19.10.15

"திங்க'க்கிழமை 151019 :: பூண்டுப்பொடி



  
இது எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொல்லிவிட முடியாது.

 
எவ்வளவு பேருக்குப் பிடிக்கவில்லையோ,  அவ்வளவு பேருக்குப் பிடிக்கவும் பிடிக்கும்!!!
 
இது என் அம்மா மிக எளிதாக, எளிமையான ஒன்றாக மோர் சாதத்துக்குத் தொட்டுக் கொள்ள ஒரு காலத்தில் செய்து கொடுத்தது.   மிக நீண்ட இடைவெளிக்குப்பின் சில வருடங்களுக்கு முன்னால் மீண்டும் செய்து கொண்டேன்.
 
என் பாஸுக்கு பூண்டுப்பொடி - பூண்டு வாசனை - முன்னால் எல்லாம் பிடிக்காது.  ஆனால் இப்போது பூண்டின் மருத்துவ குணங்களுக்காக வேண்டி பூண்டு  ரசம், போன்றவற்றை சாப்பிடுகிறார் என்றாலும், இந்த அளவு பூண்டு வாசனை பிடிக்காது .
 
சென்னை பித்தன் ஸாரும் இதற்கு எதிர்ப்பாளர் என்று நினைக்கிறேன்!
 
சரி,  கதை போதும்.  செய்முறைக்கு வருகிறேன்!
 
நாட்டுப் பூண்டு எடுத்துக் கொள்ளவும்.  மலைப்பூண்டில் வாசனை இருக்காது.  பூண்டை உரித்துக் கொள்ளவும்.  எந்த அளவு பூண்டு உரித்துக் கொள்கிறீர்களோ, அதைப் போல மூன்று மடங்கு காய்ந்த மிளகாய் எடுத்துக் கொள்ளவும்.  

                      Image result for garlic images             Image result for garlic images
 
 
மிளகாயை முதலில் மிக்ஸியில் இட்டு லேஸாக அரைத்துக் கொண்டு பின்னர் பூண்டையும் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.
                                                                   Image result for red chilli images
 
 
அதை அப்படியே ஒரு கிண்ணத்தில் உருட்டி வைத்துக் கொண்டால், மோர் சாதத்துக்கு, (அட, தயிர் சாதத்துக்கும்தான்!) மற்றும் இட்லி, தோசைக்குத் தொட்டுக் கொள்ளலாம்.  இட்லி, தோசைக்குத் தொட்டுக் கொள்ளப் போட்டுக் கொள்ளும்போது சிறிதளவு நல்லெண்ணெய் இட்டுக் குழைத்துக் கொள்ளலாம்.


                                            
 
 
சிலர் மிளகாயை வறுத்துக் கொள்வார்கள்.  சிலர் இலேஸாக புளி சேர்ப்பார்கள்.  சிலர் கொஞ்சூண்டு வெல்லம் சேர்ப்பார்கள்.  சிலர் பூண்டைக் கூட வதக்கிக் கொள்வார்கள்.  ஆனால் நாங்கள் இதில் எதுவுமே செய்வதில்லை.  மேலே சொல்லியிருக்கும்படி.. 
 
அவ்வளவே...!
 
பிடித்தவர்கள் செய்து பார்த்துச் சொல்லுங்கள்.

சகோதரி ஏஞ்சலின் எங்கள் ப்ளாக் ரெசிப்பிகளை அவ்வப்போது செய்து பார்த்துப் பகிர்ந்துகொள்வது பார்க்கும்போது, படிக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது.  நன்றி!  சேனைக் கிழங்கி கோப்தா, தேங்காய் சாதம் போன்றவற்றை செய்து பார்த்துப் பகிர்ந்திருந்தார்.

17.10.15

பாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரம்.




1) கலங்கும் கண்களுடன் வாழ்த்துவோம் அமுதாவையும், பாண்டியராஜனையும்.
 


2) குடியா.
 


3) மருத்துவர் சாய்லட்சுமி.
 


4) குடியும் செடியும்! ஐயப்பன்.
 


5) விளையும் பயிர்...
 


6)  மதுரை உஷாராணியை நினைவிருக்கிறதா?  வாழ்க்கைப் போராட்டங்களில் வெல்வது எளிதுதான் என்று உணர்த்துபவர்.
 



7)  "ஆக்கம் அமைப்பு'. அமைப்பின் நிர்வாகியும் "கோல்டன்கேட்ஸ்' பள்ளி தாளாளருமான மீனா சேது.
 


8)  லட்சுமி.
 


9)  முதித் தியாகி கண்டுபிடித்திருக்கும் இந்தச் செயலி எல்லோருக்கும் - குறிப்பாக சாலைகளில் பயணிப்போருக்கு உதவும் செயலி.  ஆத்திரத்தை அடக்க முடியும்.  இவற்றை அடக்க முடியாது அல்லவா?  பயன்படுத்துவோரும் இந்தச் செயலியை மேம்படுத்த முடியும் என்பதும் கூடுதல் சிறப்பு!  என்னவொரு டெக்னாலஜி வளர்ச்சி!
 


10)  ஆரோக்கியராஜ்.
 


11)  நல்ல வழக்கங்களைக் கைக்கொள்ளவும் உதவுகிறது.  சுற்றுப்புறமும் சுத்தமாகிறது.  கோவாவில் மாணவ மாணவியர் சாதனை!




14.10.15

'ப்ரியா' படம் படமாக்கப்பட்ட விதத்துக்கு எழுத்தாளர் சுஜாதா காட்டிய எதிர்ப்பு!

                                      
                                                                  Image result for writer sujatha images
 
 
சுஜாதாவின் கதை முதன் முதலில் படமானது 'அனிதா இளம் மனைவி' என்று நினைக்கிறேன்.  'இது எப்படி இருக்கு?' என்ற பெயரில் படமானது.  அதில் ஜெய்சங்கர்தான் லாயர் கணேஷ். (இளையராஜா இசையில் கே ஜே யேசுதாஸ் - ஜானகி குரலில் ஒரு மிக அருமையான பாடல் ஒன்று இருக்கிறது.  ஆரம்ப ஜானகியின் குரலிலிருந்து, இளையராஜாவின் பின்னணி இசை வரை மிக மிக ரசிக்க வைக்கும் பாடல்)
 
 

கணையாழியில் அவர் எழுதிய 'கணையாழியின் கடைசிப் பக்கங்கள்' தொடரிலும் நிறைய சினிமாக்களைக் கிண்டலடித்திருக்கிறார்.  (தன்னைத் தானேயும் அவர் கிண்டலடித்துக் கொண்டிருக்கிறார்.  அப்போது க.க.பக்கங்களை எழுதுவது இவர்தான் என்று நிறைய பேருக்குத் தெரியாது)
 
 
பின்னர் காயத்ரி, ஜன்னல் மலர், கரை எல்லாம் செண்பகப்பூ,  நினைத்தாலே இனிக்கும் போன்ற படங்கள் வந்தாலும் 'ப்ரியா' படம் வெளியான  நீண்ட நாட்களுக்குப் பின் அவர் பத்திரிகைக்கு தந்த பேட்டி ஒன்றில் "ப்ரியா படம் எடுக்கப் பட்ட விதத்தைப் பார்த்த பிறகு 'இதை எப்படி படமாக எடுப்பார்கள் பார்ப்போம்' என்ற வகையில் சில கதைகள் ப்ரியாவைத் தொடர்ந்து எழுதினேன்"  என்று சொல்லி இருந்தார்.
 
 
                                           Image result for writer sujatha images                                Image result for உன்னைக் கண்ட நேரமெல்லாம்     
 
 
அவை 'மேற்கே ஒரு குற்றம்', 'மேலும் ஒரு குற்றம்' போன்ற கதைகள்.
 
 
ப்ரியாவைத் தொடர்ந்து அவர் எழுதிய 'உன்னைக் கண்ட நேரமெல்லாம்' என்ற கவித்துவமான தலைப்பு கொண்ட கதையில் கணேஷும், வசந்த்தும் உரையாடுவது போல 'ப்ரியா' படமாக்கல் சம்பந்தமாகத் தன் எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார்.
 

                  Image result for priya tamil film  images                                          Image result for priya tamil film  images
 
 
 
 வசந்த் அதிகக் கோபத்தில் மேலும் கீழும் நடந்து கொண்டிருந்தான். 
 
 
ஏராளமான காகிதங்களின் மத்தியில் 77 உறிஞ்சிக் கொண்டிருந்த கணேஷ் அவனை நிமிர்ந்து பார்த்து "எதுக்காக இப்படி வெட்டியா நடக்கிறே?  என்ன ஆச்சு வசந்த்?"
 
 
"அந்த ஆள் மேல கேஸ் போடணும் பாஸ்."
 
 
"எந்த ஆள்?  எந்த கேஸ்?"
 
 
"எழுத்தாளர் சுஜாதா!  இந்த மாதிரி நம்ம ரெண்டு பேரையும் கேலிக்கிடமா படம் எடுக்க அனுமதிச்சதுக்கு."
 
 
"என்ன படம்?"
 
 
"ப்ரியா."
 
 
"எழுத்தாளர் என்ன செய்வார்?  அவர் புஸ்தகத்திலே சரியாத்தானே எழுதியிருந்தார்?"
 
 
"படம் எடுத்தவர்கள் பேரில போடலாம்னு பார்க்கிறேன்."
 
 
"அவுங்க என்ன செய்வாங்க?  புஸ்தகத்திலே இருந்த மாதிரி படம் எடுத்தா படம் போண்டி ஆயிடும்.  பாதில ஹீரோயின் காணாமப் போயிடறா.  எவ்வளவு நாழிதான் ஒரு லாயரையும் போலீஸ்காரங்களையும் காண்பிக்க முடியும்?  இதபார் வசந்த்!  சினிமாங்கறதே வியாபாரம்.  அதன் விதிகள், இயக்கங்கள் எல்லாம் வேற.  அந்த கணேஷ், வசந்த் ரெண்டு பெரும் நாம் இல்லை. வேற ஆசாமிகள்.. பாடத் தெரியணும்.  ஓடத் தெரியணும்.  இதுக்கெல்லாம் கோவிச்சுண்டா என்ன ஆறது?  விட்டுத் தள்ளு.  படம் ஓடறது பாரு.  கிளி, டால்பின்னு என்னமோ கலந்து கட்டி இருக்காங்களாமே?"   கணேஷ் வாய்விட்டுச் சிரித்தான்.
 
 
"என்ன இருந்தாலும் எனக்கு சாமாதானமாகலே பாஸ்.  நீங்க அந்தப் படத்தைப் பார்த்தீங்கன்னா..."
 
 
"முதல்ல ஒண்ணு தெரிஞ்சுக்க. ஒரு லாயர் கேஸ் போடவே கூடாது.  கேஸ் போட வைக்கணும்."
 
 
 
இப்படி எழுதித் தன் ஆத்திரத்தை, ஆதங்கத்தைத் தணித்துக் கொண்டிருக்கிறார்.  இந்தக் கதையிலும் ப்ரியாதான் நாயகி.



பின் நாட்களில் சுஜாதா அதே திரையுலகில் இயக்குநர் ஷங்கர், கமல்  போன்றவர்களுடன் கலந்து அந்த மாய உலகின் ஜோதியில் கலந்ததும் ஒரு நகை முரண்தான்!






படங்கள் :  நன்றி இணையம்.