Friday, May 11, 2012

அலேக் அனுபவங்கள்::முன்னுரை


அசோக் லேலண்ட் என்னும் சமுத்திரத்தில் ஓர் ஓரத்தில் நின்று சுமார் முப்பத்தைந்து வருடங்கள் காக்காய் குளியல் செய்த என்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற ஆவல், இந்த ப்ளாக் ஆரம்பித்த நாள் முதல் எனக்கு இருந்து வந்தது.
     
இதை தொடர் போல எல்லாம் எழுதி, உங்கள் பொறுமையை சோதிக்கும் எண்ணமும் எனக்கு இல்லை. இந்தத் தலைப்பில், வாரம் ஒரு பதிவு போடலாம் என்ற எண்ணம மட்டும் இருக்கின்றது. ஒவ்வொரு பதிவும், ஒவ்வொரு தனி அங்கமாக இருக்கும் ( என்று நம்புகின்றேன்!) 

முஸ்கி (அதாவது 'டிஸ்கி' க்கு ஆப்போசிட்!) இதில் வரும் பெயர்கள் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே ....... இல்லை. சில இடங்களில் பெயர் குறிப்பிட்டிருப்பேன்.  சில இடங்களில் பெயர்கள் கற்பனையாக இருக்கக் கூடும். சில இடங்களில் பெயர் குறிப்பிடாமல் நழுவி விடுவேன். சில இடங்களில் பெயர்களை மாற்றிக் கொடுத்திருப்பேன். பெயர்களா முக்கியம்? (என்ன மோ சி பாலன்....? சரிதானா? ) 

முஸ்கி இரண்டு: இதில் காணப்படும் கருத்துகள், என்னுடைய பார்வை, என்னுடைய அனுபவம், என்னுடைய புரிதல். உடன் பணிபுரிந்தவர்கள் யாரையும் குறை காண்பதோ / குற்றம் சுமத்துவதோ என்னுடைய எண்ணமோ அல்லது விழைவோ இல்லை. அப்படி ஏதேனும் த்வனி தெரிந்தால், அவ்வப்போது அங்கங்கே கருத்துரைத்து உங்கள் ஐயங்களை தெளிவு படுத்திக் கொள்ளுங்கள். 

அன்புடன் (அம்புடன்) 
கௌதமன். 
*****************************  

கி பி ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்தொன்றாம் ஆண்டு வந்த சனிப் பெயர்ச்சி, மிகவும் முக்கியமானது (எனக்கு!).  புலியூர் பாலுவோ அல்லது காழியூர் நாராயணனோ யாரோ ஒருவர் என்னுடைய தனுசு ராசிக்கு அந்த சனிப் பெயர்ச்சி பெரிய நன்மைகளைக் கொடுக்கும் என்று எழுதியிருந்தார்கள். அதைப் படித்து, என்னுடைய அப்பாவும் நானும் ரொம்ப அகமகிழ்ந்து போனோம். 

அந்த வருடத்தின் ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாள், அசோக் லேலண்டுக்கு அப்ரெண்டிஸ் ஆக சேருவதற்கு (ஹிந்து பேப்பர் விளம்பரம் பார்த்து) மனு செய்திருந்த எனக்கு, எழுத்துத் தேர்வு ஒன்றுக்காக சென்னை வந்து சேரும்படி அழைப்பு அனுப்பி இருந்தார்கள். 

உடனடியாக, சென்னை வருவதற்கு, ஒரு ரயில் டிக்கெட் பதிவு செய்தார், அப்பா. முதன் முறையாக, தனி ஆளாக அதிக தூரம் (நாகப்பட்டினத்திலிருந்து, சென்னை வரை)பயணம் செய்தது அப்பொழுதுதான் என்று நினைக்கின்றேன். 
                    
அந்தப் பயணத்தின் போது ஒரு திடுக்கிடும் அனுபவம் ஏற்பட்டது. 

மீதி அடுத்த பதிவில்... 
                   

32 comments:

ராம்ஜி_யாஹூ said...

nice

பழனி.கந்தசாமி said...

பாசஞ்சர் ரயில்லயா உங்க அப்பா டிக்கட் வாங்கியிருந்தார்? புறப்பட்டு அடுத்த ஸ்டேசன் வர்றதுக்குள்ளயே நின்னுடுச்சு. நீங்க எப்ப மெட்ராஸ் போய்ச் சேரப் போறீங்கன்னு தெரியலயே?

அப்போ மெட்ராஸ்னுதான் பேரு.

கணேஷ் said...

அ.லே. அனுபவங்களா...! நிச்சயம் சுவாரஸ்யம் இருக்கும்னு நம்பறேன் நான். அதுசரி... அப்ப நீங்க மெட்ராஸ் வந்தப்ப, கரி இன்ஜின் ட்ரெயின்தான் இருந்துச்சா... அந்தப் படம் போட்ருக்கீங்க..!

வல்லிசிம்ஹன் said...

எழும்பூர்க்கு ப்ராட்காஜ் வர நாளாகிற்று.
அதனால் கரிஎஞ்சின் இருக்க சன்ஸ் இருக்கு.

அஷோக் லேலண்டின் வண்டிகளை வாங்கும் ஸ்தபனத்தில் எங்கள் வீட்டுக்கார இருந்தார். பிறகு நாலு வருஷம் லெலண்டிலும் இருந்தார்:)
35 வருடப் பொறுமையைப் பராட்டுகிறேன் கௌதமன்.

kg gouthaman said...

பழனி கந்தசாமி சொல்வது சரிதான். அப்போ மெட்ராஸ் என்றுதான் பெயர். வானொலி தவிர, வேறு எதிலும் அப்பொழுது சென்னை என்று அதிகம் குறிப்பிடப்படவில்லை.

கோவை நேரம் said...

அதுக்குள்ள தொடரும் போட்டுடீங்க....

middleclassmadhavi said...

Romba kuttiyaga mudichchitteengale!

ஸாதிகா said...

முதன் முறையாக, தனி ஆளாக அதிக தூரம் (நாகப்பட்டினத்திலிருந்து//அடேங்கப்பா...! ஆரம்பமே சுவார்ச்யமாக உள்ளது.தொடருங்கள்.தொடர்கிறோம்.

பட்டாபட்டி.... said...

கி பி ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்தொன்றாம் ஆண்டு வந்த சனிப் பெயர்ச்சி, மிகவும் முக்கியமானது (எனக்கு!).
//

அண்ணே.. அப்ப, நாட்டுக்கு சுதந்திரம் கிடைச்தான்ணே?
:-))

பட்டாபட்டி.... said...

அந்தப் பயணத்தின் போது ஒரு திடுக்கிடும் அனுபவம் ஏற்பட்டது.


//

ஏண்ணே.. டாய்லெட்ல தண்ணி வரலையாண்ணே?..
:-)))

ஹேமா said...

பயம் காட்டாமக் கதை சொன்னால் சரி.தொடருங்கோ !

Geetha santhanam said...

முன்பு குமுதம் வாசகர் கடிதங்கள் படிக்கச் சுவையாக இருக்கும். அதுபோல் இப்பொழுது எங்கள் ப்ளாக் வாசகர்களின் கமென்ட் சூப்பர் ஆக இருக்கு.

Geetha santhanam said...

முன்பு குமுதம் வாசகர் கடிதங்கள் படிக்கச் சுவையாக இருக்கும். அதுபோல் இப்பொழுது எங்கள் ப்ளாக் வாசகர்களின் கமென்ட் சூப்பர் ஆக இருக்கு.

பட்டாபட்டி.... said...

//35 வருடப் பொறுமையைப் பராட்டுகிறேன்//


அண்ணே.. நானும் பராட்டுகிறேன்..

ஆனா....
அடுத்தாப்புல பதிவ கொஞ்சம் பெரிசா எழுதுங்கண்ணா...!!!
பொசுக்..பொசுக்னு முடிச்சுடறீங்க..!!!


இப்படிக்கு
உண்மைத்தமிழன் அண்ணாச்சியை பிறந்ததிலிருந்து ப்லோ பண்ணும் பட்டாப்பட்டி.....

:-)))

kg gouthaman said...

இதுவரை கருத்து தெரிவித்துள்ள ராம்ஜி - யாஹூ, பழனி கந்தசாமி, கணேஷ், வல்லிசிம்ஹன், கோவை நேரம், மிடில்கிலாஸ்மாதவி, ஸாதிகா, பட்டாபட்டி, ஹேமா ஆகியோருக்கு என் நன்றி.

பட்டாபட்டி நிறைய கற்பனைவளம் இருக்கு உங்க கிட்டே!
அண்ணே.. அப்ப, நாட்டுக்கு சுதந்திரம் கிடைச்தான்ணே?...
இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது எப்போது என்று சரியாக ஞாபகம் இல்லை. ஆனால் என்னுடைய சுதந்திரம் பறிபோனது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்தேழில்!

ஏண்ணே.. டாய்லெட்ல தண்ணி வரலையாண்ணே?..

அப்படி வராமல் இருந்திருந்தால் அதில் நான் திடுக்கிட எதுவும் இல்லை; நான் டாய்லெட்டிலிருந்து வெளியே வந்த பிறகு, அங்கு சென்ற மற்றவர்கள்தான் திடுக்கிட்டிருப்பார்கள்!

திண்டுக்கல் தனபாலன் said...

"அடுத்த பதிவை பார்க்க ஆவலுடன் உள்ளேன் !"

ஹுஸைனம்மா said...

சின்னப்பதிவுல முன்னுரைதான் முக்கால் வாசி இருக்கு. இந்த வேகத்துல போனா, இது இன்னொரு ‘கன்னித்தீவு’!! ஸோ, கரி இஞ்சினை விட்டு இறங்கி, மின்சார ரயில்ல ஏறுங்க!! :-)))))))

ஆமா, அனுபவப் பகிர்வுன்னு பாத்தா, திகில் கதையால்ல இருக்கு? “தனியே சென்றேன்”, “திடுக்கிடும் சம்பவம்”... இப்பிடிலாம் எழுதினா பயம்மா இருக்காது?? :-)))))

//35 வருடப் பொறுமையைப் பராட்டுகிறேன் //
@வல்லிமா,
யாரோடப் பொறுமைன்னு சாமர்த்தியமாச் சொல்லாம விட்டுட்டாலும், அது கம்பெனிகாரங்களோட பொறுமையைத்தான்னு புரியுது!! :-)))))))))))))))

எங்கள் ப்ளாக் said...

ஹுஸைனம்மா said...

//35 வருடப் பொறுமையைப் பராட்டுகிறேன் //
@வல்லிமா,
யாரோடப் பொறுமைன்னு சாமர்த்தியமாச் சொல்லாம விட்டுட்டாலும், அது கம்பெனிகாரங்களோட பொறுமையைத்தான்னு புரியுது!! :-)))))))))))))))
இரண்டு அம்மாக்களும் சேர்ந்துகொண்டு, 'அன்னையர் தின'த்தில், இப்படி ஒரு பச்சப் புள்ளைய கிண்டல் செய்யறீங்களே! பாவம் அந்தக் குழந்தை!

Geetha Sambasivam said...

எனக்கு இப்போ ஓர் உம்மை தெரிஞ்சாகணும்! எண்ணூர் அசோக் லேலண்டிலா? இல்லாட்டி, அம்பத்தூரில் அவங்க ஓவர்டேக் பண்ணின ப்ரஸ் மெட்டலிலா? எதிலே இருந்தீங்க? எண்ணூர்னா ஒரு முக்கிய நபரைத் தெரியுமானு விசாரிக்கணும்! ப்ரஸ் மெட்டலிலும் நிறையப் பேர் இருக்காங்க தான்! அது தனியா வைச்சுப்போம்.

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம் ஜோதிடக் கணக்குப்படி 71-ஆம் வருஷம் சனிப்பெயர்ச்சி நடந்ததாய்த் தெரியலையே? ஏதோ தப்பாய்ப் பெயர்ந்திருக்குமோ என்னமோ! 71-ஆம் வருஷம் எனக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது தான்! :)))))))))

Geetha Sambasivam said...

71-லே நாகப்பட்டினத்திலே இருந்து தனியா சென்னை வந்தது பெரிய விஷயமா?? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்,

நாங்க 68-69-இலேயே சென்னை டு மதுரை தனியாக வந்து ரயிலிலே விபத்து காரணமா ரயில் போக்குவரத்து நின்னு திருச்சி டவுன் ஸ்டேஷனிலேயே சாப்பாடு கிடைக்காமல் தேவுடு காத்துக்கொண்டு, காலம்பர ஏழு மணிக்குச் சென்னையிலே இருந்து கிளம்பினவ, மறு நாள் காலம்பர ஏழு மணிக்கு மதுரை சென்றடைந்த சுவையான சம்பவங்கள் உண்டு.

72-ஆம் ஆண்டு டிசம்பரிலே அதை விட மோசம்! அது தனிக்கதை!

Geetha Sambasivam said...

இரண்டு அம்மாக்களும் சேர்ந்துகொண்டு, 'அன்னையர் தின'த்தில், இப்படி ஒரு பச்சப் புள்ளைய கிண்டல் செய்யறீங்களே! பாவம் அந்தக் குழந்தை! //


யாரு அந்தக் குழந்தை?? லாலிபாப் வாங்கிக் கொடுங்க. :P

kg gouthaman said...

கீதா மாமி, எண்ணூர் அசோக் லேலண்ட். அசோக் லேலண்ட் அம்பத்தூர் யூனிட்டுக்கும் சென்று சில விஷயங்கள் ஸ்டடி பண்ணியது உண்டு. லாலி பாப் மற்ற ஆசிரியர்கள் எனக்குக் கூரியர் செய்துள்ளனராம்!

Geetha Sambasivam said...

லாலி பாப் கூரியரிலா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ரொம்பவே சீப்பா முடிஞ்சுடும் போங்க! :)))))

கெளதம் சார், மெயிலிருக்கேன் பாருங்க! :))))))

kg gouthaman said...

// Geetha Sambasivam said...
எனக்கு இப்போ ஓர் உம்மை தெரிஞ்சாகணும்! எண்ணூர் அசோக் லேலண்டிலா? எண்ணூர்னா ஒரு முக்கிய நபரைத் தெரியுமானு விசாரிக்கணும்! //

யார் அது? மின்னஞ்சல் அனுப்புங்கள். kggouthaman@gmail.com

Madhavan Srinivasagopalan said...

டிரைன் ஒட்டின டிரைவரோட போட்டோ கெடைக்கலியா ?

kg gouthaman said...

// Madhavan Srinivasagopalan said...
டிரைன் ஒட்டின டிரைவரோட போட்டோ கெடைக்கலியா ?//

கிடைக்கலை - ஆனால் பார்ப்பதற்கு, 'பச்சை விளக்கு' சிவாஜி மாதிரியே இருந்தார்! (ஒளி மயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகின்றது' என்று பாடியமாதிரி இருந்தது!)

வல்லிசிம்ஹன் said...

ஹுசைனம்மா, நான் சொன்னது கௌதமன் ஜி யைத்தான். லேலண்ட் அனுபவம் எனக்கும்(எங்களவருக்கும்னு)
சொல்லிக்கறேன்:)
லாலிபாப் அனுப்பி இருக்கேன்பா.

Geetha Sambasivam said...

ஆஹா, எத்தனை லாலிபாப் இந்தக் குழந்தைக்கு! :P

Rathnavel Natarajan said...

அருமை சார்.

Vinoth Kumar said...

திடுக்கிடும் அனுபவம்னா ?

டிரெயின் சரியான நேரத்துல வந்ததா ..

இல்ல டி டி ஆர் வந்து டிக்கட் கேட்டரா ?

Anonymous said...

Ashok Leyland la oru nalaikku vela paartha nerathai vida chinnadhaga eludhitinga..Pazhakkam vittu pogala pola..

Konjam jaasthi yaga ezhudhavum

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!