திங்கள், 28 ஜூன், 2010

ஓர் ஆண்டு நிறைவு.

எங்கள் ப்ளாக் வலைப் பூவிற்கு இன்று பிறந்த நாள்.


எங்கள் ஆசிரியர் குழு உறுப்பினர்கள் இந்த ஓராண்டில் எங்கள் ப்ளாக் மூலமாக கற்றுக் கொண்ட விஷயங்களும், பெற்ற அனுபவங்களும் ஏராளமானவை.

இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டு துவக்கத்தில், எங்கள் யாருக்குமே ப்ளாக் எழுதுவது (அதுவும் தமிழில் ப்ளாக் எழுதுவது) எப்படி என்றோ, குறைந்த பட்சம் படிக்கின்ற ப்ளாகுகளுக்கு கமெண்ட் எழுதுவது எப்படி என்றோ ஒருவரைத் தவிர மற்ற யாருக்கும் தெரியாது. தெரிந்த அந்த ஒருவர் கூட 'ஆலை இல்லாத ஊருக்கு ...' கதைதான்! 


வலை நண்பர் ஒருவர், கமெண்ட் கிங் என்று அழைக்கப்பட ஏற்றவர் ஆரம்ப காலங்களில் மிகவும் உதவினார், கையைப் பிடித்து அழைத்துப் போகாத குறையாக பல விஷயங்களில் உதவினார். நன்றி என்று சொன்னால் அவருக்குப் பிடிக்காது. எப்பொழுதாவது சந்தித்தால் அவருக்கு முருகன் இட்லி கடையில் இட்லி வடை விருந்து வைக்கிறோம். 

நாங்கள் கற்றதையும், பெற்றதையும் அவ்வப்போது அந்தந்த ஆசிரியரின் பார்வையில், நடையில் எழுதுகின்றோம்.

தொலைக் காட்சியில், ஒரு விளம்பரத்தில், ஒரு ஹோட்டல் மானேஜர் சொல்லுவார், 'எங்களுக்கு கஸ்டமர் தாங்க கிங்' என்று. (ஆனாலும், அந்தக் கஸ்டமரை, கிங்கை, பாத்திரம் நன்றாகத் துலக்கப் பட்டிருக்கிறதா என்பதைப்  பார்த்து சொல்ல அழைக்கலாமா என்று கேட்பது கொஞ்சம் ஓவர்தான். ஹோட்டல் கஸ்டமர் கேசரி செய்ய உபயோகப்படுத்தப்பட்ட பாத்திரம் சுத்தமாக துலக்கப்பட்டிருக்கிறதா என்பதைப் பார்த்து சொல்வதில் அவருக்கு (கஸ்டமருக்கு) என்ன பயன்?) 


எங்கள் கஸ்டமர்கள், எங்கள் வாசகர்கள்தான். நாங்கள் சப்ளையர். எங்கள் வாசகர்கள், சொல்லுகின்ற கருத்துகள், பதிவுகளுக்குப் போடும் வோட்டுகள், ரியாக்ஷன் பெட்டியில் (வெரி குட் / குட்/ நோ குட் ) செய்கின்ற டிக்குகள் இவை எல்லாமே, எங்களுக்கு நீங்கள் கொடுக்கின்ற முக்கியமான தகவல்கள். எங்கள் பதிவுகளின் உரைகல். தயங்காமல் உங்கள் கருத்துகளை, யோசனைகளைக் கூறுங்கள். 


'எங்கள் ப்ளாக் ஆரம்பித்ததின் நோக்கம் என்ன?' என்று ஒரு நண்பர் நேற்று கேட்டார். எங்கள் ஆசிரியர் குழுவில் உள்ளவர்களில் இரண்டு மூன்று பேர்கள் சிறு வயதிலேயே கையெழுத்துப் பத்திரிகை நடத்தியவர்கள். அது மட்டும் அல்ல பட்டாணி கட்டி வந்த காகிதங்கள், சுண்டல் காகிதங்கள், மளிகை பொருட்கள் கட்டி வருகின்ற காகிதங்கள் முதல், தமிழ் வார, மாதாந்திரப் பத்திரிகைகள் என்று ஏராளமாக படித்து (கண்டது கற்பவன் பண்டிதன் ஆவான் என்று எங்கள் தமிழ் ஆசிரியர் ஒருவர் அடிக்கடி கூறுவார்.) பண்டிதர்  ஆகிக் கொண்டு இருப்பவர்கள், நாங்கள். ஒரு வலைப் பத்திரிகை ஆரம்பிக்க முடியும் என்று தெரிந்தவுடன் எங்களுக்கு ஒரே சந்தோஷம். அதிலும், எங்கள் எழுத்துக்களை படிப்பவர்கள் நூற்றுக் கணக்கில் இருக்கிறார்கள் என்பது இன்னும் சந்தோஷம். 


எங்கள் இலட்சியங்களும் கொள்கைகளும் என்று பார்த்தால், இவைகளைக் கூறலாம்: 


# எங்கள் பதிவுகளால், படிப்பவர்களுக்கு, பத்து பைசாவிற்காவது பயன் இருக்கவேண்டும். 


# வாசகர்களின் சிந்திக்கும் திறனையும், படைப்பாற்றல் போன்ற திறமைகளையும் ஊக்குவிப்போம் .


# வாசகர்கள் விரும்புகின்ற நல்ல விஷயங்களை, நல்ல வகையில், சுவாரஸ்யமாக அவர்களுக்கு அளிப்போம். 


# ப்ளாக் என்பதின் புதுப் பரிமாணங்களை, எங்கள் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வோம். 


# மனிதர்கள் அனைவரும் சமம்; யாரும் உயர்வும் இல்லை, தாழ்வும் இல்லை. ஆகவே தனி மனிதரையோ, ஒரு பிரிவினரையோ, ஒரு இனத்தினரையோ அல்லது மதத்தினரையோ, நாட்டினரையோ வசை பாட மாட்டோம். துதிக்கவும் மாட்டோம்.  


# நகைச் சுவைக்காக சில இடங்களில் சில கிண்டல்கள் இடம் பெறும். ஆனால் அவை தனிப்பட்ட முறையில் யாரையாவது தாக்கியோ அல்லது  தரம் தாழ்ந்தோ நிச்சயம் இருக்காது. 


மீண்டும் சொல்கிறோம் எங்கள் வாசகர்கள்தான் எங்கள் கிங். எங்கள் பதிவுகளைப் பற்றிய உங்கள் கருத்துகளை தயக்கம் இன்றி எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். 
நன்றி. 

29 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள்
    queen இல்லையா ?
    இருந்தாலும் கண்ணியமான எங்கள் ப்ளாகின் வாசகி என்பதில் எனக்கு பெருமை தான் .
    ஆயிரம் பிறை காண வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துக்கள் ஒரு வயதானதற்கு.

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துக்கள் ஒரு வயதானதற்கு.

    பதிலளிநீக்கு
  4. நல்வாழ்த்துக்கள் ஆசிரியர் குழுவின் அத்தனை பேருக்கும். தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  5. நன்றி பத்மா.
    வாசகர்கள் எங்கள் கிங்.
    வாசகிகள் எங்கள் தெய்வங்கள்.
    சந்தோஷம்தானே?

    நன்றி பின்னோக்கி.

    நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  6. //மனிதர்கள் அனைவரும் சமம்; யாரும் உயர்வும் இல்லை, தாழ்வும் இல்லை. ஆகவே தனி மனிதரையோ, ஒரு பிரிவினரையோ, ஒரு இனத்தினரையோ அல்லது மதத்தினரையோ, நாட்டினரையோ வசை பாட மாட்டோம். துதிக்கவும் மாட்டோம். //

    இது எனக்கு பிடித்துள்ளது.

    மேலும் வளர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. ஆர்வமும் வேகமும் குறையாமல் தொடர்ந்து எழுதுவது கஷ்டம். அதுவும் சுவையாக எழுதுவது இன்னும் க. அப்படியும் படிக்க வேண்டும் என்று தூண்டும்படி எழுதுவது இ.க. ஒரு சில மாதங்கள் நூறு பதிவுகள் போடும் அளவுக்கு சூபர் பார்மிலிருக்கும் விஸ்வனாத் போல் எங்கள் பின்னிக்கொண்டிருந்ததைப் பார்த்த போதெல்லாம் வியந்து போவேன். தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள். லட்சியங்கள் கொள்கைகள் இல்லாமல் எழுத வேண்டுகிறேன் :).

    உங்கள் கணிப்பில் சென்ற ஆண்டின் 'எங்கள் டாப் 10' இடுகைகள் என்னவாக இருக்கும்? தெரிந்து கொள்ள ஆசை.
    முருகன் இட்லிக்கடை விலாசமும் தெரிந்து கொள்ள ஆசை.

    வளர்க!

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் வாழ்த்துக்கள்,....

    பதிலளிநீக்கு
  9. நன்றி கக்கு மாணிக்கம், அப்பாதுரை, ஜெட்லி.
    அப்பாதுரை சார். நாங்க அஞ்சு பேரும் ரொம்ப ஒத்துமையா கருத்து வேற்றுமைகள் இல்லாம ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, அனுசரணையாக இருந்துகொண்டிருக்கிறோம் (அல்லது அப்படி இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்.) இதுல டாப் டென் எல்லாம் லிஸ்ட் போட்டால் எங்களுக்குள் மனத்தாங்கல்கள் வந்துவிடும் என்பதால், (நான் எழுதியவைகள் எல்லாமே டாப் டென் என்று உங்கள் காதோடு கூறி, இந்த 'நான்' யாரு என்று கூறாமல் விட்டு)உங்களிடமிருந்து எஸ்கேப் ஆகிறோம்.

    பதிலளிநீக்கு
  10. மென் மேலும் வளர வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  11. ஆண்டு நிறைவு வாழ்த்துக்கள். மேலும் சிறப்பாகத் தொடரவும் வாழ்த்துக்கள்.--கீதா

    பதிலளிநீக்கு
  12. ஆஹா அருமை முதல் வருடத்திற்கு என் முத்தான வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  13. எங்கள் பிளாக் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

    எங்கள் பிளாக் இது என்னோட பிளாக்...
    சியர்ஸ் அப்...

    பதிலளிநீக்கு
  14. மனம் நிறந்த வாழ்த்துகள் எங்கள் பிளாக்குக்கு.பதிவுகளில் என்றும் நிறைவும் கலகலப்பும்.நிறையப் பிடிச்சிருக்கு.ஸ்ரீராம் கை குடுங்க.

    பதிலளிநீக்கு
  15. //# நகைச் சுவைக்காக சில இடங்களில் சில கிண்டல்கள் இடம் பெறும். ஆனால் அவை தனிப்பட்ட முறையில் யாரையாவது தாக்கியோ அல்லது தரம் தாழ்ந்தோ நிச்சயம் இருக்காது. //

    Hope no one has taken that joker role !!

    பதிலளிநீக்கு
  16. பொற்ற்றந்த நாள்ன்றீங்க.. விளா ண்றீங்க...புட்டி எத்த்னா உண்டா.. சரக்கு ஏற்றிச்சா.. றோம்ப ஷோக்கா வாள்த்திப் பாடுவங்க.. வாள்க வாள்க.. ந்ன்னும் கொஞ்சம் ஊத்த்துங்கண்ணே..

    பதிலளிநீக்கு
  17. வாழ்த்துக்கள்! இதுவரை உங்கள் பதிவுகள் எல்லாமே நன்றாக இருந்துது. இனியும் இது இனிதே தொடர்ந்து வளர வாழ்த்துக்கள்.
    உங்கள் பதிவில், மாதம் ஒரு முறையாவது இசையை பற்றிய ஒரு பதிவு இருக்கவேண்டும் என்பது என் விருப்பம்
    மற்றும் வேண்டுகோள்.

    பதிலளிநீக்கு
  18. வாழ்த்திய கிங்குகளுக்கும், தெய்வங்களுக்கும், எங்கள் நன்றி.
    எங்கள் ஆசிரியர் குழுவில் உள்ள பெரும்பான்மையினருக்கு இசையில் ஆர்வம உண்டு. எனவே இசை பற்றிய பதிவுகளுக்கு, பஞ்சம் இராது.

    பதிலளிநீக்கு
  19. எங்கள் பிளாக்' -- தனித்தன்மை வாய்ந்தது.. மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  20. மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

    மீனாட்சியின் கருத்தை வழிமொழிகிறேன்

    விஜய்

    பதிலளிநீக்கு
  21. ஆஹா ஒரு வருஷம் ஆகிருச்சா.. ஹாப்பி பர்த்டேப்பா.. எங்கள் ப்லாக்.. சரி இதே போல நூறு வருஷம் வாழுங்கப்பா..:))

    பதிலளிநீக்கு
  22. அமோகமாக எங்கள் ப்ளாக் வளர மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  23. மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    வலைத்தளத்தின் சாத்தியங்களை நிரூபிக்கும் படி இருக்கிறது எங்கள்-பிளாக்.
    படிப்பவர்களையும் படைப்பாளிகளாக்கிய சாமார்த்தியத்திற்கும், இயல்பான விஷயங்கள் மூலம் படைப்பாற்றலை வாசகர்களிடம் பெருக்கியதற்கும் என் வாழ்த்துக்கள்.
    மென்மேலும் வளர்க.. தொடர்க!

    பதிலளிநீக்கு
  24. engalblog கிற்கு ஆண்டு நிறைவு
    கொண்டாடுவதில் மிக்க மகிழ்ச்சி !
    அதிலும் எங்கள் குடும்பம் நடத்தும்
    blog என்பதால் ரெட்டிப்பு மகிழ்ச்சி
    மாலி

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!