11.8.09

Nadi Josiyam One More Surprise.

இதோ ஒரு புத்தம் புது திகைப்பு. நேற்று என் நண்பர் ஒருவர் தன மகளுக்கு நாடி ஜோதிடம் பார்த்ததாகவும் அதில் அவளது திருமணம் மற்றும் வரப்போகும் மாப்பிள்ளை பெயர் எல்லாம் சரியாக கிடைத்ததாக சொல்கிறார்!!  இவ்வளவுக்கும் அவரது மாப்பிள்ளை பெயர் எதோ சுப்பிரமணியன் வெங்கடராமன் என்பது போல வழக்கமாக காணப்படும் பெயர் அல்ல. அறுபடை வீடுடையான் என்பது மாதிரி கொஞ்சம் அபூர்வமாகக் காணப்படும் பெயர்.

Mystery deepens.
yraman

10.8.09

ஏடாகூடம்

* பெண் குளிக்கும்போது எட்டிப் பார்த்தவர் கைது,,,,
"சத்தியமா நான் பொண்ணைப் பார்க்கலீங்க.... குளிக்கற அளவு தண்ணியானு தண்ணியைதாங்கப் பார்த்தேன்.....
* "மெப்ஸ்" கழிவு நீரால் திருநீர்மலை ஏரி நாசம்...
ஒரே "கப்ஸ்" அடிக்குதுன்னு சொல்லுங்க....
* நலத் திட்டங்களைத் தொடர ஆதரியுங்கள்.....தங்கபாலு பேச்சு....
யாருடைய நலன்?
* தம்பி என்று அழைக்கலாம்..... எடியுரப்பா பற்றி கலைஞர் பேச்சு....
கலைஞர் அண்ணா ஆய்ட்டார்னு சொல்லுங்க...
* மின்வாரியம் தனியார் மயமாகும் பணிகள் ஆரம்பம்........
ச்சே...எத்தனை தடவை படித்தாலும் மின்சாரம் மாயமாகும் பணிகள் ஆரம்பம்னே வருது...
* ஹெலிகாப்டர் - விமானம் நடுவானில் மோதல்.....
சிக்னல் வேலை செய்யவில்லையா...
* மாதத்திற்கு ஒரு தேர்தல், வாரத்திற்கு ஒரு தேர்தல் வரும்..... பிரேமலதா பேச்சு.
ஓ...... திட்டம் போட்டாச்சா....

9.8.09

ஞாயிறு-4

 

Nadi Josiyam and Epilogue

நாடி ஜோசியம் குறித்து என் பதிவு தனியே.
அடுத்தது இறந்தவருடன் தொடர்பு.

இங்கும் சில ஆச்சரியங்கள் உண்டு. அவை பற்றிய விபரம் பின்பு.
yraman

Naadi Josiyam Surprises.

என்றும் நமது மனதைக் கவரும் விஷயங்களில் இரண்டு நாடி ஜோசியம், அடுத்தது இறந்தவருடன் தொடர்பு. இதில் எனக்கு நேரடியாக அனுபவம் இல்லை என்றாலும் first hand information  என்பார்களே அது நிறையவே உண்டு. நான் சொல்வது எல்லாம் நடந்தது என்றோ உண்மை என்றோ சொல்லும் நிலையில் நான் இல்லை. ஆனால் மிகவும் நம்பத் தகுந்த நபர்கள் இவற்றை எனக்குச் சொன்னார்கள் என்பதை உறுதி செய்கிறேன்.

முதலில் நாடி ஜோசியம். வெறும் கட்டை விரல் ரேகைப் பதிவை வைத்துக் கொண்டு பிரமிக்கத் தக்க வகையில் கடந்த காலத்தை மட்டும் இன்றி கொஞ்சம் எதிர் காலத்தையும் கணித்து தமக்குச் சொல்லப் பட்டதாக என் நெருங்கிய உறவினர் சொன்னார். ஒரு பௌண்ட் நோட்டில் கவிதை யாக எழுதப் பட்ட ஜோசியங்களை எனக்குக் காட்டினார். நான் பிரமித்து முக்காலும் உண்மை.

இன்னொருவர் Overseas Communication Service ல் வேலை பார்த்த தம் உறவினர் பற்றிய நாடி " கடல் தந்தி விடுதூது பணி புரிவான் " என்று வந்ததாககே கூறி என்னை வியப்பிலாழ்த்தினார்.

மற்றும் ஒருவர் தம் பெயர் செல்வம் என்று எண்ணிக் கொண்டு நாடி பார்த்த பொழுது செல்லம் என்று வந்ததாகவும் பிற்பாடு தம் தாத்தாவிடம் சொன்ன பொழுது உனக்கு செல்லப் பெருமாள் என்று தான் முதலில் பெயர் வைத்தோம் என்று சொன்னதாகவும் கூறி ஆச்சரியப் பட்டார்.

எல்லாம் பாசிடிவ் ஆக சொல்கிறேனே நான் நாடி ஜோசியருக்கு ஏஜென்ட் ஆக இருப்பேனோ என்று எண்ணிவிடாதீர்கள்.  கடைசியாகச் சொல்லும் அதிசயத்தையும் கேளுங்கள்.

என் உறவினர் ஒருவர் பல வேலைகளை பார்த்தபின் இப்போது நாடி ஜோசிய ஏஜென்ட் ஆக இருக்கிறார். அவர் சொன்னது: " எல்லாமே டுபாகூர். சுத்த பிராடு."

ஆக  யாரை நம்புவது ஆண்டவா!
y.raman

8.8.09

GenGap

தலைமுறை இடைவெளி என்பது தற்காலத்தில் ரொம்ப அழுத்தமாக உணரப் படுவதாக எனக்குத் தோன்றுகிறது. நான் இருபது(வயது)களில் இருந்தபோது பெரியவர்களுக்கும் எனக்கும் இடையே பெரிய இடை வெளி இருப்பதாக உணரவில்லை. ஆனால் இப்போது இளைய தலைமுறைக்கும் எனக்கும் ஒரு பெரிய சுவர் இருப்பதாக சில சமயம் தோன்றுகிறது.

இந்த மாற்றத்துக்கு காரணம் என்று எனக்குத் தோன்றுபவை இரண்டு. ஒன்று மகளிர் தைரியமாக வீட்டை விட்டு வெளியில் வந்து வேலை பார்த்து சுயமாக தங்களைத்தாமே பார்த்துக் கொள்ளும் திறன் பெற்று விட்டார்கள். காதல் கல்யாணங்கள் வீட்டுக்கு வீடு சகஜமாகி் விட்டது ஒரு பிரத்யட்ச நிரூபணம். என் இருபது வயது சமயம் என் நண்பர் ஒருவர் அவரது சொந்த அத்தை பெண்ணை மணம் செய்ய ஆசைப்பட்டு அதை தன பெற்றோரிடம் தெரிவிக்க வெட்கப்பட்டுக்கொண்டு தன் காதலை தியாகம் செய்துவிட்டார்!

அடுத்தது தொலைக்காட்சி. இந்த மாயப்பெட்டி வீட்டுக்குள் வந்து உட்கார்ந்து கொண்டு ஆட்சி செய்ய ஆரம்பித்துவிட்டது. ஆரம்ப நாட்களில் தூர்தர்ஷன் தயங்கித் தயங்கி கட்டுப் பெட்டி நிகழ்ச்சிகளை வழங்கிக் கொண்டிருந்தது. (இப்போது மட்டும் என்ன வாழ்கிறது என்று நீங்கள் கூவுவது என் காதில் விழுகிறது.) தனியார் சேனல்கள் பெருகியபின்பு விவாதம், டாக் ஷோ காமெடி என்ற பெயரில் என்னென்னவோ எல்லாம் வருகின்றது. இதன் தாக்கம் சமூகத்தில் அதிகமாகவே காணப் படுகிறது. வயதின் மூத்தவர்களை "பெரிசு" என்று அழைப்பதிலிருந்து, "சும்மா பொத்திக்கிட்டு இருக்கியா" என்று கேட்பது வரை வந்து விட்டது.

இதற்கும் ஒரு எடுத்துக் காட்டு சொல்ல ஆசை. சமீபத்தில் ஒரு நாற்பது வயதுக் காரர் தம் குடும்ப எதிரிகள் தமக்கு ஏவல் வைத்து விட்டதாக குறைப்பட்டுக் கொண்டார். " அரசி சீரியலில் கூட வருதே, இதெல்லாம் இப்போ ரொம்ப சுலபமா செய்யறாங்க சார், " என்று சொன்னார். நம்புங்கள் இது உண்மை!!
Yraman

7.8.09

Read This.

சென்ற வார விகடன் (அட்டைப் படத்தில் த்ரிஷாவின் எதிரி யார் என்ற கவர்ச்சிக் கேள்வியுடன் வந்தது.) எஸ். ராமகிருஷ்ணன் வழக்கமாக எழுதும் பகுதி சிந்தனையைத் தூண்டுவதாக இருக்கிறது. இந்தத் தலைமுறையின் என்னென்ன நடவடிக்கைகள் முன் தலைமுறையினருக்கு பட படப்பை ஏற்படுத்துகிறது என்பதை நன்றாக எழுதியிருக்கிறார்.  அவசியம் படியுங்கள்.
 
yraman