Thursday, March 25, 2010

பூமிக்கு ஒரு மணி.


பூமி மணி என்றால் என்ன?

பூமி என்றால் பூமி தான்.  பூமிநாதனையோ, பூமிநேசனையோ, பூமிகாவையோ  குறிப்பதல்ல.

மணி எப்படிக் கட்டுவது என்று  மலையாதீர்.  மணி என்றால் அறுபது நிமிடம். நம் சந்ததியர் நன்றாக இருக்க ஒரு வருடத்தில் ஒரு நாள் ஒரு மணி நேரத்துக்கு முடிந்த வரை மின்சார  உபயோகத்தை நிறுத்தி வையுங்கள் என்பது தான் EARTH HOUR என்று பிரசித்தப் படுத்தப் பட்டிருக்கும் ஒரு செயல்பாடு.

என்ன செய்ய வேண்டும்?

மிக முக்கியமான [அதாவது, வெளிச்சம் இல்லாவிட்டால் விபத்துகள் நேரலாம் எனக் கூடிய ] இடங்கள் தவிர மீதி எல்லா மின் விளக்குகளையும் அனைத்து விட்டீர்களானால், நீங்கள் "பூமிக்கு ஒரு மணி" யில் அங்கத்தினர் ஆகி விட்டீர்கள்.  இந்த நேரத்தில் வேறு மின் சாதனங்களை உபயோகிக்காமல் இருப்பதும் ஒரு ஈடுபாடுள்ள செயல்.

எப்பொழுது? 

வரும் சனிக்கிழமை (27-03-2010) இரவு எட்டரை மணி முதல் ஒன்பதரை வரை.

என்ன பயன்? 

இந்த நேர அவகாசத்தில் நம் மின் உபயோகம் எவ்வளவு குறைகிறது வெளிச்சத்துக்கு மட்டும் தேசீய மின் தொகுப்பிலிருந்து எவ்வளவு மின்சாரம் தேவைப் படுகிறது? இதற்கு பதிலாக வேறு வகையில் மின் சக்தி அளிக்கும் வழிமுறைகளை ஆராயவும் இது பயன் படலாம்.

உற்பத்தியான மின்சாரம் எப்படி இருந்தாலும் வீண்தானே என்று நினைப்பவர்களுக்கு ஒரு வார்த்தை.

மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட சில வருடங்களுக்கு வேண்டுமானால் உண்மையாக இருந்திருக்கலாம்.  ஆனால், இப்பொழுது அப்படி அல்ல.  எரி பொருள் கட்டாயம் மிச்சம் ஆகும்.  கல்யாண மண்டபங்களில் வைக்கப் படும் அவசர கால ஜெனரேட்டர்களின் செயல் பாட்டுடன் ஒரு நல்ல பெரிய மின் உற்பத்தி நிலையத்தை ஒப்பிடாதீர்கள். 

உங்கள் வீட்டில் எங்கெல்லாம் பழைய டங்க்ஸ்டன் உருண்டை விளக்குகளை CFL  அல்லது குழல் விளக்குகளாக மாற்ற முடியுமோ அங்கெல்லாம் மாற்றி விடுங்கள் 

பூமிக்கு ஒரு மணி என்ன, ஒரு ஆண்டில் சுமார் எட்டாயிரம் மணி நேரத்தில் எவ்வளவு நேரம் மின் சிக்கனம் கடைப் பிடிக்க முடியுமோ அவ்வளவு கடைப் பிடித்து ஆற்காட்டாரின் கவலை சுமையையும் கொஞ்சம் குறையுங்களேன். 
(Earth hour குறித்து உங்கள் சந்தேகங்கள், கேள்விகள் எல்லாவற்றையும் பின்னூட்டமாகப் பதியுங்கள்.) 

23 comments:

சாய்ராம் கோபாலன் said...

ஒழுங்கா படிச்சு கமெண்ட் போட்டு இருந்திருப்பேன், சும்மா "பூமிகா" என்று சொல்லி, மனசை அலைபாய விட்ட உம்மை என்ன செய்வது. "முள்ளும் மலரும்" ரஜினி போல் நான் "கெட்ட பய" சார் (கெட்ட பய சார் காளி"). சும்மாவே ஜொள்ளு, நீங்க வேற !

இது எல்லாம் சரி, என்ன மாதிரி கெட்டபய பிள்ளைக வீட்டு சாமானை லவுட்டிட்டு போகிட போறாங்க. நினைவா பெண்டாட்டி கைய பிடிச்சிகாதிங்க !!

சைவகொத்துப்பரோட்டா said...

ரைட்டு, நல்ல விசயம்தான்.

Chitra said...

பூமிக்கு ஒரு மணி என்ன, ஒரு ஆண்டில் சுமார் எட்டாயிரம் மணி நேரத்தில் எவ்வளவு நேரம் மின் சிக்கனம் கடைப் பிடிக்க முடியுமோ அவ்வளவு கடைப் பிடித்து ஆற்காட்டாரின் கவலை சுமையையும் கொஞ்சம் குறையுங்களேன்.

....... கரிசனை, நகைச்சுவை, பூமி மேல் அக்கறை கொண்ட பதிவு. :-)

பாஸ்கரன் said...

ஆமாம் எங்கள் வாத்தியார் கூட ஒரு நாள் லைட் எமிட்டிங் டையோடு உபயோகித்தால், அது உற்பத்தி செய்யப்படும் பொழுது உண்டாகும் மாசுகள் கூட, அதன் நீண்ட உழைப்புத் திறன் காரணமாக குறைந்த அளவில் தான் கணக்கிடப் படும் என்றார். வீடுகளில் இது உபயோகத்துக்கு வந்துள்ளதா? என்ன என்று சொல்லிக் கேட்க வேண்டும்?

வானம்பாடிகள் said...

அவசியமான பகிர்வு. நன்றிங்க ஸ்ரீராம்

padma said...

புதுமையான பதிவு

திவ்யாஹரி said...

//வரும் சனிக்கிழமை (27-03-2010) இரவு எட்டரை மணி முதல் ஒன்பதரை வரை.[Photo]//

கண்டிப்பா செய்றோம் ஸ்ரீராம்.. தேவை மிகுந்த பதிவு..

Chitra said...
This comment has been removed by the author.
Chitra said...

Replying to your comment for my post:

First photo in my post is of my father's. :-)

ஹுஸைனம்மா said...

நன்றி நினைவூட்டலுக்கு.

வேந்தன் said...

2009 இல் நான் இட்ட பதிவு
http://skylinelk.blogspot.com/2009/03/830.html

புலவன் புலிகேசி said...

சூப்பர் தல க்ளோபல் வார்மிங்குக்கு எதிராக இதையாவது செய்யலாம்....செய்வார்களா?

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

பூமிக்கு ஒரு மணி அடடா நம்பள பத்தி மேட்டரான்னு படிக்க வந்தா ......
பரவாயில்லை நல்ல உபயோகமான பதிவுதான்
நன்றிங்க ஸ்ரீராம்

அப்பாதுரை said...

ஏற்கனவே கரண்டு கட்டுனு கஷ்டப்படுற கும்பல் கிட்டே எர்த் அவர்னு இன்னும் பேரம் பேசுறது நியாயமா?

நான் தங்கியிருந்த ஒவ்வொரு நாளும் தினம் எர்த் அவரா இருந்துச்சே தமிழ் நாட்டுலே?

Anonymous said...

இதோ இந்த இருட்டுக்கு நாம் தான் காரணம் என்று தெரிந்திருந்தால் ஒரு மனத் திருப்தி இல்லையா துரை!

Anonymous said...

சி எஃப் எல் விளக்குகள் போலவே இப்போது எல் இ டி க்ளஸ்டர் விளக்குகள் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளன. இந்த வகை வெளிச்சம் மின்சாரத்தை வெகு சிக்கனமாக பயன் படுத்தக் கூடியது. நமது படிப்பு வேலைகளை பகல் பொழுதில் இயன்றவரை செய்து விட்டு மங்கிய வெளிச்சத்தை முன்வைத்து பின்னிரவு நேரத்தைக் கழித்தால் எவ்வளவோ மின்சக்தி சேமிக்கப் பட வாய்ப்பு இருக்கிறது. கட்சிகளுக்கு இலவச திருட்டு மின்சாரம், விவசாயத்துக்கு இலவசம், இப்படியாக மின்சக்தி நியாயத்துக்கும் குறைவான விலை அல்லது இலவசமாக வழங்கப் படுவதால் மின் சிக்கனத்தின் முக்கியத்துவம் மக்களுக்குத் தெரியவில்லை என்று தோன்றுகிறது.

Madhavan said...

நல்ல செய்தி.. நான் வழிமொழிகிறேன்.

ஒருவர் : மின்சாரத்தை சேமிப்பத்தின் அவசியத்தை வலியுறித்தி நான் பேசியவை தொலைக்காட்சியில் (டிவி) (ஒலி)ஒளிபரப்பானதே.. பார்த்தீர்களா (கேட்டுக்கொண்டே) ?
மற்றவர் : அந்த நேரம்தான், நான் டிவியை அணைச்சுட்டு மின்சாரத்த சேமிச்சேன்.

அப்பாதுரை said...
This comment has been removed by the author.
அப்பாதுரை said...

அந்த ஒரு மணி நேரத்து வெளிச்சத்துக்கு எத்தனை எண்ணை செலவு? எத்தனை மெழுகுவர்த்திகள்? எத்தனை pollution? யாராவது கணக்கு பாத்தாங்களா?

சில சமயம் ரொம்ப இடது சாரியா போயிடறோம்; அமெரிக்காவுலயும் ஆஸ்திரேலியாவிலயும் இங்கிலாந்துலயும் துபாய்லயும் காட்டுத்தனமா செலவு செய்றாங்கன்னு இந்தியாவுல சிக்கனப் படுத்துறது, சாப்பாட்டுக்கு லாட்டரி அடிக்குறவங்க பட்டினி விரதம் இருக்கலாம் வானு சொல்ற மாதிரி இருக்கு. இந்தியாவுல எர்த் டே/ மணி கடைபிடிக்கலாம் தான். தெருவுல மலங்கழிக்ககூடாது, மிச்ச சாப்பாடு, குப்பையை வீதில எறியக் கூடாது அப்படி இந்தியாவுக்குப் பொருந்துற வகையில் வேறே எத்தனையோ வழியில காட்டலாமே?

meenakshi said...

சிறுநீர், மலம் கழிக்கறதாவது ஒரு ஓரத்திலேயோ, கண் மறைவாவோ நடக்குது. ஆனா, இந்த எச்சல் துப்பறது இருக்கே, நாட்டில பாதிபேர் எல்லா இடத்திலேயும் பண்றாங்க. படிச்சவங்க, படிக்காதவங்கன்னு பாகுபாடே இதுக்கு இல்லை. அதுவும் சில பேர் பஸ்ல, ஜன்னல் பக்கம் உக்காந்துண்டு, வெளில மனுஷங்க இருக்காங்களான்னு கூட பாக்க மாட்டாங்க. மேலும் பஸ் போயிண்டு இருக்கும்போது கூட துப்புவாங்க, பின் பக்கம் ஜன்னல் பக்கத்துல உக்காந்து இருக்கறவங்க கதி, அதோகதிதான். கொடுமை இதெல்லாம்! நம்ப நாட்டு மக்கள் பாதி பேருக்கு தனி மனித ஒழுக்கம் இல்லைங்கறத நினைக்கும்போதே ரொம்ப வேதனையா இருக்கு.

இதுக்கெலாம் ஒரு விழிப்புணர்வை உருவாக்க முடியாது. அவங்க, அவங்களே நிறுத்தினாதான், திருந்தினாதான் உண்டு.

Anonymous said...

//அந்த ஒரு மணி நேரத்து வெளிச்சத்துக்கு எத்தனை எண்ணை செலவு? எத்தனை மெழுகுவர்த்திகள்? எத்தனை pollution? யாராவது கணக்கு பாத்தாங்களா?//

மிக அவசியமான விளக்குகளை அணைக்காதீர் விபத்துகளை வரவேற்காதீர்

நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் ஒரு தலைக்கு இருந்த மாசு உண்டாக்கும் திறனை விட இப்பொழுது குறைவாகத்தான் இருக்கும்.

துரை சொல்கிற மாதிரி மற்ற விஷயங்களையும் வழிகளையும் ஆராய்தல் நலம்.

குரோம்பேட்டைக் குறும்பன் said...

என்னைக் கேட்டால், அந்த ஒரு மணி நேரத்தில், எண்ணை விளக்கு, மெழுகுவர்த்தி, எதுவும் ஏற்றாமல், தொலைகாட்சி கூட பார்க்காமல், கண்ணை மூடி அமைதியாக தியானம் செய்யலாம். இது எர்த் ஹவருக்கு மட்டும் அல்ல, நமக்கும், நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் மிக மிக நல்லது.

Nellai nanban said...

look my post about Earth hour visit:http://porunaipayyan.blogspot.com

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!