படைப்பாற்றல் பயிற்சியில் இது அடுத்த நிலை. மிகவும் சுவாரஸ்யமானது. இதுவரை பங்கேற்றவர்கள், ஓரமாக நின்று ரசித்தவர்கள், புதிதாக படிக்க வந்தவர்கள் எல்லோரும் பங்கேற்கலாம்.
பிணைப்பு ஊக்கு பயன்பாடுகளுக்கு இதுவரை வாசகர்கள் அனுப்பிய பயன்கள் ஒவ்வொன்றையும் படியுங்கள். பதிவில் இருப்பவைகளையும், பின்னூட்டத்தில் பலர் அளித்துள்ள பயன்களையும், சுருக்கமாக இரண்டே வார்த்தைகளில் சொல்ல வேண்டும்.
உதாரணத்திற்கு, குரோம்பேட்டைக் குறும்பன் பட்டியலிட்டவைகளை எடுத்துக் கொள்வோம்.
1) பேப்பர் அல்லது அட்டையில் நுண் துளை இட,
2) சுவற்றில் இருக்கும் துவாரம் / விரிசல் இவற்றின் ஆழம கணக்கிட,
3) ஒரு ரப்பர் பாண்டுடன் இணைத்து காடாபுல்ட் அம்பாகவும்,
4) உறுதியான ரப்பர் நீள் துண்டுடன் சேர்த்து ஸ்ப்ரிங் பாலன்ஸ் பாயிண்டர் ஆகவும் உபயோகித்திருக்கின்றேன்.
இந்தப் பயன்களை இரண்டு வார்த்தைகளாக (ஒரு பெயர்ச் சொல், ஒரு வினைச் சொல்?) கீழ்க்கண்ட வகையில் அமைக்கலாம்.
1) துளையிடும் கருவி.
2) ஆழ மானி
3) எய்(யப்படும்) அம்பு
4) (வில்)தராசு முள்
இந்த வகையில் எல்லாப் பயன்களையும், இரண்டிரண்டு வார்த்தைகளாக (யார் வேண்டுமானாலும் யாருடைய பயன் பட்டியலுக்கும்) எழுதலாம். எல்லோரும் பின்னூட்டத்தில் எழுதுங்க. ரிபீட் ஆனாலும் பரவாயில்லை.
எல்லா பயன்களுக்கும் இரண்டு வார்த்தை விளக்கம் கிடைத்தவுடன், படைப்பாற்றலில் மிக முக்கியமான Creative thinking என்னும் அதி சுவாரஸ்ய அடுத்த கட்டத்தைப் பார்ப்போம்.
நீங்க எழுதும் பின்னூட்டம், கீழ்க்கண்ட இந்த விவரங்களுடன் இருந்தால் - நம் அடுத்த கட்டத்திற்கு மிகவும் உதவும்:
பயன் கூறியவர் (உங்கள் பெயர் இல்லை, சென்ற பதிவில் யார் எழுதியதோ - அவர் பெயர்), பயன் எண், உங்கள் இரண்டு வார்த்தைகள்.
அல்லது 'கூறப்பட்ட பயன்' = (உங்கள்) இரண்டு வார்த்தைகள்.
திரும்பவும் சொல்கிறேன், நீங்கள் கூறுகின்ற இரண்டு வார்த்தை விளக்கம், ஏற்கெனவே யாராவது எழுதியதாக இருந்தாலும் நீங்கள் அதை அப்படியே அல்லது சிறு மாற்றத்துடன் எழுதலாம்.
நாம் அடுத்த கட்டத்திற்குப் போக உங்கள் எல்லோருடைய ஒத்துழைப்பும் தேவை.
ஆங்கிலத்தில் கமெண்ட் எழுதுவோரும் இரண்டு வார்த்தை ஃபார்முலாவை பின்பற்றலாம்.
Comments in English are also welcome for the uses already listed.
Example : Chromepet Kurumban's list of uses can be reframed using 2 words only, as follow:
1) Piercing tool
2) Depth gauge
3) Shooting arrow
4) Balance pointer.
(பின் குறிப்பு: கு கு அவர்களே ஆமாம் ஆமாம் இது சீரியஸ் பதிவு - நீங்க புகுந்து குட்டையைக் குழப்பக் கூடாது என்பதால்தான் உங்கள் பயன்களை நாங்களே இரண்டு வார்த்தை வடிவங்களாக மாற்றி இருக்கிறோம். குழப்பமாட்டீர்கள் தானே?)
(தொடரும்)
intha aataiku naan varala
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குகும்மி அடிபோர்கள்வழங்கும் இந்த ட்ராபியை வேண்டுபவர்கள் எடுத்து சென்று வைத்துக்கொள்ளலாம்.
பதிலளிநீக்குhttp://ponmaalaipozhuthu.blogspot.com//
அன்றியும் சிறப்பாக கீழே கண்டுள்ள அணைத்து "கும்மி கொட்டும் " பதிவர்களுக்கும் உங்கள் சார்பாகவே அளிக்கபப்டுகிறது.
பட்டா பட்டி
யூர்கன் க்ருகியர் (மாப்ள)
வேலன் (மாப்ள)
டவுசர் பாண்டி
சேட்டைக்காரன்
மான்குனி அமைச்சர்
Phantom Mohan (பழைய "பருப்பு")
ஜெய்லானி
Muthu
பன்னிகுட்டி ராமசாமி
பனித்துளி சங்கர்
ஜாக்கி சேகர் (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்)
எப்பூடி
எங்கள் Blog
மற்றும் வேண்டிய அணைவருக்கும்
நான் சொன்னவற்றின் சுருக்கும்... இதோ...
பதிலளிநீக்கு1. சூட்கேஸ் மாற்றுச்சாவி
2. பல்குத்தி
3. டேமேஜர் குத்தி
4. கீபோர்ட் சுத்திகரிப்பான்
5. செதுக்கி.
நம்மகிட்டயேவா.... :))
ஊக்கு என்ற ஒன்றை வைத்து, மொத்தத்தில் எங்கள் படைப்பாற்றலை வெளிக்கொணரும் கிரியா "ஊக்கி" நீங்கள் தானோ?
பதிலளிநீக்குஎன்னுடைய அகராதியில்
எங்கள் ப்ளாக் = "ஊக்கு" வைத்து "ஊக்கு"விக்கும் கிரியா "ஊக்கி"
பெயர் சொல்ல விருப்பமில்லை said...
பதிலளிநீக்குஊக்கு என்ற ஒன்றை வைத்து, மொத்தத்தில் எங்கள் படைப்பாற்றலை வெளிக்கொணரும் கிரியா "ஊக்கி" நீங்கள் தானோ?
என்னுடைய அகராதியில்
எங்கள் ப்ளாக் = "ஊக்கு" வைத்து "ஊக்கு"விக்கும் கிரியா "ஊக்கி"
...... :-)
ஊக்கும் ஊக்கி
பதிலளிநீக்குஊகூம் முடியல. ரொம்ப கஷ்டமா இருக்கு. ரொம்ப லேட்டா வந்துட்டேனோ?
பதிலளிநீக்குநான் அனுப்பிய பயன்களுக்கு இரண்டு வார்த்தைச் சுருக்கங்கள் நன்றாக இருக்கின்றன. நன்றி.
பதிலளிநீக்கு