Wednesday, May 13, 2015

வெளிச்சத்தின் நிறம் கருப்பு - மர்மங்களின் சரித்திரம்.
வினோத விபரீதங்கள் - விடையில்லா விசித்திரங்கள் - மரணமில்லா மர்மங்கள் - ஆச்சர்ய அமானுஷ்யங்கள் என்று அட்டையிலேயே அறிமுகம் அட்டகாசமாய்ச் சொல்கிறது.   Image result for வெளிச்சத்தின் நிறம் கருப்பு - மர்மங்களின் சரித்திரம்.  images  Image result for வெளிச்சத்தின் நிறம் கருப்பு - மர்மங்களின் சரித்திரம்.  images Image result for வெளிச்சத்தின் நிறம் கருப்பு - மர்மங்களின் சரித்திரம்.  images

பாலகணேஷ் முன்பு ஒருமுறை பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு புத்தகத்தை வாங்க அதன் அட்டைப் படமே - அமைப்பே - கவர வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.  எனக்கும் அது சரி என்றுதான் தோன்றியது.  இந்தப் புத்தகம் அட்டையைப் பார்க்கும்போதே அது உண்மைதான் என்று தோன்றியது.  வாங்கத் தூண்டுகிறது.


ஏமாற்றவில்லை.


35 மர்மங்களை அலசுகிறது புத்தகம். 


FBI பற்றிய பகிர்வை முன்பு பார்த்தோம்.  இதில் FBI கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய கூப்பர் பற்றி ஒரு அத்தியாயம் வருகிறது.


ஆனால் இந்தப் புத்தகத்தில் பேசப்பட்டுள்ள பல மர்மங்களுக்கு விடையே கிடையாது!

 
சமீபத்தில் கோவை ஆவி நடத்திய சிறுகதைப் போட்டியில் (வெள்ளைப் பேப்பர் டு வெள்ளித்திரை) நாய் ஒன்று தற்கொலை செய்து கொள்வது போல எழுதி இருந்தார் ஒரு போட்டியாளர்.  அது சாத்தியமில்லை, நாய்கள் அப்படிச் செய்யாது என்று நினைத்திருந்தேன்.  இந்தப் புத்தகத்தில் நாய்கள் செய்து கொள்ளும் தற்கொலை பற்றி ஒரு அத்யாயம்!

ஜோம்பிகள் பற்றி...

"எந்த மர்மத்துக்கும் மத சம்பந்தமான கோணம் ஒன்று உருவாக்கப்படும்" -  ஆசிரியர் முகிலின் ஒரு வரி!

முகமூடி அணிந்த ஒரு குற்றவாளியை இளவயது முதல், அந்தக் குற்றவாளி சாகும் வரை மிக மிக ரகசியமாக சிறையில் வைத்திருந்திருக்கிறார்கள்.  யார் அவர்? அல்லது யார் அவள்? 
தெரிந்ததா?  ஏன் அவரை யாரென்று கூட அறிவிக்காமல் ஆயுள் முழுவதும் சிறையில் வைத்திருந்தார்கள்?


வருங்காலத்தை அறிந்து கொள்ளும் அதிசய சக்தி பெற்றிருந்த டோரத்தி பற்றி...

தவறாகத் தீர்ப்பளிக்கப் பட்டால் அந்த மனிதனைச் சாகடிக்க முடியாதா...  தற்செயலா அது?

பேய்கள் பற்றிய - சற்றே 'போரா'ன - ஒரு அத்யாயம்.

சிவப்பு ரோஜாக்கள் பாணியில் கொலைகள் செய்த Jacj - The Ripper பற்றி...

கோடிகோடியாக செல்வங்களை ஒளித்து வைத்து, அவர்களுக்கும் உதவாமல், பிறருக்கும் உதவாமல் இன்னும் எங்கோ இருக்கும் புதையல்கள் பற்றி..

டைடானிக்கைக் கவிழ்த்த மம்மி பற்றி..  


இந்த மம்மியைப் பற்றிப் பேசியவர்கள், பார்த்தவர்கள் எல்லோருக்கும் பாதிப்பு இருந்ததாக எழுதுகிறார் முகில்.  ஒருவேளை புத்தகத்தில் மம்மியைப் பார்த்த (படத்தை) பாதிப்பில்தான் நான் 'சில்லறை பொறுக்கி'னேனோ?!!   அட, அது மட்டுமில்லை!  இன்னொரு விஷயம்.  இதை அப்லோட் செய்யும்போது லிங்க் படுத்திய பாட்டைப் பார்த்தால் நிஜமோ இந்த வதந்தி என்று நானே நம்ப ஆரம்பித்து விடுவேனோ என்னவோ!


மிகப் பெரிய பாம்புகள் பற்றி, நாஸ்ட்ரடாமஸ் மற்றும் உள்ளுணர்வுகள் பற்றி..


முடிவு தெரியாத புதிர்கள், ஆதாரமில்லா நுணுக்கமான விவரங்களைப் படித்தால் சில சமயம் சலிப்பும், சிரிப்பும் கூட வருகிறது!

பாலைவனத்தில் (உயரத்திலிருந்து பார்த்தால் மட்டும் காணக் கிடைக்கும்) மைல் கணக்கில் நீளும் கோடுகள் பற்றி,  ஆளில்லா தீவில் இருக்கும் மனித உருவச் சிலைகள் பற்றி, மம்மிகள் பற்றி எல்லாம் முன்பே படித்திருக்கிறேன்.  (மயன் வரலாறு?)

எடுத்தால் படிக்காமல் கீழே வைக்க முடியாத புத்தகம்.
வெளிச்சத்தின் நிறம் கருப்பு
சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
முகில்
320 பக்கங்கள் - 200 ரூபாய்.

16 comments:

R.Umayal Gayathri said...

சுவாரஸ்யம் மற்றும் விறுவிறுப்பாய் இருக்கிறது புத்தக விமர்சனம்.நன்றி

தி.தமிழ் இளங்கோ said...

புத்தகத்தை நன்கு படித்து அனுபவித்து எழுதி இருப்பதாக தெரிகிறது. நல்ல, சுவாரஸ்யமான, அடுத்தவர்களை இந்த நூலைப் படிக்கச் சொல்லும் ஒரு விமர்சனம். (நானும், ’மின்னல் வரிகள்’ பாலகணேஷ் அவர்கள் தனது பதிவில் எழுதிய விமர்சனத்தைக் கண்டு இந்த நூலை வாங்கினேன்; படிக்கப் படிக்க, படித்து முடிக்கும் வரை புத்தகத்தை கீழே வைக்க மனம் வரவில்லை. ஆசிரியர் முகில் அவர்களின் நடையும் ஒரு காரணம்)

Bagawanjee KA said...

முகிலின் மழையில் நனைய எனக்கும் ஆசை பிறந்து விட்டது :)

ஊமைக்கனவுகள். said...

சுவாரசியம்.

KILLERGEE Devakottai said...


விமர்சனம் நூலைப் படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது நண்பரே....

அப்பாதுரை said...

புத்தக அட்டை வாங்கத் தூண்டுகிறதா?

பழனி. கந்தசாமி said...

ஓசீயில கெடச்சாப் படிக்கலாம். காசு கொடுத்து வாங்கிப் படித்த காலமெல்லாம் மலையேறிப்போச்சு.

ரூபன் said...

வணக்கம்
ஐயா
சுவாரகசியமாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

கொஞ்சம் ஓவர் தானோ...?

Geetha Sambasivam said...

அதானே, ஓசியிலே கிடைச்சாப் படிக்கிறேன். :))

//சிவப்பு ரோஜாக்கள் பாணியில் கொலைகள் செய்த Jacj - The Ripper பற்றி..//

ஹிஹிஹி, இதை ஏற்கெனவே படிச்சுட்டுத் தான் சிவப்பு ரோஜாக்கள் படமே வந்திருக்குமோனு ஒரு எண்ணம் தோணிச்சு! அடி விழறதுக்குள்ளே ஜூட் விட்டுக்கறேன். :) உலக்கை நாயகர் படமாச்சே! :P :P :P :P

G.M Balasubramaniam said...

விமரிசனம் படிக்கும் போது கதை பற்றிய சிந்தனைகள். அடுத்த நொடியே மாற்றம் ஏதும் நிகழ வில்லை படிக்கவா வேண்டாமா தெரியவில்லை.

Yarlpavanan Kasirajalingam said...

சிறந்த திறனாய்வுப் பார்வை
தொடருங்கள்

Thulasidharan V Thillaiakathu said...

சுவாரஸ்யமாக இருக்கிறது உங்கள் விமர்சனம்...நாய்கள் தற்கொலை செய்து கொள்கின்றன என்பதற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கின்றதா அதில்? ஏனென்றால் நாங்களும் உங்கள் பாயின்டில்தான் இருந்தோம்/இருக்கின்றோம்....

ஸ்ரீராம். said...

நன்றி உமையாள் காயத்ரி.

நன்றி தமிழ் இளங்கோ சார். நீங்களும் படித்து விட்டீர்கள் என்பது சந்தோஷம் தருகிறது!

நன்றி பகவான்ஜி.

நன்றி ஊமைக்கனவுகள்.

நன்றி கில்லர்ஜீ.

@அப்பாதுரை : "ஆமாம்... எனக்கு!"

நன்றி பழனி.கந்தகசாமி ஸார்.

நன்றி ரூபன்.

நன்றி டிடி.

நன்றி கீதா மேடம். நீங்கள் சொல்லியிருப்பது உண்மைதான்.

நன்றி ஜிஎம்பி ஸார். புத்தகம் வைத்திருக்கிறீர்களா என்ன?

நன்றி யாழ்பாவாணன் காசிராஜன்.

நன்றி துளசிஜி.. அவர் எழுதி இருக்கும் எல்லா விஷயங்களுக்கு புத்தகத்தின் கடைசிப் பக்கங்களில் ஆதாரங்களை பொழிந்திருக்கிறார்! ஒரே லிங்க் மயம்!

Geetha Sambasivam said...

//நன்றி கீதா மேடம். நீங்கள் சொல்லியிருப்பது உண்மைதான்.//


அதானே பார்த்தேன்! காப்பியடிப்பதில் நாமல்லாம் கில்லாடிங்களாச்சே! :(

Kalayarassy G said...

நீங்கள் சொல்வது உண்மை தான். அட்டைப்படம் அல்லது தலைப்பைப் பார்த்துப் புத்தகம் வாங்கினால் பலசமயங்களில் ஏமாற வாய்ப்புண்டு. புத்தக மதிப்புரையை வாசித்து நல்ல புத்தகம் என்று தெரிந்து வாங்கினால் ஓரளவுக்கு உத்தரவாதமுண்டு. நாய்கள் தற்கொலை செய்து கொள்ளும் என்பது புது செய்தி. தன் ஜோடி செத்துவிட்டால் புறா தற்கொலை செய்து கொள்ளும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். உண்மையா எனத் தெரியாது. அமானுஷ்ய விஷயங்களில் எனக்கு நம்பிக்கையில்லை. புத்தகத்தைப் பற்றிய நடுநிலையான கருத்துக்கு நன்றி.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!