இந்தக் காணொளியை சுப்பு தாத்தா மிகவும் ரசிப்பார் என்று நம்புகிறேன்.
மூத்த சக பதிவரும், மரியாதைக்குரிய நண்பரும் ஆகிய திரு பட்டாபிராமன் அவர்களின் இசை. பாடல் அவரே இயற்றியது.
உத்தமன் ராமனை உதயத்தில் எழுகையில்
உள்ளத்தில் நினைவாய் மனமே
அனுதினமே (உத்தமன்)
தர்மத்தை நிலைநாட்ட தரணிக்கு வந்தவன்
தந்தை சொல் காக்கவே அரியணை விடுத்து
ஆரண்யகம் சென்றவன் (உத்தவன்)
காண்போர் அனைவரையும் அன்பால் தன்வசம் ஈர்த்தவன்
கல்லாய் கிடந்த அகலிகைக்கு கருணை காட்டி உயிர் கொடுத்தவன் (அந்த உத்தமன்)
அன்னை சீதையுடன் அருள் வடிவாய் காட்சி தருபவன்
அடியவன் அனுமனின் இதயத்தில் என்றும் உறைபவன் (அந்த உத்தமன்)
அகிலத்து மாந்தர் வாழ்வில் அமைதியும் ஆனந்தமும் என்றும் நிலைத்திட
இன்னலும் தீமையும் இவ்வுலகை விட்டு அகன்றிட (அந்த உத்தமன்)