இணையம் வந்திருக்கிறது என்று பெயர்தான். சென்ற மாதமே பணம் கட்டியும் கட்டவில்லை என்று சொல்லி சென்ற சனிக்கிழமை இணையத்தை நிறுத்தினார்கள் பி எஸ் என் எல் காரர்கள்.
நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
எம் ஜி ஆர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எம் ஜி ஆர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
13.12.18
24.8.18
வெள்ளி வீடியோ 180824 : மனிதரில் நாய்கள் உண்டு மனதினில் நரிகள் உண்டு
1968 இல் வெளிவந்த படம் லட்சுமி கல்யாணம். அனைத்துப் பாடல்களையும் எழுதி இருப்பவர் கண்ணதாசன். இசை எம் எஸ் விஸ்வநாதன். லட்சுமி என்கிற பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க சிவாஜி படும் கஷ்டம்தான் படம். எவ்வளவு மாப்பிள்ளைகள் வந்தாலும் நம்பியார் குறுக்கே நின்று தடுத்து விடுவார்.
16.3.18
வெள்ளி வீடியோ 180316 : பண்ணோடு அருகில் வந்தேன் ; கண்ணோடு உறவு கொண்டேன்.
எம் ஜி ஆரின் புகழைக் குறைக்க கலைஞரால் களமிறக்கப்பட்டவர் மு க முத்து - அவர் மகன்.
16.7.11
K J Y - M S V -M G R
நேற்று, 'நாளை நமதே' படம் ஏதோ ஒரு சேனலில் போட்டார்கள். ஹிந்தி யாதோங்கி பாராத்தைத் தழுவி எடுக்கப் பட்ட படம். யாதோங்கி பாராத் பார்த்து விட்டு இதைப் பார்த்ததும் சிரிப்பு வந்தது. குறிப்பாக எம் ஜி ஆர் சொல்லும் 'ஓ ஐ ஸீ..' காட்சிகளிலும், கடைசிக் காட்சியில் எம் ஜி ஆர் ஓடும் ஸ்டைல் மற்றும் நடந்து கொண்டே 'ஓடு...ஓடு...உலகத்தின் எந்த மூலைக்கு வேணும்னாலும் ஓடு...' வசன உச்சரிப்பிலும்...!
முதலில் பிராண நாதா பிரேமா ஈஸ்வரி வசன காலம். 'இனி ஒரு பெண்ணை நான் மனதாலும் நினையேன்...' டி ஆர் எம் குரல் கூட மனதில் கேட்கிறது! பிறகு 'ஓ ஐ அம ஸாரி...' போன்ற ஆங்கில வசனங்கள்...(இதற்கு கல்யாணப் பரிசு தங்கவேலு குரல் கேட்கிறது) அப்புறம் நாயகனோ நாயகியோ ஒரு கோபமான காட்சியில் 'கெட் அவுட்' என்று முதலில் மெதுவாகவும், அடுத்து எதிர் பார்ட்டி இன்னும் என்னவோ பேச முற்பட, குரலை உயர்த்தி கையை நீட்டி' ஐ ஸே யூ கெட் அவுட்..' என்று கத்துவதும் பல படங்களில் இடம் பெறும் வழக்க சீன்கள்! அப்புறம் கதாநாயகன்கள் திடீரென ஆங்கிலம் பேசி புல்லரிக்க வைக்கும் காட்சிகள். ஆனால் இதில் எம் ஜி ஆர் அவப்போது நடுவில் ஐ ஸீ சொல்வார். எங்கள் கேசெட் கடைக் காரர் வசனத்துடன் பாடலை பதிந்து தருகிறேன் என்று இந்த மூன்று பாடல்களையும் பதிந்து தந்த போது இடத்தை வேஸ்ட் செய்து விட்டாரே என்று கோபப் பட்டேன். 'அந்த இடத்தில் இன்னும் ஒரு பாடல் பதிந்திருக்கலாமே மாதவராவ்...'
படம் சிரிப்பை வரவழைத்தாலும் ஜேசு அண்ணாவும் எம் எஸ் வீயும்
ஏமாற்றவில்லை. அந்தப் படத்தில் இந்த மூன்று பாடல்களும் ரசிக்க வைத்தன.
ஜேசு அண்ணா அங்குதான் சிரிக்க வைக்கவில்லையே தவிர, இங்கு அபபடி அல்ல. பாடல் நல்ல பாடல்தான். ஆனால் பிள்ளைத் தமிழ் என்பதை 'பில்லைத் தமிழ்' என்று பாடி புன்னகையுடன் ரசிக்கவைத்தார். அது தப்பு என்று தெரிந்தாலும் நண்பர்கள் பாடும் போது பில்லைத் தமிழ் என்றே பாடினார்கள்! இன்னொரு பாடலில் திருக்கோவிலை தெருக்கோவிலாக பாடியிருப்பார். இங்கு வரும் பாடல் ஊருக்கு உழைப்பவன் படத்தில் வரும் பாடல். எம் ஜி ஆர் படம். அதே எம் எஸ் வி. இது கூட 'ஹம்சக்கல்' என்ற ஹிந்திப் படத்தின் தமிழ் வடிவம்.
அதே படத்தில் குழந்தையை தூங்க வைக்க இன்னொரு ஜேசு பாடல்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)