புதன், 30 ஜூன், 2010

மீண்டும் ஒரு சுவாரஸ்யமான கேள்வி

இதற்கு முன்பு, பயன்படக் கூடிய ஜெம கிளிப் கொடுத்து, வேறு பயன்கள் எழுத சொல்லியிருந்தோம். வாசகர்கள் கலக்கிவிட்டீர்கள். அதிலிருந்து வெவ்வேறு சிந்தனைகள் எப்படி விஸ்தரித்துக்கொண்டு போகலாம் என்றும் பார்த்தோம். ஒன்றை ஆதாரமாக வைத்து, வேறுபட்ட சிந்தனைகளை அதிலிருந்து எப்படி கொண்டு வரலாம் என்று தெரிந்துகொண்டோம். 

இப்போ நாங்க கொடுக்கப் போகும் பயிற்சி, கொஞ்சம் வித்தியாசமானது. பயன்படாது என்று ஒதுக்கப்பட்ட ஒரு பொருளை எவ்வளவு சாதுரியமாக வேறு வகைகளில் பயன் படுத்தலாம் என்பதற்கான பயிற்சி இது. 

இதோ இந்தப் படத்தைப் பாருங்கள்:

இந்த சி டி யை, எந்த கம்பியூட்டராலும் / சி டி ப்ளேயர் / டி வி டி ப்ளேயராலும் திறக்க முடியாது. இதை எந்த கம்பார்ட்மெண்டில் போட்டாலும், உடனே "இந்தக் கோப்பைத் திறக்க இயலாது" என்றோ அல்லது "வேறு ஏதாவது நல்ல சி டி போடுங்க!" என்றோ மானிட்டரில் எழுத்துக்கள் வரும். அதாவது, இது, ஓடி ஓடி, உழைத்துத் தேய்ந்த சி டி. பத்து ரூபாய்க்கு வாங்கியது, இப்போ பத்து பைசாவிற்கு கூட யாரும் வாங்கிக்கொள்ள மாட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம். 

இப்போ நீங்க செய்ய வேண்டியதெல்லாம் ரொம்ப சுலபமான விஷயம்தான். நேர் உபயோகம் இல்லாத இந்த சி டி யை, என்னென்ன வகைகளில் பயன் படுத்தலாம். இதன் மதிப்பை உயர்த்த என்னவாக இதைப் பயன் படுத்தலாம்? இதனுடைய மதிப்பை எவ்வளவு அதிகபட்சம் உயர்த்தமுடியும்? பயன்படாத சி டி க்கு அதிக பட்ச மதிப்பைக் கொண்டு வர சுலபமான வழிகள் என்ன என்று சொல்பவருக்கு அ ப தி (அபாரப் படைப்பாற்றல் திறன்) பட்டம் வழங்கப்படும். 

இந்தப் பயிற்சியிலிருந்து மதிப்பீடு பொறியியல் / மதிப்பீட்டியல்? (Value Engineering) என்னும் மிகவும் பயன்படும் ஒரு சமாச்சாரத்தை நாம் பார்க்கப் போகிறோம். இது வாழ்க்கையில் நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயம். ஆகையால், படிப்பவர்கள் எல்லோரும் இந்தப் பயிற்சியில் பங்குபெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். 

26 கருத்துகள்:

 1. ////இதனுடைய மதிப்பை எவ்வளவு அதிகபட்சம் உயர்த்தமுடியும்? பயன்படாத சி டி க்கு அதிக பட்ச மதிப்பைக் கொண்டு வர சுலபமான வழிகள் என்ன ////


  ......ஜாக்பாட் ஷோவை குஷ்பூ விட்டு விட்டு போய்ட்டதால, அந்த ஜாக்கெட் தைக்கிற tailor சும்மா இருக்காராம். அவர்கிட்ட, இதை கொடுத்தா..... தங்க necklace , வைரக்கல் எல்லாம் பதிச்சு.... "செம்மொழி மாநாடு மூலமாக தமிழ் சிறக்க செய்த வித்தகர்" என்று கீழே பொரித்து, குஷ்பூ கையாலேயே தலைவருக்கு, "சின்ன கேடயமாக" வழங்கி விடலாம்... விலைமதிப்பு கூடி போகாது? ..................எப்பூடி?

  பதிலளிநீக்கு
 2. என் பள்ளி ஆசிரியர் ஒருவர் இம்மாதிரியான சி.டி.க்களை சந்தையில் பொருக்கி எடுத்து , அதன் வெளி பக்கத்தில் அம்மா படம் இருக்கும் , பளபள்க்கும் பக்கத்தில் கருப்பு, சிவப்பு நிற மார்க்கர் கொண்டு அ என்ற எழுத்தை மிக பெரிதாக எழுதி இருந்தார். பார்க்க அழகாக அதை வகுப்பறையில் தொங்க விட்டவுடன் வகுப்பறை மெருகேறி இருந்தது. இதே போன்று ஆங்கில எ எழ்த்துக்கு ஆப்பில் போன்று படங்கள் ... திருவள்ளுவர் படம் , பின் பக்கம் திருக்குறள் என எழுதி தொங்க போட்டுள்ளார். நல்ல கற்பனை.

  பதிலளிநீக்கு
 3. சிடியின் ஏதாவது ஒரு விளிம்பின் அருகில் துளையிட்டு அதில் சின்னவளையம் மாட்டி பொண்ணுங்க காதுகளில் மாட்டும் வளையமா மாட்டிக்கிடலாம்...

  :)

  பதிலளிநீக்கு
 4. மெல்லிய நூலில் கட்டி கண்ணாடிக் கதவுகள் யன்னல்களில் மாட்டிவிட்டால் வெளியில் இருந்து பார்க்க அழகாயிருக்கும்.

  வசந்த் சொன்னதும் நல்லாயிருக்கு !

  பதிலளிநீக்கு
 5. சின்ன குழந்தைகளுக்கு Flashcards மாதிரி உபயோகிக்கலாம். வேண்டாத சி டியில், சி டியில் எழுதும் பேனாவை உபயோகித்து தமிழ் மற்றும் ஆங்கில அரிச்சுவடிகளை எழுதி, வண்ண வண்ண ஸ்டிக்கர்களை அதற்கேற்றவாறு ஒட்டி, அவர்களுக்கு சுவாரசியம் உண்டாக்கி பாடங்களை சொல்லி கொடுக்கலாம். வாய்பாடுகளையும் எழுதலாம். அவர்கள் சரியாக சொன்னவுடன், அவர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் 'well done', 'fantastic' இது போன்ற ஸ்டிக்கர்களை சி டியின் மறு பக்கத்தில் ஒட்டி அவர்களை உற்சாகப்படுத்தலாம்.

  பதிலளிநீக்கு
 6. //அதன் வெளி பக்கத்தில் அம்மா படம் இருக்கும்//

  பின் இரண்டு முதல் நான்கு வரை முறையே திராட்சை, முந்திரி, கழுதை படம் கூட மாட்டியிருப்பாரே!

  பதிலளிநீக்கு
 7. மதுரை சரவணன், நான் இதில் வந்த பின்னூட்டங்களை படித்து பார்க்காமலே, என்னுடைய பின்னூட்டதை பதிவு செய்து விட்டேன். இப்பொழுது படித்தபோதுதான் நீங்கள் எழுதி இருப்பதையே நானும் எழுதி இருப்பதை பார்த்தேன். இனி வேறு எதாவது யோசனை வருகிறாதா என்று பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 8. சிடியில் மஞ்சள்
  வர்ணம் அடித்து,அதில் நீல மயில் வரைந்து அதன் இறகுகளில் பச்சை வளைகோடுகள் போட்டால் தேசிய சின்னமாச்சு . கொலுவில் வைக்கலாம்.
  சிறு மணிகளை*கிண்கிணி) ஒட்ட வைத்து காற்றடிக்கும் இடத்தில் ஒரு மெல்லிய கயிற்றில் தொங்கவிட்டால் இனிய நாதம் கேட்கும்.

  பதிலளிநீக்கு
 9. //அம்மா படம் இருக்கும் , பளபள்க்கும் பக்கத்தில் கருப்பு, சிவப்பு //

  கருப்பு, சிவப்பு, அம்மா -- எதோ குறையுதே.. ஆங். 'அண்ணா' (வெள்ளை)

  பதிலளிநீக்கு
 10. சி.டி யை ஒரு தடியினை ('7 ' போன்ற வடிவமுள்ள மூங்கில் குச்சி ) பயன்படுத்தி குழந்தைகள் உருட்டி விளையாடலாம்.

  பதிலளிநீக்கு
 11. 1:Blank cd label A4 size ஒரு பக்கத்துக்கு 2னு கிடைக்கும். அதை வாங்கி ஒட்டிக்கணும்.
  2:நடுவில ஸ்கேல் வச்சு மேல ஒரு மார்க் கீழ ஒரு மார்க் வச்சிட்டு 12, 6 எழுதலாம். குறுக்கா 9,3ம் எழுதிக்கலாம்.
  3.கடிகாரக் கடைகள்ள எலக்ட்ரானிக் வால்க்ளாக் யூனிட் கிடைக்கும். ரூ35 ல இருந்து ரூ50க்குள்ள.
  4. ஸ்குரூவ கழட்டி சொருகி பின்பக்காம் ஸ்குரூ போட்டு முள்ளை வெச்சி அழுத்தினா வால் க்ளாக் ரெடி.
  5. சில யூனிட் சிடி ஓட்டைய விட சின்னதா இருக்கும். பார்த்து வாங்கலாம்.

  பதிலளிநீக்கு
 12. குப்பையில் போடாமல் சேர்த்து வெச்சு Re-cycling பண்ணுவதே சாலசிறந்து. மற்ற எல்லா விதமான அலங்கார பயன் பாடுகளும் அடுத்து வரும் பொங்கல் போகியின் போது எடுத்து களைந்து எறியப்படும் . எனவே இவைகளை சேமித்து Re-cycling செய்ய அனுப்புவதே உத்தமம்.

  பதிலளிநீக்கு
 13. 4 cd-க்களை செல்லோ டேப்பால் ஒட்டி, அடியில் ஒரு cd-யை ஒட்டி பென் ஸ்டாண்ட் ஆக பயன் படுத்தலாம்.

  அரை வட்டமாக வெட்டி இதே போல ஒட்டி, குழந்தைகளின் க்ரேயான் பென்சில்களை போட்டு வைக்கலாம்.

  ஸ்கேல் மாதிரி வெட்டினால் பளப்பளா புக் மார்க் தயார்.

  கோஸ்டர் ஆக பயன் படுத்தலாம்.

  நாலைந்து cd-க்களை ஒன்றன் மேல் ஒன்றாக ஒட்டி மெழுகுவர்த்தி ஸ்டாண்ட் ஆக யூஸ் பண்ணலாம்.

  நூல்கண்டு / உல்லன் நூல் சுற்றி வைக்க ரொம்ப சௌகரியமாக இருக்கும்.

  ரொம்ப பொழுது போகாம இருக்கறவங்க, கடிகாரம் பண்ண முயற்சி பண்ணலாம்.

  அதே மாதிரி துண்டு துண்டா வெட்டிட்டா ஒரு பிளாஸ்டிக் பந்து மேல ஒட்டிட்டு டிஸ்கோ பால் செய்யலாம்.

  ரொம்ப கிரியேட்டிவாக இருந்தால், மைக்ரோவேவ் ஓவன்னில் ஒரு முப்பது செகண்ட் சுடப் பண்ணால் cd வளைஞ்சு கொடுக்கும்.. கையில் க்லோவஸ் மாட்டிக் கொண்டு கண்ணாடி வளைப்பது போல வளைத்து ஜியோமேற்றிக் / இதர உருவங்கள் பண்ணலாம்.

  ரொம்ப ரொம்ப கிரியேட்டிவிட்டியே இல்லாதவங்க கூட, இதை எண்ணெய் கிண்ணி, நெய் பாத்திரம் போன்றவற்றின் கீழ் வைக்கலாம்.. எண்ணெய் மேஜை மேல் படாது..

  (மூச்சு வாங்கறதுன்னா..)

  பதிலளிநீக்கு
 14. படத்தை பாத்துக்கிட்டே இருந்தா கண் கூசறதே... ஒரே பள பளன்னு... :D

  பதிலளிநீக்கு
 15. If you stuck several CDs low down to walls or fence in a shady part of your balcony or garden which reflects sunlight onto the normally shaded flower bed. The extra sunlight makes plants that usually grow in full sun to thrive in the shady area.

  you can make curtains with cds and beads and hang it on small windows

  if you have so many cds left you can stick them to wall and make a wallpaper

  else better recycle it!

  பதிலளிநீக்கு
 16. CDகளை சைக்கிள் பின்புறம் ஒட்டிவிட்டால் இரவுநேரங்களில் அருமையான ரெஃப்ளக்டராக செயல்படும்!

  பதிலளிநீக்கு
 17. நல்ல idea பன்னிக்குட்டி ராம்சாமி.

  பதிலளிநீக்கு
 18. டீ கப் கோஸ்டராக உபயோகப்படுத்தலாம்!

  பதிலளிநீக்கு
 19. நல்ல நல்ல யோசனைகள் வந்துகொண்டு இருக்கின்றன. இதில் கூறப்பட்டுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட யோசனைகளை (இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட யோசனைகளை) ஒன்று சேர்த்து புதிய யோசனை ஒன்றை உருவாக்க முடியுமா என்று பாருங்கள். 'சிவாஜி' படத்தில், ஒரு ரூபாயை வைத்துக் கொண்டு, அதன் மூலம் ரஜினி என்னென்ன சாதிக்கிறார் என்று காட்டுவதைப்போல, பத்து பைசா பெறாத ஒரு சி டி யை எந்த அளவுக்கு ஒரு மதிப்பு மிகுந்த பொருளாக மாற்றமுடியும் என்பதுதான் கேள்வி.

  பதிலளிநீக்கு
 20. // meenakshi said...
  மதுரை சரவணன், நான் இதில் வந்த பின்னூட்டங்களை படித்து பார்க்காமலே, என்னுடைய பின்னூட்டதை பதிவு செய்து விட்டேன். இப்பொழுது படித்தபோதுதான் நீங்கள் எழுதி இருப்பதையே நானும் எழுதி இருப்பதை பார்த்தேன். இனி வேறு எதாவது யோசனை வருகிறாதா என்று பார்க்கிறேன்.//

  இல்லை. இரண்டும் ஒன்று அல்ல. கவலை வேண்டாம்.

  பதிலளிநீக்கு
 21. குரோம்பேட்டைக் குறும்பன்2 ஜூலை, 2010 அன்று AM 8:37

  உபயோகப்படாத சி டி யை, circle template ஆக உபயோகிக்கலாம். உள் வட்டமும் வெளி வட்டப் பகுதியும் முறையே சிறிய, பெரிய வட்டம் வரைய உதவியாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
 22. குரோம்பேட்டைக் குறும்பன்2 ஜூலை, 2010 அன்று AM 8:44

  உபயோகப்படாத சி டி அருமையான முகம் பார்க்கும் கண்ணாடி. உள்ளது உள்ளபடிக் காட்டும் உண்மை விளம்பி.

  பதிலளிநீக்கு
 23. 1 . ஒரு சிறிய வட்டமும் பெரிய வட்டமும் வரைய உதவும்.
  2 . பல சி.டி.க்களைச் சிறு சிறு சதுர வடிவில் வெட்டி ஒரு பெரிய சதுர அட்டையில் ஒட்டிவிட்டால் ஒரு அற்புதமான, வித்தியாசமான கண்ணாடி தயார்.
  3 . வரவேற்பறையில் பல சி.டி.க்களை வரிசையாக ஒட்டி வைத்தல், விருந்தினரை மகிழ்விக்கும்.

  பதிலளிநீக்கு
 24. சி.டி.க்களை நூலால் பிணைத்து திரைச் சீலைபோல் பயன்படுத்தலாம்.

  பதிலளிநீக்கு
 25. - உடைத்து, காத்தாடிக்கு வாட்டிலோடு (பாட்டிலோடு) போடலாம் !!
  - பக்கத்து வீட்டு பட்லிக்கு சிடியை சூரிய வெளிச்சத்தில் காட்டி சில்மிஷம் பண்ணலாம் !!
  - குங்குமம் வைத்து மரத்தில் கயிறில் கட்டினால் நல்லது நடக்கும் என்று ஒரு உண்டியலையும் வைத்து காசு பண்ணலாம். இதை பற்றி விரிவாக சொற்பொழிவு ஆற்ற ஜாமீனில் வெளியே வந்திருக்கும் நித்தியை (நித்தியானந்தம் !!) கேட்டுக்கொள்ளலாம் !!
  - பாத்ரூமில் டைல்ஸில் கண்ணாடி போல் ஒட்டி அம்மணமாய் குளிப்பதை அழகு பார்க்கலாம் (நாம் குளிக்கும்போது தான் !!!)

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!