காலையில் காபி இன்னும் எவ்வளவு
பேர்கள் விடாமல் சாப்பிடுகிறீர்கள்? எனக்கு, காலை எழுந்து பல் தேய்த்தவுடனே
காஃபி வேண்டும். எதுவும் டிகாக்ஷன் காஃபி! கெட்ட பழக்கம்தான்! என்ன
செய்ய! இந்தக் காலக் குழந்தைகள் போர்ன்விடா, பூஸ்ட் என்று குடித்தாலும்
நானெல்லாம் நினைவு தெரிந்த நாளிலிருந்தே காஃபி குடித்தே வளர்ந்தவன்!
நிறைய
பேர்கள் இந்தப் பழக்கத்தை விட்டு விட்டார்கள் என்று தெரிகிறது.
வெளிநாட்டில் வசிப்பவர்களால் இந்தப் பழக்கத்தைத் தொடர முடிகிறதா?
இப்போதெல்லாம்
காலை குழந்தைகள் பள்ளிக்குக் கிளம்புமுன்னும், பெரியவர்கள் அலுவலகம்
கிளம்புமுன்னும் இட்லி, தோசை என்று சிற்றுண்டி சாப்பிட்டுக் கிளம்புவது
வழக்கம்தான்.
ரிடையராகி வீட்டில் இருக்கும் பெரியவர்கள் பாடு வேறு திண்டாட்டம். இந்த பரபரப்புகளுக்கு நடுவே காலை டிஃபன் களேபரத்தில் அவர்கள் தங்களை எந்த நேரத்தில் பொருத்திக் கொள்வது என்று திண்டாடுவதையும் பார்த்திருக்கிறேன்!
இதிலும்
ஆட்கள் அதிகம் இருக்கும் இடங்களில் இட்லிதான் சிறந்த சிற்றுண்டி. நின்று
ஒவ்வொருவருக்காக தோசை வார்க்கப் பொறுமையும் இருக்காது, நேரமும் இருக்காது.
அதுவும் இருவரும் வேலைக்குப் போகும் இல்லங்களில், துணைக்குப் பெரியவர்களும்
இல்லை என்றால் நேர மேலாண்மை மிகக் கடினம். மனைவி ஹோம் மேக்கராய் இருந்தால்
அது ஒரு சௌகர்யம். ஆனால் வருமானம் இடிக்குமே!
"மனையாள் பணிசெய்தால் மணவாளன் வாழலாம்... அதிலே வருமானம் ஆனாலும் அவமானம்..இருவர் பணி செய்தால் இந்நாளில் பசி தீரும்..."
80 களிலேயே வந்த குடும்பம் ஒரு கதம்பம் படப் பாடல் இது!
கார்ன்ஃப்ளேக்ஸ்
சாப்பிட்டுக் கிளம்பும் குழந்தைகளும் உண்டு. அந்தக் காலம் என்றால்
கூட்டுக் குடும்பமோ இல்லையோ, பிள்ளைகள் உள்ளூர்ப் பள்ளிகளில் படிப்பார்கள்.
பாட்டியும் அம்மாவும் சமையலில் ஈடுபட்டிருக்க, குடும்பத்தலைவர் வேலைக்குக்
கிளம்புமுன் குழந்தைகளைக் கிளப்பி விடுவார்கள். அவசரமின்றி வேலைகள்
நடக்கும். நிதானமாக, சில சமயம் பொறுமையாக தோசை கூட வார்த்துப் போட்டு அனுப்புவார்கள்.
இப்போது முடியுமா?
திங்கள்
முதல் வெள்ளி வரை காலை, மதிய ஆகாரங்கள் ஒரு அவசரக்கோலமாய், கடமையாய் மாறி
விட்டன. கிடைக்கும் வாராந்திர விடுமுறை நாட்களில் அந்த வாரம் முழுவதும்
வரும்படி மாவு அரைத்து வைத்துக் கொள்கிறார்கள். அப்புறம் மாற்றி மாற்றி
இட்லி, தோசை...
அப்புறம் இருக்கவே இருக்கிறது ரெடிமேட் சப்பாத்தி. பத்து சப்பாத்தி 30 ரூபாய்! எடுத்துப் போட்டு எடுக்க வேண்டியதுதான்! சப்பாத்தி மட்டும்தான் ரெடிமேடில் இருக்கிறதா என்ன? இடியாப்பம், தோசை, பரோட்டா...
அந்தக்
காலத்தில் நான் பள்ளிக்குக் கிளம்பும் நேரம் சாதமும் பருப்பும் மட்டும்
தயாராயிருக்கும். பருப்பு சாதம் கலந்துகொண்டு, 'உனக்குக் கொதிகுழம்பு
பிடிக்குமே' என்று (அப்படிச் சொன்னால்தானே நாம் போட்டுக் கொள்வோம்? நானும்
பலமுறை நாம் எப்போது அப்படிச் சொன்னோம் என்று யோசித்ததுண்டு!) தட்டின்
ஓரத்தில் பாதி கொதித்த குழம்பைப் போட்டு, சாப்பிட வைத்து அனுப்புவார்கள்.
சமையலறை மேடை மேல் அவரவர்கள் டிபன்பாக்ஸ் ரெடியாக இருக்கும். 99 சதவிகிதம் தயிர் சாதம்தான். ட்ரெஸ் செய்து கிளம்பி அதை எடுத்துக் கொண்டு ஓட வேண்டியதுதான். அதுவும் பெயர்தான் தயிர் சாதம். உண்மையில் அது மோர்சாதம்தான்! மாவடுவோ, காய்ந்த நாரத்தையோ அதில் திணிக்கப் பட்டிருக்கும்! மதியம் பள்ளிகளில் மிகச்சிலர் மட்டும் வெவ்வேறு வகை உணவு கொண்டு வருவார்கள். சிலருக்கு மதியம்தான் சைக்கிளிலோ, வண்டியிலோ மொத்தமாக ஒரு நபர் கூடையில் சுடச்சுடக் கொண்டு வருவார்.
சமையலறை மேடை மேல் அவரவர்கள் டிபன்பாக்ஸ் ரெடியாக இருக்கும். 99 சதவிகிதம் தயிர் சாதம்தான். ட்ரெஸ் செய்து கிளம்பி அதை எடுத்துக் கொண்டு ஓட வேண்டியதுதான். அதுவும் பெயர்தான் தயிர் சாதம். உண்மையில் அது மோர்சாதம்தான்! மாவடுவோ, காய்ந்த நாரத்தையோ அதில் திணிக்கப் பட்டிருக்கும்! மதியம் பள்ளிகளில் மிகச்சிலர் மட்டும் வெவ்வேறு வகை உணவு கொண்டு வருவார்கள். சிலருக்கு மதியம்தான் சைக்கிளிலோ, வண்டியிலோ மொத்தமாக ஒரு நபர் கூடையில் சுடச்சுடக் கொண்டு வருவார்.
படங்கள் : நன்றி இணையம்.