வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017

வெள்ளி வீடியோ 170811 :: ஓவியாவின் இரண்டு பாடல்கள்     தமிழகம் முழுவதும் பிக் பாஸ், ஓவியா அலை -  எதிர்ப்பாகவும், ஆதரவாகவும் - வீசிக் கொண்டிருக்கிறது.    
அப்படி ஓவியாவிடம் என்னதான் இருக்கிறது என்று கண்டுபிடிக்கத் தீர்மானித்தோம்.

     பிக் பாஸ் பார்க்கவில்லை என்று சொல்பவர்கள் ஓவியா யார் என்று தெரியாமல் இருக்கக் கூடும்.  ஏன் அவர் பெயர் மட்டும் அடிக்கடி இணையத்தில் அடிக்கடி காணத்தெரிகிறது என்று யோசித்திருக்கக் (மனத்துக்குள்தான்) கூடும்.  அவர்களுக்கு உதவும் கடமையும் 'எங்களு'க்கு இருக்கிறது!

     நம் நிருபர் ஓவியா ஆதரவாளர்கள் மத்தியில் புலனாய்வு செய்ததில் அவர் நடிகைதான், தமிழ்ப் படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது புலனாகியது.  'சண்டமாருதம்' என்கிற ஒரு பழைய படத்திலேயே 2014 இல் சரத்குமாருடன் நடித்திருக்கிறார் என்றும் தெரிந்தது.  

     அவர் ரசிகர்களைக் கேட்டு அவர்க பெரும்பான்மையாகச் சொன்ன ஓவியாவின் இரண்டு பாடல்களை அவரின் ரசிகர்களுக்காக இங்கு தருகிறோம்.  

19 கருத்துகள்:

 1. இங்கேயுமா ஓவியா? முடியலை! :)

  பதிலளிநீக்கு
 2. அனுஷ்கா ஆதரவாளர் எப்போது ஓவியா ஆதரவாளர் ஆனார் என யோசித்துக் கொண்டிருக்கிறேன்! :)

  முதலாம் பாடல் கேட்டிருக்கிறேன். இரண்டாவது இப்போது தான் கேட்/பார்க்கிறேன்!

  பதிலளிநீக்கு
 3. வெங்கட்.. நான் ஓவியா ஆதரவாளன் இல்லை... இல்லை... இல்லை! இன்னமும் அனுஷ்காதான்!!! எனக்கு இரண்டு பாடல்களுமே புதுசு! இதுவரை கேட்டதில்லை!

  பதிலளிநீக்கு
 4. இரண்டு படங்களையும் பார்த்திருக்கிறேன். ஒரு நடிகையாக ஓவியா இன்னும் நிலைநிறுத்திக்கொள்ளவில்லை. சரி சரி நீங்களும் ஜோதியில் கலந்துட்டீங்கன்னு எடுத்துக்கறேன். த ம

  பதிலளிநீக்கு
 5. ஓவியா காய்ச்சலுக்கு தமிழ் நாடு பலியாகி போனதற்கு பாக்கிஸ்தானே காரணம்

  பதிலளிநீக்கு
 6. ஓவியா என்ற நடிகைக்காக மக்கள் அவரை ஆதரித்ததாகத் தெரியவில்லை, சக மனிதர்களிடம் நடிக்கத் தெரியாத, புறம் பேசத் தெரியாத மனுஷிக்காகவோ என்னவோ!
  பாடல்கள் எனக்குப் புதிது! முதல் பாடல் ஆரம்ப வரி 'சித்திரப் பூ விழி வாசலில் யார் நின்றவரோ' வரியை ஏனோ ஞாபகப்படுத்துகிறது....

  பதிலளிநீக்கு
 7. அவர்களுக்கு உதவும் கடமையும் 'எங்களு'க்கு இருக்கிறது!//

  ஆஹா ! என்ன ஒரு கடமை உணர்வு!

  பாடல்கள் கேட்டது இல்லை.

  பதிலளிநீக்கு
 8. எல்லாத்துக்கும் இந்த பரணி பய தான் காரணம்...!

  பதிலளிநீக்கு
 9. களவாணி படத்து பாட்டு போட்டிருக்கலாமே

  பதிலளிநீக்கு
 10. பாடலைப்போட்டுப்பார்த்தேன். என்னால் இந்தமாதிரி சங்கதிகளை பாட்டென சொல்லமுடிவதில்லை. தமிழ்ப்படங்களிலிருந்து-குறிப்பாக இவ்வகைப்படங்களிலிருந்து நான் ஒதுங்கிவிட்டேன்.

  இது இப்படி இருக்க, ஓவியா ஜுரத்துக்கு மருந்திருப்பதாகத் தெரியவில்லை. ஆதார் காட்டினாலும் அந்தப்பக்கம் போ எனச் சொல்லமுடியாது போலிருக்கிறது!

  பதிலளிநீக்கு
 11. துளசி: மலையாளத்திலும் நடித்திருக்கிறார். தமிழிலும்...பிக்பாஸ் பற்றி தெரியவில்லை. பார்க்கும் வாய்ப்பு இல்லாததால்...இந்த இரு தமிழ்ப்படங்களும் பார்த்திருக்கிறேன்.

  கீதா: ஸ்ரீராம் நிரூபர் சொல்லலையா...ஓவியா சேர நன்நாட்டிளம் பெண்...திருச்சூர்..ஓவியா ஹெலன்...26 வயது!!! கமலின் மன்மதஅம்புவிலும் வருகிறார்....அதனால்தான் கமல் அவருக்கு சப்போர்ட் (இது எனது உடான்ஸ்)

  என்னதான் இருந்தாலும் அனுஷ்காவின் புகழ் பாடாமல் ஓவியாவின் புகழ் பாடியமை த்ரீமச்!ஹிஹிஹிஹி...

  பதிலளிநீக்கு
 12. # தமிழகம் முழுவதும் பிக் பாஸ், ஓவியா அலை - எதிர்ப்பாகவும், ஆதரவாகவும் - வீசிக் கொண்டிருக்கிறது.#
  நிறைய அல்லக்கைகள் இதற்காக பணம் பெற்றுக் கொண்டு சோசியல் மீடியாக்களில் மாரடித்துக் கொண்டிருக்கிறார்கள் !
  அந்த நிகழ்ச்சியே நீண்ட நாடகம் ,அதைப் பற்றியோ ..கலந்து கொள்கிறவர்களைப் பற்றியோ கவலைப் பட ஒன்றுமில்லை :)

  பதிலளிநீக்கு
 13. உங்கள் பங்குக்கு ஓவியாவின் விவரத்தை பகிர்ந்து விட்டிர்கள். நன்று

  பதிலளிநீக்கு
 14. நம்பினால் நம்புங்கள் ,
  எனக்கு இது பற்றி எதுவுமே தெரியாது
  நான் காமெடி சானல் ஹிந்தி சமையல் சானல்(24x7) நடக்கும் .தவிர
  NHK இது என்றில்லாமல் சில நியூஸ் சானல் மட்டும் தான்பார்ப்பேன் .

  எனவே ஜூட் !

  பதிலளிநீக்கு
 15. ஓவியாவுக்குள் இப்படி ஒரு அசுரத்தனமான நடிப்புத்திறமை இருப்பதை வெளிக்கொணர்ந்ததுடன், தமிழ்கத்தில் இவ்வளவு ‘புத்திசாலிகள்’ இருக்கிறார்கள் என்பதையும் உலகத்தார் உணரவைத்த ஒப்பற்ற ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை ஆவணமாக்கி, இனிவரும் சந்ததியினரும் கண்டுகளித்து, வாழ்க்கைப்பாடம் கற்று, உய்ய ஆவன செய்யுமாறு எல்லாம் வல்ல இறைவனையும், ஆழ்வார்பேட்டை ஆண்டவனையும் வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
 16. இந்தப்பாடல் காட்சிகளில் வரும் பெண் ஓவியாவா அல்லது ஓவியாவைப் போல் ஒருத்தியா

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!