வியாழன், 26 ஏப்ரல், 2018

அத்திரிமாக்கும் அத்து மீறலும்!
​​
என் மகன் ஒரு சம்பவம் சொன்னான்.  அவன் நண்பன் ஒரு 'ஸ்பீச்' கொடுக்கத் தயார் செய்திருந்தானாம்.  நிகழ்ச்சி, காலை என்பதற்கு பதிலாக மாலை என்று மாறியதாம்.  விருந்தினர் பெயரிலும் இரண்டு மாறுதல்கள் இருந்ததாம்.  'அதை மாற்றிப் படி' என்றால்,  'ஐயோ...   இதுவரை மனப்பாடம் செய்து வைத்தது எல்லாம் மறந்து விட்டதே... இதை மாற்றினேன் என்றால் எல்லாவற்றையும் மறந்து மாற்றி விடுவேன்" என்றானாம்...   

ஸ்கூல்பையன் மாதிரி நெஞ்சில் குத்திக்கொண்டு "குட்மார்னிங்...  ஐ வெல்கம் யூ ஆல்........  குட்மார்னிங்...  ஐ வெல்கம் யூ ஆல்...   குட்மார்னிங்...  ஐ வெல்கம் யூ ஆல்..." என்று மனப்பாடம் செய்து கொண்டிருந்தான் என்றும் சொன்னான்!

எனக்கு உடனே என் அம்மா என் சின்ன வயதில் சொன்ன 'அத்திரிமாக்கு' கதை நினைவுக்கு வந்து விட்டது.  அதை என் மகனுக்குச் சொன்னேன்.  ஆச்சர்யம்.  அவன் அதை இதுவரைக் கேட்டதே இல்லை.  என் அம்மாவிடம் கேட்டிருந்த நான் இந்தக் கதையை அவனுக்குக் கடத்தவில்லை!!  அப்புறம் அவன் எப்படி அவன் குழந்தைகளுக்கு  இதைச் சொல்வான்!!!


கதை என்னவென்றால்,  மாமியார் வீட்டுக்கு அவ்வப்போது சென்று வந்த ஒருவன் தனது அம்மாவிடம், "மாமியார் வீட்டில் ஒரு தின்பண்டம் செய்து தந்தார்கள்.  ரொம்ப நன்றாயிருந்தது.  நீயும் செய்து கொடேன்" என்றானாம்.

"என்ன தின்பண்டம் அது? என்று கேட்டாளாம் அம்மா.   'பெயர் தெரியவில்லை' என்றானாம்.  'அடுத்த முறை கேட்டுக்கொண்டு வா' என்றாளாம் அம்மா.

அடுத்த முறை கேட்டதும் மாமியார், "இது தெரியாதா மாப்பிள்ளை..  இதுதான் கொழுக்கட்டை" என்றாளாம்.  இவன் ஊர் திரும்பும் வழியெல்லாம்  'கொழுக்கட்டை கொழுக்கட்டை' என்று பெயர் சொல்லிக் கொண்டே வந்தானாம் - மறந்து விடாதிருக்க.

ஒரு சிறிய பள்ளத்தைத் தாண்டும்போது "அத்திரிமாக்கு" என்று தாண்டினானாம்.  அப்புறம் 'கொழுக்கட்டை' என்கிற வார்த்தை மறந்துபோய் அத்திரிமாக்கு என்றே சொல்லிவந்து, அம்மாவிடமும் 'அந்தத் தின்பண்டத்தின் பெயர் அத்திரிமாக்கு' என்று சொன்னானாம்.  

'அப்படி ஒரு தின்பண்டம் இல்லையே' என்று சொன்ன அம்மாவிடம் பிடிவாதமாய் மறுபடி மறுபடி இவன் அதையே சொல்ல அவள் கோபம் வந்து இவனை அடித்து உதைத்து விட்டாளாம்.

அப்போது அங்கே வந்து பார்த்த அவன் பாட்டி 'இப்படி அடிச்சுட்டியே... உடம்பெல்லாம் கொழுக்கட்டையாய் வீங்கிப் போச்சே..' என்றாளாம். "ஆ...  கொழுக்கட்டை...  கொழுக்கட்டை...  அதுதான் அதன் பெயர்" என்றானாம் மகன் புத்திசாலி!

இப்படி ஒரு கதை அம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன்.

இன்னொரு கொழுக்கட்டைக் கதையும் சொல்வாள்.  மகனுக்கும் மகளுக்கும் கொழுக்கட்டை செய்து மூடி வைத்திருந்தாளாம் அம்மா.    முதலில் வந்த மகன் தன் பங்கு கொழுக்கட்டையைத் தின்று, அது நன்றாயிருக்கவே, சகோதரி பங்கு கொழுக்கட்டையையும் தின்று விட்டானாம்.  அப்புறம் அங்கு ஓடிய எலி ஒன்றைப் பிடித்து மூடி விட்டானாம்.

அம்மா சொல்லி, மகள் வந்து மூடியைத் திறந்ததும் எலி குடித்து ஓடியதாம்.

மகள் வந்து அம்மாவிடம் கேட்டாளாம்...   "அம்மா அம்மா கொழுக்கட்டைக்கு கண்ணு உண்டோடி?"  "சீ அதெல்லாம் கிடையாது.." என்றாளாம் அம்மா.  அம்மாம்மா கொழுக்கட்டைக்கு மூக்கு உண்டோடி?" என்றாளாம் மகள்.  "கிடையாது" என்று சொல்கிறேன் இல்லை?" என்றாளாம் அம்மா.

இப்படியே மகள் அடுத்தடுத்துக் கேட்டதும் அவளை பிடித்து உதைத்து விட்டு வீங்கிய இடங்களைக் காட்டி.."பார்..  இப்படிதான் இருக்கும் கொழுக்கட்டை" என்றாளாம்!

தங்கைக்கு உணவூட்டும் அம்மா ராகத்துடன் சொல்லும் இந்தக் கதை இன்னும் நினைவில்!

இதெல்லாம் அம்மா இட்டுக்கட்டிய கதைகளோ, தன் சிறுவயதில் அவர் கேட்ட கதைகளோ..   இல்லை, எனக்கு மிகவும் பிடித்த கொழுக்கட்டையின்மேல் அம்மாவுக்கு என்ன கோபமோ!!!


நீங்கள் கேட்டதுண்டா இந்தக் கதைகளை?  உங்கள் வீட்டில் இப்படி அம்மா சொல்லும் பழங்கதைகள் உண்டா?

===========================================================================================================

சுஜாதா ரசித்த எம் ஜி கன்னியப்பனின் 'என் நந்தவனத்துப் பட்டாம்பூச்சிகள்' என்கிற தொகுப்பிலிருந்து 'வரம் கேட்கிறேன்'என்கிற கவிதை : 01.09.2002 இல் அம்பலம் இணைய இதழில் சிலாகித்திருக்கிறார்.வரம் கேட்கிறேன் 
வேறென்ன கேட்பேன் 
பராசக்தி 
வில்லங்கம் எதுவுமில்லா 
காணி நிலம் 
அதில் 
தீப்பிடிக்காத 
ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரை !
அடைப்பில்லா 
ட்ரைனேஜ் கனெக்ஷன் !
வைரஸ் வராத கம்ப்யூட்டர் !
விளையாடி மகிழ 
வெப்சைட் 
சரியான முகவரியோடு 
எலெக்ஷன் கார்டு 
பக்க விளைவில்லா 
ஃபாஸ்ட் ஃபுட் அயிட்டங்கள் !
மறக்காமல் 
கொஞ்சம் மினரல் வாட்டர் !
வேறென்ன கேட்பேன் 
பராசக்தி 
இவை யாவும் 
தரும் நாளில் 
அதிர்ச்சியில் 
இறக்காமலிருக்க 
கொஞ்சம் ஆயுள்.

இதில் 'சரியான முகவரியோடு எலெக்ஷன் கார்டு' என்பதை ஆதார் கார்டு என்று இப்போது மாற்றிக் கொள்ளலாம்!  வேண்டுமானால் புகைப்படத்தைச் சம்பந்தப்படுத்தியும் சொல்லலாம்!!!


===========================================================================================================


அப்பா புத்தகங்களின் மகா ரசிகர்.  மார்ச் 2016 இல் நான் அவரைப் பார்க்கப் போயிருந்தபோது அரைகுறை நினைவுடன், பேச்சு வராத நிலையிலும் "கடைசியா என்ன புத்தகம் படிச்சே?  இப்போ ஏதாவது கொண்டு வந்திருக்கியா? புத்தகக் கண்காட்சி போனாயா?  என்னென்ன புத்தகங்கள் வாங்கினாய்?" என்று கேட்டார்.  மாமா ஆச்சர்யப்பட்டுப் போனார்.  அவராலோ இந்நிலையில் புத்தகம் படிக்கக் கூட முடியாது.  ஆனாலும் இப்படிக்கு கேட்கிறாரே என்று. 

 அவர் சேர்த்து வைத்திருந்த புத்தகங்கள் அனைத்தையும் நான் கவர்ந்து வைத்திருக்கிறேன்.  அவர் புத்தகம் படிக்கும்போது கையில் ஒரு பென்சிலுடன்தான் படிப்பார்.  அங்கங்கே அடிக்கோடிட்டு, சிற்சில இடங்களில் கமெண்ட்டும் எழுதுவார்.  அந்தப் பழக்கம் அவரிடமிருந்து என்னிடமும் வந்திருக்கிறது.  நானும் பென்சிலோடுதான் புத்தகங்கள் படிக்கிறேன்!  ஆனால் அடுத்தவர்களிடமிருந்து இரவல் வாங்கும் புத்தகத்தில் இந்த சில்மிஷங்களை அப்பாவும் செய்ததில்லை, நானும் செய்வதில்லை!

அவருடைய 'கைவண்ணத்'தை அவ்வப்போது பகிர்கிறேன்.இப்படித் திட்டுவதும் உண்டு!


இப்படித் 'தகவல்' தெரிவிப்பது உண்டு!!


இப்படிக் கடுப்பாவதும் உண்டு!


இப்படி உணர்ச்சி வசப்படுவதும் உண்டு...இப்படிப் பாராட்டுவதும் உண்டு!

======================================================================================================


'அத்து'வுக்கு பொருள் தெரியுமா? நாம் உபயோகிக்கும் அர்த்தத்துக்கும், இந்தப் பொருள்களுக்கும் சம்பந்தமே காணோம்!!!

=============================================================================================================


நேற்றைய புதிரின் விடைகள்...  சொல்ல வேண்டிய அவசியமே இல்லாமல் எல்லாமே சுலபமாகத்தான் இருந்தன.  பானு அக்கா முன்னர் சொன்னது எனக்குப் பாடம்.  "ரொம்பக் கஷ்டமா யோசிக்காமல் எல்லோரும் ஓரளவு எளிதாகக் கண்டு பிடிக்கற மாதிரிதான் நான் புதிர்கள் அமைப்பேன்" என்று அவர் தன்னைப்பற்றி சொல்லி இருந்தார்.

இரண்டு  விடைகள் மட்டும் சொல்லப் படவில்லை.  மற்றவை எளிதாக வந்து விட்டன.  சரியான விடைகள் சொன்னவர்கள் எல்லோரும் நன்றாக சத்தமாக 'ஓ' போடுங்கள்....!  அனைவருக்கும் பாராட்டுகள்.


புத்தகங்கள் 

1.  கொலையுதிர் காலம் 

2.  கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு ( பதில் வராத கேள்வி ஒன்று.  நான் கொஞ்சம் பெட்டர் படம் போட்டிருக்கலாம்!)

3. திருவரங்கன் உலா 

4.  பாஞ்சாலி சபதம் 


சினிமாக்கள் 


5.  பாண்டி நாட்டு தங்கம் 

6.  ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி (கோனார் நோட்ஸ் மாதிரி சுலபமாகத் தந்திருந்தேன்!)

7 கல்யாணப்பரிசு 


பதிவர்கள் 

8.  துளசி டீச்சர், துளசிதரன் தில்லையகத்து  (இவரை மறந்துட்டீங்களே மக்காஸ்...!)

9. ஜி எம் பி ஸார்.

10 ஏகாந்தன் (பதில் வராத இரண்டாவது கேள்வி.  இவரை யாருமே கண்டுபிடிக்கவில்லை!)


========================================================================================================அவ்ளோதான்....    ஸீ யூ அடுத்த வாரம்!


61 கருத்துகள்:

 1. வாங்க துரை செல்வராஜூ ஸார்... குட் மார்னிங்!

  பதிலளிநீக்கு
 2. அன்பின் ஸ்ரீராம் மற்றும் கீதா/கீதா அனைவருக்கும் வணக்கம்....

  பதிலளிநீக்கு
 3. இன்னைக்கு சீக்கிரம் காஃபி ஆத்தி விடவும்....

  காலை 6 மணிக்கு தஞ்சையில தேரோட்டம்....

  பதிலளிநீக்கு
 4. குட் மார்னிங் வெங்கட்... நடைப்பயிற்சி முடிந்ததா?

  பதிலளிநீக்கு
 5. அத்திரி மாக்கு கத்திரிப் பிஞ்சு - என்றும் சொல்வதுண்டு....

  கதை அருமை...

  புத்தக வாசிப்பு
  நெஞ்சில் நினைவலைகளாக....

  பதிலளிநீக்கு
 6. //நீங்கள் கேட்டதுண்டா இந்தக் கதைகளை?// எங்க குட்டிக்குஞ்சுலு வரை இந்தக் கதைகள் வந்தாச்சு. அதுவும் அது அம்மா, அம்மா கொழுக்கட்டைக்குக் கண்ணு உண்டோடி என்றால் கண்ணைச் சிமிட்டும். கை உண்டோடி என்றால் கையைத் தூக்கிக் காட்டும். அதெல்லாம் பழக்கிடுவோமுல்ல! :)

  பதிலளிநீக்கு
 7. எதுக்கு துரை சார் சீக்கிரம் காஃபி ஆத்தச் சொல்லி இருக்கார்? :))))

  நேற்றைய புதிரில் "கல்யாணப்பரிசு" படப் பெயரைக் கண்டு பிடிச்சேன். ஆனால் மற்ற இரு பெயர்களை துளசிதரன் தில்லையகத்து, ஏகாந்தன் இருவரையும் கண்டு பிடிக்க முடியலை. பின்னர் பதிவுக்குப் போய்த் தெரிந்ததைச் சொல்ல மறந்தும் போச்சு! :( கம்ப்யூட்டரே கதை சொல்லு, கண்டு பிடிக்க முடியலை! :) ஏனெனில் அந்தப் புத்தகம் படிக்கலை! :)

  பதிலளிநீக்கு
 8. துரை ஸார்.. பழைய புத்தகங்கள் எதை எடுத்தாலும், அதில் அப்பாவின் கமெண்ட்ஸ் இருக்கும் என்பதால் அவர் நினைவைத் தவிர்க்க முடியாது. நான் படித்து வரும்போது அவர் கருத்துக்கும் என் கருத்துக்கும், அவர் எண்ணத்துக்கும் என் எண்ணத்துக்கும் மாறுபாடு வருவதும் உண்டு.

  பதிலளிநீக்கு
 9. வாங்க கீதா அக்கா.. குட் மார்னிங். பட்டுக்குஞ்சுலு இதற்கு அபிநயம் எல்லாம் பிடிக்குமா? பார்க்க ரசனையாக இருக்கும். இப்போதைக்கு என் தங்கையின் பேத்தியை அடுத்தடுத்த வளர்ச்சி / விளையாட்டுகளை ஸ்டெப் பை ஸ்டெப்பாக கவனித்து ரசித்து வருகிறோம்!!!

  பதிலளிநீக்கு
 10. // எதுக்கு துரை சார் சீக்கிரம் காஃபி ஆத்தச் சொல்லி இருக்கார்? ://

  தஞ்சையம்பதிக்கு அழைக்கிறார்.. அவர் பதிவைக் காண...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம் ...
   இன்னைக்கு தஞ்சை பெரியகோயில் திருவிழாவில் திருத்தேரோட்டம்...

   மேல ராஜ வீதியில இருந்து புறப்பட்டாயிற்று....

   இதோ தேர் பார்க்க இழுக்கப் போகிறேன்....

   நீங்களும் வாங்க!...

   நீக்கு
 11. // என் தங்கையின் பேத்தியை..///

  அப்போ -
  அவ்விடத்திலயும் தாத்தா தானா!!!...

  நான் என்னமோ நெனைச்சுட்டேன் -
  அனுக்கா படத்தைப் பார்த்துட்டு!...

  பதிலளிநீக்கு
 12. // அப்போ -
  அவ்விடத்திலயும் தாத்தா தானா!!!...

  நான் என்னமோ நெனைச்சுட்டேன் -
  அனுக்கா படத்தைப் பார்த்துட்டு!... //

  ஆஹா... துரை ஸார்... இதை நான் யோசிக்கவில்லை!!!! எல்லாவற்றையும் விட்டு விட்டு இதையா கவனிப்பீர்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம்..
   கீழே ஒரு ஜாலிலோ பாட்டு வந்துருக்கு பாருங்க!...

   இளமையா காட்டிக்க வுட மாட்டேங்கிறாங்களே!.....

   என்னா ஒரு வில்லத்தனம்!..
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....

   நீக்கு
 13. //அப்போ -
  அவ்விடத்திலயும் தாத்தா தானா!!!...

  நான் என்னமோ நெனைச்சுட்டேன் -
  அனுக்கா படத்தைப் பார்த்துட்டு!..//

  ஹாஹாஹா, ஹிஹிஹி, ஹுஹுஹு! ஜாலிலோ ஜிம்கானா! டோலிலோ கும்கானா! ஜாலியா இருக்கு! ஜாலியோ ஜாலி! :)))))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யப்பா!...

   தோசயைத் திருப்பிப் போட்டதும் என்னா ஒரு குஷி!!!...

   நீக்கு
 14. //என்னா ஒரு வில்லத்தனம்!..
  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...// ஹாஹாஹாஹாஹாஹா, சிரிச்சுச் சிரிச்சுச் சிரிச்சு ஹிஹிஹிஹிஹி

  பதிலளிநீக்கு
 15. என்ன கொண்டாட்டம் கீதாக்கா? நீங்கள் அனைவரும் எனக்கு சீனியர்கள்... நினைவிருக்கட்டும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சீனியரோ ஜூனியரோ -
   தாத்தா ... தாத்தா தானே!...

   ஆகா..
   இது தான் இனிமை...
   இது தான் மகிழ்ச்சி...

   நீக்கு
 16. // மேல ராஜ வீதியில இருந்து புறப்பட்டாயிற்று....

  இதோ தேர் பார்க்க இழுக்கப் போகிறேன்....

  நீங்களும் வாங்க!... //

  ஆஹா.. வந்திட்டேன்... இருங்க... வேஷ்டி வேண்டாம்... பேண்ட்ஸ் மாட்டிகிட்டு வர்றேன்! பழைய அனுபவம் இருக்கு!

  பதிலளிநீக்கு
 17. // இளமையா காட்டிக்க வுட மாட்டேங்கிறாங்களே!.....//

  அவங்களை விட நான்(ம்) இளமைதான் ஸார்... வுடுங்க....!

  பதிலளிநீக்கு
 18. // இது தான் இனிமை...
  இது தான் மகிழ்ச்சி... //

  இதை விடுங்க.. வாங்க பதிவைப் படிச்சுட்டு கருத்து சொல்லுங்க.. அங்க பதில் சொல்ல வேண்டியவைகள் இன்னும் இருக்கே...

  :)))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தேர் பார்க்க போய்க்கிட்டு இருக்கேன்....

   வந்த பிறகு தான் மீதி எல்லாம்...

   நீக்கு
 19. இனிமையான சுஜாதா வரிகள், அப்பாவோட கமெண்ட்ஸ்
  எல்லாமே சூப்பர். சரியாக விடை சொன்னவர்களுக்கு மனம் நிறை பாராட்டுகள்.


  இனிய காலை வணக்கமும் , நாள் முழுவதும் நன்மை பெறவும் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 20. Ithe kathaigal en Amma solliyirukkiraar!! Aanaal antha sol 'athiripaacha'!!
  Kavithai arumai.
  Naan vaangum puthagathil thethiyum oorum mattum poduven, thiruthangal irundal seiven, aanaal ezutha manam varaadhu. Aanaal appa ezuthukkal paarpadhu oru aanandham dhaan!!

  பதிலளிநீக்கு
 21. கொழுக்கட்டைக் கதை காலங்காலமாக
  வந்து கொண்டிருக்கிறது. உரலில் தலை கொடுத்த மாப்பிள்ளை போல.

  பதிலளிநீக்கு
 22. சிலருக்கு கதையைப் படித்தவுடன், அதை எழுதிய எழுத்தாளரிடம் கருத்துகூறவேண்டுமென மனம் துடிக்கும்போலும். உங்கள் அப்பாவுக்கும் அப்படியே அவ்வப்போது கமெண்ட் எழுதத்தோணியிருக்கிறது. எப்படியிருப்பினும் அப்பாவின் கையெழுத்தைத் திரும்பிப் பார்ப்பதே ஒரு அனுபவம். அதுவும் புத்தகப்பிரியரான அப்பாவின் கருத்துக்களை, அவர் போனபின்பு எழுத்து ரூபமாக காணநேர்வது ஒரு பரவசம்தான். உங்கள் குடும்பப் பொக்கிஷமாக இருக்கவேண்டியவை அத்தகைய புத்தகங்கள்.

  பதிலளிநீக்கு
 23. சுஜாதா ‘அம்பலத்தில்’ ‘கோட்’ செய்த எம்.ஜி.கன்னியப்பன், ரொம்பவும் ப்ராக்டிகலான ஆசாமி போலிருக்கிறது - Quite interesting!

  'கற்றதும் பெற்றதும்’-இலும் இப்படிப்பட்ட கவிஞர்களை, அவர்களின் ‘குட்டிக்குஞ்சுலு’ கவிதைகளை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி சிலாகித்திருப்பார் அவர். உதாரணமாக மார்கன், முகுந்த் நாகராஜன், ஆத்மாநாம், நகுலன், கலாப்ரியா, சண்முக சுப்பையா..

  பதிலளிநீக்கு
 24. பாரதியின் கவிதை பாணியில் ஒரு நவீன காலத்து கவிதை! ஆனாலும் ரசிக்கும்படி இருக்கிறது!

  நானும் புத்தகங்கள் படித்து முடித்ததும் முதல் பக்கத்தில் finished on so so date என்று எழுதி விடுவேன். வெளியில் வாங்கிய புத்தகம் என்றால் விபரம் என்னுடைய புத்தக காட்லாக்கில் இடம் பெற்று விடும்!

  உங்கள் தந்தை சுஜாதா பிரியரா?

  பேனாவால் எழுதினால் அழிக்க இயலாது, பென்சிலால் எழுதினால் விருப்பப்படுபவர்கள் அழித்துக்கொள்ளலாம், படிக்கிறவர்களுக்கும் பென்சில் எழுத்தென்றால் அத்தனை சிரமமாக இருக்காது என்று சபை நாகரீகம் மாதிரி, புத்தகம் படிப்பதிலும் அதை விமர்சிப்பதிலும் ஒரு நாகரீகத்தைப்பின்பற்றியிருக்கிறார்கள் உங்கள் தந்தை!
  அவரின் எழுத்துக்களை பொக்கிஷம் மாதிரி பாதுகாத்து வருகிறீர்கள் நீங்கள்!!

  இருவரில் யாரை அதிகம் பாராட்டுவது என்று தெரியவில்லை! இதையெல்லாம் இளைய தலைமுறை கற்றுக்கொள்ள வேண்டும்!

  பதிலளிநீக்கு
 25. கதைகள் கொஞ்சம் மாறும். மனைவி வீட்டுக்கு கணவன் போவான் மாமியார் கொழுகட்டை செய்து கொடுத்து இருப்பார் ,அதன் பேர் அத்தையிடம் கேட்டு மனைவியை செய்து கொடுக்க சொல்லலாம் என்று பேரை வாயில் முணு முணுத்துக் கொண்டு பாதையில் வரும் போது பள்ளம் வரும் அதை தண்டும் போது 'அத்திரிப்பாட்ஷா" என்று சொல்லி தாண்டுவான்.

  கொழுக்கட்டை மறந்து அத்திரிபாட்ஷா தான் நினைவு இருக்கும் வீட்டுக்கு வந்து உன் அம்மா அத்திரிபாட்ஷா செய்து கொடுத்தார், அது போல் செய்து தா என்று கேட்பான் , தெரியாது என்று சொன்ன மனைவியை அடிப்பான் மனைவிக்கு அடிபட்ட இடங்கள் வீங்கி இருக்கும், பக்கத்து வீட்டு பாட்டி இது என்ன உடம்பு கொழுக்கட்டை கொழுக்கட்டையாக வீங்கி இருக்கு? என்று கேட்பார் அப்போது மாப்பிள்ளை ஆ ! அது தான், அதுதான் செய்து தர கேட்டேன் என்பான்.

  எள் உருண்டை கறுப்பாய் இருக்கு என்று வேண்டாம் என்று சொன்ன மாப்பிள்ளை பின் எள் உருண்டை இடித்த உரலில் தலையை விட்ட கதை இருக்கு( வல்லி அக்கா சொன்ன உரலில் தலை கொடுத்த கதை)

  சுவற்றில் இருக்கும் கீரை கேட்கும் மாப்பிள்ளை கதை.எல்லாம் உண்டு.

  சின்ன வயதில் அபிநயத்துடன் சொல்லி எல்லோரையும் சிரிக்க வைப்போம்.

  சுஜாதா ரசித்த கவிதை நன்றாக இருக்கிறது.

  அத்துக்கு பொருள் தெரிந்து கொண்டேன்.

  கடைசி மூன்றும் பதிவர்கள் பேர் என்று நினைத்து இருந்தால் ஏகாந்த நிலையில் அமர்ந்து இருப்பவரை கண்டு பிடித்து இருப்பேன்.

  //சரியான விடைகள் சொன்னவர்கள் எல்லோரும் நன்றாக சத்தமாக 'ஓ' போடுங்கள்....! அனைவருக்கும் பாராட்டுகள்//

  நன்றி.  பதிலளிநீக்கு
 26. அத்திரிமாக்கு, 'அம்மா அம்மா குழக்கட்டைக்கு கண்ணு உண்டோடி' - இவைகளை எனக்கு யாரும் சொல்லித் தரவில்லை. ஆனால் என் குழந்தைக்கு அவள் 'மாமி' இந்தக் கதைகளைச் சொல்லிக்கொடுத்துள்ளாள். பெண் சிறியவளாக இருந்தபோது 'கண்ணு உண்டோடி' கதையை அவளைச் சொல்லச் சொல்லி வீடியோ எடுத்துவைத்திருக்கிறேன்.

  உங்கள் அப்பாவின் பாராட்டுகளைப் பெற்ற கதைகளைப் பட்டியலிடலாம். தேவையில்லாத புத்தகங்களை வாங்கும் செலவாவது மிஞ்சும்.

  'அத்து மீறுதல்' என்பதற்குப் பொருத்தமான அர்த்தம் 'அரைஞாண்'தான். இதற்கு ஏற்ற ஆங்கில வார்த்தை below the belt. அதை மீறித் தாக்கக்கூடாது என்பது ஆரம்பகால விதி.

  பராசக்தியிடம் கேட்ட வரம் அவளாலேயே கொடுக்கமுடியாததே.

  பதிலளிநீக்கு
 27. அம்மா அம்மா கொழுக்கட்டைக்கு கண்ணுமுண்டோடி ...சிறுவயதில் கேட்ட நினைவு முன்பெல்லாம் ஒரு புத்தகம் படித்தால் அவற்றில் நான் ரசித்தவற்றை தனியாக எழுதி வைப்பேன் இப்போதுதான்படிப்பதே குறைந்து விட்டதே

  பதிலளிநீக்கு
 28. பாராட்டுக்குரியது வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 29. கொழுக்கட்டை கதை நான் கேட்டு இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 30. வணக்கம் சகோதரரே

  கொழுக்கட்டை கதை சிறு வயதில் கேட்டிருக்கிறேன். நிறைய கதைகள் பாட்டி சொல்ல கேட்டு வளர்ந்தோம். அப்போதெல்லாம் பொழுது போக்கு என்பது கதைகள்தானே!.
  என்குந்தைகளுக்கும் அவர்கள் சிறுவயதில் சொல்லிக் கொடுத்தாகி விட்டது.
  தங்கள் தந்தையாரின் படிக்கும் ஆர்வம் வியக்க வைக்கிறது.
  கவிதை ந்ன்றாக இந்தகாலத்துக்கு ஏற்ற மாதிரி இருக்கிறது.
  புதிர் போட்டியில் சரியாக சொன்ன அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.
  மிகவும் சுலபமாக இருந்தது.பதிவர்கள் பெயர்களாக கரை சேரா அலை, கடற்கரையான் என்று நிறைய யோசிப்பதில் பொழுது போய்விட்டது. மதிய நேரத்திற்கு மேல் பொழுது சுவாரஸ்யமாக நகர்ந்து கொண்டு இருந்தது. நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 31. I am agreeing with Gomathy Arasu for the stories and agreeing with MIKIMA for Aththiribaacha!

  பதிலளிநீக்கு
 32. அத்திரி பாச்சா கொழுக்கட்டை கதை கேட்டதுண்டு.

  புத்தகத்தில் பென்சில் மூலம் குறிப்புகள் - நானும் சில சமயங்களில் செய்வதுண்டு.

  பதிலளிநீக்கு
 33. வாங்க வல்லிம்மா... அப்பாவின் சில கமெண்ட்ஸ் இங்கு காட்ட முடியாது. அவ்வளவு கோபப் பட்டிருப்பார்!!!

  பதிலளிநீக்கு
 34. வாங்க மி கி மா... எல்லோருமே அதிருபாச்சா என்றுதான் சொல்லி இருக்கிறார்கள். என் அம்மா வித்தியாசமாக யோசித்திருக்கிறார் என்று சொல்லிக் கொள்ளலாம்! முதலில் நான் வாங்கும் புத்தகங்களிலும் எதுவும் எழுதாமல் இருந்தேன். அப்புறம் பழகிவிட்டது. நானும் எழுதுகிறேன்!

  பதிலளிநீக்கு
 35. வல்லிம்மா... இது மாதிரி கதைகளை பகிரவேண்டும்!

  பதிலளிநீக்கு
 36. வாங்க ஏகாந்தன் ஸார்.. நேற்று புதிர்ப்பதிவுக்கு வரவில்லை நீங்கள்! உங்களை இழுத்திருந்தேன். நீங்கள் சொன்னமாதிரி அப்பா மானசீகமாக அந்த எழுத்தாளருடன் பேசியதாய் உணர்ந்திருக்கலாம்!

  //அதுவும் புத்தகப்பிரியரான அப்பாவின் கருத்துக்களை, அவர் போனபின்பு எழுத்து ரூபமாக காணநேர்வது ஒரு பரவசம்தான்.//

  ஆமாம் ஸார்...


  கணையாழியின் கடைசிப் பக்கங்கள் பகுதியில் இப்படி நிறைய அறிமுகங்கள் செய்திருப்பார். பாலகுமாரனைக் கூட சொல்லி இருந்தார்.

  பதிலளிநீக்கு
 37. வாங்க மனோசாமிநாதன் மேடம்..

  //பாரதியின் கவிதை பாணியில் ஒரு நவீன காலத்து கவிதை! //

  ஆமாம்.. ஆனாலும் பதினாறு வருடம் பழசு!

  என் தந்தை சுஜாதா பிரியர் எல்லாம் இல்லை. எல்லோரையும் வாசிப்பார். கட்டுரைகள், கவிதைகள், மூலிகை பற்றிய நூல்கள் எல்லாம் வாசிப்பார். புத்தகத்தைப் பாதுகாக்கும் அப்பாவின் எழுத்துகளும் பாதுகாக்கப்பட்டு விடுகின்றன!!

  :))))

  பதிலளிநீக்கு
 38. வாங்க கோமதி அக்கா.. ஆமாம்... எல்லோரும் அத்திரிபாச்சா என்றுதான் சொல்லி இருக்கிறார்கள். உரலில் தலைகொடுத்த கதை போல இன்னும் என்னென்ன இருக்கிறது என்று ஆவணப்படுத்தவேண்டுமோ? "சுவத்துல இருக்கற கீரையை வழிச்சுப் போடடி.." என்று வருவதற்கு முன் இன்னும் ஏதோ ஒரு வரி வருமோ?

  கடைசி மூன்று கேள்விகளும் பதிவர்கள் என்கிற தலைப்பின் கீழ்த்தானே கொடுத்திருந்தேன்?

  பதிலளிநீக்கு
 39. வாங்க நெல்லை.. அப்போது அப்படி எடுத்த விடீயோக்களைப் போட்டுப் பார்த்தால் சுவாரஸ்யமாகத்தான் இருக்கும். அத்து = அரைஞாண் - பொருந்துகிறது. என் அப்பா பாராட்டுவதை விட திட்டுவதுதான் அதிகம்!

  பதிலளிநீக்கு
 40. வாங்க ஜி எம் பி ஸார்.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 41. நன்றி அசோகன் குப்புசாமி ஸார்.

  பதிலளிநீக்கு
 42. வாங்க கமலா ஹரிஹரன் சகோ... இப்போதெல்லாம் பாட்டியிடம், தாத்தாவிடம் கதை கேட்டு வளரும் குழந்தைகள் குறைந்து விட்டார்களோ என்று தோன்றும். கூட்டுக்குடும்பத்துக்கே வழியில்லையே...

  பதிலளிநீக்கு
 43. மீள் வருகைக்கு நன்றி கீதா அக்கா.

  பதிலளிநீக்கு
 44. நேற்று புதிர்ப்பதிவுக்கு வரவில்லை நீங்கள்!//

  நேற்றைய நாள் அப்படி. காலை வாக்கிங்குக்குப்பின் ஏனோ ஆன்மிக சிந்தனையில் இருந்தேன். ஏதோ படிக்கையில் அந்தர்யாமி என்கிற அருமையான வார்த்தையை அந்தர்மி எனக் குழப்பியிருந்தார் ஒருவர். இந்துமதத்திற்கு அவருடைய காண்ட்ரிபியூஷன் போலும். அந்த எரிச்சலில் மேலும் படித்தேன் .. . எங்கள் ப்ளாகையும் லேசாக நோட்டம் விட்டேன். என்னையும் இழுத்திருக்கிறீர்கள் என்பதை கவனிக்கவில்லை! பின்னூட்டம் எப்படிப்போய்க்கொண்டிருக்கிறது எனப் பார்த்துக்கொண்டிருந்தேன். எழுதுகிற மூடில் இல்லை. இடையிடையே தினச்செய்தி எனும் பெயரில் நமது மீடியாவின் அலம்பல்கள். திடீரென மாலையில் எம்.எஸ்.ராஜேஸ்வரி.. அவரது சில பாடல்களில் மனம் லயிக்க, இறுதியில் ஐபிஎல் -இல் தஞ்சமாகிவிட்டேன். பெங்களூரில் தோனியின் பேயாட்டம்!

  பதிலளிநீக்கு
 45. சுவத்துக் கீரையை வழித்துப் போடடி சொரணை கெட்ட இவளேன்னு வரும்
  ஸ்ரீராம்.
  அப்படிச் சொன்னவன் முகத்திலே
  போட்டதாகச் சொல்லி சிரிப்பார் மாமியார்.

  பதிலளிநீக்கு
 46. கும்பகோணம் பகுதியில் இக்கதையை அத்திரிபாச்சா கொழுக்கட்டைக்கதை என்போம்.

  பதிலளிநீக்கு
 47. கொழுக்கட்டை கதை வேறு வெர்ஷனில் பிரபலம். நீங்கள் காரணத்தோடு தான் அதை மாற்றி எழுதியிருக்கலாம்.

  உங்கள் தந்தை இருந்திருந்து அதுவும் சென்னையில் இருந்திருந்தால் நாங்கள் இருவரும் தோழர்களாகியிருப்போம். அவரது அந்த பென்ஸில் குறிப்புகள் பற்றி அவரிடம் நிறைய பேச வேண்டும் போலத் தோன்றுகிறது.

  சரியான முகவரியுடன் எலெக்ஷன் கார்டு என்பதற்கு பதில் ரேஷன் கார்டு என்று மாற்றிக் கொள்ளலாம். ஆதார் கார்டு முகவரிகளெல்லாம் துல்லியமானவை என்பது என் எண்ணம்.

  சுஜாதா புத்தகத்தின் 123-வது பக்கத்தை இரண்டு தடவை பிரதி எடுத்து இரண்டு விதமான கமெண்ட்கள் போட்டிருக்கிறீர்கள்!

  எம்.ஜி. கண்ணப்பன் பற்றி விவரங்கள் தேடிப்பார்த்தேன். இவர் தானா அவர், அவர் தானா இவர் என்று தெரியவில்லை.

  அந்த இருவர் படத்தை இப்பொழுது தான் முதல் தடவையாகப் பார்க்கிறேன். 'திரு'வால் தான் 'திருமதி'க்குப் பெருமையா, இல்லை 'திரு' தான் 'திருமதி' பெயரைப் பெருமைக்குள்ளாக்கினாரா என்பது பிரித்துப் பார்க்க முடியாத ஒரு கேள்வி.

  பதிலளிநீக்கு
 48. அத்திரிமாக்கு - எங்கள் வீட்டில் அத்திரி பாச்சா!!! என் பாட்டி எனக்குச் சொல்லி என் மகன் வகை போயாச்சு அதே போல கொழுக்கட்டை கதையும். இன்னும் பல இருக்கு அடுத்த தலைமுறைக்குக் கடத்த. எனக்கும் ஆசை...உண்டு...பார்ப்போம்..ஸ்ரீராம்.அல்ரெடி தாத்தாதான் நீங்க...ஹிஹிஹி நேரடியாகத் தாத்தா ஆக சீக்கிரமே ஆக வாழ்த்துகள்!!!

  சுஜாதா சிலாகித்த கவிதை செம ரொம்ப ரொம்ப ரசித்தேன்....அவர் கற்றதும் பெற்றதுவுமிலும் இப்படிச் சிலாகித்து சொல்லியதுண்டு. அவ்வப்போத்...அவரும் தனது கவிதைகளை பெரும்பாலும் ஹைக்கூ என்றுனினைவு பகிர்ந்ததுண்டு..

  அப்பா ஆஹா!! பொக்கிஷம்...அருமையாகப் பாதுகாத்து வருவதற்கும் பாராட்டுகள் ஸ்ரீராம். !!! அப்பாவின் பல பழக்கம் உங்களிடம் பல!!?? நலல் விஷயம்!! பென்சிலால் மார்க் செய்யும் வழக்கம் எனக்கும் உண்டு. ஆனால் எழுதியதில்லை. நான் புத்தகம் வாங்குவதே அரிது அப்படியே வாங்கி எனதானால் அதில் குறித்து வைப்பதுண்டு. கருத்து எழுதமாட்டேன். நீங்கள் சொல்லியிருப்பது போல் பிறர் புக் என்றால் அலுங்காலம்நலுங்காமல் வாசித்துவிடுக் கொடுத்துவிடுவேன்.

  அத்து!! ஓ பொருள் அப்ப நாம பயன்படுத்துவது தப்போ! அத்து மீறி அந்தச் சொல்லைப் பயன்படுத்துகிறோமோ....ஹா ஆ அஹ ஹா

  சுஜாதாஸ்!!!! படம் ஆஹா!! முன்பே பார்த்ததுண்டு...

  கீதா

  பதிலளிநீக்கு
 49. கொழுக்கட்டை கதைகள் தெரியலை. எங்கள் வீட்டில் கேரளத்துக் கதைகள்....யோசித்துப் பார்த்து நினைவுக்குக் கொண்டு வரவேண்டும்.

  சுஜாதா அவர்கள் ரசித்த கவிதை ரொம்பவே நன்றாக யதார்த்தமாக இருக்கிறது. ரசித்தேன்.

  தங்கள் அப்பாவின் கையெழுத்தும் அவர்கள் குறிப்புகளையும் நீங்கள் பாதுகாத்து வருவதற்கு மிகவும் பாராட்டுகள். வாழ்த்துகள்! பொக்கிஷமானவை. புத்தகங்களுக்கு என்று ஏதோ குளிகைகள் எல்லாம் விற்கப்படுகின்றனவாமே பூச்சி அரிக்காமல் இருக்க அதைப் பயன்படுத்தலாம் என்று நினைக்கிறேன். பொக்கிஷம் இல்லையா?

  அத்து என்பதற்கு இப்படியான அர்த்தமா? புதிய தகவல். இத்தனை நாள் அறியாத ஒன்று.

  அனைத்தும் நன்றாக இருந்தன.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 50. வாங்க கீதா.. அதிரடியா வந்துட்டீங்க போல... நெட் இணைப்பு கொடுத்துட்டாங்களா? வெல்கம்... நீங்கள் வராத காரணத்தால் துளசிஜியின் கருத்துகளும் சிறைப்பட்டிருந்தன போலும்... மூச்சு முட்டி இருந்த இடத்திலிருந்து ஃப்ரீயாக மூச்சு விடும் இடத்துக்கு வந்தது போல ஒரு உணர்வு இருக்குமே உங்களுக்கு இப்போது!

  பதிலளிநீக்கு
 51. உங்கள் அப்பா போல் சாரும் பென்சில் குறிப்புகள் எழுதி வைப்பார்கள், அடிகோடு போடு பழக்கம் உண்டு.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!