செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

கேட்டு வாங்கிப் போடும் கதை :: சீதையின் ஓவியம் - ஐயப்பன் கிருஷ்ணன்



     இந்த வாரம் சீதா ராமன் கதைதான்.  ஆனால் ராமனை சீதா மன்னிக்கும் கதை அல்ல!!







     இதை எனக்கு அனுப்பி வைத்து உதவிய திருமதி ராமலக்ஷ்மிக்கு நன்றி.



     நன்றி திரு  ஐயப்பன் கிருஷ்ணன்


==============================================================


 முன் குறிப்பு:

தெலுங்கு நாட்டுப்புற கதையின் அடிப்படையில் அதைத் தழுவி எழுதப்படுகின்ற கதை இது. இதன் மூலம் தெலுங்கு நாட்டுப்புற கதையே ஆகையால், இது குறித்த குறிப்புகள் எந்த இராமாயண புத்தகத்திலும் இருக்கிறதா என்ற கேள்வியை தவிர்க்க வேண்டுகிறேன்.

-ஐயப்பன் கிருஷ்ணன்

**************



சீதையின் ஓவியம்

ஐயப்பன் கிருஷ்ணன்



சீதே சீதே “


அந்த தோற்சீலையில் வரையப்பட்ட அந்த ஓவியம் எழுந்து நின்று ஆடுகிறது.


" சீதே... என் மனதைக் கொள்ளைக் கொண்டவளே... “


சீதை அதிர்ந்தாள். அந்த ஓவியம் பேசத் தொடங்கியதைக் கண்டு யாருக்குத்தான் அச்சம் வராது?


சீதை, ஊர்மிளை மாண்டவி என அனைவருடன் சேர்ந்து பணிப்பெண்களும் அலறுகிறார்கள்.


சீதையின் முகம் பயத்தில் வெளிறிப் போனது. அவளுக்கு அது யார் என்று தெரியவில்லை. அந்த ஓவியத்தின் காலைப் பார்த்தவுடன் அவள் புரிந்துக் கொண்டாள்.


சிறு துறும்பைக் கிள்ளிப் போட்டு இதற்கு நிகர் தான் நீ என்று ஏசிய போது பார்த்த அதே கால்கள்.


மன்றாடி, பயமுறுத்தி தன்னைப் பணியவைக்க முயன்றபோது வெறுப்புடனும் வேதனையுடனும் உற்று நோக்கிய அதே கால்கள்.


மாய ஜனகனைக் கொண்டு வந்து வெட்டி உன் தந்தை இறந்தான் என்று கூறிய போது இறந்தது தந்தையும் இல்லை.. இவன் வீரனும் இல்லை என்று உறுதி கொண்டு கோபத்தில் நகைத்துச் சினந்தபோது கண்ட அதே கால்கள்.


நேற்று சாயந்திரம் பெண் துறவி ஒருத்தி கேட்டுக் கொண்டதற்கு இணங்க, தான் கண்ட இராவணனை வரைவதற்காக வெறும் கால்களை மட்டுமே வரைந்தாளே அதே கால்கள் தாம் அவை.



--



அம்மா சீதே... நீ பலகாலம் அசோகவனத்தில் இருந்தவள் இல்லையா நீ


அந்தப் பெண் துறவி கோலம் பூண்டிருந்தாலும் அவள் கண்களை உற்றுக் கவனித்தால் தெரியும். அவற்றில் வன்மம் எத்தனை உறுதியாக குடி கொண்டிருக்கிறது என்று.


“ ஆம் பாட்டி.. என் பிரபுவின் நினைவு மட்டுமே என்னைக் காப்பாற்றியது”


சீதையின் கண்களில் இராமனைப் பற்றிப் பேசும் போது சட்டென்று கனிந்து கூடவே நாணமும் எழுகிறது. அந்தக் கிழவி அதை கவனிக்கிறாள். அவளுக்குள் மேலும் அனல் மூள்கிறது.


மனதில் கறுவுகிறாள். உன் நிம்மதியை அழிப்பேன் சீதே... உன் வம்சத்தை நிர்மூலமாக்குவேன். உன்னை என்றும் இவ்வுலகில் தூக்கத்தை தொலைத்தவளாக்குவேன்.



என் உற்றார் உறவினர், சகோதரர்கள் என் மக்கள் என பலரும் அழியக் காரணமானவள் அல்லவா நீ... இனி உனக்கு நிம்மதி கிடையாது. மலையொத்த தோள்களை உடையவனல்லவா என் அண்ணன் கும்ப கருணன்.. ஏழுலகையும் ஆட்டிப்படைத்தவனல்லவா என் அண்ணன் இராவணன்... அவர்கள் அழிய நீயும் உன் குடும்பத்தாரும் நிம்மதியாக இருக்க விடுவேனா ?


“ நீ அந்த இராவணனைப் பார்த்திருக்கிறாயா சீதே “


அவள் நைச்சியமாக வினவுகிறாள்.


அந்த ஒரு வினாடியில் சீதையின் கண்களில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டு அந்தக் கிழவி அதிர்ந்து தான் போனால். அப்பப்பா என்ன ஒரு சினம். என்ன ஒரு தீர்க்கம். விட்டிருந்தால் விநாடியில் இலங்கையயே அழிக்கக் கூடிய கண்கள் இவை என்பதை அவள் உணர்ந்தாள். இராவணனையும் ஒரு நோக்கில் இவள் அழித்திருக்க முடியுமே என்று அயர்ந்தாள்.



“ அந்த இழிமகனையா “


சீதையின் கண்கள் சிவந்து அனல் நிரம்பியது. அவள் பேச்சில் ஏற்பட்ட மாற்றம் இதுவரை யாரும் அறியாத சீதையாக அவளைக் காட்டியது.


“ அந்தப் பேய்மகனை நான் பார்த்ததில்லை. என் பிரபு இராமனை நோக்கிய கண்கள் வேறு அந்நிய ஆடவரையும் நோக்கிடாது பாட்டி.. உணர்ந்து கொள். அந்தக் குலக்கேடனை என்னால் விநாடியில் அழித்திருக்க முடியும்... ஆனால்.. அதற்காகவாவது அந்த மிருகத்தனையவனை நான் நோக்க வேண்டி இருந்திருக்கும். அது மட்டும் இன்றி அது என் பிரபுக்கு எப்படி ஏற்றம் தந்திருக்கக் கூடும். “


கிழவி அச்சம் கொண்டாள். கூடாது இவளின் சினம் உலகழிக்கும். இவளின் விழிகளுக்குள் உண்டானத் தீ தான் அன்று இலங்கையைக் கவ்வியிருக்க வேண்டும். எல்லோரும் சிறு குரங்கின் மீது பழி போட்டிருக்கிறார்கள். நாம் வந்த காரியம் நிறைவேற வேண்டும். அது இவள் சினந்தாள் நடக்காது..


“ அடடா விடு சீதே... அமைதி கொள்.. அது தான் இராமன் வந்து உன்னைக் காப்பாற்றினானே... என்ன பராக்கிரமம்... உலகமெல்லாம் அதே பேச்சுத்தான் “ நைச்சியமாய் ஆரம்பித்தாள் அந்தக் கிழவி.


இராமனின் பெயர் சீதையின் மனதை ஆற்றுப் படுத்தியது. அவள் சினம் நீங்கினாள். கண்களில் கனிவேறியது. அவள் உலகம் இராமனினால் ஆனது. இது இராமனின் அன்னை, இராமனின் அரண்மனை, இராமனின் உலகு, இராமனின் தம்பி, இராமனின் தாசன்... எல்லாமும் இராமன் இராமன்.



“ அதிருக்கட்டும் சீதே... அவன் கால்களைப் பார்த்தாயல்லவா ? அதையாவது வரைந்து கொடேன் “


தூண்டிலை வீசினாள் கிழவி. அவளுக்குத் தெரியும், இவளின் கைப்பட்ட ஓவியத்திற்கும் உயிர் கிடைக்கக் கூடும். இவள் அத்தகையவள். இராமனை விஞ்சியவள், இவளால் நடத்தி வைக்க முடியாத ஒன்று என்று ஏதுமில்லை என்றே அந்தக் கிழவி நினைத்தாள் இல்லை இல்லை .. உறுதியாக நம்பினாள்.


“ அடப்போ பாட்டி.. அந்த இழிந்தவன் கால்களை வரைந்து நான் என்ன செய்யப் போகிறேன் “


“ என்னம்மா அப்படி சொல்லிவிட்டாய்... அதான் இராவணன் இறந்து விட்டானே.. இறந்தவன் எப்படி இருப்பான் என்ற ஆர்வம் கூட இல்லையா உனக்கு. ஒன்று செய், அவன் கால்களை வரைந்து கொடு, அதன் அடிப்படையில் அவன் எப்படி இருந்திருப்பான் என்று என்னால் வரைந்து தர முடியும். “


சீதைக்கு அசுவாரசியத்துடன் கூடிய மெல்லிய ஆவல் எட்டிப் பார்த்தது. அவன் எப்படித்தான் இருந்திருப்பான் ? அத்தனை பயங்கரமோ... இப்போது இறந்து போய்விட்டானே.. அவன் முகத்தைப் பார்த்தால் தான் என்ன ?


“ சரி பாட்டி .. “


அவள் அந்தக் கிழவியிடம் இருந்த தோற்சீலையை எடுத்து, கரிக் குச்சியினால் விளையாட்டாக வரையத் தொடங்கினாள். வரைய வரைய, அவளுக்குள் சினம் படர்வதை அவளால் உணர முடிந்தது. தன் குணத்தில் இருந்து தான் பிறழ்வதாக அவளுக்குத் தோன்றியது. ஆகவே அவனின் பாதத்திற்கு சற்று மேல் வரை வரைந்து கொடுத்துவிட்டு சொன்னாள்.


“ அவ்வளவு தான் பாட்டி... சரி நீ என்னவோ செய்துகொள். அவனைப் பார்க்கும் ஆவல் ஒன்று எனக்கில்லை. ஏதோ உனக்கு ஆர்வமிருந்தால் ஓவியத்தை முடித்து நீயே பார்த்துக்கொள்.. நான் செல்கிறேன்” என்று ஓவியத்தை தூக்கி எறிந்து விட்டு சீதை துள்ளலுடன் அவ்விடத்தை விட்டு நீங்கினாள்.


அந்தக் கிழவி ஓவியத்தை எடுத்தாள். அந்த ஓவியத்தின் மிச்சக் கோடுகளை நீட்டினாள்.


” நீ அழிந்தாய் சீதே... ராமனும் அழிந்தான் என்றே நினைத்துக் கொள் “


அவள் சிரித்தாள். தான் நின்றிருந்த இடம் அதிர சிரித்தாள். வானில் மேகங்கள் திடீரென கறுக்கத் தொடங்கின.. துர்ச்சகுனங்கள் தோன்றத் தொடங்கின.. அவளின் துறவிக்கோலம் நீங்கினாள்... முறம் போன்ற நகங்களைக் கொண்டு அவள் நின்றாள்.
.

அவள், சூர்ப்பநகை



**



ந்தையே பிரம்ம தேவா... என் கோரிக்கைக்கு செவி சாய்க்க மாட்டீரா “


“ மகளே, உன் கோரிக்கை நியாயமற்றது. இறந்தவர்களைப் பிழைப்பிக்க வைத்தால் வையத்தின் நியதி மாறிப் போகும் “


“ என்ன நியாயம் கண்டீர் பிரம்ம தேவரே .. எனக்கு நடந்தவை அனைத்தும் அநியாயங்களே என்பதை அறியீரோ ? “


​சூர்ப்பநகை தொடர்ந்தாள்.


“ என் கணவனை என் அண்ணனே சூழ்ச்சியால் கொன்றான். கணவனை இழந்தேன்.. தந்தையைக் கொன்ற தாய்மாமனைப் பழி தீர்ப்பேன் என்று தவமிருந்த என் மகனை இலக்குவன் கொன்றான்.. மகனை இழந்தேன். “


“ மகனையும், கணவனையும் இழந்து அபலையாய் நின்றேன். என் மகனைக் கொன்றவர்களைப் பழி தீர்க்க இராவணனிடம் சென்றேன்... கடைசியில் என் மொத்த சொந்தங்களும் இழந்தேன். இன்று யாருமற்று அநாதையாக நிற்கிறேன். ஆனால் என்னை வஞ்சித்த சீதை, இராம இலக்குவர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள் விட மாட்டேன்.. அவர்கள விடமாட்டேன் “


“மீண்டும் சொல்கிறேன் மகளே. இறந்தவர்கள் உயிர் பெற முடியாது. ஆயினும் இது சீதையின் கைப்பட்ட ஓவியம். ஆகையால் இது முழுமைப் பெற்றால், உயிர் கொண்டது போல் அசையும். உன் தவத்திற்காக நான் மேலும் ஒரு வரத்தை வேண்டுமானால் அளிக்கிறேன். இந்த ஓவியத்திற்கு பேசும் சக்தியை அளிக்கிறேன்”


பிரம்மன் மறைந்தான்.


சூர்ப்பநகைக்கு இராவணன் இறந்த பின் இராவணனின் எண்ணமோ இராம சீதையின் எண்ணமோ அற்று தான் இருந்தாள் சூர்ப்பநகை.


முதன் முதலில் சீதை கருவுற்றிருப்பதை அரண்மனைப் பூனை தான் அறிந்தது. அப்புறம் அரண்மனையின் நாயும் அறிந்தது. பின் பறவைகளில் பச்சைக் கிளிகள் அறிந்துக் கொண்டன. கடைசியாகத்தான் சேவலுக்குத் தெரியவந்தது.


சேவல் அந்த ரகசியத்தை தக்கவைத்துக்கொள்ள முடியாமல் தினமும் கூவிக் கூவி உலகிற்கு சொல்லியது. அந்த சேவலின் கூவல் ஆறு கடலில் இருந்த மீன்களுக்கும் கேட்கும் வகையில் இருந்தது. மீன்கள் அந்தச் சேதியை மிதிலைக்குக் கொண்டு சென்றன. ஜனகர் அதை கேட்டு மகிழ்ந்து புன்முறுவல் செய்தார். பின்பு தான் கழுகுகளின் வழியாக இந்த செய்தி இலங்கைக்கும் சென்றடைந்தது.


செய்தியை அறிந்ததோடல்லாமல், செய்தி அறிந்ததும் விபீஷணன் மகிழ்ந்ததைக் கண்டு சூர்ப்பநகையின் உள்ளம் கொதித்தது. அவள் அயோத்தியின் அமைதி குலைத்து சீதையின் ராமனின் உள்ளத்தில் நிம்மதி நிலைக்க விடாமல் செய்யவே வந்தாள். ஆனால்... நினைத்தது நிறைவேறாது போலிருக்கிறது.


சூர்ப்பநகை வெறுப்புடன் அந்த ஓவியத்தை கவனித்தாள். சீதை வரைந்த கால்களின் மீது சற்றேறக்குறைய எல்லாமும் பூர்த்தி செய்துவிட்டிருந்தாள் சூர்ப்பநகை. இன்னும் கண்கள் மட்டும் தான் மிச்சம்.


அந்த கண்களை முழுமையாக வரைந்து பின்பு கையில் வைத்துக் கொண்டு கதறினாள்.


“ பேசு அண்ணா.. இராவணா பேசு .. என்னிடம் ஏன் ​ பேசவில்லை. ஓவியம் பேசும் என்று பிரம்ம தேவர் சொன்னாரே, அதுவும் பொய்த்துவிட்டதே “ கடவுளும் தன்னை வஞ்சித்துவிட்டதாக குமைந்தாள்.


அந்த ஓவியத்தை வீசி எறிந்து விட்டு மனம் போன போக்கில் நகரை விட்டு வெளியே நடக்கலானாள்.


அந்த தோற்சீலை ஓவியம் காற்றில் மிதந்தபடியே சென்று சீதையின் அந்தப்புரத்தில் வீழ்ந்தது.


இதென்ன ஓவியம் என்று சீதை கையில் தொட்டதும் அந்த ஓவியம் எழுந்து நின்று ஆடியது..


​” சீதே சீதே “ என்றலறியது.


“ அக்கா அந்த ஓவியத்தை கீழே போடுங்கள். நெருப்பிட்டு கொளுத்திவிடலாம் “ ஊர்மிளை சீதையை எச்சரித்தாள். சீதையின் கையில் இருந்த அந்த ஓவியத்தைப் பிடுங்கி கீழே எறிந்தாள். பணிப்பெண் கொண்டுவந்த பந்தத்தில் இருந்து நெருப்பை அந்த தோற்சீலையின் மீது பற்றவைத்தாள்.


ஓவியம் தவிர்த்து மிச்ச இடங்கள் எரிந்து சாம்பலாயின. மாண்டவியோ ஒரு படி மேலே சென்று அந்த ஓவியத்தை கல்லி வைத்துக் கட்டி குளத்தில் எறியச் சொன்னாள். குளத்தினின்று தன்னை விடுவித்துக் கொண்டு வந்து சீதையின் முன் நின்று கொண்டு


" வா சீதே நாம் இலங்கைக்குச் செல்வோம்” என்று அசைந்தாடுகிறது அந்த இராவணனின் ஓவியம்.


சீதை சற்று நேரம் அமைதியானாள். எல்லாரையும் அமைதிப் படுத்தினாள். எல்லோரும் ஒரு முகமாக இராம நாமம் சொல்லச் செய்தாள்.


“ இராமா .. இராமா “


எல்லோரும் தொடர்ந்து சொல்லச் சொல்ல அந்த ஓவியத்தின் ஆடல் அடங்கியது. தொடர்ந்து எல்லோரும் இராம இராமா என்று இராம நாமத்தை உச்சரிக்க, அந்த ஓவியத்தின் பேச்சும் அடங்கி ஓவியம் வெறும் ஓவியமானது.


அதே நேரம் இராமா இராமா என்று அழைத்த பதற்றம் நிறைந்த அந்த ஒலி இராமனின் செவிக்கு எட்டியதும் இராமன் சீதையின் அந்தப்புரத்தை நோக்கி விரைந்தான்.


இராமனைக் கண்டதும் சீதையின் சகோதரிகளும் மற்றவர்களும் ஒதுங்க சீதையின் கைகள் அநிச்சையாய் அந்த ஓவியத்தை படுக்கையின் கீழ் தள்ளியது


“ சீதா... என்னாயிற்று .. ஏன் இத்தனைக் கூட்டம்? ஏன் எல்லோரின் முகத்திலும் அப்படி ஒரு பயம் கிடந்தது. நீ எதையோ படுக்கையின் கீழ் மறைக்கிறாயே என்ன நடக்கிறது இங்கே “


இராமன் கேட்க சீதை பதில் சொல்லுவதற்கு யோசிக்கும் முன்பே இராமன் படுக்கையின் கீழ் இருந்த அந்த ஓவியத்தை வெளியில் எடுத்தான்.


“ ஸ்வாமி நடந்ததை சொல்கிறேன் கேளுங்கள் “


சீதை ஆரம்பிக்க, இராமனின் முகம் கோபத்தில் சினந்தது.


“ சீதா... எதுவும் பேச வேண்டாம். எதிரியின் ஓவியத்தை வரைந்து வைத்துக் கொண்டு இரசிக்கிறாய். எத்தனை துன்பங்கள் கடந்து என் உயிரினும் இனியன் என் இலக்குவனை ஏறக்குறைய பலி கொடுத்து உன்னை மீட்டிருக்கிறேன். ஆனால் நீயோ சீச்சீ”


“ பிரபு, சொல்வதை கொஞ்சம் செவி மடுத்துக் கேளுங்கள் “


“ ஏதும் பேச வேண்டாம். நீ என் கண் முன்னே நிற்காதே காட்டுக்குச் சென்றுவிடு.. இது அரசனின் ஆணை “


சீதையின் முகம் அவமானத்தினாலும், இராமனின் செய்கையாலும் குன்றியது.


“ இராமரே, சீதை தான் அப்பழுக்கற்றவள் என்பதை தீக்குளித்து நிருபித்ததை மறந்தீரா ? நடந்தது என்ன என்று கேட்கவும் செய்யாமல் தவறான எண்ணம் கொண்டு சீதையின் மீது பழி சுமத்துகிறீர்.. இதுவோ தலைவனின் தர்மம் ? இதுவோ ஒரு அரசனின் தர்மம். “


ஊர்மிளை இராமன் பின் நின்று தலை உயர்த்தாமல் அதே நேரம் குரலின் உறுதி குறையாமல் பேசினாள்.


“ கேளும் ஐயாவே, துறவி என்றொரு கிழவி வந்தாள். இராம இராச்சியத்தில் தான் துறவிகளுக்கும் வயோதிகர்களுக்கும் குழந்தைகளுக்கும் சிறப்பு மதிப்பும் முன்னுரிமையும் மரியாதையும் தர வேண்டும் ஆயிற்றே.. ஆதலால் சீதை அந்தக் கிழவியை மதித்து அவளுக்குத் தேவையானவற்றைக் கொடுத்து அனுப்பப் பார்த்தாள். அந்தக் கிழவியின் பேரில் சீதை தான் பார்த்த இராவனின் பாதம் மட்டுமே வரைந்தாள். மிச்சம் யாவும் அந்தக் கிழவி வரைந்தது. இதற்கு நான் சாட்சி.. நம்ப மாட்டீரொ “


அதற்குள் விவரம் கோசலைக்கு சென்று அவளும் வந்து விவரம் அறிந்து சீதைக்குப் பரிந்து பேசினாள்.


“ இராமா, நீ கணவன் நிலையினின்று தாழ்ந்து போகாதே. திருமணம் என்பது வெறும் உறவு சேர்க்கை மட்டுமல்ல. ஒற்றர்கள் அந்த துறவிக் கிழவி வந்து போனதைச் சொன்னார்கள். அவள் செய்தது இது என்று இங்கு அனைவருக்கும் தெரியும். சீதையை மீண்டும் மீண்டும் நீ சந்தேகக் கண்ணுடன் நோக்குகிறாய். ஒரு இணையை மற்றொரு இணை எப்போது சந்தேகத்துடன் நோக்குகிறதோ அப்போதே அந்த உறவு பாழ் படுகிறது என்பதை அறிந்துக் கொள். நீ இந்த நாட்டின் அரசனாக இருக்கலாம். ஆனால் நான் சொல்வதை தயைக் கூர்ந்து செவிமடுத்துக் கேள் “



இராமன் மவுனித்தான்.


அவன் கண்கள் நிலத்தை நோக்கின. அவன் தாயை நோக்காமல் நின்றான். கோசலை கண்களில் நீர் ததும்ப அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.


இலக்‌ஷ்மணன் வரவழைக்கப் பட்டான்.


“ இலக்‌ஷ்மணா நீ இந்த சீதையை காட்டிற்கு கொண்டு சென்று வெட்டி வீசிவிட்டு வா. இது அரசனின் ஆணை “


இலக்குவன் தலை கீழ் நோக்கியது. கால்கள் பின் நகர்ந்தன.


மாண்டவி முன் வந்து நின்றாள். அவளுக்கும் முன் ஊர்மிளை வந்து நின்றாள்.


“ இராமரே கேளும், விசாரிக்காமல் தீர்ப்பு வழங்கும் அரசனும், அழும் பிள்ளைக்கு தன் மார்பினின்று பால் கொடுக்க மறுக்கும் பெண்ணும், தாயைப் பட்டினி போடும் மகனும் வாழும் நாட்டில் வாழ்வது நரகத்திற்கு இணையானது. நீர் நல்ல அரசனல்லர்... நீர் நல்ல கணவருமல்லர். ஆகவே இந்நகரில் நாங்கள் வாழும் தகுதி இழக்கிறோம். சீதையின் சகோதரிகளான எங்களை நீங்கள் வெட்டிக் கொன்றுவிட்டு பின்பு சீதையைக் கொல்லுங்கள். “


இராமனின் சினம் அதிகரித்தது
.

“ ஆடவன் பேச்சுக் கேட்காத பெண்களும், மேய்ப்பனைப் பிரிந்த ஆடுகளும், படைத்தலைவன் பேச்சைக் கேட்காத வீரர்களும் அழிந்தே போவார்கள். ஆகவே உங்களை எச்சரிக்கிறேன் “ என்றான்.


இதுவரைக்கும் அமைதியாக இருந்த ஸ்ருதி கீர்த்தி முன் வந்து நின்றாள்.


ஒரு கொடியின் மலர்கள் நாங்கள்
ஒரு நாளில் வாழ்வடைந்தவர்கள் நாங்கள்
ஒரு குடியில் இணைந்தவர்கள் நாங்கள்
நால்வரும் ஒருவரே அன்றி வேறில்லை ராமரே.. கேளும்..


சீதையை எம்மிடம் இருந்து பிரிக்காதீர்
பெண்கள் என்ன இளைத்தவர்களா சொல்லு ராமா
இராம ராஜ்ஜியத்தில் பெண்களுக்கு உரிமை இல்லையா?
ஆண்களுக்கு மட்டும் தான் உன் ராஜ்ஜியம் என்றால்
பெண்களுக்கு என்ன ராஜ்ஜியம்.
சொல்லும் வாயடைக்கப் பட்ட பெண்களுக்கு என்ன ராஜ்ஜியம் ?


சோகம் ததும்பும் குரலானாலும் உறுதியான குரலில் அழுத்தமாக கேட்டாள் ஸ்ருதி கீர்த்தி.


“ இது இராமனின் இராச்சியம், நாம் யார் இதில் கேள்வி கேட்க வாருங்கள். நாம் நகர் விட்டு விலகுவோம்.. இது நகர் அல்ல நரகம். நம் அத்தையர்களையும் அழைத்துக் கொண்டு நாம் மிதிலைக்குப் போவோம் வாருங்கள். “


மாண்டவி சொன்னாள்



இராமன் வாய்ப்பேச இயலாமல் தலை கவிழ்ந்தான். நடந்தவை அனைத்தும் கேட்டறிந்தான். மன்னிப்புக் கோரியபடி அவ்விடம் நகர்ந்தான்.


இந்த நிகழ்வு பணிப்பெண்கள் வாயிலாக நகரில் பரவத் தொடங்கியது.


“ சீதை இராவணின் படம் வரைந்தாளம் தெரியுமோ “ என்றாள் ஒருத்தி
“ சீதை இராவணின் படத்தை தன் படுக்கைக்கு கீழ் வரைந்தாளாம்... என்னடியம்மா இது கதை “ என்றாளாம் இன்னொருத்தி.


“ அதான் பாரேன்... மழையிலும் வெயிலிலும் இவள் இராவணனின் நிழலில் அல்லவா கிடந்தாள்? காட்டில் அத்தனை வருடம் இராமனுடன் இருந்த போது இவள் கருவுறவில்லை. ஆனால் பாரேன் இலங்கையில் இருந்து திரும்பியதும் கருவுற்றாள். என்னமோ இருக்கிறது இதில் என்றாள் “


எந்தப் பெண்ணைக் காக்க பெண்கள் ஒன்று கூடி அரசனை எதிர்த்தனரோ அதே பெண்ணை பெண்கள் கூட்டம் சேர்ந்து அவளின் செயலுக்கு காரணங்கள் கற்பிக்கத் தொடங்கியது. பேசிய ஒவ்வொரு பெண்கள் மனதிலும் சூர்ப்பநகை குடிபுகுந்தாள். பின் ஆண்களுக்குள்ளும் அது பரவியது.


இதன் உச்ச கட்டமாக சலவைத் தொழிலாளி தன் மனைவியை நள்ளிரவில் அடித்து வெளியே துரத்தினான்.


“ கேடு கெட்ட ராமன் வேண்டுமானால் பிறன் மனையில் வாழ்ந்த பெண்ணை திரும்ப அர்ண்மனைக்குக் கொண்டு வரலாம். ஆனால் எனக்கு அந்த தேவை இல்லை. போ வெளியே “ என்று தன் மனைவியை பிடித்து வெளியே தள்ளினான்..


சூர்ப்பநகை சிரிக்க ஆரம்பித்தாள்.


சலவைத் தொழிலாளியின் பேச்சைக் கேட்டு மனமுடைந்த இராமன் சீதையை காட்டுக்கனுப்பினான்.


சூர்ப்பநகை மேலும் மேலும் சிரித்தாள். வானதிர மண்ணதிர சிரித்தாள். அவள் தன் எண்ணங்களைப் பிரித்தெடுத்தாள் அதில் தன்னை இணைத்தாள். காற்றில் ஓதி அயோத்தியில் பரப்பினாள்.


அவள் ஆண் பெண் பேதங்களைப் பார்ப்பதில்லை. சந்தேகம் கொள்ளும் மானுடரின் உள்ளத்தில் தன்னை விதைத்தாள். அவர்களுள்ளே தானே வேறூன்றி வளர்ந்தாள். சூர்ப்பநகை உலகில் நிரந்தரமாய் வாழ ஆரம்பித்தாள். உலக்த்து மாந்தர்களை அவள் இன்று வரை வெற்றிக் கொண்டு சிரஞ்சீவியாய் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அவள் வெல்ல இயலாதவள் என்பதை மானுடர் அறியாதவரை அவள் வெற்றிப் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. உன்னதமான இராமனின் நாமம் உலகில் உள்ளவரைக்கும் அவனை எதிர்க்கவாய் ஆணுள்ளும் பெண்ணுள்ளும் அவள் தழைத்து தழைத்து நீடூழி வாழ்கிறாள். 



77 கருத்துகள்:

  1. புதிய கோணம்.. புதிய பார்வை.. நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. அட! நம்ம ஆசான் கதையா, ஏற்கெனவே படிச்சிருப்பேன் கேஜிஜி சார். :)

    பதிலளிநீக்கு
  3. படிச்சிருக்கேன், படிச்சிருக்கேன், படிச்சிருக்கேன். ஆசானின் எழுத்துத் திறமைக்குக் கேட்கணுமா! :)

    பதிலளிநீக்கு
  4. ஹையோ!!! அபாரம்! என்ன ஒரு ஃபேண்டசி! ஏதோ மாயாஜாலப் படம் பார்த்தது போல ஸ்வாரஸ்யமாக அப்படியே கட்டிப் போட்ட நடை! கதையின் நிகழ்வுகள் புதிது இல்லையா எனவே அப்படியே கட்டிப் போட்டுவிட்டது. மாறுபட்ட கோணம். பாராட்டுகள்! வாழ்த்துகள் கதாசிரியருக்கு!! இப்படி ஒவ்வொரு நாட்டுப்புறக் கதையை ஆராய்ந்தால் நிறைய கிடைக்கும் போலத் தோன்றுகிறது!! சூப்பர் ரொம்பவே ரசித்தோம்!!!

    பதிலளிநீக்கு
  5. இந்தக் கதையிலிருந்து அறிவது நிறைய இருக்கிறது. உண்மையா பொய்யா கற்பனையா என்றெல்லாம் வேண்டாம். ஆனால் நிறைய கருத்துகள் இருக்கின்றன. அதாவது ஒரு பாஸிட்டிவ் இருந்தால் ஒரு நெகட்டிவும் கூடவே வளர்ந்துகொண்டுதான் இருக்கும் என்பதற்கான கருத்து தெரிகிறது இறுதி பாராவில்.
    அதாவது மனித மனத்தில் நெகட்டிவ் எப்படிப் பதிகிறது...நாம் உணர்ந்து அந்த நெகட்டிவ் சக்தியிலிருந்து வெளிவராவிட்டால் இந்த எதிர்மறை எண்ணங்கள் நம் மனதில் நிரந்தரமாகத் தங்கி ஆட்டி வைத்துக் கொண்டு தன்னையும் தன்னைச் சுற்றி உள்ளவர்களையும் வன்மத்துடன் ஆட்டிப் படைக்கும் என்ற யதார்த்த உண்மை வெளிப்படுகிறது. எதிர்மறை எண்ணங்கள் நுழைந்துவிட்டால் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் சீரழிந்து விடும்,,,மன நிலை கூடப் பாதிக்கப்படும் அந்த வன்மத்தினால் என்பதும் நிதர்சனம். அதனால் தான் நல்லதை உச்சரித்து எதிர்மறை எண்ணங்களிலிருந்து விடுபட பல அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. நேர்மறை எண்ணங்களை அதிகமாக வளர்த்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறதுதான்....அனால் மனித மனதில் எளிதாகப் புகுவது எதிர்மறையல்லவா...மனித மனத்தின் பகுதியும் அதில் வெளிப்படுகிறது!! ஸோ நேர்மறையும், எதிர் மறையும் எக்காலத்திலும் இருந்து கொண்டேதான் இருக்கும். எதை நாம் நம்முள் எடுத்துச் செல்வது என்பதில்தான் இருக்கிறது வாழ்க்கை என்பதையும் இறுதி வரிகள் உணர்த்துகிறது. இது என் மனதில் தோன்றிய கருத்துகள்! அருமை கதாசிரியரே!!

    தமிழில் மாயாஜாலப் படங்கள் மற்றும் ஆங்கிலத்தில் வெளி வந்த ஹாரி பாட்டர், லார்ட் ஆஃப் த ரிங்க் போன்ற படங்களைப் பார்த்தது போன்ற ஒரு ஃபீலிங்க்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  6. மூலம் தெலுங்கு நாட்டுப்புற கதை என்று சொல்லப்பட்டிருக்கிறது... புதிய கோணத்தில் கதை, சீதையை வரவேற்ற மக்கள் பின்னர் காட்டுக்கு அனுப்பினதிற்கு எண்ணத்தில் தீயவை புகுந்ததே காரணம் என்ற யோசிப்பு அபாரம்! அந்தத் தீய சக்தி சூர்ப்பனகை என்று உருவகப்படுத்தியதும் அபாரம்!!

    பதிலளிநீக்கு
  7. காவியங்கள் காவியங்களாக மட்டும் நிற்பதில்லை. அதைத்தொடர்ந்தும் கதைகள் புரள்கின்றன நாட்டுப்புறத்தில். அப்படி ஒன்றை எடுத்து அருமையாகத் தொடுத்திருக்கிறீர்கள் ஐயப்பன் க்ருஷ்ணன். ரசனையான எழுத்து. நன்றி.

    பதிலளிநீக்கு
  8. வித்தியாசமான சிந்தனை. அதுவும் கடைசி சில பாராக்களில்தான் கதையின் உயிரே இருக்கிறது.

    "அவள் ஆண் பெண் பேதங்களைப் பார்ப்பதில்லை. சந்தேகம் கொள்ளும் மானுடரின் உள்ளத்தில் தன்னை விதைத்தாள். அவர்களுள்ளே தானே வேறூன்றி வளர்ந்தாள். சூர்ப்பநகை உலகில் நிரந்தரமாய் வாழ ஆரம்பித்தாள். உலக்த்து மாந்தர்களை அவள் இன்று வரை வெற்றிக் கொண்டு சிரஞ்சீவியாய் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். " - அருமை. பாராட்டுகள் ஐயப்பன் கிருஷ்ணன். ஸ்ரீராம்-நல்ல கதையைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  9. மிக மிக சிறப்பான கதை...

    .....சந்தேகம் கொள்ளும் மானுடரின் உள்ளத்தில் தன்னை விதைத்தாள். ....அருமையான வரிகள்...சிந்திக்க தூண்டுபவை..

    பதிலளிநீக்கு
  10. மேலே எங்கள் கருத்துகளில் சொல்ல விடுபட்டுவிட்டது! அழகான கதையை இங்கு பகிர்ந்தமைக்கு எங்கள் ப்ளாகிற்கும் எங்கள் நன்றிகள்!!!
    !

    பதிலளிநீக்கு
  11. ராமலக்ஷ்மிக்கு முதலில் நன்றியும்
    வாழ்த்துக்களும்.
    முன்பு ஐயப்பன் கிருஷ்ணன் அவர்கள் முன்பு அவர்கள் தளத்தில் பதிந்து இருக்கிறார்களா இந்த கதையை?
    படித்த மாதிரி நினைவு.
    அவரையும் அவர் குடும்பத்தினரையும் உங்க்களையும் முதல் முதலாக பெங்களூரில் சந்தித்த நினைவுகள் மனதில் வந்து போனது.

    //சூர்ப்பநகை மேலும் மேலும் சிரித்தாள். வானதிர மண்ணதிர சிரித்தாள். அவள் தன் எண்ணங்களைப் பிரித்தெடுத்தாள் அதில் தன்னை இணைத்தாள். காற்றில் ஓதி அயோத்தியில் பரப்பினாள்.


    அவள் ஆண் பெண் பேதங்களைப் பார்ப்பதில்லை. சந்தேகம் கொள்ளும் மானுடரின் உள்ளத்தில் தன்னை விதைத்தாள். அவர்களுள்ளே தானே வேறூன்றி வளர்ந்தாள். சூர்ப்பநகை உலகில் நிரந்தரமாய் வாழ ஆரம்பித்தாள். உலக்த்து மாந்தர்களை அவள் இன்று வரை வெற்றிக் கொண்டு சிரஞ்சீவியாய் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அவள் வெல்ல இயலாதவள் என்பதை மானுடர் அறியாதவரை அவள் வெற்றிப் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. உன்னதமான இராமனின் நாமம் உலகில் உள்ளவரைக்கும் அவனை எதிர்க்கவாய் ஆணுள்ளும் பெண்ணுள்ளும் அவள் தழைத்து தழைத்து நீடூழி வாழ்கிறாள். //

    கடைசி பாராவை படித்ததும் உடம்பு சிலிர்த்து அடங்கியது.

    அருமையான கதை. சொல்லி சென்ற விதம் அருமை.

    எங்கள் ப்ளாகிற்கும் , கதை ஆசிரியருக்கும் வாழ்த்துக்கள்.
    தொடர்ந்து எழுதுங்கள் ஐயப்பன்.

    தோற்சீலை ஓவியம் போட்டோ பகிர்ந்து இருக்கலாம், நீங்கள் அழகாய் போட்டோ எடுப்பீர்களே!

    பதிலளிநீக்கு
  12. முன்பு நான் எழுதியது .....
    #ஜென்டில்மேன் இராவணன் ? #
    ''இராவணன் சீதையை சரியாக பத்து மாதம் சிறை வைத்து இருந்தாராம் ,இதில் இருந்து என்ன தெரியுது ?''
    ''இராவணன் சீதையிடம் சேஷ்டை எதுவும் செய்யலேன்னு தெரியுது !''

    நான், ஜென்டில்மேன் என்று சொன்ன இராவணனை.. இந்த கதையில் வரும் மக்கள் சந்தேகப் படுவது மாதிரி இருக்கே :)

    பதிலளிநீக்கு
  13. /// இந்த வாரம் சீதா ராமன் கதைதான். ஆனால் ராமனை சீதா மன்னிக்கும் கதை அல்ல!!///

    ஐ ஒப்ஜக்‌ஷன் யுவர் ஆனர்ர்ர்ர்ர்ர்ர்... அதெப்படி திடீரென “சீதை ராமனை மன்னித்தா” எனும் கதையின் நிபந்தனையை மாத்தலாம்???:).. எத்தனையோ பேர் பூமியைப் பார்த்து வானத்தைப்பார்த்து பின்னால பார்த்து முன்னால பார்த்தெல்லாம்.. மண்டையைக் குயப்பி:) சீதையை எப்பூடி ராமனை மன்னிக்க வைப்பது.. எப்படிக் கதையை எழுதி முடிப்பது.. என கற்பனையில் மிதந்து கொண்டிருக்கும்போது .. ஒரு முன்னறிவித்தல் இல்லாமல் எங்களிடம் சொல்லாமல்...:)

    அதாவது ஆர்த்தியும் ஜூலியும் எப்படி திடீரென உள்ளே வரலாம் அறிவிக்காமல் என வையாபுரி அவர்கள் கேட்டதுபோல:)...

    மீ...,[இங்கின கொமா உண்டு சேர்த்து வாசிச்சு சண்டைக்கு வரப்பூடா, இதில நான் வலு உசாராக்கும்:)] கிளவி கேய்ப்பேன்ன்ன்ன்:) ஹையோ பதட்டத்தில டங்கு ஸ்லிப்பாகுதே:).. கேள்வி கேட்பேன்ன்.. இங்கின ஆருக்கும் இதைத் தட்டிக் கேட்கும் தெகிறியம்:) இல்லை:) எது போட்டாலும் கொமெண்ட் போட்டிட்டு ஓடிடுறாங்க.. மீ அப்படி இல்லை விட மாட்டேன்ன்ன்ன் இதோ ஒரு சுவீட் 16 ஒன்று தேம்ஸ்லே குதிக்கப்போகிறது..:)... ... எனக்கு முக்கியம் கடமை நேர்மை எருமை:)...

    ஹையோ ஆண்டவா.. மசமச எனப் பார்த்துக்கொண்டிருக்காமல் ஃப்யர் எஞ்சினுக்கு அடிங்கோ.. எப்பூடியாவது அதிராவைக் காப்பாத்துங்கோ... என் செக்கரட்டறி இல்லாததை மறந்து அவதிப்பட்டு வாக்குக் கொடுத்திட்டமோ:).. இவிங்க சாக விட்டாலும் விட்டிடுவாங்க...

    ஆங்ங்ன் ஒரு சிறு திருத்தம்... இன்று செவ்வாய்க்கிழமை ஆதலாம் சாவது நல்லதல்ல என குயின் அம்மம்மா சொல்றா:).. என உண்ணாவிரதம் ஆரம்பம்ம்ம்.. நேக்கு நீதி வேணும்.... :)

    யூ 2 நெல்லைத்தமிழன்?:).. எதையும் கவனிக்காமல் கொமெண்ட் போட்டுச் செல்லலாமோ?:) மீயைப்போல பொயிங்க வேணாம்... புளொக்கின் பெயர் என்ன??? “எங்கள்புளொக்”.. ஹா ஹா ஹா அதனால மீ கிளவி கேய்ப்பேன்ன்ன்ன்ன்:)...

    ஹையோ எதுக்கு எனக்கு, என்றுமில்லாமல் இன்று கை கால் எல்லாம் சேர்த்து ரைப் அடிக்குதூஊஊஊஊஊ:)..

    பதிலளிநீக்கு
  14. ஆஆஆஆவ்வ்வ்வ் திரு ஐயப்பன் அவர்கள் பயந்திடப்போறாரே.. இருங்கோ இனிமேல்தான் கதை படிக்கப்போறேன்ன்:)

    ஊசிக்குறிப்பு:
    பயந்திடாதீங்கோ அதிரா இப்பூடித்தான் மிரட்டுவேன்:) நீங்க எல்லோரும் ஸ்ரெடியா நிக்கோணும் சொல்லிட்டேஎன்ன்ன்:).

    ஸ்ரீராம் கவனிச்சீங்களோ.. என் செகர்ட்டரி வந்து வோட் போட்டிருக்கிறா:).. அதிராவோ கொக்கோ விடமாட்டனெல்லோ:) ஹா ஹா ஹா:)..

    பதிலளிநீக்கு
  15. ஸ்ரீராம் கவனியுங்கள்:

    ’ஜெயகாந்தனின் முன்னுரைகள்’ என்று தனி புத்தகம் வெளிவந்திருப்பதைப்போலவே ’அதிராவின் பின்னூட்டங்கள் !’ என்று ஒரு புத்தகம் வெளியிட எதிர்காலத்தில் ‘எங்கள் Blog' முயற்சிக்குமா? அப்படி நடந்தால், தமிழ்ப்புத்தக வரலாற்றிலே அது ஒரு புது அத்தியாயம் படைத்துவிடுமே !

    பதிலளிநீக்கு
  16. ஆஹா வாசிக்கத் தொடங்கிட்டேன்.. மிக அருமையாகச் செல்கிறது கதை, நான் இதுவரை சீதை அசோகவனத்தில் இருந்ததும், இராவண யுத்தமும் வரைதான் படித்ததுண்டு, கேட்டதுண்டு.. அதன் பின்னர் நடந்தவைகள் பெரிதாகத் தெரியாது... அதனால் இக்கதை மிகவும் சுவாரஷ்யம்

    //முதன் முதலில் சீதை கருவுற்றிருப்பதை அரண்மனைப் பூனை தான் அறிந்தது. அப்புறம் அரண்மனையின் நாயும் அறிந்தது//

    ஹா ஹா ஹா இதுதான் இன்று இக்கதையில் டாப்பூஊஊஊஊஊஊ:).. ஸ்ரீராம் நீங்க கவிதை எழுதினீங்களே.. பப்பீஸ் ஐ விட பூஸ்கள் கொஞ்சம் குறைவுதான் என:).. இப்போ புரிஞ்சுக்கோங்ங்ங்ங்ங்ங்கோ:).. எவ்ளோ புத்திசாலி பூஸு என்பதை:)... ஹையோ இதைப் படிச்ச சந்தோசத்தில் நேக்கு லெக்ஸ்ஸும் ஆடல்ல காண்ட்ஸ்சும் ஓடல்ல:)).. அஞ்சூஊஊஊஊஊஉ கமோன்ன்ன்ன்ன்ன்.. இந்த வசனத்தை மட்டுமாவது படிங்கோ.. ராமாயணத்திலும் பூஸ்க்கு ஸ்பெஷல் இடம் இருக்கு என்பதை இப்போதான் படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  17. //ஏகாந்தன் Aekaanthan ! said...
    ஸ்ரீராம் கவனியுங்கள்: //

    ஹையோ ஆண்டவா.. திருப்பரங்குன்றத்து இடது பக்க மூலையில் இருக்கும் வைரவா.. உங்க கால் விரலுக்கு வைரம் பதிச்ச மெட்டி போட்டுவிடுவேன் என்னைக் காப்பாத்துங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ன்ங்ங்ங்:)...

    http://cdn.shopify.com/s/files/1/1762/3533/files/cats-funny-pictures-14_large.jpg?v=1488747635

    பதிலளிநீக்கு
  18. ///இராமனைக் கண்டதும் சீதையின் சகோதரிகளும் மற்றவர்களும் ஒதுங்க சீதையின் கைகள் அநிச்சையாய் அந்த ஓவியத்தை படுக்கையின் கீழ் தள்ளியது///

    ஹா ஹா ஹா... ஆண்டவா.. சீதை எவ்ளோ உயர்வானவ.. அதனால தான் எங்கள் புளொக்கில ஒவ்வொரு வாரமும் சீதைதான் ராமனை மன்னிக்கிறா.. என நினைச்சு..பெண்களை எண்ணி.. மிக ஆணவத்தோடும் கர்வத்தோடும்.. களிப்போடும் இருந்தேனே... என் ஆணவம் இன்றோடொழிகிறதா?:)) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. அன்று சீதை அப்படி ஒளிச்சமையாலதான் இப்பவும் பல பெண்கள் இதைப் பின்பற்றுகின்றனரோ?:).. இப்பூடியெல்லாம் என் மனதில் கிளவி வெரி சோரி கேள்வி எழுந்தது...

    ஆனா இல்லை. சீதை அப்படி ஒளிச்சமைக்குக் காரணமும் ராமன் தான், ராமனின் சந்தேகத்தினால் தான் பயந்துபோய் சீதை ஒளித்தார்...ஆண்கள் சந்தேகப்படாமல் இருந்தால் பெண்கள் ஒளிக்க மாட்டார்கள் எதையும் தெரியுமோ?...

    இது மாறி.. இக்காலப் பெண்களுக்கும் பொருந்தும்... பெண்கள் சந்தேகம் கொள்ளாமல் அனைத்தையும் செவி கொடுத்துக் கேட்டால் ஆண்கள் ஒளிக்க மாட்டார்கள் எதையும்.... யாரும் தவறு செய்துவிட்டு வந்து உண்மையைச் சொல்லிட்டால், மன்னிப்பேன் ஆனா ஒளிச்சால்தான் நேக்கு கெட்ட கோபம் வரும் பாருங்கோ:).. ஹையோ ரொப்பிக்கை மாத்தி ரெயின் ஓடுதே.. சரி மிகுதியைப் படிக்கிறேன்ன்.. வெயிட்.

    பதிலளிநீக்கு
  19. ஹையோ என்ன கொடுமை இது? இது ராமனுக்கு சுயபுத்தியே கிடையாதா? ராமன் நல்லவரா கெட்டவரா? இப்படிப்பட்டவையா நாம் வணங்குகிறோம்.. இப்படிப் பல எண்ணங்களை எனக்குள் வரவைக்குதே இக்கதை படிக்கும்போது... நான் விரத நாட்களில் ஸ்ரீ ராம ஜயம் எழுதுவது வழக்கம்...

    அப்போ ராமனின் அந்த ஒழுக்க குணத்துக்காகவா ராமனை வணங்குகிறார்கள்? ஆனா உண்மையில் பார்க்கும்போது சீதைதானே உயர்ந்து நிக்கிறா.. ஆனா ஏன் ராமனுக்கு இருக்கும் மரியாதை சீதைக்குக் கிடைக்கவில்லை? பெண் என்பதாலா?.. எனக்குப் புரியவில்லை.. இப்படி எல்லாம் அலைக்கழிஞ்சு வாழ்ந்து சரித்திரம் படைத்ததைக் காட்டிலும் அன்றே சீதை தேம்ஸ்ல குதிச்சிருக்கலாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)...

    ஆனாலும் முடிவு.. இன்னும் இரு வசனம் எழுதியிருந்தால் சீதை ராமனை மன்னிச்சா என வந்திருக்கும்..:).. அதை எழுதாமல் விட்டிட்டார் கதாசிரியர். அருமையாக எழுதியிருக்கிறார் வாழ்த்துக்கள்.. இது கதை என்பதை மறந்து அதுக்குள் குதித்து நான் ஸ்ரக் அகிப்போனேன் என்பது நிஜம்.

    சரி சரி இன்னும் என்பக்கம் போகவில்லை.. மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்...

    பதிலளிநீக்கு
  20. //ஸ்ரீராம்-நல்ல கதையைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். //

    நெல்லை.... இது நான் தேர்ந்தெடுத்த கதை அல்ல. நம்மைத் தேடி வந்த கதை. திரு ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய இந்தப் படைப்பை அவரிடம் அனுமதி பெற்று, அனுப்பி வைத்த சகோதரி ராமலக்ஷ்மிக்குத்தான் முதலில் நன்றி சொல்லவேண்டும்.

    பதிலளிநீக்கு
  21. வாங்க அதிரா... குனிந்து, நிமிர்ந்து வளைந்து நெளிந்து குதித்து உட்கார்ந்து நின்று சாய்ந்து யோசித்து நீங்கள் தாராளமாக கதை எழுதி அனுப்பலாம். சீ ரா ம தொடரும். நடுவில் இதுவும். உங்களுக்கும் கூட அதே செய்தி. பொதுவான கதை எழுதியும் அனுப்பலாம்.

    இத்தனை நாளாய் தேம்ஸ் நதி ஏங்கியிருந்தது. அதில் குதிக்கும் ஆளைக் காணோமே என்று! இதில் பிக் பாஸ் வேற பார்க்கறீங்க போல! ஆமாம், ஆர்த்தி ஜூலை வரவு விரும்பத்தகாதது!!!!

    //சீதை அப்படி ஒளிச்சமைக்குக் காரணமும் ராமன் தான், ராமனின் சந்தேகத்தினால் தான் //
    கெளவியும் சொரி, கேள்வியும் நீங்களே, குமரியும் சொரி, பதிலும் நீங்களே அதிரா!

    ரொப்பிக்கை என்றால்? அதிராவின் வார்த்தைகளுக்கு அருஞ்சொற்பொருள் போட அஞ்சுவையும் இன்னும் காணோம்!

    பதிலளிநீக்கு
  22. //ஸ்ரீராம் கவனியுங்கள்:

    ’ஜெயகாந்தனின் முன்னுரைகள்’ என்று தனி புத்தகம் வெளிவந்திருப்பதைப்போலவே ’அதிராவின் பின்னூட்டங்கள் !’ என்று ஒரு புத்தகம் வெளியிட எதிர்காலத்தில் ‘எங்கள் Blog' முயற்சிக்குமா? அப்படி நடந்தால், தமிழ்ப்புத்தக வரலாற்றிலே அது ஒரு புது அத்தியாயம் படைத்துவிடுமே ! //​


    ஏகாந்தன் ஸார்... நல்ல யோசனை. அப்படி அதிராவின் பின்னூட்டங்களை புத்தகமாகப் போட்டால் அதற்கான தலைப்பு "நகருங்கோ... நான் தேம்ஸில் குதிக்கப்போகிறேன்..." ​

    பதிலளிநீக்கு
  23. //ஸ்ரீராம். said...
    வாங்க அதிரா... குனிந்து, நிமிர்ந்து வளைந்து நெளிந்து குதித்து உட்கார்ந்து நின்று சாய்ந்து யோசித்து நீங்கள் தாராளமாக கதை எழுதி அனுப்பலாம். சீ ரா ம தொடரும். நடுவில் இதுவும். உங்களுக்கும் கூட அதே செய்தி. பொதுவான கதை எழுதியும் அனுப்பலாம்.///

    ஆஆஆவ்வ்வ் இதை நான் படுபயங்கரமாக வழிமொழிகிறேன்ன்ன்.. சீதை ராமனை மன்னித்ததுபோதும்.. இல்லை எழுத விரும்புவோர் எழுதட்டும்... ஆனா கேட்டு வாங்கிப்போடும் கதை எனத் தொடர்வதே நல்லது என்பது என் அபிப்பிராயம்.

    பதிலளிநீக்கு
  24. //ஆனா ஏன் ராமனுக்கு இருக்கும் மரியாதை சீதைக்குக் கிடைக்கவில்லை? பெண் என்பதாலா?..


    கேள்வியெல்லாம் கேட்கப்படாத்.. மூச்.

    ராமன் பாயசத்திலிருந்து வந்தவன். சீதை பாதாளத்திலிருந்து. ராமன் பிறந்த நாளை உலகமே கொண்டாடுது. சீதை பிறந்த நாளை சீதையாவது கொண்டாடினதா படிச்சிருக்கமா? ராமன் பிறந்த நாளுக்கு வடை பாயசம் பானகம் எல்லாம் உண்டு. சீதை பிறந்த நாளுக்கு ஒரு வாழ்த்துச் செய்தியாவது உண்டா? ஏதோ இந்த மட்டும் (மானுடன) ராமனே சீதையை அடிக்காம இருந்தது சீதையின் அதிர்ஷ்டம் என்று சந்தோசப்படுவதை விட்டு மரியாதை இல்லை என்று குறைபடுவதாவது? (ஒருவேளை இதுவும் இருந்து ராமாயணத்துலந்து நீக்கிட்டாங்களோ புராண சென்சார்?) ராமன் மானுடன்.. ஆனால் ராமனைச் சுற்றி இருப்பவருக்கெல்லாம் ராமன் கடவுள் என்று தெரியும். சீதை அப்படியா? ராமன் மானுடனா எது செய்தாலும் தெய்வச் செயலாகப் பார்க்கப்படும். சீதை தெய்வச் செயல் செய்தாலும் அப்படிப் பார்க்க அனுமதி கிடையாது. விளையாட்டா? ராமன் எங்கே.. சீதை எங்கே.. (இப்படியெல்லாம் கேள்வி கீள்வி கேட்டால் அறிவும் முதிர்ச்சியும் பத்தாதுனு பொருள்.. ராமா ராமா என்று கன்னத்தில் போட்டுக்கொண்டு வந்த வழியே போவமா?)

    பதிலளிநீக்கு
  25. ஐயப்பன் கிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள் நடையழகு...

    பதிலளிநீக்கு
  26. //இதில் பிக் பாஸ் வேற பார்க்கறீங்க போல! ஆமாம், ஆர்த்தி ஜூலை வரவு விரும்பத்தகாதது!!!!//

    ஹா ஹா ஹா அதை ஏன் கேக்குறீங்க.. இங்கிருக்கும்வரை அதில் ஆர்வம் ஏற்படவில்லை பார்க்கவுமில்லை நான், ஆனா கனடா போனபோது அங்கு எல்லோரும்.. ஏதேதோ பெயரெல்லாம் சொல்லிச் சொல்லிப் பேசிக்கொண்டிருந்தார்கள் பிக்பொஸ் பற்றி... அன்று ஆரம்பித்த மோகம்.. இப்போ கொலை செய்யுமளவுக்கு வளர்ந்திருக்கு... ஹா ஹா ஹா.

    ஜூலி உள்ளே திரும்பிப் போகாமல் இருந்திருந்தால், இருந்த கொஞ்சநஞ்ச நல்ல பெயரையாவது காப்பாற்றியிருக்கலாம்.. இது “இருந்ததையும் இழந்தாய் போற்றி” என வெளியே வரப்போறா என நினைக்க கஸ்டமாத்தான் இருக்கு.. சரி நாம் விதைத்ததைத்தானே அறுவடை செய்ய முடியும்.. அது போகட்டும்.

    ////தலைப்பு "நகருங்கோ... நான் தேம்ஸில் குதிக்கப்போகிறேன்..." ​///

    ஹா ஹா ஹா...:)

    ரொபிக்.. கதையின் தலைப்பை/போக்கை மாற்றுகிறேன் என்றேன்ன்.. Topic. ஹா ஹா ஹா ஹையோஓஓஓஓ ஹையோ:) அஞ்சூஊஊஊஊஊஉ ஞ்ஞ்ஞ்சூஊஊஉஊஊஊஊஊஊஉ ஓடிக் கமோன்:)

    பதிலளிநீக்கு
  27. ///அப்பாதுரை said...
    //ஆனா ஏன் ராமனுக்கு இருக்கும் மரியாதை சீதைக்குக் கிடைக்கவில்லை? பெண் என்பதாலா?..


    கேள்வியெல்லாம் கேட்கப்படாத்.. மூச். ///

    ஹா ஹா ஹா சரி சரி நான் கிளவி.. வெரி சோரி[பகவான் ஜீ பாசையில சொன்னேன்:)] கேள்வி கேட்கல்ல ஆனா... ஸ்ரீராம் வாங்கின அந்த புயுப் ஃபோன் மேல சத்தியமா:)) எனக்கு இந்த ராமாயணத்தில நிறைய டவுட்ஸ் வருதேஏஏஏ:))..

    உங்கட பதில்கள் அத்தனையும் சிந்திக்க வைக்குது.. அக்காலத்தில பெண்களை யாரும் மதிப்பதில்லை/ பெண்களின் பேச்சும் எடுபடுவதில்லை... அதே நேரம் அடித்தாலும் உதைத்தாலும் அதுதான் உலகம் என பெண்கள், ஆண்களின் காலடியில் கிடந்தே வாழ்க்கையை ஓட்டினார்கள் என்பதும் உண்மையே..

    பதிலளிநீக்கு
  28. ///Bagawanjee KA said...
    முன்பு நான் எழுதியது .....
    #ஜென்டில்மேன் இராவணன் ? #
    ''இராவணன் சீதையை சரியாக பத்து மாதம் சிறை வைத்து இருந்தாராம் ,இதில் இருந்து என்ன தெரியுது ?''
    ''இராவணன் சீதையிடம் சேஷ்டை எதுவும் செய்யலேன்னு தெரியுது !''

    நான், ஜென்டில்மேன் என்று சொன்ன இராவணனை.. இந்த கதையில் வரும் மக்கள் சந்தேகப் படுவது மாதிரி இருக்கே :)///

    பதில் போட நினைச்சு மறந்திட்டேன்... ஹா ஹா ஹா பகவான் ஜீ.. சைக்கிள் ஹப் ல பிளேன் ஓட்டுறீங்க:)..

    நீங்க என்னதான் சொன்னாலும் அவர் செய்தது தப்புத்தானே... அவரின் கொள்கை மட்டும் எனக்குப் பிடிச்சிருந்துது... பெண் விரும்பாமல், தொட மாட்டேன் எனும் கொள்கை... [இப்பவும் அப்படிக் கொள்கையை சிலர் கடைப்பிடித்தால் நாட்டில் தவறுகள் நடப்பது குறையும்].

    ஏதோ பாட்டு வரிகள் நினைவுக்கு வருது.. ”வாழ்/ள் முனையில் கேட்டாலும்.. வெஞ் சிறையில் போட்டாலும்.. உடலன்றி உள்ளமுன்னை நாடாது”...

    ஆனா சீதை ஓகே சொல்லியிருந்தால் தொட்டிருப்பார்தானே? அப்போ எப்படி ஜெண்டில்மன் என்பது... சீதையின் நன் நடத்தையால் ராவணன் காப்பாற்றப்பட்டார் என்பதே உண்மை..

    தவறான நோக்கத்தினால்தானே.., சீதையை.. அதுவும் இன்னொருவர் மனைவியை கடத்திச் சென்றார்.. அது தப்புத்தானே... சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ் மீ ரொம்ப நல்ல பொண்ணு:)..

    பதிலளிநீக்கு
  29. ஸ்ரீராமுக்கு: தலைப்பு நல்லாத்தான் இருக்கு பதிப்பாளரைத் தேடலாம் இனி!

    பதிலளிநீக்கு
  30. ரொப்பிக்கை என்றால்? - டாப்பிக்கை - Topic

    பதிலளிநீக்கு
  31. "நகருங்கோ.. ஒரு சுவீட் 16 ஒன்று தேம்ஸ்லே குதிக்கப்போகிறது..:)... ..இப்படி இருக்க வேண்டும் தலைப்பு ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  32. //ஏகாந்தன் Aekaanthan ! said...//

    ஸ்ரீராமுக்கு: தலைப்பு நல்லாத்தான் இருக்கு ////

    அப்போ நான் என்ர பாங் எக்கவுண்ட் நம்பரை அனுப்பி வைக்கட்டோ?:) இல்ல... புத்தகம் வித்த காசைச் போட....:) எதுக்கும் ஸ்ரீராமை ஒருக்கால் கேட்டுச் சொல்லுவீங்களோ பிளீஸ்ஸ்ஸ்?:) நான் கேட்டால் முறைப்பார்:))

    ///பதிப்பாளரைத் தேடலாம் இனி!//////
    உகண்டாப்புகழ் கில்லர்ஜி அவர்களின் சம்போ சிவசம்போ சாம்பசிவம் அவர்களைக் கேட்டுப் பாருங்கோவன்:)

    பதிலளிநீக்கு
  33. //நெல்லைத் தமிழன் said...
    ரொப்பிக்கை என்றால்? - டாப்பிக்கை - Topic///

    ஆங்ங்ங்ங்ங்... ஹா ஹா ஹா இப்போ என் பாஷை நெ.தமிழனுக்கும் படுபயங்கரமாப் புரியுதூஊஊஊஊஊ:)..

    பதிலளிநீக்கு
  34. ///கோமதி அரசு said...
    "நகருங்கோ.. ஒரு சுவீட் 16 ஒன்று தேம்ஸ்லே குதிக்கப்போகிறது..:)... ..இப்படி இருக்க வேண்டும் தலைப்பு ஸ்ரீராம்.///

    ஹா ஹா ஹா...அது அது அது... கோமதி அக்காவுக்கு ஒரு பென்னாம்பெரீஈஈஈஈஈஈய ரோசாப்பூஊஊஊஊ:)

    https://s-media-cache-ak0.pinimg.com/236x/93/4e/f4/934ef4a46355c7d302d39d1a63ca2ffd--white-cats-white-fur.jpg

    பதிலளிநீக்கு
  35. அடடா! என்ன கருத்து! என்ன நடை! பிரமாதம்! பிரமாதம்! ஐயப்பனுக்கு நன்றி,ராமலக்ஷ்மிக்கு நன்றி,எங்கள் ப்ளாகுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  36. வணக்கம் நண்பர்கள் அனைவருக்கும் :) எல்லாரும் நலமா நேற்றே நெல்லை தமிழன் தட்டில் வச்சிருந்த இட்லிஸ் பார்த்து ஓடி வந்து வாக்கு போட்டுட்டேன் :) ..

    //ஸ்ரீராம் கவனிச்சீங்களோ.. என் செகர்ட்டரி வந்து வோட் போட்டிருக்கிறா:).. அதிராவோ கொக்கோ விடமாட்டனெல்லோ:) ஹா ஹா ஹா:)..//

    இப்போ புரிஞ்சுக்கோங்ங்ங்ங்ங்ங்கோ:).. எவ்ளோ புத்திசாலி பூஸு என்பதை:).//

    ஆமாமா :) எல்லாரும் புரிஞ்சுக்கோங்க
    விக்கி லீக்ஸ் சுச்சி லீக்ஸ் க்கு போட்டியா இருக்கு மக்களே இந்த பூனைகள் :)...இதை 50 தடவை சொல்லணும்னு எல்லாருக்கும் டாஸ்க் கொடுக்கறேன் ஹஆஹாஆ

    பதிலளிநீக்கு
  37. வாவ் வாவ் !!! நான் 10 தடவை படிச்சேன் அவ்ளோ சுவாரஸ்யம் !!

    என்னவொரு அருமையான கதை ..சூப்பர்ப் அட்டகாசம் !!
    தாங்க்ஸ் எங்கள் பிளாக் பகிர்வுக்கு ..
    எனக்கு கண்ணு முன்னால் தோல் சீலையில் வரைஞ்சு ஓவியம் அசையும் உணர்வு !!



    பதிலளிநீக்கு
  38. ஆவ்வ்வ்வ்வ்வ் எங்கள்புளொக் இப்பூடி ஆடுதேஏஏஏஏஏஏ விடுங்கோ விடுங்கோ வழி விடுங்கோ.. மீ தேம்ஸ்ல குதிச்சிடுறேன்ன்:).. ஹையோ இதுக்குத்தான் நான் மெளனமா இருந்தேன்ன்.. இப்போ அகப்பட்டிட்டனே:).. முருகாஆஆஆஆ வள்ளிக்கு வைர நெக்லஸ் கன்போம்ட்ட்ட்ட்.. என்னைக் காப்பாத்துங்ங்ங்ங்ங்:)..

    பதிலளிநீக்கு
  39. ///Angelin said...
    வாவ் வாவ் !!! நான் 10 தடவை படிச்சேன் அவ்ளோ சுவாரஸ்யம் !! ///
    ஜூலி மாதிரி வந்த வேகத்திலேயே பொய் சொல்லப்பிடா சொல்லிட்டேன்ன்ன்ன்... ஹையோ ஆராவது என்னைக் காப்பாத்துங்ங்ங்ங்ங்ங்.. என் வாய்தேன் நேக்கு எடிரி:)..


    ///எனக்கு கண்ணு முன்னால் தோல் சீலையில் வரைஞ்சு ஓவியம் அசையும் உணர்வு !!//
    கொஞ்சம் காலைப்பார்த்துச் சொல்லுங்கோ அஞ்சு.. அது ராவணனா? ராமனா என:))

    பதிலளிநீக்கு
  40. ஆனாலும் பூனை இப்போலாம் விவரமாகிட்ட மாதிரி எனக்கு தெரியுது :)))

    /”வாழ்/ள் முனையில் கேட்டாலும்.. வெஞ் சிறையில் போட்டாலும்.. உடலன்றி உள்ளமுன்னை நாடாது”...//

    வாழ் ....life ... உயிர் முனை என்றும் பொருள் வர மாதிரி எழுதியிருக்கு குண்டு பூனை :)

    பதிலளிநீக்கு
  41. சீதை இப்படி ராவணன் படத்தை வரைந்த கதையை எங்க மங்கையர்க்கரசி தமிழ் டீச்சர் அவங்க பன் கொண்டை அசைய பிரிண்டெட் சில்க் புடைவை சரசரக்க சொல்லும்போது அவ்ளோ ஆர்வமா கேட்போம் 10 ஆம் வகுப்பில் ..
    அது போல இங்கே மீண்டும் படிக்க கொடுத்த எங்கள் பிளாக் மற்றும் எழுதிய ஆசிரியருக்கும் நன்றீஸ்

    பதிலளிநீக்கு
  42. ////எனக்கு கண்ணு முன்னால் தோல் சீலையில் வரைஞ்சு ஓவியம் அசையும் உணர்வு !!//
    கொஞ்சம் காலைப்பார்த்துச் சொல்லுங்கோ அஞ்சு.. அது ராவணனா? ராமனா என:))//

    @ athiraav haahaaaa :) இப்போ என் கண்ணுக்கு ஆக்ஸ்போர்ட் மென் ஷூஸ் தெரியுது அதனால் அது ராமன்தான் :)

    பதிலளிநீக்கு
  43. //சூர்ப்பநகை சிரிக்க ஆரம்பித்தாள்.//

    மேடம் சுயநலத்துக்கு கொளுத்தி போட்டு போய்ட்டாங்கா பாவம் அப்பாவி பெண்களும் ஆண்களும் சந்தேகமென்னும் வெந்தீயில் நாளும் சாகறாங்க ..

    பதிலளிநீக்கு
  44. /சூர்ப்பநகை மேலும் மேலும் சிரித்தாள். வானதிர மண்ணதிர சிரித்தாள். அவள் தன் எண்ணங்களைப் பிரித்தெடுத்தாள் அதில் தன்னை இணைத்தாள். காற்றில் ஓதி அயோத்தியில் பரப்பினாள். //

    ஆத்தாடி அப்போ உலகத்தில் நடக்கிற பல பிரச்சினைங்களுக்கு இந்தம்மாதான் தலைவியா ??

    புடிச்சி பிக் பாஸ் வீட்டுக்குள்ள விடுங்க :) ஹாஹாஆ :)

    பதிலளிநீக்கு
  45. //ஜூலி மாதிரி வந்த வேகத்திலேயே பொய் சொல்லப்பிடா சொல்லிட்டேன்ன்ன்ன்... ஹையோ ஆராவது என்னைக் காப்பாத்துங்ங்ங்ங்ங்ங்.. என் வாய்தேன் நேக்கு எடிரி:)//

    அதுதான் ஊருக்கே தெரியுமே :) இருங்க நான் நெல்லைத்தமிழன் கிச்சனுக்கு போயிட்டு வரேன்

    பதிலளிநீக்கு
  46. ///Angelin said...
    ஆனாலும் பூனை இப்போலாம் விவரமாகிட்ட மாதிரி எனக்கு தெரியுது :)))

    /”வாழ்/ள் முனையில் கேட்டாலும்.. வெஞ் சிறையில் போட்டாலும்.. உடலன்றி உள்ளமுன்னை நாடாது”...//

    வாழ் ....life ... உயிர் முனை என்றும் பொருள் வர மாதிரி எழுதியிருக்கு குண்டு பூனை :)//

    என் இந்தப் ஸ்பெல்லிங் மிசுரேக்கு கண்டுதானே பொயிங்கி எழுந்து வந்தீங்க ஹா ஹா ஹா:) அதனால்தான் மிசுரேக்கு விட்டேன்:)..

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ட்றம்ப் அங்கிள் என்னைப் பார்த்தவுடன் கேட்ட முதல் கேள்வியே.. என்ன அதிரா இப்பூடி மெலிஞ்சிட்டீங்க என்றுதான்..

    அது அங்கிள், நான் இப்போ பல மாதமா சைவத்துக்கு மாறிட்டேன் எனச் சொல்லிட்டேன்:).

    பதிலளிநீக்கு
  47. //Angelin said...
    புடிச்சி பிக் பாஸ் வீட்டுக்குள்ள விடுங்க :) ஹாஹாஆ :)///

    அடுத்த பிக்பொஸ் 100 நாட்களுக்கு.. புளொக்கர்களை கூப்பிடப்போகினமாமே:)).. ஹா ஹா ஹா பகவான் ஜியும் ஸ்ரீராமும் போனால்.. 1ம் 2ம் இடம் எனக்கு வந்திடும்:) தமிழ் மணத்தில.. எப்பூடி என் ஐடியா?:)) ஹையோ அஞ்சூஉ பீஸ்ஸ்ஸ்ஸ் சேவ் மீஈஈஈஈஈ:).

    பதிலளிநீக்கு
  48. வாசித்து கருத்துப் பகிர்ந்த அனைவருக்கும் நன்றி.

    பிக்பாஸ்ல ப்ளாக்கரையா ?அதிரா ஏங்க ஏன் :)))

    பதிலளிநீக்கு
  49. //ராமன் பாயசத்திலிருந்து வந்தவன். சீதை பாதாளத்திலிருந்து. ராமன் பிறந்த நாளை உலகமே கொண்டாடுது. சீதை பிறந்த நாளை சீதையாவது கொண்டாடினதா படிச்சிருக்கமா? ராமன் பிறந்த நாளுக்கு வடை பாயசம் பானகம் எல்லாம் உண்டு. சீதை பிறந்த நாளுக்கு ஒரு வாழ்த்துச் செய்தியாவது உண்டா? ஏதோ இந்த மட்டும் (மானுடன) ராமனே சீதையை அடிக்காம இருந்தது சீதையின் அதிர்ஷ்டம் என்று சந்தோசப்படுவதை விட்டு மரியாதை இல்லை என்று குறைபடுவதாவது? (ஒருவேளை இதுவும் இருந்து ராமாயணத்துலந்து நீக்கிட்டாங்களோ புராண சென்சார்?) ராமன் மானுடன்.. ஆனால் ராமனைச் சுற்றி இருப்பவருக்கெல்லாம் ராமன் கடவுள் என்று தெரியும். சீதை அப்படியா? ராமன் மானுடனா எது செய்தாலும் தெய்வச் செயலாகப் பார்க்கப்படும். சீதை தெய்வச் செயல் செய்தாலும் அப்படிப் பார்க்க அனுமதி கிடையாது. விளையாட்டா? ராமன் எங்கே.. சீதை எங்கே.. (இப்படியெல்லாம் கேள்வி கீள்வி கேட்டால் அறிவும் முதிர்ச்சியும் பத்தாதுனு பொருள்.. ராமா ராமா என்று கன்னத்தில் போட்டுக்கொண்டு வந்த வழியே போவமா?)//

    அப்பாதுரை அண்ணே :) நினைவிருக்குமா என்னை ? :))


    கீதாம்மா இதுக்கு பதில் சொல்லுவாங்க. ;)

    பதிலளிநீக்கு
  50. அப்பாதுரை அண்ணனுக்காக :) ( நீங்க மரத்தடி அப்பாதுரை தானே ? )

    தெலுங்கு நாட்டுப்புறப்ப் பாடல்களில் ராமனை அப்படி எத்தனை கேள்விக் கேட்டிருக்கிறார்கள் என்று தேடிப்பாருங்கள். இலக்குவனையும் ஊர்மிளை விடவில்லை. ஊர்மிளைக் கேள்விகள் என்றே தனிப் பாடல் உண்டு.

    முதலில் இது சீதையின் காவியம் தான். “சீதம்மா மாயம்மா “ பாடலைக் கேட்டுப் பாருங்களேன் :) சீதை என் தாய்.. ஸ்ரீராமன் என் தந்தை என்று ஆரம்பிக்கும் பாடல்.

    அதெல்லாம் விடுங்கண்ணே....சீதை இல்லைன்னா ராமனுக்கு எங்கே பெருமை ? வில் வளைத்தது யாருக்காக? சீதைக்காக. இராவணாதி யுத்தம் யாருக்காக ? சீதைக்காக.... அப்படி என்றால் சீதையின் பெருமை சொல்லவும் வேணுமா ?

    எங்கேயாவது இராமனைத் தனியாக தரிசனம் செய்திருக்கிறீர்களா ? சீதாம்மா இல்லாம ?

    கிருஷ்ணனை தனியா பாக்கலாம். விஷ்ணுவை தனியாப் பாக்கலா. ராமனை ? சீதா இல்லாம ராமனா ? நோ வே !! ஏன்னா அவன் சீதாராமன்.. ( இதுலையும் பாருங்க. ராமன் பேர் முன்னாடி சீதையின் பெயர் :)) )

    பதிலளிநீக்கு
  51. / ஏதோ இந்த மட்டும் (மானுடன) ராமனே சீதையை அடிக்காம இருந்தது சீதையின் அதிர்ஷ்டம் என்று சந்தோசப்படுவதை விட்டு மரியாதை இல்லை என்று குறைபடுவதாவது?/ கம்ப ராமாயணத்தில் ஒரு பாடல் ராமன் சீதையை அடிப்பதைவிடக் கேவலமாக எண்ணுகிறான்
    /ஊன் திறம் உவந்தனை ஒழுக்கம் பாழ்பட
    மாண்டிலை முறை திறம்பரக்கன் மாநகர்
    ஆண்டு உறைந்து அடங்கினை அச்சம் தீர்ந்து இவண்
    மீண்டது என் நினைவு ? எனை விரும்பும் என்பதோ

    (நீதி தவறிய அரக்கனின்பெரிய இலங்கை நகரமான அங்கு நெடுங்காலம் வாழ்ந்து அவன் கீழ் அடங்கி இருந்தாய் அங்கு அறு சுவை யுள்ள உணவு வகைகளை விருப்புடன் உண்டாய் உன் நல்லொழுக்கம் பாழ்படவும் நீ இறந்தாயில்லை .இத்தகைய நீ அச்சம் இல்லாது இங்கு இப்போது மீண்டு வந்தது எது கருதி? இராமன் என்னை விரும்புவான் என்பது நின் எண்ணமோ)
    நான் உன்னை மீட்டது எதற்காகவென்றால் மனைவியைக் கவர்ந்து சென்றவனைக் கொல்லவில்லை என்னும் பழிச்சொல்லுக்கு ஆளாகாமல் இருக்கவே,
    ஐயப்பன்கிருஷ்ணன் எங்கள் வீட்டுக்கு திருமதி ஷைலஜா வுடன் வந்திருந்தது நினைவுக்கு வருகிறது அவருக்கு எப்படியோ

    பதிலளிநீக்கு
  52. ///Iyappan Krishnan said...

    பிக்பாஸ்ல ப்ளாக்கரையா ?அதிரா ஏங்க ஏன் :)))//
    உங்கள் பெயரையும் கொடுத்து விடட்டோ?:) ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
  53. நல்லாவே நினைவிருக்குங்க சார் :)

    சரி இந்த விஷயத்துக்கு வருவோம்..

    இப்படி இந்த ஒரு விஷயத்துக்காகத்தான் ராமன் சீதைய காப்பாத்தப் போனானா ?

    அப்ப ஏன் சீதைக்காக இலக்குவன் மடியில் தன் கடைசி மூச்சைப் பிடித்துக் கொண்டு காத்திருந்தானாம் ? “ கண்டேன் சீதையை “ என்ற வார்த்தையைக் கேட்ட உடனே டக்குன்னு உயிர்த்தெழுந்தாற்போல எழுந்தானாம் ????

    பதிலளிநீக்கு
  54. //அப்பாதுரை அண்ணே :) நினைவிருக்குமா என்னை ? :)//

    கீதாம்மா இதுக்கு பதில் சொல்லுவாங்க. ;)//

    ஹை, ஆசான், என்னை மாட்டி விட்டுட்டுத் தப்பிக்கப் பார்க்கிறீங்க? எனக்கு ராமாயணமே தெரியாது! புரியாது! படிச்சதே இல்லை! இந்த ராமன், சீதை,லக்ஷ்மணன் இவங்கல்லாம் யாரு?

    பதிலளிநீக்கு
  55. ஆதிரா :)) குடுங்களேன்.. பட்... ஒன் கண்டிஷன்.. பிக்பாஸ்ல ஓவியா இருக்கனும்.

    பதிலளிநீக்கு
  56. //ஹை, ஆசான், என்னை மாட்டி விட்டுட்டுத் தப்பிக்கப் பார்க்கிறீங்க? எனக்கு ராமாயணமே தெரியாது! புரியாது! படிச்சதே இல்லை! இந்த ராமன், சீதை,லக்ஷ்மணன் இவங்கல்லாம் யாரு?//
    அதானே .. உங்களுக்காவது ராமாயணம் தெரியறதாவது... பச்சைக் குழந்தையல்லவா :)))

    இராமன் சீதை லக்‌ஷ்மணன்லாம் எதிர்த்தாப்ல இருக்கிற வீட்லயும் பக்கத்து வீட்லயும் இருக்கறவங்க.. :)))

    பதிலளிநீக்கு
  57. @ //Iyappan Krishnan said...
    ஆதிரா :)) குடுங்களேன்.. பட்... ஒன் கண்டிஷன்.. பிக்பாஸ்ல ஓவியா இருக்கனு//

    ஹாஹாஆ :) ஒன்லி bloggers நினைவிருக்கட்டும்

    பதிலளிநீக்கு
  58. வேணும்னா விருந்தினரா ஒரு வாரத்துக்கு காயத்ரி ஜூலி வருவாங்க
    @அதிரா ஓடிவங்க இங்கே ஒருத்தர் வசமா தனியா மாட்டிக்கிட்டார் ஓடியாங்க சீக்கிரம்

    பதிலளிநீக்கு
  59. மீ வந்துட்டேன்ன்ன்ன்ன் அஞ்சூஊஊஊஊ.... என்னாதூஊஊஊஊஊ ஐயப்பனுக்கு ஓவியா வேணுமாமோ? அப்போ ஆரவ் இன் கதீஈஈஈஈஈஈ???? ஹையோ நான் இப்போ என்ன பண்ணுவேன்ன்ன்ன்:)..

    பதிலளிநீக்கு
  60. "அப்ப ஏன் சீதைக்காக இலக்குவன் மடியில் தன் கடைசி மூச்சைப் பிடித்துக் கொண்டு காத்திருந்தானாம் ? “ கண்டேன் சீதையை “ என்ற வார்த்தையைக் கேட்ட உடனே டக்குன்னு உயிர்த்தெழுந்தாற்போல எழுந்தானாம் ????"

    லக்குவனுக்கு ராமன் தலைவன். ராமன் மட்டும்தான் தன் மனசுல. அதுனால 'கண்டேன் சீதையை' effectively gives life to Rama and that is why லக்குவனும் உயிர்த்தெழுந்தால்போல் எழுகிறான். (இதுக்கு இப்போ உள்ள நிலை, தலைவரோட மனைவிக்கு, 'வணக்கம் மேடம்' சொல்வதுபோல. தலைவர் மறைந்தால், மேடத்தைக் கவனிக்க ஆள் இல்லை. நம்ம ஜானகி ராமசந்திரனுக்கு நடந்ததுபோல)

    நீங்களும் சீதைக்குன்னு தனிக் கோவில் பார்த்திருக்கீங்களா? க்ருஷ்ணனுக்கு தனிக் கோவில் உண்டு. (ஏன்னா அவனை அடையணும்னு மானிடர்கள் பெண்போல் அவனை நினைத்து உருகுகிறார்கள்). ஆனா, ராமரை மட்டும் வணங்குவதைக் காண இயலாது (க்ருஷ்ண ஜெயந்திக்கு கிருஷ்ணர் போட்டோ மட்டும் வைத்திருக்கலாம். ஆனால் ராம நவமிக்கு ராமர் போட்டோ மட்டும் இருக்காது. ஒண்ணு பட்டாபிஷேக போட்டோ-Family group photo அல்லது ராமர் சீதா இருக்கும் போட்டோ)

    கீ.சா அவங்கள்டதான் கேட்கணும் உங்களை ஏன் 'ஆசான்'னு சொல்றாங்கன்னு.

    பதிலளிநீக்கு
  61. பார்த்தா 'படத்துல' சின்னவராட்டமா இருக்கீங்க. அதுனால கீ.சாட்ட கேப்பேன்.

    பதிலளிநீக்கு
  62. அஞ்சு & ஆதிரா

    ஏங்க ஏன்... காயத்ரியும் ஜூலியும் வந்தா அவங்க ரெண்டு பேருமே அடிச்சுப்பாங்க புடிச்சுப்பாங்க... நடுவில பஞ்சாயத்துப் பண்ணவே நேரம் போதுமா இருக்கும்.... ஓவியான்னா எந்த பிரச்சினையும் இல்லாம.. .அவங்க பிரச்சினைய அவங்க பாப்பாங்க... நாம்பாட்டுக்கு நானா இருக்கலாம்... அதான் :)))

    பதிலளிநீக்கு
  63. ஆதிரா... ஆரவ் ஒரு பக்கம் இருந்துட்டுப் போகட்டுமே ... பிக்பாஸ் வீடு பெருசு தானே.. அப்புறம் என்ன ?? :)))

    பதிலளிநீக்கு
  64. நெல்லைத்தமிழன்.. சீதைக்கும் கோவில்கள் உண்டு இந்தியாவில் .. தேடிப்பாருங்க.

    பதிலளிநீக்கு
  65. அது ஒரு பெருங்கதைங்க...

    லாங்க் லாங்க் அகோ... சோ லாங் அகோ... நோ படி நோஸ் அவ் லாங்க் அகோ....

    அப்ப என்னாச்சுன்னா.... கீதாம்மா ப்ளாக்ல தங்கிலீஷ்ல தட்டச்சு செஞ்சுட்டு இருந்தாங்க. நானும் அவங்களுக்கு நேரடியா தமிழ்ல டைப் அடிக்க சொல்லிக் குடுத்தேன்.

    அவ்வைக்கு முருகன் ஆசான் ஆன மாதிரி.. கீதாம்மாக்கு இந்த சம்பவத்தால நான் ஆசான் ஆகிட்டேன்..

    ஓ மை காட்ஸில்லா.... காப்பாத்துப்பா...

    பதிலளிநீக்கு
  66. ஹாஹாஹா, ஆசான் தான் எனக்குக் கைப்பிடிச்சு அ, ஆ, இ, ஈ எழுதச் சொல்லிக் கொடுத்தார். இப்போ தக்ஷிணாமூர்த்திக்கு வயசான (சேச்சே, என்னை நானே அப்படிச் சொல்லிக்கக் கூடாதே, எனக்கென்ன வயசாயிடுச்சாம்! ஒண்ணுமே இல்லை!) ஹிஹிஹி,என்னை மாதிரிச் சீடிங்க இல்லையா! அதே மாதிரி ஆசானுக்கு நான் சீடி! :)

    பதிலளிநீக்கு
  67. மறைந்திருந்து தன் மீது அம்பெய்த ராமனின் செயலுக்கு இதுவோ காரணம் என்று கற்பித்து வாலி சொல்கிறான், பாருங்கள்.

    கோ இயல் தர்மம் உன் குலத்து உதித்தோர்க்கெல்லாம்
    ஆவியை ஜனகன் பெற்ற அன்னத்தை அமிழ்தின் வந்த
    தேவியைப் பிரிந்த பின்னை திகைத்தனை போலும் செய்கை..

    சீதை--ராமன் என்று பிரித்துப் பார்க்க ஒண்ணாமல் ஒன்றியவர்கள் ராமனும் சீதையும்.

    பதிலளிநீக்கு
  68. //தேவியைப் பிரிந்த பின்னை திகைத்தனை போலும் செய்கை..//

    அதே அதே சபாபதே... நன்றி ஜீவி :)

    பதிலளிநீக்கு
  69. சிறப்பான கதையமைப்பு பாராட்டுகள் த.ம வாக்குடன்

    பதிலளிநீக்கு
  70. நன்றி திரு ஐயப்பன் கிருஷ்.

    நாங்கள் "அவர் வருவாரா? பதில் தருவாரா?" என்று மனதுக்குள் பாடிக்கொண்டிருந்த வேளையில் "வாராதிருப்பேனோ" என்று பாடாத குறையாக வந்ததோடு, அனைவருக்கும் சுவாரஸ்யமான, கலகலப்பான பதில்கள் தந்தமைக்கு நன்றிகள்.
    சிறப்பு. மகிழ்ச்சி.

    உங்களிடமிருந்து இன்னும் எதிர்பார்க்கலாமா? கதைகள், பின்னூட்டங்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம். கண்டிப்பாக பகிரலாம் .நேரக்குறைவால் இதை கவனிக்கவில்லை .மன்னிக்க .தனிமடலில் தொடர்பு கொள்வோமா??

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!