25.6.10

கேன்சர் சில செய்திகள், தடுக்கும் வழிகள்

கட்டுப்பாடில்லாத செல் வளர்ச்சி கேன்சர். பிரிந்து வளர்ந்து கட்டுப்பாடேயில்லாமல் பெருகி உடலின் நார்மல் இயக்கத்தை பாதிக்கிறது. 



லுகேமியா என்பது இரத்தத்தில் செல் பிரிந்து வளருவதால் இரத்த ஓட்டத்தின் இயல்பு இயக்கத்தை பாதிக்கிறது. 
சாதா செல்லின் வேலை உருவாவது வளர்வது பிரிவது, சாவது. ஆனால் கேன்சர் செல்கள் சாவதில்லை. கட்டுப்பாடில்லாமல் பெருகி உடலின் இயக்கத்தை தாறுமாறாக்கி முடிவை வரவழைக்கும்.

ஒவ்வொருவர் உடம்பிலும் கேன்சர் செல்கள் உள்ளன. நமது இயல்பான இம்ம்யூன் சிஸ்டம் அதை தடுக்க வழியற்றுப் போகும்போது அவை கட்டுப்பாட்டை இழந்து வளரத் தொடங்குகின்றன. டாக்டர் டெஸ்ட் செய்து விட்டு உங்கள் உடலில் கேன்சர் செல் இல்லை என்று சொல்லும்போது அவை இல்லை என்று அர்த்தமில்லை. கண்டுபிடிக்கத் தேவையான அளவை அவை இன்னும் அடையவில்லை என்றே பொருள்.

சுற்றுச் சூழல் காரணமாக, பரம்பரையாக, தவறான உணவுப் பழக்கங்களால் என்று பல காரணங்களால் கேன்சர் வருகிறது.

கீமோதெரபி ஆகட்டும், ரேடியேஷன் ஆகட்டும், பாதிக்கப் பட்ட செல்களை அழிக்கிறேன் என்று நல்ல செல்களையும் சேர்த்தே காலி செய்கின்றன. இந்தவகை சிகிச்சைகளில் முதலில் கட்டுப் படுவது போலத் தோன்றினாலும் இதன் பக்க விளைவுகளாலும், அதன் வளரும் வேகத்தாலும் நீண்ட காலப் பயனை அளிப்பதில்லை.மேலும் இந்த சிகிச்சையும், அறுவை சிகிச்சையும் கேன்சர் செல்களை உடைத்து அவை மேலும் மேலும் அதிகமாக வளரவும் மேலும் பல இடங்களிலும் பரவவும் வழி செய்கின்றன.


இவற்றைத் தடுக்க ஒரு வழி கேன்சர் செல்லுக்கு உணவூட்டும் சில உணவுகளைத் தவிர்ப்பதுதான்.

1) சர்க்கரை. : இதை நிறுத்துவதன் மூலம் கேன்சரின் ஒரு முக்கிய உணவை நிறுத்தலாம். இதற்கு பதிலாக என்று எந்த வடிவிலும் எதையும் சேர்க்காமல் இருப்பது நலம்.

2) பால் GI ட்ரேக்டில் mucus உருவாக்குகிறது. இது கேன்சர் செல்லின் முக்கிய உணவு. (இதுவுமா?) எனவே பாலை தவிர்பப்தன் மூலம் mucus உருவாவதைத் தடுத்து கேன்சர் செல்லின் இன்னொரு முக்கிய உணவையும் தடை செய்யலாம். இனிப்பில்லாத சோயா பால் உபயோகிக்கலாம்.

3) அசைவத்தில் பீஃபும், போர்க்கும் சாப்பிடுவதைத் தவிர்த்து, மீனும் சிறிதளவு சிக்கனும் சாப்பிடலாம். இறைச்சி ஆபத்தான பாரசைட்டுகளையும், ஆண்டி பயோடிக்குகளையும் கொண்டிருப்பதால் கேன்சர் பேஷண்டுகள் இவற்றை தவிர்ப்பது நலம்.

4) 80% காய்கறிகளும் அதன் சாறும் கலந்த உணவு, விதைகள் நார்ச்சத்து கலந்த உணவு நலம். இவை நல்ல என்சைம்களைக் கொண்டுள்ளதால் சுலப ஜீரணத்துக்கும், (ஒன்றரை நிமிஷத்தில் ஜீரணமாகும்) நல்ல செல்களுக்குச் சிறந்த உணவாகவும் உதவுகின்றன. 20% வேண்டுமானால் சமைத்த உணவு உட்கொள்ளலாம்.

5) இந்த மாதிரி நல்ல செல்கள் வளர வெஜிடேபிள் சூப் சாப்பிடலாம். மேலும் பச்சைக் காய்கறிகள் தினம் இரண்டு மூன்று முறை சாப்பிடலாம். ஏனெனில் என்சைம்கள் நாற்பது டிகிரி செண்டி கிரேடில் அழிக்கப் பட்டு விடுகின்றன.

6) இறைச்சியில் உள்ள ப்ரோட்டீன் ஜீரணமாவது கடினம் என்பதால் தங்கி விடும் ப்ரோட்டீன் விஷத் தன்மையை உருவாக்குகின்றன. கேன்சர் செல் சுவர்கள் ப்ரோட்டீன்களால் உருவானது. இறைச்சியைக் குறைத்து ப்ரோட்டீனைத் தவிர்ப்பதால் என்சைம்களுக்கு போராட அதிக வாய்ப்பு கிடைக்கிறது. ப்ரோட்டீன் செல் சுவர்களைத் தாக்கும் வாய்ப்பு அதிகமாகிறது.

7) ஆண்டி ஆக்சிடன்ட்ஸ், மினரல்கள், சில விட்டமின்கள் போன்றவை உடம்பில் உள்ள நோய் எதிர்ப்புத் தன்மையை தூண்டி, கேன்சரை அழிக்கும் செல்களுக்கு உதவி செய்கின்றன. விட்டமின் E உடலின் இயல்பான செல் வளர்ந்து பிரிந்து அழியும் தன்மையை வளர்க்கின்றன.

8) சற்று வித்யாசமான கோணம்: கோபம், மன அழுத்தம், மன்னிக்க மறுப்பது போன்ற குணங்கள் மன இறுக்கத்தை ஏற்படுத்தி ஒரு வித அமிலத் தன்மையை உடலில் உருவாக்குகின்றன. இவை கேன்சர் செல்களுக்கு அல்வா போன்ற பின்னணி. சந்தோஷம், அன்பும் காதலும் இணைந்த வாழ்வு, எதிர்மறை சிந்தனைகள் இன்றி வாழ்தல், ஆகியவை உடலின் ஆரோக்யத்தைக் கூட்டி இந்த செல்களை வளர விடாமல் செய்கின்றனவாம்.

9) சீரான உடற்பயிற்சிகள், சுவாசப் பயிற்சிகள் உடலின் செல்கள் வரை ஆக்சிஜனை ஊட்ட வல்லது. இந்த ஆக்சிஜன் பின்னணியில் கேன்சர் செல்கள் வளர சிரமப் படும் என்பதால் இவையும் நல்லது. 

21 கருத்துகள்:

Chitra சொன்னது…

8) சற்று வித்யாசமான கோணம்: கோபம், மன அழுத்தம், மன்னிக்க மறுப்பது போன்ற குணங்கள் மன இறுக்கத்தை ஏற்படுத்தி ஒரு வித அமிலத் தன்மையை உடலில் உருவாக்குகின்றன. இவை கேன்சர் செல்களுக்கு அல்வா போன்ற பின்னணி. சந்தோஷம், அன்பும் காதலும் இணைந்த வாழ்வு, எதிர்மறை சிந்தனைகள் இன்றி வாழ்தல், ஆகியவை உடலின் ஆரோக்யத்தைக் கூட்டி இந்த செல்களை வளர விடாமல் செய்கின்றனவாம்.


..... 8) சற்று வித்யாசமான கோணம்: கோபம், மன அழுத்தம், மன்னிக்க மறுப்பது போன்ற குணங்கள் மன இறுக்கத்தை ஏற்படுத்தி ஒரு வித அமிலத் தன்மையை உடலில் உருவாக்குகின்றன. இவை கேன்சர் செல்களுக்கு அல்வா போன்ற பின்னணி. சந்தோஷம், அன்பும் காதலும் இணைந்த வாழ்வு, எதிர்மறை சிந்தனைகள் இன்றி வாழ்தல், ஆகியவை உடலின் ஆரோக்யத்தைக் கூட்டி இந்த செல்களை வளர விடாமல் செய்கின்றனவாம்.

........ கண்டிப்பாக எல்லோரும் கடைபிடிக்க வேண்டிய ஒன்று. பயனுள்ள பதிவு.

விஜய் சொன்னது…

இதுவரை படித்த கேன்சர் பதிவுகளில் இது வித்தியாசமானது.

வாழ்த்துக்கள் எங்களுக்கு

விஜய்

Madhavan Srinivasagopalan சொன்னது…

very very informative.

One additional point, if u do not have dark (black) skin, avoid direct exposure to Sunlight for continous / longer period. Ofcourse for most Indians this is not a big issue... This information is particular for Whites in European countries, America etc.

vasu balaji சொன்னது…

மிக மிக அவசியமான பகிர்வு. நன்றி ஸ்ரீராம்.

தமிழ் உதயம் சொன்னது…

உணவு கட்டுப்பாடும் உள்ள கட்டுப்பாடும் இருந்தால் கான்சர் - சற்றே எட்டி போகும். பொழூது போக்குக்கு நடுவே ஒரு பயனுள்ள இடுகை.

எல் கே சொன்னது…

arumai anna

geetha santhanam சொன்னது…

பயனுள்ள கருத்துக்கள்.--கீதா

குரோம்பேட்டைக் குறும்பன் சொன்னது…

புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு நுரையீரல் புற்று நோய் வர வாய்ப்புகள் மிக மிக மிக அதிகம். இது பற்றி ஏன் ஒன்றும் சொல்லவில்லை?

Gokulakrishnan சொன்னது…

fantastic article in dirrent view and informations than whichever published earlier @ cancer.Pl add few more scientific details..,

rgds
Gokul
http://saigokulakrishna.blogspot.com

Gokulakrishnan சொன்னது…

fantastic article in dirrent view and informations than whichever published earlier @ cancer.Pl add few more scientific details..,

rgds
Gokul
http://saigokulakrishna.blogspot.com

ஹேமா சொன்னது…

மிக மிக மிகப் பயனுள்ள பதிவு.

meenakshi சொன்னது…

நல்ல பயனுள்ள பதிவு. நன்றி!

அப்பாதுரை சொன்னது…

புற்று நோய் பற்றிய உபயோகமான விவரங்களுக்கு நன்றி.

'தடுக்க வேண்டும்' என்று நினைக்கும் அதே நேரம் 'குணப்படுத்த வேண்டும்' என்றும் நினைக்க வேண்டும். புற்று நோயைத் தடுக்க முடியும் என்று நினைக்கும் கட்சி தோற்று வருகிறது. இது என் கருத்து. கேட்பதற்கும் செறிப்பதற்கும் கடினமான செய்தி என்றாலும் உண்மை நிலை இது தான். அடுத்த இரண்டு தலைமுறைகளில் புற்று நோய் ஒவ்வொரு மனிதரையும் தாக்கும் சாத்தியம் இருக்கிறது. அதே நேரம், நோயை அதன் தோற்றத்திலேயே கண்டு சிகிச்சை செய்யும் அளவுக்கு மருத்துவ வளர்ச்சியும் பெருகச் சாத்தியம் இருக்கிறது.

வாழ்க்கை முறைகளை மாற்றி, கேன்சரைத் தடுப்போம் என்பது இனி நடைமுறைக்கு ஒவ்வாது. அந்த ரயில் எப்போதோ கிளம்பி விட்டது. நம்முடைய பாட்டனார் காலத்திலேயே கிளம்பி விட்டது - அவர்களுக்கும் தெரியவில்லை என்பது உண்மை. குற்றம் சொல்ல முடியாது.

தொழில் வளர்ச்சி, தொழில் நுட்ப வளர்ச்சி, பரவலான சமுதாய நோக்கு இவற்றின் வெளிப்பாடுகளில் நல்லவையும் உண்டு தீயவையும் உண்டு. இன்றைக்கு genetically engineered வகையில் பால், பழத்திலிருந்து அரிசி, சோப்பு வரை எல்லாவற்றையும் பயன்படுத்துகிறோம். சொக்காயிலிருந்து செல் போன் வரை எல்லாவற்றிலும் செயற்கை. ஊட்டச் சத்தில் கூட செயற்கை. இவையெல்லாவற்றையும் ஒதுக்க முடியுமா? நடக்கிற கதையா? விலைவாசியும் வரியும் எப்படி நிச்சயமோ அப்படி ஒரு நிச்சய சாத்தியமாகத் தான் கேன்சர் போன்ற நோய்களையும் ஏற்க வேண்டும்.

தவிர்க்க வேண்டிய அறிவை பரப்பும் அதே நேரத்தில் அதை விடப் பன்மடங்கு அறிவும் பணமும் நோயைக் குணப்படுத்தத் தேவையான வழிமுறைகளைக் கண்டுபிடிக்கச் செலவழிக்க வேண்டும். 2050 வாக்கில் உலகின் 98% குழந்தைகள் பிறக்கும் பொழுதே கண்ணாடி அணிய வேண்டிய அளவு கண் பார்வை பாதிக்கப்படும் என்று வருடக் கணக்காகச் சொல்லிக் கொண்டு வருகிறார்கள். 2070 வாக்கில் இயற்கையான சாப்பாட்டு வகை உலகில் எதுவுமே இராதென்றும் (ஐயா, தண்ணீர்?) அதையொட்டி வாழ்க்கை முறை மாற்றங்களைத் திட்டமிட ஐக்கிய நாட்டுக் குழு இருக்கிறது. ஆப்பிரிக்க, சீன, இந்திய நாடுகளின் தொழில் வளர்ச்சியினால் உலகமெங்கும் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்று WHO அறிவுப்புகளில் படிக்கலாம். (கேன்சர் பரவும் சாத்தியம் முதல் ஐந்து தீய விளைவுகளில் குறிப்பிடப் பட்டிருக்கிறது).

என்னடா இவன், காசு கொடுக்காத குடுகுடுப்பை மாதிரி சொல்கிறானே என்று நினைக்க வேண்டாம். நம்மிடம் அறிவு இருக்கும் வரை நம்மால் எதையுமே சாதிக்க முடியும். கண்மூடித்தனங்களையும் செயற்கை எல்லைகளையும் பொருட்டாக எண்ணாதிருக்கப் பழக வேண்டும். கேன்சர் போன்ற உலக அளவில் பாதிக்கக் கூடிய கிருமிகளைக் கண்டுபிடிக்க கூட்டாக முயற்சி செய்ய வேண்டும். உலக அரசுகள் இதற்கு நேரமும் பணமும் ஒதுக்க வேண்டும். (முதலில் இந்த சண்டையை முடித்து விட்டு வருகிறேன் என்கிறார் ஒபாமா).

கேன்சர் கிருமி வகைகள் நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. ஒவ்வொரு கேன்சருக்கும் ஒவ்வொரு தனி ஆராய்ச்சி, பிரிவு என்று செலவும் முயற்சியும்...ஆயாசம். இத்தகைய தனித் தீர்வுகள் தேவை என்றாலும், இது போன்ற harbingerகளைக் கண்டறிய தேச, அறிவாலய, ஆராய்ச்சி நிறுவன, பொதுமக்கள் அளவில் கூட்டுறவு அமைத்து செயல் பட வேண்டிய அவசியத்தை உணர வேண்டும்.

விடுங்கள், அடுத்த தலைமுறையைப் பற்றி என்றைக்கு நினைத்திருக்கிறோம், இன்றைக்குப் புதிதாக நினைக்க?

அன்புடன் நான் சொன்னது…

மிக பயனுள்ள தகவலை சொல்லியிருக்கிங்க... மிக்க நன்றிங்க, அதிலும்.....

//
8) சற்று வித்யாசமான கோணம்: கோபம், மன அழுத்தம், மன்னிக்க மறுப்பது போன்ற குணங்கள் மன இறுக்கத்தை ஏற்படுத்தி ஒரு வித அமிலத் தன்மையை உடலில் உருவாக்குகின்றன. இவை கேன்சர் செல்களுக்கு அல்வா போன்ற பின்னணி. சந்தோஷம், அன்பும் காதலும் இணைந்த வாழ்வு, எதிர்மறை சிந்தனைகள் இன்றி வாழ்தல், ஆகியவை உடலின் ஆரோக்யத்தைக் கூட்டி இந்த செல்களை வளர விடாமல் செய்கின்றனவாம்.//

இது மிக வியப்பாக உள்ளது... கவனமுடன் இருப்போம்.....

எங்கள் சொன்னது…

வாங்க Chitra.... நன்றி. அப்படியே கீழே அப்பாதுரை கமெண்ட்டும் படியுங்க...!

நன்றி விஜய்.

நன்றி Madhavan.

வாருங்கள் வானம்பாடிகள், நன்றி

சுருக்கமாகச் சொல்லி விட்டீர்கள் தமிழ் உதயம், நன்றி.

வாங்க LK, நன்றி.

நன்றி geetha.

ஆமாம் குரோம்பேட்டை குறும்பன்... விட்டுப் போச்சுதான். அதுதான் நீங்கள் சொல்லி விட்டீர்களே...!

வாங்க Gokulakrishnan. நன்றி.

வாங்க ஹேமா, நன்றி.

வாங்க meenakshi, நன்றி.

வாங்க அப்பாதுரை, நீங்கள் சொல்பவை உண்மை. ஆனாலும் பாசிடிவ் ஆக ஏதாவது சொல்லலாமே என்றுதான்... நூறாண்டுகளுக்கு முன் TB க்கு மருந்து கண்டுபிடிக்காத நிலையில் ராமனுஜத்தையும் விவேகனந்தரையும் பறிகொடுத்தோம். இனி வரும் காலங்களில் கேன்சருக்கு யாராவது மருந்து கண்டு பிடித்து விட மாட்டார்களா என்ன? நோய் நாடி நோய் முதல் நாடி என்றார் வள்ளுவர். நோய் வர ஆரம்பித்து விட்டது. தீர்வு கடும் ஆராய்ச்சிக்குப் பின்தான் வரக் கூடும்.

வருக கருணாகரசு, நன்றி.

ரவிஷா சொன்னது…

மிக மிக பயனுள்ள தகவல்கள்!

அமெரிக்காவில் ஒன்று கண்டுபிடித்திருக்கிறார்கள் (ஆராய்ச்சியின்படிதான்)! அதாவது, கான்சர் பேஷண்டுகள் பிரார்த்தனை செய்தால் செல்களின் எண்ணிக்கை வெகுவாக குறைகிறதாம்!

எனக்குத் தெரிந்த ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி அவர் கணவருக்கு colon cancer வந்து, பிரார்த்தனை செய்து (சிகிச்சையும்தான்) குணமானதாக சொல்வார்!

Prayer too heals!

மதுரை சரவணன் சொன்னது…

கேன்சர் பற்றி நல்ல கருத்துக்கள் . உணவு முறை நல்ல விளக்கம் . வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி.

ஜெஸ்வந்தி - Jeswanthy சொன்னது…

பயனுள்ள பதிவு

சாய்ராம் கோபாலன் சொன்னது…

சிகரெட் பிடிப்பதை விட்டு எட்டு திங்களுக்கு மேல் ஆனாலும் நீங்கள் சொல்லும் எட்டாம் செய்தியில் வரும் போலிருக்கே ? நீங்கள் சொல்லிய எல்லாம் எனக்கிருக்கே.

எங்கள் குடும்பத்தில் புற்றுநோய் வருவது ஒன்றும் கம்மி இல்லை. கடவுள் என்ன எழுதி வைத்து இருக்கின்றார் பார்ப்போம்.

சாய்ராம் கோபாலன் சொன்னது…

// அப்பாதுரை said...

சொக்காயிலிருந்து செல் போன் வரை எல்லாவற்றிலும் செயற்கை//

எனக்கு தெரிந்து தாய்ப்பாலை தவிர எல்லாமே செயற்கை தான் இப்போது.

எங்கள் சொன்னது…

வாங்க ரவிஷா.... இன்னும் ஒரு தகவல் சொல்லி இருக்கிறீர்கள். நன்றி.

நன்றி மதுரை சரவணன்.

வருக ஜெஸ்வந்தி. நன்றி.

நமக்கு எல்லாம் ஒன்றும் வராது என்று நம்புவோம் சாய்ராம்...பாசிடிவ் தாட்ஸ்...! "தாய்ப்பால் தவிர..." என்ற உங்கள் வரிகளை ரசித்தோம்.