நேற்றைய பதிவின் மூன்று கேள்விகளுக்கு பதில்களை இங்கே பார்ப்போம்.
வினா ஒன்று :
இதைக் கொஞ்சம் கஷ்டமாகவே தேர்ந்தெடுத்தேன்.
முதல் கேள்வியிலேயே சிந்தனை செலுத்தி, அடுத்ததற்குப் போகாமல் இருக்கின்றார்களா அல்லது தெரியாததை விட்டு, தெரிந்த கேள்விகள் பக்கம் நகர்கிறார்களா என்று தெரிந்துகொள்ள ஆவல்.
பெரும்பான்மை வாசகர்கள் மூன்றையும் முயன்றிருக்கிறார்கள்.
முதல் கருத்து உரைத்த ... ஸ்ரீமலையப்பன் போற்றுதலுக்கு உரியவர். மூன்றையும் முயன்று, முதல் ஆளாக தன கருத்தை கூறியிருக்கிறார்.
அவர் கூறிய இரண்டாம் புதிரின் விடை சரியான விடைக்கு மிக அருகாமையில் .
மாதவன் கூறிய 'அனதர் ' பதில் மிகவும் சரி.
அதற்குப் பின் ஆனந்தராஜா விஜயராகவன் (அதாங்க நம்ம ஆவி!) மாதவன் இருவரும் கலக்குக் கலக்கென்று கலக்கியிருக்கிறார்கள். இருவரின் விடாமுயற்சியையும் மனமாரப் பாராட்டுகின்றோம்.
கீதாசா லேட் ஆக வந்ததால் இரண்டாம் புதிரின் சரியான விடையை முதலில் கூறுகின்ற வாய்ப்பை தவறவிட்டார்.
கமெண்ட் மாடரேஷன் இந்தப் புதிர்களுக்கு தேவையில்லை என்றுதான் நான் நினைக்கின்றேன். இது பரிசுப்போட்டி அல்ல.
நெல்லைத்தமிழன், ஹுஸைனம்மா, மாடிப்படி மாது எல்லோரும் முயற்சி செய்துள்ளனர். அவர்களின் ஊக்கத்திற்கு எங்கள் பாராட்டுகள்.
பல கோணங்களிலும் முயன்று பலவகை பதில்களையும் பொருத்திப் பார்த்த எல்லோருக்கும் நூற்றுக்கு நூறு.
வாழ்க வளமுடன்!
சரி சரி இப்போ எங்கள் பதில்கள்.
எப்படி !
1)
A I J Q Y
விளக்கம் : நியூமராலஜி. மேற்கண்ட எல்லா எழுத்துகளுக்கும் , உரிய எண் ஒன்றேதான். (ஒன்று)
எப்புடி !
2) TODAY IS TODAY; TOMORROW IS ANOTHER DAY.
விளக்கம் தேவை இல்லை என்று நினைக்கின்றேன். எல்லோரும் ஏற்கெனவே கூறிவிட்டீர்கள்.
எப்பூடி !
3) K Z R E D.
அட என்னங்க நீங்க எல்லாம்! இவ்வளவு டீ வி விளம்பரங்கள் பார்க்கறீங்க,
Dக்கு முன்னாடி Eவரும் என்று கூடவா தெரியலை?
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்!