வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

வெள்ளி வீடியோ 170804 : மனம் கல்லாலே ஆனதில்லே பொன்னம்மா..எந்தக் குற்றத்துக்கும் மன்னிப்பு  உண்டு.  
     மனிதர்கள் இன்னொரு மனிதர் மேல் எவ்வளவு வெறுப்புடன் இருக்க முடியும்?  அயல் மனிதர்களுக்கும் அன்பான மனைவிக்கும் வித்தியாசம் இருக்கிறதே...

     காத்து பட்டாலே கரையாதோ கற்பூரம்?  கரையுது என் மனசு உன்னாலே..  

     அடி சத்தியமா நானிருப்பது உன்னாலே..

     உயிர்போனாலும் உன்னாசை போகாது.. 

     மனம் கல்லாலே ஆனதில்லே கண்ணம்மா...

     தவறு செய்துகொண்டிருக்கும் மனைவியை இயலாமையுடன் கணவன் கண்காணித்துக் கொண்டிருக்கிறான்.  அவன் பிரார்த்தனை நிறைவேறுகிறது.  தவறு நடக்கவில்லை என்பதோடு அவனின் மன்னிப்பையும் இறைஞ்சுகிறாள் மனைவி.  தாங்க முடியாத காதலுடன் மனம் குழைந்து கணவன் பாடுகிறான்.

      இந்த மாதிரி ஒரு பாத்திரத்தில் நடிக்க ராஜேஷ் தைரியமாக ஒப்புக் கொண்டு நடித்துக் கொடுத்திருக்கிறார்.  பாக்யராஜ் இரவல் குரலுடன் வில்லன்!

     சங்கர் கணேஷ் இசையில் இந்தப் பாடல் ரோசாப்பூ ரவிக்கைக்காரியின் இளையராஜா பாடலான 'உச்சி வகுந்தெடுத்து' பாடலின் தாக்கம் என்று சொல்வோர் உண்டு.  காட்சி அமைப்பும் அப்படியேதானே?

     எனக்கு இரண்டு பாடல்களுமே பிடிக்கும்.

     அதுவும் 'மனம் கல்லாலே' வரிகள் வரும்போது மனம் குழைந்து விடுகிறது.

     இந்த வாரம் இளையராஜா பாடல் இல்லை.  அவர் பேட்டியையும் இந்த வாரம் தர முடியவில்லை.  மன்னிக்கவும்.

     இதெல்லாம் ஒரு பாட்டா? என்று இதற்கும் கேள்விகள் வரலாம்!   பிடித்தவர்களுக்கு இதுவும் ஒரு பாடல்தான்.  அவரவர் ரசனை அவரவர்களுக்கு!

     மலேசியா வாசுதேவனின் சிறந்த பாடல்களில் ஒன்று.20 கருத்துகள்:

 1. >>> காத்து பட்டாலே கரையாதோ கற்பூரம்?..
  கரையுது என் மனசு உன்னாலே.. <<<

  பிடித்த பாடல்களுள் இதுவும் ஒன்று..

  பதிலளிநீக்கு
 2. எனக்கு மிகவும் பிடிக்கும் ஒரு காலத்தில் எங்கும் ஒலித்த பாடல்தான்....

  பதிலளிநீக்கு
 3. மிகவும் பிடித்தமான பாட்டு நண்பரே
  தம +1

  பதிலளிநீக்கு
 4. ரோசாப்பூ ரவிக்கைக்காரி பாட்டுக் கேட்டிருக்கேன். ஆனால் இது கேட்டதில்லை.

  பதிலளிநீக்கு
 5. மலேஷியாவின் மற்றுமொரு சிறந்த பாடல். பாடல் வரிகளும் ஞாபகம் இருக்கும் பாடல், ஹாஸ்டல் காலத்துல கேட்டதுனால. த ம

  பதிலளிநீக்கு
 6. கேட்ட பாடல்; முதல் முறையாக பாட்டைக் காண்கிறேன். ஒரு விண்ணப்பம் - ஆங்கில ஸப் டைட்டில்ஸ் படிக்கக் கூடாது என்று போட்டு விடுங்கள் - அழுகைப் பாட்டை காமெடியாக்குகிறது!

  பதிலளிநீக்கு
 7. அனைவரும் ரசிக்கும் பாடலைப் பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சி, நன்றி.

  பதிலளிநீக்கு
 8. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 9. பாடல் பகிர்வு நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 10. இனிய பாடலை பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சி

  பதிலளிநீக்கு
 11. கேட்கும் பாடல்கள் அனைத்தையும் நினைவில் வைத்திப்பது கடினம் ஸ்ரீ நானிந்தப் பாடலைக் கேட்டிருக்கிறேன்வரிகளை இப்போது ரசிக்கிறேன்

  பதிலளிநீக்கு
 12. எனக்கு இந்தப் பாட்டு பிடிக்கும். இதுவரை கேட்டு மட்டுமே இருக்கிறேன்! காட்சியுடன் பார்த்ததில்லை!

  பதிலளிநீக்கு
 13. ஸ்ரீராம் அருமையான பாடல்! மலேஷியாவின் வித்தியாசமான குரல்! அதுல அந்த வரிகளுக்கேற்ற உணர்ச்சிகள் எப்படித் தெரியுது பாருங்க....காட்சியைப் பார்க்காமலேயே குரலில் அப்படியே அந்த ஃபீல் வருது.ரொம்பப் பிடிக்கும் பாடல்..உச்சி வகுடெடுத்து போலவே தான். அப்போதே ஒரே மாதிரி இருக்கே. இதுவும் ராஜாவின் பாடல்தான்னு நினைச்சுட்டுருந்தேன்... ஏன்னா படம் பார்த்ததில்லை. படத்துக்கு எல்லாம் கூட்டிட்டுப் போக மாட்டாங்களே. இப்பத்தான் நீங்க சொல்லித்தான் சங்கர் கணேஷ்னு தெரியுது. பல வருடங்களுக்குப் பிறகு கேட்கிறேன்...

  கீதா

  பதிலளிநீக்கு
 14. அருமையான படம். நல்ல கதை. நல்ல நடிப்பு.
  அருமையான பாடல். குரலோ அமிர்தம். நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!