வெள்ளி, 12 ஜூன், 2015

வெள்ளிக்கிழமை வீடியோ 150612 : மூத்த பதிவர் பட்டாபிராமன் அவர்களின் இன்னிசை.இந்தக் காணொளியை சுப்பு தாத்தா மிகவும் ரசிப்பார் என்று நம்புகிறேன்.
மூத்த சக பதிவரும், மரியாதைக்குரிய நண்பரும் ஆகிய திரு பட்டாபிராமன் அவர்களின் இசை.  பாடல் அவரே இயற்றியது.

உத்தமன் ராமனை உதயத்தில் எழுகையில் 
உள்ளத்தில் நினைவாய் மனமே 
அனுதினமே (உத்தமன்)

தர்மத்தை நிலைநாட்ட தரணிக்கு வந்தவன் 
தந்தை சொல் காக்கவே அரியணை விடுத்து 
ஆரண்யகம் சென்றவன்  (உத்தவன்)

காண்போர் அனைவரையும் அன்பால் தன்வசம் ஈர்த்தவன் 
கல்லாய் கிடந்த அகலிகைக்கு கருணை காட்டி உயிர் கொடுத்தவன் (அந்த உத்தமன்)

அன்னை சீதையுடன் அருள் வடிவாய் காட்சி தருபவன் 
அடியவன் அனுமனின் இதயத்தில் என்றும் உறைபவன் (அந்த உத்தமன்)

அகிலத்து மாந்தர் வாழ்வில் அமைதியும் ஆனந்தமும் என்றும் நிலைத்திட 
இன்னலும் தீமையும் இவ்வுலகை விட்டு அகன்றிட (அந்த உத்தமன்)

16 கருத்துகள்:

 1. சுப்பு தாத்தாவின் பாராட்டுக்கள்.

  ஜோன்புரி ராகத்தில் இசைக்கிறார் என நினைக்கிறேன்.

  மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்.


  மவுத் ஆர்கனை வாசிப்பது எளிதல்ல.

  மூச்சை அடக்கி வாசிப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும்.
  நாதஸ்வரம் போல். இதற்குள் ஒரு இலக்கணத்துடன்ஸ்ருதியுடன் சப்தம் ஒலி நாதம் எழுப்புவது என்பது சரத்தையும் விடா முயற்ச்சியும் வேண்டும். .

  பட்டாபிராமன் சார் !! கங்க்ராட்ஸ்.

  சுப்பு தாத்தா.
  நானும் பாடட்டுமா ? இல்லை, ஏதேனும் பாட்டுக்கு ரைட்,அப்படின்னு சொல்லிப்பிட்டு கேஸ் போட்டு விடுவீர்களா?

  பதிலளிநீக்கு
 2. ஐயாவின் பல ஆண்டு முயற்சிக்கு வணக்கங்கள்...

  பதிலளிநீக்கு
 3. இந்த பாடலை இங்கு கேட்கலாம். இது ஒரு ராக மாலிகையாக பாட முயற்சி செய்கிறார்.
  subbu thatha.
  www.subbuthathacomments.blogspot.in
  www.menakasury.blogspot.com

  பதிலளிநீக்கு
 4. பெஹாக் ராகம் என்று நினைக்கின்றேன்.

  பதிலளிநீக்கு
 5. சுப்பு தாத்தாவின் பாராட்டுக்கள் அந்த
  இசை விமர்சகர் சுப்புடு அவர்களின்
  பாராட்டாக இவன் ஏற்றுக்கொள்கிறான்.
  தொடர்ந்து முயற்சி செய்து அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இசையை தர முயலுவான் அந்த ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் துணை கொண்டு.

  பதிலளிநீக்கு
 6. மறந்தே போய்விட்ட ஒரு இசைக்கருவியில் இனிய பெஹாக்

  பதிலளிநீக்கு
 7. வணக்கம்
  ஐயா
  மனதுக்கு .இதமான இசை பகிர்வுக்கு நன்றி இரசித்தேன்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு

 8. கேட்பதற்க்கு அருமையாக இருந்தது.

  பதிலளிநீக்கு
 9. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 10. இது பெஹாக் ராகத்தில் அமைந்திருக்கிறது. திருப்பாவையில் ஒருத்தி மகனாய் பிறந்து என்பதும் பெஹாக் ராகம் தான்.....

  அருமையாக இருக்கிறது. மவுத் ஆர்கனில் வாசிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று....மிக அழகாக வாசிக்கின்றார்.

  இவரும் பதிவர் என்பதை தங்களிடமிருந்துதான் இப்போதுதான் அறிகின்றோம்.....மிக்க நன்றி மகிழ்ச்சி.....இனி தொடர்ந்துவிட்டால் போச்சு அப்போ நிறைய பாடல்கள் கேட்கலாம் இல்லையா...

  கீதா

  பதிலளிநீக்கு
 11. The sound of a clarionette is produced on the "mouth organ" which normally plays adjacent notes as well. Very good clarity, could follow the lyric easily. Nice.

  பதிலளிநீக்கு
 12. என்னை மறந்து விட்டீர்களா என் இனிய நண்பர்களே ! சென்ற வாரம் வரை 134 இசை மவுத்தார்கன் பாடல்களை youtube ல் வெளியிட்டுள்ளேன். கண்டு கேட்டு இன்புற அன்போடு அழைக்கின்றேன். லிங்க்- pattabiraman mouthorgan vedios. நன்றி

  பதிலளிநீக்கு
 13. என்னை மறந்து விட்டீர்களா என் இனிய நண்பர்களே ! சென்ற வாரம் வரை 134 இசை மவுத்தார்கன் பாடல்களை youtube ல் வெளியிட்டுள்ளேன். கண்டு கேட்டு இன்புற அன்போடு அழைக்கின்றேன். லிங்க்- pattabiraman mouthorgan vedios. நன்றி

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!