வியாழன், 23 நவம்பர், 2023

நிஜ சுஜாதா பற்றி எழுத்தாளர் சுஜாதா

 உங்களுக்கெல்லாம் தெரியும், நீங்கள் ஓலா, ஊபர், ரேபிடோ புக் செய்த உடன் அவர்கள் பெயருடன் வண்டி எண் உங்களுக்கு தகவலாய் வரும்.

அப்படி புக் ஆன உடன் என்னிடம் தேடி வருவதற்கு முன் அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டாலும், நான் அவர்களைத் தொடர்பு கொண்டாலும் "சொல்லுங்க மிஸ்டர் கென்னடி"  என்றோ..  "பி வி ஆர் மால் வாசல்ல நிக்கறேன் சிக்கந்தர் ஸார்" என்றோ பேசுவேன்.

ஏனோ அவர்கள் தொலைபேசியில் பேசும்போது ஒரு வித எதிர்ப்புணர்வுடன்தான் பேசுவார்கள்.  சொல்லப்பட்டிருக்கும் கூலி குறைவாகத்தான் இருக்கும் என்பது அவர்கள் நம்பிக்கை.  அவர்கள் எப்போதும் பெரிதினும் பெரிது கேட்பவர்கள்.  வார்த்தைகளில் சண்டைக்கு தயாராக இருப்பார்கள் - மிகச் சிலரைத் தவிர.

இப்படி பெயர் சொல்லி பேசுவதில் நாற்பது சதவிகிதத்துக்கு மேல் நன்மை உண்டு.  மனதளவில் ஓரளவு நெருக்கம் வந்து விடும் அவர்களுக்கு.  சிலர் நிறைய சொந்தக் கதைகள், அரசியல், ரகசியங்கள் எல்லாம் பேசியபடி வருவர்.  சிலர் இன்னும் ஒருபடி மேலே போய் அவர்கள் அலைபேசி எண்ணை என்னிடம் கொடுத்து 'தேவைப்படும்போது அழையுங்கள்' என்று சொல்லிச் செல்வர்.

என் ஆஸ்தான ஆட்டோ இல்லாதபோதுதான் ஊபர், ஓலா, ரேப்பிடோக்கள். 

அன்று காலை அப்படிதான், நான் பணியிலிருந்த சமயம்  என் ஆட்டோக்காரர் அழைத்தார். அவ்வப்போது நிகழும் சம்பவம்.  எதற்கு அழைக்கிறார் என்று யூகிக்க முடியும்.  ஏதோ ஒரு காரணம் சொல்லி என்னை அழைத்துச் செல்ல அன்று அவரால் வரமுடியாது என்று சொல்லப்போகிறார்!

அந்த சமயம் நான், பதவி உயர்வில் அன்று காலை பக்கத்து அலுவலகத்தில் பணியில் இணைந்திருந்த என் தோழியைப் பார்க்க வந்திருந்தேன்.

"சொல்லுங்க ராஜ்" என்றேன் போனை ஸ்பீக்கரில் போட்டு.  அவர் சொன்னதும் என் தோழி தேவா விவரம் கேட்க, என் ஆஸ்தான ஆட்டோக்காரர் வர முடியவில்லை என்று சொல்லியதைச் சொன்னேன்.  'பஸ்ஸில் போகணுமா?" என்றார்.  "மூன்று பஸ் மாறியா?  அப்புறமும் ஒன்றரை கிலோ மீட்டர் நடக்கணும்..  ஊபரில் போயிடுவேன்" என்றேன்.

இது நடந்து இரண்டு நாட்களில் மறுபடி ஆ ஆ ராஜ் என்னை கைவிட்டார்!  ஊபர் புக் செய்தேன். 

வழக்கம்போல பெயர் சொல்லி பேசியதும் விரைந்து நண்பரான அந்த ஓட்டுநர் OTP எண் சொல்லி ஏறி அமர்ந்த அடுத்த கணத்திலிருந்தே நட்புடன் உரையாட ஆரம்பித்து விட்டார்.  இளைஞர்.  அவர் பெயர் நாகராஜ்.  நானும் உரையாடலில் அவர் பெயரை உபயோகித்தே பேசினேன்.

நான் ஏறி அமர்ந்தது அலுவலகத்தின் முதல் கேட்.  இரண்டாவது வாசல் அருகே அலுவலகத்தில் அந்த சமீபத்தில் இணைந்திருந்த என் தோழி நின்றிருந்தார்.  நாங்கள் வகுப்புத் தோழர்கள் என்றபோதும் எனக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னரே அவருக்கு வேலை கிடைத்து விட்ட காரணத்தால் வயதில் எனக்கு இளையவராயினும், பதவியில் அடுத்த கட்ட உயர்வு பெற்ற சீனியர்!   இந்த விவரங்கள்  இவ்வளவு தேவையா என்றால், எப்படி இவ்வளவு தெரிந்தவராய், நெருக்கமானவராக இருந்தாலும் சந்தர்ப்பம் எனக்கு எதிராக அமைந்தது என்பதை சொல்லதான்.

ஆட்டோவில் என்னை பார்த்ததும் அவர் முகம் மலர்ந்து என்னை நிறுத்தி உரிமையுடன் ஏறிக்கொண்டார் - தன்னை வழியில் மின்வண்டி நிலையத்தில் இறக்கி விடச் சொல்லி வேண்டுகோளோடு.

நான் 'இல்லை தேவா..  நான் முன்னாடியே ரைட்ல கட் பண்ணிடுவேன்' என்று சொன்னேன்.  'கொஞ்சம் டிரைவர்ட்ட சொல்லி இறக்கி விடேன்' என்றார் தேவா.

உண்மையில் நாகராஜ் அப்போது பேசிக்கொண்டு வந்த விஷயம் வண்டியில் Gas நிலைமை மோசமாக இருப்பதாகவும், வழியில் யாரும் உடனடி பங்க்கில் gas நிரப்பப்பட வேண்டிய கட்டாயத்தையும்தான் பேசியபடி வந்திருந்தார்.

"நாகராஜ்..  இவர்களை இறக்கி விட்டு விட்டு நாம் போகலாமே.. "

"இல்லை ஸார்..   அது கொஞ்சம் தூரம்..  முடியாது"

"தேவாவை முந்திக் கொண்டு நான் "நான் அதற்கான காசை கொடுத்துடறேன்" என்றேன்.

தேவா "நான் கொடுத்துடறேன்" என்றார்.

"ஸார்...  காசு பிரச்னை இல்லை ஸார்..  Gas அவ்வளவு இருக்காது.  நாம போற வழியில முதல்ல அதை போட்டாதான் நாமளே போகமுடியும்"

தேவா சட்டென, "பரவாயில்லை ஸ்ரீ..  நான் இங்கேயே இறங்கி கொள்கிறேன்..  நிறுத்துங்க டிரைவர்.." என்றார்.

"இரு தேவா..  இன்னும் கொஞ்ச தூரம் போய் நான் ரைட்ல திரும்ப இடத்துல இறக்கி விடறேன்"

"வேண்டாம் ஸ்ரீ..  நான் இறங்கிக்கறேன்..  நிறுத்தச் சொல்லேன்"

எனக்கு ஒரு மாதிரி இருந்தது.  நான் "நாகராஜ்..  இங்கயே இறங்கிக்கறாங்களாம்..  கொஞ்சம் நிறுத்துங்க" என்றேன்.

டிரைவர் ரிலீவ் ஆனது போல சட்டென வண்டியை நிறுத்த, தேவா இறங்கி கையைக் காட்டிவிட்டு நடக்க ஆரம்பித்தது மனதுக்குள் உறுத்தியது.

மறுநாளே காலை போன் செய்தார் தேவா.  "கீழ இருக்கேன்..  வா.. வந்து உன் ரூமுக்கு அழைச்சுக்கிட்டு போ"

கீழே போய் அவரையும் அழைத்துக் கொண்டு மேலே வந்தேன்.  லிஃப்ட்மேன் "என்ன ஸார் பிஸியா..  இங்கிரும் அங்கிட்டும் அலையறீங்க.." என்றார்.

"இல்லை கணேசன்..   இவர் என் கூட படிச்ச தோழி.  பக்கத்து ஆபீஸ்ல ஜாயின் பண்ணி இருக்காங்க..  என்னை பார்க்க வந்திருக்காங்க"

லிஃப்டில் இருந்த வேறு டிபார்ட்மென்ட் ஊழியர்களும் என்னுடன் பேச, (நல்லவேளையாக) அவர்களையும் வழக்கம் போல பெயர் சொல்லி பதிலளித்து வந்தேன்.

விஷ் செய்த செக்கியூரிட்டிக்கு பதில் விஷ் செய்து "என்ன ஜெயராமன்..  சாப்பிட்டாச்சா...?" என்று கேட்டபடி கடந்தோம்.

"என்ன ஸ்ரீ..  ரொம்ப ஃபேமஸ் போலிருக்கு நீ"

"தினசரி க்ராஸ் செய்பவர்கள்..  தெரியாமல் இருக்குமா தேவா?"

அறைக்கு வந்ததும் நேரடியாக விஷயத்து வந்தார்.  "நேத்து எனக்கு வருத்தம் ஸ்ரீ...  நீ நினைத்திருந்தால் என்னை ஸ்டேஷனில் இறக்கி விட்டிருக்கலாம்...உன் ரெகுலர் ஆட்டோதானே?"

"இல்லை தேவா...  நேற்று ஊபர்..  என் ஆள் மட்டம் போட்டு விட்டார், வழக்கம்போல.."

"பொய் சொல்லாத ஸ்ரீ...  நான் மனசுல எதையும் வச்சுக்க மாட்டேன்.  அதான் கேட்டுட்டேன்..  அன்னிக்கி ஃபோன்ல உன் ஆட்டோக்காரரை நீ ராஜ்ன்னுதானே கூப்பிட்டே?"

"ஆமாம்..  ஆனா நேத்து வந்தவர் பெயர் நாகராஜ் தேவா.."

"அதெப்படி உனக்குத் தெரியும்?"

"புக் ஆகும்போதே பெயரோடுதானே வரும் தேவா?   முடிஞ்சவரை நான் எல்லோரையும் பெயர் சொல்லி அழைத்தே வழக்கம்.  அவங்களுக்கும் ஒரு சந்தோஷம்.  எனக்கும் ஒரு Feel வரும்"

தேவா சமாதானமான மாதிரி தெரியவில்லை.  சின்ன உறுத்தல் முகத்தில் தெரிந்தது.

சட்டென என் ஆ ஆ ராஜை வீடியோ காலில் அழைத்தேன்.  திரையில் வந்தவரிடம் "என்ன ராஜ்..   இன்னிக்கி கூப்பிட்டு போக வருவீர்களா?  இல்லை நேத்து மாதிரி செய்வீர்களா?" என்றேன்.

"ஸார்..  கண்டிப்பா வருவேன்.  நேத்து பேட்டரி டவுன் ஸார்..  இன்னிக்கி வந்துடுவேன்.  காலைலயே சொன்னேனே சார்?"

"தினமும் அப்படிதான் சொல்றீங்க..  அப்புறம் திடீர்னு வரமாட்டேன்றீங்க..   இன்னிக்கி என் ஃபிரென்ட் வந்திருக்கான்.  நீங்க வரலைன்னா அவனை நிறுத்திப்பேன்..  அந்தப் பக்கமா போறவன்..  அவன் வேற தகறாரு பண்றான் போகணும்னு.."  விஸ்தாரமாய் நான் எதிர்பார்க்கும் பதிலுக்கு ஆதரவாயும் பேசினேன்.  அப்படியே அவர் முகத்தை தேவாவும் பார்க்கும்படி வைத்துதான் பேசிக்கொண்டிருந்தேன்.

"இல்ல ஸார்..  கண்டிப்பா வந்துடுவேன்"

"ஓகே ராஜ்"  அலைபேசியை அணைத்தேன்.

தேவா முகம் இப்போது தெளிவாயிருந்தது.  "தப்பா நினைச்சுக்காதே"

"சேச்சே..  நானே உன்னை பார்க்கணும்னு நினச்சேன்.  நேத்து இறங்கிப் போகும்போது உன் முகமே நல்லாயில்லை..  நல்லவேளை, இப்போது க்ளியர் ஆயிடுச்சு இல்லே?"

"எனக்கும் உறுத்தல் போயிடுச்சு..  வா கேன்டீன் இருக்கு இல்ல..  டீ வாங்கி கொடு..  கிளம்பறேன்"

இந்தப் பக்கம் லிஃப்டில் ஏறினோம்.  சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த லிஃப்ட்மேன் கையைத் தூக்கி விஷ் செய்ய, "என்ன ஹாரூன்..  ரெண்டு நாளா ஆளைக் காணோம்?" என்றேன்.

"ஊருக்கு போயிருந்தேன் சார்" என்றார் ஹாரூன் திடீர் மலர்ச்சியுடன்.  தேவா என் கையை இடித்தார்.

கேன்டீனில் நுழையும்போதே வணக்கம் சொன்ன கதிரவனிடம் "வணக்கம் கதிரவன்..  ஒரு காஃபி, ஒரு டீ" என்று நாற்பது ரூபாயை நீட்டினேன்.  மிச்சம் கொடுத்தார்.

காஃபி போட்ட பையன் "ஸார்...  வழக்கம்போல காபியில் துளிதான் சர்க்கரை சேர்த்திருக்கேன்" என்றான்.

"என்ன விக்கி நொண்டறே.."

"செருப்பு கடி ஸார்..  என்ன ஸார்..  வடை வேணாமா?  சூடா இருக்கு?"

தேவா, "யப்பா...  போதும்ப்பா..  நம்பறேன், நான் கிளம்பறேன் " என்று டீ கிளாஸை மேசை மேல் வைத்தார்..  

"இல்லை தேவா..  உனக்காக இல்லை..   இது ரொட்டீன் தான்" என்ற கையோடு விக்கியிடம் "பனிரெண்டு மணிக்கு வடையா..   வேண்டாம் விக்கி..  நாளை பார்க்கலாம்" என்று சொல்லி கிளம்பினோம்.

இப்படியாகத்தானே நான் கடைப்பிடிக்கும் நல்ல பழக்கத்தினாலும் ஒரு பிரச்னை வந்தது, தீர்ந்தது!

===================================================================================================

முன்னொரு நாளில் திருமதி சுஜாதா பேட்டியையும், அதே அவரின் பின்னாளிலான பேட்டியை சமீபத்திலும் பார்த்தோம்.  விமர்சனங்களும் செய்தோம்.  ஆனால் அவரின் அக் கருத்துகளை சுஜாதா ஏற்கெனவே அறிந்திருந்தார் என்பது புலனாகிறது பாருங்கள்...

நிஜ சுஜாதா 

             

சுஜாதா என்கிற புனை பெயர் எப்படி ஏற்பட்டது?  நீங்கள் ஏன் பெண் பெயரில் ஒளிந்து கொண்டிருக்கிறீர்கள்?  இன்கம்டாக்ஸா?\

இரு கேள்விகளும் அடிக்கடி கேட்கப்படுகின்றன.

இது என் மனைவியின் பெயர்.  1963 ல் ஆரம்ப காலத்தில் எஸ்.ஆர். ராஜன், எஸ். ரெங்கராஜன் என்ற பெயர்களில் சில சிறுகதைகள் எழுதினேன்.  அவை குமுதத்தில் வெளிவந்தன.

ரா. கி. ரங்கராஜனின் கதைகள் பல வெளிவந்தன.  அவற்றுக்காக என்னைப் பாராட்ட ஆரம்பித்தார்கள்.  என் கதைகளுக்காக அவரைத் திட்ட ஆரம்பித்தார்கள்.

இவ்வளவு கவனக் குறைவான சூழ்நிலையில் ஜூனியரான நான்தான் பெயர் மாற்றிக் கொள்வது மரியாதை ன்று முதன் முதளாக, 'சுஜாதா ரங்கராஜன்' என்ற பெயரில் ஒரு கதை அனுப்பினேன்.  அந்தப் பெயர்  பத்திரிகையில் சமையல் குறிப்பு எழுதும் பெண்மணியின் பெயர் போல உல்ளது என்று குமுதம் அலுவலகத்திலேயே 'சுஜாதா' என்று சுருக்கி விட்டார்கள்.  அது நிலைத்து விட்டது.

பெண் பெயரில் ஒளிந்து கொள்வது என்பது கோடாலி மீசையுடன் தமிழ்நாடு முழுவதும் போஸ்டர் ஒட்டிய பின் சாத்தியமில்லை.  இன்கம்டாக்ஸ் ஒழுங்காக கட்டிக்கொண்டு வருகிறேன் என்பதற்கு அத்தாட்சியா ஆடிட்டர் செந்தாமரைக் கண்ணனைக் கேட்கலாம்.

போகட்டும்.

நிஜ சுஜாதாவை 'எழுத்தாளன் மனைவி' என்ற தலைப்பில் கட்டுரை எழுதித் தரச் சொன்னேன்.

"எல்லாத்தையும் எழுதிடுவேன்" என்று அச்சுறுத்தினாள்.

"எழுத்து...  பரவால்ல" என்று பலமுறை சொல்லியும், வற்புறுத்தியும் அவள் எழுதவில்லை.

No man is a hero to his wife.

"நீங்க எல்லாருக்கும் ரொம்ப நல்லவர் - உங்க மனைவிக்கும், உங்க குழந்தைகளுக்கும் தவிர." என்று அண்மையில் ஒரு முறை அவள் சொன்னது உண்மைதான்.

நான் ஆதர்சக் கணவன் இல்லை.  ஆதர்சத் தகப்பன் இல்லை.  துறைகளில் என்னை முன் மாதிரியாக எடுத்துக் கொள்ள ஏதுமில்லை.  என் போன்ற ஒரு சிக்கலான ப்ரகிருதியுடன், எப்போது கோபம், எப்போது மௌனம் என்று தெரியாத அநிச்சயமான சூழ்நிலையில், இருபத்தேழு வருஷம் வாழ்ந்து வருவது அவளுடைய மகத்தான சாதனை.

அவள் ஸோஷியாலஜியில் எம். ஏ.  நாடகங்களில் நடிப்பாள்.  நல்ல கதைகள் என்ன என்பது பற்றி தனக்கென தனிப்பட்ட அபிப்ராயங்கள் உள்ளவள்.  கிராஸ்வேர்ட் போடுவாள்..

நான் பொய் சொல்லும்போது சட்டென்று கண்டுபிடித்து விடுவாள்.

எனக்கு வருகிற அத்தனை சிறிய, பெரிய பத்திரிகைகளையும் படித்து, குறிப்பிடும்படியாக ஏதாவது இருந்தால் சுட்டிக் காட்டுவாள்.

நான் மௌனமாக கேட்டுக்கொண்டிருக்க நிறையாக கதைகளுக்கு பிளாட் அவள் பேச்சிலேயே கிடைத்து விடும்.  குறிப்பாக 'காயத்ரி' கதையும், 'கரையெல்லாம் செண்பகப்பூ' முடிவும் அவளுடையவை.

- சுஜாதா தயாரித்த குமுதம் சிறப்பிதழிலிருந்து - 

                                              

================================================================================================

கவி முயற்சிகள்...

காக்கைகள் 
பறந்து விட்டன 
காத்திருக்கிறது சோறு 

உன்னைப் பிடிப்பதால்தான்
விழுந்துவிடுகிறேன் 

கதவை மூடு 
தொல்லை செய்கிறது 
நிலவு 

எண்ணத்தில் தண்ணீர் 
கடைசி துளி கண்ணீர் 
மீன் 

====================================================================================================

காத்திருந்த கணங்கள் 



======================================================================================================

ஏகாந்தமாய் 

சிக்கலான டின்னர் !
-ஏகாந்தன்

நான் வேலை செய்த ஆஃபீஸ் ப்ளாக்கிலேயே, இன்னொரு செக்‌ஷனில் பணிபுரிந்த கே. கே. செய்னி என்றொருவன் நண்பனான். கமல் குமார் செய்னி. டெல்லிக்காரன் என்று அவன் சொல்லிக்கொண்டாலும், பூர்வீகம் பஞ்சாப். பஞ்சாபி ஹிந்து.

மீசையில்லாமல் திரியும் பல வடக்கத்தியர்களிடையே, அடர்ந்த மீசையை ஆசையாய் வைத்திருந்த இளைஞன். எங்களுடைய (மோஹனனையும் சேர்த்துக்கொள்கிறேன்) அழுத்தமான கருகரு மீசை, அடர்த்தியான தலைமயிர், வெள்ளையான பேச்சு போன்றவை அவனை எங்கள் பக்கம் ஈர்த்திருக்குமோ!

எங்களைப் பார்க்க, பேச என அடிக்கடி செக்‌ஷனுக்குள் வருவான்.  சில நாட்களில், செக்‌ஷனில் இருந்த வேறு சிலரும் அவனுக்கு நண்பர்களாகி விட்டனர். அப்போதே ஸ்கூட்டர் வைத்திருந்தான்.  வசதியான குடும்பத்துக்காரன்.  ஒருவேளை பிஸினெஸ்ஸிலிருந்தாரோ அவன் அப்பா..

ஒரு மாதத்திற்கும் மேலாக லீவில் இருந்த செய்னி, அன்று ஆஃபீஸுக்கு வந்தான். சொந்த ஊர் சென்றிருக்கையில் அங்கு குடும்பத்தினர் தனக்குப் பெண் பார்த்து கல்யாணம் செய்துவைத்துவிட்டதாய் வழிந்தான்! "தேரா ஷாதி ஹோ கயா?  சச்முச்?" (ஒனக்கு கல்யாணமாயிருச்சா.. நெஜமாவாடா!) எனச் சிலர் சீண்டினார்கள். சில வாரங்கள் கழித்து ஒருநாள் எங்கள் செக்‌ஷனில் அவனுக்கு நெருக்கமான சிலரைத் தன் வீட்டுக்கு அழைத்தான்

டின்னருக்கு. ஏற்றுக்கொண்டு, எங்களில் ஆறு பேர் அன்று மாலை ஆஃபீஸிலிருந்து கிளம்பி, நார்த் ப்ளாக் பஸ் ஸ்டாண்டில் பஸ் பிடித்து, இடையில் இன்னொரு பஸ் மாறி, மேற்கு டெல்லியின் ஹரிநகரிலிருந்த அவனது வீட்டுக்கு – இரண்டு-பெட்ரூம் வாடகை ஃப்ளாட்- இரவு ஏழு மணி போல் போய்ச் சேர்ந்தோம்.

வரவேற்ற செய்னி தன் இளம் மனைவியை அறிமுகம் செய்துவைத்தான். எல்லோருக்குமாக பொதுவாகக் கைகூப்பி ”நமஸ்தே!” என்று மெலிதாகச் சொல்லிச் சிரித்தாள். உள்ளே சென்றாள் செய்னியின் மனைவி. சின்ன ஹாலில் செண்ட்டர் டேபிளைச் சுற்றி சில மரநாற்காலிகள். ஃபோல்டிங் நாற்காலிகள்.  அமர்ந்தோம். "ஷுரு கரே(ன்)?” (ஆரம்பிப்போமா?) என்று கேட்டுவிட்டு உள்ளே போனான் செய்னி. 'ஏழரை மணிக்குள்ளேயே சாப்பாடா?' என நான் நினைத்தேன். 

சின்னத் தட்டில் சாலட். டெல்லியின் குளிர்காலத்தில் மூலி –அதாவது முள்ளங்கி- இளசாக, ஃப்ரெஷ்ஷாக கிடைக்கும். பச்சையாக சாப்பிடலாம். காராது. மெல்லிசாக வட்டவடிவாக சீவி கொஞ்சம் காலிமிர்ச்/நமக் (அதான் மிளகுத்தூள்/உப்பு) சேர்த்து உள்ளே தள்ளினால் ’இன்னும் ரொட்டி
தயாரகவில்லையா.. கொண்டா ஜல்தியா!’ என்று பரபரத்து எழும்பும் பசி. சாலட்டில் வெங்காயம், வெள்ளரிக்காய், தக்காளித் துண்டுகளோடு முள்ளங்கியும் வெள்ளந்தியாக உட்கார்ந்திருந்தது.

”ஸ்பெஷல் சிக்கன், மட்டன் எல்லாம் ரெடி .. இன்னும் இருபது நிமிஷத்தில் சாப்பிடலாம்!” என்று அறிவித்து நண்பர்களைக் குஷிப்படுத்தினான் செய்னி. முதன்முதலாக எனக்குள் சின்னக் கலவரம். என்ன சொல்றான்… சாலடைத் தாண்டி நமக்கு ஏதாவது கிடைக்குமா திங்க, இங்க? செய்னியை மெல்ல நெருங்கி ”என்ன சப்ஜி இன்னக்கி..” என்று கேட்டுவைத்தேன். ”ஹரே..பாய்! சூப்பர் சிக்கன், மட்டன் இருக்கும்போது வெளுத்து வாங்கு.. இன்னிக்குமா தால், சப்ஜி ஞாபகம் வரணும்” என்றான் அவன். நான் திடுக்கிட்டு, ”நான் ப்யூர் வெஜ். தால் இருந்தாப் போதும். இருக்கில்லியா!”
கேட்டேன்.

இப்போது திடுக்கிட்டான் அவன். ”என்ன! நீ ப்யூர் வெஜ்ஜா! நான்- வெஜ்ஜே சாப்ட மாட்டியா..! எனக்குத் தெரியாதே..” என்று 
டென்ஷனான். எங்கள் செக்‌ஷனில் அவன் வந்து எல்லோரையும் டின்னருக்கு அழைக்கையில் நான் அங்கு இருக்கவில்லை.
மற்றவர்களுக்கும் வெஜ் மட்டும்தான் என் சாப்பாடு எனத் தெரிந்திருக்க வாய்ப்பு கம்மிதான். அவனை ஓரமாக அழைத்து “பரவாயில்ல செய்னி.. அச்சார், சாலடில் சமாளித்துக்கொள்வேன்” என்றேன் சீரியஸாக.

அவன், ”நோ.. நோ! ஏதாவது ஏற்பாடு பண்றேன்” என்று விட்டு உள்ளேபோனான். எனக்கு என்னமோ மாதிரி ஆகிவிட்டது. கல்யாண விருந்து கொடுப்பவனுக்கு, கஷ்டத்தைக் கொடுக்கிறேனே நான்
என்று சோர்ந்தது மனம்.

சாஃப்ட் ட்ரிங்க்ஸும், சாலட்டுமாக அரட்டை ஆரம்பித்து ஓடிக்கொண்டிருந்தது ஹாலில். நான் சில நிமிஷம் அவர்களோடு உட்கார்ந்திருந்தேன். சுவாரஸ்யமில்லை. ஒரு டபுள் செவனை (அப்போதிருந்த சாஃப்ட் ட்ரிங்க் ப்ராண்ட் ‘77’ ) எடுத்துக்கொண்டு அவர்களின் பால்கனிக்கு வந்தேன். நின்றுகொண்டு வெளியே மங்கலான வெளிச்சத்தில் மனித அசைவுகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

சில நிமிஷங்களில் அங்கே வந்த செய்னி, பால்கனியின் இடது பக்கத்தில் கை நீட்டிக் காண்பித்தான். கிட்ச்சன் ஜன்னல். உள்ளே, வெங்காயம், இஞ்சி, பூண்டு, தக்காளி என்றுப் பொடியாக நறுக்கியவற்றை இலுப்பச்சட்டியில் போட்டு உப்பு, மசாலாக்கள் தூவி வதக்கிக்கொண்டிருந்தாள் மிஸஸ் செய்னி. “ஒனக்காக சப்ஜி தயாராகிக்கிட்டிருக்கு.. சிந்த்தா மத் கரோ!" (கவலப்படாதேப்பா!) என்று சொல்லித் தட்டிக்கொடுத்தான் நண்பன். தர்மசங்கடம் எனக்கு.

சிம்பிளான டின்னரை சிக்கலான டின்னரா ஆக்கிட்டேன் போலிருக்கே… "பாவம். ஒன்னோட மிஸஸை ஏன்ப்பா கஷ்டப்படுத்தறே.. நான் தான் இருப்பதிலேயே சமாளிச்சிடறேன்னு சொன்னேனே..” என்றேன் அவனைப் பார்த்து. “நீ என் விருந்தாளி.  ஒனக்கு ஒரு சப்ஜிகூட பண்ணிக்குடுக்க முடியாம என்ன பெரிய டின்னர் இது!” என்று சிரித்துவிட்டுச் சென்றான் செய்னி. தந்தூரி ரொட்டி, மக்கன், சிக்கன், மட்டன், சாஃப்ட் ட்ரிங்க்ஸ் என்று எல்லாவற்றையும் பக்கத்து ரெஸ்ட்டாரண்ட்டிலிருந்து ஆர்டர் செய்திருந்திருக்கிறான். செய்னி சொன்னவுடன், எனக்காக அவசர
அவசரமாக அவனது புதுமனைவி ஆலு-பைங்கன் (உருளை-கத்தரி)
சப்ஜி செய்துவிட்டாள்.

அரைமணி நேரத்தில் சேர்ந்து ஹாலில் உட்கார்ந்து நல்லதொரு டின்னர் சாப்பிட்டோம். ஜாலியாகப் பேசிச் சிரித்துக்கொண்டிருந்தான் செய்னி. அவனது மனைவியும் எங்களோடு உட்கார்ந்து அமைதியாக சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். அரட்டைக்கு அவளுக்கு ஒரு தோழி அருகில் இருந்திருந்தால், நன்றாக இருந்திருக்கும்தான்.

டின்னர் முடிந்து செய்னிக்கும் அவனது மனைவிக்கும் வாழ்த்து, நன்றி சொல்லிவிட்டுப் புறப்படுகையில், மணி ஒன்பதரையை நெருங்கிக் கொண்டிருந்தது. பஸ்ஸ்டாண்டில் காத்திருந்து அவரவர்களுக்கான கடைசி பஸ்களை ஒருவாறு பிடிக்கையில், குளிர் நன்றாக ஏறிவிட்டிருந்தது. பஸ்ஸில் பயணிக்கையில், சரியாக மூட வராத DTC பஸ்களின் ஜன்னல் கண்ணாடிகளின் இடுக்குகளின் வழியே குளிர்காற்று புகுந்து சீறித் தாக்கியது. போட்டிருக்கும் மெலிதான ஸ்வெட்டர் போதுமா, இந்தக் குளிரிலிருந்து நம்மைக் காப்பாற்றுமா என்கிற சந்தேகம் கூடவே அந்த இரவில் பயணித்தது.

=======================================================================================================

நியூஸ் ரூம் 
பானுமதி வெங்கடேஸ்வரன் 


செய்திகள் - 23-11-23

இந்தியர்கள் கடவுச்சொல்(password) தேர்ந்தெடுப்பதில் திறமையற்றவர்களாக இருக்கிறோம். இந்த வருடத்தில் (2023) 70% இந்தியர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் கடவுச் சொல் '123456'. சைபர் பாதுகாப்பில் மிகவும் மோசமான கடவுச்சொல்லான இதை மிகச் சுலபமாக தகர்க்க முடியும்.

செயற்கை கருத்தரிப்பு முறையில் உருவான இரட்டை குழந்தைகளில் ஒன்று 18 மாதங்களில் குறை பிரசவத்தில் இறந்து விட, தாயை மருத்துவ கண்காணிப்பில் வைத்து மற்றொரு குழந்தையை கர்ப்ப பையை விட்டு வெளியேறாமல் காப்பாற்றி, முழு கர்ப்ப காலம் முடிந்த பிறகு அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்த சாதனையை கொல்கத்தா அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் செய்திருக்கிறார்கள்.

மக்கள் தொகை கட்டுப்பாட்டில் தமிழகம் முதலிடம்.

தஞ்சை பெரிய கோவிலில் இருக்கும் நந்தி வளர்கிறது, விமானத்தின் கோபுரம் 50 டன் எடையுள்ள ஒரே கல்லால் ஆனது, என்று பல கட்டுக்கதைகள் நிலவுகின்றன. அதில் ஒன்றான பெரிய கோபுரத்தின் நிழல் தரையில் விழாது என்னும் தவறான தகவல் தமிழக அரசின் மூன்றாம் வகுப்பிற்கான சமூக அறிவியல் பாட புத்தகத்தில் இடம் பெற்றிருப்பது வருத்தம்.

மணிப்பூர் மாநிலம், இம்பால் விமான நிலையத்தின் மேல் யு.எஃப்.ஓ. என்னும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் காணப்பட்டது. உடனே ரஃபேல் போர் விமானங்கள் கண்காணிப்பில் ஈடுபட்டன. ஆனால் அந்த பொருள் அதன் பின்னர் காணப்படவில்லை. ஒரு வேளை வேற்றுகிரகவாசிகள் நடமாட்டமாக இருக்குமோ என்னும் சந்தேகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பைச் சேர்ந்த சுந்தரம் என்பவர் 2018ல் ஸ்ரீவல்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் சிறுநீர் கழிக்கச் சென்றார். அவரிடம் குத்தகைதாரர் ஒரு ரூபாய்க்கு பதிலாக ஐந்து ரூபாய் வசூலித்திருக்கிறார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சுந்தரம், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ரூ.5000/- நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் தீர்ப்பு இப்போது வந்துள்ளது. பாதிக்கப்பட்ட சுந்தரத்தின் கூடுதலாக வசூலிக்கப்பட்ட நான்கு ரூபாயை திரும்ப வழங்கவும் , மன உளைச்சலுக்கு ஈடாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குத்தகைதாரர் சடையப்பன் ரூ.20,000/- இழப்பீடு வழங்க உத்தரவிட்டனர். அடி சக்கை!

சென்ற வருடத்தைவிட இந்த வருட அக்டோபரில் விமானத்தில் பயணித்தவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

மஹாராஷ்டிரா, மன்வாடில் நீதிமன்றத்திற்கு அரை மணிநேரம் தாமதமாக வந்ததற்காக ஒரு கான்ஸ்டபிள், மற்றும் ஹெட் கான்ஸ்டபிள் இருவரையும் நீதிமன்ற வளாகத்தில் வளர்ந்திருக்கும் புல்லை வெட்டச் சொல்லி நீதிபதி உத்தரவு.

கனாடா நாட்டினர்க்கான விசாவை நிறுத்தியிருந்த இந்திய அரசாங்கம் மீண்டும் ஈ-விசா சேவைகளை தொடங்கியுள்ளது.

கிரிக்கெட் உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் நாடு திரும்பிய பொழுது அவருக்கு எந்தவிதமான ஆர்ப்பாட்டமான வரவேற்பும் அங்கு அளிக்கப்படவில்லை. இந்த காணொளியை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருக்கும் நம் நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் ஆதங்கம் - தோடா!

===========================================================================================================

பொக்கிஷம்  :- 

தன் கதைக்கு விமர்சனம் என்கிற பெயரில் யாரோ ஒரு வாசகர் ஏதோ சொல்லி இருப்பார் போல..   கி ராவின் ஆதங்கமாக பதில்!  படிக்க முடியாவிட்டால் இங்கு இதை நீக்கி விட்டு பின்னர் டெக்ஸ்ட்டாக வெளியிட வேண்டும்.

படைப்பாளிகளின் படங்கள்...


இதில் இரண்டு துணுக்கு உள்ளது.  படிக்க முடிய வேண்டுமே...  படிக்க முடியாவிட்டால் இங்கு இதை நீக்கி விட்டு பின்னர் டெக்ஸ்ட்டாக வெளியிட வேண்டும்.

1950 ல் விலைவாசி பற்றிய கிண்டல்!





85 கருத்துகள்:

  1. டெக்ஸ்ட்டாக வெளியிட வேண்டாம். இப்படி அச்சு அசலாக வெளியிடுவது தான் ஜீவனுள்ளதாக இருக்கிறது. எபிக்கான தனித்தன்மையான அழகு இது தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்.  ஆனால் சிலரால் வாசிக்க முடியவில்லை என்றும் சொல்வதால் இப்படி.  இது ஒரு முக்கியமான குறிப்பு என்று நான் நினைத்தேன்.  

      நீக்கு
  2. நானும் அப்படித்தான். ஓட்டுனர் வருவதற்கு முன்பே பெயர் தெரிந்ததும் அவர் பெயர் சொல்லி அழைத்துத் தான் பேசுவேன். இதனால் இருப்பக்கமும் ஒரு நெருக்கம் ஏற்படுவது உண்மை தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை. அதனால் ஏற்பட்ட ஒரு சிறு சங்கடத்தை சொல்லி இருக்கிறேன். படித்தீர்களா?

      நீக்கு
    2. அதை விட சங்கடமான ஒரு விஷயம் இருக்கு.
      உங்கள் அந்த கட்டுரை விவரிப்பில் எத்தனை பெயர்கள் இருக்கின்றன என்று எண்ணி சரியான விடையை சொல்பவர் யாரேனும் இருப்பார்களா, என்ன?

      நீக்கு
    3. அது உங்களால் மட்டுமே முடியும்!!  அது சரி,  ஆனால் பதிவில் அந்த பெயர்களுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை படிக்கும் வாசகருக்கு என்பது பார்த்திருப்பீர்கள்.  நான், தேவா இருவர் மட்டுமே நினைவில் வைத்துக்கொள்வது தேவையான பெயர்கள்.

      நீக்கு
    4. வரிசையாக அடுக்கப்பட்ட அந்தப் பெயர்களில் தான் உங்கள் கியாதி கொடிக்கட்டிப் பறந்ததாக நான் உணர்ந்தேன்.

      நீக்கு
  3. அப்படியா, சேதி? தஞ்சை பெரிய கோவிலின் கோபுர நிழல் தரையில் விழதா என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் நின்று பார்த்ததில்லை! செல்வாண்ணன் நேரில் சென்று கள ஆய்வு செய்து புகைப்படம் எடுத்து அறிக்கை கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளலாமா?

      நீக்கு
    2. தரையில் நிழல் விழும். நானும் புகைப்படம் எடுத்திருக்குறேன்.

      நீக்கு
    3. @ஜீ.வீ. சார்: //அப்படியா, சேதி? தஞ்சை பெரிய கோவிலின் கோபுர நிழல் தரையில் விழதா என்ன?// விழும் சார். ஆனால், தமிழக பாட நூல் நிறுவனத்தில் தவறாக விழாது என்று அச்சிட்டிருக்கிறார்கள் என்பதுதான் செய்தி. சரியாகத்தானே வெளியிட்டிருக்கிறேன், கடவுளே!

      நீக்கு
    4. ஸ்ரீராம் நீங்களும் செய்தியை சரியாக படிக்கவில்லையா?

      நீக்கு
  4. என்னை என்பதற்குப் பதில் எண்ணெய் என சுஜாதா கட்டுரையில் வந்திருக்கிறது

    பதிலளிநீக்கு
  5. 'ந.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா. வரை' என்ற என் நூலில்
    'இதோ நிஜ சுஜாதா'
    என்று தலைப்பிட்டு
    சுஜாதா பற்றி நான் எழுதியிருந்தது நினைவுக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எடுத்துப் பார்க்கிறேன்.

      நீக்கு
    2. அட! உங்களிடம் அந்தப் புத்தகம் இருக்கா? :))

      நீக்கு
    3. இல்லாமல் இருக்குமா என்ன!

      நீக்கு
    4. இல்லை என்பது தான் என் நினைவு.
      ஆனால் உங்கள் 'லா.ச.ரா கதைகள்'
      என்னிடம் பல ஆண்டுகளாக இருப்பது மட்டும் நன்றாக நினைவில் பதிந்திருக்கிறது.
      வாசிக்க வாங்கிய புத்தகங்களை திருப்பிக் கொடுத்து விட வேண்டும் என்ற எண்ணம் வலுவாக என் மனத்தில் பதிந்திருக்கும்.

      நீக்கு
    5. வாங்கி இருந்தேன். யாரோ படிக்க எடுத்துக் போனார்கள். திரும்பக் கொடுத்தார்களா என்று செக் செய்ய வேண்டும்.

      நீக்கு
  6. செய்னியின் செய்கை நன்று. வெஜிடேரியன்களுக்கு ஆலு ஆனியன் காம்பினேஷனில் சுலப சப்ஜி. பலர் சவல்லும் ஆலு பைங்கன் காம்பினேஷன் சாப்பிட்டதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது ஸைட் டிஷ் தானே?  அப்போ மெயின் என்னவாக இருந்திருக்கும்?  ரோட்டி?  நான்?  சப்பாத்தி?

      நீக்கு
    2. கத்திரி+உருளை காம்பினேஷனில் வெங்காயம் சேர்த்தோ சேர்க்காமலோ என் அம்மா எங்க சின்ன வயசிலேயே பண்ணுவாங்கனு சொல்லி இருக்கேன் பல முறை. யாருக்கும் நினைவில் இல்லை போல. நானும் அடிக்கடி பண்ணுவேன். எங்க பெண்/பிள்ளை எல்லாம் கொத்தவரை/அவரை/வெண்டைக்காய் எல்லாத்துடனும் உ.கி. சேர்ப்பாங்க. :))))))

      நீக்கு
    3. விஷயம் அதுவல்ல. ஏகாந்தன் ஸாருக்கு அன்று முதலில் ஸாலட் கிடைத்தது. அப்புறம் இந்த சப்ஜி மட்டும்.

      நீக்கு
  7. பெயர் சொல்லி அழைப்பது தவறில்லை என்றாலும் பொது இடங்களில் தவிர்ப்பது நன்று. ஏன் எனில் அவருடைய விருப்பம் மாறாக இருக்கலாம். மேலும் மற்றவர்கள் அவருடைய பெயரை அறிய நேரிடலாம்.

    எவ்வளவு பெரிய மனிதர் ஆனாலும் பாசுக்கு முன் செல்லம் தான். எந்த இடமானாலும் சரி. ஒரே ஒரு பார்வையிலேயே அடக்கி விடுவார். சுஜாதா மட்டும் விதி விலக்கல்ல.

    முதல் கட்டுரை ஒரு சிறுகதையின் அமைப்பைக் கொடுள்ளது என்ற முறையில் சிறப்பாக உள்ளது.

    பாட்டுக்கு பாட்டு.

    பறந்தன காகங்கள்
    வேண்டாம்
    பழைய சோறு.

    பிடித்தால் விழுவதே
    தள்ளாடுதல் என்பதா?

    கதவை மூடு
    எட்டிப் பார்க்கிறது
    பவுர்ணமி நிலவு.

    பொக்கிசத்தில் கடைசி ஜோக் பரவா இல்லை.
    Jayakuma​r

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது நாம் பேச்சை ஆரம்பிக்கும்போதே தெரிந்து கொள்ளலாம்.   கட்சி விஷயங்கள், மத விஷயங்கள் ஜாதி விஷயங்கள் என் பேச்சில் வராது.  பேச விருப்பமில்லாத நபர் என்று தெரிந்தால் நானும் மௌனமாகி விடுவேன்.  ஆனால் பெரும்பாலும் நான் பேசுவதை விட அவர்கள் பேசுவதுதான் அதிகமாக இருக்கும்!

      முன்னர் சில முறை சிறுகதைகள் இல்லாதபோது கட்டுரையை சிறுகதை வடிவத்துக்கு மாற்றி கொடுத்துள்ளேன்.  அப்படி சிறுகதை வடிவத்துக்கு மாற்றியபின் போதுமான கதைகள் வந்து விட மறுபடியும் வியாழனில் கட்டுரையாக போட்ட சமயமும் உண்டு!

      எதிர்க்கவிதைள் அவ்வ்ளவு சுகப்படவில்லை!!.
      நன்றி JKC  ஸார்.

      நீக்கு
  8. பெயர் சொல்லி அழைப்பது நெருக்கத்தைத் தரும். நான் எல்லோரிடமும் பேசுவேன் (கொஞ்சம் ஜாக்கிரதைத்தனம் இருக்கும்). சாதாரண விஷயத்தை தேவா ரொம்ப பர்சனலாக எடுத்துக்கொண்டு சந்தேகப்பட்டிருக்கிறாரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உடன் படித்த தோழி.. சந்தேகத்துக்கு என்ன குறை! உரிமையுடன் கேட்டு விட்டாரே.. அதை பாராட்ட வேண்டும்.

      நீக்கு
    2. ஓலா, ஊபர் ட்ரைவர்களை பெயர் சொல்லி அழைப்பீர்களா? நானும் முயர்சிக்கிறேன். ஒரு முறை எங்கள் தெருவில் குப்பை எடுக்க வந்த எக்ஸ்னோரா பையனிடம் "உங்கள் பெயர் என்ன? என்று கேட்டதும் நம்ப முடியாமல் அதிர்ச்சி அடைந்தான். "உங்களை அழைக்க வேண்டுமென்றால் எப்படி அழைப்பது? ஹலோ, எக்ஸ்னோரா? என்றா?" என்றதும் பெயர் சொன்னான்.

      நீக்கு
    3. கேன்டீன் பாயை அதன் உரிமணியாளர் இருவரும் ஏய், டேய் என்றே அழைத்து வந்தார்கள் பெருமைப்பிலும்.  நானா வானை பெயர் சொல்லி அழைக்கத்தொடங்கியதிலிருந்து அவர்களும் இப்போது அவனை பெயர் சொல்லியே அழைக்கிறார்களாம்!

      நீக்கு
  9. கதாசிரியரின் விளக்கம் கதைக்கு இலவச விளம்பரம். அதுதான் குமுத்த்தின் நோக்கமாயிருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி சொல்ல முடியாது.  இது அடிக்கடி நிகழ்வதில்லை.  மேலும் கடந்த வாரங்களில் வெளியான கதைக்குதானே விமர்சனம்!  அது சரி, துர்வாசருக்கும் ஹேமா ஆனந்ததீர்த்தனுக்கும் நடந்த எழுத்துப்போர்  தெரியுமோ?

      நீக்கு
    2. நிஜமாகவே தெரியாது, ஸ்ரீராம்.
      ஹேமா ஆனந்த தீர்த்தன் காலத்தவர்களில், கல்கி, தேவன் எழுத்தைத் தாண்டி வராதவராயிற்றே, துர்வாசர்?..

      நீக்கு
    3. எழுத்தில் ஆபாசம் அல்லது கருத்தில் ஆபாசம் என்று விமர்சனம் செய்யப்போய் சண்டை வந்தததாக நினைவ. அப்போது துர்வாசர் எழுத்தாளர்களை பற்றி ஒரு தொடர் கட்டுரை எழுதி வந்தார்.

      நீக்கு
    4. வலம்புரி ஜான் -- தாய் பத்திரிகை -- ஹேமா ஆனந்த தீர்த்தன் -- இணைந்த கட்டுரை ஒன்று உண்டு. நான் சென்னையில் இருக்க பொழுது உங்களிடம் காட்டுகிறேன்.

      நீக்கு
    5. நீங்கள் சொல்வதுதானா என்பதை நானும் மறுபடி அந்தத் துக்ளக் பைண்டிங் கிடைத்தால் (தேடவேண்டும்!) எடுத்துக் பார்த்து உறுதிப்படுத்தலாம்.  பார்க்கிறேன்.

      நீக்கு
    6. //துர்வாசருக்கும் ஹேமா ஆனந்ததீர்த்தனுக்கும் நடந்த எழுத்துப்போர் தெரியுமோ?// துர்வாசருக்கும் ஹேமா ஆனந்ததீர்த்தனுக்கும் நடந்த எழுதுப்போரா? குமுதத்தில் ஹே.ஆவிற்கும், இன்னொரு எழுத்தாளருக்கும்(பெயர் நினைவிற்கு வரவில்லை) நடந்த சொற்போர் நினைவில் இருக்கிறது. இருவரும் சந்தித்தப் பொழுது அவர் ஹே.ஆ.வை காம நாயகன் என்றார்.

      நீக்கு
    7. நிலவு தொல்லை செய்கிறதா??? என் மகள் வீட்டில் நான் படுக்கும் அறையிலிருந்து முழு நிலவைப் பார்க்க முடியும். நிலா வெளிச்சம் அறைக்குள் வரும். என்ன ஒரு ஆனந்தம்! இகழ்வது போல் புகழ்கிறீர்களா?

      நீக்கு
    8. 1. துக்ளக் பத்திரிகை
      2. துர்வாசர்
      -- சம்பந்தப்படாத விஷயம் நான் சொன்னது.

      நீக்கு
    9. வாங்க பானு அக்கா...   நிலவு என்ன தொல்லை செய்யப்போகிறது?  துன்பமான இன்பம்தான்!  நீங்கள் சொல்வதுபோல குமுதத்தில் வந்த எதுவும் எனக்கு நினைவில் இல்லை. 

      நீக்கு
    10. ஜீவி ஸார்...  துர்வாசர் எங்கிருந்து ஹே ஆ எழுத்தை எடுத்திருக்கப் போகிறார்?  மற்ற பத்திரிகையிலிருந்துதானே?  சரி..  நான் சொல்வது கையில் கிடைத்ததும் பகிர்கிறேன்.

      நீக்கு
    11. துர்வாசர்/ஹேமா ஆனந்ததீர்த்தன் சண்டை துக்ளக்கில் பல வருடங்கள் முன்னர் வந்தது. துக்ளக் படிச்சுட்டு இருந்த காலம் அது. பின்னால் கொஞ்சம் கொஞ்சமாய் நின்னு போய்ச் சோ இறந்ததும் பத்திரிகையே வாங்குவதில்லை.

      நீக்கு
    12. //ஹேமா ஆனந்ததீர்த்தனுக்கும் நடந்த எழுதுப்போரா? குமுதத்தில் ஹே.ஆவிற்கும், இன்னொரு எழுத்தாளருக்கும்(பெயர் நினைவிற்கு வரவில்லை)// பெயர் நினைவுக்கு வந்து விட்டது.. கோ.வி.மணிசேகரன். சுஜாதா முதல்முறையாக ஒரு சரித்திர சிறுகதை (குந்தவை விமலாதித்தனை மணந்து கொண்டது பற்றி) எழுதியபொழுது, கோ.வி.மணிசேகரன் சுஜாதா விஞ்ஞான கதைகள் எழுதட்டும், சரித்திர கதைகள் எழுத ஒரு முறை உண்டு. என்று எழுதியிருந்தார். உடனே சுஜாதா சரித்திர கதைகள் எழுதுவதில் பல முறைகள் உண்டு, சரித்திர கதைகள் எழுதுவது எப்படி என்று எனக்கு எந்த கொம்பனும் கற்றுத் தர வேண்டாம்" என்று பதிலடி கொடுத்தார்.

      நீக்கு
    13. //ஹேமா ஆனந்ததீர்த்தனுக்கும் நடந்த எழுதுப்போரா? குமுதத்தில் ஹே.ஆவிற்கும், இன்னொரு எழுத்தாளருக்கும்(பெயர் நினைவிற்கு வரவில்லை)// இன்னொரு எழுத்தாளர் பெயர் நினைவுக்கு வந்து விட்டது, கோ.வி.மணிசேகரன்.

      நீக்கு
  10. எந்த மனைவிக்கும் கணவன் பிரமிப்பல்ல. இதனைப் பல பேட்டியில் கங்கை அமரன் சொல்லி ஆதங்கப்பட்டிருக்கிறார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதைதான் சுஜாதாவும் சொல்லி இருக்கிறார்.  மேலும் அவர்களுக்கான இடத்துக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள்.

      நீக்கு
    2. இன்னொருத்தர் மனைவி தன் கணவன் பற்றி தன்னிடம் பிரமிக்கும் நேரங்களில்?..' -- வெளிக்குக் காட்டாத உள்ளுக்குள் உள் பெருமையா இருக்குமா என்ன?

      அதே மாதிரி-----

      இன்னொருத்தி கணவன் தன் மனைவி பற்றி தன்னிடம் பிரமிக்கும் நேரங்களில்?..

      நீக்கு
    3. அவர்கள் முன்னிலையில் சொன்னால் அதில் அர்த்தம் இருக்கும். கணவன், தன் மனைவி பற்றிப் பெருமையாக, அவள் இருக்கும்போது அவள் உறவினர்களிடத்தில் சொல்வது போல. ஆளில்லாதபோது புகழ்வது, பாலைவன ரோஜா போல யாருக்கும் உபயோகமில்லை.

      நீக்கு
    4. எப்படியும் மனைவி காதுக்கு சென்று சேரும். அதுவரை காத்திருக்க வேண்டும்!

      நீக்கு
  11. பேப்பர் கட்டிங் எல்லாமே படிக்க முடிந்தது.

    பதிலளிநீக்கு
  12. சமீப பதிவொன்றில் நெல்லை சுலோச்சனா முதலியார் பாலம் பற்றி நான் கூட நினைவு கொண்டிருந்தேனே!.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்லியது நினைவில் இருக்க, அதற்காகவே அதைப் பகிர்ந்தேன் என்றால் நம்புவீர்களா?

      நீக்கு
    2. இருமனம் ஒன்றாய் செயல்பட்ட செயலில் மயக்கத்திற்கு ஏதுமில்லை, ஸ்ரீராம்.

      நீக்கு
    3. அபூர்வ ராகங்கள் என்றுமே மீட்டுவதற்கு சுகமானவை.

      நீக்கு
  13. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  14. சிறப்பான பதிவு..
    சுஜாதா வின் கதைகள் பிடிக்கும்..

    மற்றபடி... வேறெதையும் ரசிப்பதில்லை.

    பதிலளிநீக்கு
  15. ராஜராஜேஸ்வரத்தின் ஸ்ரீ விமான நிழல் பூமியில் விழாது என்று கல்வெட்டில் சோழர் சொல்லியிருக்கின்றாரா?...

    தஞ்சாவூருக்குள் இருக்கும் கோயிலுக்கு தஞ்சாவூர் பெரிய கோயில் என்று பொதுப்பணித்துறையினர் அறிவிப்பு வைத்து இருக்கின்றனர்..

    அது பற்றி யாரும் பேசுவது இல்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சோழர் சொல்லியிருக்கின்றாரா என்றால், மக்கள் தானாக கண்டுபிடிக்கட்டும் என்று விட்டு விட்டாரோ...  இல்லைஒருவேளை அவருக்கே இந்த ரகசியம் தெரியாதோ...

      நீக்கு
  16. பெயர் சொல்லி அழைத்ததால் வந்த சங்கடம் தீர்ந்தது. ;)

    ஏகாந்தன் அவர்கள் பக்கம் , நியூஸ்ரைம் , நன்று.

    ஜோக்ஸ் மாவுக்கட்டு ,எண்ணைக் கிண்ணம் இங்பில்லர் ஹா...ஹா.

    பதிலளிநீக்கு
  17. இதுவல்லவோ நட்பு...! ( + சந்தேகப்பட்டதற்கு டீ வேண்டுமாக்கும்...!)

    ஆடிட்டரை அழைப்பது சுஜாதா டச்...!

    அந்த தொல்லை செய்வது அழகு...

    சுவாரசியமான தகவல்கள்...

    பதிலளிநீக்கு
  18. இதுக்கு நான் கொடுத்த கருத்துகள் ஒண்ணையும் காணோMஏ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! பொடி எழுத்தைப் பெரிசாக்கித் தந்திருப்பது படிக்க முடிந்தது ஸ்ரீராம். புலனம் அல்லது புவனம் கதை விமரிசனத்தையும் ஒரு வழியாப் படிச்சுட்டேன். இந்த ல, வ, சி, மி போன்றவை வந்தால் தடுமாற்றம் தான். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Grrrrrr... கொடுத்தால்தானே வரும்.. விழுந்து விழுந்து புதன் பதிவில் நேற்று உங்கள் கமெண்ட்ஸ் வருவதைப் பார்த்து கொண்டிருந்தேன். அடுத்து இங்கு வருவீர்கள் என்று காத்திருந்தேன்!

      நீக்கு
  19. ஜோக்குகள் எல்லாம் ஓகே ரகம். கவிதை சோ, சோ! சுஜாதா பற்றி சுஜாதா படிச்ச நினைவு. பானுமதியின் நியூஸ் ரூம் செய்திகள் புதுசாக இருக்கின்றன. முக்கியமாய் இரட்டைக்குழந்தை விஷயமும் கன்ச்யூமர் ஃபோரம் நஷ்ட ஈடு கொடுத்ததும். என்னமோ தமிழ்நாட்டுப் பாட நூல் கழகம் எல்லா விஷயங்களையும் சரியாக் கொடுத்திருக்கிற மாதிரி பானுமதி தஞ்சைப் பெரிய கோயில் விஷயத்தைச் சொல்லி இருக்காங்களே! தமிழ்நாட்டுப் பாட நூல் கழகத்தில் சிலபஸில் படிச்சுட்டுத் தமிழகத்தை விட்டு வெளியே போகாமல் வேலை செய்தால் பிழைக்கலாம். :(

    பதிலளிநீக்கு
  20. அதிலும் இப்போ சாலமன் பாப்பையா புறநானூற்றுப் புலவர்களையே கிறித்தவர்கள்னு சொல்லிட்டு இருக்கார். கால்ட்வெல் காலத்திலேயே சொல்லாத ஒண்ணு இது! எங்கே போகுமோ தெரியலை. :(

    பதிலளிநீக்கு
  21. இப்படியாகத்தானே நான் கடைப்பிடிக்கும் நல்ல பழக்கத்தினாலும் ஒரு பிரச்னை வந்தது, தீர்ந்தது!//

    கதாகாலட்சேபம் பாணியில் சொல்லி இருப்பது நன்றாக இருக்கிறது.
    பிரச்சனைக்கு பயந்து கடைபிடிக்கும் நல்ல பழக்கத்தை விட வேண்டாம்.


    பதிலளிநீக்கு
  22. சுஜாதா அவர்கள் அவர் மனைவியை பற்றி சொன்னது நன்றாக இருக்கிறது.

    //காக்கைகள்
    பறந்து விட்டன
    காத்திருக்கிறது சோறு//

    ஏன் என்னாச்சு? பசிக்கவில்லையா?

    சிக்கலான டின்னர் !//

    செய்னி அவர்களின் மனைவி விருந்தாளியின் வயிற்றை வாடவிடவில்லை. அருமையான சப்ஜி செய்து அசத்தி விட்டார்.

    பொக்கிஷபகிர்வில் பள்ளிக்கூட கணக்கு நன்றாக இருக்கிறது.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காக்கைக்கு அன்று பிரியாணி விருந்து போலும்! சாதா சோறு பிடிக்கவில்லை! புறாக்கள் போட்டி வேறு!

      நீக்கு
  23. ஸ்ரீராம், உங்க்ளைப் போல எனக்கும் இப்படிப் பெயர் சொல்லி அழைக்கும் பழக்கம் உண்டு...இல்லைனா இங்கு கருத்தில் நான் சொல்வது போல, அக்கா, அண்ணா என்று போகும்...எனக்கும் இப்பழக்கம் பிடித்த ஒன்று.....நானும் இந்த ஊபர் ஓலா புக் செய்தால் பெயரப் பார்த்துக் கொண்டு அதைச் சொல்லித்தான் பேசுவது வழக்கம்...வண்டி வந்த பிறகு ஓட்டுபவர் பெரியவராக இருந்தால் பெயரைச் சொல்லி கூடவே சார் என்று சொல்லி விடுவது வழக்கம். ஹிந்திக்காரர் என்றால் பெயர் சொல்லி சகோதரரே - பாயி சாப் என்று ஹிந்தியில் சொல்லிவிடுவதும் உண்டு!

    தோழி தேவாவுடனான சிறு பிரச்சனை ஹப்பா ஸ்மூகமாக ஆனது. உங்கள் டெக்னிக்கால்!!!

    சுஜாதா பற்றி 'சுஜாதா' - நன்றாகவே தெரிந்துவைத்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.

    கவிதை முயற்சிகளில் நிலவு - சூப்பர்

    ஏகாந்தன் அண்ணா நண்பரின் மனைவி செய்த சப்ஜி ஆஹா ஆலு பெய்ங்கன் - சூப்பர் சப்ஜி! ரொம்பப் பிடிக்கும் நன்றாக இருக்கும்.

    கீதா

    பொக்கிஷங்களும்

    பதிலளிநீக்கு
  24. பெயர் சொல்லி அழைக்கும் வழக்கம்... ஒரு சிறுகதையை வாசித்த நிறைவு.

    கவித் துளிகள் அருமை.

    தொகுப்பு நன்று.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!