சனி, 19 ஜூன், 2010

உள் பெட்டியிலிருந்து...


இதயக் கதவில் உள்ளே வராதே என்று எழுதி வைத்தேன்...
காதல் உள்ளே வந்து புன்னகைத்தது..
"எனக்குப் படிக்கத் தெரியாது" (யாரோ)


எல்லா இதயத்திலும் வலி இருக்கிறது
வெளிப்படும் விதம்தான் மாறும்.
சிலர் கண்களில் மறைக்கிறார்கள்...
சிலர் புன்னகையில்.....(யாரோ)
=========================================

நம்பிக்கை நேசத்தை விட உயர்ந்த விஷயம். நேசிப்பவர்களை நம்ப முடிகிறதோ இல்லையோ, நம்புபவர்களை எளிதாய் நேசிக்க முடியும்.

==============================================

தத்துவம்...

புதிதாய்ப் பிறந்த குழந்தை பேசக் கற்றுக் கொள்ள இரண்டு வருடம் ஆகிறது. ஆனால் ஒரு வாழ்நாள் முழுதும் வாழ்ந்தும் என்ன பேசக் கூடாது என்று கற்றுக் கொள்வதில்லை.
================================================


பார்வையாளர்கள் ஜோக்கரை சிரிப்பு மூட்டுபவனாகப் பார்த்தாலும் ஜோக்கர் தன்னை ஒரு படைப்பாளியாகத்தான் உணர்வான். வாழ்க்கை என்னும் ஆட்டத்தில் நாம் நம்மைப் பார்ப்பதும் மற்றவர்கள் நம்மைப் பார்ப்பதும் ஒரே மாதிரி இருக்காது.

==================================================

கட்டளை..
எனக்கு முன்னால் நடக்காதே..
உன்னைத் தொடர முடியாமல் போகலாம்.
எனக்குப் பின்னால் நடக்காதே..
நான் உன்னைப் பார்க்கவும்,
வழிநடத்தவும் முடியாமல் போகலாம்..
என் கூட இணையாக நட..
நண்பனாக இருக்கலாம்...
==========================================

நண்பனின் வாக்குறுதி..
என்னுடைய அக்கறை என் இதயத்தில் இருக்கும், வார்த்தைகளில் அல்ல...
என்னுடைய கோபம் வார்த்தைகளில் இருக்கும், இதயத்தில் அல்ல...
==========================================
நட்பு என்னும் மருந்து...

அன்பு எந்தக் காயத்துக்கும் மருந்தாகலாம். ஆனால் அன்பினால் உண்டான காயத்துக்கு எந்த உலகிலும் மருந்து இல்லை.
==============================================

உரக்கச் சிரித்து, தயக்கமில்லாமல் பேசிக் கொண்டு, நம் முக பாவங்கள் எப்படி மாறுகின்றன என்று கவலைப் படாமல் இயல்பாக உணர்ச்சிகளை வெளிப் படுத்திக் கொன்டிருந்தால்...நீங்கள் உங்கள் அன்பான நண்பர்களுடன் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
=======================================================

காலமும் நேரமும் சிலரை மறக்கடித்திருக்கலாம்...ஆனால் சிலர் மட்டும்தான் காலம், நேரம் போவதையே மறக்கச் செய்கிறார்கள். அவர்களை உயிர் நண்பர்கள் என்கிறோம்.
=============================================================

17 கருத்துகள்:

  1. உள் பெட்டியிலிருந்து வெளியில் எடுத்து நட்புடனும் நேசத்துடனும் பகிர்ந்து கொண்டிருக்கும் கருத்துக்கள் யாவும் அருமை. நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  2. நல்ல தொகுப்பு..... ஒவ்வொன்றிலும் நல்ல கருத்துக்கள்! பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. அய்யோ ஸ்ரீராம் அரிக்குது....
    நீங்க இவ்ளோ நல்லவரா....? :)

    பதிலளிநீக்கு
  4. டிரங்கு பெட்டி மாதிரி உள் பெட்டியா ??

    பதிலளிநீக்கு
  5. தத்துவம்... உண்மையை சொன்னது. ஏனைய கருத்துகளும் அருமை.

    பதிலளிநீக்கு
  6. எல்லாம் அருமை ஸ்ரீராம்.)

    பதிலளிநீக்கு
  7. எல்லாம் எல்லாம் எல்லாமே ஒவ்வொரு விஷயம் சொல்லுது.நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  8. சீரியசா ஒரு பதிவா.. ம்.. ம்.. நடத்துங்க நடத்துங்க.. நல்லாவே இருக்குது..

    பதிலளிநீக்கு
  9. அருமையான கருத்துக்கள்.--geetha

    பதிலளிநீக்கு
  10. நல்ல தொகுப்பு. படிக்க இனிமையாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
  11. எல்லாமே அருமை. நன்றி!

    பதிலளிநீக்கு
  12. //நம்பிக்கை நேசத்தை விட உயர்ந்த விஷயம். நேசிப்பவர்களை நம்ப முடிகிறதோ இல்லையோ, நம்புபவர்களை எளிதாய் நேசிக்க முடியும்.//

    நம்பாதவர்களை நேசிக்கிற போது நாம் உன்னதத்தை அடைய முடியும். வாழ்க்கையில் சிலர் நம்மை எப்போதும் சந்தேகக் கண்ணோட்டத்துடனே பார்த்துக் கொண்டிருப்பார்கள். நமக்கு அவர்கள் மேல் சந்தேகமெ இல்லை என்று நிரூபிக்க நேசம்தான் சிறந்த வழி.

    http://kgjawarlal.wordpress.com

    பதிலளிநீக்கு
  13. //புதிதாய்ப் பிறந்த குழந்தை பேசக் கற்றுக் கொள்ள இரண்டு வருடம் ஆகிறது. ஆனால் ஒரு வாழ்நாள் முழுதும் வாழ்ந்தும் என்ன பேசக் கூடாது என்று கற்றுக் கொள்வதில்லை.//

    Super one

    பதிலளிநீக்கு
  14. //"உள் பெட்டியிலிருந்து..."//

    எடுத்தவை எல்லாமே இப்பொழுது என்னுள் ...
    நன்றி, ஸ்ரீராம்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!