ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

ஞாயிறு 170820 : என்னது? இணையப் போறாங்களாமா?
     எங்கள் வீட்டின் புதிய விருந்தினர்.       கடந்த வாரம் திடீரென ஒருநாள் வீட்டின் உள்ளே அனுமதி கேட்காமல் உள்ளே அதிரடியாய் நுழைந்தார் இந்த ஜுனியர் செல்லம்.  வீட்டைச் சுற்றி நோட்டம் விட்டார்.  சில இடங்களை மார்க் செய்து கொண்டார்.  அப்புறம் வரும் விசிட்களில் மார்க் செய்த இடங்களை ஆக்ரமிக்கத் தொடங்கினார்.  அதில் ஒன்று சோஃபா! 


     ஆஷா போஸ்லே அதிரா நினைவு வந்தது.  அவருக்கு செல்லமாச்சே!  அவர் வந்ததும்தான் பகிர நினைத்தேன்.  ஆனால் இன்றைய சூழலுக்கு படங்களைப் பொருத்தமாக உபயோகிக்க முடியும்  என்று தோன்றியதால், ஏற்கெனவே போடவிருந்த படங்களை அடுத்த வாரத்துக்கு ஒத்திப்போட்டு,  இன்று இதைப் பகிர்கிறேன்.


     என் அபிப்ராயத்தில் நாயின் நேர்மை பூனையிடம் இல்லை.  மென்மையும்.

     பூனை பற்றி நான் ஒரு "கவிதை" எழுதி இருந்ததாகச் சொன்னேனே..  அது கீழே !நட்பில்
நாயளவு இருப்பதில்லை
பூனைகள்...

நன்றியிலும்!

கண்ணில் தெரிகிறது
கள்ளத்தனம்.
நடையில் நரியின் தந்திரம்.
உணவைப் பார்த்தாலோ
உலகமே மறந்து போகும்

ஆனாலும்
ரசிக்காமல்
இருக்க முடியவில்லை
பூனையின்
கள்ளத்தனங்களை!     இதை முகநூலில் நேற்று பகிர்ந்திருந்தேன்!
"என்னது? இணையப்போறாங்களாமா...?""இணைவதற்கு 'இவங்க' ஏதேதோ கண்டிஷன்லாம் சொன்ன ஞாபகமா இருக்கே....""இணைவதற்கு என்னென்ன கண்டிஷன் போட்டாய்ங்க?  அவிங்களுக்கும் ஞாபகமில்லை, நமக்கும் ஞாபகமில்லை... "
"ஏம்ப்பா... அதெல்லாம் ஓகே ஆயிடுச்சாமா? என்னது ஆயிடுச்சா?  எதைச் சொல்றீங்க?""ஐயையோ.... அப்படியா?"
"சரி வுடுங்க... என்னவோ நடக்கட்டும்... நமக்கென்ன? நம்ம பொழப்பைப் பார்ப்போம்..."நம்ம பொழைப்பு இதான்பா....இதுவும் கடந்து போகும்....!


தமிழ்மணம் வாக்களிக்க......

50 கருத்துகள்:

 1. ஹாஹாஹாஹாஹாஹா செமையா பேசுதே பூஸார்!!! முதலில் நம்ம பைரவரா இருக்குமோனு நினைத்துவிட்டேன் விருந்தினர் என்றதும்...அப்புறம் படம் பார்த்த உடனே தெரிஞ்சது பூஸார்....பூஸாரைப் பற்றி கமென்ட் அடிச்சுட்டீங்களே ரெண்டு பேர் கோபத்துல வந்துருவாங்க....அதிரா கமென்டை வாபஸ் வாங்குங்க இல்லைனா தேம்ஸ்ல குதிப்பேன்னு உண்ணாவிரதம் இருப்பாங்க...ஹாஹாஹாஹா....

  பூனையின் குணம் அது...ஃfeline ஆச்சே! அந்த வர்க்கத்துக்கே உரிய குணம் அது...ஆனால் பைரவர்களின் குணம் வேறு....அவர்கள் நம்மை பாஸ் என்று நினைப்பவர்கள்..பொதுவாக....பூஸார்களையும் பயிற்சி கொடுக்க முடியும் என்று மகன் சொல்லுவான்...கொஞ்ச நாள் நம்முடன் இருந்தால் நமது பழக்கம் எல்லாம் அவர்களுக்குத் தெரிந்தும் விடுமாம்...அவனது அத்தை பையன் வீட்டில் ஒரு பூஸார் இருக்கிறான்...ரொம்ப க்யூட்டாம்....எனக்குத் தனிப்பட்ட முறையில் பூனை அனுபவம் இல்லை..எனவே நான் பைரவர் கட்சி இப்போதைக்கு உங்களைப் போல ஹிஹிஹிஹிஹி

  என்றாலும் அழகுதான்!!! புகைபப்டங்கள் செம அழகு டிஃப்ரன்ட் போஸஸ்....செம!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 2. ரொம்ப அழகா எடுத்திருக்கீங்க ஸ்ரீராம்...

  கீதா

  பதிலளிநீக்கு
 3. பூனையை வளர்ப்பதில் சில சிரமங்கள் இருக்கின்றன. மேலும் செல்லம் பைரவரைப் போல் கீழ்ப்படியும் குணம் பூனையாரிடம் இருக்காது. என்ன தான் செல்லமாக வளர்த்தாலும் சமையலறையில் பாலை வந்து குடிக்கத் தான் செய்யும்! அதே பைரவரை "உள்ளே வராதே" என்று சொன்னால் போதும். நிலையைத் தாண்ட மாட்டார். :)

  பதிலளிநீக்கு
 4. பூனையும் அரசியல் பேசுதே....
  ஐடியா ஸூப்பர் ஸ்ரீராம் ஜி

  பதிலளிநீக்கு
 5. அனைத்து பூனை படங்களும், அது சொல்லும் செய்திகளும் அருமை.
  நாய் மனிதனை நம்பியும், பூனை வீட்டை நம்பியும் வாழும் என்பார்கள்.
  இருந்தாலும் பழகும் விதத்தில் பழகிப் பார்த்தால் பாடல் நினைவுக்கு வருது.
  பாசம் காட்டுங்கள் உங்கள் காலை சுற்றும் .

  பதிலளிநீக்கு
 6. அழகான படங்கள் சூழலுக்கேற்றதும்

  பதிலளிநீக்கு
 7. எனக்கு பூனை, நாய் வளர்ப்பவர்களைப் பார்த்தால் ஆச்சர்யமாகத்தான் இருக்கும். அது ஒவ்வொருத்தர் மனநிலையைப் பொறுத்தது என்று நினைக்கிறேன்.

  இங்கு ஒரு பூங்காவில் 20-25 பூனைகளுக்குமேல் உண்டு. காலை 7:15 வாக்கில் ஒரு வட இந்தியப்பெண் பூனைகளுக்கான உணவை (கார்ன்ஃப்ளேக்ஸ் மாதிரி) கொண்டவந்து ஆங்காங்கு பூனைக் கூட்டங்களுக்கு அளிப்பார் (வெள்ளி, சனிக்கிழமைகளில் பார்த்திருக்கிறேன்) அவர் வரும்போது ஆங்காங்கு உள்ள பூனைக் குடும்பங்கள் அவரைச் சூழ்ந்துகொள்வதும், அவரும் அவைகளுடன் பேசுவதும் ஆச்சர்யமாகத்தான் இருக்கும்.

  என் நம்பிக்கைகளுள், பூனை இறப்புக்குக் காரணமாவது பெரும் பாவம், அதன் முடி உதிர்ந்தாலோ, இறப்புக்குக் காரணமாக இருந்தாலோ தங்க பூனை தானம் செய்தாலும் போகாது என்பது. இது அனேகமாக பூனைமுடியினால் வரும் ஒவ்வாமைக்காகச் சொல்லப்பட்டிருக்கலாம்.

  த ம போட்டாச்சு.

  பதிலளிநீக்கு
 8. அழகிய படங்கள். நண்பர் வீட்டில் பூனை வளர்த்த போது பயந்தபடியே தூக்கியதுண்டு.

  த.ம. எட்டாம் வாக்கு.

  பதிலளிநீக்கு
 9. அழகழகான பூனைகள் மிகவும் நன்றாக உள்ளது

  பதிலளிநீக்கு
 10. இன்றைய அரசியலைப் பற்றி நமது மக்கள் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதைப் பற்றி பூனையாரின் கடைசிப்படம் சொல்லி விட்டது.

  பதிலளிநீக்கு
 11. பூனை படமும் அதற்கு ஏற்ற கருத்துகளும் அருமை..... ஏஞ்சல் மற்றும் அதிரா பூணைகள் எப்போது மீண்டும் வரும்

  பதிலளிநீக்கு
 12. வாங்க கீதா... தேம்ஸ் நதியே சோகமாகிவிடும் போல.. அதில் விழுகிறேன் என்று பயமுறுத்தும் ஆளைக்காணோம். இரண்டு பேர்களும் வந்ததும் பெஞ்ச் மேல நிறுத்தணும்! பூனை நாய் கவிதை ( !! ) ஒன்று இதே கருத்தில் எழுதி இருந்தேன்.

  நான் அழகா எடுக்கலை. குட்டி அவ்வளவு அழகா என்னை கவனித்துக்கொண்டு போஸ் கொடுத்தது!

  பதிலளிநீக்கு
 13. வாங்க கீதாக்கா.... ஆமாம். பூனை பக்கா ஃப்ராடு! அன்புக்கும், புரிந்து கொண்டு பழகுவதற்கும் நாயார்தான் சரி. எங்கள் வீட்டில் வளையவந்த மோதி ஒருநாளும் சமையலறைக்குள் நுழைந்ததில்லை.

  பதிலளிநீக்கு
 14. நன்றி கில்லர்ஜி. பூனை மட்டும்தான் அரசியல் பேச பாக்கி என்று அதையும் பேச வைத்துவிட்டேன்!! பாராட்டுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 15. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

  பதிலளிநீக்கு
 16. வாங்க கோமதி அரசு மேடம்.. எனக்கும் அந்தப் பாட்டுப் பிடிக்கும். ஆமாம், பூனையிடம் பழகும் வகையில் பழக நேரமும் பொறுமையும் இல்லை. நாய் பழக, நேரமே எடுத்துக்கொள்ளாது. குன்றத்தூரில் பார்த்த ஒரு வெள்ளைக்குட்டி நாய் அரைநிமிடத்தில் நட்பாகிவிட்டது. முகநூலில் அதன் படம் பகிர்ந்திருந்தேன்.

  பதிலளிநீக்கு
 17. நன்றி நண்பர் பாண்டியராஜ் ஜெபரத்தினம்.

  பதிலளிநீக்கு
 18. வாங்க நெல்லை.. என் அப்பாவும், அத்தையும் கிளி வளர்த்தார்கள். பாட்டி பூனை வளர்த்தார். என்ன நடந்திருக்கும் என்று சொல்லத் தேவையில்லை!!

  நான் நாய்களிடம் நட்பு கொள்பவன். ஏற்கெனவே பலமுறை சொல்லியிருப்பதுபோல, சென்ற பிறவியில் நான் நாயாகத்தான் இருந்திருப்பேன்! அதே, என் மாமாவுக்கு நாயைக் கண்டாலே பிடிக்காது. ஊரிலிருந்து வரும்போது பிரம்பு நாற்காலியில் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கும் அதைப் பார்த்தாலே கோபம் வரும் அவருக்கு.

  பூனை பற்றிய அந்த நம்பிக்கைகளை நானும் படித்திருக்கிறேன். கூடவே வீஸிங் தொந்தரவு இருப்போருக்கு முடியாலேயே பூனை அலர்ஜி என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 19. நன்றி வெங்கட். பூனை மேல் எனக்கு பயமில்லை. தூக்கும்போது எச்சரிக்கையாய் இருந்தேன். எப்போது பிறாண்டி விடுமோ என்று!

  பதிலளிநீக்கு
 20. நன்றி நண்பர் அசோகன் குப்புசாமி.

  பதிலளிநீக்கு
 21. நன்றி தமிழ் இளங்கோ ஸார்.. மக்களுக்கு அரசியல் அலுத்துவிட்டது. சினிமா போல அதையும் ஒரு பொழுதுபோக்காக வைத்திருக்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
 22. வாங்க மதுரை... அதே கேள்விதான் எனக்கும்.. லீவு எடுக்க ஒரு லிமிட் இல்லை?!!!

  பதிலளிநீக்கு
 23. ஞாயிறு என்பதால் கொஞ்சம் நேரம் கிடைத்துவிட்டதா? நாய், பூனை இரண்டில், பூனைதான் சுத்தம் பேணும்னு நினைக்கிறேன். இருந்தாலும், எனக்கு இவைகளின்மீது (அன்பு செலுத்துவது ஓகே) ஆசையில் வளர்ப்பவர்களைக் கண்டால் ஆச்சர்யம்தான். எனக்கு எதுவும் மேல பட்டாலே ரொம்ப நெர்வஸாகிவிடும்.

  பதிலளிநீக்கு
 24. இதே மாதிரியான நாலு பூனைக்குட்டியும், அதன் அம்மாவும் என் வீட்டில் இருந்துச்சு. அதை குடுகுடுப்பைக்காரன் பிடிச்சுக்கிட்டு போய்ட்டான்

  பதிலளிநீக்கு
 25. //ஞாயிறு என்பதால் கொஞ்சம் நேரம் கிடைத்துவிட்டதா?//

  நேரம் என்பது நாம் ஏற்படுத்திக் கொள்வதுதான் என்னும் உங்கள் கருத்தையே நானும் திரும்பச் சொல்கிறேன் நெல்லை! (யாருக்குத்தான் நேரம் இருக்கிறது?) ஆமாம், பூனை மிகவும் சுத்தமான பிராணி. ஒரு விஷயம் சொன்னால் எங்கள் ப்ளாக்கை கொஞ்சம் மொபைலிலிருந்து தள்ளி வைத்துப் படிப்பீர்கள் என்று நினைக்கிறேன். கல்லூரிக் காலத்தில் நான் வளர்த்த நாய் இரவில் என்னுடனேயே படுக்கும். ஒரு கையால் (காலால்) போர்வையைத் தூக்கி உள்ளே வந்து என் கை அணைகளில் படுத்து விடும். யாராவது போர்வையைத் தொட்டால் கிர்ர் என்று குரல் கொடுக்கும்!!!

  பதிலளிநீக்கு
 26. வாங்க ராஜி... குடுகுடுப்பைக்காரன் பிடித்துக்கொண்டுபோய் என்ன செய்வான்? பாவமாக இருக்கிறதே... வளர்த்தால் பரவாயில்லை.

  பதிலளிநீக்கு
 27. பூனை பற்றி நான் ஒரு "கவிதை" எழுதி இருந்ததாகச் சொன்னேனே.. அதை பதிவில் சேர்த்திருக்கிறேன்!

  பதிலளிநீக்கு
 28. பூனை பற்றிய கவிதை நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 29. பள பள கண்ணோடும் ...தூங்கும் பூசாரும் அழகு...

  பதிலளிநீக்கு
 30. @ஶ்ரீராம், உங்க வீட்டுச் செல்லத்துக்கும் "மோதி" தான் பெயரா? அட!!!!!!!!! பூனைக்கவிதை உண்மையைச் சொல்கிறது.

  பதிலளிநீக்கு
 31. நாய்க்கு நன்றி வளர்ப்பவரிடம் பூனைக்கு விசுவாசம் வாழும் இடம்

  பதிலளிநீக்கு
 32. பூனைக் குட்டிகளை பூனை ஆதரவாய் கவனிக்கும் குட்டிகளுக்கும் தாயிடம் நம்பிக்கை/ ஆனால் குரங்குக் குட்டிகளுக்கு தாயிடமவ்வளவு நம்பிக்கை போதாது அவை தாயின் வயிற்றை விடாது பற்றி கொள்ளும்

  பதிலளிநீக்கு
 33. வாங்க கீதாக்கா? இந்தக் கேள்வியை மறுபடி மறுபடி கேட்டுகிட்டு இருக்கீங்க... மறுபடியும் சொல்றேன் ஆமாம்!

  பதிலளிநீக்கு
 34. வாங்க ஜி எம் பி ஸார்... கரெக்ட்டாச் சொன்னீங்க.. பூனை பழகி விட்டால் ரொம்பச் செல்லம் கொஞ்சுகிறது!

  பதிலளிநீக்கு
 35. வாங்க துரை செல்வராஜூ ஸார்...

  //கொடுத்து வைத்த பூனை!..//

  ஏன் அப்படிச் சொல்றீங்க?

  பதிலளிநீக்கு
 36. //பூனை பற்றிய கவிதை நன்றாக இருக்கிறது.//

  மீள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி கோமதி அரசு மேடம்.

  பதிலளிநீக்கு
 37. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி அனுராதா பிரேம்குமார்.

  பதிலளிநீக்கு
 38. சூப்பர், படங்களும் கவிதையும்.

  பதிலளிநீக்கு
 39. பூஜார் (அதிரடி அதிரா )இடையில் ஒரே ஒருநாள் வந்து மின்னலாய் மறைந்து விட்டாரே ,இதைப் பார்த்தாவது வருவாரா :)

  பதிலளிநீக்கு
 40. ஆஹா பூஸ் குட்டி என்ன அழகா போஸ் கொடுக்குதே.. மிக அழகு.. இவரின் ஜிஞ்சர் கலர் சூப்பர். ஆனா பாருங்கோ எந்தவித பயமோ.. தான் புதியவர் எனும் நினைப்போ அல்லது இது இன்னொருவருடைய சோபா ஆச்சே எனும் கூச்சமோ எதுவுமில்லாமல் .. ஏதோ அனைத்தும் தன் சொந்தம் என்பதுபோல ரொம்ப சிம்பிளாக இப்படி இருக்க பூஸ்களால் மட்டுமேதான் முடியும்:)..

  ///ஆஷா போஸ்லே அதிரா நினைவு வந்தது.///
  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஒரு பூஸ் உள்ளே வந்துதான் நினைவு படுத்த வேண்டி இருக்குது போல:).. ஏன் அந்த மொட்டை மாடியில் ஏறி “அந்த”:) மரத்தைப் பார்த்தாலே நம் எல்லோர் நினைவும் வந்திடுமே:).. எனக்கு இப்போதெல்லாம் உலகில் எந்த மூலையில் பெரீய மரம் பார்த்தாலும், உங்க ரோட்டு மரத்தின் நினைவு வந்துவிடுகிறது ஹா..ஹா..ஹாஅ...:)

  பதிலளிநீக்கு
 41. //Bagawanjee KA said...
  பூஜார் (அதிரடி அதிரா )இடையில் ஒரே ஒருநாள் வந்து மின்னலாய் மறைந்து விட்டாரே ,இதைப் பார்த்தாவது வருவாரா :)//

  ஹா ஹா ஹா பகவான் ஜீ.. மின்னல்மியாவ் எனவும் ஒரு பெயர் சூட்டியிருக்கிறேன் எனக்கு நானே:)

  பதிலளிநீக்கு
 42. //Avargal Unmaigal said...
  பூனை படமும் அதற்கு ஏற்ற கருத்துகளும் அருமை..... ஏஞ்சல் மற்றும் அதிரா பூணைகள் எப்போது மீண்டும் வரும்///

  ஹா ஹா ஹா கர்:) நீங்கதான் எங்களுக்கு வழிகாட்டியா ஆரம்பமே சொல்லாமல் கொள்ளாமல் காணாமல் போயிட்டீங்க ட்றுத்... :).. நானும் அஞ்சுவும் அவசர மீட்டிங் வைத்து.. அங்கின ஹொலிடே ஆரம்பமாகிவிட்டது அதனால்தான் காணாமல் போயிட்டார் எனும் முடிவுக்கு வந்தோம் தெரியுமோ?:).

  பதிலளிநீக்கு
 43. /// என் அபிப்ராயத்தில் நாயின் நேர்மை பூனையிடம் இல்லை. மென்மையும்.///
  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. மென்மை நிறையவே உண்டு, அது நாம் அவர்களோடு ஒட்டி உறவாடுவதில் இருக்கு.

  நேர்மை..... இது அவர்களுக்கு இலகுவில் புரியாது, பப்பிகளுக்கு புரிந்து கொள்ளும் உணர்வு அதிகம் அதனால்கூட இருக்கலாம்..

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!