ஞாயிறு, 20 செப்டம்பர், 2009

நகைச்சுவைக் கோட்பாடுகள்

நமது பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் வரும் ஜோக்குகள் சில அடிப்படை களை ஆதாரமாகக் கொண்டவை. அவற்றில் சிலவற்றை பார்க்கலாமா?

மருத்துவமனை மற்றும் மருத்துவர் ஜோக்குகள்:
டாக்டருக்கு தொழிலே தெரியாது. மருத்துவ மனை புகுந்தவர் மரணிப்பது நிச்சயம். நர்ஸ் மிக்க அழகி. நோயாளியின் முதல் குறிக்கோள் நர்சை கணக்கு பண்ணுவதுதான். ஆபரேஷன் செய்யும் எந்த மருத்துவரும் அதற்கு முன் கத்தி பிடித்தது இல்லை. உறவினர்கள் நோயாளி சாக வேண்டும் என்பதில் குறியாக இருப்பர்.

ஹோட்டல் ஜோக்குகள்:
இங்கு எதுவும் சுவையாக இருக்காது. இருந்தால் பழையதை புது மேருகேற்றியதாக இருக்கும். சப்ளையர் மக்கு மண்ணாந்தை. எதை ஆர்டர் செய்தாலும் பயங்கரமாக தாமதம் ஆகும்.

மாப்பிள்ளை மாமனார் ஜோக்குகள்:
மாப்பிள்ளை மாமனார் வீட்டில் டேரா போட விரும்புபவர். மாமனார் அவர் எப்போதடா தொலைவர் என்று காத்திருப்பவர். மாப்பிள்ளை மாமனாரை மொட்டை அடித்து பணமாகவும் பொருளாகவும் வங்கிச் செல்பவர்.

மாமனார் மாட்டுப்பெண் ஜோக்குகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாமியார் நாட்டுப் பெண் ஜோக்குகள்:
மாமியாரை நாய் / பாம்பு / தேள் கடித்தால் ஆனந்தக்
கூத்தாடுபவள் மருமகள். மாமியாருக்கு ஊசிப்போனதும் தீங்கு செய்யக்கூடியதையும் மட்டுமே தருபவள். இருவரும் பரஸ்பரம் சண்டை போடுவதில் அபார சுவாரசியம் காட்டுபவர்கள்.

நண்பர்கள் ஜோக்குகள்:
மனைவியிடம் படும் இம்சை மட்டுமே நட்பை வாழ வைக்கிறது. அல்லது கடன் வாங்கி திரும்பத் தராமல் கழுத்தறுப்பது நண்பர்களுக்கிடையில் சகஜம்.

அப்பா பிள்ளை.
அப்பா மண்டு. பிள்ளை அதை அறிந்துவைத்திருக்கும் மண்டு.

அம்மா பெண்:
இந்த வகை ஜோக்குகள் அபூர்வம்.

ஆபீஸ் ஜோக்குகள்;
டைபிஸ்ட் என்பது ஒரு பெண் மட்டுமே. ஆண் டைபிஸ்டுகள் கிடையவே கிடையாது. ஸ்டேனோக்கள் ஆபீசில் ஒருவரை கணக்கு பண்ணுபவர்கள் அல்லது மானேஜருக்கு வைப்பாக விளங்குபவர்கள். ஆபீஸில் பல பேரும் தூங்குபவர்கள். லஞ்சம் வாங்குபவர்கள்.

அமைச்சர் அரசியல்வாதி ஜோக்குகள்:
மக்கு முண்டமாக விளங்குவது அரசியல்வாதியின் இலட்சணம். ஆனாலும் பதவியில் இருப்பவர். எதிலும் லாபம் பார்ப்பவர். பெண்ணாசை பொன்னாசை மண்ணாசை மிக்கவர். மகளிரணித் தலைவிகளை சைட் அடிப்பவர். இரண்டுக்கு மேற்பட்ட மனைவிகளைக் கொண்டவர். தம் கொள்ளுப்பேரன் வரையில் பதவி சொத்து வாங்கித் தர அயராது முனைபவர். தலைவருக்குக் கப்பம் கட்டுவதில் துடியானவர்.

மன்னர் ஜோக்குகள்:
மன்னர் புறமுதுகிட்டு ஓடி வந்தாலும் பிடிபடாதவர் . அந்தப் புர சுவாரசியங்கள் நிரம்பவே கொண்டவர். அமைச்சரிடம் தம் அறியாமையை வெளிப்படுத்தத் தயங்காதவர். பயந்தான்குள்ளி. மகாராணிக்கு பயந்த சாது ஜீவி. விசிறி வீசும் பெண்களிடம் தனிப்பட்ட பிரேமை வைத்திருப்பவர். புலவர்களிடம் கடன் சொல்லி பாட்டுக் கேட்பவர்.

சினிமா கதாநாயகி ஜோக்குகள்:
ஆடைகளை அவிழ்த்துதற ஆயத்தமானவர். தன வயதை இருபது முப்பது குறைத்துச் சொல்பவர். படிப்பறிவே இல்லாத பட்டிக் காட்டுக் குப்பாயி. பெயரை நவீனமாக மாற்றிக்கொண்டு முட்டாள்தனத்தின் சிகரமாக விளங்குபவர்.
raman

6 கருத்துகள்:

  1. முட்டை போடும் கணக்கு வாத்தியார்,
    [வீட்டுப் பாடம்] செய்யாத தவறுக்கு தண்டிக்கப் பெற்ற மாணவன்
    கரண்டி, அப்பளக் குழவி இவற்றை கணவனை தாக்க உபயோகிக்கும் மனைவி
    டீச்சருக்குக் காதல் கடிதம் எழுதும் மாணவன்
    நகரத்தில் இருக்கும் ஒவ்வொரு திரை அரங்கிற்கும் நோக்கியா GPS-ஐ விட துல்லியமாக வழி சொல்லும் மாணவர்.
    சுருட்டிய படுக்கை தகரப் பெட்டி சகிதம் பட்டணத்துக்கு வரும் கிராம வாசி
    இன்னும் எத்தனையோ விடு பட்டுப் போன மாதிரி இருக்கிறதே?

    பதிலளிநீக்கு
  2. //டீச்சருக்குக் ......கடிதம் எழுதும் மாணவன்//
    நேற்று பாட்டிக்கும் அர்ஜுனுக்கும் இடையே உரையாடல்:
    பா: அர்ஜுன் என்ன பண்றே?
    அ: படம் போடறேன்
    பா: என்ன படம்?
    அ: சந்திரயான் ராகெட்
    பா: அதென்ன கீழே?
    அ: ஸ்மோக்
    பா: நீ நல்லா சொல்லித் தரே. பெரியவனாகி டீச்சர் ஆகப் போறியா?
    அ: இல்லை. மாஸ்டர் ஆகப் போறேன்.

    ஆக, டீச்சர் என்றால் [லில்லி புஷ்பம் போல்] புடவை கட்டிக் கொண்டு வர வேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. நகைச்சுவையான ஆராய்ச்சி!

    பதிலளிநீக்கு
  4. தீபாவளி - பொங்கல் ஜோக்குகளை வரிசையில் சேர்க்க மறந்து விட்டீர்களே! - முன் காலங்களில் தீபாவளி மலர்களில் 'சுதர்சன்' ஜோக் இடம் பெறாத மலர்களே இருக்காது.

    பதிலளிநீக்கு
  5. //நகைச்சுவையான ஆராய்ச்சி!//
    நகைப்புக்குரிய ஆராய்ச்சி என்னாமல் நகைச்சுவையான என்றீர்களோ?

    பதிலளிநீக்கு
  6. சிலவற்றை என்று குறிப்பிட்டுச் சொன்னதன் காரணம் இன்னும் பல இருக்கின்றன என்பதுதான். உதாரணமாக காதலன் காதலி ஜோக்குகள், ஜோசியர் வாடிக்கையாளர் இன்னும் பலப்பல. ஒரே நோக்குப் பார்வையில் தான் ஒவ்வொரு வகை ஜோக்கும் இருக்கிறது என்பதுதான் வியப்பு. ஏன் ஒரு வீரமான, போரில் ஜெயிக்கக் கூடிய, புறமுதுகு காட்டாத மன்னரை அடித்தளமாக வைத்து ஜோக் செய்ய முடியாதா? , அதுதான் ஆய்வுக்குரிய விஷயம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!