Thursday, June 15, 2017

மரணவீடு
இந்த நிமிடத்துத் தேவை    

இயல்பாக இருக்கவேண்டும் 
அதாவது இருப்பது போல நடிக்க வேண்டும். 
சிறு புன்னகை உதட்டில்
கைகளை கால்சராய் பாக்கெட்டில் நுழைத்துக் கொள்ளலாம்  
இடையே இருவார்த்தை அவ்வப்போது உதிர்க்கலாம்
ஆனால் 'சப்ஜெக்டில்' இருக்கவேண்டும்
கஷ்டமில்லை என்றுதான் தோன்றுகிறது. 
எவ்வளவு நேரமோ...  ஆனால் ரொம்ப நேரம் தாங்காது 
அரைமணி  சமாளிச்சா அப்புறமா அறைக்குப் போயிடலாம்
நின்று கொண்டோ உட்கார்ந்து கொண்டோ
பத்து நிமிஷம் யாரும் பார்க்காம அழுதாப் போதும்
அப்புறமா சமாதானமாகி
அடுத்த வேலையைப் பார்க்கலாம்
அதுவரை..

********)(*********
மரணவீடு


உள்ளே வருபவர்களை உன்னிப்பாக ஆராய்கிறது
முன்னரே வந்து 'பார்த்து'விட்டு நிற்கும் பக்கத்து வீடுகள். .
அழுகையின் அளவை ஆராய்கிறது பார்வைகள்.
சோகத்தை எடைபோடுகின்றன "ஆறுதல்" வார்த்தைகள்.
"செத்தவங்களைத் தப்பாப் பேசக்கூடாது"
என்று தொடங்கும் வரிகளில் வழிகிறது நாகரிக பசப்புக் கசப்புகள்.

என் எண்ணங்களை
படித்து விடுவானோ என்று
என்னைப் போலவே அவனும் பயந்திருக்கக் கூடும். 
எட்ட நின்றே துக்கம் கேட்கிறான்.

தனியாக அழுது கொண்டிருக்கிறான்
பயன் இன்னும் பாக்கி இருப்பவன்....

உடலை எடுத்ததும்
கழுவித் துடைக்கப் படும் வீட்டில்
அடையாளமற்றுப் போகிறார்
உயிரிலிருந்து உடலானவர்.படங்கள் நன்றி :  இணையம் 


 
இங்கு க்ளிக் செய்து தமிழ்மணத்தில் வாக்களித்துச் செல்லவும்!!

87 comments:

துரை செல்வராஜூ said...

இந்நிலைக்கு இதுகளே ஆக்கிக் கொண்டன..

கண்ணீர்த் துளிகளும் கட்டளைக்குக் கட்டுப்பட வேண்டும்..

காலக்கொடுமையை கையில் பிடித்துக் கொண்டது கருத்தற்ற சமூகம்..

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மை
உண்மை
தம +1

கோமதி அரசு said...

இறந்தவர்கள் வீட்டுக்கு போனால்
ஏற்படும் சில சங்கடங்களை சொல்கிறது பதிவு.

வருத்ததை அதிக படுத்தாமல் ஆறுதல் சொல்வதே பெரிய கலை.
உடல் இருக்கும் போது அழுதுவிட வேண்டும் மனதில் வைத்து இருந்தால் பாதிப்பு என்றுதான் வாய்விட்டு அழ வைத்தார்கள் அன்று(ஓப்பாரி)
நாகரீகம் கருதி அடக்கி வைக்கும் போது உடல் , மனம் சார்ந்த பாதிப்புகளை ஏற்படுத்தி செல்கிறது.

மதுரை வந்த பின் பழைய அழுகை பாடல்கள் (சினிமா)
காலையில் ஒலிக்க கேட்டால் அங்கு யாரோ இறந்து விட்டார்கள் என்று.
ஒரே தொகுப்பு இறந்த வீடுகளில் கேட்கிறது.

KILLERGEE Devakottai said...

யதார்த்த நிகழ்வுகள்

Geetha Sambasivam said...

மனித மனம் இப்படி எல்லாம் தான் நினைக்கும்! யதார்த்தத்தைச் சொல்லிப் போயிருக்கிறீர்கள். :( என்றாலும் வேதனையாக இருக்கிறது. இங்கே இதற்கென்று உள்ள மேளச் சப்தம் காட்டிக் கொடுக்கும்! :( அப்போவும் மனம் அதிரும்!

ராமலக்ஷ்மி said...

மனதைத் தொட்ட வரிகள். கசப்பான உண்மைகள்.

middleclassmadhavi said...

கண்கூடாகக் கண்ட உண்மைகள்.....
சொந்தத்தின் நாடகமும் நம்பிக்கைத் துரோகமும் மனதின் ஆறாத ரணம்!

நெல்லைத் தமிழன் said...

"தனியாக அழுது கொண்டிருக்கிறான் பயன் இன்னும் பாக்கி இருப்பவன்." - எவ்வளவு கசந்தாலும் இதுதான் வாழ்க்கையின் உண்மை. மனிதன் என்பவன் தன்னலம் மட்டும் கொண்டவனே. அப்படித்தான் அவனது பிறப்பும். தன்னலம் போக, பிறர் நலம் நாடலாம். அவன்தான் முன்னேறத் துடிப்பவன்.

மனோ சாமிநாதன் said...

சோகமான பதிவு!

ஒவ்வொரு மரண‌ வீட்டிற்கு செல்லும்போதும் இது மாதிரி ஆயிரம் நிகழ்வுகளைப்பார்க்க நேரிடுகிறது! வாழ்க்கை இவ்வளவு தான் என்பதை விரிவாகப் புரிய வைக்கிறது! பசியும் தூக்கமும் மரண சோகங்களுக்கு அப்பாற்பட்ட நிஜங்களாகின்றன!

விஜய் said...

அருமை,இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
தமிழ் செய்திகள்

ஸ்ரீராம். said...

ஒரேயொரு சிறு விளக்கம்...

"இந்த நிமிடத்துத் தேவை"யும் "மரணவீடு"ம் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத தனித்தனி படைப்புகள், முயற்சிகள்.

Anandaraja Vijayaraghavan said...

என் எண்ணங்களை
படித்து விடுவானோ என்று
என்னைப் போலவே அவனும் பயந்திருக்கக் கூடும். // என்று எட்ட நின்று துக்கம் கேட்கும் வரிகளை ரசித்தேன். இன்னும் சற்று பெரிதாக இருந்திருக்கலாமோ?

Angelin said...

இரண்டாவது உடலானவர் பார்வை இல்லையா ..
முதலாவது உடலானவரை காண செல்வோரின் மன உணர்வுகள் .
இரண்டும் இன்று அவர் நாளை நாம் என்பதை உணர்த்தி செல்பவை ..
கோமதி அக்கா சொன்ன அந்த அழுகையை கட்டுப்படுத்துவதால்தான் மனிதருக்கு பெரிய உடல் நோய்கள் ஏற்படுகின்றன ..

:( அந்த நிமிடத்து தேவை அழுது விடுவதே

Angelin said...

வெளிநாட்டு மரண வீடுகளின் சூழ்நிலையே வேறு .ஒருவர் மரணித்தால் இரண்டு மூன்று வாரங்களோ மாதங்களோ கூட ஆகும் அவரை வழியனுப்பிவைக்க ..அதிகம் எழுதினால் எனக்கே மனது அப்செட் ஆகிடும் படிப்போர் இன்னும் உறவுகளை நினைத்து அழக்கூடும் அதனால் இத்துடன் ஸ்டாப் செயகிறேன்

Srikanth said...

முதல் பதிவு - ஒவ்வொரு முறையும் டீம் மீட்டிங் இல் இது தான் நடக்கும்

இரண்டாம் பதிவு - நிதர்சனம். கடைசி ஸடான்ஸா மிகவும் வருத்தத்துக்குரியது

பின் குறிப்பு : தமிழில் எழுத நான் பட்ட பாடு. ஸ்ஸஸஸஸப்பாஆஆ...

டய்ப் செய்ததில் பிழை இருந்தால் மன்னிக்கவும்

காமாட்சி said...

ஸம்பந்தப்பட்டவர்களைப் பார்த்து ஆறுதலாகக் கையைப்பிடித்துக் கொண்டு இரண்டு வார்த்தை சொல்ல முடிந்தால் பெரியகாரியம். எவ்வளவோ விஷயங்கள் ஞாபகம் வரும். எவ்வளவோ தீர்மானங்கள். ஒரு ஸ்னானம். முடிந்து விட்டது அத்தியாயம். நம்பிக்கையோடு வாழ்க்கை ஒவ்வொருவருக்கும். வெளி நாட்டில் மக்கி மடியமுடியுமே தவிர மறைந்துபோக முடியாது. எல்லா உண்மைகளும் தெரிந்தும் வாழ்க்கை வாழ்வதற்கே என்ற சித்தாந்தம். அவ்வளவுதான்.

asha bhosle athira said...

போங்கோ ஸ்ரீராம்..:(... தலைப்பே மனதை என்னமோ செய்கிறது. மிக அருமையாக கதை, கவிதை எழுதுறீங்க.. ஆனா எல்லோரையும் சோகமாக்கி விட்டிடுறீங்க.. போன தடவை நந்தா வும் அப்படித்தான்...

இதுவரை விரல் விட்டு எண்ணக்கூடிய இறந்த வீடுகளுக்கே போனதுண்டு.. ஆனா போகும்போது கடவுளை வேண்டிக்கொண்டே போவேன்ன்.. என்னை அழ வச்சிடாதே.. அழாமல் ஸ்ரெடியா நிண்டிட்டு வரோணும் என.. ஆனா என்னால் முடியாமல் போய் விடும்.. நான் நல்ல ஒரு வயதான , நன்றாக வாழ்ந்து அனுபவிச்ச ஒருவரின் மரண வீடாயினும்... அங்கு போகும்போதே என் மனம் கற்பனையில் மிதக்கும்.. இவரும் நம்மைப்போல முன்நாளில் ஓடி ஆடி.. குதூகலமாக இருந்திருப்பார்தானே.. நாளைக்கு நாமும் இப்படித்தானே.. என தேவை இல்லாத கற்பனைகள் கன்னா பின்னா எனக் கட்டி.. ஒரு நிலையில்லாமல் ஆகிடுவேன் நான்.

சதாம் ஹூசைனை கண்டுபிடித்தாயிற்று.. தூக்காம்.. என்றதும் என்னால் அன்று முழுக்க சாப்பிட முடியவில்லை தெரியுமோ... நான் அவராக மாறி, அப்போ மனநிலை எப்படி இருக்கும் என எண்ணினேன்ன்... அன்று நான் ஃபினிஸ்ட்:)...

இப்படி சொல்லலாம் நிறைய, ஆனா அஞ்சு சொன்னதைப்போல அனைத்தையும் சொல்லி எல்லோரையும் சோகமாக்க விரும்பவில்லை... நேற்றிலிருந்து நான் கொஞ்சம் அப்செட்:(.. இன்று இதைப் பார்த்ததும்.. ரோட்டலி.. புரூட்டலில்.. கொயம்பிட்டேன்..:(.

asha bhosle athira said...

நேற்று ஏன் அப்செட் என நினைப்பீங்க... நேற்று ஈவினிங் என் ஸ்கொட்டிஸ் நண்பி ஃபோன் பண்ணி ஒரு விசயம் சொன்னா.

என்னவெனில், தன் நண்பர் குடும்பம்(எனக்கு அவர்களை தெரியாது).. ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் cruise இல் நோர்வே போனவர்களாம், போய் விட்டு அதிலேயே திரும்பி வந்து கொண்டிருந்தார்களாம்.. வழியில் கணவருக்கு திடீரென நெஞ்சுவலி வந்து, அங்கிருந்த டொக்ரேர்ஸ் எல்லோரும் பாடுபட்டும் காப்பாற்ற முடியாமல் போய் விட்டாராம் ஸிப் லயே:(.

அப்போ மனைவியைக் கேட்டிருக்கிறார்கள்.. ஹெலிக்கொபடரில் அனுப்பி விடுகிறோம் ஊருக்கு என... அதுக்கு மனைவிக்குப் பயமாம், மாட்டேன் எனச் சொல்லியிருக்கிறா. இதனால குரூஸ் இங்கு வந்து சேரும் வரை[ 4 நாட்கள்] உள்ளேயே வைத்திருந்திருக்கிறார்கள். நேற்றுத்தான் வந்து சேர்ந்தார்களாம்... நேற்று நானும் அந்த குரூஸ் எங்கள் ஆற்றால் போகும்போது பார்த்தேன்:(.

இதைக் கேட்டதும் மனம் கனத்து விட்டது.... பயணம் ஆரம்பிக்கும்போது எவ்ளோ குதூகலமாகப் போயிருப்பார்கள்.. இதுதான் தன் கடசிப் பயணம் என அவர் நினைச்சிருப்பாரா என்ன?...

சரி போகட்டும்...

அவருக்கு வயது 63 ஆம்.

Angelin said...

மீ யும் அழுதென் .. எனக்கு பல நினைவு :(

asha bhosle athira said...

///பத்து நிமிஷம் யாரும் பார்க்காம அழுதாப் போதும்
அப்புறமா சமாதானமாகி
அடுத்த வேலையைப் பார்க்கலாம்
அதுவரை..//

ஹா ஹா ஹா முதல் கவிதை படித்துக் கொண்டு வரும்போது.. ஒபிஸ் மீட்டிங் தான் எனப் புரிந்தது ஆனா.. இந்த வசனங்களைப் பார்த்திட்டு.. கீழே அடுத்த கவிதையைப் படிக்கும்போது.. இரண்டும் ஒன்றுக்காகிப் பொருந்துது:)..

asha bhosle athira said...

//Angelin said...
மீ யும் அழுதென் .. எனக்கு பல நினைவு :(//

ஹா ஹா ஹா இருவரும் சேர்ந்து சிரிக்க வைத்தது போக, இன்று எல்லோரையும் அழ வைப்போமா?:).

http://l7.alamy.com/zooms/141915541207489fbf644f282610529b/two-crying-girls-looks-tv-in-dark-room-epa9mf.jpg

asha bhosle athira said...

//உள்ளே வருபவர்களை உன்னிப்பாக ஆராய்கிறது
முன்னரே வந்து 'பார்த்து'விட்டு நிற்கும் பக்கத்து வீடுகள். .
அழுகையின் அளவை ஆராய்கிறது பார்வைகள்.
சோகத்தை எடைபோடுகின்றன "ஆறுதல்" வார்த்தைகள். //

எவ்ளோ அழகாக சிந்திச்சு எழுதியிருக்கிறீங்க.. இறந்த வீட்டில் விடுப்ஸ் பார்க்கும் கூட்டம் தான் அதிகம். அதிலும் யாரோ ஒருவர்[என்னைப்போல ஒரு லூஸ்:)] அதிகம் அழுதிட்டால் போதும்.. இவர் எதுக்கு இவருக்காக அழோணும் என்ன சம்பந்தம் இருக்கும்... என சந்தேகம் வேறு எழும் அவர்களுக்கு..

Angelin said...

பிக் கர்ர்ர்ர்ர் ஸ்ரீராமுக்கு :) ஹெட்டிங் ..என்னை குழப்பி விட்டது .ரெண்டும் ஒரே இடம் நு நினைத்து விட்டேன்

asha bhosle athira said...

இப்போ ஒரு மாதத்துக்கு முன்னர்.. இங்கத்தைய ஒருவரின் பியூன்றல் ஒன்றுக்குப் போயிருந்தோம். அவருக்கு 72 வயது. என்னில நல்ல அன்பு பாசம்.. எங்கு எப்போ கண்டாலும் ஓடிவந்து கட்டி அணைப்பார். திடீரென சுகயீனமாயிட்டார்ர்.. ஹொஸ்பிட்டலில் இருந்திருக்கிறார், என்னை விசாரிச்சிருக்கிறார்.. இன்னொரு நண்பியிடம்.. எல்லோரும் சீரியகாக எடுக்கவில்லை.. இப்படி ஆகுமென.. திடீரெனப் போயிட்டார்.

ஃபியூன்ரலில்.. மனைவி பிள்ளைகள்.. முன் வரிசையில் இருக்க.. முன்னாலெ ஒரு குட்டி மேடை போல .. அதில் அவரது உடல்.. பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது.. எல்லோரும் சத்தம் வராமல் குலுங்கி அழுதனர்.. படு அமைதி....

மனைவிதான் அதிகம் உடல் மட்டும் குலுங்க சத்தம் இல்லாமல் அழுதா.... அவரது வாழ்க்கை வரலாறை ஒருவர் ஸ்பீக்கரில் சொல்லிக்கொண்டிருந்தா... முடிவில் ஒரு பாடல்.. பாடியதும்.. பிரே பண்ணுங்கோ என்றா.... மயான அமைதி...

அப்படியே அந்த பெட்டி வைக்கப்பட்டிருந்த மேடையை.. சினிமாத் தியேட்டர் ஸ்கிரீன் போல ஒன்று மூடியது.... அவ்வளவுதான்.. பின்பு நமக்கு எதுவும் தெரியாது.. சுவிஜ் போட்டதும் பெட்டி அப்படியே.. உள்ளே மூவ் ஆகும்.. கறண்டில் எரியும்.. வெளியே புகை போவது மட்டும் தெரியும்... என்ன வாழ்க்கை இது...:(.

asha bhosle athira said...

//Angelin said...
பிக் கர்ர்ர்ர்ர் ஸ்ரீராமுக்கு :) ஹெட்டிங் ..என்னை குழப்பி விட்டது .ரெண்டும் ஒரே இடம் நு நினைத்து விட்டேன்///

வாங்கஞ்சு என் கையை இறுக்கிப் பிடிங்க.. இந்தச் சாட்டை வச்சே.. அவரைத் தேம்ஸ்ல தள்ளிட்டு:) ஹொலிடேக்கு ஓடிடலாம்:) பொலீசால் நம்மைப் புய்க்க முடியாதே:)..

Angelin said...

ஹா ஹா வாங்க தள்ளும் முன் பாஹுபலி trailer ஓட்டிட்டெ தள்ள லாமா :).

asha bhosle athira said...

///Angelin said...
ஹா ஹா வாங்க தள்ளும் முன் பாஹுபலி trailer ஓட்டிட்டெ தள்ள லாமா :).//

ஹா ஹா ஹா நோஓஓஓஓ பின்பு அனுஸ்கா நினைவு வந்தால் புழைச்சிடுவார்ர்:).. ஆத்துத்தண்ணி அமிர்தம் போலாகிடும் ஹா ஹா ஹா:).

asha bhosle athira said...

அது என்ன முறையோ எனக்குத் தெரியாது.. ஆனா ஊரில் அடிக்கும் பறை மேளத்தை நான் அடியோடு வெறுக்கிறேன்ன்ன்.. இறந்தவர்கள் திரும்ப வரப்போவதில்லை.. ஆனால் இந்த மேளத்தால் இருப்போருக்கு ஹார்ட் அட்டாக் வந்துவிடும்:(.

நான் முதன் முதலில் சந்தித்தது எங்கட அம்மப்பாவின் திடீர் மரணம்.. ஹார்ட் அட்டாக்...

ஊரில் கோயில் திருவிளா எனில், எது அதிகம் விசேசமான மேளக் கோஸ்டியோ அவர்களைத்தேடிப் பிடிப்போம் நம் திருவிளாவுக்கு..

அதேபோல.. செத்த வீட்டுக்கும் ஒரு பேமஸ் ஆன பறைமேளம் அடிப்பவர் இருந்தார்.. யாரும் எதுவும் நினைச்சிடாதையுங்கோ.. அவர் ரோட்டால் வந்தால்.. பெரியவர்களே பயந்து ஒதுங்குவார்கள்.. உச்சி முதல் பாதம் வரை நகைகள் விதம் விதமாகப் போட்டிருப்பார்ர்.... அவரைப் பார்த்தால் எமனைப் பார்க்கத் தேவை இல்லை.. அதே தோற்றம்.

அவர் தலைமையில் உள்ள மேளக் கூட்டத்தைத்தான் தேடிப் பிடிப்பார்கள். மொத்தம் எட்டுப்பேர் அக் கூட்டத்தில்

அம்மப்பாவுக்கும் அவரை கூப்பிட்டாச்சு.. அதிகாலை 6 மணி இருக்கும்.... அம்மப்பாவைச் சுற்றி ஊரெல்லாம் கூடி இருக்க.. வயதான பெண்கள் எழுந்தார்கள்.. மேளம் வந்துவிட்டதூஊஊஊஊஊஊஉ என ஒருவர் ஆரம்பித்தார்ர்..

அவ்ளோதான்ன்... அந்த மேளக்கூட்டம் வீட்டு வாசல் வரை மிக அமைதியாக வந்து.. வாசல் படிக்கட்டில் ஏறி நிண்டு.. எட்டுப்பேரும் ஒரே அடியாக ஓங்கி அடித்தார்கள் பாருங்கோ.. வானைத் தொடும் சத்தம்...

சத்தியமா நம்ப மாட்டீங்க.. நான் எழும்பி என்ர ஐயோஓஓஓஓஓஓஒ எனக் கத்திக்கொண்டு முன்னால் இருந்த சித்தியின் மேலால் பாய்ந்து அவவுக்கு முன்னால் விழுந்தேன்ன்: இப்பவும் அது கண்ணுக்குள் நிக்கிறது... எல்லோருமே அதே நிலைமையிலேயே அப்போ இருந்தார்கள்.. கவலையில் அழுவது ஒருபுறம்.. இந்த மேளச் சத்தம் தாங்க முடியாமல் அழுவது இது... இப்போ அதை நினைக்க சிரிப்பு சிரிப்பாக வருது எனக்கு...

ஆனா இப்படிப்பட்ட மேளம் தேவைதானா.. சடங்கு சம்பிரதாயங்களை நான் குறை கூறவில்லை.. ஆனா முடியவில்லையே என்ன பண்ணுவது.. ஒருவர் கண் கலங்குவதையே பார்க்க கஸ்டம்.. இப்படி மேளம் எனில்...

Asokan Kuppusamy said...

நெஞ்சை நெகிழ்விக்கும் பதிவு

Angelin said...

அதிரா..வடசென்னை பகுதியில் ப்ரிட்ஜ் மேலே bus ல உள்ளே இருக்ககென் அவ்வழியா ஒர் இறுதி பயணம் போனது. பிரிட்ஜின் மேல் பக்கம் உயர்ந்த இருக்க அப்பொ அங்கே டிராபிக் ஜாம் ஜன்னல் வழி எதேச்சையாக பார்க்க மிக அருகில் மேல் உலக பாசஞர் உட்கார்ந்து இருக்கார் .உக்கார வச்சி போவதை அன்னிகு தானே பார்க்கிறேன் அவ்வ்வ்வ் .ஒவ்வொரு பயணம் வெவ்வேறு விதம்

Angelin said...

ஒரு கவிதையை போட்டு என் முன்ஜென்ம நினைவெல்லாம் தூர் வாரி எடுத்துட்டார் ஸ்ரீராம் :)
இப்போ வாஷர்மேன்பெட் மேம்பாலம் இன்னிக்கு கனவில் வந்து கத்தப்போறேன் :)

Bagawanjee KA said...

சாகப் போகும் பிணம் ,செத்த பிணத்தைப் பார்த்து அழுததாம் :)

Angelin said...

அப்படிதான் அதிரா அது பறை மேளம் போன்றவை அழுத்தி வைத்திருக்கும் உணர்வுகளை வெடிக்கச்செய்து கண்ணீர் சிந்த வைக்கும் அதனால் மன அழுத்தம் ஏற்படுவது குறைவு ,இங்கே வெளிநாட்டில் வர கண்ணீரையும் துடைக்க ரெடியா டிஸ்யூ :( அடக்கி வைப்பதாலேயே இவர்களுக்கு ரொம்ப பிரச்சினைகள் வருது ..
எங்கள் கிறிஸ்தவ முறையில் பாடல்கள் சில குறிப்பா இறுதி பயணத்துக்குன்னு இருக்கும் amazing grace ,abide with me ,what a friend we have in jesus .how great thou art ,lord is my sheperd ,Going home,rock of ages,இதெல்லாம் கேட்டா தேம்பி அழுவேன் நான் :(

Angelin said...

ரொம்ப அழுகாச்சி வருதா எல்லாருக்கும் ..சரியொரு இறுதியப்பயணத்தில் நடந்த விஷயம் சொல்லிட்டு போறேன் .
எங்க ஆலயத்தில் இறுதிப்பயணங்களுக்கு மலர் அரேஞ்சிங் என் வேலை அவங்க பிரிண்ட் செஞ்சி வச்சிருக்க அந்த பாடல் சர்வீஸ் தாளையும் கொடுக்கணும் அப்போ ஒரு பெண்மணி என்னிடம் வந்து //sorry for your loss //என்று கட்டிப்பிடித்து அழ ஆரம்பிச்சுட்டார் ..எனக்கு இதென்னாசோதனைன்னு உறைஞ்சி போய்ட்டேன் ..அதைப்பார்த்து தூரத்திலிருந்து அவர் மகள் ஓடி வந்து மன்னிக்கவும் அம்மாவுக்கு alzeimer டிமென்ஷியா அவருக்கு எதுவுமே நினைவில் இராது என்று சொல்லி அவரை அழைத்து சென்றார் ..கட்டிப்பிடிச்சு அழுதவர் வெஸ்ட் இண்டீஸ் கறுப்பின பெண்மணி நான் ஆசிய மஞ்சள் நிறம் ..ஒரு டிமென்ஷியாமனிதர்களை எப்படி ஆக்கியிருக்கு பாருங்கள் :(

Angelin said...

//ஹா ஹா ஹா நோஓஓஓஓ பின்பு அனுஸ்கா நினைவு வந்தால் புழைச்சிடுவார்ர்:).. ஆத்துத்தண்ணி அமிர்தம் போலாகிடும் ஹா ஹா ஹா:).//

ஹா ஹா ஹா நோஓஓஓஓ பின்பு அனுஸ்கா நினைவு வந்தால் புழைச்சிடுவார்ர்:).. ஆத்துத்தண்ணி அமிர்தம் போலாகிடும் ஹா ஹா ஹா:).

asha bhosle athira said...

ஹா ஹா ஹா எனக்கும் அதே பயமா வருதூஊஊஊஊஉ அஞ்சு..,கண்ட நிண்ட கனவெல்லாம் வந்து கட்டிலால விழுந்து கை கால் உடைஞ்சிட்டால்ல்ல்ல்:).. நாளைக்கு என்னைக் காணாவிட்டால்ல்ல்.. என்னைத்தேடாமல்:).. ஸ்ரீராமுக்குச் சங்கிலி அனுப்பும்படி கனம் கோட்டார் அவர்களை மிகவும் ஏழ்மையோடு.. ஹையோ வெரி சோரி டங்கு ஸ்லிப்:).. தாழ்மையோடு கேட்ட்டுக்கொள்கிறேன்:)

asha bhosle athira said...

///Bagawanjee KA said...
சாகப் போகும் பிணம் ,செத்த பிணத்தைப் பார்த்து அழுததாம் :)///
ஹா ஹா ஹா கர்ர்:) அப்படிச் சொன்ன பட்டினத்தாரும் தன் அம்மாவின் மரணத்தில் அழுதாராமே..:)..

இறந்தவரைச் சுமந்தவரும் இறந்திட்டார்ர்ர்ர்ர்ர்.. அதை இருப்பவரும் எண்ணிப்பார்க்க மறந்திட்டாஆஆஆர்ர்ர்:))

asha bhosle athira said...

///அப்போ ஒரு பெண்மணி என்னிடம் வந்து //sorry for your loss //என்று கட்டிப்பிடித்து அழ ஆரம்பிச்சுட்டார் ..எனக்கு இதென்னாசோதனைன்னு உறைஞ்சி போய்ட்டேன் //

ஹா ஹா ஹா அஞ்சூஊஊஊஊ முடியல்ல என்னால.. ஹையோ ஹையோ...

asha bhosle athira said...

///Angelin said...
அப்படிதான் அதிரா அது பறை மேளம் போன்றவை அழுத்தி வைத்திருக்கும் உணர்வுகளை வெடிக்கச்செய்து கண்ணீர் சிந்த வைக்கும் அதனால் மன அழுத்தம் ஏற்படுவது குறைவு ,இங்கே வெளிநாட்டில் வர கண்ணீரையும் துடைக்க ரெடியா டிஸ்யூ :( அடக்கி வைப்பதாலேயே இவர்களுக்கு ரொம்ப பிரச்சினைகள் வருது ..//

100 வீதம் உண்மை அஞ்சு.. அழத்தான் வேணும் ஆனா இந்த மேளம் இருக்கே.. அது ஊரில் அனுபவிச்சிருக்கோணும் நீங்க... ஆனா இந்தியா மேளம் வேறு என நினைக்கிறேன்.. படங்களில் பார்த்திருக்கிறேன்ன்.. ஊரில் அப்படி இல்லை.. கோயில் மேளம்போல பெரிதாக இருக்கும்... அதன் டொங்கு டொங்கு எனும் சத்தம் வார்த்தைகளில் சொல்ல முடியாது...

ஆனால் இப்போ அப்படி இல்லை.. நிறையவே குறைந்துவிட்டது சத்தம்.

முந்தி அப்படி மேளச் சத்தத்தால் மனநிலை பாதிக்கப்பட்டோரும் இருக்கின்றனர்..

Angelin said...

athiraaaav :)
//ஹா ஹா ஹா அஞ்சூஊஊஊஊ முடியல்ல என்னால.. ஹையோ ஹையோ... //
சரி சரி கண்ட்ரோல் yourself :)

இன்னோன்னும் இருக்கு ..எங்க சர்ச் வெஸ்ட்ரி டேபிளில் ஒரு காப்பர் கெட்டில் இருந்தது பளபளப்பா நானும் அது தேநீர் கெட்டில்னு நினைச்சி தடவி பார்த்தேன் சும்மா கியூரியாசிட்டியில்அப்புறம் கொஞ்சநேரம்கழிச்சி கறுப்பு உடைபோட்டுஒரு அங்கிள் வந்து அந்த கெட்டிலை தூக்கிட்டு போனார் அதுக்கப்புறம் அவங்க ஆலயம் முன்பக்கம் போனாங்க ஒரு கல்லறைக்கு அருகில் குழி தோண்டி கெட்டிலை கவிழ்த்தாங்கா

ஆன்னு அலறி விழாதக்குறை நான் ..அதில் இருந்தது மரித்த பெண்மணி ஒருவரின் சாம்பலாம் ..3 வாரம் my கையை பார்த்து பயந்தேன் நான் ..


Angelin said...

லாங் ஷாட்டில் பயத்தோடு படமும் எடுத்தேன் கெட்டிலை அனுப்பி வைக்கட்டா மியாவ் :))

ஸ்ரீராம். said...

நன்றி துரை செல்வராஜூ ஸார்.

//கண்ணீர்த் துளிகளும் கட்டளைக்குக் கட்டுப்பட வேண்டும்..

காலக்கொடுமையை கையில் பிடித்துக் கொண்டது கருத்தற்ற சமூகம்.. //

கவிதை.

ஸ்ரீராம். said...

நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

ஸ்ரீராம். said...

நன்றி கோமதி அரசு மேடம்.

அழுகை வராமல் மனா அழுத்தத்தில் கஷ்டப்பட்ட தன் நண்பனைப் பற்றி என் மாமா அடிக்கடி பேசுவார். மதுரையில் கல்யாணமாகட்டும், கருமாதி ஆகட்டும் கொண்டாடும் விதமே தனி. ரசனையான மனிதர்கள்!

ஸ்ரீராம். said...

நன்றி நண்பர் கில்லர்ஜி.

ஸ்ரீராம். said...

வாங்க கீதாக்கா. நன்றி. சென்னையில் கூட ஒரு சங்கொலி அருகாமை மரணத்தை அறிவிக்கும். மனதில் ஒரு கனம் வந்து உட்காரும்.

ஸ்ரீராம். said...

வாங்க ராமலக்ஷ்மி. நன்றி.

ஸ்ரீராம். said...

நன்றி மிகிமா.

//சொந்தத்தின் நாடகமும் நம்பிக்கைத் துரோகமும் மனதின் ஆறாத ரணம்! //

வருத்தமான அனுபவம்தான். உங்கள் மனதின் ஏதோ ஒரு துயர பகுதியை தட்டி எழுப்பியிருக்கிறது பதவி என்று தெரிகிறது.

ஸ்ரீராம். said...

வாங்க நெல்லைத்தமிழன்...

சரியாச் சொன்னீங்க.. சொந்தப பெற்றோரிடமே எத்தனை மகன், மகள்கள் அப்படி இருக்கிறார்கள்? இன்றுகூட மகள்களும் கூட தங்கள் வயதான பெற்றோரை கொடுமைப்படுத்துவதாக செய்தித்தாளில் படித்தேன்.

ஸ்ரீராம். said...

வாங்க மனோ சாமிநாதன் மேடம். நன்றி.

//பசியும் தூக்கமும் மரண சோகங்களுக்கு அப்பாற்பட்ட நிஜங்களாகின்றன! //

உண்மை.

ஸ்ரீராம். said...

நன்றி விஜய்.

ஸ்ரீராம். said...

வாங்க ஆனந்தராஜா விஜயராகவன்...

//இன்னும் சற்று பெரிதாக இருந்திருக்கலாமோ? //

எது? முதலாவதா? இரண்டாவதா? அல்லது பொதுவான சோகமா?

ஸ்ரீராம். said...

வாங்க ஏஞ்சலின்..

//இரண்டாவது உடலானவர் பார்வை இல்லையா ..//

என்று நீங்கள் எடுத்துக்கொள்ள உங்களுக்கு - வாசகருக்கு - உரிமை இருக்கிறது. ஆனால் நான் ஒரு மரண வீட்டில் காணக்கிடைக்கும் காட்சிகளைச் சொல்ல முயற்சித்தேன்.

//முதலாவது உடலானவரை காண செல்வோரின் மன உணர்வுகள் .//

இதுவும் உங்கள் உரிமைதான்! உண்மையில் இரண்டுக்கும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாமல் வெவ்வேறு சமயத்தில் எழுதியது! காதல் தோல்வி முதல் அலுவலகப் பிரச்னை, நட்புத் துரோகம் வரை ஏதோ ஒரு மனா அழுத்தத்தில் நண்பர்கள் மத்தியில் இருக்கும் ஒருவன் அல்லது ஒருத்தி அவர்களிடம் அதைக் காட்டாமல் இருக்க பிராயத்தனப்படுவதாக காட்ட முயற்சி செய்திருந்தேன்!

//:( அந்த நிமிடத்து தேவை அழுது விடுவதே //

இப்படிப் பொருத்தமாய் ஒரு கனெக்ஷன் வருவது நானே எதிர்பாராதது!

ஸ்ரீராம். said...

@ஏஞ்சலின்..

//வெளிநாட்டு மரண வீடுகளின் சூழ்நிலையே வேறு .ஒருவர் மரணித்தால் இரண்டு மூன்று வாரங்களோ மாதங்களோ கூட ஆகும் அவரை வழியனுப்பிவைக்க .//

ஐயோ....

ஸ்ரீராம். said...

ஹலோ ஸ்ரீகாந்த்... நல்வரவு.

முதல் கவிதையையும் இரண்டாவது கவிதையையும் தனித்தனியாய்ப் பார்த்திருக்கும் முதல் பின்னூட்டம். நன்றி!

//தமிழில் எழுதப் பட்டபாடு...//

போகப்போகப் பழகிடும்!

ஸ்ரீராம். said...

வாங்க காமாட்சி அம்மா...

தத்துவார்த்தமாகச் சொல்லி இருக்கிறீர்கள் அம்மா.

//ஒரு ஸ்னானம். முடிந்து விட்டது அத்தியாயம்.//

நீரினில் மூழ்கி நினைப்பொழிய...!

ஸ்ரீராம். said...

வாங்க அதிரா...

//போங்கோ ஸ்ரீராம்..:(... தலைப்பே மனதை என்னமோ செய்கிறது. மிக அருமையாக கதை, கவிதை எழுதுறீங்க.. //

நன்றி.

//எல்லோரையும் சோகமாக்கி விட்டிடுறீங்க.. போன தடவை நந்தா வும் அப்படித்தான்.//

எல்லாம் கற்பனைதானே? ஏனோ சோகம்!

//கடவுளை வேண்டிக்கொண்டே போவேன்ன்.. என்னை அழ வச்சிடாதே.. //

எனக்கு நேர்மாறாய்த் தோன்றும். சரியாய் சோகத்தை முகத்தில் கட்டமுடியாமல் போகுமோ, தவறாக நினைத்துக் கொள்வார்களோ என்று!

//சதாம் ஹூசைனை கண்டுபிடித்தாயிற்று.. தூக்காம்.. என்றதும் என்னால் அன்று முழுக்க சாப்பிட முடியவில்லை தெரியுமோ... நான் அவராக மாறி, அப்போ மனநிலை எப்படி இருக்கும் என எண்ணினேன்ன்... அன்று நான் ஃபினிஸ்ட்:)...//

ஏனோ அவரை எதிர்த்தவர்கள் கூட அந்த நேரம் அப்படித்தான் ஃபீல் செய்தார்கள்.

asha bhosle athira said...

அஞ்சூஊஊஊ ஓடுங்கோ ஓடுங்கோஒ... எங்கட சத்தம் பொறுக்காமல் ஸ்ரீராம் லாண்டட்ட்ட்ட்ட்:))..

ஸ்ரீராம். said...

@அதிரா..

உங்கள் நண்பியின் நண்பர் வீட்டு சோகத்துக்கு அனுதாபங்கள்.

ஸ்ரீராம். said...

@ஏஞ்சலின்

//மீ யும் அழுதென் .. எனக்கு பல நினைவு :( //

ஆனாலும் நீங்கள் ரொம்ப இளகிய மனது. எங்கள் நாய் மனம் போன்ற பதிவுகளிலேயே அதை நான் கவனித்திருக்கிறேன்.

ஸ்ரீராம். said...

@அதிரா..

//படித்துக் கொண்டு வரும்போது.. ஒபிஸ் மீட்டிங் தான் எனப் புரிந்தது //

ஆபீஸ் மீட்டிங் என்றில்லை. ஏதோ ஒரு ஸ்ட்ரெஸ்!

//ஹா ஹா ஹா இருவரும் சேர்ந்து சிரிக்க வைத்தது போக, இன்று எல்லோரையும் அழ வைப்போமா?:).//

ஆஹா.. எல்லாவற்றுக்கும் எப்படி பதில் சொல்ல!

//இறந்த வீட்டில் விடுப்ஸ் பார்க்கும் கூட்டம் தான் அதிகம்//

விடுப்ஸ்னா என்ன?

ஸ்ரீராம். said...

@ஏஞ்சலின்..

//ஹெட்டிங் ..என்னை குழப்பி விட்டது //

என் நண்பர்கள் சிலர் நோட்டிபிகேஷன் வந்தும் கூட தலைப்பு காரணமாய் பிரித்தே பிடிக்கவில்லையாம். குறிப்பாக ஹேமா!

ஸ்ரீராம். said...

வாங்க பகவான்ஜி...

நான் சொல்ல நினைத்த பாடல் வரிகளை அதிரா சொல்லி விட்டார். ஏனோ நீங்கள் இப்போதெல்லாம் தம வாக்களிப்பதில்லை?!!

Angelin said...

//என் நண்பர்கள் சிலர் நோட்டிபிகேஷன் வந்தும் கூட தலைப்பு காரணமாய் பிரித்தே பிடிக்கவில்லையாம். குறிப்பாக ஹேமா!//

நாங்கல்லாம் கியூரியாசிட்டி வகை என்ன ஆனாலும் நுழைஞ்சி பார்த்திடுவோம் :) வருவது வரட்டும்னு

asha bhosle athira said...

////ஆன்னு அலறி விழாதக்குறை நான் ..அதில் இருந்தது மரித்த பெண்மணி ஒருவரின் சாம்பலாம் ..3 வாரம் my கையை பார்த்து பயந்தேன் நான் ..////
ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர் .. எவ்ளோ காலமா சேர்ஜ் போறீங்க .. அங்குள்ள முறைகள் தெரியேல்லைப்போல:)...

கனவு வந்திருக்குமே அஞ்சு:) அந்த லேடி வந்திருப்பாவே ... என்னை ஏன் தொட்டாய் என:)

Angelin said...

//ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர் .. எவ்ளோ காலமா சேர்ஜ் போறீங்க .. அங்குள்ள முறைகள் தெரியேல்லைப்போல:).//

கர்ர்ர் நான் சர்ச் வெளியே போறவரைக்கும் மட்டுமே பார்ப்பேன் கிரேமடோரியம் போயிட்டு இப்படி வந்ததை அதுவும் டேபிள் மேலே நடுநாயகமா இருந்தா எப்படி கண்டுபிடிக்கறது :)
எனக்கு அன்னிக்கு இந்த ஆஷ் புதைப்பது பற்றி தெரியாமப்போச்சு சும்மா கெட்டில்னு நினைச்சேன் ..அந்த லாங் ட்ரெஸ் போட்டவர் தூக்கிட்டு போனப்புறம் தான் கண்டே புடிச்சேன்

அந்த லேடி எனக்கு நெருக்கம் என்னுடைய இப்போதைய ஆலயப்பணிகள் எல்லாவற்றையும் சொல்லிக்கொடுத்தது அவர்தான் ..தனக்கு கான்சர் விரைவில் போகப்போறோம்னதும் வெளிநாட்டினார்னு கூட பார்க்காம எனக்கு பல ஆலய பணிகளை சொல்லித்தந்தவர் அவர் இறக்குமுன் அயர்ன் செய்த ஒன்றிரண்டு துணிகளை அப்படியே வச்சிருக்கேன் ..அடிக்கடி கனவில் வருவார் :)

Angelin said...

அன்று தான் முதன்முறையா இப்படி பார்த்தேன் .நான் நினைச்சிட்டிருந்ததுகண்ணாடி குடுவையில் அல்லது குட்டி மரப்பெட்டியில் இருக்கும்னு அதான் தெரியாம தொட்டேன்

asha bhosle athira said...

@Sriram///
இந்த விடுப்ஸ் பற்றி முன்பு நெல்லைத் தமிழன் கேட்டு ... அஞ்சு மூலம் பெரிய விளக்கங்கள் கொடுத்து தெளிவு படுத்தினோம்... இப்போ நீங்க:)...

அது, புதினம் பார்த்தல்.. அடுத்தவங்க என்ன பண்றாங்க... என்ன செய்கிறார்கள் என... ஒட்டுக்கேட்பதைப்போல, இது பார்க்கிறது:)... ... ஒரு வித curiosity என்றும் சொல்லலாம்:).

Angelin said...

@sriram //விடுப்ஸ்னா என்ன?//

Gossip :) அடுத்தாத்து அம்புஜத்தை பற்றி பாடும் மனோரமா மாதிரி

Angelin said...

gossip plus curiosity :)

நெல்லைத் தமிழன் said...

@ஏஞ்சலின்- //sorry for your loss //என்று கட்டிப்பிடித்து அழ ஆரம்பிச்சுட்டார் - அதுக்கு அப்புறம் உங்க பர்ஸ் உங்க கிட்டதான் இருக்குதான்னு CHECK பண்ணிப் பாத்தீங்களா? பின்னூட்டம் எழுதிட்டு என் கையைப் பார்த்துக்கறேன். இடுகையிலேர்ந்து ஏதேனும் ASH என் கைல ஒட்டிக்கிட்டதா என்று.

@அதிரா - பின்னூட்டங்கள் சுவாரசியமா இருந்தது. அதைவிட 'சாகப்போகும் பிணம்....'க்கு சரியா இந்தப் பாடலை நினைவுபடுத்தியது அருமை. It shows your brilliance. "இறந்தவரைச் சுமந்தவரும் இறந்திட்டார்ர்ர்ர்ர்ர்.. அதை இருப்பவரும் எண்ணிப்பார்க்க மறந்திட்டாஆஆஆர்ர்ர்" - நான் கேட்டு ரசித்த பாடல்.

asha bhosle athira said...

//ஸ்ரீராம். said...
வாங்க பகவான்ஜி...

ஏனோ நீங்கள் இப்போதெல்லாம் தம வாக்களிப்பதில்லை?!!///

பகவான் ஜீ.. உங்களுக்கு ரைம் இல்லாட்டில், பாஸ்வேர்ட்டையும் ஐடியையும் என்னிடம் தாங்கோ.. நான் வோட்டுப் போட்டு விடுகிறேன்ன் எல்லோருக்கும்...
“உங்கள் வோட்டு.. எங்களுக்கு தேவை”..:)

ஸ்ஸ்ஸ் இப்பூடி மிரட்டாட்டில் நம்மட சமையல் குறிப்பு நேரமும் காக்கா போயிடப்போறார் கர்ர்ர்ர்ர்:).

asha bhosle athira said...

///நெல்லைத் தமிழன் said...

//@ஏஞ்சலின்-//இடுகையிலேர்ந்து ஏதேனும் ASH என் கைல ஒட்டிக்கிட்டதா என்று.//

ஹா ஹா ஹா நான் ஓடிப்போய் சோப் போட்டுக் கை கழுவி திருநீறும் பூசிட்டேன்ன்ன்:) ஹையோ இல்லாட்டில் கனவு வந்து துலைக்கும்:) ஹையோ ஹையோ ஒரு மனிசர் எத்தனை விசயத்துக்குத்தான் பயப்புடுறதாம்ம்ம்ம்:)..

@அதிரா - பின்னூட்டங்கள் சுவாரசியமா இருந்தது. அதைவிட 'சாகப்போகும் பிணம்....'க்கு சரியா இந்தப் பாடலை நினைவுபடுத்தியது அருமை. It shows your brilliance///

ஸ்ஸ்ஸ்ஸ் மெதுவாப் பேசுங்கோ நெல்லத் தமிழன்:).. ஓல்ரெடி புகைப்புகையாப் போகுது தெற்கால:) இதில நீங்க வேற இப்பூடிச் சொல்லிட்டீங்க:)..

நான் சொன்னேனே.. இப்போ வேலைகள் அதிகமாகி எழுதுவது கொஞ்சம் குறைந்திருக்கு.. இருப்பினும்.. எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன்... பட்டிமன்றம்.. பாட்டு.. கவிதை.. ஸ்பீச்.. எதுவாயினும் கேட்கும்போது பிடிச்ச வசனம் வந்தால் உடனே நோட் பண்ணிடுவேன்... அதனாலேயே அப்பப்ப அவை வெளியே வந்திடுது.. மிக்க நன்றி.

Angelin said...

@ நெல்லை தமிழன் :) எங்கள் சர்ச் வார்டன் சர்வீசஸ் ஆரம்பிகுமுன் ஹாண்ட் பாக்ச லாக்கரில் வைக்க சொல்வார் :) அந்த ஆறுதல் சொன்னவர் 4/5 வருஷம் இப்படி தானாம் ..என்னது ஆஷ் இருக்கானு செக் பண்ணிகலா ஹா ஹா ..இது போல் நிறைய அனுபவம் இருக்கு

Angelin said...

@மியாவ் தெற்கு பக்கம் யார் இரு க்கா:) நானில்லை

Angelin said...

அதிராவின் புத்தி கூர்மைக்கு காரணம் மை வல்லாரை smoothie

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

நான் சாவடைந்தால்
எனது சாவீட்டிலும் இப்படியோ...?
இதெல்லாம்
நான் சாவடைந்த பின்
எனக்குத் தெரியாதே!

G.M Balasubramaniam said...

இக்கட்டான நிலை நானும் அனுபவித்திருக்கிறேன் இது வரை ஏதோ பெயரோடு இருந்தவருக்கு இப்போது பிணமென்று பெயர் அதையே ஸ்டைலாக ஆங்கிலத்தில் பாடி என்பார்கள் நாமும் அதுவாக்கத்தானே போகிறோம் எப்பவாவது

ஏகாந்தன் Aekaanthan ! said...

அந்த அரைமணியை சமாளிப்பது என்பது எல்லோராலும் முடிவதில்லை.

சாவு வீட்டு நிகழ்வுகள் மனித வாழ்க்கையின், மனித உறவுகளின் அபத்தத்தை வெளிப்படுத்தும் - அவதானிப்போருக்கு. மற்றவர்களுக்குப் பத்தோடு பதினொன்று. பனிரெண்டாகவோ, பதிமூன்றாகவோ இவர்களே இருக்கக்கூடும் என்கிற ரகசியமும் அதில் பொதிந்திருக்கக்கூடும்..

ஸ்ரீராம். said...

மீள் மீள் மீள் மீள் மீள் மீள் வருகைகளுக்கு நன்றி அதிரா, ஏஞ்சலின்.

:))))))

ஸ்ரீராம். said...

வாங்க ஜி எம் பி ஸார்...

//நாமும் அதுவாக்கத்தானே போகிறோம் எப்பவாவது //

உண்மைதான் ஸார்.

ஸ்ரீராம். said...

நன்றி நண்பர் ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்.

ஸ்ரீராம். said...

வாங்க ஏகாந்தன் ஸார்..

அந்த நேரத்தை கடக்கும் சங்கடமான அவசரம் மட்டுமே காண முடிகிறது - பெரும்பாலான சமயம்.

kg gouthaman said...

// Angelin said...
@sriram //விடுப்ஸ்னா என்ன?//

Gossip :) அடுத்தாத்து அம்புஜத்தை பற்றி பாடும் மனோரமா மாதிரி//

இது என்னங்க புதுக்கதை? அடுத்தாத்து அம்புஜத்தை பாடியவர் பி சுசீலா, நடித்தவர் சௌக்கார் ஜானகி. மனோரமா எங்கே வந்தார்?

Angelin said...

அவ்வ்வ்வ் that's a silly mistake.. I got confused with sowcar and manoramaa ..

Angelin said...

நான் இப்பொ வரைக்கும் அது மனோரமா என்று நினைதென் ஹ ஹ ஹா

Thulasidharan V Thillaiakathu said...

இரண்டுமே அருமை! ரொம்பவே நல்லாருக்கு...ஸ்ரீராம்!!

கீதா

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!