வியாழன், 13 டிசம்பர், 2018

அந்தி சாயக் காத்திருந்தவன்


 இணையம் வந்திருக்கிறது என்று பெயர்தான்.  சென்ற மாதமே பணம் கட்டியும் கட்டவில்லை என்று சொல்லி சென்ற சனிக்கிழமை இணையத்தை நிறுத்தினார்கள் பி எஸ் என் எல் காரர்கள்.

போராட்டம் தொடங்கியது.  கட்டிவிட்டேன் என்று சான்று காண்பித்தும் இணையம் புதன் மாலை ஐந்து மணிக்குதான் வந்தது.  அதுவும் பழைய மாதிரி இரண்டு நிமிடங்கள் இணைப்பில் இருந்தால் மூன்று நிமிடங்கள் இணைப்பு அறுந்து விடுகிறது.   ஆயினும் இன்னமும் கூட பி எஸ் என் எல்லை விடுவது என்ற முடிவுக்கு வரவில்லை.


========================================================================================================

புதுவையில் பாரதி' என்ற நுாலிலிருந்து

பாரதியார் ஒருநாள், புதுச்சேரி வீதி வழியாக சென்றுக் கொண்டிருந்தார். பள்ளிக்கூட மாணவன் ஒருவன், திண்ணையில் அமர்ந்து, 'இளமையில் கல்; இளமையில் கல்' என்று, சத்தமாக படித்து, மனப்பாடம் செய்து கொண்டிருந்தான்.

அதைக் கேட்ட பாரதியார் சிரித்த படியே, 'முதுமையில் மண்; முதுமையில் மண்' என்று, தன் நண்பரிடம் சொல்லிக் கொண்டே நடந்தாராம்; இதைத் தன் நண்பர்களிடம் அடிக்கடி சொல்லிச் சிரிப்பார், பாரதியாரின் உற்ற நண்பரான வ.ராமசாமி.

படித்ததிலிருந்து.....=========================================================================================================

ஒரு சினிமா செய்தி!
ஜெமினி கணேசனும் சாவித்திரியும் இணைந்து நடித்த முதல் படம் 'மனம் போல் மாங்கல்யம்'.  அதில் ஜெமினிக்கு இரட்டை வேடங்கள்.  

எம் ஜி ஆர் சிவாஜிக்கு முன்னாலேயே முதலில் இரட்டை வேடங்களில் நடித்தவர் ஜெமினி.  


===========================================================================================================


சமீபத்தில் எழுதிய கவிதை.  இதற்கு என்ன தலைப்பு தரலாம்?  "நான்" என்று தலைப்பு தரலாம் என்று யோசித்தேன்.  (அ)திருப்தி என்று தலைப்பிடலாம் என்று யோசித்தேன்.  இரண்டுமே திருப்தி தரவில்லை!  படம் :  நன்றி இணையம் 
இருளிரவின் 
தனிமை தாங்காமல்
விடியலின் வெளிச்சத்துக்குக் 
காத்திருக்கும் நான்(தான்)
சூரிய வெம்மையின் 
கசகசப்பைச் சகியாமல் 
அந்திசாயக் காத்திருந்தவன் ============================================================================================================


வெல்லும் வார்த்தை / கொல்லும் வார்த்தை பற்றி முன்னே பேசினோம்.  அது தொடர் பதிவு போல மாறி.. கீதா ரெங்கன் கூட அவரது வலைப்பூவில் தொடர்கிறார்!  சமீபத்தில் வாட்ஸாப்பில் இதே விஷயம் பற்றி கண்ணதாசன் சொல்லியிருப்பது பகிர்வில் வந்தது.  அதை இங்கு பகிர்கிறேன்.


****************
கண்ணதாசன்அனுபவங்கள்  :

“நான் சொன்னால் பலிக்கும்; என் வாக்குப் பலிக்கும்” என்று தங்களைப் பற்றிச் சிலர் சொல்லிக் கொள்கிறார்களே அது என் விஷயத்திலும் உண்மையாக நடக்கிறது.

யாரையும் வஞ்சிக்காத ஒருவன், கடவுள் நம்பிக்கையுள்ள ஒருவன், மனதாரச் சொல்லும் எந்த வார்த்தைக்கும் உயிர் இருக்கிறது.

அந்த உயிர் தன் சக்தியைக்காட்டி விடுகிறது.

ஆத்திரத்தில் சொல்லும் வார்த்தைகள் மட்டுமின்றி இயற்கையாக வந்து விழும் வார்த்தைகளும் பலித்து விடுகின்றன.

எல்லாவற்றுக்கும் தெய்வ நம்பிக்கைதான் காரணம்.

‘கவிஞன் பாடினான், நகரம் எறிந்தது’ என்றும், ‘கலம்பகப்பாட்டினால் நந்திவர்மன் இறந்தான்’ என்றும் நாம் கேட்கிறோம்.

நான் கவிஞனோ இல்லையோ கடவுள் நம்பிக்கையுடையவன்.

என்னையறியாமலேயே வந்து விழுந்த சில வார்த்தைகள் என் வாழ்விலும் நண்பர்கள்  வாழ்விலும் எப்படிப் பலித்திருகின்றன என்பதை நான் எண்ணிப் பார்க்கிறேன்.

எனது நெருங்கிய நண்பர், நடிப்பிசைப் புலவர் கே.ஆர். ராமசாமிக்காக, 1960,- ல் ஒரு படத்தில் ஒருபாடல் எழுதினேன்.

‘பாடமாட்டேன் - நான்
பாடமாட்டேன்’

என்பது பாடலின் பல்லவி.

ஆம்; அதுதான் அவர் சினிமாவில் கடைசியாகப் பாடிய பாடல். அதற்குப் பிறகு அவர் பாடவே இல்லை.

எனது சொந்தப் படம் ஒன்றில் ஒரு சோகப் பாடல் எழுதினேன்.

‘விடியும் விடியும் என்றிருந்தோம்
முடியும் பொழுதாய் விடிந்ததடா! கொடியும் முடியும் தாழ்ந்ததடா நம்
குடியும் குலமும் ஓய்ந்ததடா!”

-எவ்வளவு அறம் நிறைந்த சொற்கள்!
எழுதும்போது எனக்கு அந்த உணர்ச்சி தோன்றவில்லை.

ஆனால், அந்தப் படத்தில் விழுந்த அடி, என்னைப் பத்து ஆண்டுகள் கலங்க வைத்தது.

அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டு இருந்தது. ஒரு ஸ்டூடியோவில்,
அந்த ஸ்டூடியோ கிண்டியில் இருந்தது.

மறுநாளைப் படப்பிடிப்புக்ககாக, அந்த ஸ்டூடியோ நிர்வாகியிடம் பத்தாயிரம் ரூபாய் நான் அச்சாரம் கொடுத்து விட்டு வந்து விட்டேன்.

மறநாள் நடிகர்களெல்லாம் ஸ்டூடியோவிற்குப் போன பிறகு, அவசரமாக வரும்படி எனக்கு டெலிபோன் வந்தது.

நான் போனேன்.

எங்களுக்கு ‘கால்ஷீட்’ கிடையாது என்றும் ஒரு மாய மந்திரப் படத்திற்கு ‘கால்ஷீட்’ கொடுத்து விட்டதாகவும் நிர்வாகி சொன்னார்.

அப்போது இசையமைப்பாளர் விசுவநாதனும் என் கூட இருந்தார்.

எனக்கு ஆத்திரமா வந்தது.

கோபத்தில், அந்த ஸ்டூடியோ நிர்வாகியைத் திட்டிவிட்டு, “உன் ஸ்டூடியோ எரிந்து சாம்பலாகத்தான் போகும்” என்று கூறிவிட்டு, அலுவலகத்திற்கு வந்தேன்.

அலுவலகத்தில் வந்து உட்கார்ந்ததுதான் தாமதம், டெலிபோன் வந்தது.

“ஸ்டூடியோவில் படப்பிடிப்பு மண்டபம் நெருப்புப்பிடித்து எரிகிறது” என்ற என் தயாரிப்பு நிர்வாகி கூறினார்.

அந்த மாய மந்திர செட்டில், சிங்கத்தின் வாயில் நெருப்பு வருவது போல படம் பிடித்தார்கள் என்றும், அந்த நெருப்பு மேலேயிருந்த சாக்கிலே பற்றி,மண்டம் எரிகிறது என்னும் அவர் சொன்னார்.

என்குத்தூக்கி வாரிப்போட்டது.

கூட இருந்த தம்பி விசுவநாதன் என் கையைப் பிடித்துக்கொண்டார்.

“அண்ணே, இனி யாரையும் ஏதும் சொல்லாதீர்கள்!” என்று கெஞ்சினார்.

என் சக்தியை உங்களுகுச் சொல்லிப் பயமுறுத்த இவற்றை  நான் சொல்லவில்லை.

“வஞ்சகமிலாத ஆத்மா ஒரு வார்த்தை சொன்னாலும் பலிக்கும்” என்பது இந்துக்கள் நம்பிக்கை.

முனிவர்களின் சாபங்களையும், பத்தினிகளின் சாபங்களையம் நாம் புராணங்களில் படிக்கிறோம்.

நல்லது செய்தால் நல்லது வருகிறது. சொன்னது பலிக்கிறது.

நான் என் உறவினர்களி சிலருக்குத் திருமணங்கள் நடத்தி வைத்திருக்கிறேன்.

அப்போ தெல்லாம் என் குழந்தைகளின் திருமணங்களைப்பற்றி நான் சிந்தித்துக்கூடப் பார்த்ததில்லை.

“ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை தானே வளரும்” என்ற இந்துக்களின் பழமொழிகயில் எனக்கு நம்பிக்கை உண்டு.

என் மூத்த பெண்ணுக்கு அப்போது பதினாறு வயது. திருமணதிற்கு அவசரப்படத் தேவை இல்லாத வயது.

அப்போது ஒரு படத்தில் , ” பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி” என்றொரு பாடல் எழுதினேன்.

அந்தப் படம் வெளியாயிற்று; பாடலும் பிரபலமாயிற்று.

ஒருநாள், வீட்டில் அந்த இசைத் தட்டைப் போட்டுக் கேட்டுக் கொண்டிருந்தபோது, என் இளைய சகோதரி வந்தார்கள்.

“ஒரு நல்ல மாப்பிள்ளை இருக்கிறது; அலமுவுக்கு கல்யாணம் பேசலாமா?” என்றார்கள்.

“இந்த வயதில் என்ன கல்யாணம்?” என்றேன் நான்.

“சுபம் சீக்கிரம் என்பார்கள். பெண் திருமணத்தைச் சீக்கிரம் முடித்துவிடுவது நல்லது” என்றார்க்.
“சரி, பேசுங்கள்” என்றேன்.

கிராமத்துக்குச் சென்ற என் இளைய சகோதரி, எனது ஒன்றுவிட்ட சகோதரியிடம் சொல்லி, “அந்த மாப்பிள்ளையைப் பேச வேண்டும்” என்றார்கள்.

அதற்கு என் ஒன்றுவிட்ட சகோதரி, “எங்கள் வீட்டில் செய்யக்கூடாதா?” என்று கேட்டுவிட்டு நேரே சென்னைக்குப் புறப்பட்டு வந்து விட்டார்கள்.

என் சகோதர்ரும், “அந்தச் சகோதரி வீட்டில்தான் செய்ய வேண்டும்” என்று உறுதியாகச் சொல்லி விட்டார்.

அன்றைக்கே திருமணமும் பேசி முடிந்தது.

அப்போது 1967 தேர்தல் முடிந்த நேரம். தேர்தலில் வாங்கிய அடி; இரண்டு படங்களில் பட்ட கடன் எல்லாம் என்னைப் பின்னி எடுத்த நேரம்.

செட்டி நாட்டுத் திருமணம் என்றால் செலவு எப்படி இருக்கும் என்று உங்களுக்குத் தெரியும்.

“காலணாக்கூட கையில் இல்லாமல் கல்யாணம் பேசி விட்டோமே!” என்று நான் கலங்கினேன்.

எங்கிருந்தெல்லாம் எனக்கு ஆறுதல் வந்தது தெரியுமா?

யாரிடமிருந்தெல்லாம் எனக்கு உதவி வந்தது தெரியுமா?”

நான் எதிர்பாராத இடமெல்லாம் எனக்குக் கை கொடுத்தன.

நான் பிறருக்குத் திருமணம் செய்து வைத்தது வீண் போகவில்லை.

என் மகளின் திருமணத்தைக் கண்ணனே முன்னின்று நடத்தி வைத்து விட்டான்.

திருமண வரவேற்பில் ‘பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி’ என்ற பாடலைச் சௌந்தர்ராஜன் பாடும்போது,

‘கைத்தலம தந்தேன் என் கண்மணி வாழ
கடமை முடிந்தது கல்யாண மாக’

-என்ற என்னுடைய அடிகளே, என் கண்களில் ஆனந்தக் கண்ணீரை வரவழைத்தன.

அப்படியேதான் இரண்டாவது பெண்ணின் திருமணத்தைப்பற்றியும் நான் சிந்திக்கவில்லை.

“காசி விசாலாட்சி” என்றொரு கதையும் வசனமும் எழுத பெங்களூர் உட்லண்ட்ஸ் ஓட்டலில் தங்கியிருந்தேன்.

பாதிவரை எழுதிவிட்டேன்.

கிராமத்திலிருந்து காசிக்குச் சென்ற ஒருதாயும் தகப்பனும் காலராவினால் பாதிக்கப்பட, காசி விசுவநாதரும் விசாலாட்சியுமே தாய்தகப்பனாக வந்திருந்து, ஒரு பெண்ணின் திருமணத்தைப் பேசி முடிக்கிறார்கள்.

அதிலே முடிவாக நான் எழுதிய வசனம், ‘இந்த ஆடி போய் ஆவணியிலே திருமணத்தை வைத்துக் கொள்வோம்’ என்பதாகும்.

அதை எழுதி நிறுத்தியபோது சென்னையிலிருந்து டிரங்கால் வந்தது.

“சில பத்திரங்களில் கையெழுத்துப் போட வேண்டும். ஒருநாள் வந்துவிட்டுப் போங்கள்” என்றார்கள்.

நான் வந்தபோது, என் வீட்டிற்குச் சில உறவினர்கள் வந்திருந்தார்கள்.

அவர்கள் “தம்பி நல்ல பையன் இருக்கிறான்; குடும்பமும் சென்னையிலே இருக்கிறது; பேசலாமா?” என்றார்கள்.

பேசினார்கள்; மறுநாள் பெண்பார்க்க வந்தார்கள்.

“மாலையிலேயே நான் பெங்களூர் போக வேண்டும் ” என்றேன்.

பெண் பார்த்துவிட்டுப் போனவர்கள், “நாளைக்கே பேசி முடித்துக் கொள்வோம்; பெங்களூர்ப் பயணத்தை ஒருநாள் ஒத்திப் போடுங்கள்” என்றார்கள்.

திருமணம் பேசி முடிந்து விட்டது.

அப்போதும் பணம் இல்லாத நிலைதான்.

கண்ணன் எனக்கு வழி காட்டினான்.

தேவர் எனக்குக் கைகொடுத்தார்.

கேட்ட பக்கமெல்லாம் உதவி கிடைத்தது.

திருமணம் மங்கலமாக முடிந்துவிட்டது.

“ஆவணியிலே திருமணத்தை வைத்துக் கொள்ளலாம்” என்று காசி விசுவநாதன் சொல்வதாக நான் வசனத்தில் எழுதினேன். ஆவணியிலேயே திருமணம் நடந்துவிட்டது.

நன்றியுடமை, தெய்வபக்தி, வஞ்சகமற்ற உள்ளம் இவற்றுக்கு ஆண்டவன் எப்போதும் துணை நிற்கிறான்.

“கடவுளை நம்பினோர் கைவிடப்படார்” “நம்பினோர் கெடுவதில்லை,நான்கு மறை தீர்ப்பு” என்பதெல்லாம் இந்துக்களில் பழமொழிகள்.

விதையைப்போட்டுவிட்டுக் கனி வராதா என்று நான் ஏங்கி எதிர்பார்த்ததில்லை.

விதைத்துக்கொண்டே போனேன். திரும்பி வந்து பார்த்த போது மரங்கள் பழுத்துக் குலுங்கின.

என்னால் நடத்த முடியாத நற்காரியங்கள் என் வீட்டிலே நடைபெறுமானால், இறைவனைத்தவிர வேறு காரணம் ஏது?

கண்ணனை நினைக்கிறேன்.

சொன்னதுபலிக்கிறது! 

கண்ணனை நானும் நினைக்கிறேன்.

******************

கண்ணதாசன் சுப்ரபாதம் திரைப்படத்தில் "கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்...  காலங்கள் தோறும் நினைத்தது பலிக்கும்..."  என்று ஒரு பாடல் எழுதி இருக்கிறார்.


==================================================================================================================================================================================================================


91 கருத்துகள்:

 1. அன்பின் ஸ்ரீராம், கீதாக்கா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

   நீக்கு
  2. வரவேற்ற வரவேற்கப் போகும் அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கம். முதல்லே சொல்லணும்னு நினைச்சு மறந்துடுது. :(

   நீக்கு
 2. கவியரசரின் அர்த்தமுள்ள இந்து மதம் புத்தகத்தில் இந்தப் பகுதி உள்ளது...

  தினமணிக் கதிரில் அது வெளியாகும் போதே ஆயிரக்கணக்கான வாசகர்களைக் கட்டிப் போட்டதை மறக்க முடியுமா....

  கண்ணதாசன் கை வண்ணத்தை எண்னும் போதெல்லாம் தவறாமல் சிந்தையில் வந்து நிற்கும் பகுதி இது..

  மீண்டும் படிக்க நேர்ந்ததில் மகிழ்ச்சி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்ணதாசன் பெயரையும், படத்தையும் பார்த்ததும் அதற்கு முன்னுரிமை தந்துவிட்டீர்களா!! ஹா... ஹா... ஹா...

   நீக்கு
 3. கண்ணதாசன் அருமை
  நல்லதையே நினைப்போம்
  நல்லதையே பேசவோம்

  பதிலளிநீக்கு
 4. நித்யஸ்ரீயின் "சின்னஞ்சிறு கிளியே" பாடலை நேற்றுத் தான் மறுபடி மறுபடி கேட்டேன். இங்கே நீங்க! ஜெமினி தான் முதலில் இரட்டை வேடம் என்பது ஆச்சரியம். எம்ஜிஆர்னு நினைச்சிருந்தேன். ஆனால் இரண்டு பேரும் இல்லை. அந்தக்கால உத்தமபுத்திரனில் நடிச்ச கே.ஆர்.ராமசாமி தான் முதலில் இரட்டை வேடம் போட்டவர்னு நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இங்கு நித்யஸ்ரீ பாடியிருப்பது தொன்று நிகழ்ந்ததொரு... என் சிறு வயதில் அப்பாவின் நண்பர் ஒருவர் கதை சொல்வார். டி எஸ் கோதண்டராமன் என்று பெயர். அவர் ஒருசமயம் வீட்டுக்கு வந்திருந்த சமயம் அவரைப் பேச வைத்து கெஸெட்டில் பதிவு செய்தேன். அதில் அவர் ராகத்துடன் பாடிய பாடலிது... அப்போதிலிருந்து மனதில் இருக்கிறது!

   நீக்கு
  2. முதலாக இரட்டை வேடம் கே ஆர் ராமசாமியோ, பி யு சின்னப்பாவோ... எம் கே தி கூட இரட்டை வேடம் ஏற்றிருக்கிறாரோ.... இங்கு சொல்லி இருப்பது எம் ஜி ஆர் சிவாஜிக்கு முன்னதாக ஜெமினிதான் என்பது!​

   நீக்கு
  3. ஆமாம் இல்ல, பி.யு.சின்னப்பாவோ ? கே.ஆர். ராமசாமி இல்லையோ? உத்தமபுத்திரன் முதலில் வந்ததில் யார்? சினிமா மன்னர்கள், மன்னிகள் பதில் சொல்லுங்கப்பா!

   நீக்கு
  4. உத்தமபுத்திரனை மனதில் வைத்துதான் சொன்னேன். அதில் பி யு சின்னப்பா. ஆனால் எம் கே டி கூட நடித்திருப்பதாய் ஒரு நினைவு. அது பின்னாலோ என்னவோ!

   நீக்கு
 5. கண்ணதாசன் எழுதி இருப்பவைகளைப் படிச்சிருக்கேன். உங்க கவிதைக்கு "இருட்டு" அல்லது "இரவு" எனத் தலைப்பு வைக்கலாமோ. கடைசியில் கொடுத்திருக்கும் டிட்பிட்ஸ் உட்பட ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ​நன்றி கீதா அக்கா. பகலில் இரவையும், இரவில் பகலையும் எதிர்பார்க்கும் திருப்தி இல்லாதவனுக்கு நீங்கள் சொல்லும் தலைப்பு பொருந்தும்?

   நீக்கு
 6. இளமையில் கல்.அதுவே முதுமையில் மண் -கல் பொடியானால் மண் தானே

  பதிலளிநீக்கு
 7. கண்ணதாசன் - இந்தப் பகுதி படித்தது.

  நித்யஸ்ரீ மகாதேவன் பாடல் - கேசட் மூலம் இவரது பாடல்களை நிறைய கேட்டது உண்டு.

  இணையம் - பி.எஸ்.என்.எல். - ரொம்பவும் படுத்தல்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி வெங்கட். எனது ஸ்ப்ளிட்ட்ரை எறும்பு புகுந்து நாசம் பண்ணி இருக்கிறது. அது சரி செய்யப்பட்டால் சரியாகிறதா என்று இன்று பார்க்கவேண்டும்!

   நீக்கு
 8. பாரதியின் ஒருவரிக் கவிதையும், உங்களது இருளிரவும் நன்றாக உள்ளன. அறிமுகம் என்று அதற்குக் கொடுத்திருக்கலாமோ தலைப்பு?

  கண்ணதாசன் சொன்னதை அஇம -வில் ஏற்கனவே படித்துள்ளேன். அவரெழுதிய பாடாவதி நாவலுக்கு (சேரமான் காதலி) கொடுத்தார்களே சாகித்ய அகாதமி விருது, இந்த அசடுகள்? அ இ ம -விற்காக அது அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கவேண்டும்- நன்றாக எழுதப்பட்ட வழிகாட்டி, தன்னம்பிக்கை நூல் என்கிற வகையில்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ஏகாந்தன் ஸார். தலைப்பு கவிதையில் அவரவர் பார்வையை சொல்வதால் அதுவும் ஒரு சுவாரஸ்யம்.

   அஇம தொடராக வந்தபோது படித்திருக்கிறேன். புத்தகமாக வாங்கி இருக்கிறேன். நான்கைந்து வருடங்கள்தான் ஆகிறது வாங்கி.. மறுபடி படிக்கவேண்டும்.

   நீக்கு
 9. அருமையான காலை வணக்கம் அனைவருக்கும். முதல் எழுத்திலிருந்து கடை எழுத்துவரை சொல்லி இருக்கும் அத்தனை விவரங்களுக்கும் நன்றி. பாரதியில் மண் கவிதையும், நிதயஸ்ரீயின் தொன்று நிகழ்ந்ததது பாடலும் அமுதம்.
  கண்ணதாசன் சொற்கள் மனதைக் கலக்குகிறது. எத்தனை வீர்யம் அவர் வார்த்தைகளுக்கு.

  ஸ்ரீரமின் இரவு பகல் கவிதையும் சூப்பர்.
  பிஎஸெனேல்லுக்கு மாதா மாதம் பணம் கட்டுகிறோம்.
  யாரையும் அழைக்கவும் முடியாது. அவர்கள் அழைத்தால் கேட்கவும் கேட்காது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி வல்லிம்மா. BSNL எங்கள் ஏரியா சர்வீஸ் எஞ்சினியர் எனக்கு நல்ல நண்பர். ACT வாங்க நான் விருப்பம் சொன்னபோது வேண்டாம் ஸார்.. இதை விடாதீங்க என்று அடிக்கடி சொல்பவர் அவர்தான். டெடிகேட்டட் வொர்க்கர்.

   நீக்கு
 10. கண்ணதாசரின் சரிதம் சுவாரஸ்யமாக இருந்தது.

  கவிதையும் அருமை ஜி

  பதிலளிநீக்கு
 11. BSNL - எனும் விளங்காத கவிதை...

  மகாகவி எனும் மாபெரும் கவிதை...
  கவிக்கொரு அரசு எனும் காவியக் கவிதை...
  சாவித்ரி - ஜெமினி எனும் காதல் கவிதை..

  இவற்றினோடு -
  அந்தி சாயக் காத்திருந்ததோ..
  அந்தியில் சாயக் காத்திருந்ததோ.. - எனும் அற்புதக் கவிதை!...

  குரு வாரம் ஆனாலும் - இது
  கவி வாரம்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா துரை ஸார்... பாட்டாவே படிச்சுட்டீங்க... ரசனை!

   நீக்கு
 12. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சம்பவத்தை 'கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்' என்று அர்த்தமுள்ள இந்துமதம் தொடரை தினமணியில் தொடராக கண்ணதாசன் எழுதிய பொழுதும், பின்னர் அது புத்தகமாக வெளிவந்த பொழுதும் படித்திருக்கிறேன்.

  உங்கள் கவிதைக்கு எதிர்பார்ப்பு(கள்) என்ற பெயர் பொருத்தமாக இருக்குமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி பானு அக்கா. அந்தத் தலைப்பு சரியாக இருக்கும் என்கிறீர்களா?

   நீக்கு
 13. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 14. //மூன்று நிமிடங்கள் இணைப்பு அறுந்து விடுகிறது. ஆயினும் இன்னமும் கூட பி எஸ் என் எல்லை விடுவது என்ற முடிவுக்கு வரவில்லை.//

  இங்கும் இப்படித்தான் பி.எஸ்.என் படுத்துகிறது. இரண்டு நெட் தொடர்பு வைத்து இருக்கிறோம். அதனால் ஓடுகிறது.
  ஏர்டெல்லும் சில நேரம் இப்படித்தான் போய் போய் வருகிறது.
  இளமையில் கற்கவில்லை என்றால் முதுமையில் மண்தான்.

  நித்யஸ்ரீ பாடல் நன்றாக இருக்கிறது.

  ஜெமினிகணேஷன் அவர்கள் செய்தி, கண்ணதாசன் சொன்னவை பகிர்வு அனைத்தும் அருமை.
  உங்கள் கவிதையும் நன்றாக இருக்கிறது.
  சோகம் பற்றி நீங்கள் சொன்னதும் சரிதான் இந்த விருந்தாளி எட்டிப் பார்க்காத வீடு இருக்கோ!


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கோமதி அக்கா. உங்கள் உடல் நலம் தேவலாமா?

   பி எஸ் என் எல் எஞ்சினியர் இன்று லீவாம். நாளை மறுபடி வந்து பார்க்கிறாராம்.

   பார்ப்போம், சரியாக வருகிறதா என்று!

   நீக்கு
  2. eஎன் கோமதி அக்காவின் உடம்புக்கு என்ன?.. கோமதி அக்கா நலம்தானே?..

   நீக்கு
  3. கோமதி அக்காவிற்கு கைவலி, கால்வலி மருத்துவ உதவி நாடி போய் மருந்துகள் எடுத்துக் கொண்டு குணமாகி வருகிறேன், நலம்தான் அதிரா. எக்ஸ்ரே , இரத்த பரிசோதனை என்று கொஞ்சம் பயம் காட்டி பின் இறைவன் அருளால் எல்லாம் நலமே!

   அதனுடன் தம்பி மகள் வளைகாப்புக்கு தென்காசி பயணம் நேற்று உறவினர்கள் சந்திப்பு
   இறைவன் அருளால் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் தரிசனம், கிருஷ்ணாபுரம் அனுமன் தரிசனம், தென்காசி காசி விஸ்வநாதர் தரிசனம் செய்து அக்கா உடலுக்கு வலிமை சேர்த்து வந்து இருக்கிறேன்.

   நீக்கு
  4. வாழ்க வளமுடன் ஸ்ரீராம்.
   இப்போது நலம்.
   அதிரவிற்கு கொடுத்த பதில் உங்களுக்கும் ஸ்ரீராம்.

   நீக்கு
  5. உற்சாகமான பதில். நன்றி அக்கா.

   நீக்கு
  6. ஓ கோமதி அக்கா, மூட்டு வலிக்கு கொஞ்சம் மஞ்சள் கரைத்து இடைக்கிடை குடிப்பது நல்லதென சித்த வைத்தியத்தில் சொன்னார்கள், விரும்பினால் செய்து பாருங்கள் ஆனா அது ஓவர் சூடு அதனால பார்த்து..
   தென்காசிப்பட்டணம் போனீங்களோ சூப்பர்... உடம்புக்கு மருந்து செய்வதை விட மனதுக்கு இப்படி மருந்து கொடுத்தால் போதும், உடம்பு தன் பாட்டுக்கு நோர்மலாகிடும்...

   நீக்கு
  7. அதிரா, எனக்கு இடதுகாலில் கணுக்கால் வலி , நீங்கள் சொல்வது போல் செய்து பார்க்கிறேன்.
   மனதுக்கு மருந்து கொடுப்பது! அருமையாக சொன்னீர்கள்.
   மாயவரம் நட்பு சிங்கப்பூரில் இப்போது வசிக்கிறாள் அவள் இப்போது மாயவரம் வந்து இருக்கிறாள் எனக்காக வைத்தீஸ்வரன் கோவிலில் அர்ச்சனை செய்து வெள்ளியில் கால் விற்பதை வாங்கி வைத்திய நாதனுக்கு காணிக்கை செலுத்தி வந்து இருக்கிறாள். அதனால் நலமாகி வருகிறேன்.
   அன்பான உறவுகள், நட்புகள் விசாரிப்பு, பிரார்த்தனைகள் என்னை விரைவில் நலமடைய செய்யும்.
   வல்லி அக்கா அடிக்கடி நலம் விசாரித்து வாழ்த்து சொல்லி வருகிறார்கள். சகோ துரைசெல்வராஜூ அவர்கள் நலம் விசாரித்தார்கள்.
   அனைவருக்கும் நன்றி.அன்பான நட்பை கொடுத்த இறைவனுக்கு நன்றி.

   நீக்கு
 15. கல்லும் முதுமையில் கரைந்து மண்ணாகும் தானே?!!
  உங்கள் கவிதைக்கு எனக்குத் தோன்றிய பெயர் 'இக்கரைக்கு அக்கரை'
  கண்ணதாசன் குறிப்பு ஸ்வாரஸ்யம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா க.அங்கிள் மேல சத்தியமா இக்கொமெண்ட் பார்க்கமல்தான் கீழே இதே பதிலை மீயும் ஜொன்னேன்:) ஹா ஹா ஹா..

   நீக்கு
  2. நன்றி மி கி மா. ரொம்ப நாளைக்கு அப்புறம் வருகை...

   நீக்கு
 16. //இணையம் வந்திருக்கிறது என்று பெயர்தான். சென்ற மாதமே பணம் கட்டியும் கட்டவில்லை என்று சொல்லி சென்ற சனிக்கிழமை இணையத்தை நிறுத்தினார்கள் பி எஸ் என் எல் காரர்கள்.//

  இதுபற்றிக் கொஞ்சக்காலம் கீசாக்காவின் புலம்பல் பின்பு கீதா.. இப்போ ஸ்ரீராமோ.. அடுத்து ??:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புலம்ப வைப்பது பி எஸ் என் எல்!

   நீக்கு
  2. இருந்தாலும் ஸ்ரீராம் நீங்க இப்போ கொஞ்சக் காலமாக உற்சாகமாக இல்லை, கொமெண்ட்ஸ்க்குப் பதில்கள்கூட, சிவனே என கடமைக்குப் போடுவதைப்போல இருக்கு.. பழையபடி உற்சாகமாகுங்கோ.. ஏதாவது பண்ணுங்கோ.. கல்யாணமாகாத தேவியிடம்மாவது:) போய் வாங்கோ ஹா ஹா ஹா..

   நீக்கு
  3. //கல்யாணமாகாத தேவியிடம்மாவது:) போய் வாங்கோ ஹா ஹா ஹா.//

   ஹா.... ஹா... ஹா... முயற்சி செய்கிறேன் அதிரா... நன்றி.

   நீக்கு
  4. அதிரா ஹைஃபைவ்....

   எனக்கும் தோன்றியது ஸ்ரீராம் உற்சாகமாக இல்லைன்னு...

   அதை சொல்லியும் இருந்தார் கொஞ்ச நாள் முன்பு என்று நினைவு...

   கீதா

   நீக்கு
 17. //'இளமையில் கல்; இளமையில் கல்' என்று, சத்தமாக படித்து, மனப்பாடம் செய்து கொண்டிருந்தான்.
  அதைக் கேட்ட பாரதியார் சிரித்த படியே, 'முதுமையில் மண்; முதுமையில் மண்' என்று,//

  எதுகை மோனை கரெக்ட்டாத்தான் இருக்கு, ஆனா இதில் ஏனோ எனக்கு உடன்பாடில்லை, அவர் அப்படிச் சொல்லியிருந்தது அந்தச் சிறுவனின் காதில் விழுந்திருந்தால்.. தொடர்ந்து படிக்கும் ஆர்வம் போய் விடுமே... இது உற்சாகத்தைக் குறைப்பது போல எல்லோ இருக்குது.. எங்கே அனுவும் கீசாக்காவும்.. மேடைக்கு வரவும் என்னோடு ஜண்டைப்பிடிக்கவும்:)) எனக்குப் பொழுது போகவில்லை:) ஹா ஹா ஹா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சமயங்களில் இப்படி யாராவது சொல்லி காதில் விழுவதால் படித்தது மறக்காமல் இருக்குமே....

   நீக்கு
 18. // 'மனம் போல் மாங்கல்யம்'//
  படம் பார்க்கட்டோ? நல்லதோ... இப்போ தொடர்ந்து பழைய படங்கள் பார்க்க ஆசையா வருது:)).. நமக்குத் தோணும் ஆசைகளாஇ வச்சிருக்கக்கூடாதாம்:) உடனேயே நிறைவேத்திடோணுமாம்:)).. நாளைக்கு என்னாகுமோ ஆரு கண்டா?:) ஹா ஹா ஹா... உலகச் செய்திகள் படிக்கும்போது வரும் ஞானம்:)..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மபோமா பார்க்கும் துணிவு எனக்கில்லை.

   நீக்கு
  2. அப்போ நான் பார்த்துபோட்டுச் சொல்லட்டோ?:).. ஹா ஹா ஹா இதை ஆரட்சி அம்புஜம் பார்த்தாவோ.. கடகட ஓடிப்போய் ரிவியூ எல்லாம் படிச்சுப் போட்டு எனக்குச் சொல்லப்போறா ஹையோ பார்த்திடாதீங்க அதிரா வாணாம் என ஹா ஹா ஹா..

   நீக்கு
  3. பொறுமை ப்ளஸ் நேரம் இருந்தால் பாருங்கள் அதிரா... ​ எனக்கென்னவோ பொறுமை இல்லை! ஆமாம், ஆராய்ச்சி அம்புஜம் ஏன் வாரத்துக்கு ஒருமுறைதான் வருவாரா? ஆளையே காணோம்?

   நீக்கு
 19. //சமீபத்தில் எழுதிய கவிதை. இதற்கு என்ன தலைப்பு தரலாம்? "நான்" என்று தலைப்பு தரலாம் என்று யோசித்தேன். (அ)திருப்தி என்று தலைப்பிடலாம் என்று யோசித்தேன். இரண்டுமே திருப்தி தரவில்லை!//

  இக்கரைக்கு அக்கரைப் பச்சை:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தத் தலைப்புக்கு அந்தத் தலைப்பு ஓகே என்கிறீர்களா!!!

   நீக்கு
  2. ரேப் ரெக்கோடர் மாதிரி திரும்ப திரும்ப ரப்பீட்டில் பேசக்குடா கர்ர்ர்ர்ர்ர்:) ஹா ஹா ஹா...

   நீக்கு
  3. ​ஹா... ஹா.... ஆனா பாருங்க... இந்தத் தலைப்புதான் சரின்னு உறுதியா ஒரு தலைப்பை யாரும் சொல்லவில்லை! தலைப்பில்லா கவிதை! ஹா.. ஹா.. ஹா...

   நீக்கு
 20. ஆஆஆஆஆஆஆஆ வந்துட்டேன் பொயிண்ட்டுக்கு வந்திட்டேன்.. மை கண்ணதாசன் அங்கிளும் அர்த்தமுள்ள இந்துமதமும்.. இந்த அர்த்தமுள்ள இந்துமதம் பத்துப் பாகமும் என்னிடம் இருக்கு.. பல தடவைகள் படிச்சிட்டேன்.. படிக்கப் படிக்க அலுக்காது.. சந்தோசம் வந்தாலும், மனதில் சங்கடம் வந்தாலும் இதை வாசிச்சால் எல்லாம் நோர்மலாகிடும்.. அவ்ளோ சூப்பர், எனக்கு க.அங்கிளின் எழுத்தில் ஒவ்வொரு வசனமும் பிடிக்கும்.. அப்படியே ரசிச்சு ரசிச்சுப் படிப்பேன்:))..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெரிகுட். நானும் மறுபடியும் எடுத்துக் படிக்கிறேன்!

   நீக்கு
  2. ஹா ஹா ஹா முதல்ல 4ம் பாகத்தைப் படியுங்கோ. மனம் சாந்தியாகும்.. இது வேற சாந்தி.. சாந்தி அக்கா அல்ல:)

   நீக்கு
  3. என்னிடம் எல்லாம் கலந்து ஒரே புத்தகமாய் இருக்கிறது. இன்றே எடுக்கிறேன்.

   நீக்கு
 21. இந்த சொல் வாக்குப் பலிப்பது பற்றி சமீபத்தில் நானும் ஒரு ரேடியோத் தொகுப்புக் கேட்டு எழுதி வசிருக்கிறேன்ன்.. எதுக்கும் கால நேரம் அமையாதாமே கர்ர்ர்ர்ர்:)

  பதிலளிநீக்கு
 22. கடசி தத்துவம்... அழகான தத்துவம்.. ஆனா இதில ஒன்று எண்ணெண்டால், ..

  நமக்குப் பிடிச்சவர்களுக்கெல்லாம் நம்மைப் பிடிக்குமென்றில்லை...
  அதேபோல நாம் மேலாக நினைக்கும் ஒருவர், நம்மையும் மேலாக நினைப்பார் என எதிர்பார்ப்பதும் தப்புத்தானே?:...

  இதை மாத்தி யோசித்தால் கவலை வராது.. அதவது நம்மை விரும்புவோர் எல்லோரையும் நாம் விரும்புகிறோமா?
  நம்மை உயர்வாக நினைத்து நமக்காக எல்லாம் செய்பவருக்கு அதேபோல மரியாதையை நாம் திருப்பிக் கொடுக்கிறோமா?.. மாறாக நமக்குப் பிடிச்சவருக்குத்தானே நாம் செய்கிறோம்... இதுதான் கடவுளின் எழுதப்படாத விதி:)..

  பெற்றோர் கஸ்டப்பட்டு கடன் பட்டு பிள்ளைகளை வளர்கிறார்கள், ஆனா அப்பிள்ளைகள் அக்கடனைப் பெற்றோருக்கே அடைப்பதில்லை, மாறாக தம் பிள்ளைகளுக்கே அதனை அடைக்கின்றனர்... அதனால நாம் விருபுபவர் திரும்பி நம்மை விருபுவார் என்றும் இல்லை, அதேபோல நமக்குத் துரோகம் செய்தவருக்கு நாம் துரோகம் செய்திருக்க மாட்டோம் ஆனா நிட்சயம் அவருக்கு இன்னொருவர் துரோகம் செய்வார்:))..

  ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் க.அங்கிளின் பெயர் பார்த்ததுக்கே தத்துவமா வருதே:).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தக் கருத்து வரும்படி நான் கூட முன்பு ஒன்று எழுதி இருந்தேன்! என்னை நினைக்கும் நண்பர்களில் என்று தொடங்கும். தேடிப்பார்க்கிறேன்!

   நீக்கு
  2. அன்பு அதிரா. நாம் யாருக்கும் வெறுப்பு என்னும் உணர்ச்சியைக் காட்டுவதில்லை.
   அப்படி இருந்தும் சில பல நிகழ்ச்சிகள் என்னை மிக யோசிக்க வைக்கின்றன.

   நாம் அன்பைக் கொட்டிக் கொடுத்தாலும் ,நம்மை உடனே மறப்பவர்கள் அனேகம்.
   இப்போது அந்த மாதிரி மனிதர்களைப் பற்றி யோசிப்பதில்லை.
   இது பூர்வ ஜன்மத்திலிருந்து தொடரும் விஷயமாக இருக்கலாம்.
   அர்த்தமே இல்லாமல் போகிறது. அதனால் நாம் நம் போகும் பாதையில்
   போகலாம்.
   அனைவருக்கும் நன்மை வேண்டியபடி நாம் வாழலாம்.
   நன்றி அதிரா.வாழ்க வளமுடன்.

   நீக்கு
  3. ஸ்ரீராம் இதை எழுதும்போது, என் பக்கத்தில் நீங்கள் பகிர்ந்துகொண்ட, அந்த ரிரயேட் ஆன பெரியவர் அடிக்கடி உங்களை வந்து பார்ப்பார், தன் வீட்டுக்கு அழைத்தார் நீங்கள் போகவில்லை, அவர் தன் பென்சன் அலுவலாகத்தானே வந்தார் என விட்டிட்டீங்க ஆனா திடிரென அவர் போய் விட்டார்:(.. அந்தக் கதை நினைவுக்கு வந்துது... என்ன இருந்தாலும் அவர் உங்களை விரும்பி வந்து சந்திச்சார் ஆனா உங்களுக்கு ஏனோ அவ்வளவு அன்பு பாசம் அவரில் வரவில்லைத்தானே....

   நீக்கு
  4. //அன்பு அதிரா. நாம் யாருக்கும் வெறுப்பு என்னும் உணர்ச்சியைக் காட்டுவதில்லை.
   அப்படி இருந்தும் சில பல நிகழ்ச்சிகள் என்னை மிக யோசிக்க வைக்கின்றன.

   நாம் அன்பைக் கொட்டிக் கொடுத்தாலும் ,நம்மை உடனே மறப்பவர்கள் அனேகம்.///

   இதேதான் வல்லிம்மா, நாம் நல்லாத்தானே பழகுகிறோம், அன்பாகத்தானே இருக்கிறோம் ஆனா அவர்கள் ஏன் வெறுப்பாகவே இருக்கினம் என சிலசமயம் சிலரை எண்ணுவோம் தானே.. அதுதான் இது..

   உண்மைதான் பூர்வஜென்ம பந்தம் எனவும் சொல்லுவார்கள்.. அதுபற்றி முழுசா நம்ப முடிவதில்லை..

   நீக்கு
  5. //அந்த ரிரயேட் ஆன பெரியவர் அடிக்கடி உங்களை வந்து பார்ப்பார்,//

   ஆமாம் அதிரா... எனக்கும் அவர் நினைவுக்கு வந்தார். நினைவில் இருக்கிறார். அந்தக் குற்ற உணர்ச்சி குறையவில்லை. வேறு வழியும் அப்போது இல்லை. நான் உங்கள் தளத்தில் சொன்னபோது இரண்டு சம்பவங்கள் என்று சொல்லி ஒன்றைச் சொன்னேன். இரண்டாவது என்ன என்று நீங்கள் கேட்கவே இல்லை!

   நீக்கு
  6. இந்தக் கருத்து வரும்படி நான் கூட முன்பு ஒன்று எழுதி இருந்தேன்! என்னை நினைக்கும் நண்பர்களில் என்று தொடங்கும். தேடிப்பார்க்கிறேன்!//

   ஆமாம் ஸ்ரீராம் நினைவிருக்கு....நான் வாசித்த நினைவு இருக்கு...

   கீதா

   நீக்கு
 23. ஏன் சிலரைக் காணவில்லை...:), ஒருவேளை அதிராவைக் காணவில்லையே எனும் கவலையில் காணாமல் போயிட்டினமோ:)...

  மீ தான் 50 ....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //ஏன் சிலரைக் காணவில்லை...:),//

   சிலர்? ஏஞ்சல், கீரெ?

   நீக்கு
  2. அய்ய்ய்ய்ய்ய்ய்.. உங்கட எனிமியைவிட்டுப்புட்டீங்களே:) ஹா ஹா ஹா அதாவது கீதாவின் அன்புத்தம்பி:) ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன் அண்ணா[அதிரா முறையில:].. அவரையும் காணம்...

   நீக்கு
  3. அவர் தொடர் கோவில் சுற்றுப் பயணத்தில் இருக்கிறாராம். 'எங்கள் வாசக / ஆசிரிய வாட்சாப் குழும'த்தில் சொல்லி இருக்கிறார்.

   நீக்கு
  4. கீதாவின் அன்புத்தம்பி:) ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன் அண்ணா//

   அதிரா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அவர் பங்களூர் வந்தா அண்ணனாக்கும்!!!! சென்னைனா தம்பினு சொல்லிக்குவார்...ஹா ஹா ஹா...

   கீதா

   நீக்கு
  5. ஏஞ்சல் தான் காணவே இல்ல....பிஸி போல சர்ச் செர்வீஸில்...

   கீதா

   நீக்கு
 24. சின்னஞ்சிறு கிளியே.. மிகவும் ரசிக்க வைக்கும் பாடல்...

  கண்ணதாசனை பகிர்ந்தது அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் பகிர்ந்திருப்பது சின்னஞ்சிறு கிளியே பாடலா? இருங்கள் மறுபடி சென்று கேட்டுப்பார்க்கிறேன். நினைத்தது ஒன்று, பகிர்ந்தது ஒன்றா?

   நீக்கு
  2. ஹா ஹா ஹா இல்ல ஸ்ரீராம், ராஜிக்கு ஏதோ கிளியின் நினைப்புபோல:)) ஹையோ எனக்கு என்னமோ ஆச்சூஊஊஊஊஊ மீ ரன்னிங்ங்ங்ங்:))..

   நீக்கு
  3. நானும் சந்தேகப்பட்டு மறுபடி சென்று "எங்கள் தாய்.... எங்கள் தாய்..." என்று வீடியோ கேட்டு சந்தேகம் தெளிந்தேன்..... நம்மளையே குழப்பிட்டாங்க.....

   நீக்கு
 25. கண்ணனை நாளும் நினைக்கிறேன் என்று வந்திருக்கணமா? இல்லை ஶ்ரீராம் வரியா?

  கவிஞன் பாடினான் நகரம் எரிந்தது Typo error

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இருக்கலாம் நெல்லை. வாட்ஸாப்பில் வந்ததை அப்படியே காபி பேஸ்ட் செய்தேன்.

   நீக்கு
 26. எனக்கு இணைய இணைப்பு பி எஸ் என் எல் தான் குறை என்று சொன்னால் உடனே கவனிப்பார்கள் பிறகு தொலை பேசியிலழைத்து சரியாகி விட்டதா என்று கேட்டு கன்ஃபெர்ம் செய்வார்கள்

  பதிலளிநீக்கு
 27. நான் வார்த்தை என்னும் பதிவெழுதினேன் அபோதிலிருந்து வெல்லும் வார்த்தை கொல்லும் வார்தைமிக அதிகமாக பகிரப்படுகிறதோ

  பதிலளிநீக்கு
 28. கண்ணதாசனின் அனுபவம் வெ வா கொ வா சூப்பர்! சைக்கிள் காப்ல மீ புகுந்துட்டேனா! ஹா ஹா ஹா குறிப்பிட்டமைக்கு நன்றி...அந்த வார்த்தைப் பிரயோகத்துக்கு உங்களுக்குத்தான் நன்றி சொல்லனும் நான்..

  உங்க கவிதை செம....திரிசங்கு??!! என்று தலைப்பு?

  ஜெ க மற்றும் சா சினி நியூஸ் செய்தி

  நித்யஸ்ரீ பாடல் நன்றாக இருக்கிறது

  பி எஸ் என் எல் அங்கிருந்த வரை வந்தா நல்லா வரும் திடீர்னு அடம் பிடிக்கும் ஆனாலும் எனக்கு அது பிடித்திருட்நது...

  இங்கு ஏர் டெல் தான் நல்லா தான் இருக்கு. இது வரை பிரச்சனை இல்லை...நல்லாவே இருக்கு ஆனா வீடியோதான் சரியா வராது...விட்டு விட்டு வரும்...

  கடைசி ......எனக்கும் அனுபவம் உண்டு...நான் முன்பு நினைப்பதுண்டு நாம எவ்வளவு அன்பு செய்கிறோம் ஆனால் நம்மை கண்டு கொள்வதே இல்லையே என்று. ஆனால் அப்புறம் பல அனுபவங்கள் புடம் போட்டு புடம் போட்டு எதிர்பார்ப்பைக் குறைத்துக் கொண்டு என்று....பழகிவிட்டது....

  எல்லாமே நல்லாருக்கு சூட்டோடு சூடாக வரமுடியாததால் நிறைய எழுதலை...இங்கு...

  கீதா

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!