நான் டேடாமாஸ் என்ற கன்சல்டன்சி கம்பெனியில் செப்டம்பர் 1995ல் சேர்ந்தேன். அந்த கம்பெனியில் சுமார் 30 பேர்களுக்கு மேல் பணி புரிந்தோம். அதில் பலர், ஆன் சைட் சப்போர்ட் என்று சொல்லப்படுவது போல, அந்த அந்த கம்பெனிகளுக்கே நேரடியாக ரிப்போர்ட் செய்து வேலை பார்ப்பார்கள். வேலை பார்க்கும் கம்பெனியின் நேரத்தைத்தான் கடைபிடிப்பார்கள். ஒரு கம்பெனிக்கு, நல்ல ஆரக்கிள் ப்ரோக்ராம் டெவலப்பர்கள் மற்றும் சப்போர்டர்கள் தேவை என்றால் எங்கள் கம்பெனியைத் தொடர்பு கொள்வார்கள். அந்தக் கம்பெனி ஒருவருக்கு 1800-2000 தினார் மாதத்திற்குத் தருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதற்கான சரியான ஆட்களை source செய்து, இண்டெர்வியூ நடத்தி, பிறகு கம்பெனியின் I.T. துறை மேனேஜரும் ஏற்றுக்கொண்டபின், அவர்களை பஹ்ரைனுக்குக் கொண்டு வருவது எங்கள் கம்பெனி பொறுப்பு. மாதச் சம்பளம் இன்ன பிறவற்றைக் கொடுக்கும் பொறுப்பு எங்கள் கம்பெனியினுடையது. எங்கள் கம்பெனி சார்பாக, அந்தக் கம்பெனியில் வேலை பார்ப்பார்கள். அந்தக் கம்பெனி எங்கள் கம்பெனிக்கு பணத்தைச் செலுத்திவிடும். ஆள் சரியில்லை என்றாலோ, இல்லை கம்பெனியை விட்டு விலகிவிட்டாலோ, அடுத்த ஆளைத் தரவேண்டியது எங்கள் கம்பெனியின் பொறுப்பு. இந்த மாதிரி நிறைய பேரும், கம்பெனியின் சாஃப்ட்வேர் அப்ளிகேஷனை டெவெலப் செய்வது, சப்போர்ட் செய்வது, புது கம்பெனிக்கு இன்ஸ்டால் செய்வது என்று பலரும் இருப்பார்கள்.
ஒவ்வொருவரையும் தேர்ந்தெடுத்து பிறகு பஹ்ரைனுக்கு கொண்டு வந்து பயிற்சி தந்து அவர்கள் மூலமாக கம்பெனி லாபம் சம்பாதிக்கவேண்டும். கம்பெனிக்கு வந்து சில பல மாதங்கள் பணி புரிந்தபிறகு, பொதுவாக பலர் அமெரிக்க வேலை வாய்ப்பை நோக்கிச் செல்வர். அதிலும் Y2K எனப்படும் 21ம் நூற்றாண்டு ஆரம்பிப்பதால் செய்யவேண்டிய சாஃப்ட்வேர் மாற்றங்களால் நிறைய டெவலபர்கள் அமெரிக்க கம்பெனிகளுக்குத் தேவையாக இருந்தனர். (அதாவது அமெரிக்காவில் இருக்கும் கன்சல்டன்சி கம்பெனிகள்). அதனாலும் நிறைய ஆட்களை இண்டர்வியூ செய்து வேலைக்கு எடுப்பது அதிகரித்தது. சில நேரங்களில் இரண்டு மாதங்களுக்கு மூன்று பேர் ரிசைன் பண்ணிவிடுவார்கள். (இடையில் உடம்பு சரியில்லை என்று விடுமுறை எடுத்தாலோ இல்லை, போக வேண்டிய கம்பெனிக்கு போகாமலிருந்தாலோ, எங்கள் பொது மேலாளர்., அவர்கள் அமெரிக்கன் எம்பஸிக்குத்தான் விசா ஸ்டாம்ப் பண்ணச் சென்றிருப்பார்கள் என்று சொல்வார்). நான் பல நாட்கள் இரவிலும் 11 மணி வரை வேலை செய்வேன். அதனால் என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியும்.
என்னுடன் பணியாற்றுபவர் பலரும், இரவில் அமெரிக்க வேலைக்காக டெலெபோன் இண்டெர்வியூ அட்டெண்ட் செய்வார்கள். இதைப் பார்த்த எனக்கு, நம்முடைய திறன் அல்லது மதிப்பீடு இப்போது எப்படி இருக்கிறது என்று தெரிந்துகொள்ளும் ஆசை வந்தது. என்னுடன் கூட வேலை பார்ப்பவர்கள் போன வாரம் இண்டெர்வியூ அட்டெண்ட் பண்ணினேன், செலெக்ட் ஆகிவிட்டேன் என்று சொல்லும்போது என்னுடைய தகுதியையும் சோதித்துக்கொள்ளும் ஆசை வந்தது. (இது நடந்தது 96-97 வாக்கில்)
ஒரு நாள் நான் கம்பெனியின் பொது மேலாளரைப் போய்ப் பார்த்தேன் (அவர்தான் கம்பெனியின் தலைவர்). அவரிடம், நான் நிச்சயம் அந்த கம்பெனியில் 3 வருடங்கள் வேலை பார்ப்பேன் என்றும், பஹ்ரைனிலேயே வேறு நல்ல வாய்ப்பு வரும்போது புதிய கம்பெனியில் நான் சேர, எனக்கு ‘ஆட்சேபணை இல்லை’ என்ற சர்டிபிடிகேட் தரவேண்டும் என்றும் சொன்னேன். நிச்சயமாக அமெரிக்காவிற்குச் செல்ல மாட்டேன், ஆனால் என்னுடைய தகுதியைச் சோதித்துக்கொள்ளும் ஆசை இருப்பதால் நானும் டெலெபோன் இண்டெர்வியூ அட்டெண்ட் செய்யும் எண்ணம் இருக்கிறது, எனக்கும் ஆஃபர் கிடைத்தது, ஆனால் நான் போகவில்லை என்று சொல்லத்தான் எனக்கு இஷ்டம் என்றேன். நானே நேரிடையாக அவரிடம் என்னுடைய நிலையைத் தெரிவித்துவிட்டதால், அவருக்கு என் மீது நல்ல நம்பிக்கை வந்தது. அவரிடம் சொல்லாமல் நான் டெலெபோன் இண்டெர்வியூ அட்டெண்ட் செய்தால், யாரேனும் அவரிடம் சென்று போட்டுக்கொடுக்கும் வாய்ப்பு இருக்கிறது என்பதாலும், எனக்கு அந்தக் கம்பெனியிலேயே அடுத்த மூன்று வருடங்கள் தொடரணும் என்ற எண்ணம் இருந்ததாலும், நானே சென்று பொது மேலாளரிடம் சொல்லிவிட்டேன்.
பிறகு இரவில், நானும் டெலெபோன் இண்டெர்வியூ அட்டெண்ட் செய்தேன். ஒரு சில கம்பெனிகளின் ஆஃபர் லெட்டர் வந்தது. அதிலும் ஒரு கம்பெனி, உடனே விசா ஸ்டாம்ப் பண்ணுங்க, நாங்களே ஓரிரு வருடத்தில் கிரீன் கார்டுக்கு அப்ளை செய்வோம் என்றார்கள். நான் ஆஃபர் லெட்டரை வாங்கி என்னுடைய personal fileல் வைத்ததோடு அமெரிக்க வேலையை மறந்துவிட்டேன். விசா ஸ்டாம்ப் செய்து, பிறகு நான் வரவில்லை என்று சொல்லி அவனுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தக்கூடாது என்ற எண்ணத்தால்.
யாராவது அமெரிக்க வேலை வாய்ப்பை வேண்டாம் என்று சொல்லுவார்களா என நீங்கள் நினைக்கக் கூடும். என்னுடைய நெருங்கிய உறவினர்கள் பலர் (20-30 பேர் இருக்கலாம்) அமெரிக்கவாசிகளாக இருக்கிறார்கள். அவர்களில் சிலர் 60 வருடங்களுக்கு முன்பே சென்றவர்கள். இருந்தாலும் எனக்கு அமெரிக்காவில் வேலை செய்வதில் ஆர்வம் இருந்ததில்லை. ஏனோ.. அமெரிக்கா செல்லவேண்டும், சுற்றிப்பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் கூட வந்ததில்லை. அதைப்பற்றி எழுதினால் என் எண்ணம் தவறு என்று பலரும் நினைக்கலாம். எனக்கு என் கல்ச்சர், வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள இஷ்டமில்லை. நான் மாறமாட்டேன் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. ஆனால் பசங்களைப் பற்றிச் சொல்ல முடியாதல்லவா? அதனால் அமெரிக்கா போகவேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டேன். இப்படி எழுதுவதால், அமெரிக்கா சென்ற எல்லோருக்கும் கல்ச்சர் மாறிவிட்டது என்று அர்த்தம் இல்லை. அமெரிக்கா கனடாவில் நிறையபேர் நம்முடைய வாழ்க்கை முறையில் வாழறாங்க, ஆனால் அவங்க பசங்களும் அப்படியே இருப்பார்கள் என்று சொல்லமுடியாது. இருந்தாலும் என் எண்ணம் அப்படித்தான் இருந்தது.
நாம் ஒரு தேசத்தையும் இன்னொரு தேசத்தையும் நினைத்துக் குழப்பிக்கொள்ளக் கூடாது. ஒவ்வொரு நாடும் தன்னளவில் ஒரு கலாச்சாரத்தையும், வாழ்க்கை முறையையும், உணவுப் பழக்கங்களையும், கல்வி முறையையும் கொண்டிருக்கும். இது உயர்ந்தது, இன்னொன்று தாழ்ந்தது என்று சொல்வது சரியான செயல் அல்ல. ஒவ்வொரு தேசத்திற்கும் நேர்மறைகள் இருக்கும் எதிர்மறைகளும் இருக்கும். அமெரிக்கா மிகவும் நல்ல தேசம். அங்கு வாய்ப்புகள் ஏராளமாகக் கொட்டிக்கிடக்கிறது. நல்ல திறமை உள்ளவர்கள் எதிலும் முன்னேறும் வாய்ப்பு உண்டு. இருந்தாலும் என் எதிர்காலம் அமெரிக்காவில் இல்லை என்று நான் முடிவு செய்திருந்தேன். நான் பல தேசங்களுக்கும் பயணப்பட்டு, அங்குள்ள வாழ்க்கை முறைகளையும் சிறிது தெரிந்துவைத்துள்ளதால், எனக்கு எது சரி என்று தெளிவாக இருந்தேன். அவ்ளோதான்.
அது சரி.. இந்த Y2K பிரச்சனை என்றால் என்ன என்று தெரியுமா? பலருக்கும் தெரிந்திருக்கும். கணிணியில் தேதியைக் குறிக்க, dd-mm-yy என்ற முறை வைத்திருப்பார்கள். ஆரம்ப காலத்திலிருந்து கிபி 2000க்கு அப்புறம் எப்படிக் குறிப்பது என்ற யோசனையே யாருக்கும் எழவில்லை. ரொம்ப தாமதமாகத்தான் (அதாவது 1990களுக்குப் பிறகு) 2000 வந்துவிட்டால் என்ன செய்வது, எல்லா சாஃப்ட்வேர்களையும் மாற்றவேண்டுமே, இன்னும் பல இடங்களிலும் மாற்றவேண்டுமே என்ற எண்ணம் வந்தது (அப்படி மாற்றாவிட்டால், ஜனவரி 1, 2000ம் ஆண்டை கணிணியில் 01-01-00 என்று குறிப்பிடவேண்டியிருக்கும். பிறகு இந்த 00, 1900வா இல்லை 2000மா என்ற பெரும் குழப்பம் வரும். இது மாத்திரம் அல்ல. வேறு பல குழப்பங்களும் உண்டு). அதனால் எல்லா சாஃப்ட்வேர்களிலும் இந்த மாற்றத்தைச் செய்தாகவேண்டிய நிலையில் இருந்ததால், டெவெலப்பர்களுக்கு ஏக டிமாண்ட். அதுமட்டும் அல்லாமல், கன்சல்டன்சி கம்பெனிகளுக்கும் பணம் பண்ண நிறைய வாய்ப்பு. இந்தக் காரணத்தினால் அந்தக் காலகட்டத்துல நிறையபேருக்கு வேலைவாய்ப்பு பல்வேறு தேசங்களில் கிடைத்தது.
இன்றைய
டாபிக் ரொம்பவே போரடித்திருக்குமோ என்ற சந்தேகம். இனி புகைப்படங்களைப் பார்க்கலாம்.





நாங்கள் வார நாளில் காலையில் சென்றதால் கூட்டம் இல்லை.












இந்தவகைப் புல்வெளி, செயற்கை. இத்தாலியிருந்து முதலில் இந்தியா வந்தது
என்று நினைவு. நான் 89களிலேயே கெம்ப்ளாஸ்டில் இத்தகைய புல்வெளியைப் பார்த்து வியந்திருக்கிறேன். (அப்போ வேலை செய்த இடதிற்கு இப்போது சென்று அங்கு
கேண்டீனில் சாப்பிட்டால், அதே ருசி இருக்குமா என்று யோசிக்கிறேன்)


இந்தப் பூவின் பெயர் என்ன? நான் தாய்லாந்தில் பல இடங்களில் பெண்கள்
(வேற என்னத்தை நீ கவனிச்சிருப்ப என்று நீங்கள் நினைப்பது என் காதில் விழுகிறது) இதனை
அணிந்திருந்ததைப் பார்த்தேன். மிக அழகா இருந்தது, அந்தப் பூக்கள் (ளை அணிந்தவர்கள்னு
எழுத வரலை)




இன்று படங்களும் கதையும் அதிகமாகிவிட்டதோ? அடுத்த வாரம் தொடர்வோம்.
(தொடரும்)
=====================================================================================\
அனைவருக்கும் இனிய காலை வணக்கம். எல்லோரும் நலமுடன் இருக்க வேண்டும்.
பதிலளிநீக்குஅந்த மரம் டெம்பிள் டிரீ. அந்தப் பூக்களின் வாசம் அளவிட முடியாதது. மயக்கும். எங்கள் வீட்டில் இருக்கிறது.
பதிலளிநீக்குஅந்த வாசனையை கொஞ்சம் மெயிலில் அனுப்புங்களேன்..!!!\
நீக்குஅமெரிக்காவில் குழந்தைகள் தமிழ் கற்கிறார்கள். கோவிலில் பாடுகிறார்கள். நாட்டியம் கற்கிறார்கள். தியாகராஜ உத்சவம் நடக்கிறது. இந்த இல்லினாய்ஸ் மாகாணத்தில் 40 இந்துக் கோவில்கள் இருக்கின்றன.
பதிலளிநீக்குஒருவேளை அம்மா.. அது பின்னாளில் ஏற்பட்ட மாற்றங்களோ என்னவோ அப்போதைய நிலைமை கவலைப்படத்தக்கதாய் இருந்திருக்கலாம். மாற்றங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் வந்திருக்கலாம்.
நீக்குதமிழ் மன்றம்,கேரள சமாஜ், கர்னாடகா மஹிளா மண்டலி, எல்லாம் இருக்கின்றன. பெற்றோர்கள் நல்லவர்களாக இருந்தால் வளர்ப்பு முறையும் சரியாக இருந்தால் குழந்தைகள் நன்றாகவே இருக்கின்றன.
பதிலளிநீக்குஆமாம். பெற்றோர் சரியாக வளர்த்தால் பிரச்னை இருக்காது. இப்போது அமெரிக்காவில் இருக்கும் நமக்குத் தெரிந்த குடும்பங்கள் யாவும் இங்கு இந்தியாவில் இருப்பவர்களைவிட நம் முறைகளை நன்றாகக் கடைப்பிடிக்கிறார்கள்.
நீக்குஆமாம். உண்மை. அருமையான கருத்து. இதற்கு உதாரணம் நம் சகோதரி கோமதி அரசு அவர்களின் அன்பான மகன் குடும்பம். அனைத்து இந்திய கலாசாரங்களையும் அழகாக பின்பற்றி ஒவ்வொரு பண்பாட்டு விழாக்களையும் சிறந்த முறையில் கொண்டாடி நமக்கு முன்னுதாரணமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு எப்போதும் என் இதயபூர்வமான நல்வாழ்த்துகள் வாழ்க வளமுடன்.
நீக்குநம் ஊரில் வளரும் குழந்தைகள் எல்லா விதத்திலும் இருக்கிறார்கள். எல்லா விதமாகவும் திருமணங்கள் நடக்கின்றன.I would not generalize any civilization. It depends upon so many factors.
பதிலளிநீக்குஆனால் நெல்லைத்தமிழனின் அப்போதைய கவலையும் அக்கறையும் புரிகிறது. இதற்காக அதிக சம்பளம் கூட என்று வேண்டாம் என்று அவர் எடுத்த முடிவும் ஆச்சரியப்பட வைக்கிறது. பாராட்டத் தோன்றுகிறது.
நீக்குமீண்டும் காலை பார்க்கலாம்.
பதிலளிநீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.