் பதமும் பகிர்ந்த படம் அழகு. பழ கொத்தை பூங் கொத்து போல அழகாய் செய்து இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  13. நிச்சயதார்த்தம் சிறப்பாக நடந்து விட்டது. திருமணம் இடையூறு இல்லாமல் நடக்க வேண்டும்.

    வீணாவின் தாய் மாமாவால் இடையூறு வரும் போல இருக்கே!
    கதை அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பை தருகிறது.

    பதிலளிநீக்கு
  14. ..கரப்பான் பூச்சிகளை கண்டவுடனேயே Hit அடித்துக் கொல்கிறேனே இது பாவமா அல்லது புண்ணியமா? //

    யாராவது ஒருவராது இது புண்ணியம்தான் என்று சொல்லிவிடமாட்டாரா என நீங்கள் ஏங்குவது புரிகிறது! எதற்கும் AI யிடம் ஒரு வார்த்தைக் கேட்டுவிடுங்கள்!

    பதிலளிநீக்கு
  15. கரப்பான் பூச்சிகள் அழிக்கப் படவேண்டியவைதான். நானே நிறைய அடித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  16. வயதானவர்களைப் பார்த்துக் கொள்வதுதான் கடினம்.என்காலத்திலும்அதுகஷ்டம்இப்போதும்சிரமம்யாரையும்தொந்தரவுசெய்யாமல்ஒதுங்குவது நல்லதுசிரமம்கொடுக்காமல் வாழ்ந்து மறைய வேண்டும்.

    பதிலளிநீக்கு
  17. //என்னுடைய பொசிஷனுக்காக (அதாவது நான் வேலை பார்த்த நிறுவனத்தில் என்னுடைய நிலைக்காக) எனக்கு எந்த கிஃப்ட் அல்லது சலுகைகள் வந்தாலும் நான் எடுத்துக்கொள்ள மாட்டேன்.// உங்களுடைய இந்த பழக்கம் உங்களுக்கு அலுவலகத்தில் நல்ல மரியாதையை கொடுத்திருக்கும்.

    பதிலளிநீக்கு

பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!