அவருக்கு வாலி எழுதிய பாடல் ஒன்றைக் கேட்டு விட்டு எம் ஜி ஆர் கூட 'அது தனக்கு வந்திருக்கவேண்டிய பாடல்' என்று நினைத்தாராம். அது 'மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ...' என்கிற பாடல் என்று நினைக்கிறேன்.
இந்தப் பாடல் வழமை போல என் அலைபேசியில் எப்போதும் இடம் பெற்றிருக்கும் பாடல். என் பாஸ் அழைத்தால் இது ரிங்டோனாக சிலகாலம் இருந்த பாடல். ரொம்பப் பிடித்த பாடல். யாருக்குதான் பிடிக்காது?!!
1973 இல் வெளிவந்த படம். இந்தப் பாடலை எழுதி இருப்பவர் பஞ்சு அருணாச்சலம், இசை எம் எஸ் வி. இந்தப் படத்தின் ஒரே ப்ளஸ் இதுதான் என்று சொல்வார்கள். பஞ்சு அருணாச்சலம் அருமையாய் எழுதி இருக்கிறார்.
இந்தப் படமெல்லாம் பார்த்து விட்டுதான் நான் பாடல்களை ரசிக்கிறேன் என்று நினைக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்! முக்கியமாய் கீதாக்கா!
மு க முத்து பெரும்பாலும் எம் ஜி ஆரை இமிடேட் செய்து நடித்திருப்பார். சில இடங்களில் அவரையும் அறியாமல் சிவாஜி ஸ்டைல் வந்திருக்கும். காட்சியைப் பார்க்காமல் (வழக்கம்போல) பாடலை ரசித்தால்தான் நன்றாய் இருக்கும். டி எம் எஸ் பாடல்களில் ஒரு ஸூப்பர் பாடல். உடன் பாடியிருப்பவர் எஸ் ஜானகி.
ஆனால் இந்த சேஷ்டைகளை ரசிக்கவும், வெண்ணிற ஆடை நிர்மலாவின் நடனத்தை ( !! ) ரசிக்கவும் ( ? ) காட்சியைப் பார்க்கலாம்!
காதலின் பொன் வீதியில்
காதலன் பண்பாடினான்
பண்ணோடு அருகில் வந்தேன் -
நான் கண்ணோடு உறவு கொண்டேன்.
காதலின் பொன் வீதியில்
நானொரு பண்பாடினேன்
பண்ணோடு ஒருத்தி வந்தாள் - என்
கண்ணோடு ஒருத்தி வந்தாள்
திருப்பாற்கடலில் பொன் மேடையிட்டு
நான் காத்திருப்பேன் உனக்காக
இனி தனிமையில்லை பகல் இரவுமில்லை
நாம் வாழ்ந்திருப்போம் இனிதாக
இரு பொன் மலரில் ஒன்று என் மலராம்
தேன் கொள்ள வந்தேன் மனம் போலே
என் மனதிலே உன் நினைவுகளே
அதை அள்ளி வந்தேன் உனக்காக.. .
விழியோரங்களில் சில நேரங்களில்
வரும் பாவங்களும் கவியாகும்
அந்தக் கவிதைகளில் உள்ள பொருளறிந்து
அதை சுவைப்பது தான் கலையாகும்
அந்தக் கலைகளிலும் பல புதுமையுண்டு
அதை பழகுவதே பேரின்பம்
இன்ப வாசலிலே ஒரு காவலில்லை
இனி காலமெல்லாம் உன் சொந்தம் .
காதலின் பொன் வீதியில்
காதலன் பண்பாடினான்
பண்ணோடு ஒருத்தி வந்தாள்
என் கண்ணோடு ஒருத்தி வந்தாள்
வாழ்க..
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை செல்வராஜு அண்ணா, கீதாக்கா, பானுக்கா…
பதிலளிநீக்குகீதா
பதிலளிநீக்குதண்டோரா……டண் டண் டண் டண்…அதாகப்பட்டது புதிய அவதாரம் எடுத்திருக்கும் உலகப் புகழ் பல உயரங்களைத் தொட்ட மருத்துவர் த க்ரேட் அதிரா எம்பிபி எஸ் எம் ஆர் சி எஸ் பராக் பராக்…இன்று இங்கு என்னெல்லாம் மருத்துவப் பரிசோதனைகள் நடக்கப் போகுதோ வைரவா எம்மைக் காப்பாற்று
கீதா
அன்பின் ஸ்ரீராம் மற்றும் கீதா/ கீதா அனைவருக்கும் வணக்கம்...
பதிலளிநீக்குயாருக்கெல்லாம் டொக்டரை கன்ஸல்ட் செய்யணுமோ எல்லாரும் வரிசை கட்டுங்கப்பா.....இவங்க எல்லா மருத்துவமும் அறிஞ்சவங்களாம்ம்ம்ம்ம்ம்ம்ம்....
பதிலளிநீக்குகீதா
இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.
பதிலளிநீக்குஇன்று இங்கு எல்லாரும் டொக்டரிடம் கினி பிக்!!!! வைரவா...
பதிலளிநீக்குகீதா
கீதா... ஓ... அதிரா மருத்துவராக மாறி இரண்டொரு நாட்கள் ஆகிவிட்டனவே... அவர் முதலில் ஞானியானார். பின்னர் ஞானிகளை உருவாக்கும் குருவானார். இப்போது மருத்துவர் ஆகி இருக்கிறார்!!!
பதிலளிநீக்குஓ! இது முக முத்துவா...சட்டென்று பார்க்கும் போது எம் ஜி ஆர் போலவே இருக்கிறார்!!!!
பதிலளிநீக்குநிறைய தகவல்கள்...ஸ்ரீராம்...அதுவும் புதிய தகவல்கள் எனக்கு...
கீதா
கீதா... ஓ... அதிரா மருத்துவராக மாறி இரண்டொரு நாட்கள் ஆகிவிட்டனவே... அவர் முதலில் ஞானியானார். பின்னர் ஞானிகளை உருவாக்கும் குருவானார். இப்போது மருத்துவர் ஆகி இருக்கிறார்!!!//
பதிலளிநீக்குஹா ஹா ஹா ஹா ஹா.....ஞானி...குரு பார்த்தேன் டொக்டர் அவதாரம்... ஓ!!! ஹும் நான் தான் லேட்டு போல....நேத்துலருந்துதானே ஒயிங்கா நெட் பார்க்கறேன்....புரிந்தது அவங்க ஸ்டெத் போட்டு ஒரு படம் போட்டுருந்தாங்களே......ரைட்டோ...காட் இட்....ஹும் நான் சரியான ட்யூப்லைட்!!!!
கீதா
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஸ்ரீராம்ஜி
பதிலளிநீக்கு//இந்தப் படமெல்லாம் பார்த்து விட்டுதான் நான் பாடல்களை ரசிக்கிறேன் என்று நினைக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்! முக்கியமாய் கீதாக்கா!// க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். எ.அ.கு.இ. ஹிஹிஹிஹி! கண்டு பிடிச்சுக்கோங்க!
பதிலளிநீக்குமருத்துவ அவதாரி, மாஸ்டர் செஃப், அதிரா மியாவ் நல்லவேளையா இன்னமும் வரலை! :)
பதிலளிநீக்குமு.க. முத்து பிரமாதமாகப் பாடுவார் என்பது தெரியும் தானே! சி.எஸ்.ஜெயராமன் சொந்தத் தாய் மாமா! அப்புறமாப் பாடுவதற்குக் கேட்பானேன்! :)
பதிலளிநீக்குவாங்க கில்லர்ஜி... உங்களுக்கும் பிடித்த பாடலா..?
பதிலளிநீக்குவணக்கம் கீதா அக்கா.. "எனக்கு அந்தக் குழப்பம் இல்லை" சரியா?
பதிலளிநீக்குமு க முத்து சில பாடல்கள் நன்றாகக் பாடியிருந்தார். அவரின் குரலில் "சொந்தக்காரங்க... எனக்கு ரொம்பப் பேருங்க..." சமையல்காரன் படத்தில். அணையா விளக்கு படப்பாடல் பிடிக்கும்.. "நல்லோர் மனசில் குடியிருக்கும்.."
காலை வணக்கம். பின்னர் வருகிறேன்.
பதிலளிநீக்கு//.. "எனக்கு அந்தக் குழப்பம் இல்லை" சரியா?// தப்பு, தவளை, தஞ்சாவூரு மாப்பிள்ளை! அப்புறமா வரேன்! :)
பதிலளிநீக்குகாலை வணக்கம் பானு அக்கா..
பதிலளிநீக்கு// தப்பு, தவளை, தஞ்சாவூரு//
பதிலளிநீக்குகீதா அக்கா... 'கு' வுக்கான வார்த்தை மட்டும்தானே தப்பு?
மொத்தமுமே தப்பு! :) நான் சொன்னதே வேறே ஓர் பொருளில். நீங்க சொல்வது நான் சொல்லலை! எ.அ.கு.இ. னு நீங்க சொல்வதா நான் சொல்லி இருக்கேன். :)))) ரொம்பவே ஜிம்பிள்!
பதிலளிநீக்குஇந்தப் படத்தில் வரும் "மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ...???" வும் நன்றாக இருக்கும். "காதலின் பொன் வீதி" திகட்டாத மென்மையான பாடல்...!!!
பதிலளிநீக்குவரிகள் சூப்பர்!!! பாட்டு இனிதான் கேட்கணும்....
பதிலளிநீக்குகீதா
இந்தப் பாடல் பிடிக்கும். பஞ்சு அருணாசலமா ? நைஸ். முக முத்து படப்பாடல்கள் கொஞ்சம் நல்லாத்தான் இருக்கும்.
பதிலளிநீக்குபஞ்சுவின் வரிகளைப் பார்த்தவுடன், இப்போது திரைப்பாடல் எழுதும் திராவைகளை நினைத்துக்கொள்கிறேன். இதுகளில் ஒன்றிடம் இந்த சீனுக்கு எழுதச் சொல்லியிருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து காலைக் காஃபியைக் கெடுத்துக்கொள்கிறேன்:
…
பன்னோடு அருகில் வந்தேன் - அமுல்
பட்டராய் உருகி நின்றாய்…
காதலின் பொன்வீதியில்…
காதலின் பொன் வீதியில்....
பதிலளிநீக்குஎன்ற அழகிய வரியே இன்றைய திராபைகளுக்குத் தெரியாது..
அழகான இனிமையான பாடல். போலிகள் அதிக நாட்கள் நீடிக்க முடியாது என்று நிரூபித்தவர் மு.க.முத்து.
பதிலளிநீக்குபன்னோடு அருகில் வந்தேன் - அமுல்
பதிலளிநீக்குபட்டராய் உருகி நின்றாய்…
காதலின் பொன்வீதியில்…//
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா இது இது இதுதான் ஏகாந்தன் அண்ணா!!!
ஹையோ சிரிச்சு முடில....
கீதா
இந்தப் பாட்டு அப்போது அதிகம் கேட்டிருக்கேன் ஸ்ரீராம்....ஆனால் படம் தெரியாது....வரிகளும் வழக்கம் போல தெரியாது....ஒன்லி ம்யூஸிக்!!!! அதனால் முதலில் தெரியவில்லை...கேட்டதும் தெரிந்துவிட்டது எத்தனை முறை கேட்டிருப்பேன் டீக்கடை, சிலோன் ரேடியோ....
பதிலளிநீக்குகீதா
@ கீதா: ..ஹையோ சிரிச்சு முடில....//
பதிலளிநீக்குமுடிக்காம சிரிங்க. இன்னொரு காஃபியைப் போட்டு எடுத்துண்டு வர்றேன்..
அழகான பாடல் ஸ்ரீராம்....என்ன இனிமையான இதமான இசை....ரொம்ப நாள் கழிச்சு கேக்கறேன் ஸ்ரீராம்....நன்றி நன்றி!!
பதிலளிநீக்குகீதா
@ துரை செல்வராஜு: காதலின் பொன் வீதியில்..என்ற அழகிய வரியே இன்றைய
பதிலளிநீக்குதிராபைகளுக்குத் தெரியாது..//
வீதி என்பதே காதலர்களைப் போட்டுத்தள்ளும் இடம் என்றாகிவிட்டபிறகு,
தமிழ்நாட்டில் காதலாவது, பொன்னாவது, வீதியாவது.
இனி நாம் கதையை, கவிதையை வாசித்தே வாழ்வோம்..
//..மு க முத்து சில பாடல்கள்.. அவரின் குரலில் "சொந்தக்காரங்க... எனக்கு ரொம்பப் பேருங்க..."//
பதிலளிநீக்குகேட்டிருக்கிறேன். குரல் மோசமில்லை. நடிப்பில் எம்ஜி ஆரைக் காப்பியடிக்க வேண்டிய நிர்பந்தத்தில் தள்ளப்பட்டு சுயமிழந்தவர். வேறுசில வழக்கமான காரணங்களுமுண்டு..
இப்போது தலையெடுக்க முயலும் உ.ஸ்-ஐவிடத் திறமையானவர் !
கலைஞரின் தவப்புதல்வரில் உண்மையைச் சொன்ன ஒரே ஆசாமி. அதனால்தான் இருக்குமிடம் தெரியவில்லை.
இப்படத்தைப் பற்றி நீங்கள் கூறியதைக் கேள்விப்பட்டுள்ளேன்.
பதிலளிநீக்குமுன்பே கேட்டு இருக்கிறேன்.
பதிலளிநீக்குமீண்டும் கேட்டேன்.
நன்றி.
ஆரம்பத்தில் நானும் இது எம்.ஜி.ஆர் ருக்கானா பாடல் (மூன்று தமிழ்) என நினைத்திருந்தேன். காதலின் பொன் வீதியில் பாட்டு இனிமை.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅருமையான பாட்டு. இந்த இரண்டு பாட்டுக்களும், இசையோடு இணைந்த ஜானகியின் தேன்குரலும் எனக்கு மிகவும் பிடித்தமானவை. எழுதியது பஞ்சு அருணாசலம் என்பது இப்போதுதான் தெரிந்து கொண்டேன்.. இப்படத்தில் வரும் இவ்விரண்டு பாட்டுக்களும்,வந்த புதிதில் சிலோன் ரேடியோவில் ஒலிப்பரப்பாத நாட்களே இல்லையென சொல்லலாம்.
மு.க.முத்து எம்.ஜி.ஆரின் நடை, உடை, பாவனைகளை பின்பற்றியதுதான், அவரது முன்னேற்றத்திற்கு தடையாக இருந்ததென கூறுவார்கள். ஆனால் அவர் எம்.ஜி ஆர் ரசிகர் எனவும் கூறுவர். ஓரிரு படங்களில் அவர் சொந்த குரலில் பாடியதும் ஓரளவு ஹிட்டானவை..குரலும் நன்றாக இருக்கும். இந்தப்பாடலை மீண்டும் ஒரு முறை கேட்க வைத்தற்கு நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
////பண்ணோடு ஒருத்தி வந்தாள் - என்
பதிலளிநீக்குகண்ணோடு ஒருத்தி வந்தாள்////
என்னாதூஊஉ இருவரோ?:) அட்சச்சோ அபச்சாரம் அபச்சாரம் வெள்ளிக்கிழையும் அதுவுமா இப்பூடி எல்லாம் என்னைப் பார்க்க வைக்கிறீங்களே வைரவா இது ஞாயமோ....:).
கருணாநிதித்தாத்தாவின் கவிதை வரிகள் நினைவுக்கு வந்தன..
பதிலளிநீக்குஉண்மையில் மிக அழகிய பாடல்... பலதடவை ரேடியோவில் பாட்டுக் கேட்டு நெய்யாய் உருகியதுண்டு......:), ஏகாந்தன் அண்ணனின் அமுல் பட்டராய் அல்ல:) கர்ர்ர்ர்ர்:).
பதிலளிநீக்குஇங்கு நோர்மல் ரேடியோ தமிழ் சேவை இல்லை. அதனால என் போனில் கிட்டத்தட்ட 50 ஒன்லைன் ரேடியோக்கள் வைத்திருக்கிறேன்... ஆனா கேட்பது என்னமோ ஒரே ஒரு ரேடியோத்தான் ஏனையவற்றை எப்பவாவது கேட்பதுண்டு....
அதனால எங்கு தனிமையில் இருக்கிறேனோ அங்கெல்லாம் ரேடியோக் கேட்பேன்... பல மிகப் பழைய பாடலெல்லாம் போகும்.
வீடியோவாக இன்றுதான் பார்க்கிறேன்...
////என் பாஸ் அழைத்தால் இது ரிங்டோனாக சிலகாலம் இருந்த பாடல்.////
பதிலளிநீக்குபின்பு ஏன் மாத்தினார்?:) அச்சச்சோ என் நித்திரை போச்ச்ச்ச்ச்ச்:) அப்போ இப்போ என்ன டிங்:) டோன்:) ஓ?:)
ஒருவேளை அனுக்கா பாட்டோ? பீஸ்ஸ் ஆராவது ஜெல்ப் மீ:) தனியா ஜிந்திச்சா பெயிண்ட்டாகிடப் பார்க்கிறேன்:)... ஹையோ இது வேற பெயிண்ட்( இதையும் சேர்த்துச் சொல்ல வேண்டிக் கிடக்கே:)).
சரி சரி மட்டருக்கு வருவோம்:)..
பதிலளிநீக்குகீசாக்கா கீதா ஸ்ரீராம்.... ஆராருக்கு என்ன வைத்தியம் பார்க்கோணும்:) கூச்சப்படாமல் ஜொள்ளுங்கோ:)...
ஒபரேசனா? இஞெக்ஷனா? குளிசையா? கிட்னி எடுக்... சே சே டங்கு ஸ்லிப்பாச்சு... எதுவாயினும் டொல்லுங்கோ...பிறீயாவே செய்வேன்... :)
நம் புளொக்ஸ் நட்புக்களுக்காகத்தானே இரவு பகலாப் படிச்சுப் பட்டம் வாங்கினேன்:)...
ஸ்ஸ்ஸ்ஸ். எதுக்குஇப்பூடி வேர்க்குதெனக்கு:)...
கீதா ரெங்கன்.. //இது முக முத்துவா...சட்டென்று பார்க்கும் போது எம் ஜி ஆர் போலவே இருக்கிறார்!//
பதிலளிநீக்குஅவர் மேக்கப்பில் கூட எம் ஜி ஆர் மாதிரி இருக்கவேண்டும் என்று மெனக்கெட்டார்கள். ஏழையின் சிரிப்பில் இறைவன் என்றொரு பாடல்... அப்படியே எம் ஜி ஆர் ஆக்க்ஷன்! அப்போது எம் ஜி யாரிடமும் சென்று ஆசி வாங்கியதாக நினைவு!
கீதா அக்கா..
பதிலளிநீக்கு//எ.அ.கு.இ//
// நீங்க சொல்வதா நான் சொல்லி இருக்கேன்//
ஓ... எங்க அப்பன் குதிருக்குள் இல்லை! நம்ப மாட்டேங்கறீங்களே... கொ ஒ ம! கடவுளே... நிசம்மா.. இந்த மாதிரி படமெல்லாம் நான் பார்ப்பேன் என்று எப்படி நீங்கள் நினைக்கலாம்!!!!
ஹலோ பாரதி... மூன்று தமிழ் பாடல் இடம்பெற்ற திரைப்படம் பிள்ளையோ பிள்ளை! இது உங்களுக்கு வேறோர் நினைவை உண்டாக்க வேண்டுமே... தஞ்சாவூர் அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி (அப்போது அது உயர்நிலைப்பள்ளி!) மாணவர்கள் போராட்டமும் கோஷமும்!
பதிலளிநீக்குஆம். பதிவிட்டவுடனேயே என் குழப்பத்தை உணர்ந்தேன். மு. க. முத்துவின் சொந்தக்குரலில் எனக்குப் பிடித்தவை: "சொந்தக்காரங்க... எனக்கு ரொம்ப பேருங்க..." 2. யாரும் வருவார் யாரும் தொழுவார் நாகூராண்டவர் சந்நிதியில்..."
நீக்குவாங்க ஏகாந்தன் ஸார்... பன்னோடு அருகில் வந்தாள்... ஹா... ஹா... ஹா... எழுதினாலும் எழுதுவாங்க! இந்தப் பாடலைப் பொறுத்தவரை நான் எழுத நினைத்து டைப் அடிக்கும்போது மறந்துபோன விஷயம் ஒரே பல்லவியையே இரண்டு டியூன்களில் தந்திருக்கும் எம் எஸ் வியின் திறமை.. இது போல பல்லவி இரண்டு டியூன்களில் வருவது போல இன்னும் ஓரிரண்டு பாடல்கள் பற்றியும் நானும் என் மாமா ஒருவரும் முன்னர் பேசிக் கொண்டிருந்தோம். இப்போது நினைவுக்கு வரவில்லை!
பதிலளிநீக்கு/காதலின் பொன் வீதியில்.... என்ற அழகிய வரியே //
பதிலளிநீக்குதுரை செல்வராஜூ ஸார்.. சொல்ல மறந்த இன்னொரு விஷயம்.. இந்த ஆரம்ப வரியைப் பாடும்போது மோகன்ஜியின் புத்தகமும், அவரது அழகான சிறுகதையும் நினைவுக்கு வருகிறது!
//போலிகள் அதிக நாட்கள் நீடிக்க முடியாது என்று நிரூபித்தவர் மு.க.முத்து.//
பதிலளிநீக்குஉண்மை பானு அக்கா... பாக்யராஜுக்கு ஒரு டூப்ளிகேட் இருந்தார் நினைவிருக்கிறதா?
//இந்தப் பாட்டு அப்போது அதிகம் கேட்டிருக்கேன் ஸ்ரீராம்.//
பதிலளிநீக்குகீதா... ஏகாந்தன் ஸாருக்கு கொடுத்திருக்கும் பதிலைப் படியுங்கள். ஒரே பல்லவி, இரண்டு டியூன்!
ஏகாந்தன் ஸார்..
பதிலளிநீக்கு// நடிப்பில் எம்ஜி ஆரைக் காப்பியடிக்க வேண்டிய நிர்பந்தத்தில் தள்ளப்பட்டு சுயமிழந்தவர்//
பின்னாட்களில் அ தி மு கவிலேயே சரணடைந்து அப்பாவைச் சங்கடப்படுத்தியவர். ப்ளஸ் போதைப்பழக்கங்கள். உ ஸ் லாம் நடிக்கிறார் என்று சொன்னால் அவருக்கே சிரிப்பு வரும்!
நன்றி முனைவர் ஐயா...
பதிலளிநீக்குவாங்க ப்ரியசகி... அப்படி ரசிகர்களைக் குழப்புவதற்கு என்றே உருவாக்கப்பட்டவர் அவர்!
பதிலளிநீக்குவாங்க கமலா ஹரிஹரன் சகோ...
பதிலளிநீக்கு//இப்படத்தில் வரும் இவ்விரண்டு பாட்டுக்களும்//
எவ்விரண்டு பாடல்கள் சகோ? "மூன்று தமிழ் தோன்றியதும்?" என்றால் அது வேறு படம். பிள்ளையோ பிள்ளை!
வாங்க டாக்டர் அதிரா...
பதிலளிநீக்கு//அப்போ இப்போ என்ன டிங்:) டோன்:) ஓ?:)//
ஆம், இப்போது வெறும் டிங் டோன்தான்!
வந்த உடனே வம்பு கிளப்ப நினைத்தாலும் என் பாஸ் கிட்ட அதெல்லாம் செல்லாதாக்கும்.. ("உன் மூஞ்சிக்கு நானே அதிகம்... வேற ஆள் வேற வருமாக்கும்... போய்யா வேலையைப் பாத்துக்கினு...")
அதிரா....
பதிலளிநீக்குகருணாநிதியின் கவிதை வரிகளா? அது என்ன?
ஆஷா போஸ்லே அதிரா....
பதிலளிநீக்கு//உண்மையில் மிக அழகிய பாடல்... பலதடவை ரேடியோவில் பாட்டுக் கேட்டு நெய்யாய் உருகியதுண்டு....//
ஆம், ஆரம்பத்திலேயே அலைபோல அசைந்து மேலே எழும் அந்த அழகான வயலின் ஒலியும், இரண்டாவது சரணத்துக்கு முன் வரும் ஃப்ளூட் இசையும்... எம் எஸ் வி தூள் கிளப்பி இருக்கும் பாடல்.
டொக்டர் அதிரா.
பதிலளிநீக்கு//ஆராருக்கு என்ன வைத்தியம் பார்க்கோணும்:) கூச்சப்படாமல் ஜொள்ளுங்கோ:)... //
இப்போதான் ஒரு பேலி ச்சே... போலி டாக்டரிடம் சிக்கிச் சீரழிந்து செலவு செய்தோம்! இனி உங்களிடம்தான் என் ட்ரீட்மெண்ட் எல்லாம்.. சொல்லுங்க... இன்ஸ்டன்ட்டா ஞானியாக என்ன செய்யணும்?
அருமையான பாடல். Funny reactions and dance movements..
பதிலளிநீக்குவீதி என்பதே காதலர்களைப் போட்டுத்தள்ளும் இடம் என்றாகிவிட்டபிறகு,
பதிலளிநீக்குதமிழ்நாட்டில் காதலாவது, பொன்னாவது, வீதியாவது.//
அப்படிப் போடுங்க அறுவாளை....ஆ ஆ ஆ இங்கும் அறுவாளா!! ஹையோ!!! மீ ரன்னிங்க்...
கீதா
உங்களிடம்தான் என் ட்ரீட்மெண்ட் எல்லாம்.. சொல்லுங்க... இன்ஸ்டன்ட்டா ஞானியாக என்ன செய்யணும்?//
பதிலளிநீக்குஹா ஹா ஹா அவங்க குருவைப் பாருங்க.....ஞானியாடுவீங்க!! உங்க வீட்டுக்கு அவங்க குரு வந்து தரிசனம் கொடுக்கும் வாய்ப்புண்டா...இல்லைனா எங்க வீட்டுக்கு வாங்க...தினமும் தரிசனம் உண்டு!! ஹா ஹா ஹா ஹா
கீதா
பின்பு ஏன் மாத்தினார்?:) அச்சச்சோ என் நித்திரை போச்ச்ச்ச்ச்ச்:) அப்போ இப்போ என்ன டிங்:) டோன்:) ஓ?:)
பதிலளிநீக்குஒருவேளை அனுக்கா பாட்டோ? பீஸ்ஸ் ஆராவது ஜெல்ப் மீ:) தனியா ஜிந்திச்சா பெயிண்ட்டாகிடப் பார்க்கிறேன்:)... ஹையோ இது வேற பெயிண்ட்( இதையும் சேர்த்துச் சொல்ல வேண்டிக் கிடக்கே:)).//
ஹா ஹா ஹா கஷ்டப்பட்டு படிச்ச டொக்டர்!!! பெய்ன்ட் ஆகலாமோ!!! சைக்காலஜி சைக்காலஜி!!! ....அதெல்லாம் பரம ரகசியம்...இங்கிட்டு சொல்ல முடியுமோ.....ஹிஹிஹி...
கீதா
ஸ்ரீராம் முக முத்துவின் மகன் பெயர் மறந்துவிட்டது ஆனால் அவரும் கூட நன்றாகப் பாடுவார் என்று எங்கேயோ வாசித்த நினைவு...
பதிலளிநீக்குஸ்ரீராம் பிஎஸ் என் எல் நெட் வந்த பிறகுதான் ரெண்டாவதாக நிதானமாகக் கேட்டேன்...முதலில் ஜியோவில் ஓடிக் கொண்டிருந்ததால் ஒரு சின்ன பயம் ...எங்கேனும் அதுவும் பிச்சுக்கிடுமோனு...யுட்யூப் ஆச்சேனு...பல்லவியில் ரெண்டாவது முறை பாடும் போது செம சங்கதிகள்,,,பிருகாக்கள்....அப்புறம் சரனம் பாடிவிட்டு பல்லவி எடுக்கும் போதும் அது வித்தியாசமான சங்கதி!!! என்று பொளந்து கட்டியிருக்கார் எம் எஸ் வி...
கீதா
ஸ்ரீராம் நீங்க சொன்னதையும் பார்த்துவிட்டேன் முந்தைய கருத்தில் சொல்ல விட்டுப் போச்சு...அதைப் பார்த்துத்தான் கருத்திட்டேன்..
பதிலளிநீக்குகீதா
முதலில் பாடும் பல்லவிக்கும் அப்புறம் வரும் பலல்விக்கும் ட்யூன் செம வித்தியயசம்,...ஸ்ரீராம் நீங்க சொன்னதையும் நோட் பண்ணீனேன்...செம இல்ல....
பதிலளிநீக்குகீதா
///ஸ்ரீராம். said...
பதிலளிநீக்குஅதிரா....
கருணாநிதியின் கவிதை வரிகளா? அது என்ன?//
ஸ்ரீராம் எப்பூடி அப்போ அங்கு வராமல் விட்டீங்க?:) கீதா வந்திருக்கிறா:).. நான்.. மீண்டும் அதிரா:) வாக புளொக்ஸ் இல் திரும்பியபோது போட்ட போஸ்ட்:)..
http://gokisha.blogspot.com/2017/01/blog-post_20.html
ஆங்ங்ங் கீதா கம்பி மேலயோ?:) அப்போ ஸ்ரீராம் இப்போ கட்டிலுக்குக் கீழ:)) ஹா ஹா ஹா இங்கு நம்மைப் பார்த்தால் எல்லோரும் ஓடி ஒளிக்கினமே:)) அவ்ளோ டெரராவா இருக்கோம்ம்ம்ம்?:))
பதிலளிநீக்கு///ஸ்ரீராம். said...
பதிலளிநீக்கு///இனி உங்களிடம்தான் என் ட்ரீட்மெண்ட் எல்லாம்..///
ஆவ்வ்வ்வ்வ் காதில தேனாப் பாயுதே:) அப்போ என் சுவிஸ் எக்கவுண்டைத் தூசு தட்டிட வேண்டியதுதேன்:)). சே..சேஎ.. இந்த நேரம் பார்த்து என் செக் ஐக் காணமே கர்ர்ர்:)) காசு கைக்கு வரும் நேரம் பார்த்துக் காணாமல் போயிடுறா:).. கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல் போயிடுது:))..
/// சொல்லுங்க... இன்ஸ்டன்ட்டா ஞானியாக என்ன செய்யணும்?///
ஒண்ணும் பண்ண வாணாம்:).. உடனடியா தேம்ஸ்கரை ஆலமர ஆச்சிரமத்துக்கு வந்திடுங்கோ.. மீ பிசியா இருப்பேன் பட் என் சிஷ்யைகளே:) உங்களை இன்சிடெண்ட்:) ஹையோ டங்கு சிலிப் ஆகுதே இன்ஸ்டெண்ட் ஞானி ஆக்கிப்போடுவினம்:))..
ஊசிக் குறிப்பு:
நன்கொடைகள் கூச்சமின்றி ஏற்றுக்கொள்ளப்படும்:))
///ஹா ஹா ஹா கஷ்டப்பட்டு படிச்ச டொக்டர்!!! பெய்ன்ட் ஆகலாமோ!!! சைக்காலஜி சைக்காலஜி!!! ....அதெல்லாம் பரம ரகசியம்...இங்கிட்டு சொல்ல முடியுமோ.....ஹிஹிஹி...
பதிலளிநீக்குகீதா///
ஹா ஹா ஹா அப்போ இதுவும் அந்தத் தலைமயிர்.. குட்டித்தாடி மட்டர்போல என ஜொள்ளுங்கோ:)) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்:))..
கீசாக்காவுக்கு ஒரு கிலோ கரண்ட் எடுத்துப்போய்க் குடுத்திட்டு வாறேன்:)).. பாவம் வேர்க விறுவிறுக்க ஃபான் இல்லாமல் இருக்கிறா:))
இன்றைக்கு நல்ல பாடல் தெரிவு செஞ்சிருக்கீங்க. முன்னால் கேட்டிருக்கேன்.
பதிலளிநீக்கு"பிள்ளை நடித்து பிள்ளையோ பிள்ளை அப்பன் அடித்தது கொள்ளையோ கொள்ளை" ஸ்லோகன்தானே ஶ்ரீராம்.
கீதா ரங்கன், எம் எஸ் வியின் திறமை உங்ககிட்டயும் இருக்கு. "செம இல்ல" என்பதையும் இரு வேறுபட்ட பொருள் கொள்ளலாம்.
பதிலளிநீக்குமெல்லிசை மன்னர் வழங்கிய முத்துக்களுள் இந்தப்பாடலும் ஒன்று...
பதிலளிநீக்குபாடலின் வடிவம் நறுக்கப்பட்டுதான் அப்போதெல்லாம் இசைத்தட்டில் வெளியாகும்...
கல்யாண வீடுகளிலும் கட்சி மேடைகளிலும் ஒலித்ததை விட இலங்கை வானொலியில் அதிகம் ஒலித்து மனதைக் கொள்ளை கொண்ட பாடல்...
அரசியல் களத்தில் ஓங்கி ஒலித்த
பிள்ளையோ பிள்ளை - கொள்ளையோ கொள்ளை என்ற கோஷத்தை மறக்க முடியுமா?...
இந்த அங்கிள்தானே நல்ல மனதில் இருக்கும் நாகூர் ஆண்டவா பாட்டும் பாடுவார் .முந்தி ரம்சான் வந்தா ஒளியும் ஒலியும் ல இந்த பாடல் தவறாம இடம் பெறும் ..
பதிலளிநீக்குஇந்த பாடலும் நல்லா இருக்கு ..
முக முத்து அந்த காலத்தில் முன்பக்கம் punk விட்ருக்கார் இப்போ பின்பக்கம் பங்க் விடறாங்க :)
@ ATHIRA (MBBS )
பதிலளிநீக்குமுகுந்தா சமந்தா சுனந்தா அந்த பாட்டுதான் இப்போ ஸ்ரீராம் ரிங்டோனாம் :))
ரசிக்கும் பாடல்களில் ஒன்று....
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீகாந்த். அதெல்லாம் அந்தக் கால டான்ஸ் மூவ்மென்ட்ஸ்.
பதிலளிநீக்கு//அவங்க குருவைப் பாருங்க.....ஞானியாடுவீங்க!! //
பதிலளிநீக்குஅவங்க குரு யார் கீதா? ஸ்வாமி ...........?
//ஹா ஹா ஹா கஷ்டப்பட்டு படிச்ச டொக்டர்!!! பெய்ன்ட் ஆகலாமோ!!! //
நான் சுண்ணாம்பு ஆயிட்டேன்!
மு க முத்துவின் மகன் பெயர் அறிவுநிதி.
ஸ்வாமி அதிரானந்தி...
பதிலளிநீக்கு//கீதா கம்பி மேலயோ?:) அப்போ ஸ்ரீராம் இப்போ கட்டிலுக்குக் கீழ:))//
ஹா... ஹா... ஹா...
//ஸ்ரீராம் எப்பூடி அப்போ அங்கு வராமல் விட்டீங்க?:) கீதா வந்திருக்கிறா:).//
அதானே? எனக்கும் தெரியவில்லை.
//அப்போ என் சுவிஸ் எக்கவுண்டைத் தூசு தட்டிட வேண்டியதுதேன்:)//
என்னது? ஃபீஸா? முதல் பதினைந்து ஸிட்டிங்குகளுக்கு நான் ஃபீஸ் தரும் பழக்கமில்லை. பதினாறாவது ஸிட்டிங் டாக்டர் மா(ற்)றி விடுவேன்!
வாங்க நெல்லை... அதேதான்... அதே ஸ்லோகன்தான்!
பதிலளிநீக்குவாங்க பாரதி... அதிசய மீள்வருகை! ஆம், சரிதான். நானும் இதே பாடலைச் சொல்லி இருக்கேன். இன்னொரு பாட்டு கூட நல்லாயிருக்கும் "இங்கேயும் மனிதர்கள்... இதயம்தான் உள்ளவர்கள்..."
பதிலளிநீக்குவாங்க துரை செல்வராஜூ ஸார்... ஆம், சிலோன் ரேடியோ இசைப்பிரியர்களின் தெய்வம். மு க முத்து 2008 இல் தேவா இசையில் ஒரு பாடல் பாடி இருக்கிறாராம்.
பதிலளிநீக்குவாங்க ஏஞ்சல்... அதே அங்கிள்தான். சொல்லி இருக்கேனே...
பதிலளிநீக்குஇப்போ எந்த ரிங்க்டோனும் கிடையாது!
நன்றி டிடி.
பதிலளிநீக்குபாடலை மட்டும் கேட்கலாம். இருவரும் பாவப்பட்ட ஜன்மங்கள்.
பதிலளிநீக்குஇனிய இசை. கேட்க வைத்தத்ற்கு மிக நன்றி. ஸ்ரீராம்.
///ஸ்ரீராம். said...
பதிலளிநீக்கு//அவங்க குருவைப் பாருங்க.....ஞானியாடுவீங்க!! //
அவங்க குரு யார் கீதா? ஸ்வாமி ...........?///
ஹையோ ஹையோ ஹையோ:)) இந்த 2018 இன் மிக மானபங்கப்படுத்தப்படும் கிளவியே:).. ஹையோ டங்கு ஸ்லிப்பாகுதே:) கேள்வியே இதுவாத்தான் இருக்கும்:)).. பத்து வருசமா என் கிரேட் குருவைப் பற்றி எங்கெங்கெல்லாமோ படம் போட்டுப்:) பேசி வருகிறேன்:) இப்ப போய் ஸ்ரீராம் இப்பூடி ஒரு கொஸ்ஸன்:)) கேட்டிட்டாரே:))..
இதோ இங்கிருக்கிறார் பாருங்கோ:) அவரும் ஃபிஸ்:) பிடிக்கத்தான் போய்க்கொண்டிருக்கிறார்:)..
https://uk.images.search.yahoo.com/search/images;_ylt=AwrJ3s.A2ataROYAGZ5NBQx.;_ylu=X3oDMTBsZ29xY3ZzBHNlYwNzZWFyY2gEc2xrA2J1dHRvbg--;_ylc=X1MDMjExNDcxNzAwNQRfcgMyBGFjdG4DY2xrBGJjawNmNGlpcW1oY3Z1dHYxJTI2YiUzRDMlMjZzJTNENWkEY3NyY3B2aWQDekNxTGNqRXdMakx5U2xxMFdmOTM0UVBvTnprdU53QUFBQUMzaXZGdgRmcgNtY2FmZWUEZnIyA3NhLWdwBGdwcmlkAzhka3FTd2hUVFMuLnNWMl9ySDBTNUEEbXRlc3RpZANudWxsBG5fc3VnZwM2BG9yaWdpbgN1ay5pbWFnZXMuc2VhcmNoLnlhaG9vLmNvbQRwb3MDMARwcXN0cgMEcHFzdHJsAwRxc3RybAMxOQRxdWVyeQNsYXVnaGluZyBtb25rZXkgZ2lmBHRfc3RtcAMxNTIxMjExOTQyBHZ0ZXN0aWQDbnVsbA--?gprid=8dkqSwhTTS..sV2_rH0S5A&pvid=zCqLcjEwLjLySlq0Wf934QPoNzkuNwAAAAC3ivFv&p=laughing+monkey+gif&fr=mcafee&fr2=sb-top-uk.images.search.yahoo.com&ei=UTF-8&n=60&x=wrt#id=18&iurl=https%3A%2F%2Fmedia.giphy.com%2Fmedia%2F3o85xAYQLOhSrmINHO%2Fgiphy.gif&action=click
பதிவுக்கு கருத்துரை தந்த பிறகுதான் மீண்டும் ஒருமுறை பதிவை வரி விடாமல் படித்தேன். ஆனால் நீங்கள் எங்கேயும் ரசித்த பாடலின் படத்தை (பூக்காரி) குறிப்பிட்டு சொல்லவேயில்லையே! நானும் ஏதோ நினைவில் இப்படத்தில் வரும் இவ்விரண்டு பாடல்கள் என எழுதி விட்டேன்.எத்தனை வருடங்கள் ஆகி விட்டன. பாடல்களின் படங்கள் பெயர் நினைவில் சட்டென உதயம் ஆவதில்லை. இப்போ வரும் படத்தின் பெயர்கள் எதுவுமே மனதில் நுழைவதேயில்லை. நன்றி.
பதிலளிநீக்குஅதிரா... தப்பி ஓடிக்கொண்டிருக்கும் உங்கள் குருவைப் பார்த்து வந்தேன்!!
பதிலளிநீக்குவாங்க வல்லிம்மா... முகமு சரி, வெஆநிக்கு என்ன? ஏன் பாவம்?
பதிலளிநீக்குசகோ கமலா ஹரிஹரன்... மன்னித்துக் கொள்ளுங்கள். தவறாக நினைத்து விட்டீர்களோ? நான் சாதாரணமாக, நகைச்சுவையாகத்தான் கேட்டேன். ஆம், பூக்காரி படப்பாடல் இது என்று நானும் சொல்லவில்லைதான்.
பதிலளிநீக்குஇனிமையான பாடல் கேட்டேன் பாராட்டுகள்
பதிலளிநீக்குநன்றி அசோகன் குப்புசாமி ஸார்.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅந்த கால படங்கள் பாடல்கள் மனதில் ஒரளவு நிற்கும் அளவிற்கு கூட இப்போது வரும் படங்கள் பாடல்கள் (எனக்கு) நிற்பதில்லை.அந்த மனதில் வைத்துதான் அப்படிச்சொன்னேன்.இதில் தவறாக நினைக்க ஒன்றுமேயில்லை. நீங்கள் படத்தை குறிப்பிடவேயில்லையே என நானும் நகைச்சுவையாகத்தான் கேட்டேன்.எழுதின பிறகுதான் நீங்கள் தவறாக நினைக்க கூடாதே என எண்ணினேன்.தவறெனின் வருந்துகிறேன். மன்னிக்கவும்..நன்றி.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஅடடா! !பல நாட்கள் கழித்து வருகிறேன். அழகான பாடல் தேர்வு. பொன்வீதி கதையில் இந்தப் படம் வந்த நாட்களின் வாழ்க்கை சம்பவம் விரிந்தது. இந்தக் கதைக்காக திகட்டத் திகட்ட பாராட்டு பெறும் பாக்கியம் பெற்றேன்
பதிலளிநீக்குநன்றி மோகன்ஜி. எனக்கும் உங்கள் கதை நினைவுக்கு வந்து, அதைப் பின்னூட்டத்தில் தெரிவித்திருந்தேன்.
பதிலளிநீக்குமோகன்ஜி அண்ணா.. 'எங்களு'க்கு புதிய கதை ஒன்று எழுதி அனுப்புவதாய் முகநூலில் வாக்களித்திருக்கிறீர்கள்.... நன்றியுடன் + மகிழ்வுடன் நினைவூட்டுகிறேன்!
பதிலளிநீக்கு