பூமி மணி என்றால் என்ன?
பூமி என்றால் பூமி தான். பூமிநாதனையோ, பூமிநேசனையோ, பூமிகாவையோ குறிப்பதல்ல.
மணி எப்படிக் கட்டுவது என்று மலையாதீர். மணி என்றால் அறுபது நிமிடம். நம் சந்ததியர் நன்றாக இருக்க ஒரு வருடத்தில் ஒரு நாள் ஒரு மணி நேரத்துக்கு முடிந்த வரை மின்சார உபயோகத்தை நிறுத்தி வையுங்கள் என்பது தான் EARTH HOUR என்று பிரசித்தப் படுத்தப் பட்டிருக்கும் ஒரு செயல்பாடு.
என்ன செய்ய வேண்டும்?
மிக முக்கியமான [அதாவது, வெளிச்சம் இல்லாவிட்டால் விபத்துகள் நேரலாம் எனக் கூடிய ] இடங்கள் தவிர மீதி எல்லா மின் விளக்குகளையும் அனைத்து விட்டீர்களானால், நீங்கள் "பூமிக்கு ஒரு மணி" யில் அங்கத்தினர் ஆகி விட்டீர்கள். இந்த நேரத்தில் வேறு மின் சாதனங்களை உபயோகிக்காமல் இருப்பதும் ஒரு ஈடுபாடுள்ள செயல்.
எப்பொழுது?
வரும் சனிக்கிழமை (27-03-2010) இரவு எட்டரை மணி முதல் ஒன்பதரை வரை.
என்ன பயன்?
இந்த நேர அவகாசத்தில் நம் மின் உபயோகம் எவ்வளவு குறைகிறது வெளிச்சத்துக்கு மட்டும் தேசீய மின் தொகுப்பிலிருந்து எவ்வளவு மின்சாரம் தேவைப் படுகிறது? இதற்கு பதிலாக வேறு வகையில் மின் சக்தி அளிக்கும் வழிமுறைகளை ஆராயவும் இது பயன் படலாம்.
உற்பத்தியான மின்சாரம் எப்படி இருந்தாலும் வீண்தானே என்று நினைப்பவர்களுக்கு ஒரு வார்த்தை.
மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட சில வருடங்களுக்கு வேண்டுமானால் உண்மையாக இருந்திருக்கலாம். ஆனால், இப்பொழுது அப்படி அல்ல. எரி பொருள் கட்டாயம் மிச்சம் ஆகும். கல்யாண மண்டபங்களில் வைக்கப் படும் அவசர கால ஜெனரேட்டர்களின் செயல் பாட்டுடன் ஒரு நல்ல பெரிய மின் உற்பத்தி நிலையத்தை ஒப்பிடாதீர்கள். உங்கள் வீட்டில் எங்கெல்லாம் பழைய டங்க்ஸ்டன் உருண்டை விளக்குகளை CFL அல்லது குழல் விளக்குகளாக மாற்ற முடியுமோ அங்கெல்லாம் மாற்றி விடுங்கள்
பூமிக்கு ஒரு மணி என்ன, ஒரு ஆண்டில் சுமார் எட்டாயிரம் மணி நேரத்தில் எவ்வளவு நேரம் மின் சிக்கனம் கடைப் பிடிக்க முடியுமோ அவ்வளவு கடைப் பிடித்து ஆற்காட்டாரின் கவலை சுமையையும் கொஞ்சம் குறையுங்களேன்.
(Earth hour குறித்து உங்கள் சந்தேகங்கள், கேள்விகள் எல்லாவற்றையும் பின்னூட்டமாகப் பதியுங்கள்.)
(Earth hour குறித்து உங்கள் சந்தேகங்கள், கேள்விகள் எல்லாவற்றையும் பின்னூட்டமாகப் பதியுங்கள்.)


