புதன், 7 ஜூன், 2017

புதன் வந்துடுச்சே!



புதனையும் புதிரையும் அடிக்கடி மறந்து போயிடறேன்!

இப்போ போய் ச்யவனப்ராஸ் சாப்பிட்டவுடன் ஞாபகம் வந்தது!


இரண்டு வாரங்களுக்கு முன்பு புதிர்க் கேள்வியாகக் கேட்டது என்ன?


ஹாங் ஞாபகம் வந்துடுச்




// இந்தக் கேள்விக்கு விடை கிடையாது. யாராலும் பதில் சொல்லமுடியாது. அது, எந்தக் கேள்வி? // 


இதுதான் அந்தக் கேள்வி: " அடுத்த வாரம் புதன்கிழமை, எங்கள் ப்ளாக் புதிர் வருமா?" என்று கேலியாக ஒரு மெயில் அனுப்பி இருக்கிறார் குரோம்பேட்டை குறும்பன்." (யோவ் - நான் குமரன் குன்றம் பக்கம் வரும்போது உன்னை கவனிச்சுக்கிறேன்.)  


விடை தெரியாத கேள்விகள் எவ்வளவோ கேட்கலாம். 
உதாரணம் : ஆங்கில எழுத்துகளில், எழுபத்தெட்டாவது எழுத்து எது? 

அடிப்படை நிறங்களில் நாற்பத்து ஏழாவது எந்த நிறம்?

சண்டைக்கு வருபவர்களை, கமெண்ட் பகுதியில் சந்திக்கிறேன்!!! 

இந்த வாரக் கேள்வி:  

1)   What comes in the place of _ 

78 ,   47,    - 


2)   What color you will get when you mix 

Li, K and A ? 


3)  கீழே உள்ள சுட்டியில் கிளிக் செய்து, கேட்டு, பாடலின் ஆரம்பவரி என்ன என்று சொல்லுங்கள்! 



sound here click





46 கருத்துகள்:

  1. சுட்டியை சொடுக்கினேன் ஆனால் ஒலியை கேட்க இயலவில்லை.

    பதிலளிநீக்கு
  2. முதல் இரண்டு யோசித்துக்கொண்டிருக்கிறேன். மூன்றாவது கண்டுபிடிச்சுட்டேன். ஏதோ ஒரு பழைய பாட்டு. இப்ப யாரு வீணை எல்லாம் வாசிக்கிறா?

    பதிலளிநீக்கு
  3. சுட்டியை சொடுக்கினேன்
    பாடல் வரி கண்கள் இரண்டும் உன்னை கண்டு தேடுதே!

    பதிலளிநீக்கு
  4. பதறி சிதறிசிவந்ததே நெஞ்ச்ம் என்று தொகையரா வந்து அதன் பின் கண்கள் இரண்டும் என்று உம்மை கண்டு பேசுமே!

    பதிலளிநீக்கு
  5. பாடல் வரியை முதலில் சொல்லிவிட வேண்டும் என்ற அவசரத்தில் கண்கள் இரண்டும் என்று உம்மை கண்டு பேசுமோ!
    என்று எழுதி விட்டேன் அப்புறம் தான் தொகையரா வந்து அப்புறம் பாடல் வருமே என்று யோசித்து எழுதிவிட்டேன்.
    பதறி சிவந்ததே நெஞ்சம் என்று வரும்.

    பதிலளிநீக்கு
  6. நான் இந்த பக்கமே வரலைப்பா.

    பதிலளிநீக்கு
  7. எட்ட நின்னு பாத்துட்டுப் போக வேண்டியதுதான்!

    பதிலளிநீக்கு
  8. பாடல் வரிகள் 'கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ?'

    பதிலளிநீக்கு
  9. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நான் சொல்ல ஓடிவந்தேன்ன்ன்... சொல்லப்பட்ட்டு விட்டதே:(... கண்கள் இரண்டும் என்று உன்னைக் கண்டு....

    எங்கள் ஆன்ரிக்கு திருமணமாகி வெளிநாடு போக இருந்தபோது, எங்களோடு வேணுமெண்டே இப்பாட்டைப் பாடிக்கொண்டிருப்பா..:).

    பதிலளிநீக்கு
  10. ஏனையவர்களுக்காக முதலாம் 2ம் வினாக்களுக்கான விடையை விட்டு விடுகிறேன்ன்.. மி ரொம்ப நல்ல பொண்ணு:).

    பதிலளிநீக்கு
  11. முதல் இரண்டு கேள்விகளையும் எல்லோரும் சாய்ஸ்ல விட்டுவிட்டு, கும்மி அடிச்சுகிட்டு திரியறீங்க !!

    பதிலளிநீக்கு
  12. 1. 24

    2. சாய்சில் விட்டு விட்டேன்

    3. கண்கள் இரண்டும் என்று உம்மை கண்டு பேசுமோ..? - இந்த பாடலின் முன்னணி இசைதான் எனக்கு கேட்டது. வீணை இசை எதுவும் கேட்கவில்லை.

    பதிலளிநீக்கு
  13. ///kg gouthaman said...
    முதல் இரண்டு கேள்விகளையும் எல்லோரும் சாய்ஸ்ல விட்டுவிட்டு, கும்மி அடிச்சுகிட்டு திரியறீங்க !!///

    ஹா ஹா ஹா ஆவ்வ்வ்வ்வ் என்றுமில்லாமல் இன்று கெள அண்ணன் களமிறங்கியிருப்பதைப்பார்த்தால்ல்.. யாராவது விடை சொன்னால்ல்.. அதைத்துக்கிப் போட்டிடுவார் அடுத்த புதன் கிழமைக்கு... இது ஒருவரும் சொல்லாதுவிட்டால்ல்ல்.. தான் எல்ல்லோ பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் வந்திடப்போகுது எனப் பயந்திட்டார்ர்ர்... பதிலுக்கு எங்கே போவார்ர் அவர்:).. ஹா ஹா ஹா..

    மிடில் கிளாஸ் மாதவியையும் காணல்ல... ஹை கிளாஸ் நெல்லைத்தமிழனையும் காணல்ல.. லோக் கிளாஸ் அதிராவுக்கும் பதில் தெரியல்ல ஹா ஹா ஹா:).

    பதிலளிநீக்கு
  14. //3. கண்கள் இரண்டும் என்று உம்மை கண்டு பேசுமோ..? - இந்த பாடலின் முன்னணி இசைதான் எனக்கு கேட்டது. வீணை இசை எதுவும் கேட்கவில்லை.///

    அதில் கேட்கும் கட்டம்.. பச்சைக் கிளியானால் பறந்தேகும் செல்லுவேன்ன்ன்... என வருவது:)

    பதிலளிநீக்கு
  15. வாழ்க்கையில் முதேஏஎல்ல் தடவையாக(அப்படித்தான் நினைக்கிறேன்ன்:)) இன்று புதன் புதிர் தமிழ் மணம் ஏறிவிட்டதூஊஊஊஊஊ:)..

    பதிலளிநீக்கு
  16. முதலாவது கேள்விக்கான பதில்.. 47 க்குப் பின்னால எனில்.. 16.

    78 க்கு முன்னால எனில் 109.....

    ஆவ்வ்வ்வ்வ் 1 க்கும் 3 க்கும் ஆன பரிசை கெதியா அதிராவுக்கே என அறிவிச்சிடுங்கோ.. மீ போகோணும்:).

    பதிலளிநீக்கு
  17. //ஸ்ரீராம். said...
    எனக்குக் கேட்கிறதே கில்லர்ஜி...!//

    என்ன கேட்கிறது? உங்களுக்கும் ஸ்ஸூஊ.. ஸ்ஸூ என்றுதானே கேட்கிறது?:) ஹையோ எனக்கென்னமோ ஆச்ச்ச்ச்:) இனிமேல் இங்கின நிண்டால்ல் ஆபத்து.. மீ ரன்னிங்:)

    பதிலளிநீக்கு
  18. நான் பொதுவாக புதன் கிழமை தளத்தை சும்மா பார்த்துச்செல்பவன்தான். இப்போது சொல்லப்பார்க்கிறேன்:
    1) 16
    2) சாய்ஸ்ல விட்டாச்சு
    3) ஆஹா! என்ன பாட்டு இது:

    கண்கள் இரண்டும் என்று உன்னைக் கண்டு பேசுமோ..
    காலம் இனிமேல் நம்மை ஒன்றாய்க்கொண்டு சேர்க்குமோ..
    கண்கள் இரண்டும் என்று உன்னைக் கண்டு பேசுமோ..

    நின்ற இடம் யாவும் நிழல்போலத் தோணுதே
    அன்று சொன்ன வார்த்தை அலைபோல மோதுதே..
    சென்ற இடம் காணேன்
    சிந்தை வாடலானேன்
    சேதிசொல்லும் யாரும்
    தூது செல்லக் காணேன்...

    என்றெல்லாம் கேட்பவரைக் கரைத்துவிடும் பாட்டு.
    படம்: மன்னாதி மன்னன். தேன்குரல்: பி. சுசீலா

    பதிலளிநீக்கு
  19. ஆவ்வ்வ்வ் 3 வது விடைக்கான பரிசு.. அதிராவுக்கும்.. ஏகாந்தன் அவர்களுக்கும் மட்டுமேஏஏ.. ஏன் தெரியுமோ..

    எல்லோரும் உம்மைக் கண்டு எனச் சொல்லியிருக்கினமே:)
    .. ஒருவேளை அப்படித்தான் வருமோ.. மீ தான் ரொம்ப அவசரப்பட்டுக் காரியத்தைக் கெடுத்திட்டமோ... ஆங் விடமாட்டேன்ன் அது ”உன்னைக் கண்டு” எனத்தான் வரும்... “உம்மை” என்பது யாழ்ப்பாணத்துப் பாசையாக்கும்:).

    பதிலளிநீக்கு
  20. சகோ ஏகாந்தன் - அது 'உன்னை' அல்ல - 'உம்மை'

    இரண்டாவது வரியாகிய 'காலம் இனிமேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ?' என்பதில் வரும் 'நம்மை' என்ற சொல்லின் ஓசைக்குப் பொருந்தும்படியாக 'உம்மை' என்ற சொல்லைக் கவிஞர் பயன்படுத்தியுள்ளார்.

    பதிலளிநீக்கு
  21. @அதிரா, @ராஜீவன் ராமலிங்கம்:

    சில இடங்களில் உன்னை என்றும், சில இடங்களில் உம்மை என்றும் நெட்டில் பார்க்கிறேன். ஆனால், ராஜீவன் சொன்னபடி இரண்டாவது வரியோடு ஒத்துப்போகுமாறு (உம்மை, நம்மை) உம்மை என்றுதான் கவிஞர் எழுதியிருக்கவேண்டும். நன்றி ராஜீவன்.

    அதிரா! பரிசு இல்லாமலேயே நாம் சொகுசுதான், விடுங்க!

    பதிலளிநீக்கு
  22. Li lithium ,k potassium and what is A GARRR :)
    If it was Au or Ag or Ar i would have mixed it :) ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேஜிஜி சார் இப்படியெல்லாம் யோசிக்கமாட்டார். La க்குப் பதிலா Li போட்டுட்டேன், mix பண்ணினா Kala காலா கருப்புன்னு சொன்னாலும் சொல்லுவார். இதுக்காக பொண்ணுகிட்ட இருந்த தனிம Table bookஐப் பறிச்சு விடையெழுத யோசிச்சீங்களே

      நீக்கு
  23. நான் வெர்றி பிசி :) பரிசை எல்லாருக்கும் விட்டு கொடுக்கறேன் :)
    தம ப்ளஸ் போட்டாச்

    பதிலளிநீக்கு
  24. அதிரா சொன்னா கரெக்ட்டா இருக்கும் அந்த காலத்து அரிசியாச்சே :) ஹா ஹா டங் ஸ்லீப்ட் அது அந்த காலத்து அரசி :)

    பதிலளிநீக்கு
  25. கண்கள் இரண்டும் பிண்ணனி இசை அருமையாக கேட்கிறது

    பதிலளிநீக்கு
  26. ///ஏகாந்தன் Aekaanthan ! said...

    சில இடங்களில் உன்னை என்றும், சில இடங்களில் உம்மை என்றும் நெட்டில் பார்க்கிறேன்//

    ஆங்ங்ங் இந்த டீலிங் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கூஊஊ:).. பரிசு எங்களுக்கே:).

    பதிலளிநீக்கு
  27. ///Angelin said...
    அதிரா சொன்னா கரெக்ட்டா இருக்கும் அந்த காலத்து அரிசியாச்சே :) ஹா ஹா டங் ஸ்லீப்ட் அது அந்த காலத்து அரசி :)///

    எனக்கடுத்து கோபு அண்ணனுக்குத்தான் டங்கு ஸ்லிப் ஆகிக்கொண்டிருந்துது இப்போ உங்களுக்குமா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. வயசான காலத்தில படிச்சா இப்பூடித்தான் ஆகுமாக்கும்:) எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:).

    பதிலளிநீக்கு
  28. //விடை தெரியாத கேள்விகள் எவ்வளவோ கேட்கலாம்.
    உதாரணம் : (1*) ஆங்கில எழுத்துகளில், எழுபத்தெட்டாவது எழுத்து எது?

    (2*) அடிப்படை நிறங்களில் நாற்பத்து ஏழாவது எந்த நிறம்? //

    &&

    // இந்த வாரக் கேள்வி:

    1) What comes in the place of _

    78 , 47, - //

    What is your 3rd* example please ? That decides the next number in this series..

    பதிலளிநீக்கு
  29. கோமதி அரசு அம்மா அவர்கள் சொன்னது சரி...

    அதற்கு பின் வரும் பாடல்களை கேட்டுக் கொண்டிருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  30. ஹலோ மைக் டெஸ்டிங்.... நான் இங்கே வந்தாச்சு! வாக்கு போட்டாச்சு!

    பதிலளிநீக்கு
  31. ச்யவனப்ரகாஷ் ஞாபகசக்திக்கா? எதுக்கு சாப்பிடறோம்னே மறந்தாச்சா? கேள்விகளுக்கு அப்புறம் வரேன்.

    பதிலளிநீக்கு
  32. 78, 47 - நிறைய விடை சொல்லலாம். கேள்வி முழுமையில்லை. 8ல பாதி 4லுல பாதி 2. 7 constant. 72 விடை. 78-47=31 அதனால் 16 விடை. இன்னொண்ணு, 7 X 11 + 1=78. 4X11+3=47. அதனால் 2X11+5= 27 விடை. கேஜிஜி சார் ச்யவனப்ரகாஷ் எக்குதப்பா வேலை செய்யுதா?

    பதிலளிநீக்கு
  33. பச்சைக்கிளி ஆனால் பறந்தோடிப் போகுமேக்கு முந்தி நிறுத்தியிருக்கீங்க. கண்கள் இரண்டும் வந்து உன்னைக் கண்டு பேசுமோ பாடல்

    பதிலளிநீக்கு
  34. யாரோ காலா சொன்ன மாதிரி இருந்ததெ .periodic table elements கூட பட்டுச்சே கண்ணில். எல்லாம் ப்ரமையா ஆவ் :)

    பதிலளிநீக்கு
  35. நல்லவேளையா லேட்டா வந்து பார்த்தேன். மண்டையைக் குழப்பிக்கலை! அங்கே ஏதேனும் இருந்தாத் தானே! :)

    பதிலளிநீக்கு
  36. என்னாது ச்ரவன்ப்ராஸ் ஞாபக சக்திக்கா?!!! ஏஞ்சல் வல்லாரை கொடுங்க கேஜிஜி சாருக்கு!!! நான் முன்னாடி எல்லாம் பார்க்காம கண்ணை மூடிக்கிட்டு அடிக்கறேன் கேஜிஜி! நம்புங்கோ!! 1. 27. 3. கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு

    2 ல்....ஏதோ ஒன்னு மிஸ்ஸிங்க் என்று படுது...இல்லை எனக்குத்தான் மூளை சரியா வேலை செய்யலையோ என்னவோ...

    கீதா

    பதிலளிநீக்கு
  37. இப்ப யாரு வீணை எல்லாம் வாசிக்கிறா?// ஆவி ராஜேஷ் வைத்தியா..வீணையில் வாசிக்கறாரே சினிமா பாடல்கள்!
    கீதா

    பதிலளிநீக்கு
  38. அது சரி வீணை நு கேஜிஜி சொல்லலையே...ஓ! முதல்ல அப்படித்தான் கேள்வியோ...மாத்திட்டீங்க போல.. நான் லேட்டா வந்ததுனால முதல்ல புரியலை...

    கீதா

    பதிலளிநீக்கு
  39. இங்கே வந்து முதலில் வீணை வாசித்தவர் கோவை ஆவி. வீணை என்றாலே, எனக்கு மேஜர் மாயவநாதனும், மாயாமாளவ கௌளையும் ஞாபகம் வரும்.

    பதிலளிநீக்கு
  40. வீணை என்றாலே, எனக்கு மேஜர் மாயவநாதனும், மாயாமாளவ கௌளையும் ஞாபகம் வரும்.// ஓ அப்படியொரு வித்வானா கேள்விப்பட்டதே இல்லையே கேஜிஜி சார்! கூகுள் உதவுவார் என்று நினைக்கிறேன்...பார்க்கிறேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  41. @ தில்லையகத்து/கீதா ரெங்கன், கேஜிஜி சொல்லி இருப்பவர் உ.பொ.ஆ. கதையில் வரும் மேஜர் மாயநாதன்! எனக்கும் வீணைன்னா முன்னெல்லாம் அதான் நினைவில் வரும். இதை இரண்டாம் முறையாகக் கூடப் போட்டாங்க குமுதத்திலே. என்னிடம் குமுதத்திலிருந்து கிழித்து எடுத்த பைன்டிங் இருந்தது. இப்போ எங்கே போச்சுனு தெரியலை! :)

    பதிலளிநீக்கு
  42. திடீர்னு ஆயிரத்தெட்டுக் கேள்விங்க கேட்டுட்டுக் கருத்தை அனுமதிக்குதே! என்ன விஷயம்?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!