புதன், 23 ஆகஸ்ட், 2017

புதன் 170823 புதிர்


சென்ற வாரக் கேள்விகளுக்கு பதில்கள் இங்கே: 
முதல் கேள்விக்கு பதில் : mother in law. 
  
இரண்டாவது கேள்விக்கு பதில்: 

ஆஹா! சக்கையாக ஏமாற்றிவிட்டாரையா அந்த மூன்றெழுத்துகாரர் !  இந்தப் பதிவிற்காவது  அந்தக் கருத்து வருதா பார்ப்போம்! 

மூன்றாவது பதில் ஏற்கெனவே தெரிந்ததுதான்! 

இனி இந்த வாரக் கேள்விகள். 

1) தோசையில் பாதியை ஆங்கிலத்தில் என்னிடம் கொடுத்தால் வருவது என்ன? 

2) முதலாவது விடையில் நெடிலைக் குறிலாக்கினால் முதலெழுத்து: 
மேலும் ஓரெழுத்து : கடையில் கிடைக்காது. ஆனால் குடையில் இருக்கு! 
இன்னும் ஓரெழுத்து:  உள்ளே இல்லை, ஆனால் உள்ளத்தில் இருக்கு! 

3) முதல் மற்றும் இரண்டாவது பதில்களில் உள்ள நெடிலையும் குறிலையும் தலை வெட்டி, பொட்டிட்டு, இரண்டாவது பதிலில் ஈரெழுத்துகள் வாங்கிக் குளிக்கலாம் ! 


கண்டுபிடியுங்க ! 

    


45 கருத்துகள்:

 1. 1. பதில், "இரண்டு". (தோ என்பதை இந்தி இரண்டு என்று சொல்வீர்கள்). த ம முடிந்தது

  பதிலளிநீக்கு
 2. இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 3. Madhavan Srinivasagopalan said...
  இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

  :-)))))))

  பதிலளிநீக்கு
 4. கேஜிஜி சார்கிட்ட இதுதான் பிரச்சனை. எந்தப் புதிருக்கும் ரெண்டு மூணு விடை வச்சுருப்பார். ஒண்ணைச் சொன்னால், அது இல்லை என்று சொல்வார். 'X' என்றால் 'தவறு' என்று பொருள்கொள்ள நினைப்போம். அவர் அதற்கு வேறு ஏதோ அர்த்தம் வைத்திருப்பார். சரி சர்... யோசித்துப்பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 5. 3. சோப் 2. 'சை' ல 'ன' அதோட 'ட', 'டை' அது 'குடை'ல இருக்கு. யாரோ (எல்லாருமோ) தலையைப் பிச்சுக்கறமாதிரி இருக்கு.

  இன்னொண்ணு கேஜிஜி சார்.. நீங்க விடையை கரெக்டா எழுதணும், அப்புறம் யார் யார் எல்லாம் சரியாகச் சொன்னார்கள், அல்லது தவறு என்பதையும் எழுதணும். இல்லைன, 'இரண்டாவது பதில்', 'மூன்றாவது ஏற்கனவே தெரிந்ததுதான்' இதெல்லாம் குழப்பமா இல்லையா?

  இன்னொரு சஜஷன். போன புதன் இடுகையிலேயே, கடைசியில், நீங்கள் எல்லா பதில்களையும், யார் சரியாக எழுதினார்கள் என்பதையும் போட்டால், பார்ப்பவர்களுக்கு (யாராவது பார்த்தால்) சுலபமாக இருக்கும். இந்த பதிலை, 'செவ்வாய்க்கிழமை' போடுவதாக இருந்தால், அடுத்த புதன் புதிர் பார்க்கும்போதே, பழைய புதன் புதிரைப் பார்த்து விடைகளையும் தெரிந்துகொள்ளலாம்.

  பதிலளிநீக்கு
 6. // நீங்கள் எல்லா பதில்களையும், யார் சரியாக எழுதினார்கள் என்பதையும் போட்டால், பார்ப்பவர்களுக்கு (யாராவது பார்த்தால்) // பார்த்தால்தானே! யாரும் பார்ப்பது இல்லை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாங்க பார்ப்போம்ல...கௌதம் அண்ணா...அதான் நெல்லை சொல்லும் சஜஷனுக்கு நானும் ஒட்டு போடறேன்....

   கீதா

   நீக்கு
 7. ரொம்ப கடினமாக இருக்கிறது கேள்வி,என்னக்கு விடை தெரியவில்லை ஐயா.

  தமிழ் செய்திகள்

  பதிலளிநீக்கு
 8. 1) பேன் (பேன் கேக்கில் பகுதி)

  2) பெ + உ + ம்

  3) ப் + ப் + ஏ

  விடை - பெப்பே என்று வருகிறது ஐயா. ;)

  பதிலளிநீக்கு
 9. கோவை ஆவியைக் "கன்னா&பின்னா"வென ஆதரிக்கிறேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  பதிலளிநீக்கு
 10. ஆஆஆஆஆவ்வ்வ்வ்வ் கெள அண்ணன் நலமோ? இருங்க சற்று நேரத்தில் குடையோடு வருகிறேன் ஹையோ டங்கு ஸ்லிப் ஆகத் தொடங்கிட்டுதேஏஏ விடையோடு வருகிறேன்ன்ன்....

  அதுவரை கெள அண்ணன் வெட்கப் பட்டுக்கொண்டே இருங்கோ:) ஹா ஹா ஹா அதுதான் ஓசையில் பாதியானதை ஆங்கிலத்தில் தந்தாச்செல்லோ......

  ஆவ்வ்வ்வ்வ்வ்வ்கெள அண்ணன் வாழ்க்கையில் முதேல் தடவையா வெட்கப்படுறார்ர் எல்லோரும் ஓடியாங்கோஓஓ:).... மீ இப்போ ஓடிடுறேன்ன்ன்ன்ன்ன்ன்:)

  பதிலளிநீக்கு
 11. வாவ்வ்வ்வ்வ் வெறி குட் கோவை ஆவியை ஒருமாதிரி வைட் பஸ்ல:) ஏத்தி விட்டிட்டார்ர் கெள அண்ணன்:)... நான் ஏற மாட்டேன் விடை என் நாக்கு அடிவரை வந்திட்டுதூஊஉ வெயிட் வெயிட் முதலாவது விடை சொல்லிட்டேன் .... வெயிக்கம்:) வெட்கம் என்றும் சொல்லலாம்... நீங்க ரெண்டு விடை வச்டிருப்பீங்க என்பதனால அரைவட்டம் எனவும் சொல்லி வைக்கிறேன்ன்ன்ன்ன் விடை எனக்கேஏஏஏஏ........ பெஉமதி மிக்க பரிசாத் தந்திடுங்கோ:).

  பதிலளிநீக்கு
 12. ஹா ஹா நெ தமிழன் ஸ்ரெடியாத்தான் நிற்கிறார்... கீதாக்காவுக்கு என்னமோ ஆச்சூஊஊஊஊஊ ஹா ஹா ஹா :)

  பதிலளிநீக்கு
 13. 3. அன்பு/அம்பு...ஹிஹிஹி

  2. அ....இத்துடன் ஓரெழுத்து...ன்...ம்...இடிக்குது..எனக்கு யோசிச்சத்துல கிடைத்தது. .இம்புட்டுத்தான்....

  கீதா

  பதிலளிநீக்கு
 14. //2) முதலாவது விடையில் நெடிலைக் குறிலாக்கினால் முதலெழுத்து: //
  எனக்குப் பாருங்கோ டமில்ல டி ஆக்கும்:).. ஆனாலும் இந்த இலக்கணம் பிழைக்கப்பார்க்குது அப்பப்ப கர்:)... ஓக்கே விடையை விட்டுப்போட்டு தோசையில் நெடில் தோ.. குறில் எனில் தொ...

  ///மேலும் ஓரெழுத்து : கடையில் கிடைக்காது. ஆனால் குடையில் இருக்கு///
  குடையில பாதி டை எடுத்து இதுக்கு ஒட்டினால் தொடை:)..


  இன்னும் ஓரெழுத்து: உள்ளே இல்லை, ஆனால் உள்ளத்தில் இருக்கு! ///

  தொண்டை என வரும்:) ஆவ்வ்வ்வ் 2 வது பதில் வந்திட்டுது.. 3 வதுக்கு திரும்படியும் வாறேன்ன்:). தொண்டை உள்ளத்திலயா இருக்கு எனக் கேய்க்கப்பூடா... பிறகு நான் தேம்ஸ்ல குதிச்சிடுவேன்ன்:) நீங்க முதல்ல உள்ளம் எங்க இருக்கு எனச் சொல்லிட்டு என் விடைக்கு வரோணும் சொல்லிட்டேன்ன் டீல்ல் கெள அண்?:)

  பதிலளிநீக்கு
 15. 1. தோ...பாதி

  2....தோ குறில்..தொகு. தொகுதி....
  இது ஒரு விடை

  3 அப்புறம் வரேன்......இன்னுறு விடை சொல்லறேன்
  கௌதம். அண்ணா எங்களை துணியை கிழிச்சுக்காம விட மாட்டீங்க போல..ஹிஹிஹி
  கீதா

  பதிலளிநீக்கு
 16. நான் ஆவியை வழி மொழிகிறேன்....பெப்பே....ஹிஹிஹிஹி..ஹாஹாஹாஹாஹா......பாருங்க இப்பவே எனக்கு என்னவோ ஆயிருச்சு....

  கீதா

  பதிலளிநீக்கு
 17. 1.Two(டூ)
  2.உடை
  போன் வழியாக பதிலளிப்பதால் விரிவாக எழுதுவது கடினமாக இருக்கிறது. Will come back

  பதிலளிநீக்கு
 18. 1.Two(டூ)
  2.உடை
  போன் வழியாக பதிலளிப்பதால் விரிவாக எழுதுவது கடினமாக இருக்கிறது. Will come back

  பதிலளிநீக்கு
 19. முதல் விடையை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்த இரண்டிலும் நான் குழம்பி விட்டேன். 

  பதிலளிநீக்கு
 20. நேற்று நெல்லைத் தமிழனும் சரியான பதில் சொல்லல்ல ஸ்ரீராமும் சொல்லல்ல என் விடுகதைக்குப் பதில் , சோ இப்போ மண்டையை சுவரில் மோதுவதோடு சேர்த்து எனக்கும் பதில் சொல்லுங்கோ....:)

  வந்தார் போனார் , திரும்ப வந்தார், இனிப் போனால் வருவாரோ????

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதிரா.... நீங்கள் திரும்பக் கேட்டிருப்பதிலிருந்து நேற்று நெல்லை சொன்ன பதில் தவறு என்று தெரிகிறது. நானும் நெல்லை நினைத்ததைத்தான் நினைத்தேன். ஸோ... நீங்களே விடையைச் சொல்லிடுங்கோ.... இந்த கீதா ரங்கன் கூட உதவிக்கு வரமாட்டேன் என்கிறார்...!

   நீக்கு
  2. வெள்ளைப் பல்லெல்லாம் தெரியுமளவுக்கு ஒருக்கால் சிரியுங்கோ ஸ்ரீராம்:) அப்போதான் பதில் சொல்லுவேன்:)...

   நீக்கு
 21. 3 வதுக்கு பொட்டு வச்சு பூச்சூடி மஞ்சள் கயிறும் கட்டிய இடத்தில் பதில் சாம்பு என வருது:) அப்போ ஷம்போ ஆக இருக்குமோ....

  கெள அண்ணன் வெய்க்கப்பட்டது போதும் வந்து நம்ம ஏரியா ஐத் தூசு தட்டுங்கோ:)

  பதிலளிநீக்கு
 22. ௧. முதலெழுத்தை ஆங்கிலத்தில் கொடுத்தால் கிடைப்பது இரண்டாவது எழுத்தில் அதற்கான தமிழ்ப் பொருள்?

  பதிலளிநீக்கு
 23. தோசையில் பாதி மீ எஸ்கேப்))) இந்த போட்டி எல்லாம் என் அறிவுக்கு பெரியவிடயம் சார்)))

  பதிலளிநீக்கு
 24. //வெள்ளைப் பல்லெல்லாம் தெரியுமளவுக்கு ஒருக்கால் சிரியுங்கோ //

  இதில் ஏதாவது க்ளூ இருக்கோ!

  ஈ..........ஸ்வ்ரா... ஒன்றும் விளங்கவில்லை எமக்கு...

  பதிலளிநீக்கு
 25. அதிரா கேள்விக்கு பதில் பற்கள். குழந்தைக்கு பால் பற்கள் வந்தது. திருப்பி போனது. திரும்பவும் முளைத்தது. அதுக்கப்புறம் பல் போனால் திரும்ப முளைக்குமா? முளைக்காது.

  பதிலளிநீக்கு
 26. தமிழ்மண ஓட்டு போட்டு விட்டேன்

  பதிலளிநீக்கு
 27. "புழல்நீர்" என்று நினைக்கிறேன் விடை சரியானால் விளக்கமளிக்கிறேன்

  பதிலளிநீக்கு
 28. ///ஸ்ரீராம். said...
  //வெள்ளைப் பல்லெல்லாம் தெரியுமளவுக்கு ஒருக்கால் சிரியுங்கோ //

  இதில் ஏதாவது க்ளூ இருக்கோ!

  ஈ..........ஸ்வ்ரா... ஒன்றும் விளங்கவில்லை எமக்கு.//

  ஹா ஹா ஹா ஹா ஈஈஈஈஈஈஸ்வரனைக் கூப்பிட்டுப் போட்டீங்க அதனால உடனே விடை அளிச்சிட்டார் நெல்லைத்தமிழன்:)

  பதிலளிநீக்கு
 29. //நெல்லைத் தமிழன் said...
  அதிரா கேள்விக்கு பதில் பற்கள். குழந்தைக்கு பால் பற்கள் வந்தது. திருப்பி போனது. திரும்பவும் முளைத்தது. அதுக்கப்புறம் பல் போனால் திரும்ப முளைக்குமா? முளைக்காது.//////

  இது கரீஈஈஈஈஈஈஈஈஈட்டூஊஊஊஊஊஊ:) எங்கே அந்த பபபபபபப... ஹையோ பச்சை எண்டாலே அவருக்குப் பிடிக்காதாம்:) பொபொபொபொன்னான பொன்னாடையை எடுத்து வாங்கோ.. சரியான விடை சொன்னமைக்காக தேம்ஸ் கரையில் நிற்க விட்டு போர்த்தி வாழ்த்துறோம்...

  நீங்க அடுத்து ஹைக்கூ கவிதைகள் எழுதி இங்கு அனுப்புங்கோ நெல்லைத்தமிழன்.. ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 30. அது என்ன மாயமோ என்ன மந்திரமோ தெரியல்ல:) என் தலை தெரிஞ்சாலே கெள அண்ணன் ஓடிப்போய்க் கட்டிலுக்குக் கீழ ஒளிச்சிடுறார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)..

  சகோ ஸ்ரீராம் இந்தக் கொமெண்ட்டை எடுத்துப் போய், கெள அண்ணன் சொன்ன எங்கள் புளொக் ஒபிஸ் முற்றத்தில் இருக்கும் அந்த போஸ்ட் பொக்ஸ் ல் போட்டுவிடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்:).. 3 மணிக்கு போஸ்ட்மான் வந்து எடுத்துப்போய்க் கெள அண்ணனிடம் கொடுப்பார்:)

  பதிலளிநீக்கு
 31. ///கோமதி அரசு said...
  தமிழ்மண ஓட்டு போட்டு விட்டேன்///

  ஹா ஹா ஹா ரசிக்கிறேன்.. கடசியாக என்றாலும் மறக்காமல் வோட் போட்டு அதை தெரிவித்த விதமும் அழகு..

  பதிலளிநீக்கு
 32. // தனிமரம் said...
  தோசையில் பாதி மீ எஸ்கேப்))) இந்த போட்டி எல்லாம் என் அறிவுக்கு பெரியவிடயம் சார்)))// அவரை அறியாமலேயே சரியான பதிலை நெருங்கி இருக்கிறார்! ஆங்கிலத்தில் 'என்னிடம்' தோசையில் கடைசிப் பாதியை சரியாகச் சேர்த்திருந்தால் .... முதல் பதில் கிடைத்திருக்கும்! வாழைப்பழத்தை இதற்கு மேலும் உரிக்க முடியாது! முதல் பதில் கிடைத்துவிட்டால் மற்றவை எளிது!

  பதிலளிநீக்கு
 33. மேலே உள்ள க்ளூவின் அடிப்படையில்....
  மீசை
  மிளகு
  குளம்

  பதிலளிநீக்கு
 34. கேஜிஜி சாரிடமிருந்து பதிலைக் காணோம். அடுத்த புதன் போய் அதற்கு அடுத்த புதன் விரைவில் வரப்போகிறது.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!