வியாழன், 17 ஆகஸ்ட், 2017

செல்லாத பத்து ரூபாய் நாணயமும் கல்லா கட்டிய கடைக்காரரும் - அலுவலக அனுபவம்



     
     அலுவலக அனுபவம் எழுதி நீண்ட நாட்களாச்சு!  





     இதை எழுதி வைத்து மூன்று வாரம் ஆகிறது.  நேற்று தொலைக்காட்சியில் மறுபடி ஒரு செய்தி.  வங்கியிலேயே மறுபடியும் பத்து ரூபாய் நாணயங்களை வாங்கிக்கொள்ள மறுக்கிறார்களாம்!








     பழைய ஐநூறு ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த நேரத்தில் மக்களின் பதற்றத்தை அதிகரித்த ஒரு விஷயம்.  பத்து ரூபாய் நோட்டுகளும் ஐந்து மற்றும் இரண்டு ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தவர்கள் பெரிய மனிதர்களான நேரம்.  சில்லறையாக நாணயங்கள் வைத்திருந்தவர்களுக்கு மவுசு அதிகரித்தது.


     அப்போது அடுத்த கஷ்டம் வந்து சேர்ந்தது.


     பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது என்று ஒரு வதந்தி பரவியது.  அதில் நிறைய கள்ள நாணயங்கள் இருந்ததாம்!  எனவே அவைகளை வாங்கவே கடைக்காரர்கள் மறுத்து வந்தனர்.  செப்புப்பகுதி இப்படி இருக்கவேண்டும், அப்படி இருக்கவேண்டும், அப்போதுதான் செல்லும்  என்று நிறைய ஹேஷ்யங்கள் உலா வந்தன.  ஒரு கடைக்காரர் சொலவதற்கு முற்றிலும் மாறாக இன்னொரு கடைக்காரர் சொல்வார்.


                                              Image result for 10 rupees coins clip art images       Image result for 10 rupees coins clip art images


     பத்து ரூபாய் நாணயங்கள் வைத்திருந்தவர்கள் நொந்து போயிருந்த நேரம்.   அந்த காலகட்டத்தில் இது ஒரு வங்கியில் நடந்த அனுபவம்.  வங்கியில் வேலை பார்க்கும் நண்பர் சொன்ன அனுபவம்.  


     ஒரு வாடிக்கையாளர் நிறைய பத்து ரூபாய் நாணயங்களைக் கொண்டுவந்து தன் கணக்கில் செலுத்தினார் .  முதலில் வங்கிகளிடமும் குழப்பம் இருந்தாலும், ஏதோ அரசு ஆணை வந்ததாய் நினைவு.  வங்கிகள் மறுக்காமல் அந்நாணயங்களை வாங்கி வந்த நேரம்.  இது,  அதாவது அந்த வாடிக்கையாளர் பத்து ரூபாய் நாணயங்கள் கொண்டுவந்து கணக்கில் செலுத்துவது, ஒருநாள் இரண்டு நாள் என்று பலநாள் தொடர்ந்து கொண்டே இருந்திருக்கிறது.


   ஒரு கட்டத்தில் அலுத்துப்போன காசாளர் நொந்து போனார்.  மறுக்கவும் முடியவில்லை.  பொறுத்துக் கொள்ளவும் முடியவில்லை.  எப்படி, இவருக்கு தினமும் இவ்வளவு நாணயங்கள் கிடைக்கிறது?  


     அவர் இதை என் இந்த நண்பரிடம் பகிர்ந்து கொண்டார்.  என் நண்பர் விருப்ப ஒய்வு வாங்கியிருந்தாலும் அடிக்கடி  வங்கிக்குச் சென்று நண்பர்களுக்கு  உதவுபவர்.  அவர்  என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொண்டார்.  அடுத்தமுறை அந்த வாடிக்கையாளர் வந்ததும் எப்படிப் பேசவேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்.


     அதாவது அந்நபர் ஒரு வியாபாரி.  அதைப் பற்றிச் சொல்லிக் கொள்ளாமல் சேமிப்புக்கணக்கு வைத்திருந்தார்.  வியாபாரி என்றால் நடப்புக் கணக்கு வைத்துக் கொள்ளவேண்டும்.  இந்த வியாபாரி "செல்லாத"  பத்து ரூபாய் நாணயங்களை தான் வாங்கிக் கொள்வதாகச் சொல்லி அந்த நாணயங்களை வாங்கிக் கொண்டு அதன் மதிப்புக்குக் குறைவான பணத்தை நாணயம் தந்தவர்களிடம் கொடுத்து வியாபாரம் செய்து வந்தது புரிந்தது!


   அடுத்த முறை அவர் வந்ததும்  "ஒரு நிமிஷம் இருங்க...  நீங்க வந்ததும் மேனேஜர் சொல்லக் சொன்னார்..."  என்று சொல்லி அதிகாரி அறைக்குச் சென்று ஏதோ பேசியவர், தலையாட்டிவிட்டு, இவரிடம் வந்தார்.  





     அவர் பற்றிய விவரங்களை வங்கித் தலைமையகம் கேட்டதாகச் சொன்னார் காசாளர்.    நிறைய பத்து ரூபாய் நாணயங்களை அடிக்கடி சென்று கட்டும்போது கேள்வி வந்ததாகச் சொன்னார்.  பெயர், முகவரி,  இருப்பிடச் சான்றிதழ், ஆதார் இருந்தால் அது எல்லாம் வேண்டும் என்று அடுக்கினார்.  மேலும் வியாபாரம் செய்பவர்களால்தான் இப்படி சில்லறையாக தினசரி வந்து கட்டமுடியும் என்று சந்தேகப் படுவதாகவும் அவர்கள் எப்படி நடப்புக்கணக்கு வைத்துக் கொள்ளாமல் சேமிப்புக் கணக்கு வைத்துக் கொள்கிறார்கள் என்று கேட்பதாகவும் சொல்ல,


     அன்று கட்டிவிட்டுச் சென்றவர் மறுபடி வரவில்லை!




பின் குறிப்பு :

சம்பவத்தில் வரும் கடைக்காரருக்கும், நேற்று தொலைக்காட்சியிலிருந்து எடுக்கப்பட்ட  படத்தில் இருக்கும் கருத்து சொல்பவருக்கும் சம்பந்தம் எதுவும் இல்லை.



படங்கள் :  நன்றியுடன் இணையத்திலிருந்தும்...


******************************************************************************


     நண்பர் ராஜீவன் ராமலிங்கத்தை ஃபேஸ்புக்கில் சந்தித்தபோது நண்பர்களுக்கெல்லாம் ஒரு தகவல் சொல்லச் சொன்னார்!









22 கருத்துகள்:

  1. செல்லாக்காசு செல்லுவதற்கு இப்படியும் ஒரு வழியா!..

    பதிலளிநீக்கு
  2. நல்ல கதை. என்ன் கிட்டேயும் பத்து ரூபாய் நாணயங்கள் இருந்தன. அவற்றைக் கடைகளில் கொடுத்துச் செலவு செய்ய முடிந்ததே! :)

    பதிலளிநீக்கு
  3. 10 ரூபாய் நாணயங்கள் எடுத்துக் கொள்கிறார்கள். சில்லறையாகத் தரவும் செய்கிறார்கள். பிரச்சனை எதுவும் இதுவரை இல்லையே!

    கீதா: எனக்கும் எந்தப் பிரச்சனையும் இதுவரை இல்லையே! இப்படி எல்லாம் கதையா...இப்படி டி வி யிலும் வந்தால் அப்புறம் இருக்கும் காசு செலவாகாமல் ஆகிடுமே! யாருப்பா இப்படி எல்லாம் கதை கட்டி விடுறாங்க....

    பதிலளிநீக்கு
  4. ரா ரா ரொம்ப நாளாயிற்றே காணவில்லையே ஏன் வரவில்லை என்று நினைத்தேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  5. பத்து ரூபாய் காசு பல இடங்களில் பிரச்சனை

    பதிலளிநீக்கு
  6. 35 வருடத்துக்கு முன்னால், ஒரு ரூபாய் காயினில் கீழே புள்ளி வைத்திருந்தால் அது வெள்ளியினால் செய்யப்பட்டது என்று சிலர் சொல்ல, என் உறவினர் ஒருவர் புள்ளி இருந்த ஒரு ரூபாய் காயினாக பதுக்கினார். அது அவருக்கு உபயோகப்பட்டதா என்று தெரியவில்லை.

    அம்பானியின் தந்தையும் ஆப்பிரிக்காவில் முதன் முதலில் வியாபாரம் ஆரம்பித்த காலத்தில் இதுபோல நாணயத்தை கொஞ்சம் காசு அதிகம் கொடுத்து வாங்கி அதனை உருக்கி நிறைய சம்பாதித்ததாகப் படித்திருக்கிறேன்.

    சமயத்தில் புரளிகளால் கஷ்டங்களும் லாபங்களும் வருவது சகஜம்தான்.

    பதிலளிநீக்கு
  7. ஒரு சமயம் 5 ரூபாய் நோட்டை எப்படிக் கொடுத்தாலும் பொது ஜனங்கள் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப் பட்டார்கள்; அப்போது 5 ரூபாய் நாணயத்திற்கு ஏற்பட்ட மவுசு இன்றும் குறையவில்லை. அதேபோன்ற நிலைமை, இன்னும் கொஞ்சநாளில் 10 ரூபாய் நோட்டிற்கும் வரும்போது, இந்த 10 ரூபாய் நாணயத்திற்கு அலைய வேண்டிய ஒரு காலமும் வரும். ( அரசாங்கமே 10 ரூபாய் நோட்டு அச்சடித்தது போதும் என்று நிறுத்தும் காலமும் வரும்).

    அரசாங்கம் வெளியிட்ட, நாணயங்களை பொது மக்கள் மத்தியில் புழங்க விடுவதற்குத்தான் வங்கிகள் செயல்பட வேண்டுமே தவிர, வெளியில் விட்ட நாணயங்களை மறுபடியும் வங்கியில் வாங்கி மூட்டை கட்ட அல்ல.
    ஒரு சேமிப்புக் கணக்கில், அடிக்கடி பண வரவு, செலவு அதிகம் இருந்தால் (அதாவது எண்ணிக்கை) அந்த கணக்கு உள்ள வாடிக்கையாளரை விசாரிக்க, கிளை மேலாளருக்கு அதிகாரம் உண்டு.

    ( அரசாங்கம் மற்றும் வங்கியின் சட்ட திட்டங்களை, பொது ஜனங்கள் மத்தியில் நிறைவேற்றுவதில், வங்கி ஊழியர்களுக்கு நிறையவே இடர்ப்பாடுகள் )

    பதிலளிநீக்கு
  8. இப்படியும் ஒரு தந்திரமா :)

    ராஜீவன் தகவலுக்கு நன்றி ,அதிராவைப் பார்த்தால் கேட்டதா சொல்லுங்க ஜி :)

    பதிலளிநீக்கு
  9. அடடா! நேத்துதான் ஒரு பாட்டி வந்து தன்கிட்ட பத்து ரூபாய் நாணயங்கள் நிறைய இருக்குறதாகவும், அதை மாமா பேங்க்ல கொடுத்து மாத்தி கொடுக்க முடியுமான்னு கேட்டுச்சு...

    மாமா வீட்டில் இல்ல பாட்டி, இப்பலாம் வாங்கிப்பாங்க.. கடையிலேயே கொடுங்கன்னு சொல்லிட்டேன்.

    நல்ல பிசினெஸ் கைநழுவி போச்சே!

    பதிலளிநீக்கு
  10. பத்து ரூபாய் நாணயங்களை பலரும் வாங்க மறுத்த பொழுது எங்கள் வீட்டுக்கு அருகில் காய்கறி விற்கும் பெண்மணி மறுக்காமல் வாங்கி கொண்டார். கோயம்பேட்டில் கொடுத்து மாற்றி விடலாம்மா என்றார்

    பதிலளிநீக்கு
  11. கோயம்புத்தூர் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதியில் பத்து ரூபாய் தகராறு நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. வங்கி பணியாளர்கள் செய்யும் தவறு இது. அவர்கள் எனக்கு ரூ.2000-க்கு பத்து ரூபாய் நாணயங்கள் தந்தார்கள். ஆனால் வாடிக்கையாளர் கட்டுவதற்கு சென்றால் மறுக்கிறாரகள் இதுதான் தொழில் தர்மமா ?

    பதிலளிநீக்கு
  12. பத்து ரூபாய் நாணயங்கள் பற்றி தி தமொழிளங்கோ ஒரு பதிவு எழுதீருந்தார் அதில் பத்துரூபாய் நாணயங்கள்பலவடிவிலிருந்ததாக நினைவு. அது சரி ப ரு. நாணய்ங்கள் செல்லுமா செல்லாதா அரசு ஆணை ஏதாவதுஇருக்கிறதா

    பதிலளிநீக்கு
  13. தி தமிழ் இளங்கோ என்று வாசிக்கவும்

    பதிலளிநீக்கு
  14. நல்ல தகவல். 500 ரூபாய்க்கும் ஏதாவது வழி பிறந்தால் பரவாயில்லை. வெளி நாட்டில் இருக்கும் மகன் தந்தை திதிக்காக மாற்றிய பணம் தேங்கிவிட்டது. என்னவோ வேதனைப்பா.

    பதிலளிநீக்கு
  15. //( அரசாங்கம் மற்றும் வங்கியின் சட்ட திட்டங்களை, பொது ஜனங்கள் மத்தியில் நிறைவேற்றுவதில், வங்கி ஊழியர்களுக்கு நிறையவே இடர்ப்பாடுகள் ) //

    திரு. தமிழ் இளங்கோ சொல்வது உண்மையே. பணத்தாள்களில் ஏதாவது கிறுக்கி இருந்தாலோ, கையெழுத்து போட்டிருந்தாலோ வெளிப்புழக்கத்தில் வேறு வழியில்லாமல் வாங்கி விடுவேன். ஆனால் வங்கிகளில் தந்தால் கண்டிப்பாக வாங்க மறுத்து விடுவேன்.
    இவர்களிடமிருந்து வெளியே போகும் பணத்தில் இவர்கள் கவனமாக இருந்தால் நாளாவட்டத்தில் பணத்தாள்களில் மக்கள் எழுதவோ கிறுக்கவோ தவிர்ப்பார்களே என்ற எண்ணத்தில்.

    சமீபத்தில் ஒரு வங்கியில் அப்படிக் கெயெழுத்திட்டிருந்த பணத்தாட்களைத் திருப்பித் தந்து விட்டு, "இப்படியான கரன்ஸிகளை நீங்கள் மக்களிடம் வாங்காமல் தவிர்க்கலாமில்லையா?.. பணத்தாட்களில் கிறுக்காமல் இருக்கும் விழிப்புணர்வு ஏற்படுமில்லையா?" என்றேன்.

    எனக்கு மாற்றுக் கரன்ஸி தந்து விட்டுச் சொன்னார்: "செய்யலாம் தான். ஆனால் கேஷ் மிஷின்களில் இப்படியான கரன்ஸிகள் உள்ளீடு செய்யும் பொழுது, நாங்கள் என்ன செய்ய முடியும், ஐயா?" என்றார்.

    அவர் சொன்னது நியாயமாகத் தான் பட்டது. ஒரு விஷயத்தை மக்களிடம் அமுலுக்குக் கொண்டு வரும் பொழுது அந்தத் திட்டங்கள் வெற்றிகரமாக நடைபெற பலவிதப் பார்வைகள் அரசில் செயலாற்றுவோருக்கு இல்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  16. எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் கடைக்காரர் வாடிக்கையாளர்களிடம்
    பத்து ரூபாய் நாணயம் செல்லும் என்று வாங்கி கொள்வார் , புதிதாக வருபவரிடம் வாங்க மாட்டார்.
    கேட்டால் வேறு எங்கும் வாங்க மறுக்கும் போது மட்டும் நம்ம கடையா என்பார்.
    சில தொழில் தர்மங்கள்!

    ராஜீவன் ராமலிங்கம் நலம் விசாரிப்புக்கு நன்றி .

    பதிலளிநீக்கு
  17. செல்லாக் காசென்று கல்லா கட்டியவரை பற்றி நல்லா சொன்னீங்க !

    பதிலளிநீக்கு
  18. மூத்த வலைப்பதிவர் ஜீ.எம்.பி அவர்கள் , எனது வலைப்பதிவைப் பற்றி இங்கு கூறியுள்ளார். அவருக்கு நன்றி. எனது பதிவின் தலைப்பு ”பத்து ரூபாய் நாணயம்’ http://tthamizhelango.blogspot.com/2017/01/blog-post_9.html என்பதாகும்.

    பதிலளிநீக்கு
  19. நேற்றுதான் பத்து ரூபாய் நாணயங்களை ஏற்க மறுத்தார் இஸ்திரி போடுகிறவர். தொடர்ந்து உங்கள் பதிவு.

    வங்கிக் காரர் சற்று தாமதமாகதான் விழித்துக் கொண்டிருக்கிறார்..

    பதிலளிநீக்கு
  20. மொத்தத்தில் எல்லா நோட்டும் செல்லாது என்றாகி காசே இல்லாமல் அக்கால பண்டமாற்று முறை வந்தாலும் ஒன்றும் சொல்ல முடியாது போலவே?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!