14.2.13

முக்கண் முதன்மை!

            
ரெக்கார்டு நோட்டுப் புத்தகம்  செட் ஸ்கொயர் கருப்பு மை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு 10 மிமீ அல்லது 12 மிமீ எது பார்டருக்கு நன்றாக இருக்கும்.  ஒரு கோடு போட்டால் போதுமா  இல்லை இரண்டு கோடுகள், அதிலும் ஒன்று மட்டும் அழுத்தமாக .... என்று இப்படி உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது அம்மா வந்தாள்.
 

  
"மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டு சும்மா தானே உட்கார்ந்திருக்கே ?  ஒரு வேலை செய்யேன். " என்றாள். 
            
" உம் சொல்லு, நீ சொல்லி நான் செய்யாமல் போயிருக்கேன் இல்லை தப்பிக்கத்தான் முடியுமா? சீக்கிரம் சொல்லு.   எனக்கு ஒரு 5 பக்க ரெகார்டு வேலை இருக்கு."
          
"தேங்காய் சேவைக்கு பாக்கி எல்லாம் ரெடி.  நீ போய் பரசுராமன் கடையிலிருந்து ஒரு தேங்காய் வாங்கி வந்துடு."
   
நான் என்னுடைய மானசீக பைக்கில் [அதாங்க, வி வடிவத்தில் ரப்பரில் வார் போட்ட சிங்கப்பூர் செருப்பு ] ஏறிப்பறந்தேன்.
        
பரசுராமன் மளிகை வாசலில் பைக்கை நிறுத்தி ஸ்டாண்டு போட்ட பின் தான் கடை இன்னும் திறக்க வில்லை என்பதைக் கவனித்தேன்.  பின்னர் தான் அன்று வியாழக்கிழமை என்பதும் நினைவுக்கு வந்தது.  அவர் கடைக்கு வாராந்தர விடுமுறை.  பரகத் ஸ்டோர் வெள்ளியன்று தான் விடுமுறை என்பது நினைவுக்கு வர பைக்கை மீண்டும் ஸ்டார்ட் செய்து மாரியம்மன் கோவிலருகே போனதும் இங்கேயே வாங்கிப் போனால் என்ன என்று எண்ணம் வர, 
            
அங்கேயே வாங்கியும் விட்டேன். பரசுராமன் கடையில் என்றால் அவர் ஒன்றை எடுத்து ஓரமாக வைத்து விட்டு மற்றொன்றை எடுத்து காதுக்கு நேரே ஆட்டிப் பார்த்து பிறகு மூன்றாவதாக ஒரு காயை எடுத்து முன்னதுடன் மோதி சப்தத்தில் திருப்தி அடைந்தால்  மட்டுமே நம்மிடம் தருவார். தேங்காய்க் குவியல் நமக்கு எட்டும் தூரத்தில் இருக்காது.  ஆனால் இங்கே கடைக்காரர் தேங்காய குன்றின் பின் ஒளிந்து கொண்டு நீயே எடுத்துக்கோ என்று சொன்னதற்கு காரணம் அவர் சோம்பேறித்தனமா, இல்லை காலை உணவு அருந்திக் கொண்டிருந்ததால் எச்சில் கையால் கொடுக்க வேண்டாம் என்று நினைத்தாரா, இல்லை, வாடிக்கையாளர் அவருக்கு வேண்டியதை அவரே தேர்வு செய்யட்டும் என்ற ஜனநாயக பாதுகாவலரா என்றெல்லாம் யோசனைகள் செய்யாமல், அம்மன் கோவிலுக்கு நேர்ந்து கொண்டவர்கள் வாங்கிப் போவதுதான் நமக்கும் எல்லாமே நன்றாகத்தான் இருக்கும் என்று கைக்கு வந்ததை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். 
              
பஞ்சு கிருஷ்ணனுக்கு எப்போது எதிரில் வரலாம் வரக் கூடாது என்று பாகுபாடுகள் எல்லாம் இல்லை.  வந்தால் ஒரு அரை மணி நேரம் எதாவது கேள்விகளாக கேட்டுக் கொண்டே இரு[அறு?]ப்பான்.   
                 
அன்று பேசியதெல்லாம் இன்றும் நினைவுக்கு வருகிறது  நாங்கள் எதையும் விட்டு வைக்கவில்லை.  கே லூசக்கின் லா ஆஃப் கம்பைனிங் காஸ் வால்யூம்சிலிருந்து இந்திய நிலக்கரிக்கும், இங்கிலாந்து கரிக்கும் உள்ள வித்தியாசங்கள் நெய்வேலியில் எடுக்கப் படும் பழுப்பு நிலக்கரி இப்படி நிறைய பேசிய பின், நானும் உங்க வீட்டுப் பக்கம்தான் வருகிறேன், 104 பாலுவிடம் பழைய புத்தகம் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று சொல்ல அவ்வளவு நேரம் அம்மாவைக் காக்க வைத்து விட்டோமே என்ற குற்ற உணர்வுடன் மெதுவாக நடக்க ஆரம்பித்தேன்.  பெயருக்குத்தான் பஞ்சு - பறக்க எல்லாம் மாட்டான். மெதுவாக ஊர்ந்து ஊர்ந்து எறும்பு போலத்தான் நடப்பான். 
        
ஒரு வழியாக கிழக்கு மடவிளாகத்தில் முனையில் அவனை விட்டு விட்டு, வீட்டுக்குள் வந்து அம்மாவிடம் தேங்காயைக் கொடுத்து விட்டு ரெகார்டு நோட்டு பென்சில் பேனாக்களில் கவனம் செலுத்தினேன்.
              
மீண்டும் அம்மா.  கையில் உடைத்த தேங்காய்  பாண்டியன் சபையில் சிலம்பைக் கையில் வைத்துக் கொண்டு நீதி கேட்கும் கண்ணகி போன்ற  முக பாவம்.  
              
"கடைக்காரர் தானே எடுத்துக் கொடுத்தார் ? இல்லை நீயே எடுத்தியா ?"
               
"நான்.... நான் ,,, தான் எடுத்தேன்." 
         
"நான் எத்தனை தடவை சொல்லி இருக்கேன்? நல்லா தட்டிப் பார்த்து, கனம் அதிகமில்லாமல் உள்ளே நீர் ஆடணும்னு .....? போ, போய்க் கொடுத்து விட்டு வேறு வாங்கி வா.  பரசுராமன் கட்டாயம் மாற்றிக் கொடுப்பார். " 
       
"அம்மா இன்னிக்கு வியாழக் கிழமை"  
   
"வியாழக் கிழமைன்னா ...?"
  
" பரசுராமன் கடை லீவு!"  
             
"பின்னே இதை எங்கே வாங்கினே ?" 
  
"மாரியம்மன் கோவில் வாசல்லே."
           
"அவரும் மாற்றிக் கொடுப்பார்; நீ போய் கேட்டுப் பார்."
    
"எனக்கு நிறைய வேலை...இருக்கும்மா"   
     
"பஞ்சு கிருஷ்ணனுடன் வம்பளக்கும் பொழுது இந்த வேலை எல்லாம் இங்கேயே தானே இருந்தது ?" 
            
 அம்மாவிடம் பேசி ஜெயிக்க முடியாது!
             
அதுக்காக எல்லோருமா பரசுராமன் ? இந்தக் கடைக்காரர் என்னைப் பார்க்கவே இல்லை - நானும் அவரைப் பார்க்கவில்லை. எனக்கு வேறு யாராவது அங்கே உட்கார்ந்திருந்தால் கூட தெரியாது!
             
"போ, போய் கேட்டுப்பார்."
                   
'ஏதோ கண்ணகி சாபம் எதுவும் கொடுக்காமல் அந்தப்புறம் போனது நாம் செய்த பாக்கியம்' என்று மீண்டும் சென்று, சென்றார் - கண்டார் - வென்றார் வந்தார் என்பது போல திரும்பி வந்து தம்பி தங்கையுடன் தேங்காய் சேவை சாப்பிட்டது இன்றும் பசுமை.
    
இந்த நினைவுகளை இப்பொழுது தூண்டி விட்ட கடல் டிஸ்டிரிப்யூடர்களுக்கு நன்றி.
             

13.2.13

ஒரு அதிகாலை மரணம்.


பதினோரு மணியாகியும் மூர்த்தி இன்னும் அலுவலகத்துக்கு வரவில்லை.

                                         
 
"கணேசன்... மூர்த்தி ஏதாவது பெர்மிஷன், லீவு சொன்னாரா... இன்னும் காணோம்?" கேஷியர்  கேட்டார்.

"இல்லை சார்.... இந்நேரம் வந்திருக்கணுமே... அவர் ஊர்லேருந்து காலைல ரெண்டே பஸ்தான் உண்டு.. 9 மணிக்குள்ள ரெண்டுமே வந்துடும்... உடம்பு கிடம்பு சரியில்லையோ என்னமோ.."

மேனேஜர் ரூமிலிருந்து காளிமுத்து ஓடி வந்தான். மூர்த்தி நேற்றிரவு காலமாகி விட்ட செய்தியை அனைவருக்கும் அறிவித்தான்.  சற்றுமுன்தான் மேனேஜர் ரூமுக்கு அவர்கள் உறவினரிடமிருந்து தொலைபேசி வந்ததாகச் சொன்னான்.


ஆஃபீஸே சோகமானது.

மூர்த்தி அந்த ஊரிலிருந்து வெளியே தள்ளி ஒதுக்குப் புறமாக இருந்த கிராமத்திலிருந்து அலுவலகம் வந்து செல்பவன். அங்கிருந்து ஊருக்குள் வர ஒரு நாளைக்கு ஐந்து முறை மட்டுமே பஸ் வசதி உண்டு. அப்படியும் தவறாமல் நேரத்துக்கு வந்து விடுவான்.


தன்னுடைய அன்பான மனைவி பற்றியும், பையன் பற்றியும் அவன் சொல்லக் கேட்டிருக்கிறார்கள். அவன் மனைவி சுவையாக சமைக்கக் கூடியவள் என்று அலுவலகம் முழுதும் தெரியும். அவள் சமையலை அடிக்கடி அலுவலகம் முழுதும் சுவை பார்க்கும்.


ஆபீஸ் முழுக்க சோகப் பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஆங்காங்கே பேசிக் கொண்டார்கள். நினைவுகள் அலசப் பட்டுக் கொண்டிருந்தன.

                                    
 
மேனேஜர் எல்லோரையும் அழைத்துப் பேசினார்.

சாதாரணமாக ஒரு அரசு ஊழியர் பணிக்காலத்தின்போதே மரணமடைந்தால் அவரது இறுதிச் செலவுகளுக்கு என்று ஒரு தொகை அலுவலகம் சார்பில் வழங்கப் படும். அந்தப் பணத்தை வாங்கி வர ஏற்பாடு செய்தார்.

"சாயங்காலத்துக்குள்ள பாடி எடுத்துடுவாங்க. யார் யார் போகப் போறீங்க..."

ஐந்தாறு பேர் ரெடியானார்கள். அவர்களிடம் பணத்தைக் கொடுத்து மூர்த்தியின் மனைவியிடம் தரச் சொன்னார். "பார்த்துப் பேசுங்க"

அலுவலக ஜீப்பிலேயே புறப் பட்டார்கள். வழி முழுக்க மூர்த்தியின் பண்புகள், குணங்கள் பற்றிய பேச்சாகவே இருந்தது.


"பொண்டாட்டி மேல உசுரையே வச்சிருந்தான் சார்... அவங்களும் அப்படித்தான்"

"என்ன பண்ணுவாங்களோ இனிமே.. படிச்சுருக்காங்களா... அவங்களுக்கு ஒரு வேலைக்கு ஏற்பாடு பண்ண முடியுமா என்று பார்க்கலாம்..."

"பையன் படிப்பு வேற இருக்கே..."


"இப்போ கேட்க முடியாதுப்பா.. அப்புறம் கேட்கலாம்"


"பணத்தைக் கொடுத்தா வாங்குவாங்களா.. ரொம்ப அழுவாங்கப்பா.. அவங்களை யார் பார்த்திருக்கா?"

"நான் ஒண்ணு  ரெண்டு தரம் இங்க வந்தபோது பார்த்திருக்கேன் சார்...." காளிமுத்து.

"எல்லோரும் சேர்ந்து இருங்க... பணம் கொடுக்கும்போது. வாங்க மாட்டேன்னு அழுவாங்க... நாமதான் எடுத்துச் சொல்லிக் கொடுக்கணும். சங்கடமா இருக்கப்பா..."

                                        

ஊரை விட்டு விலகி, ஜீப் பாதையில்லாமல் இருந்த பாதையில் பயணித்து ஊரையடைந்தது.

கூடியிருந்த கூட்டம் விலகி வழிவிட, ஜீப்பிலிருந்து இறங்கி தயக்கத்துடன், மெளனமாக உள்ளே நடந்தனர்.
 
                                            

மூர்த்தி நீட்டிப் படுத்திருந்தான். பார்க்கக் கஷ்டமாக இருந்தது. வாழ்வு, மரணம் பற்றிய வழக்கமான கேள்விகள் மனசுக்குள் வந்தன.

பணத்தை எடுத்துக் கொண்டு அவன் மனைவியிடம் வந்தனர். அவள் கையில் பணத்தைக் கொடுத்தனர்.


வாங்கி எண்ணினாள்.

"என்னங்க... நான் போய்ட்டா லட்ச லட்சமாப் பணம் வரும்னு சொன்னீங்களே...வெறும் பத்தாயிரம்தான் கொடுக்கறாங்களே.. நான் என்ன பண்ணுவேன்?" மூர்த்தி பக்கமாகத் திரும்பி அரற்றினாள்.

ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.


"யம்மா... இது மூர்த்தி சாரோட இறுதிச் செலவுக்கு மட்டும்மா.. நீங்க சொல்ற பணம்லாம் அப்புறம் முறைப்படி வரும்"

                                           
 
திரும்பும்போது ஜீப்பில் மரணம் பற்றி யாரும் பேசவில்லை!


படங்கள் : நன்றி இணையம்.

11.2.13

சிமரூபா கஷாயம் - புற்று நோய்க்கு மருந்து.

                        
விஜயபாரதம் பத்திரிகையில் சமீபத்தில் படித்ததன் பகிர்வு இது. செய்தியின் நம்பகத் தன்மைக் குறித்துத் தெரியவில்லை. உண்மையாக இருந்தால் மிக உபயோகமான ஒன்று. யாராவது ஒரிவருக்காவது உபயோமாகலாம். தொலைபேசி எண்ணும் தரப் பட்டுள்ளதால் குறிப்பிட்ட நபரை எளிதில் தொடர்பு கொள்ளவும் முடியுமே...  இனி படித்த விஷயம் கீழே. 
        
நீர், நிலம்,காற்று, ஆகாயம், நெருப்பு போன்றவை மாசு பட்டுள்ளதால் பல்வேறு உடல்குறைகள் ஏற்படுகின்றன. புற்று நோயின் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. கேரளாவில் காசர்க்கோடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் என்டோசஃல்பான் அதிக அளவு காணப்படுகிறது. எனவே புற்று நோய் அதிக அளவில் பரவியது. இப்போது கேரளாவில் என்டோசல்பான் தடை செய்யப் பட்டுள்ளது. தேசிய அளவிலும் இந்த விஷயத்தில் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, என்டோசல்ஃபானை உற்பத்தி செய்யக் கூடாது என்பது தொடர்பான விழிப்புணர்ச்சி வலுத்துள்ளது.
 
               
இந்நிலையில் சிமரூபா கிளாக்கா (SIMAROUBA GLAUCA) இலைக் கஷாயத்தைத் தொடர்ந்து பருகி வந்தால் புற்று நோய் தணிகிறது என்பது நிரூபிக்கப் பட்டுள்ளது. தென்னிந்தியாவில் குறிப்பாக கர்நாடகத்தில் சிமரூபா மரங்கள் பரவலாக உள்ளன. இதற்கு சொர்க்க விருட்சம், லக்ஷ்மிதரு என்கிற பெயர்களும் உள்ளன.

             
கேரளாவைச் சேர்ந்த புற்று நோயாளிகள் பலருக்கு சிமரூபா கஷாயத்தை பெங்களுருவைச் சேர்ந்த தம்பதியர் ஷியாம் சுந்தர் ஜோஷி - சாந்தா ஜோஷி கொடுத்தனர். இருவரும் வேளாண் விஞ்ஞானிகளாகப்  பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். இந்தக் கஷாயத்துக்காக அவர்கள் காசு பெற்றுக் கொள்வதில்லை. சேவையாகச் செய்து வருகிறார்கள்.

                                  
'சிமரூபா வளர்ப்பது கடினமானதல்ல. இதை மிகச் சுலபமாக வளர்க்க முடியும். இந்த மரத்தை வீட்டுக் கொல்லையில் கூட வளர்க்கலாம். இந்த விருட்சம் வீட்டில் இருந்தால் அது ஆரோக்கியக் காப்பீட்டுக்குச் சமமாகும்' என்று ஷியாம் சுந்தர் ஜோஷி கூறுகிறார். அவரை 080-23335813 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். சிமரூபாவில் 'கோசினாய்ட்ஸ்' என்ற நுண்சத்து உள்ளது. இதுதான் புற்று நோய்க்கு எதிராகச் செயல் படுகிறது என்பது குறிப்பிடத் தக்கது. ரத்தப் புற்று நோய்க்குக் கூட இது அருமருந்தாகும்.
 
                  
ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கையை உதாரணமாகக் கொள்வதைப் போல ஓர் எடுத்துக் காட்டைப் பார்ப்போம் கேரளாவில் திருவனந்தபுரம் வழுதைக்காடுப் பகுதியைச் சேர்ந்தவர் ராமதாஸ். புற்று நோய் முற்றிய நிலையில் வாழ்வு எப்போது முடியுமோ என்ற கவலையில் அவரது குடும்பத்தினர் ஆழ்ந்திருந்தனர். இந்நிலையில் ஷியாம் சுந்தர் ஜோஷி - சாந்தா ஜோஷி தம்பதியர் அளித்துவரும் சிமரூபா கஷாயத்தைப் பற்றி ராமதாசும் அவரது மனைவி ஷீலாவும் கேள்விப் பட்டனர். சிமரூபா  கஷாயத்தைத் தொடர்ந்து பருகியதையடுத்து  ராமதாசின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படத் தொடங்கியது. இப்போது அவர் ஏறக்குறைய இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டார்.

               
கீமோதெரபி மற்றும் அலோபதி மருந்துகளும் புற்று நோயின் பாதிப்பைத் தணிக்க உதவின என்ற போதிலும் சிமரூபா கஷாயத்தின் பங்கு குறிப்பிட்டுச் சொல்லத் தக்கது என்று ராமதாசும் ஷீலாவும் ஒருமித்த குரலில் சொல்கின்றனர் .

               
புற்று நோயாளிகளுக்கு சிமரூபா கஷாயம் வரப்பிரசாதம். இந்த மரத்தின் பூர்வீகம் தெற்கு, மத்திய அமெரிக்கா. இது ஒருவகை எண்ணெய் மரம். இந்த மரத்திலிருந்து எடுக்கப் படுகின்ற உணவு எண்ணெய் சமையலுக்குப் பயன்படுத்தலாம். தொடர்ந்து இதை சமையல் எண்ணையாகப் பயன்படுத்தினால்   நோய் குணம் அடைகிறது என்று பயனாளிகள் கருதுகின்றனர்.

                    
சிமரூபா விவரங்கள் ஆங்கிலத்தில் ... இது சுட்டி.<<< 
                    

9.2.13

பாசிட்டிவ் செய்திகள் 3/2/2013 முதல் 9/2/2013 வரை


எங்கள் B+ செய்திகள்.        

- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.

- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.

- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.

- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்.... 

====================================================================

1) 05/02/2013அன்று டிரைவர் பாண்டியன் அவர்கள் அளித்த தகவலைக் கொண்டு கோவையில் அரசு மருத்துவ மனை அருகே ஆதரவற்று இருந்த கண்ணன் என்னும் முதியவர் வயதுசுமார் (65) ஈர நெஞ்சம் அமைப்பால் மாநகராட்சி காப்பகத்தில் சேர்க்கப்பட்டு உள்ளார் .

                         

                                                 ''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]


05/02/2013அன்று டிரைவர் பாண்டியன் அவர்கள் அளித்த தகவலைக் கொண்டு கோவையில் அரசு மருத்துவ மனை அருகே  ஆதரவற்று இருந்த கண்ணன் என்னும் முதியவர் வயதுசுமார் (65) ஈர நெஞ்சம் அமைப்பால் மாநகராட்சி காப்பகத்தில் சேர்க்கப்பட்டு உள்ளார் .
திரு பாண்டியன் அவர்களை ஈர நெஞ்சம் மனதாரப் பாராட்டுவதோடு இன்னும் பல நல்ல செயல்களை அவர் தொடர்ந்து செய்ய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறது.

https://www.facebook.com/eeranenjam
~ நன்றி (138/2013)
ஈரநெஞ்சம்

 .MR.KANNAN AN OLD MAN WAS FOUND BY MR PANDIAN AT Coimbatore on 05/02/13, (A DRIVER),AND HE INFORMED IT TO OUR ORGANIZATION , WE MADE ARRANGEMENTS TO ADMITMR.KANNAN IN TO KOVAI MANAGARATCHI KAPPAGAM, COIMBATORE. Our organization Eera Nenjam appreciates the timely help of Mr. PANDIAN and also seeks the Almighty’s help to do such services in the future.

Thanks(138/2013)
Eera Nenjam

திரு பாண்டியன் அவர்களை ஈர நெஞ்சம் மனதாரப் பாராட்டுவதோடு இன்னும் பல நல்ல செயல்களை அவர் தொடர்ந்து செய்ய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறது. [முக நூலில் திரு ரத்னவேல் Share செய்ததிலிருந்து]

2) ஏற்கெனவே பெங்களுருவில் மாடித் தோட்டம் பற்றிப் படித்திருந்தோம். இப்போது சென்னையில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் இப்படித் தோட்டம் அமைத்துத் தரும் திரு என். மாதவன், சென்னை, கிழக்குக் கடற்கரைச் சாலையில் 'வெங்கடேஸ்வரா நர்சிங்' எனும் பண்ணை வைத்துள்ளார்.

                        


200 சதுர அடி இருந்தால், பூமியில் விவசாயம் செய்வதைப் போல காய்கறித் தோட்டம் அமைத்து அறுவடை செய்யலாம் என்கிறார். [ தினமலர் ]

3) உலகில் உள்ள நீரிழிவு நோயாளர்களிடையே மிகவும் துண்பத்தைத் தரும் ஒரு வகையாக இருந்த இரண்டாம் நிலை நீரிழிற்விற்கான மருத்துவம் இனி முடி திருத்துவதைப் போல பத்தோடு பதினொன்றான விஷயமாக ஒரு கண்டுபிடிப்பு உதவியுள்ளது.
                                        

                              தமிழரின் புதிய சாதனையை போற்றுவோம் ! 

உலகில் உள்ள நீரிழிவு நோயாளர்களிடையே மிகவும் துண்பத்தைத் தரும் ஒரு வகையாக இருந்த இரண்டாம் நிலை நீரிழிற்விற்கான மருத்துவம் இனி முடி திருத்துவதைப் போல பத்தோடு பதினொன்றான விடயமாக ஒரு கண்டுபிடிப்பு உதவியுள்ளது.
மௌன்ட் சினாய் வைத்தியசாலையின் ஆராய்ச்சிப் பிரிவின் வைத்தியர் ரவி ரட்னாகரன் இதற்கான சிகிச்சையை மிகவும் இலகுவாக்கி ஒரு இன்சுலின் மூலம் ஆரம்பத்திலேயே தடுப்பதற்கான கண்டுபிடிப்பொன்றை மேற்கொண்டிருக்கிறார்.

இந்த சிகிச்சை முறைமை அடுத்த மாதத்திலிருந்து கற்கை முறையாக அறிமுகப்படுத்தப்படும்.

இந்த இன்சுலினின் மூலம் நோயாளி ஒரு ஊசியோடே ஒரு மாத காலத்திற்கு தாக்குப்பிடிக்கக் கூடியதாக அவரது கலங்கள் தேவையான சுரப்புக்களை மேற்கொண்டு நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் என்றும் நாளாந்தம் இதற்கான இன்சுலினை ஊசியூடாகப் பெற்று வந்தவர்கள் இனி மாதம் ஒரு தடவை ஏதோ முடி திருத்துவது போல இந்த ஊசியை சர்வ சாதாரணமாக உட்செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நீரிழிவு நோய்-2 பெரியவர்களை மாத்திரமல்ல பல சிறியவர்களைக்கூட தனது பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

மௌன்ட் சினாய் வைத்தியசாலையின் ஆராய்ச்சிப் பிரிவின் வைத்தியர் ரவி ரத்னாகரன் இதற்கான சிகிச்சையை மிகவும் இலகுவாக்கி ஒரு இன்சுலின் மூலம் ஆரம்பத்திலேயே தடுப்பதற்கான கண்டுபிடிப்பொன்றை மேற்கொண்டிருக்கிறார். இந்த சிகிச்சை முறைமை அடுத்த மாதத்திலிருந்து கற்கை முறையாக அறிமுகப்படுத்தப்படும்.

இந்த இன்சுலினின் மூலம் நோயாளி ஒரு ஊசியோடே ஒரு மாத காலத்திற்கு தாக்குப்பிடிக்கக் கூடியதாக அவரது கலங்கள் தேவையான சுரப்புக்களை மேற்கொண்டு நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் என்றும் நாளாந்தம் இதற்கான இன்சுலினை ஊசியூடாகப் பெற்று வந்தவர்கள் இனி மாதம் ஒரு தடவை ஏதோ முடி திருத்துவது போல இந்த ஊசியை சர்வ சாதாரணமாக உட்செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நீரிழிவு நோய்-2 பெரியவர்களை மாத்திரமல்ல பல சிறியவர்களைக்கூட தனது பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
[ முக நூல் ]

4)  228 தலித் குடும்பத்தை தத்தெடுத்து உணவு, கல்வி என, அனைத்தையும் வழங்கும் மயிலானந்தம்: ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியின், சாமிநாதபுரத்தை சேர்ந்தவன். மயில்சாமிக் கவுண்டர் என்ற என் பெயரை, ஜாதியை நீக்கி, மயிலானந்தம் என, மாற்றினேன்.
                                            இங்கு அனைத்தும் இலவசம்!

228 தலித் குடும்பத்தை தத்தெடுத்து உணவு, கல்வி என, அனைத்தையும் வழங்கும் மயிலானந்தம்: ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியின், சாமிநாதபுரத்தை சேர்ந்தவன். மயில்சாமிக் கவுண்டர் என்ற என் பெயரை, ஜாதியை நீக்கி, மயிலானந்தம் என, மாற்றினேன். 

ஆரம்பத்தில் சிறு மளிகைக் கடையாக ஆரம்பித்து, இன்று மாட்டுத் தீவனம், எண்ணெய் உற்பத்தியில் முன்னணியிலுள்ள, எஸ்.கே.எம்., நிறுவனத்தை உருவாக்கி, ஒரு தொழில் அதிபராக உள்ளேன்.தொழிலில் மற்றவரால் வளர்ச்சியடைந்து உயர்ந்த நான், பிற்பட்ட சமுதாயமாக இருக்கும் தலித்களுக்கு உதவ,பள்ளிக்கூடம் கட்ட நினைத்தேன். 

முன்னாள் ஆளுநர் சி.சுப்ரமணியம், "தலித் மாணவர்கள், மற்ற ஜாதி மாணவர்களோடு படித்தால் தான், போட்டியிட்டு வெல்லலாம். எனவே மற்ற உதவிகளை செய்' என, ஆலோசனை கூறினார்.

என் ஊரில் உள்ள, இரண்டு தலித் காலனிகளின் மொத்தம், 228 குடும்பத்தை தத்தெடுத்து, எஸ்.கே. எம்., சேவை மையம் மூலம், அனைத்து உதவிகளையும் இலவசமாக, 1999ம் ஆண்டு முதல் செய்து வருகிறேன்.

 முதியவர்களுக்கு, காலை, 7:00 மணிக்கு, தேநீர், 11:00 மணிக்கு மதிய உணவு, மாலை 6:00 மணிக்கு இரவு உணவு என, தினமும் வழங்கி வருகிறேன். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு காலை, 8:00 மணிக்கு, மேசை வசதியுடன் கூடிய உணவறையில் சிற்றுண்டி, பள்ளிக்கு பாதுகாப்பாக சென்று வர இரண்டு வாகனம், பள்ளி முடிந்து வந்ததும், உணவு, விளையாட்டு, இரவு, 9:00 மணி வரை, படிக்க பயிற்சி வகுப்புகளும் உண்டு. 

கணினி, ஆங்கிலம், இசை, நடனத்தில் சிறப்பு பயிற்சியும் அளிக்கிறோம்.பள்ளிக் கட்டணம், நோட்டு புத்தகம், சீருடை வழங்குகிறோம்.இதுவரை, 25 பேர் பட்டப்படிப்பு முடித்துள்ளனர். இன்னும், 10 ஆண்டுகளில் அனைத்து குழந்தைகளும் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் என்பதே, சேவை மையத்தின் நோக்கம்.
ஆரம்பத்தில் சிறு மளிகைக் கடையாக ஆரம்பித்து, இன்று மாட்டுத் தீவனம், எண்ணெய் உற்பத்தியில் முன்னணியிலுள்ள, எஸ்.கே.எம்., நிறுவனத்தை உருவாக்கி, ஒரு தொழில் அதிபராக உள்ளேன்.தொழிலில் மற்றவரால் வளர்ச்சியடைந்து உயர்ந்த நான், பிற்பட்ட சமுதாயமாக இருக்கும் தலித்களுக்கு உதவ,பள்ளிக்கூடம் கட்ட நினைத்தேன்.

முன்னாள் ஆளுநர் சி.சுப்ரமணியம், "தலித் மாணவர்கள், மற்ற ஜாதி மாணவர்களோடு படித்தால் தான், போட்டியிட்டு வெல்லலாம். எனவே மற்ற உதவிகளை செய்' என, ஆலோசனை கூறினார். 

என் ஊரில் உள்ள, இரண்டு தலித் காலனிகளின் மொத்தம், 228 குடும்பத்தை தத்தெடுத்து, எஸ்.கே. எம்., சேவை மையம் மூலம், அனைத்து உதவிகளையும் இலவசமாக, 1999ம் ஆண்டு முதல் செய்து வருகிறேன். 

முதியவர்களுக்கு, காலை, 7:00 மணிக்கு, தேநீர், 11:00 மணிக்கு மதிய உணவு, மாலை 6:00 மணிக்கு இரவு உணவு என, தினமும் வழங்கி வருகிறேன். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு காலை, 8:00 மணிக்கு, மேசை வசதியுடன் கூடிய உணவறையில் சிற்றுண்டி, பள்ளிக்கு பாதுகாப்பாக சென்று வர இரண்டு வாகனம், பள்ளி முடிந்து வந்ததும், உணவு, விளையாட்டு, இரவு, 9:00 மணி வரை, படிக்க பயிற்சி வகுப்புகளும் உண்டு.  கணினி, ஆங்கிலம், இசை, நடனத்தில் சிறப்பு பயிற்சியும் அளிக்கிறோம்.பள்ளிக் கட்டணம், நோட்டு புத்தகம், சீருடை வழங்குகிறோம்.இதுவரை, 25 பேர் பட்டப்படிப்பு முடித்துள்ளனர். இன்னும், 10 ஆண்டுகளில் அனைத்து குழந்தைகளும் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் என்பதே, சேவை மையத்தின் நோக்கம். [ தினமலர் ]

5) கிரிக்கெட் உலகில் நமது ஆண் வீரர்கள் உலக சாதனையோ, உள்ளூர் சாதனையோ செய்தால் நாம் அவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறோம். அரசு முதல் விளம்பர நிறுவனங்கள் என எல்லா தரப்பினரும் பாராட்டும், பரிசும் அறிவிக்கிறார்கள். ஆனால் இந்திய கிரிக்கெட்டில் பெண்கள் அணி என ஒன்று இருப்பதே நம்மில் சிலர்? பலர் அறியாமல் இருப்போம். இந்திய பெண்கள் அணியில் ஒருவர் வரலாற்று சாதனை படைத்துள்ளார். தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி வெஸ்ட்இண்டிஸ் அணிக் கெதிராக விளையாடி வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்தப் போட்டியில் நமது பெண்கள் அணியின் திருஷ் காமினி முருகேசன் என்ற வீரர் ஓர் வரலாறு படைத்துள்ளார்.

                                       

துவக்க வீரராக களமிறங்கி நூறு ரன்கள் அடித்து பெண்கள் உலக கோப்பை இந்திய வரலாற்றில் சதம் அடித்த முதல் பெண் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இச் சாதனை படைத்த இவருக்கு நமது அரசும், இந்திய கிரிக்கெட் அமைப்பும் போதிய பாராட்டோ, பரிசோ அறிவிக்கவில்லை என ஒரு தின பத்திரிக்கையில் வாசித்த போது நாம் எந்த அளவு பெண்கள் கிரிக்கெட் மீது அக்கறை வைத்துள்ளோம் என்பது தெரிய வருகிறது.

திருஷ் காமினி பற்றி:

சென்னையில் வாழும் இவர், தனது ஒன்பது வயதில் கிரிக்கெட் விளையாட துவங்கினார். தனது 16 வயதில் ஆசிய கோப்பை (2006) தொடரில் அறிமுகமானார். பி.சி.சி.ஐ., சார்பில் வழங்கப்படும் சிறந்த "ஜூனியர்' வீராங்கனை (2007-08), சிறந்த "சீனியர்' வீராங்கனை (2009-10) விருதுகளை வென்றுள்ளார்.[ முக நூல் }

6) சற்று மாற்றி யோசித்தால், சுற்றுச்சூழலை அச்சுறுத்தும் பிளாஸ்டிக் கழிவுகளை, கட்டடங்கள் கட்ட பயன்படுத்த முடியும் என, "சமர்ப்பண்' தொண்டுஅமைப்பு நிரூபித்து உள்ளது."கோடை காலத்தில் குளிர்ச்சியும்,குளிர் காலத்தில் வெப்பமும் தரக்கூடியபசுமை வீடுகளை, பிளாஸ்டிக்கழிவுகளை வைத்து உருவாக்க முடியும்' என, இந்த அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.

செங்குன்றத்திற்கு அருகே, பம்மதுகுளம்ஊராட்சிக்கு உட்பட்ட, சரத்கண்டிகை கிராமத்தில், "சமர்ப்பண்' தொண்டு நிறுவனத்தின் பசுமைவீடு திட்ட மையம் உள்ளது. இங்கு, இரண்டுஏக்கர் இடத்தில் மாதிரி பசுமை வீடு உருவாகிவருகிறது.முதல் கட்டமாக, இந்த தொழில்நுட்பத்தில்,ஒரு ஜெனரேட்டர் மேடை அமைக்கப்பட்டுஉள்ளது. இது முற்றிலும் பழைய பிளாஸ்டிக்பாட்டில்களால் ஆனது!சுற்றுச்சூழலின் எதிரியாக உருவெடுத்திருக்கும்பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம், பசுமைவீடுகளை கட்ட முடியும் என்பதை, டில்லியில்நிரூபித்து, சென்னைக்கு அருகே அத்திட்டத்தைசெயல்படுத்தும் முயற்சியில், "சமர்ப்பண்' ஈடுபட்டுள்ளது.
                                    "மாற்றி யோசித்தால்' பிளாஸ்டிக் கழிவு "பசுமை' வீடாகும்!

சற்று மாற்றி யோசித்தால், சுற்றுச்சூழலை அச்சுறுத்தும் பிளாஸ்டிக் கழிவுகளை, கட்டடங்கள் கட்ட பயன்படுத்த முடியும் என, "சமர்ப்பண்' தொண்டுஅமைப்பு நிரூபித்து உள்ளது."கோடை காலத்தில் குளிர்ச்சியும்,குளிர் காலத்தில் வெப்பமும் தரக்கூடியபசுமை வீடுகளை, பிளாஸ்டிக்கழிவுகளை வைத்து உருவாக்க முடியும்' என, இந்த அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.

செங்குன்றத்திற்கு அருகே, பம்மதுகுளம்ஊராட்சிக்கு உட்பட்ட, சரத்கண்டிகை கிராமத்தில், "சமர்ப்பண்' தொண்டு நிறுவனத்தின் பசுமைவீடு திட்ட மையம் உள்ளது. இங்கு, இரண்டுஏக்கர் இடத்தில் மாதிரி பசுமை வீடு உருவாகிவருகிறது.முதல் கட்டமாக, இந்த தொழில்நுட்பத்தில்,ஒரு ஜெனரேட்டர் மேடை அமைக்கப்பட்டுஉள்ளது. இது முற்றிலும் பழைய பிளாஸ்டிக்பாட்டில்களால் ஆனது!சுற்றுச்சூழலின் எதிரியாக உருவெடுத்திருக்கும்பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம், பசுமைவீடுகளை கட்ட முடியும் என்பதை, டில்லியில்நிரூபித்து, சென்னைக்கு அருகே அத்திட்டத்தைசெயல்படுத்தும் முயற்சியில், "சமர்ப்பண்'ஈடுபட்டுள்ளது.

இது குறித்து, திட்ட ஒருங்கிணைப்பாளர்,ரோமின் கூறியதாவது:

பிளாஸ்டிக் பாட்டில்களால் உருவாக்கப்படும்பசுமை வீடுகள், மிகவும் பாதுகாப்பானவை.1,560 ஆண்டுகள் வரை சேதாரமின்றி உறுதியாகஇருக்கும். இதற்கு தேவையான, காலி பிளாஸ்டிக்பாட்டில்கள், சென்னையில் உள்ள நட்சத்திரஓட்டல்கள், திருமண மண்டபங்கள், பொதுவிழாக்கள் நடைபெறும் இடங்களில் இருந்து,ஒரு மாதத்தில், ஏழு லட்சம் காலி பாட்டில்களைபெற்றோம்.அவற்றை அளவுக்கு ஏற்ப பிரித்து; சவுடு மண்,சாலையோரங்களில் குவிந்து கிடக்கும் வீணானமண் ஆகியவற்றை கொண்டு நிரப்பி, பாட்டிலைஉறுதியாக்கி, கட்டட பணிக்கு பயன்படுத்துகிறோம்.பாட்டிலின் தட்டையான பின்பகுதியைசுவரின் வெளிப்புறம் மற்றும் தரை தளத்தில்இருப்பது போல் பயன்படுத்தினால், "சம நிலையில்' இருக்கும். மூடியிருக்கும் மேல்பகுதி"மாற்றி யோசித்தால்' பிளாஸ்டிக் கழிவு "பசுமை' வீடாகும்!உட்புறத்தில் இருக்கும். இதனால், சுவரை,சிமென்ட் மூலம் எளிதாக பூச முடியும்.செங்கல் வாங்கும் செலவை தவிர்க்கலாம்.அதே போன்று, சிமென்ட் வாங்கும் செலவும் பாதியாக குறையும். 

மேற்கண்ட வீடு,மழை மற்றும் குளிர் காலத்தில் கதகதப்பாகவும், கடுமையான கோடை காலத்தில்குளிர்ச்சியாகவும் இருக்கும். இது போன்றபசுமை வீட்டை, டில்லியில், பள்ளி கட்டடமாக கட்டி கொடுத்துள்ளோம். 15 அடிநீளம், 12 அடி அகலம் கொண்ட வீடு கட்ட,30 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவாகும்.இங்கு, 2,400 சதுர அடி பரப்பளவில் தரைதளத்துடன், கூடுதலாக ஒரு மேல் தளமும்கொண்ட கட்டடத்தை கட்ட உள்ளோம்.அதற்கான தூண் மேல் தளத்தின் அழுத்தத்தை தாங்குமா என்பதை அறிய ஐ.ஐ.டி.,மூலம் பரிசோதனை மேற்கொள்ளப் பட்டு உள்ளது. 

எதிர்காலத்தில் இது போன்ற பசுமை வீடுகளின் மேல் தளத்தில், சூரிய மின் சக்தி உருவாக்கும் வகையில் கூரைகள் அமைக்கும்திட்டமும் பரிசீலனையில் உள்ளது.மேலும், பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம்,பள்ளி, கல்லூரி, மருத்துவமனை சுற்றுச்சுவர், நடைமேடைகள் மற்றும் பொதுக்கழிப்பிடங்கள் கட்டலாம்.இவ்வாறு அவர் கூறினார்.                                        
இது குறித்து, திட்ட ஒருங்கிணைப்பாளர்,ரோமின் கூறியதாவது: 

பிளாஸ்டிக் பாட்டில்களால் உருவாக்கப்படும்பசுமை வீடுகள், மிகவும் பாதுகாப்பானவை.1,560 ஆண்டுகள் வரை சேதாரமின்றி உறுதியாகஇருக்கும். இதற்கு தேவையான, காலி பிளாஸ்டிக்பாட்டில்கள், சென்னையில் உள்ள நட்சத்திரஓட்டல்கள், திருமண மண்டபங்கள், பொதுவிழாக்கள் நடைபெறும் இடங்களில் இருந்து,ஒரு மாதத்தில், ஏழு லட்சம் காலி பாட்டில்களைபெற்றோம்.அவற்றை அளவுக்கு ஏற்ப பிரித்து; சவுடு மண்,சாலையோரங்களில் குவிந்து கிடக்கும் வீணானமண் ஆகியவற்றை கொண்டு நிரப்பி, பாட்டிலைஉறுதியாக்கி, கட்டட பணிக்கு பயன்படுத்துகிறோம்.பாட்டிலின் தட்டையான பின்பகுதியைசுவரின் வெளிப்புறம் மற்றும் தரை தளத்தில்இருப்பது போல் பயன்படுத்தினால், "சம நிலையில்' இருக்கும். மூடியிருக்கும் மேல்பகுதி"மாற்றி யோசித்தால்' பிளாஸ்டிக் கழிவு "பசுமை' வீடாகும்!உட்புறத்தில் இருக்கும். இதனால், சுவரை,சிமென்ட் மூலம் எளிதாக பூச முடியும்.செங்கல் வாங்கும் செலவை தவிர்க்கலாம்.அதே போன்று, சிமென்ட் வாங்கும் செலவும் பாதியாக குறையும்.   

மேற்கண்ட வீடு,மழை மற்றும் குளிர் காலத்தில் கதகதப்பாகவும், கடுமையான கோடை காலத்தில்குளிர்ச்சியாகவும் இருக்கும். இது போன்றபசுமை வீட்டை, டில்லியில், பள்ளி கட்டடமாக கட்டி கொடுத்துள்ளோம். 15 அடிநீளம், 12 அடி அகலம் கொண்ட வீடு கட்ட,30 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவாகும்.இங்கு, 2,400 சதுர அடி பரப்பளவில் தரைதளத்துடன், கூடுதலாக ஒரு மேல் தளமும்கொண்ட கட்டடத்தை கட்ட உள்ளோம்.அதற்கான தூண் மேல் தளத்தின் அழுத்தத்தை தாங்குமா என்பதை அறிய ஐ.ஐ.டி.,மூலம் பரிசோதனை மேற்கொள்ளப் பட்டு உள்ளது.   

எதிர்காலத்தில் இது போன்ற பசுமை வீடுகளின் மேல் தளத்தில், சூரிய மின் சக்தி உருவாக்கும் வகையில் கூரைகள் அமைக்கும்திட்டமும் பரிசீலனையில் உள்ளது.மேலும், பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம்,பள்ளி, கல்லூரி, மருத்துவமனை சுற்றுச்சுவர், நடைமேடைகள் மற்றும் பொதுக்கழிப்பிடங்கள் கட்டலாம்.

7) தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் குறித்து, சிறுவன் ஒருவன் குறித்த நேரத்தில் தகவல் தெரிவித்ததால், சப்தகிரி விரைவு ரயில் தண்டவாளத்தில் விபத்தில் இருந்து தப்பியது. சப்தகிரி விரைவு ரயில், நேற்று மதியம், சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு சென்றது. ஆந்திர எல்லையை ஒட்டி உள்ள, பொன்பாடி - தடுக்குபேட்டை ரயில் நிலையகளுங்களுக்கு இடையே, மாலை, 4:00 மணிக்கு வந்து கொண்டிருந்தது.சப்தகிரி விரைவு ரயில் வருவதற்கு சில நிமிடங்கள் முன்பாக, அவ்வழியாக சரக்கு ரயில் ஒன்று சென்றது. அந்த ரயிலின் கடைசி பெட்டி, மேற்கண்ட இரு ரயில் நிலையங்களுக்கு இடையே கடந்து சென்றதும், தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு பயங்கர சத்தம் கேட்டது.

இதை அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிரஞ்சீவி என்ற சிறுவன் கவனித்தான். உடனே, அருகில் இருந்த, ரயில்வே கடவுபாதையில், பணியில் இருந்த ஊழியரிடம், விஷயத்தைக் கூறினான். அவர் இதுகுறித்து, ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.அவர்கள் துரிதமாக செயல்பட்டு, அவ்வழியாக வந்து கொண்டிருந்த சப்தகிரி விரைவு ரயிலை நிறுத்தினர். தகவல் அறிந்து, ரயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து, தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்ட இடத்தை சரி செய்தனர்.

இதையடுத்து, சப்தகிரி ரயில் ஒன்றரை மணி நேரம் காலதாமதமாக புறப்பட்டு சென்றது. சிறுவன் சமயோசித புத்தியால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ரயில்வே அதிகாரிகளும், பயணிகளும் சிறுவனை பாராட்டினர்.

8) சூரியனின் திசைமாற்றத்திற்கு ஏற்ப, சூரியனை நோக்கி தானாக நகரும், சோலார் பேனல்களை தயாரித்த, முரளி: மாற்று எரிபொருளுக்கான புதிய கண்டுபிடிப்புகள் அதிகரித்தாலும், மக்களின் கவனத்தை சரியாக ஈர்ப்பதில்லை. சூரியனின் வெப்பத்தை, சோலார் பேனல்கள் மின்சாரமாக மாற்றி, மின்கலன்களில் சேமிக்கின்றன. சோலார் பேனல்கள், மதிய நேரத்தை தவிர்த்து மற்ற எல்லா நேரங்களிலும், அதிகபட்ச மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாது. இந்நிலையை மாற்றி, சூரியன் உமிழும் வெப்ப கதிர்களின் திசைக்கேற்ப, சூரியனை நோக்கி சோலார் பேனல்கள் திரும்பும் தொழில் நுட்பத்தை கண்டுபிடித்ததன் மூலம், எப்போதுமே அதிகபட்ச மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம்.இதற்கு, தரங்கம்பாடியில் அமைந்துள்ள, "ஹைடெக் ரிசர்ச் பவுண்டேஷன்' உதவியது.
                                       அதிகபட்ச மின் உற்பத்தி!

சூரியனின் திசைமாற்றத்திற்கு ஏற்ப, சூரியனை நோக்கி தானாக நகரும், சோலார் பேனல்களை தயாரித்த, முரளி: மாற்று எரிபொருளுக்கான புதிய கண்டுபிடிப்புகள் அதிகரித்தாலும், மக்களின் கவனத்தை சரியாக ஈர்ப்பதில்லை. 

சூரியனின் வெப்பத்தை, சோலார் பேனல்கள் மின்சாரமாக மாற்றி, மின்கலன்களில் சேமிக்கின்றன. சோலார் பேனல்கள், மதிய நேரத்தை தவிர்த்து மற்ற எல்லா நேரங்களிலும், அதிகபட்ச மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாது. இந்நிலையை மாற்றி, சூரியன் உமிழும் வெப்ப கதிர்களின் திசைக்கேற்ப, சூரியனை நோக்கி சோலார் பேனல்கள் திரும்பும் தொழில் நுட்பத்தை கண்டுபிடித்ததன் மூலம், எப்போதுமே அதிகபட்ச மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம்.இதற்கு, தரங்கம்பாடியில் அமைந்துள்ள, "ஹைடெக் ரிசர்ச் பவுண்டேஷன்' உதவியது.

சூரிய கதிர்கள், செங்குத்தாக விழும் நேரமான நண்பகல், 12:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரை, சோலார் பேனல்கள், 180 டிகிரியில் படுக்கை வசமாக இருக்கும்போது, அதிகபட்சமான, 100 சதவீதம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும். சூரிய கதிர்கள் சாய்வாக விழும் மற்ற நேரங்களில், 180 டிகிரியில், படுக்கை வசமாக இருக்கும் பேனல்கள், 85 சதவீதத்திற்கும் குறைந்த அளவில் மட்டுமே, மின்சாரத்தை உற்பத்தி செய்ய இயலும். 

சூரிய கதிர்கள் விழும் கால நேரம் கணக்கிடப்பட்டு, அந்த தகவல்கள், நேரம் கணக்கிடும் கருவியில் பதியப்பட்டு, கருவியின் கட்டளைக்கு ஏற்ப, நான்கு சக்கர வாகனங்களை தூக்கப் பயன்படும், ஜாக்கி மூலம், சூரிய கதிர்கள் பூமியில் படும் திசைக்கு ஏற்ப எப்போதுமே, 100 சதவீதம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திசைக்கு, சோலார் பேனல்கள் திரும்புகின்றன. மாலை சூரியன் மறைந்ததும், மீண்டும் தன்னுடைய பழைய நிலைக்கே பேனல்கள் திரும்பிவிடும். 

இவ்வகை தொழில் நுட்பத்தை மேம்படுத்த கூடுதலாக, 3,000 ரூபாய் மட்டுமே செலவாகும்.                                                          
சூரிய கதிர்கள், செங்குத்தாக விழும் நேரமான நண்பகல், 12:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரை, சோலார் பேனல்கள், 180 டிகிரியில் படுக்கை வசமாக இருக்கும்போது, அதிகபட்சமான, 100 சதவீதம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும். சூரிய கதிர்கள் சாய்வாக விழும் மற்ற நேரங்களில், 180 டிகிரியில், படுக்கை வசமாக இருக்கும் பேனல்கள், 85 சதவீதத்திற்கும் குறைந்த அளவில் மட்டுமே, மின்சாரத்தை உற்பத்தி செய்ய இயலும் 
 
சூரிய கதிர்கள் விழும் கால நேரம் கணக்கிடப்பட்டு, அந்த தகவல்கள், நேரம் கணக்கிடும் கருவியில் பதியப்பட்டு, கருவியின் கட்டளைக்கு ஏற்ப, நான்கு சக்கர வாகனங்களை தூக்கப் பயன்படும், ஜாக்கி மூலம், சூரிய கதிர்கள் பூமியில் படும் திசைக்கு ஏற்ப எப்போதுமே, 100 சதவீதம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திசைக்கு, சோலார் பேனல்கள் திரும்புகின்றன. மாலை சூரியன் மறைந்ததும், மீண்டும் தன்னுடைய பழைய நிலைக்கே பேனல்கள் திரும்பிவிடும்.  
 
இவ்வகை தொழில் நுட்பத்தை மேம்படுத்த கூடுதலாக, 3,000 ரூபாய் மட்டுமே செலவாகும். [ தினமலர் ]

9) போபால் விஷவாயு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி ஒருவர், தனது கடின உழைப்பாலும், விடாமுயற்சியாலும் டாக்டராகி, தற்போது அச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி புரிந்து வருகிறார்.                                                     
                               விஷவாயு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி; டாக்டராகி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம்

போபால் விஷவாயு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி ஒருவர், தனது கடின உழைப்பாலும், விடாமுயற்சியாலும் டாக்டராகி, தற்போது அச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி புரிந்து வருகிறார்.

ம.பி., மாநில தலைநகர் போபாலில் கடந்த 1984ம் ஆண்டு யூனியர் கார்பைடு நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக விஷவாயு கசிவு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஏராளமானோர் பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்கு உள்ளாகினர். அவ்வாறு இந்த கோர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 17 வயது மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர், தற்போது தனது கடின உழைப்பாலும், விடா முயற்சியாலும் ஒரு டாக்டராக உயர்ந்து நிற்கிறார். அதோடு மட்டுமல்லாமல், தன்னைப் போல் அந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவி செய்து வருகிறார்.

யூனியன் கார்பைடு ஆலை அமைந்துள்ள பகுதிக்கு மிக அருகில் வசித்து வந்தது முகமது அலி குவாய்சர் குடும்பம். 17 வயதான குவாய்சர் ஒரு மாற்றுத்திறனாளி மாணவர். போபால் விஷவாயு சம்பவம் நடந்த போது அவரது முழு குடும்பமும் இதில் பாதிக்கப்பட்டது. குவாய்சரின் தாய் இந்த சம்பவத்தில் இறந்து போனார். மற்றவர்கள் சிகிச்சை அளிக்க முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டனர். மாற்றுத்திறனாளி என்ற காரணத்தால் குவாய்சர் முன்னுரிமை கொடுத்து மீட்கப்பட்டார். தனது தாய் இந்த சம்பவத்தில் இறந்துவிட்டார் என்பதையறிந்த குவாய்சர், தான் ஒரு டாக்டராகி தன்னைப் போல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என தீர்மானித்தார்.

எனினும் அவருக்கு டாக்டர் படிப்பு அவ்வளவு எளிதாக இருக்க வில்லை. இலவசமாக மருத்துவம் படிப்பதற்காக நடத்தப்படும் தேர்வில் இரண்டு முறை தோல்விடைந்த அவர், மூன்றாவது முயற்சியில் வெற்றி பெற்றார். மாற்றுத்திறனாளிகளுக்கு என தனி கோட்டா இல்லாத நிலையில், பொதுப்பிரிவில் அவர் இந்த சாதனையை செய்துள்ளார். பின்னர் எம்.பி.பி.எஸ்., முடித்த குவாய்சர் முதலில் ஒரு அரசு மருத்துவமனையில் பணிபுரிந்தார். பின்னர் இங்கு பணிபுரிந்தால் தன்னால் விஷவாயு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய இயலாது எனக்கருதி, அப்பதவியை ராஜினாமா செய்து விட்டு, விஷவாயு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் சம்பாவனா டிரஸ்ட் மருத்துவமனையில் பணிக்கு சேர்ந்தார்.

"நீங்கள் பணம் தான் வேண்டும் என விரும்பினால் அது உங்களுக்குள் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தும். ஆனால் மனிதர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என விரும்பினால் பணம் ஒரு விஷயமே இல்லை. அதனால் தான் பணம் அதிகம் வரும் அரசு டாக்டர் வேலையை விட்டு விட்டு விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக இங்கு பணிபுரிகிறேன்" என்கிறார் முகமது அலி குவாய்சர்.
ம.பி., மாநில தலைநகர் போபாலில் கடந்த 1984ம் ஆண்டு யூனியன் கார்பைடு நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக விஷவாயு கசிவு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஏராளமானோர் பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்கு உள்ளாகினர். அவ்வாறு இந்த கோர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 17 வயது மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர்,  தற்போது தனது கடின உழைப்பாலும், விடா முயற்சியாலும் ஒரு டாக்டராக உயர்ந்து நிற்கிறார். அதோடு மட்டுமல்லாமல், தன்னைப் போல் அந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவி செய்து வருகிறார்.

யூனியன் கார்பைடு ஆலை அமைந்துள்ள பகுதிக்கு மிக அருகில் வசித்து வந்தது முகமது அலி குவாய்சர் குடும்பம். 17 வயதான குவாய்சர் ஒரு மாற்றுத்திறனாளி மாணவர். போபால் விஷவாயு சம்பவம் நடந்த போது அவரது முழு குடும்பமும் இதில் பாதிக்கப்பட்டது. குவாய்சரின் தாய் இந்த சம்பவத்தில் இறந்து போனார். மற்றவர்கள் சிகிச்சை அளிக்க முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டனர். மாற்றுத்திறனாளி என்ற காரணத்தால் குவாய்சர் முன்னுரிமை கொடுத்து மீட்கப்பட்டார். தனது தாய் இந்த சம்பவத்தில் இறந்துவிட்டார் என்பதையறிந்த குவாய்சர், தான் ஒரு டாக்டராகி தன்னைப் போல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என தீர்மானித்தார்.

எனினும் அவருக்கு டாக்டர் படிப்பு அவ்வளவு எளிதாக இருக்க வில்லை. இலவசமாக மருத்துவம் படிப்பதற்காக நடத்தப்படும் தேர்வில் இரண்டு முறை தோல்விடைந்த அவர், மூன்றாவது முயற்சியில் வெற்றி பெற்றார். மாற்றுத்திறனாளிகளுக்கு என தனி கோட்டா இல்லாத நிலையில், பொதுப்பிரிவில் அவர் இந்த சாதனையை செய்துள்ளார். பின்னர் எம்.பி.பி.எஸ்., முடித்த குவாய்சர் முதலில் ஒரு அரசு மருத்துவமனையில் பணிபுரிந்தார். பின்னர் இங்கு பணிபுரிந்தால் தன்னால் விஷவாயு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய இயலாது எனக்கருதி, அப்பதவியை ராஜினாமா செய்து விட்டு, விஷவாயு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் சம்பாவனா டிரஸ்ட் மருத்துவமனையில் பணிக்கு சேர்ந்தார்.

"நீங்கள் பணம் தான் வேண்டும் என விரும்பினால் அது உங்களுக்குள் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தும். ஆனால் மனிதர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என விரும்பினால் பணம் ஒரு விஷயமே இல்லை. அதனால் தான் பணம் அதிகம் வரும் அரசு டாக்டர் வேலையை விட்டு விட்டு விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக இங்கு பணிபுரிகிறேன்" என்கிறார் முகமது அலி குவாய்சர்.

10) பிரிட்டனில், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு மருத்துவ சேவையில் சிறப்பாக பங்காற்றிய, டாக்டர் கீதா நாகசுப்ரமணியத்துக்கு, அந்நாட்டின் உயரிய, "பிரிட்டிஷ் எம்பயர்' விருது வழங்கப்பட்டுள்ளது. இவர் காரைக்குடியை சேர்ந்தவர்': பிரிட்டனில் உள்ள, "தி டவர் ஹாம்லெட்ஸ் கன்ட்ராசெப்ஷன் அண்டு செக்சுவல் ஹெல்த் சர்வீஸ்' என்ற மருத்துவ பிரிவின் தலைவராக பணிபுரிபவர், தமிழகத்தை சேர்ந்த, கீதா நாகசுப்ரமணியம். காரைக்குடியை சேர்ந்த இவருக்கு, அந்நாட்டில், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு, சிறப்பான மருத்துவ சேவையாற்றியதற்காக, அங்கு வழங்கப்படும் உயரிய கவுரவங்களில் ஒன்றான, "மெம்பர் ஆப் த ஆர்டர் ஆப் த பிரிட்டிஷ் எம்பயர்' விருது வழங்கப்பட்டுள்ளது.

                                              தமிழகத்தை சேர்ந்தவருக்கு பிரிட்டனின் உயரிய விருது

 பிரிட்டனில், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு மருத்துவ சேவையில் சிறப்பாக பங்காற்றிய, டாக்டர் கீதா நாகசுப்ரமணியத்துக்கு, அந்நாட்டின் உயரிய, "பிரிட்டிஷ் எம்பயர்' விருது வழங்கப்பட்டுள்ளது.

காரைக்குடியை சேர்ந்தவர்':

பிரிட்டனில் உள்ள, "தி டவர் ஹாம்லெட்ஸ் கன்ட்ராசெப்ஷன் அண்டு செக்சுவல் ஹெல்த் சர்வீஸ்' என்ற மருத்துவ பிரிவின் தலைவராக பணிபுரிபவர், தமிழகத்தை சேர்ந்த, கீதா நாகசுப்ரமணியம். காரைக்குடியை சேர்ந்த இவருக்கு, அந்நாட்டில், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு, சிறப்பான மருத்துவ சேவையாற்றியதற்காக, அங்கு வழங்கப்படும் உயரிய கவுரவங்களில் ஒன்றான, "மெம்பர் ஆப் த ஆர்டர் ஆப் த பிரிட்டிஷ் எம்பயர்' விருது வழங்கப்பட்டுள்ளது.

நம் நாட்டில் வழங்கப்படும், "பத்மஸ்ரீ' விருதுக்கு நிகரான இந்த அந்தஸ்து, குறிப்பிட்ட துறைகளில், மிக சிறப்பாக பங்காற்றியவர்களை கவுரவிக்கும் வகையில், பிரிட்டனின் அரசால் வழங்கப்படுகிறது. இந்த விருதை பெறும் முதல் தமிழ் பெண் மற்றும் தென் மாநிலத்தை சேர்ந்த பெண் என்ற பெருமையும், இவருக்கு கிடைத்துள்ளது.

http://www.redhotcurry.com/profiles/geetha_nagasubramanian.htm                             

நம் நாட்டில் வழங்கப்படும், "பத்மஸ்ரீ' விருதுக்கு நிகரான இந்த அந்தஸ்து, குறிப்பிட்ட துறைகளில், மிக சிறப்பாக பங்காற்றியவர்களை கவுரவிக்கும் வகையில், பிரிட்டனின் அரசால் வழங்கப்படுகிறது. இந்த விருதை பெறும் முதல் தமிழ் பெண் மற்றும் தென் மாநிலத்தை சேர்ந்த பெண் என்ற பெருமையும், இவருக்கு கிடைத்துள்ளது.

11) வழிதவறி தத்தளித்துக் கொண்டிருந்த வயதான பெண்மணி பற்றி தினமலரில் வந்த செய்தி பார்த்து அவரைத் தவற விட்டுத் தவித்துக் கொண்டிருந்த அவரது இரு பாசமான மகன்களும் அவரை, ஓடோடியும் வந்து அழைத்துச் சென்றனர். (தவித்துக் கொண்டிருந்த பாட்டி படம் முதலில் செய்தித் தாளில் பார்த்தபோது வேண்டுமென்றே தொலைத்து விட்டுச் சென்றிருப்பார்கள் என்று தோன்றியது அந்த என் கணிப்பு தோற்றுப் போனதில் ரொம்ப சந்தோஷம்.)
                               "தினமலர்' செய்தியால் மகன்களுடன் இணைந்த தாய்

வழி தவறி பிரிந்து சென்ற தாயை, சென்னை முழுக்க தேடிக்கொண்டிருந்த மகன்கள், "தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானதை அடுத்து, புழல் பகுதிக்கு நேரில் வந்து, அவரை அழைத்து சென்றனர்.

சென்னை கொரட்டூர் பாலாஜி நகர், சீனிவாசன் தெருவை சேர்ந்தவர்கள் ராஜன், ஜெய்சங்கர். இருவரும், சகோதரர்கள். இவர்களது தாய் முல்லையம்மாள், 60. இவர், கடந்த சில மாதங்களுக்கு முன், புழல் கதிர்வேடு பேருந்து நிறுத்தம் அருகே, வந்து சேர்ந்தார். அன்று முதல், அங்கு வருவோரிடம், "வெற்றிலை வாங்க கடைக்கு வந்து, வழி தவறி இங்கு வந்து விட்டேன். என்னை, என் மகன்களிடம் சேர்த்து வையுங்கள்' என, கேட்டு வந்தார்.

இவர் குறித்த செய்தி, "தினமலர்' நாளிதழில், நேற்று முன்தினம், படத்துடன் வெளியானது. செய்தி மூலம், தாயின் இருப்பிடத்தை அறிந்த மகன்கள், அன்றே, அவரை நேரில் வந்து அழைத்து சென்றனர். மகன்களுடன் இணைந்த அவரை, நேற்று சந்தித்த போது, மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தார். தாயை பிரிந்தது குறித்து, ராஜன், ஜெய்சங்கர் கூறியதாவது:

. "தினமலர்' உதவியால் :

கடந்த, ஆகஸ்ட், 16ம் தேதி பிற்பகலில், வெற்றிலை வாங்க சென்றவர், வீடு திரும்பவில்லை. "பார்வை குறைவு' காரணமாக, புழல் கதிர்வேடு பகுதிக்கு போய் சேர்ந்து இருக்கிறார். நாங்கள், கொரட்டூர் போலீசில் புகார் செய்தோம். அவர்கள், அவரது புகைப்படம் கொண்டு வாருங்கள், நீங்களும் தேடிப்பாருங்கள் என்றனர். எங்களிடம் புகைப்படம் இல்லை. ஆனாலும், சென்னை முழுக்க தேடினோம். இந்நிலையில், "தினமலர்' நாளிதழில், எங்கள் தாயின் படத்துடன் வந்த செய்தியை, சென்னை போரூரில் வசிக்கும் எங்கள் ஊர்க்காரர் பார்த்து, உறவினர் ஒருவருக்கு தகவல் தெரிவித்து உள்ளார். அவர் மூலம், எங்கள் தாயை மீட்டோம். "தினமலர்' உதவியால், ஐந்து மாதங்களுக்கு முன் பிரிந்த எங்கள் உயிர், மீண்டும் கிடைத்துள்ளது என, கண்களில் நீர் பெருக்குடன், நன்றி தெரிவித்தனர்.

சென்னை கொரட்டூர் பாலாஜி நகர், சீனிவாசன் தெருவை சேர்ந்தவர்கள் ராஜன், ஜெய்சங்கர். இருவரும், சகோதரர்கள். இவர்களது தாய் முல்லையம்மாள், 60. இவர், கடந்த சில மாதங்களுக்கு முன், புழல் கதிர்வேடு பேருந்து நிறுத்தம் அருகே, வந்து சேர்ந்தார். அன்று முதல், அங்கு வருவோரிடம், "வெற்றிலை வாங்க கடைக்கு வந்து, வழி தவறி இங்கு வந்து விட்டேன். என்னை, என் மகன்களிடம் சேர்த்து வையுங்கள்' என, கேட்டு வந்தார்.
இவர் குறித்த செய்தி, "தினமலர்' நாளிதழில், நேற்று முன்தினம், படத்துடன் வெளியானது. செய்தி மூலம், தாயின் இருப்பிடத்தை அறிந்த மகன்கள், அன்றே, அவரை நேரில் வந்து அழைத்து சென்றனர். மகன்களுடன் இணைந்த அவரை, நேற்று சந்தித்த போது, மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தார். தாயை பிரிந்தது குறித்து, ராஜன், ஜெய்சங்கர் கூறியதாவது:

  "தினமலர்' உதவியால் :
கடந்த, ஆகஸ்ட், 16 ம் தேதி பிற்பகலில், வெற்றிலை வாங்க சென்றவர், வீடு திரும்பவில்லை. "பார்வை குறைவு' காரணமாக, புழல் கதிர்வேடு பகுதிக்கு போய் சேர்ந்து இருக்கிறார். நாங்கள், கொரட்டூர் போலீசில் புகார் செய்தோம். அவர்கள், அவரது புகைப்படம் கொண்டு வாருங்கள், நீங்களும் தேடிப்பாருங்கள் என்றனர். எங்களிடம் புகைப்படம் இல்லை. ஆனாலும், சென்னை முழுக்க தேடினோம். இந்நிலையில், "தினமலர்' நாளிதழில், எங்கள் தாயின் படத்துடன் வந்த செய்தியை, சென்னை போரூரில் வசிக்கும் எங்கள் ஊர்க்காரர் பார்த்து, உறவினர் ஒருவருக்கு தகவல் தெரிவித்து உள்ளார். அவர் மூலம், எங்கள் தாயை மீட்டோம். "தினமலர்' உதவியால், ஐந்து மாதங்களுக்கு முன் பிரிந்த எங்கள் உயிர், மீண்டும் கிடைத்துள்ளது என, கண்களில் நீர் பெருக்குடன், நன்றி தெரிவித்தனர்.

8.2.13

கொசு புராணம்

               
இந்த பதிவு அனுப்பப்படும் நேரத்திலிருந்து உங்களுக்கு (ஆமாம் சப்ஜெக்ட் என்பதற்கு சரியான தமிழ் வார்த்தை என்ன ?) எடுத்துக் கொண்ட பொருளின் தாக்கம் தெரிய வரலாம்.  
             
 இந்த ஆண்டு பொங்கல் நேரத்தில் இருந்ததை விட இப்பொழுது நிறைய கொசுத் தொல்லை இருக்கிற மாதிரி எங்களுக்குத் தோன்றுகிறது.


                 
வீட்டில் இருக்கும் உறுப்பினர்களுடன் வந்திருந்த விருந்தினர்களையும் கலந்து ஆலோசித்ததில்,   அவரவர்க்குத் தோன்றியதை சொன்னார்கள்.  அவற்றில் மிக அபத்தம் என்பதை நாங்களே விட்டு விட்டோம்.  இங்கு போட்டிக்கு தேர்ந்து எடுப்பதற்காக, நாங்கள் கொடுத்திருக்கும்  பட்டியலிலிருந்து அவை எவ்வளவு அபத்தமாக இருந்திருக்கக் கூடும் என்பதை ஒரு வாறு நீங்கள் ஊகித்துக் கொள்ளலாம். 
            
1) நம் ஊர் படக் கொட்டகையில் விஸ்வரூபம் படம் வெளியிடப் படலாம் என்ற விவரம் தெரிந்தவுடன், பக்கத்தில் இருக்கும் சின்ன ஊர்களிலிருந்து கரும்பு கட்டை கடித்து, மென்று கொண்டு வந்த மக்கள் அங்கங்கு கரும்புத் தோகையும் மென்ற கரும்புமாக குப்பைகளை சேர்த்து விட்டதால், கொசுக்களும் பல்கிப் பெருகி விட்டன.
                
2) அப்படி படம் வெளியிடப்பட்டால், பார்ப்போருக்கு படக் காட்சிகளை விட கொசுக்கடி மட்டுமே நினைவுக்கு வர வேண்டும் என்று யாரோ செய்த சூழ்ச்சி .  
               
3) பொங்கலுக்கு  கோயம்பேடு சந்தைக்கு லாரி லாரியாக வந்த இறங்கிய ஜவ்வந்தி பூக்களை என்ன செய்வது என்று யோசித்த அதிகாரிகள் அவற்றை அரைத்துக் கொசு மருந்தாகத் தெளிக்கப் போய் அதன கொசு விரட்டும் ஆற்றலை விட கொசு ஈர்ப்பு அதிகரித்ததன் விளைவு.  

4) உள்ளாட்சித் தேர்தல்கள் நெருங்கி வரலாம்.
5) புது கொசு மருந்து ஒன்று அறிமுகப படுத்தப் படலாம்.

6) சென்ற முறை தலைவரின் பிறந்த நாளுக்கு மரம் நடுவதற்கு நம் வீட்டு மரக் கிளைகளை வெட்டினார்கள்.  இந்த முறை கொசுக்களின் உதவியுடன்  கொண்டாட்டங்கள் இருக்கலாம் . 

7) உங்கள் பேட்டை குப்பை காண்டிராக்டு முடியப் போகிறது 
8) இப்பொழுது உபயோகத்தில் இருக்கும் மருந்துகளுக்கு கொசுக்கள் பழகிவிட்டன.  அந்த மருந்து தயாரிப்பவர்களே அதில் கொசு உரம் போடுகிறார்கள். கொசு வத்தி எரிந்து முடிந்த உடன் ஒரு மகா வீரியத்துடன் கொசுக்கள் கடிப்பதை கவனித்திருக்கிறீர்களா ?
  
9) பொங்கலுக்கு எல்லோரும் வீடுகளை சுத்தம் செய்து பெயிண்டு அடித்து விட்டதனால் கொசுக்களுக்கு   தாங்கும் இடம் இன்றி இன்றி நம் மேல் படை எடுக்கின்றன 
10) மழை இன்மையால் செடிகள் வாடி விட்டதனால் செடிகளின் சாற்றை உறிஞ்சிய கொசுக்கள் ரத்தம் உறிஞ்சிகளாகி விட்டன 
              
11) பாம்புகள் மற்றும் அவைகளின் இரையாகிய  தவளைகள் பெருகி பிட்டதால், அவை தமக்கு உணவு கிடைத்துக் கொண்டிருக்க கொசுக்களை எதோ ஒரு வழியில் பெருக வகை செய்து விட்டன 
12) டெங்கு ஒழிந்தது என்ற அறிக்கை பார்த்த  எதிரிகள் செய்த சூழ்ச்சி.
13) இவை டெங்கு பரப்பும் கொசுக்கள் அல்ல வேறு மன  நோய்களை உண்டாக்கக் கூடியவை.   கற்பழிப்புக் குற்றங்கள்  பெருகி விட்டதற்கு இதுவே காரணம்.
             
14) கொசுக்கள் பெருகுவதை தடுப்பது பற்றிய ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தவர்களின் அஜாக்கிரதை.  
              
15) பெட்ரோலில் எத்தனால் கலப்பது போல சமையல் எரி வாயுவிலும் சாண எரி வாயு கலப்பதனால் கொசுக்கள் வீட்டுக்குள் ஈர்க்கப் படுகின்றன.
16) வீட்டில் சமையல் காஸ் எரியும் பொழுதே கொசுக்களை அழிக்க முடிந்தால் ........என்ற ஆராய்ச்சியின் ஒரு கட்டம் - அதே முறையில் கொசு வளர்ப்பு !
17) கொசு அடிக்கும் மட்டை விற்பனை அதிகரிப்பு செய்ய முயற்சியோ?
             
18) எங்களை, 'தங்களை'ப் பற்றி ஒரு பதிவெழுத எப்படியாவது செய்துவிட வேண்டும் என்று குரோம்பேட்டை நாற்பத்து நான்காவது வட்ட கொசுக்கள் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றியிருக்குமோ?
      
கொசுக்கள் பெருகியதற்கு என்ன காரணமாக இருக்கும்? வாசகர்களின் கருத்துகளும்  வரவேற்கப் படுகின்றன.
 
 

5.2.13

ஜீவாத்மா, பரமாத்மா

                   
கீழே தந்திருப்பதை நீங்கள் படிக்கும் முன்பு ஒரு செய்தி.  நான் பிரம்ம குமாரி இயக்கத்தில் இருக்கும் நபர் அல்ல. அவர்கள் கொள்கைகளை பரப்புவதில் எனக்கு ஆர்வம் இல்லை.  சிந்தனையைத் தூண்டுவதாக கொஞ்சம் காதில் விழுந்ததை குறிப்பிட ஆசை. அவ்வளவே  இனி மேலே பார்க்கலாம்.
    
தினசரி காலை ஐந்து மணிக்கு பொதிகை தொலைக் காட்சியில் பிரம்ம குமாரிகள் இயக்கத்தை சேர்ந்த ஒரு நிகழ்ச்சி இடம் பெறும்.  பள்ளித் தேர்வு காரணமாக சிலநாட்களாக காணவில்லை.  ஹெட் லைன்ஸ் டுடே தொலைக் காட்சியில் காலை ஆறரை மணிக்கு ஷிவானி என்கிற பெண்மனி இதே பிரம்மகுமாரிகள் அமைப்பைச் சார்ந்தவர் மிக சுவாரசியமான நிகழ்ச்சியை அளிக்கிறார்.
                 
அவர் சொன்னதில் சில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை:
                   
பரமாத்மாவும் ஜீவாத்மாக்களும் தனித் தனியானவை.  இரண்டும் அனாதிகாலமாக இருந்து வருபவை.
                 
பொன் மற்றும் சிவப்பு நிறத்தில் பரந்தாமம் என்ற மேல் உலகு இருக்கிறது.  இதுவே ஜீவாத்மாக்கள் மற்றும் பரமாத்மாவின் உறைவிடம்.  இங்கிருந்து அவ்வப்போது ஜீவாத்மாக்கள் உலகுக்கு வந்து "வாழ்க்கை" யை அனுபவிக்க வருகின்றனர்.  இது மாடியிலிருந்து குழந்தை கீழே விளையாடச் செல்கிறேன் என்று வருவது போன்றது.
                  
உலக வாழ்க்கை ஆரம்பத்தில் உல்லாசமாக இருக்கிறது.  இடையில் சிலருக்கு அலுப்பு, சிலருக்கு காயம், சிலருக்கு வெற்றி, சிலருக்கு தோல்வி என்று பலவகையாக நிகழ்கிறது.
                 
ஆடி அலுத்த, அல்லது ஆடி அடிபட்ட குழந்தைகள் துயருற்று வீட்டுக்கு அம்மாவை நோக்கி செல்வது போல் ஜீவாத்மாக்கள் மேல் உலகம் செல்கின்றன. சிலகாலம் கழிந்ததும் மீண்டும் விளையாட ஆசை மேலிடுவதால் மீண்டும் உலக வாழ்க்கையை நாடி வருகின்றன.
                 
பரந்தாமத்திலிருந்து புதிது புதிதாக ஜீவாத்மாக்கள் பிறப்பெடுத்து வருகிறார்கள்.  உலகின் ஜனத் தொகை அதிகரித்துக் கொண்டே வருவதற்கு இதுவே காரணம்.
                      
'அன்பும் அமைதியும் நிறைந்த பரந்தாமத்தின் இயல்பே எனது இயல்பு' என்று புரிந்து கொண்ட ஜீவர்கள் அமைதியாக வாழ முடியும். இதற்கு வேண்டியது எல்லாம் நல்ல எண்ணங்கள் பால் நாட்டம்தான். இதை "என் உண்மை இயல்பு இது" என்று புரிந்துகொண்ட ஜீவர்கள் எளிதில் சாதிக்க முடியும். 
                
இன்னும் கொஞ்சம் இருக்கிறது.  அதுவும் குறிப்பிட வேண்டுமா என்று சொல்லுங்கள்.