திங்கள், 7 ஆகஸ்ட், 2017

திங்கக்கிழமை 170807 : மட்ரி - கீதா சாம்பசிவம் ரெஸிப்பிஇது ராஜஸ்தான் குஜராத் மாநிலங்களில் ரொம்பவே பிரபலமானது.


என் அம்மா வெறும் கோதுமை மாவில் இதைச் செய்திருக்கார். காரப்பொடி, உப்பு, பெருங்காயம் மட்டும் போட்டு! ஆனால் குஜராத்திலும், ராஜஸ்தானிலும் கொஞ்சம் மாறுதலாகச் செய்கின்றனர். கரகரப்பும் அதிகம்.  இதை நிறையச் செய்து ஒரு காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டு மாதக் கணக்கில் வைத்திருப்பார்கள். அவ்வப்போது வெளி ஊர் போனாலோ காலை ஆகாரம் இல்லை என்றாலோ, இரவுக்கோ இதை ஊறுகாயுடன் சேர்த்துச் சாப்பிடுவார்கள். ஆனாலும் இது அநேகமாக மாலை தேநீருடன் உண்ணும் உணவாகவே பார்க்கப்படுகிறது.

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு இரண்டு பெரிய கிண்ணம்

மைதா மாவு ஒரு பெரிய கிண்ணம்

கடலை மாவு ஒரு பெரிய கிண்ணம்

வெங்காய விதைகள் அல்லது ஓமம்

உப்பு

சமையல் எண்ணெய் ஒரு சின்னக் கிண்ணம் மாவில் சேர்க்க

பொரிக்க எண்ணெய் தேவையான அளவு

இந்த மாவுகளோடு உப்புச் சேர்த்துக் கொண்டு வெங்காய விதைகள் அல்லது ஓமம் அல்லது கறுப்பு ஜீரகம் சேர்த்து நன்கு கைகளால் கலக்கவேண்டும். பின்னர் சின்னக் கிண்ணம் எண்ணெயை மாவில் ஊற்றி நன்கு கலக்க வேண்டும். மாவு முழுவதும் பரவுமாறு எண்ணெயைக் கலக்கவும். மாவைச் சிறிது நேரம் விடாமல் கலக்கியபின்னர் கையால் பிடித்தால் உருட்ட வரும். அப்போது கொஞ்சம் கொஞ்சமாக நீரைச் சேர்த்துக் கெட்டியாகப் பூரிக்குப் பிசைவதை விட இன்னும் கெட்டியாகப் பிசையவும். உடனே அடுப்பில் எண்ணெயைக் காய வைத்துப் பிசைந்த மாவைச் சின்னப் பூரிகளாக இட்டு எண்ணெயில் போட்டுப் பொரிக்கவும். பூரியாக இட்டதும் அது உப்பாமல் இருக்கப் பூரியின் நடுவே கத்திகளால் குத்தி விடவும். எல்லாவற்றையும் இப்படிக் கரகரவெனப் பொரித்துக் கொண்டு ஒரு காற்றுப் புகாத டப்பாவில் போட்டு மூடி வைத்துக் கொண்டு தேவையான போது எடுத்து உண்ணலாம். இதை அநேகமாக மாங்காய் ஊறுகாயுடன் சாப்பிடுவார்கள்.

இன்று நான் செய்யும்போது ஒரு சில மாறுதல்களைச் செய்தேன். மாவு அளவுகள் எல்லாம் மேலே சொன்னாற்போல் போட்டுக் கொண்டேன்.

அதில் காரப்பொடி இரண்டு டீஸ்பூன்

உப்பு தேவையான அளவு

ஓமம் இரண்டு டீஸ்பூன்

கசூரி மேதி ஒரு டீஸ்பூன் கையால் கசக்கிச் சேர்க்கவும். இதை எல்லோரும் கஸ்தூரி மேதி என்கிறார்கள். இதன் பெயர் கசூரி மேதி ஆகும். தேவையானால் கரம் மசாலாவும் சேர்க்கலாம். நான் சேர்க்கவில்லை. அதற்குப் பதிலாகப் பெருங்காயப் பொடி கொஞ்சம் சேர்த்தேன்.

எல்லாவற்றையும் நன்கு கலந்து கொண்டு இரண்டு டேபிள் ஸ்பூன் நெய்யை அதில் கலந்து (எண்ணெய்க்குப் பதிலாக) நன்றாகக் கலந்து கொண்டே இருந்தேன். மாவு பிடிக்கும் பதம் வந்தது.  அந்தப் படம் கீழே கொடுத்துள்ளேன்.
கொஞ்ச கொஞ்சமாக நீரை விட்டுப் பிசைந்தேன். பிசைந்த மாவு கீழே. 
பின்னர் பூரிகளாகப் பொரித்து எடுத்தேன். அவை இங்கே
  பொரித்த பூரிகள் 
  டப்பாவில் போட்டிருப்பது 
இதிலேயே காரம் இருப்பதால் அப்படியே சாப்பிடலாம். நீண்ட தூரப் பயணங்களுக்கும் ஏற்றது. செய்து கையில் எடுத்துச் செல்லலாம். இதற்கு மட்ரி என்று பெயர் சொல்கின்றனர். நாங்க எங்க வீட்டில் கார பூரி என்று சொல்வோம். 


[ தட்டையைப் போல இருக்கிறது.  பார்க்கும்போதே கரகரமொருமொரு என்று இருக்கிறது.  சாப்பிட ஆசைதான்.  சமீபத்தில் ரிப்பேர் செய்து கொண்டிருக்கும் பல் "கொஞ்சம் யோசித்து உள்ளே அனுப்பு" என்கிறது! - ஸ்ரீராம்  ] 
43 கருத்துகள்:

 1. வழக்கமாக வீட்டில் செய்வதைவிட மாறுபடுகிறது. செய்யச் சொல்வோம்.

  பதிலளிநீக்கு
 2. தட்டையே தான். ரெண்டு ஸ்பூன் நெய்னு சொன்னீங்க பாருங்க.. அது பிடிச்சிருக்கு.

  பதிலளிநீக்கு
 3. கெத்தாமரிக்பாயைத் தொடர்ந்து கேள்விப்படாத பெயர் மட்ரி. தட்டை மாதிரி ஆனால் பூரிபோல் கொஞ்சம் மெலியது. வட இந்தியாவில் எதுக்கும் தொட்டுக்க ஊறுகாயா? ஹெல்த்துக்கு டேஞ்சர் என்பதினால் சிவப்பு எழுத்துல செய்முறை போட்டிருக்கீங்களோ? த ம

  பதிலளிநீக்கு
 4. நெ.த. காரமெல்லாம் இருக்காது. ஹெல்த்துக்கு டேஞ்சர்னு எப்படிச் சொல்றீங்க? செய்து சாப்பிட்டுப்பார்த்துட்டுச் சொல்லுங்க! சின்ன வயசில் அம்மா அடிக்கடி கோதுமை மாவில் மட்டும் செய்வாள். மாலை நேரச் சிற்றுண்டியாக நிறையச் சாப்பிட்டிருக்கோம். திருப்பதிக்குத் திருமலை தரிசனம் செல்கையில் நிச்சயம் இது உண்டு. தரிசனத்துக்காகக் காத்திருக்கையில் பசி எடுத்தால் சாப்பிட வைத்திருப்போம். ரயில் பயணங்களிலும் கட்டாயம் இருக்கும்.

  பதிலளிநீக்கு
 5. மற்றவர்களுக்குப் பின்னர் வருகிறேன்.

  பதிலளிநீக்கு
 6. கீதாக்கா மிகவும் பிடிக்கும் மத்ரி. இப்போது செய்வது குறைந்துவிட்டது. மகன் இங்கிருந்த வரை அவனுக்குச் செய்து கொடுப்பது வழக்கம்...அவன் கிளினிக்கிலேயே பல நாட்கள் தங்க நேரும் போது இதுவும், காக்ராவும் மிகவும் பயன்படும். தெப்லாவும் செய்து கொடுத்துவிடுவேன். இப்போது கூட நெருங்கிய உறவினர் அமெரிக்கா ஸாரி அம்பேரிக்கா (நீங்கள் சூட்டிய பெயர் ஹஹஹ்) சென்ற போது மத்ரி, காக்ரா செய்து கொடுத்தனுப்பினேன். கெட்டுப் போகாதே...

  எங்கள் பாட்டியும் நீங்கள் முதலில் சொல்லியிருந்தபடி செய்வார். ஆனால் காக்ரா செய்வது போல் செய்து கொடுத்துவிடுவார். பொரிக்காமல்...

  இப்போது கடைகளில் மத்ரி மிக்ஸட் வெஜிடபிள் ஊறுகாயுடன், காக்ரா வித விதமாகவும் விற்கப்படுகிறது. ஆனால் வாங்குவதில்லை. மத்ரி கூட வேறு வேறு மாவு ரவை காம்பினேஷனில் செய்கிறார்கள்தான்.

  அக்கா உங்க ரெசிப்பியையும் குறித்துக் கொண்டேன். நீங்க சொல்லியிருக்கறமாதிரி நானும் நெய்தான் சேர்ப்பேன். எண்ணையை விட நெய் சேர்ப்பது கொஞ்சம் இன்னும் டேஸ்ட் நன்றாக இருப்பது போல் இருக்கும்...

  தெப்லா, மத்ரி, காக்ரா கிட்டத்தட்ட ஒரே மாதிரி கொஞ்சம் வித்தியாசமாக பெர்ம்யூட்டேஷன் காம்பினேஷனோடனு சொல்லலாமோ...

  கீதா

  பதிலளிநீக்கு
 7. கஸூரி மேதி சேர்த்தாலே தனி ஃப்ளேவர்தான்...

  கீதா

  பதிலளிநீக்கு
 8. நெல்லை சிவப்பு எழுத்துகள் இல்லையே!!! பிங்க்!!! வெளிநாடுகளில் கேர்ல்ஸ் என்றால் பிங்க் ஆச்சே பாய்னா ப்ளூ அதான் ஸ்ரீராம் ப்ளூவிலும், கீதாக்கா சின்னப் பெண்ணாக்கும்!! அதான் பிங்க் இல்லையாக்கா!!! ஹிஹிஹிஹி

  கீதா

  பதிலளிநீக்கு
 9. மட்ரி என்று எழுதினாலும், படிக்கும்போது மட்டி என்றே படிக்க வேண்டும். பெரும்பாலான தேநீர் கடைகளில் சாய் உடன் மட்டி தான்! இது கூடவே ஃபேன் என்று ஒன்று உண்டு! இப்போதெல்லாம் பெரும்பாலான கடைகளில் கிடைப்பதால், வீடுகளில் செய்வது குறைவு.

  பதிலளிநீக்கு
 10. பல் பலமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள்...? ஹிஹி...

  பதிலளிநீக்கு
 11. தட்டை மாதரி ஆன வேற....

  சீக்கிரம் செஞ்சு பார்க்கிறேன்....பையனுக்கு இது மாதரி நொறுக்ஸ் தான் ரொம்ப பிடிக்கும்...

  பதிலளிநீக்கு
 12. ரயில் பிரயாணங்களில் வட இந்தியர்கள் சாப்பிடுவதை பார்த்திருக்கிறேன்..உடன் வெங்காயம்+ புஜியாவும்..:) உங்கள் செய்முறை அருமை மாமி..

  பதிலளிநீக்கு
 13. பார்க்கும் போதே தோணும் ரெசிபி

  பதிலளிநீக்கு
 14. அருமை பாவம் நான்தான் த ம 11

  பதிலளிநீக்கு
 15. ஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ் எல்லோரும் நலமோ??? நீங்க எல்லோரும் மறந்திருப்பீங்க:) மீயும் மறந்திட்டேன்ன்ன்ன்ன்:) ... எதை? எனக் கேட்டிடாதீங்க...:) சரி அதை விட்டிடுவோம்ம்...

  என்னாதூஊஊஉமல்ட்டியா? அஞ்சூஊஊஊ ஓடிக்கமோன்ன்ன்... சே சே சே பழக்க தோசத்தில கூப்பிட்டிட்டேன்ன்ன் அஞ்சு இங்கின இல்ல... வருவா வருவா ஹொலிடே முடியட்டும்.

  கீதாக்காவின் மட்டி ஹையொ மட் ரி நன்றாக இருக்கு, இது முன்பு ஊரில் அம்மா அடிக்கடி செய்வா. ஆனா இப்படி வட்டமாக பொரிப்பதில்லை, போர்ட்டில் போட்டு குட்டி சதுரங்களாக நீள்சதுரம் சாய் சதுரமென விரும்பிய வடிவில் வெட்டிப் பொரித்தெடுப்போம்.

  பாதிக்கு காரமும் மீதிக்கு மிளகாய்த்தூள் போடாமல் பொரித்தெடுத்து பின்பு சீனிப்பாகு காய்ச்சி ஊத்துவா.

  பதிலளிநீக்கு
 16. அருமையான ரெஸிப்பி...பகிர்வுக்கு நன்றி
  தமிழ் செய்திகள்

  பதிலளிநீக்கு
 17. இது நீண்ட நாள் வைத்து உண்ணக்கூடிய உணவுதான் ஆனால் எண்ணெயில் பொரித்து எடுப்பதனால் நீண்ட நாட்கள் வைத்து உண்டு வருத்தம் தேடியிருக்கிறேன் நான்... ஹொஸ்டலில் இருந்தபோது அம்மா செய்து தருவா... பின்னர் நிறுத்தியாச்சு.
  பொரித்தெடுக்கும் எந்தப் பலகாரமும் சில நாட்களுக்கு மேல் வைத்துச் சாப்பிடுவது நல்லதல்ல.... அவை கெடாவிட்டாலும் உடம்புக்கு கெடுதிதான்.

  பதிலளிநீக்கு
 18. நான் இல்லாமல் போன கொஞ்சக்காலத்தில என்னோட பிங் எழுத்துக்களை ஸ்ரீராம் களவாடிட்டார்ர்ர்ர்ர்ர்ர்.... மீ காண்ட் கோர்ட்டுக்குப் போகப்போறேன் என்னோட பிங் நேக்கு வேணும்...:).

  பதிலளிநீக்கு
 19. மட்ரியை பூரிகளாக முழுஉருவத்துடன் செய்சிருக்கிறீர்கள். நான் இதை 2011 இல் சொல்லுகிறேனில் எழுதியிருந்தேன். ஆனால் மைதாவும் சிறிது கடலைமாவும் சேர்த்துச் செய்தது. மெத்தி மட்ரியும் எழுதியிருந்தேன். எல்லாம் கட்செய்து பொரித்த நிலையில். இதன் மாவு பக்குவமே எண்ணெய்,நெய் கலந்த மாவு பிசைவதற்கு முன் பிடித்தால்பிடிக்கவரவேண்டும். உதிர்த்தால் உதிரவேண்டும் என்பதுதான்.
  கோதுமைமாவில் துக்கடா என்று செய்வார்கள் முன்பெல்லாம். கரகரவென்று இருக்குமே தவிர வாயில் அப்படியே கரையாது. நன்னா லக்ஷணமாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுவதற்காகத்தான் சுய புராணத்துடன் எழுதியுள்ளேன்.டப்பாவில் போட்டு வைத்தால் அக்கடா என்று வந்தவர்களுக்குக் கொடுக்க உதவும். டில்லியில் பக்ஷணக்கடைகளில் ஒருபாவு ,அரைபாவு என்றெல்லாம் வாங்குவதுண்டு. கரகராடேஸ்டி. அன்புடன்

  பதிலளிநீக்கு
 20. அருமையான மட்ரி.
  செய்து பார்க்கிறேன்.
  படங்களுடன் செய்முறை அருமை.

  பதிலளிநீக்கு
 21. கோதுமை மைதாவில் காரம் இல்லாமல் சின்ன சின்ன துண்டுகளாக டையமண்ட் ஷேப்பில் நறுக்கியெடுத்து
  பொரித்து சர்க்கரைப் பாகில் போட்டு கல கலா என்னும்பெயரில் என் மனைவி செய்வதுண்டு

  பதிலளிநீக்கு
 22. நன்றி கில்லர்ஜி,

  நன்றி அப்பாதுரை,

  நன்றி கரந்தை ஜெயகுமார்,

  நன்றி நெ.த.

  பதிலளிநீக்கு
 23. நன்றி மிகிமா,

  நன்றி தில்லையகத்து/கீதா, அநேகமாக இம்மாதிரிச் செய்பவர்கள் தானே நாமெல்லாம், நாக்குத் தான் நாற்பது முழம் ஆச்சே! :) தேப்லா அடிக்கடி செய்வேன். காக்ரா அதிகம் பிடிக்கிறதில்லை! :)

  பதிலளிநீக்கு
 24. நன்றி வெங்கட், உங்களுக்குத் தெரியாததா!

  நன்றி டிடி, நல்லாக் கரகரவென்றே இருக்கும்.

  நன்றி அனுராதா ப்ரேம்குமார்!

  பதிலளிநீக்கு
 25. நன்றி ராஜி.

  நன்றி ஆதி வெங்கட். புஜியாவும் அடிக்கடி பண்ணுவேன். இப்போல்லாம் கை தகராறு செய்வதால் கொஞ்சம் குறைஞ்சிருக்கு. :)

  நன்றி அசோகன் குப்புசாமி

  நன்றி புலவர் ராமானுசம், நீங்க ஏன் பாவம்? :)

  பதிலளிநீக்கு
 26. வாங்க அதிரா, இப்போத் தான் இந்தப் பதிவே களை கட்டி இருக்கு! உங்களோட சிநேகிதியும் வந்துட்டால் அப்புறம் கேட்க வேண்டாம். :)

  நன்றி விஜய்

  நன்றி காமாட்சி அம்மா, உங்கள் பதிவையும் படிக்கிறேன். இது திடீர்னு நினைத்துக் கொண்டு செய்தது.

  நன்றி கோமதி அரசு, செய்து சுவைத்துப் பாருங்கள்.

  பதிலளிநீக்கு
 27. நன்றி ஜிஎம்பி சார், நவராத்திரி முதல் நாளன்றைக்கு நான் நீங்க சொன்னபடி தான் கோதுமை மாவு+மைதா மாவு+ ரவை கலந்து சர்க்கரை, வெண்ணெய், ஒரு சிட்டிகை உப்புச் சேர்த்துப் பால் ஊற்றி ஏலக்காய் போட்டுப் பிசைந்து டைமன்ட் வடிவங்களில் கத்திரித்துப் பொரித்து வைத்து நிவேதனம் செய்வேன். இது குறித்து ஏற்கெனவே நவராத்திரிப் பதிவுகளில் சொல்லி இருக்கேன். ஒரு சிலர் முட்டை கூடச் சேர்க்கிறார்கள். சீப்பில் வைத்தோ அல்லது சீப்பு மாதிரிச் சீவல் கட்டையிலோ கூடச் சீவிப் போடுவார்கள். கலகலா என்னும் பெயர் நானும் கேட்டிருக்கேன்.

  பதிலளிநீக்கு
 28. //உடன் வெங்காயம்+ புஜியாவும்..:)

  புஜியாவா?

  பதிலளிநீக்கு
 29. //அவை கெடாவிட்டாலும் உடம்புக்கு கெடுதிதான்.

  சரின்னு தோணுது. ஞானி :-)

  பதிலளிநீக்கு
 30. கீ.சா. மேடம் - என் ஹஸ்பண்ட், துக்கடான்னு ஒண்ணு தீபாவளிக்கு பண்ணுவா. ஓரளவு இதே முறைதானாம் ஆனால் டைமண்ட் சைசுல கட் பண்ணுவா (1 இன்ச் சைசுல). அது பசங்களுக்கு ரொம்பப் பிடிக்குமாம். நீங்க பூரி இடறதுமாதிரி சொல்லியிருக்கீங்க. அடுத்த முறை பானிபூரி சைசுல இட்டு பொரிக்கறேன்னு சொன்னா (இல்லைனா, பெரிசா இட்டு, அரை ஆழாக்கை வச்சு வட்ட வட்டமா கட் பண்ணறது, பானிபூரி பண்ணற மாதிரி). எனக்கு ஸ்வீட்ஸ் மட்டும்தான் பிடிக்கும் என்பதால் (ஒரு எக்செப்ஷன் - நெல்லை சாந்தி ஸ்வீட்ஸ் மிக்சர்) நான் சாப்பிடுவதில்லை. எண்ணெய்ல பொறிக்கறதுதான் எனக்கு டேஞ்சர்னு தோணித்து.

  பதிலளிநீக்கு
 31. அதிராவை வரவேற்கிறேன் / வரவேற்கிறோம். லீவு முடிந்ததா?

  பதிலளிநீக்கு
 32. மிக்க நன்றி கீதாக்கா... அஞ்சுவை விரைவில் அழைச்சு வருகிறேன்... அப்போதானே நானும் எல்லோரோடும் தெகிறியமா சண்டை போடலாம்:)

  பதிலளிநீக்கு
 33. நான் முன்பு துக்கடா செய்வேன். மைதா மாவு மட்டும் தான் அதில் . இதை நிறைய பாம்பே ஹல்வா ஸ்டோர்சில் பார்த்திருக்கிறேன்.
  செய்து பார்க்கலாம். நன்றி கீதா.

  பதிலளிநீக்கு
 34. ////அப்பாதுரைAugust 7, 2017 at 5:35 PM
  //அவை கெடாவிட்டாலும் உடம்புக்கு கெடுதிதான்.

  சரின்னு தோணுது. ஞானி :-)////
  ஹா ஹா ஹா மியாவும் நன்றி... நான் எப்பவோ ஞானியாகிட்டேன்ன்ன்ன்:) இப்போ காசிக்குப் போக வெயிட் பண்ணிக்கொண்டிருக்கிறேன்:).

  பதிலளிநீக்கு
 35. தங்கூ ஸ்ரீ ராம், லீவு இன்னும் முடியவில்லை... சுற்றுலாத்தான் முடிஞ்சிருக்கு.

  பதிலளிநீக்கு
 36. நான் தேம்ஸ் கரையில் உண்ணாவிரதம் ஆரம்பிக்கப் போறேன்... என்னை ஆரும் தடுக்காதீங்கோ... நெல்லைத்தமிழனின் பெயரில் இருக்கும் தமிழன் எனும் சொல்லை நீக்கும்வரை உண்ணாவிரதம் தொடரும்....

  வந்தோரை வரவேற்கும் தமிழ்நாட்டில் தமிழன் எனும் பெயரோடு இருந்தும், அதிரா வந்தாச்சா என ஒரு வார்த்தை கேட்காமல் காக்கா போயிட்டார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. இதோ உண்ணாவிரதம் ஆரம்பம்ம்ம்ம்:)...

  கடவுளே என் செக்கரட்டரி இன்னும் வரல்லியே இங்கின:)... கொஞ்சம் அவசரப்பட்டிட்டமோ:) எப்பூடி தனியா உண்ணாவிரதம் இருக்க முடியும்????

  பதிலளிநீக்கு
 37. மைதா மட்டும் இல்லையென்றால் இதுவும் எனக்கு ok தான் :)

  பதிலளிநீக்கு
 38. @அப்பாதுரை, புஜியா என்பது கிட்டத்தட்டக்காராச்சேவு மாதிரி உ.கி. சேர்த்துச் செய்வாங்க!

  பகவான் ஜி, கோதுமை மாவு, கம்பு மாவு சேர்த்தும் செய்யலாம். அல்லது வேறே ஏதேனும் சிறு தானிய மாவோடு கோதுமை மாவு சேர்த்துச் செய்யலாம். மைதா நானும் அதிகம் சேர்ப்பதில்லை. என்றாலும் அவ்வப்போது தவிர்க்க முடிவதில்லை. :(

  நெ.த, பானிபூரி செய்முறையே வேறே! நீங்க சொல்லும் துக்கடா இதே மாதிரிச் செய்யலாம். காமாட்சி அம்மா செய்திருப்பதாகச் சொல்லி இருக்காங்க பாருங்க. எங்க வீட்டிலேயே நானும் செய்திருக்கேன்.

  வல்லி, நன்றி. கோதுமை மாவிலும் செய்யலாம், தனி கோதுமை மாவில் என்னோட அம்மா செய்வார்.

  பதிலளிநீக்கு
 39. அதிரா... சுற்றுலா முடிந்து திரும்பியாச்சா? மாத முடிவில்தான் நீங்கள் இருவரும் வருவீர்கள் என்று நினைத்தேன். உங்கள் தளத்தில் எழுத நிறைய செய்திகளோடு வந்திருப்பீர்கள். ரஷ்யாவில் பொருளாதாரத் தடை, வட கொரியா பொருளாதாரத் தடை, இங்க ஏவுகணை சோதனை - இப்படியெல்லாம் செய்திகள் படித்து, நீங்க அங்க போனவுடனேதான் இதெல்லாம் நடக்குதோன்னு எனக்கு சந்தேகம் அந்தச் செய்திகள் படிக்கும்போது வந்தது.

  நலமாக வந்துட்டீங்க. வருக வாழ்க - நெ ல் லை

  பதிலளிநீக்கு
 40. ஹா ஹா ஹா நெ.த வரவேற்றிட்டீங்க... நன்றி நன்றி...பெயரைக்கூட நெல்லை என நிறுத்திட்டீங்க:).. இப்போ நீங்க தமிழன் தான்:).
  அது ட்றம்ப் அங்கிளோடு நிறையப் பேசினேன்.. பக்கத்தில நின்றுபடம்கூட எடுத்தேன் தெரியுமோ?? எல்லாம் விபரமா என்பக்கத்தில் சொல்கிறேன்...
  மாத முடிவில் வரத்தான் நினைத்திருந்தேன் ஆனா கலண்டர் அவசரமாக் கிழிச்சுட்டேன்ன்ன் அதனால வந்துட்டேன்ன்ன்... :).

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!