திங்கள், 28 ஆகஸ்ட், 2017

"திங்க"க்கிழமை 1700828 : இட்லி மிளகாய்ப்பொடி - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி



     இட்லி மிளகாய்ப்பொடி
(அல்லது தோசை….) எனக்கு சட்னி, சாம்பாரைவிட ரொம்பப் பிடித்தமானது. எனக்கு யாரும், மோர் சாதம், 2 தோசை (மாவு தோசைனாலும் ஓகே), மிளகாய்ப்பொடி/நல்லெண்ணெய் போட்டா, உடனே தட்டைத் தூக்கிக்கிட்டு உட்கார்ந்துடுவேன். எனக்கு ரொம்ப ஃபேவரைட் உணவு இது. இதை எழுதும்போதே எங்க அம்மா எனக்குச் செய்துபோட்டதெல்லாம் என் ஞாபகத்தில் வருது. இப்போவும் ஊருக்கு வந்தேன்னா, என் ஹஸ்பண்டை இதுதான் பண்ணச்சொல்லுவேன். அதேமாதிரி, நான் இங்கு திரும்ப வரும்போது, மிளகாய்பொடி தடவின இட்லி பாக்கெட்டோ, தோசை பாக்கெட்டோ எடுத்துக்கிட்டு வருவேன். உங்க எல்லாருக்கும் மிளகாய்ப்பொடி பிடிக்கும்னு நினைக்கறேன்.  மிளகாய்ப்பொடில, பூண்டு போட்டிருந்தா எனக்குப் பிடிக்காது. எங்க வழக்கம், பெருங்காயம் சேர்க்கறதுதான்.

     சமீப காலம்வரை, மிளகாய்ப்பொடிக்கு என் ஹஸ்பண்டைத்தான் நான் எதிர்பார்ப்பேன். நான் ஊருக்குப்போகும்போது அவ ரெடியா செய்து வைத்திருப்பா. நான் எடுத்துக்கிட்டு வந்திடுவேன். அதுக்கு முன்னால, எங்க அப்பா இருக்கும்போது, அம்மாட்ட சொல்லுவேன். அம்மா நிறையச் செய்து, எங்க அப்பா அதை பெர்ஃபெக்டா பேக் பண்ணித் தருவார்கள். கடந்த ரெண்டு மாசமாத்தான், நானே மிளகாய்ப்பொடி பண்றேன். நல்லா வருது, இருந்தாலும் ஹஸ்பண்ட் கொடுக்கற, எங்க அம்மா கொடுத்த ஃபீல் வர்றதில்லை.

     இப்போ, நான் மிளகாய்ப்பொடி செய்யும் முறை.



     தேவையானவை – வற்றல் மிளகாய் 30, கறுப்பு எள் 1/3  கப், 1/3 கப் உளுத்தம்பருப்பு, 1/3 கப் கடலைப் பருப்பு, கட்டிப் பெருங்காயத் துண்டு 3



     எனக்கு மிளகாய்ப்பொடி நல்ல நிறமா இருக்கணும். அதுக்காக இந்தத் தடவை பெங்களூரில், ‘காஷ்மீர் மிளகாய்’ வாங்கினேன். காஷ்மீர் மிளகாய் நிறம் கொடுக்கும் ஆனால் காரம் இருக்காது. அதுக்காக நம்ம ‘செத்தல்’ மிளகாயும் சேர்த்துக்கொண்டேன். 20 காஷ்மீர் மிளகாய், 12 நம்ம வற்றல் மிளகாய். இது ரெண்டையும் கொஞ்சம் எண்ணெய் விட்டு வாணலியில் வறுத்துக்கொண்டேன். அதோட கட்டிப் பெருங்காயம் கொஞ்சம் சேர்த்துக்கொண்டேன்.  அதைத் தனியாக ஒரு தட்டில் வைத்துவிட்டேன்.



     மீண்டும் வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு (1/2 ஸ்பூனே போதும்) கடலைப் பருப்பையும் உளுத்தம்பருப்பையும் வறுத்துக்கொண்டேன். வறுத்த வாசனை வரணும்.  தனியா ஒரு வாணலியில், எண்ணெய் இல்லாமல், எள்ளை ரொம்ப லைட்ட வறுத்தோம்னா எள் வெடிக்கும். உடனே எள்ளைத் தனியாக எடுத்துவைத்துவிடுங்கள். அப்படி தனி வாணலில பண்ணலைனா, க.பருப்பு/உ.பருப்பு வறுத்துமுடிச்ச உடனே, எள்ளைச் சேர்த்தால் டப் டப் என்று எள் வெடிக்க ஆரம்பிக்கும் (1/4 நிமிஷம்கூட ஆகாது). அடுப்பை அணைத்துவிட்டு, வாணலியில் சூட்டிலேயே எள்ளைக் கலக்கவும். பின்பு இவைகளை ஒரு தட்டில் கொட்டி ஆறவைக்கவும்.




     இப்போ எல்லாம் ரெடி. எல்லாம் கொஞ்சம் ஆறியாச்சுன்னா, மிக்சில போட்டு அரைக்கவேண்டியதுதான். அரைக்கும்போதே தேவையான உப்பையும் சேர்த்துக்கோங்க. கர கரன்னு அரைச்சா மதி. அப்புறம் அதை ஒரு பாட்டலில் வைத்து, துளி ஆறினவுடனே வாசனை போயிடாம மூடிபோட்டு மூடிவைக்கவேண்டியதுதான். நான் இதனை ஃப்ரீசரில் வைத்துவிடுவேன். அதுனால 1-2 மாசம் ஆனாலும் வாசனை போகாது. அப்போ அப்போ கொஞ்சம் கொஞ்சமா செய்துகொள்வது நல்லதுதான்.



     வாசனையா மிளகாய்ப்பொடி ரெடி பண்ணினால் என்னால் சும்மா இருக்கமுடியாது. உடனே இட்லி, தோசை செய்து தொட்டுக்கொண்டு சாப்பிடுவேன் (ரொம்ப புதிதாக இருக்கும்போதே). அன்றைக்கு இட்லி செய்து, மிளகாய்ப்பொடி தடவி, ஆபீசுக்கு லஞ்சுக்கு எடுத்துக்கொண்டு சென்றேன். (மனசு இதுலயே இருந்ததனால, லஞ்ச் டயம் வரைக்கு காத்திருக்காமல், ஆபீஸ் வந்தவுடனேயே சாப்பிட்டுவிட்டேன்)  [ ஹா...  ஹா... ஹா...  இது போல நானும் இட்லி, தோசை எடுத்துச் செல்வதுண்டு.  எங்கள் அலுவலகத்தில் இதற்கு நிறைய டிமாண்ட்! - ஸ்ரீராம் ]





     மிளகாய்ப்பொடிக்கு, செக்கு நல்லெண்ணெய் விட்டு சாப்பிட்டால்தான் ரொம்ப நல்லா இருக்கும். (இதுக்காகவே லிட்டர் 285 ரூபாய்க்கு தாம்பரத்தில் செக்கில் ஆட்டிய எண்ணெய் இந்தத் தடவை வாங்கிக்கொண்டுவந்தேன். 

 
     அவங்க என்ன போட்டிருக்காங்கன்னா, 1 லிட்டர் நல்லெண்ணெய் உற்பத்திச் செலவே 290 ரூ. அதை எப்படி 200 ரூபாய்க்குக் கொடுக்க முடியும். 280 ரூபாய்க்குக் குறைவா வாங்கற எண்ணெய் எல்லாமே கலப்படம் அப்படிங்கறாங்க. அவங்க சொல்றதையும் கீழ பார்த்துக்குங்க. (அவங்க கான்டாக்ட் எண்களை கட் செய்துவிட்டேன்)


     [ சிலபேர் மிளகாய்ப்பொடியில் நெய்யோ, தேங்காய் எண்ணெயோ சேர்த்துக் குழைத்துச் சாப்பிடுவார்கள்.  எனக்கு அதெல்லாம் இஷ்டமில்லா!  நல்லெண்ணெய் - அதுவும் செக்கு நல்லெண்ணெய்தான்! - ஸ்ரீராம் ]

அன்புடன்,

நெல்லைத்தமிழன்.





74 கருத்துகள்:

 1. மிளகாய் பொடிக்கு நல்லெண்ணையே சரி.

  பதிலளிநீக்கு
 2. TM 4 எங்க வீட்டில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தோசை அல்லது இட்லிதான் காலை டிபன் அல்லது இரவு டிபன் அதனால் மிளகாய் பொடி எப்பவும் ஸ்டாக் இருக்கும்.... நான் அரைக்கும் மிளகாய் பொடியில் ஒன்றோ அல்லது இரண்டோ பூண்டு சேர்பதுண்டு அது மட்டுமல்லாமல் கருவேப்பிலையும் சிறிது சேர்பதுண்டு... அப்படி சேர்த்து அரைக்கும் வாசனை மனதை தூக்கி செல்லும்

  பதிலளிநீக்கு
 3. எனக்கு சிறு வயதில் என் வீட்டில் தயிர் சாதம் என்ற பட்ட பெயர் உண்டு தயிர் ஊறுகாய் என்றும் என் ஃபேவரிட் அது போல தோசையும் என் ஃபேவரிட்

  பதிலளிநீக்கு
 4. இட்லி மிளகாய் பொடி பார்க்கவே அழகாய் இருக்கிறது.
  நாங்கள் செய்வது போலவே இருக்கிறது. எள் சேர்த்தும் எள் இல்லாமலும் செய்வோம். காரம் கொஞ்சம் குறைவாய் இருக்கும் எங்கள் வீட்டில்.
  இட்லியும் மல்லிகைபூ போல் இருக்கிறது. உங்கள் ஆபீஸில் உங்களை சாப்பிட விட்டார்களா?
  இட்லி மிளகாய்பொடிக்கு ஆசை படுவார்களே! காரம் சிலர் சாப்பிட மாட்டார்கள் இல்லையா?

  பதிலளிநீக்கு
 5. என் ஃபேவரிட்!!! எங்கள் வீட்டில் எல்லோருக்குமே ஃபேவரிட். என்னதான் சாம்பார், சட்னி இருந்தாலும் மிளகாய்பொடி இல்லை என்றால் எல்லோரும் நான் பொடி செய்யும் வரை வெயிட் செய்தே சாப்பிடுவார்கள். குறிப்பாக மகன்.!! இப்போது மகன் இங்கு இல்லையே என்று இருக்கு. அவனுக்கும் இப்படித்தான் தடவிக் கொடுத்துவிடுவேன். அந்த நலலெண்ணையில் (செக்க் நல்லெண்ணைதான்!! பெஸ்ட். மணம் ஆஹா! திருக்குறுங்குடியில் செக்கில் ஆட்டிக் கொடுப்பதை என் அப்பா அங்கு சென்றால் வாங்கிவந்துவிடுவார். அப்பாவின் ஊர்!) மிளகாய்ப்பொடியில் அது ஊறி அந்தச் சுவை!!! ஆஹா!!

  உங்கள் இட்லி படம் மனதை அள்ளுகிறது. நாவில் நீர் ஊறிவிட்டது.

  மிளகாய்ப் பொடி தீர்ந்துவிட்டது வீட்டில் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தேன். இன்று உங்கள் ரெசிப்பிதான். இதுவரை கையால் அளந்துதான் போடுவேன். இதே 30 மிளகாய் ஆனால் இதுவரை செத்தல்தான் பயன்படுத்தியிருக்கேன். காஷ்மீரி போட்டால் நல்ல நிறம் கொடுக்கும். க்ரேவிகளுக்குக் கூட காஷ்மீரி சில்லி பௌடர் போட்டால் நல்ல நிறம் கொடுக்கும்.

  உங்கள் அளவுகளைக் குறித்துக் கொண்டுவிட்டேன் . இதோ செய்துவிட்டு மாலைக்குள் கமென்ட் போடுகிறேன்....

  கீதா

  பதிலளிநீக்கு
 6. ஹாங்க்.....நெல்லை முதலில் எள்ளை வறுத்துவிட்டு அப்புறம் எண்ணை விட்டு மற்றதை வறுக்கலாமே!!! அப்படித்தான் நான் செய்கிறேன் ஸோதாட் ஒரே வாணலி! தேய்த்தால் போதுமே...அதான்...

  கீதா

  பதிலளிநீக்கு
 7. சரி 30 சில்லி ஓகே! கப் என்பது எந்த அளவு? நார்மலாக மெஷரிங்க் கப் என்று கடைகளில் 1, 1/2, 1/3, 1/4 என்று வைத்திருப்பார்களே அந்த கப் அளவா அல்லது வீட்டு ஆழக்கு அளவா? நெல்லை எங்கிருந்தாலும் இதுக்கு மட்டும் சீக்கிரம் பதில் சொல்லிட்டுப் போங்க.....அடுப்புல வாணலி வைக்கப் போறேன்... ஹிஹிஹிஹி

  கீதா

  பதிலளிநீக்கு
 8. வாயில கை வைச்சு கத்தறேன் வெகு தூரத்தில் இருக்கும் உங்கள் காதுல விழனும்னு...சினிமா போல...அப்படி நினைச்சு வாசிங்க மேல உள்ள கமென்டை ஹாஹாஹாஹா...

  கீதா

  பதிலளிநீக்கு
 9. உங்க வீட்டுல இருக்கற குழிக்கரண்டியை உபயோகப்படுத்துங்க. அதாவது இட்லி அல்லது தோசை வாக்க எடுக்கற கரண்டி. அதுல 1 கரண்டி மட்டா போதும். கொஞ்சம் குறைவா உபயோகப்படுத்தினாலும் ஓகே. எனக்கு மிளகாய் நிறைய தெரியணும். இதுல 30 மிளகாய் நல்ல நீளம் என்று நினைக்கிறேன் (திருவமாற உபயோகப்படுத்தும் மிளகாய் இல்லை).

  பதிலளிநீக்கு
 10. எங்க வீட்டிலயும் எல்லாருக்கும் ரொம்ப இஷ்டம்..

  நாங்க இப்படியும் செய்வோம்...

  ஆன நான் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதரி செய்வேன்..

  பொடி அரைக்கரதுக்கு முன்னே ..பசங்கள்ட என்ன கலர் பொடின்னு கேட்பேன்...

  பச்சை னா கறிவேப்பிலை அதிகம்...வெள்ளை ன உளுந்து அதிகம்...

  சிகப்பு ன வரமிளகாய் அதிகம்...

  சில நேரம் பிளக்ஸ் சீட்ம், கொள்ளும் சேர்ப்பேன்..


  பொடி போட்ட இட்லி...கம கம..

  பதிலளிநீக்கு
 11. ஆஆஆவ்வ்வ்வ்வ் மை பேவரிட் ரெசிப்பி... செய்ய செய்ய சுவை சரியா வருதேயில்லை... இம்முறை முயற்சிக்கிறேன்...
  இன்னும் எதுவும் படிக்கல்ல... கொஞ்சம் லேட்டா வந்து அடிச்சு பதில் போடுறேன்... மை வச்சாட்ச்ச்ச்ச்:).

  பதிலளிநீக்கு
 12. ///நானே மிளகாய்ப்பொடி பண்றேன். நல்லா வருது, இருந்தாலும் ஹஸ்பண்ட் கொடுக்கற, எங்க அம்மா கொடுத்த ஃபீல் வர்றதில்லை.///

  ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அது நெல்லைத்தமிழன்.. ஃபீல் எல்லாம் ச்ச்ச்ச்சும்மா வராது.. பொடி செய்யும்போதே.. ஒருவித லவ் உடனும் அன்புடனும் ஆசையுடனும் பாசத்துடனும் செய்யோணும் அப்போதான் ஃபீல் வரும்:))..... சமைக்கும்போது ஹேமமாலினியை நினைச்சால்ல்ல்ல்ல்?:)) ஹையோ வெரி சொறி;... அவ ஸ்ரீராமின் ஆள் மாறிச் சொல்லிட்டேன்ன்ன்ன்:) ராதா தானே நெ. தமிழனின் பேவரிட்:).. சரி விடுங்கோ:)..

  பதிலளிநீக்கு
 13. நான் ஜப்பான் சென்றிருந்தபோது அங்கு உபயோகிக்க மிளகாய்ப் பொடி எடுத்துச் சென்றேன் விமான நிலையத்தில் அதுஏதோபோதைப் பொருளோ என்று சந்தேகத்தோடு நிறையவே விசாரித்தார்கள்

  பதிலளிநீக்கு
 14. ///கறுப்பு எள் 1/3 கப்,///

  ஆங்ங்ங் இங்குதான் நான் தப்புச் செய்கிறேனோ? நான் பாவிப்பது வெள்ளை எள்ளு.. அது சூடுகண்ட உடனேயே காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி விடுகிறதே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அப்போ பொடியாக எப்பூடி வரும்..

  ///‘காஷ்மீர் மிளகாய்’ வாங்கினேன். காஷ்மீர் மிளகாய் நிறம் கொடுக்கும் ஆனால் காரம் இருக்காது.///
  படம் பார்த்ததும் காஷ்மீர் மிளகாய் என நினைச்சுட்டேன்.. நானும் வீட்டில் இதைத்தான் பாவிப்பதுண்டு.. தாளிதங்களுக்கும் மற்றும் அரைத்துச் சேர்ப்பதற்கும்.. காரம் இல்லை கலர் உண்டு அதே அதே அதிரபதே.. ஹையோ கோபு அண்ணன் அடிக்கப்போறார்ர்.. தன் வசனத்தைச் சொல்லிட்டேன் என:).

  பதிலளிநீக்கு
 15. /// எள்ளைச் சேர்த்தால் டப் டப் என்று எள் வெடிக்க ஆரம்பிக்கும் (1/4 நிமிஷம்கூட ஆகாது).//
  எனக்கு இதுவரை எள்ளு வெடிச்சதே இல்லை ஹையோ ஹையோ ஸ்ஸூ ஸ்ஸூ என்றாகிவிடுகிறது:).

  // (இதுக்காகவே லிட்டர் 285 ரூபாய்க்கு தாம்பரத்தில் செக்கில் ஆட்டிய எண்ணெய் இந்தத் தடவை வாங்கிக்கொண்டுவந்தேன். //
  திரைகடல் ஓடியும் திரவியம் தேடியோரைப் பார்த்ததுண்டு:) தாம்பரம்போயீஈஈஈஈஈஈ நல்லெண்ணெய் வாங்கி, அதை பயணத்தில் காவி வந்தவரை இப்போதான் பார்க்கிறேன்ன் கர்:) அதுசரி எங்களை எல்லாம் பயணத்தின் போது நல்லெண்ணெய் எடுத்துச் செல்ல விடமாட்டினம்.. அது பக்கத்து ஊருக்குப் போவதாயினும்.. நீங்கள் அப்படி ஏதும் கவனிப்பதில்லையா? எங்களுக்கும் இதில் நம்பிக்கை இல்லை ஆனால் பெரியவர்கள் சொல்லும்போது அதை மீற மனம் வருவதில்லை.

  பதிலளிநீக்கு
 16. உண்மையில் இதில விசேசம் என்னன்னா.. பொடி செய்ததை விட, அதை எப்படி இட்லியில் பிரட்டிச் சாப்பிடோணும் எனக் காட்டியிருக்கிறீங்க பாருங்கோ அதுதான் சூப்பர். நான் ச்ச்சும்மா ட்பொடியில் தொட்டு சாப்பிட்டுப்பார்த்தேன் பெரிதாக எழும்பல்லே:) இப்போ கண்டு பிடிச்சிட்டேன்ன் இனி நல்லெண்ணெயில் குழைத்து....... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆஆஆஆஆஆஆ:)..

  இன்றே செய்யலாம் ஆனா கறுப்பு எள் இல்லயே.. வெள்ளைதானே இருக்கூஊஊஊஉ.. அஞ்சூஊஊஊஊஊஊஊஊஊ கொஞ்சம் கறுப்பு எள் கடனாத்தர முடியுமோ? நாளைக்கு ரெஸ்கோவில வாங்கிட்டுத்தாறன்ன்:).. சே..சே.. கூப்பிட்டாலும் வரமாட்டேன் என அடம் புய்க்கிறா:)...

  சரி சொல்ல மறந்திட்டேன்ன்.. இன்று உண்மையில் உங்கள் குறிப்பு சூப்பர் நெ.த.. நாவில் நிஜமா ஊற வைக்கிறது...

  பதிலளிநீக்கு
 17. நெ த குழி கரண்டி ஆஹா எங்கள் வீட்டில் வித விதமான சைசில் குழம்பு குழி கரண்டி உண்டே!! ஹிஹிஹி...எந்தக் குழி கரண்டி என்று கொஞ்சம் மண்டையைக் குழப்பிக் கொண்டு...அதுக்கும் உங்களைக் கூப்பிட்டால் வேண்டாம் டிஸ்டர்ப் செய்ய வேண்டாம் என்று 1/3 கப் எங்கிட்ட இருக்கே அதை வைத்து அளந்து செய்துவிட்டேன். நன்றாகவே வந்தது. முதல் போணி...கினி பிக் என் அப்பாவை அழைத்தேன். எனக்குத்தான் ஸ்மெல் தெரியாதே அதனால் அதன் சுவையும் தெரியாதே!!! என் அப்பா நிறத்தைப் பார்த்ததும் இது என்ன மிள்காய்ப் பொடி காரமா இருக்குமோ என்று கொஞ்சம் அப்படியும் இப்படியும் பார்த்தார். சேப்பா இருக்கு பழைய மிளகாய்ப்பொடி கொஞ்சம் இருக்கே அதோட வேணா கலந்து வைச்சுரு என்று சொல்ல நான் ஐயோ அப்பா அது ஒரு ஸ்பூன் தான் இருக்கு... வேண்டாம் இதை முதல்ல சாப்பிட்டுப் பாருப்பானு சொல்லி அவர் சாப்பிட்டுப் பார்த்து ஹே காரமாவே இல்லையே!!!! என்று சொல்லி நன்றாகவும் இருக்குனு சொல்லிட்டார்..கொஞ்சம் உப்பு வேண்டும்னு சொல்ல அதுவும் சேர்த்து இன்னுரு ஓட்டு ஓட்ட.....ஸோ இட்லி (காஷ்மீரி) மிளகாய்ப் பொடி ரெடி! சூப்பர்!! நெல்லை...தாங்க்ஸ் பகிர்ந்தமைக்கு...

  கீதா

  பதிலளிநீக்கு
 18. நீங்கள் செய்த டேஸ்டோ இல்லை உங்கள் ஹஸ்பன்ட் அம்மா செய்யும் டேஸ்டோ வந்துச்சா தெரியவில்லை. அப்புறம் அவர்கள் காஷ்மீரி சில்லி பயன்படுத்தியிருக்கமாட்டாங்க இல்லையா? இது உங்கள் வேலைதானே!!?

  நான் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாகச் செய்வேன். இந்த முறை உங்கள் ரெசிப்பி. அடுத்த முறை இதே அள்வில் நம்மூர் மிளகாய் போட்டுச் செய்ய வேண்டும்...

  மிக்க நன்றி நெல்லை

  கீதா

  பதிலளிநீக்கு
 19. எண்ணெய் எல்லாம் எங்க வீடுகளிலும் எடுத்துச் செல்லும் வழக்கம் இல்லை அதிரா! நாங்களும் அதைத் தவிர்ப்போம். எடுத்துச் சென்றதும் இல்லை! போற இடங்களில் எல்லாம் சுத்தமான நல்லெண்ணெய் கிடைத்து விடுகிறது! தோசை மிளகாய்ப் பொடி எல்லாம் எப்போவோ சின்ன வயசில் போட்டுக் கொண்டு சாப்பிட்டது. இப்போல்லாம் ஒத்துக்கறதே இல்லை. எப்போவானும் ஊர்களுக்குப் போகும்போது மி.பொடி தடவி எடுத்துச் சென்றால் உண்டு. அதுவும் பெரும்பாலும் தேங்காய்ச் சட்னி செய்து எடுத்துச் சென்று விடுவேன்.

  பதிலளிநீக்கு
 20. தோசை மிளகாய்ப் பொடிக்கு கடலைப்பருப்புக் கொஞ்சமாய்த் தான் போடுவேன். பொதுவாகவே நான் கடலைப்பருப்பு அதிகம் பயன்படுத்துவதில்லை! இதுக்கு மட்டும் சும்மாக் கொஞ்சம் போல! உளுத்தம்பருப்பு நிறையப் போடுவேன். முதலில் மிக்சியில் வறுத்த மிளகாய், உப்பு, பெருங்காயக் கட்டி போடும்போது ஒரு சின்ன வெல்லத் துண்டும் போடுவேன். அதைப் பொடித்துக் கொண்டு பின்னர் கடலைப்பருப்பை முதலில் போட்டுப் பொடித்துக் கொண்டு உளுத்தம்பருப்புப் போடுவேன். அரை பட்டதும் வெளியே எடுக்கும் முன்னர் எள்ளைப் போட்டு ஒரு சுத்து! ரொம்ப நாள் வைச்சால் எள் போட்ட மிபொடி வாசனை வருது! ஆகையால் கொஞ்சமாய்ப் பண்ணினால் மட்டுமே எள் சேர்ப்பேன்.

  பதிலளிநீக்கு
 21. //எனக்கு யாரும், மோர் சாதம், 2 தோசை (மாவு தோசைனாலும் ஓகே), மிளகாய்ப்பொடி/நல்லெண்ணெய் போட்டா, உடனே தட்டைத் தூக்கிக்கிட்டு உட்கார்ந்துடுவேன்.
  வாங்க கட்சி தொடங்குவோம்..

  பதிலளிநீக்கு
 22. மிளகாய்ப்பொடி தடவிய இட்லி படங்க்கள்.. உங்களதா? பார்த்தாலே வயிறு வலிக்குதே.. இத்தனை பொடியா?

  பதிலளிநீக்கு
 23. என் நண்பர் வீட்டில் தேங்காய் சேர்ப்பார்கள்.. அதுவும் தனி ருசி தான்.

  பதிலளிநீக்கு
 24. எங்கள் பிளாக் ஸ்ரீராம் - வெளியிட்டமைக்கு நன்றி. உண்மையைச் சொன்னா, இப்போ அந்த மிளகாய்ப்பொடி தடவின இட்லி படத்தைப் பார்த்தாலே, எனக்கு சாப்பிடவேண்டும் என்ற ஆவல் உண்டாகிறது. எனக்கும் ரயில் பிரயாணம் (பாசஞ்சர்) செய்யவேண்டும், இட்லி மிளகாய்ப்பொடியும், தயிர் சாதம்/தேங்காய் தொகையலும் எடுத்துச் செல்லவேண்டும் என்றும் ஆசை உண்டாகிறது.

  "எங்கள் அலுவலகத்தில் இதற்கு நிறைய டிமாண்ட்!" - என்னிடம் உள்ள ஒரு கெட்ட பழக்கம், நான் ஆசையாகக் கொண்டுசெல்லும் எந்த உணவுப்பொருளையும் பிறரிடம் பகிர்ந்துகொள்ளமாட்டேன். நான் பாளையங்கோட்டையில் கல்லூரியில் படிக்கும்போது, என் அம்மா, நான் கேட்டமாதிரி, ஒரு ஊத்தாப்பம், அதன்மேல் ஆடையுடன் கூடிய தயிர், அதன் மேல், மிளகாய்ப்பொடி தடவிய இரண்டு ஊத்தாப்பம், அதன் மேல், இன்னொரு ஊத்தாப்பம் ஆடையுடன் கூடிய தயிர், என்று லஞ்சுக்குக் கொடுத்திருந்தார்கள். என்னுடன் கூடப் படிப்பவன், லஞ்ச் நேரத்துக்கு முன்னாலேயே என் பாக்சிலிருந்து எடுத்துச் சாப்பிட்டுவிட்டான். அவனே எதிர்பார்க்கலை, எனக்கு இவ்வளவு கோபம் வரும்னு.

  மிளகாய்ப்பொடில நெய்/தேங்காய் எண்ணெய் - காம்பினேஷனே சரியில்லை.

  பதிலளிநீக்கு
 25. வருகைக்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் சார்..

  கில்லர்ஜி சொல்லுக்கு மறுபேச்சு ஏது. நன்றி.

  பதிலளிநீக்கு
 26. வருகைக்கு நன்றி அவர்கள் உண்மைகள் மதுரைத்தமிழன்.

  "அப்படி சேர்த்து அரைக்கும் வாசனை மனதை தூக்கி செல்லும்" - ஆமாம் நீங்களும் பாவம் எப்படி தினமும் பூரி, சப்பாத்தி சுட முடியும். அதனால் மொத்தமாக மிளகாய்ப்பொடி செய்து வைத்துக்கொள்வது நல்லதுதான்.

  பதிலளிநீக்கு
 27. அபூர்வமாக வருகை தந்திருக்கும் கேஜிஜி சார்.. மிக்க நன்றி. மிளகாய்ப்பொடில எதுக்கு ஃப்ளேக்ஸ் விதைகள் சேர்க்கறீங்க? நான் ஆபீசுல ஒரு டப்பா ஃப்ளேக்ஸ் விதைகள் வாங்கிவைத்திருக்கிறேன். ஒரு நாளைக்கு ஒரு ஸ்பூன் சாப்பிட்டுவிடுவேன்.

  பதிலளிநீக்கு
 28. வாங்க கோமதி அரசு மேடம். எள் இல்லாத மிளகாய்ப்பொடி நான் சாப்பிட்டதில்லை. எங்க அம்மா, நான் சொல்லியதைவிட அதிகமாக எள் சேர்ப்பார்கள். எங்கிட்ட 'உணவு சம்பந்தமானது' One wayதான். நான் பகிர்ந்துகொள்வதில்லை (கடைல வாங்கும்போது ஒவ்வொருவரிடமும் எவ்வளவு வேண்டும் என்று கேட்டு, எனக்குத் தேவையானதும் சேர்த்து வாங்குவேன். அப்புறம் என்னுடையதிலிருந்து நான் பகிரமாட்டேன். இந்தத் தவறான வழக்கம் என்னிடம் இருக்கிறது).

  பதிலளிநீக்கு
 29. வருகைக்கு நன்றி முனைவர் ஜம்புலிங்கம் சார்.

  பதிலளிநீக்கு
 30. வாங்க தில்லையகத்து கீதா ரங்கன். அப்போ அப்போ உங்கள் கருத்துல ஏதாவது வார்த்தைகளைச் சேர்த்து என்னை யோசிக்க வைத்துவிடுகிறீர்கள்.

  'திருக்குறுங்குடி' - என் தாத்தாவின் ஊர். அவர் பெயர் 'நம்பிராஜன்'. என் அம்மா பக்கத்தில் பலருக்கும் பெயர் 'நம்பிராஜன்'தான். இந்த ஊர்தான் வல்லிம்மாவுக்கும் ஊர் என்று ஞாபகம். இப்போ உங்கள் அப்பாவும் என்று சொல்கிறீர்கள்.

  'எள்ளை முதலில் வறுத்து' - ப்ரொஃபஷனல்ஸுக்கு சரியாகத் தெரியும்.'நீங்கள்லாம் எப்பயும் செய்பவர்கள். நான் ஆடிக்கொருமுறை, அமாவாசைக்கொருமுறை. எனக்கு, எரிபொருள் செலவைப் பத்திக் கவலை கிடையாது (ஏன்னா அது இங்க ரொம்ப விலை மலிவு). ரெண்டாவது, சென்னை வீட்டில் என் ஹஸ்பண்ட் வைத்திருப்பதைவிட, அதிக பாத்திரங்கள் நான் வைத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 31. நன்றி அனுராதா ப்ரேம்குமார். நீங்கள் சொல்லும் ஐடியாவும் நல்லாத்தான் இருக்கு. என் பையன் இங்கு வந்தால், கருவேப்பிலை அதிகமாகச் சேர்த்து மிளகாய்ப்பொடி செய்கிறேன். அவனுக்கு கறிவேப்பிலை பிடிக்கும்.

  பதிலளிநீக்கு
 32. நன்றி அதிரா.

  நன்றி விஜய்.

  நன்றி புலவர் இராமானுசம் ஐயா.

  நன்றி அசோகன் குப்புசாமி சார்.

  பதிலளிநீக்கு
 33. நான் நேத்திக்கே போட்ட கமெண்ட் காணோமே.
  எல்லாம் இந்த முகனூல் செய்யும் அனியாயம்.
  நெல்லைத் தமிழன். இந்த மிளகாய்ப் பொடி
  அம்மா நாட்களில் செய்வது. இப்போது அவ்வளவு காரம் கிடையாது.
  நல்லெண்ணெய்+மிளகாய்ப்பொடி காம்பினேஷன்
  எதோடயும் ஒத்துப் போகும். அதுலயும் தயிர்,தோசை, புளிச்ச ஊத்தப்பம்
  ஆகா அந்த மொறுமொறுப்பு,,பருப்பு பல்லில் அகப்படும் ருசி
  ஈடு இணை உண்டா.
  மிக அருமை மா. தாம்பரத்தில் இப்படி எண்ணெய் கிடைக்கிறதா.
  நன்றி. எப்பவாவது வாங்கறேன்.உலகிலியே எனக்கு ரொம்பப் பிடித்த சமாசாரம்.

  பதிலளிநீக்கு
 34. வருகைக்கு நன்றி ஜி.எம்.பி சார். ஜப்பானில் 'மிளகாய்ப்பொடி'யைச் சந்தேகப்பட முகாந்திரம் இருக்கு (இப்போதான் ஆந்திராக்ஸ் அது இது என்று பிரச்சனை இருக்கிறதே) நான் மிளகாய்ப்பொடி தடவின தோசை, இட்லியை, மெக்சிகோ விமான நிலையத்தில் சோதனை செய்யவேண்டும் என்றார்கள். நான், அது 'உணவுப்பொருள், உங்க ஊர்ல சாப்பிட சைவம் கிடைக்குமோ கிடைக்காதோன்னு கொண்டுவந்திருக்கேன்' என்று சொல்லி எடுத்துச்சென்றேன். அது சரி... வெறும் மிளகாய்ப்பொடியை எப்படிச் சாப்பிடுவீர்கள்(எதனோட?)

  பதிலளிநீக்கு
 35. மீள் வருகைகளுக்கு நன்றி அதிரா.

  "சமைக்கும்போது ஹேமமாலினியை நினைச்சால்ல்ல்ல்ல்?:)) ஹையோ வெரி சொறி;... அவ ஸ்ரீராமின் ஆள் மாறிச் சொல்லிட்டேன்ன்ன்ன்:) ராதா தானே நெ. தமிழனின் பேவரிட்:)" - அதிரா... நீங்கள் என் அப்பாவிடமும், ஸ்ரீராம் அப்பாவிடமும் சொல்லவேண்டியதை எங்களிடம் சொல்லுகிறீர்கள். அவர், 'அனுஷ்கா' தன்னைவிட வயது அதிகமே, இருந்தாலும் ரசிகனாக இருப்போம் என்று நினைக்கிறார். நான், 'தமன்னா' என்னைவிட மிக அதிக வயதானாலும், உருவ அமைப்பில் சின்னவராக இருக்கிறார் என்று ரசிகனாக இருக்கிறேன்.

  வெள்ளை எள்ளும் பாவிக்கலாம்.

  'எண்ணெய்' எடுத்துச் செல்லக்கூடாது. (எண்ணெய்க்குடத்தோடு எதிரில் வரக்கூடாது... இதுபோன்ற பலவற்றைக் கேட்டு, நம்புகிறோமோ இல்லையோ, மனதில் அந்த எண்ணம் வந்துவிடுகிறது). ஆனால், இங்கு பாவிக்க, நல்லெண்ணெய், அங்கிருந்து கொண்டுவருவது வழக்கமாகிவிட்டது. (Necessity negates believes)

  "நல்லெண்ணெயில் குழைத்து....... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆஆஆஆஆஆஆ:)" - அதிரா, மிளகாய்ப்பொடி தடவின பிறகு, இட்லியை 5-6 மணித்தியாலம் கழிந்து சாப்பிட்டுப்பாருங்கள். இன்னும் நல்லா இருக்கும். உங்க ஊர் காலநிலைக்கு, 5-6 நிமிஷம் கழித்தே சாப்பிட்டால் நல்லாத்தான் இருக்கும்.

  'அவங்க' இங்க இருந்தாங்கன்னா சொல்லியிருப்பேன். ஸ்காட்லாந்துதான் இங்கிலாந்திடம் கடன் வாங்குதுன்னா, அங்க வசிக்கிற அதிராவும், பிரிட்டிஷார்ட்ட கடன் கேட்கறாங்களேன்னு (டெஸ்கோ எள்)

  பதிலளிநீக்கு
 36. //ஹையோ வெரி சொறி;... அவ ஸ்ரீராமின் ஆள் மாறிச் சொல்லிட்டேன்ன்ன்ன்://

  நான் என்ன செய்தேன் உங்கள் இருவரையும்... நான் பாட்டுக்கு தேமே என்று இருக்கிறேன்... ஒய் திஸ் கொலவெறி!

  //'தமன்னா' என்னைவிட மிக அதிக வயதானாலும், ​//
  ஆ.......! (மயக்கம்)

  பதிலளிநீக்கு
 37. மீள்வருகைக்கு நன்றி கீதா ரங்கன்.

  "எனக்குத்தான் ஸ்மெல் தெரியாதே அதனால் அதன் சுவையும் தெரியாதே" - உண்மையாகவா? இங்கு என்னுடன் வேலைபார்த்த கன்னடிகா பெண், அவளுக்கு இந்தக் குறைபாடு இருப்பதால், GAS Leak ஆனால் தெரியாது என்று Safety measure எடுத்திருக்கிறேன் என்று 1995ல் சொன்னா. அதுவரை அப்படி ஒரு குறைபாடு இருக்கும் என்பதே எனக்குத் தெரியாததால் என் நினைவில் பதிந்துபோயிற்று. நீங்க சொல்றதைப் பார்த்தால், உங்க அப்பா டேஸ்ட் பண்ணினப்பறம்தான், நான் எதுனாலும் நீங்கள் செய்வதை வாங்கிக்கொள்ளணும் போலிருக்கு.

  'அம்மா', 'ஹஸ்பண்ட்' செய்யும் டேஸ்டில் நிஜமாகவே செய்யமுடியாது. அதுக்கு 'உணர்வு'தான் காரணம்னு நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 38. கீதா சாம்பசிவம் மேடம்.. உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. எனக்கு எள் ரொம்பச் சேர்த்தால் மிகவும் பிடிக்கும். இதுக்காகவே, 'செட்டினாடு எள்ளு மிளகாய்ப்பொடி' (அந்த பிராண்டில் ஏகப்பட்ட பொடிகள் கிடைக்கிறது-அம்பிகாவில்) வாங்குவேன். அது ஒரு தனி வாசனை. 'வெல்லத் துண்டு' சேர்த்தால் நல்லா இருக்குமா? ஈர்ச்சிக்காது?

  "இப்போல்லாம் ஒத்துக்கறதே இல்லை" - கீ.சா. மேடம்.. எனக்கும் இப்போ அப்படி மனசுல தோணுது. முன்ன மாதிரி ரொம்பக் காரம் சாப்பிட முடியறதில்லை. வருத்தம்தான். (மாற்றம் என்பது மானிடத் தத்துவம்)

  பதிலளிநீக்கு
 39. வாங்க அப்பாதுரை சார்.

  "வாங்க கட்சி தொடங்குவோம்.." - எங்க அம்மா, குளுந்த சாதத்துல மோர் விட்டுக்கொண்டு, பக்கத்துல மிளகாய்ப்பொடி எண்ணெய் ரெடி பண்ணி, அதுல கொஞ்சம் மோர்சாதத்தை (மோரைப் பிழிந்து) கலந்து, தொட்டுக்கொண்டு சாப்பிடுவார். நல்ல ரசனை உள்ள ஆட்கள்ல, நீங்களும் சேருவது மகிழ்ச்சியா இருக்கு.

  நிறம் சிவப்பா இருக்கும். காரம் அவ்வளவு இருக்காது. எனக்கு இயல்பாவே மிளகாய்ப்பொடி காரமா இருக்கணும் (அதுக்கு ஏத்தமாதிரி கோபமும் ஜாஸ்தி வரும்)

  கொப்பரைத் தேங்காயையும் சேர்த்தால், அது தேங்காய்ப் பொடி. அது, சுட சாதம்/தே.எண்ணெய் கலந்து சாப்பிட ரொம்ப நல்லா இருக்கும்.

  கருத்துகளுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 40. வாங்க வல்லிம்மா. கீதா ரங்கன், 'திருக்குறுங்குடி' என்று சொன்ன உடனேயே உங்கள் ஞாபகம் வந்துவிட்டது. உங்கள் கருத்துக்கு நன்றி.

  எனக்கு காய்கறிகள் மீது ஒரு அப்சஷன். (அதுபோல் இனிப்புக் கடைகளிலும்தான்). வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வெறும்ன பார்த்துக்கொண்டு ஒரு ரவுண்ட் வருவேன். அம்மாவைப் பார்த்துவிட்டு வரும் வழியில் தாம்பரம் காய்கறி மார்க்கெட் போய், ஒரு அரை மணி நேரம் காலார நடந்து வருவேன். (மீன் ஸ்மெல் வரும்போது கர்சீப்பால் மூக்கப்பொத்திக்கொண்டெ). அங்குதான் இந்தக் கடையைப் பார்த்து செக்கெண்ணெய் வாங்கினேன்.

  பதிலளிநீக்கு
 41. ஸ்ரீராம் - 'தேமே' - இந்த வார்த்தை எப்படி வந்தது? 'தெய்வமே' (அதாவது நீ விட்ட வழி) என்று பேசாமல் இருப்பதுதான் மருவி, 'தேமே' என்று ஆயிற்று. இதுபோல, சின்னக்குழந்தைகள்ட, 'உம்மாச்சி கண்ணக் குத்தும்' என்று சொல்வதில், 'உம்மாச்சி' என்பது, 'உமா மகேஸ்வரன்' என்பதிலிருந்து மருவியதாக பரமாச்சாரியார் சொன்னதைப் படித்திருக்கிறேன். (ஐயோ.. இதுக்கு ஒண்ணுமே எழுதாமலிருந்திருக்கலாமே என்று நீங்கள் மனதில் நினைத்தால், எனக்குக் கேட்டுவிடும்)

  பதிலளிநீக்கு
 42. //கொப்பரைத் தேங்காயையும் சேர்த்தால், //

  தேங்காய் சேர்த்தால் தேங்காய்ப்பொடி. சரிதான். அதேபோல நீண்ட நாட்கள் வைத்துக்கொள்ளவும் முடியாது! (மிளகாய்ப்பொடியும் உடனே உடனே காலியாகி விடும்... அது வேறு விஷயம்)

  பதிலளிநீக்கு
 43. தேமேன்னு என்கிற வார்த்தை என் M I L அடிக்கடி உபயோகப்படுத்தும் வார்த்தை. மேலும் கிரேஸி மோகன் நாடகங்களிலும் வருமோ!

  பதிலளிநீக்கு
 44. //பார்த்தாலே வயிறு வலிக்குதே.. இத்தனை பொடியா?//

  இப்படித்தான் என் அலுவலகத்தில் ஒருவர் கேட்பார். அவர்தான் இரண்டு இட்லி / தோசை அதிகம் எடுத்துக் கொள்வார். "என்ன? ரொம்ப நாளாய் நீங்க பொடி இட்லி /தோசை கொண்டுவரலை?" என்றும் கேட்பார்!!!

  அப்பாதுரையின் பின்னூட்டங்களும், மதுரைத்தமிழன் பின்னூட்டங்கள் போலவே என் மெயில் பாக்ஸுக்கு வருவதில்லை> ஏன்?

  பதிலளிநீக்கு
 45. //'அவங்க' இங்க இருந்தாங்கன்னா சொல்லியிருப்பேன். ஸ்காட்லாந்துதான் இங்கிலாந்திடம் கடன் வாங்குதுன்னா, அங்க வசிக்கிற அதிராவும், பிரிட்டிஷார்ட்ட கடன் கேட்கறாங்களேன்னு (டெஸ்கோ எள்)//

  ஹா ஹா ஹா இன்னும் ஒரு கிழமைக்குள் ஆள் லாண்ட் ஆவா என காலநிலை அறிக்கை சொல்வதால்:) அதுக்குள் நான் என் ஆசைக்கு கீழ மேலே எல்லாம் குதிச்சு விளையாடிட்டு ஒயுங்கா இருந்திடுவேன்:).. இல்லேன்னா தேம்ஸ்ல தள்ளிடுவா என்னை:).. இப்போ கொலை வெறியோடு உலா வருவதாகக் கிளவிப்பட்டேன்ன்:) சரி அது போகட்டும்...

  ஹா ஹா ஹா உங்க தமனா விசயம் கேட்டு ஸ்ரீராம் மயங்கினமாதிரித் தெரியுதே:).. கொஞ்சம்கோல்ட் வோட்டர் அடிங்கோ.. எழுப்பி விடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்.. இல்லையெனில் நாளைக்கு சீதை ராமனை மன்னிக்காமலேஏஏஏஏஏஏஏ போயிடப்போறாவே:).. களே களே[நெ.தமிழனாலே எனக்கும் எல்லாம் சோட் காண்ட்டாவேஎ வருதாக்கும்:))] அதாவது கடவுளே என்றேன்ன்:).

  பதிலளிநீக்கு
 46. ஆஆஆஆஆவ்வ்வ்வ்வ் வழி விடுங்கோ வழிவிடுங்கோஓ மீ தேம்ஸ்ல ஜம்பிங்ங்ங்ங்ங்:) நேக்கு மகுடம் கிடைச்சுடுத்தூஊஊஊஊஊஊஊஊ:)..

  பதிலளிநீக்கு
 47. @அதிரா.... உள்ளே வந்த உடனேயே மகுடமா? வாழ்த்துகள். உங்கள் போன்ற பிரபலங்கள் மகுடம் சூடாவிட்டால்தான் ஆச்சர்யம்!

  பதிலளிநீக்கு
 48. ///ஸ்ரீராம். said...
  @அதிரா.... உள்ளே வந்த உடனேயே மகுடமா? வாழ்த்துகள். உங்கள் போன்ற பிரபலங்கள் மகுடம் சூடாவிட்டால்தான் ஆச்சர்யம்!///

  நேக்கு ரொம்ப ஷை ஷையா வருதே:)... கடவுளே நல்லவேளை அஞ்சு இங்கின இல்லை:).. என்னைப் பிரபலம் என்றதனைப் பார்த்தாவோ அவ்ளோதேன்ன்ன்ன்...

  நான் “தேமே” என என் பாட்டில இருக்கிறேன்ன்:).. ஹா ஹா ஹா விழுவதை எல்லாம் பொறுக்குவதுதான் என் வேலை:)... கொப்பிரைட் கேட்டு சண்டைக்கு வந்திடப்படா:).

  பதிலளிநீக்கு
 49. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 50. ///Geetha Sambasivam said...
  எண்ணெய் எல்லாம் எங்க வீடுகளிலும் எடுத்துச் செல்லும் வழக்கம் இல்லை அதிரா! நாங்களும் அதைத் தவிர்ப்போம். எடுத்துச் சென்றதும் இல்லை///

  கீசா அக்கா[நெல்லைத்தமிழன் இப்பூடித்தானே அழைத்தார்.. அதாவது கீ.சா வின் சுறு:)க்கமாம்:).. நான் இதை இப்போதான் படிக்கிறேன்... பார்த்தீங்களோ நெல்லைத்தமிழன் தமிழர்பண்பாட்டை மீறுகிறார்.. இதை இப்பவே கில்லர்ஜி இடம் சொல்லோணும்:).. ஹா ஹா ஹா படிச்சதும் கிழிச்சிடுங்கோ.. வியாழமாற்றம் வருகுதெல்லோ.. பிள்ளை வாயை இறுக்கி மூடிக்கொண்டிரு என முச்சந்தி முனியம்மா கை பார்த்துச் சொன்னவ:)..

  நாங்கள் நல்லெண்ணெய் இருந்தால் மட்டுமே தொசைக்குப் போடுவதுண்டு.. நல்லெண்ணெய் இல்லாமல் தோசையா என கேட்போம்.. ஏனெனில் நாம் அடிக்கடி தோசை இட்லி செய்ய மாட்டோம்ம்.. எப்போதாவது போட்டு உடனேயே சாப்பிட்டு முடித்திடுவோம்.. மா அரைச்சு ஃபிரிஜ்ஜில் வச்சு செய்வதெல்லாம் இல்லை கீதாக்கா...

  எங்கள் உணவு இடியப்பம் புட்டுத்தேன்... மற்றும்படி மானே தேனே என பல உணவுகள் இடையே வந்து போகும்.. பாஸ்ட் ஃபூட்... + நூடில்ஸ் .. பாஸ்ட்டா.. இப்படி.

  பதிலளிநீக்கு
 51. வாங்க நிஷா.. உங்கள் வாடிக்கையாளருக்கு 'பூண்டு' பிடிக்கும்னா, அதை, பெருங்காயத்துக்குப் பதிலாகச் சேருங்கள். மிகக் குறைந்த அளவு செய்துபார்த்து, உங்கள் ருசிக்கேற்றபடி அளவுகளை மாற்றிக்கொள்ளுங்கள். உணவகம் என்பதால், சரியான ருசி எதற்கு இருக்கிறதோ அந்த அளவை எப்போதும் கடைபிடியுங்கள்.

  இதிலும், ஒரு போர்ஷன் மிளகாய்ப்பொடியைத் தனியாக எடுத்துவைத்து, அதில் கூடக்கொஞ்சம் உளுத்தம்பருப்பு வறுத்து அரைத்து (கர கர என்று) சேர்த்தால், 'காரம் குறைவான' மிளகாய்ப்பொடி ரெடி.

  பதிலளிநீக்கு
 52. இட்லி மிளகாய் பொடி இட்லிக்கு பயன் படுதோ இல்லையோ கறி சமைக்க சோம்பல் படும் நாளில் சோறு குக்கரில் சமைத்து சோற்றின் மேல் இட்லி மிளகாய் பொடி தூவி சாப்பிட ரெம்ம்ம்ம்ம்ம்ம்ப பிடிக்கும்,

  மிளகாய் ப்பொடி எனக்கு சப்பாத்திக்கு பரோட்டாவுக்கு என எல்லாவகையிலும் பயன் படும். இந்த அளவுகளில் செய்து பார்த்து விடுகின்றேன். ஹோட்டல் தேவைக்கு இதுவரை ஆர்டர் தான் செய்து எடுத்து இருக்கின்றேன். இதிலிருக்கும் செய்முறை சரியாக வந்தால் ஆர்டர் கான்சல். ஹாஹா.

  பதிலளிநீக்கு
 53. இஞ்சி,பூண்டு சேர்க்காமல் செய்தால் எங்கள் ஜெய்ன் உணவுக்கஸ்டமர்களுக்கும் பயன் படுத்தலாம். உங்கள் ஆலோசனைகளுக்கும் ந்ன்றி சார்.

  பதிலளிநீக்கு
 54. நாக்குக்கு ருசி என்றாலும் ஆரோக்கிய கேடு :)

  பதிலளிநீக்கு
 55. எள் பொடி இரவு சாப்பிட மாட்டோம், அதனால் எள் இல்லா மிளகாய் பொடி , எள் போட்ட மிளகாய் பொடி, தனி எள் மிளகாய் பொடி , பூண்டு மிளகாய் பொடி என்று பலவகை மிளகாய் பொடி உண்டு வீட்டில் .

  பதிலளிநீக்கு
 56. கடை சிப்பந்தி மாதிரி கடைசிப் பந்தி ஆகி விட்டது... எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் என்னை மறக்க முடியுமா என்கிறது மிளகாய்ப் பொடி... நான்கு நாட்களாக ஜுரம் பிடித்துக் கொண்டிருக்கின்றது.. விரட்டியடித்து விட்டு வருகிறேன்..

  பதிலளிநீக்கு
 57. வாங்க பகவான்ஜி. ரொம்ப பிஸி போல. என்ன சர்வ சாதாரணமா 'ஆரோக்கியக் கேடு' அப்படின்னு சொல்லிட்டீங்க. நாம பாரம்பர்யமாக சாப்பிடற எதுவும் கெடுதி இல்லை. நமக்கு வழக்கமில்லாத உணவகத்தில் சாப்பிடுவது, வெளிநாட்டுப் பொருட்கள் (பெப்சி கோலா போன்றவை, பிட்சா பர்கர்....) சாப்பிடுவதுதான் ஆரோக்கியக்கேடு (அப்படீன்னு சொன்னா இப்போ உள்ள பசங்க நம்மை நம்பமாட்டார்கள்)

  பதிலளிநீக்கு
 58. கோமதி அரசு மேடம்... ஏதேனும் காரணம் இருக்கும், இரவு எள்பொடி சாப்பிடாததற்கு (அறிவியல் ரீதியாக). இப்படித்தான் எங்கள் புராதான வழக்கம், ஞாயிறு நெல்லிப் பொருட்கள் சாப்பிடுவதில்லை.

  பதிலளிநீக்கு
 59. வாங்க துரை செல்வராஜு சார்... இப்போ கோடை காலம்தானே.. இப்போ உடம்புக்கு ஒரு பிரச்சனையும் வராதே. ஒருவேளை நம்ம ஊர்ல இருக்கீங்களோ? வருகைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 60. குவைத்திற்கு வந்து விட்டேன்..
  நடந்தவைகளை பதிவில் சொல்லியிருக்கின்றேன்..

  இன்னும் ஒரு மணி நேரத்தில் பதிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது..
  அந்த காட்சிகளையும் வந்து காணுங்கள்!..

  பதிலளிநீக்கு
 61. ஆஹா சூப்பரா இருக்கு ஜொள்ளிட்டே நேற்று பார்த்து படிச்சி வாக்கும் போட்டேன் :)
  எனக்கும் இப்படி இட்லிங்களை துப்பாக்கி ரவை பவுடர்துண்டுகளோடு உருட்டி பிரட்டி ஊறவைச்சி சாப்பிட பிடிக்கும் :)

  பிக் பாஸ் இந்த நெல்லைத்தமிழனை உடனே confession ரூமுக்கு கூப்பிடுங்க :)
  டயட்டில் இருக்கும் என்னை ட்ரிக்கர் பண்ரார் :)


  ம்ம்மம்ம் அப்புறம் தோசையை விட இட்லிக்குத்தான் மிளகாய்ப்பொடி செம காம்பினேஷன் ..

  பிளாக்ஸ் //flax சீட்ஸ்நானும் மிளகாய்ப்பொடியில் கடைசியில் அரைச்சி சேர்ப்பேன் .
  உளுந்து ஹெவிதானே அதனால் இந்த ஆளி விதைகள் முழு entire digestive tract க்கும் நல்லது .
  இன்னக்கு டைகர் சாதத்தில் கூட புளிகாய்ச்சலில் பொடி அரைக்கும்போது ஒரு ஸ்பூன் சேர்த்தேன் ..

  நெல்லைத்தமிழன் இந்த மிளகாய்ப்பொடி எண்ணையோட மைதா சப்பாத்திக்கும் நல்லாருக்கும்

  பதிலளிநீக்கு
 62. அப்புறம் நெல்லைத்தமிழன் இந்த ஸ்காட்லாண்ட் இருக்காங்களே சும்மா அவங்களால் கல்வி அப்புறம் ஹவுசிங் போன்ற விஷயங்களில் மட்டுமே முடிவெடுக்கலாம் :)
  இம்மிக்ரேஷன் defence எல்லாத்துக்கும் எங்க uk கிட்ட கைக்கட்டிதான் நிக்கணும் :) ஒன்னும் செய்ய முடியாது அவங்களால் ஹாங்
  வெவெவேயே for மியாவ் :)

  பதிலளிநீக்கு
 63. வருகைக்கு நன்றி ஏஞ்சலின். உங்க பெயரை எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கேன்னு நினைச்சேன். அப்புறம்தான் திடும் என்று 2 மாதமா, 'காணாமல் போனவர்கள்' பட்டியலில் பார்த்த ரெண்டாவது பேர்னு கண்டுபிடிச்சேன். (ஏன்னா, நீங்க ஃப்ளைட்ல கால் வைக்கறவரைல பின்னூட்டம் போட்டீங்க. அவங்க கன காலம் முன்னாலேயே, பேக் பண்ற சாக்குல காணாமல் போய்ட்டாங்க).

  ஃப்ளாக்ஸ் சீட்ஸ் - இதை கேஜிஜி அவர்களும் குறிப்பிட்டிருந்தார்கள். நான் அடுத்தமுறை உபயோகப்படுத்துகிறேன். நான் பொதுவா ஆபீஸ்ல ஒரு நாளைக்கு 2 ஸ்பூன் ஃப்ளாக்ஸ் சீட்ஸ் சாப்பிடுவேன். (எடை குறையும்னு சொன்னாங்க. பாட்டிலோட எடைதான் குறையுது)

  சப்பாத்திக்கும் இட்லிமிளகாய்ப்பொடி எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனால் அதைவிட, சப்பாத்திக்கு கார எலுமிச்சை ஊறுகாய் தொட்டுக்கொள்ள ரொம்பவும் பிடிக்கும்.

  'அவங்களைப் பத்தி' இப்போ எழுதினா வந்து படிக்கமாட்டாங்க. இல்லைனா பதில் எழுதியிருப்பேன். 'அவங்க', உங்க Defense Equipment எல்லாம் அவங்க ஊர்லதான் இருக்கு, அதுக்கு சாவி வாங்கணும்னா நீங்கதான் அவங்ககிட்ட கை கட்டி நிக்கணும்னு நினைக்கறாங்க போலிருக்கே?

  பதிலளிநீக்கு
 64. நான் இங்கின எதையும் படிக்கவே இல்ல ஜாமீஈஈஈஈஈஈஈஈ:)

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!