சனி, 19 ஆகஸ்ட், 2017

கஃபீல் அஹமது மற்றும் ராஜ்குமார்


1)  எனக்கு இதைப் படிக்கும்போதே சிலிர்த்தது.  கோரக்பூர் ஆஸ்பத்திரியில் அரசு தனது கடன்களை தராததால் மனிதாபிமானம் இல்லாமல் ஆக்சிஜன் சப்ளையர்கள் தங்கள் சப்ளையை நிறுத்திக் கொள்ள, அங்கிருந்த ஒரு மருத்துவர் மற்றவர்களைப்போல் கைகளைப் பிசைந்து கொண்டு நிற்காமல் செய்த காரியம்...  மருத்துவர் கஃபீல் அஹமத்.  வணங்குவோம்.


2)   தன் வேலை நேரம் போக மற்ற நேரம் முழுவதையும் இதய நோயாளிகளின் நலனிற்காகவே செலவிடும் ராஜ்குமார் கேட்டுக் கொள்வதெல்லாம் இதயத்தில் ஒட்டை , இதய வால்வு பாதிப்பு,இதய வால்வு மாற்றம் என்று இதயம் சம்பந்தமான எந்த பிரச்னை என்றாலும் கவலைப்படவேண்டியது இல்லை, பணம் அதிகம் செலவாகுமோ என்று பயப்படவேண்டியதும் இல்லை ஒரே ஒரு போன் செய்யுங்கள் எங்களால் முடிந்தளவு உங்களுக்கு உதவுகிறோம் என்று சொல்லும் ராஜ்குமாரின் எண்கள் 7373748212,8939057671.தமிழ்மணத்தில் வாக்களிக்க...

16 கருத்துகள்:

 1. மருத்துவர் கஃபீல் அஹமத் வாழ்க வளமுடன்
  த.ம. இணைப்பு தவறு

  பதிலளிநீக்கு
 2. செக் செய்தேன். சரியாகத்தான் இருக்கிறது கில்லர்ஜி.

  பதிலளிநீக்கு
 3. இந்தவாரம் இரண்டு நல்ல நிகழ்வுகள். பாராட்டுக்கள். த ம

  பதிலளிநீக்கு
 4. இரண்டுமே மருத்துவ சம்பந்தப்பட்ட பாஸிட்டிவ் செய்திகள். மருத்துவர் கஃபீல் அஹமத் பல்லாண்டு வாழ வாழ்த்திடுவோம்! மிக மிக உன்னதமான செயல்.!! மனதைத் தொட்ட நிகழ்வு!!

  ராஜ்குமாரின் சேவை வளரவும் வாழ்த்திடுவோம்!! அருமையான சேவை...

  கீதா: ராஜ்குமாரின் எண்களைக் குறித்துக் கொண்டுள்ளேன். பொதுவாகவே நீங்கள் இங்குப் பகிரும் மருத்துவ சம்பந்தப்பட்ட எண்களையும், சில சமூக சேவை எண்களையும் ஹெல்ப் லைன் என்று போட்டுச் சேமித்து வைத்துக் கொள்கிறேன். மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 5. போற்றப்படவேண்டியவர்கள்....அருமை

  பதிலளிநீக்கு
 6. மருத்துவர் வணங்குதலுக்கு உரியவர்
  போற்றுவோம் வணங்குவோம்
  தம +1

  பதிலளிநீக்கு
 7. இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
  தமிழ் செய்திகள்

  பதிலளிநீக்கு
 8. கோரக்பூர் மருத்துவர் பாராட்டுக்குரியவர் அரசு விசாரணையைத் துவங்கு முன்பே இந்த இறப்புகள் ஆக்சிஜென் சிலிண்டர் பற்றாக் குரையால் அல்ல என்று சொல்கிறதுமுதலமைச்சரின் கூற்றை மீறி எந்த விசாரணை சரியாக இருக்கும் மருத்துவர்களின் சேவையைப் பழிக்கக் கூடாது

  பதிலளிநீக்கு
 9. செல்லரித்துப்போன மருத்துவதுறையின் செல்லரிக்கா பக்கங்கள்

  பதிலளிநீக்கு
 10. மருத்துவ துறை சார்ந்த நல்ல மனிதர்கள் பற்றிய தகவல்கள் - பகிர்வுக்கு நன்றி !

  பதிலளிநீக்கு
 11. இருவருக்கும் இதயபூர்வ நன்றியும் வணக்கம் உரித்தாகட்டும்

  பதிலளிநீக்கு
 12. மனிதாபிமானி கபீல் அவர்களை பணியிட மாற்றம் செய்து விட்டார்கள் என்று செய்தி வருதே இது நியாயமா :)

  பதிலளிநீக்கு
 13. இருவருக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

  வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 14. பாராட்டுக்குரியவர்கள் . வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!