செவ்வாய், 15 ஜூன், 2010

படைப்பாற்றல் பயிற்சி புதிய கோணம்


முற்றிலும் புதிய கோணத்தில் சிந்திக்க முடியுமா நம்மால்?
கீழ்க்கண்ட விவரங்களை படியுங்கள்.
(ஊன்றிப் படியுங்கள். நாங்கள் இங்கே கொடுத்திருப்பவைகளை மட்டும்தான் நீங்கள் ஆதாரமாக வைத்துக் கொள்ளவேண்டும்.) 

(சொல்லாதவைகளை எதையும் கற்பனை செய்துகொண்டு வேறு திசையை நோக்கி இழுக்காதீர்கள் !)

* யார் சொன்னார்கள் - ஏன் எப்படி, எதற்கு என்ற விவரங்களை இப்போதைக்கு மறந்துவிடலாம். 
* அடுத்த வருடத்திலிருந்து, ஒரு வாரத்திற்கு எட்டு நாட்கள்.
* வாரத்தில் சேர்க்கப்படும் எட்டாவது கிழமைக்கு என்ன பெயர் வைக்கலாம்?
* அந்தக் கிழமை எந்த இரண்டு கிழமைகளுக்கு நடுவே வரவேண்டும் என்று நினைக்கிறீர்கள், ஏன்?
* வாரம் எட்டு நாள் என்று செய்வதாலும், புதிய கிழமை ஒன்று அதிகமாகச் சேர்வதாலும், என்னென்ன மாற்றங்கள் உலகில் ஏற்படும் என்று நினைக்கிறீர்கள்? 

(இது படைப்பாற்றல் பயிற்சி மட்டும் அல்ல, இதற்கு பதியப்படும் கருத்துகள் மூலமாக வேறு சில ஆராய்ச்சிகளும் நடத்தப்படப் போகின்றது, உங்கள் நன்மைக்காக) 

47 கருத்துகள்:

  1. 2. newday
    3 it should be between monday and tuesday
    4. well more production will be there

    பதிலளிநீக்கு
  2. பெயர் nowork day. வரவேண்டியது சனி மற்றும் ஞாயிறு இடையில் அதனால் weekend 3 நாட்கள் ஆகும். பலன்-பூஜ்யம். வீட்டு கரண்ட் பில் கூடும். ---ஹி, ஹி.
    total working hours அதுவே ஆக இருக்கப் போவதால் எந்த பெயர் கொடுத்தாலும், எந்த கிழமைக்கு அடுத்து வந்தாலும் பெரிய வேறுபாடு இருக்காது என்று தோன்றுகிறது. -----கீதா

    பதிலளிநீக்கு
  3. நீங்க முக்கியமான ஒன்றை சொல்லல. அந்த கிழமையின் பெயரை ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமா. தமிழில் சொல்ல வேண்டுமா.

    பதிலளிநீக்கு
  4. children's day
    wednesdaykkum thursdayvukkum naduvula irukkanum..
    sundau leave kidaikkara maari endha dayvukkum leave kidaikkanum...

    பதிலளிநீக்கு
  5. என்ன‌ செவ்வாய் கிர‌க‌ நாட்காட்டி த‌யாரிப்பு ஆர‌ம்ப‌மாகிவிட்ட‌தா?
    என்னை பொருத‌த‌ வ‌ரை வார‌த்து இர‌ண்டு நாட்க‌ள் அதிக‌மானாலும் ஒன்றும் மாறிவிட‌ போவ‌தில்லை.
    புது நாளுக்கு புது பெய‌ர் "க‌லைஞ‌ர் கிழ‌மை" என்று வைத்துக்கொள்ள‌லாம்,அது ஒன்று தான் பாக்கி இருக்கு.:-))

    பதிலளிநீக்கு
  6. என்னை மாதிரி ஸ்கூலுக்கு போறதுக்கு, காலேஜுக்கு போறதுக்கு, ஆஃபீஸூக்கு போறதுக்கு மூக்கால அழற கேஸுகளின் நலன் கருதி இந்த டே சனி ஞாயிறு கழிந்து திங்களுக்கு முன்னாடி சொருகப்பட வேண்டும்.
    நாமகரணம் = நியூ டே!
    இதுனால மண்டே ப்ளூஸ் முழுவதுமாக அகற்றப்படும்.
    இப்போ சனி முற்பாதியில் வேலை செஞ்சுட்டு பிற்பாதியில் லீவ் தராங்க இல்லையா அதே மாதிரி இந்த நாளின் பிற்பகுதியின் வேலைகள தொடங்கும். இதுனால ஒரு முழுமையான டூ டே வீக்கெண்டு கிடைக்கப்பெறலாம்.

    இப்போ மண்டே மார்னிங் தொடங்கறதை இந்த நியூடே நூன் தொடங்கணும். அப்போ கடுப்பும் கம்மி ஆகும், அடுத்து வரப்போற மண்டேவையும் சினேகத்தோட கையாளலாம். இந்த நியூ டே ஹாஃப டே யா இருக்கறதுனால பெருசா ஒரு வித்தியாசமும் ஆயிடாது. மத்தியானத்துக்கு மேல ஆஃபீஸ் போகணும்ங்கறதால பேசாம எல்லாரும் வீட்டுலேயே டீவீ பார்த்துண்டு இருப்பாங்க. அதுனால டோட்டலி நோ வால்யூ அடிஷன்.. இன்னும் ஒரு 3 மணி நேர மெகா சீரியல்ஸ் பார்க்குறதால இருக்கற மூளையெல்லாம் சூப்பரா, சுத்தமா மழுங்கிடும்.
    ஆஃபீஸுலேயும் பெருசா ப்ரொடக்ட்டிவிட்டி ஒண்ணும் இருக்காது.. போய் ஒரு 10 நிமிஷம் வேலை பண்ணுவாங்க. அப்புறம் இன்னிக்கி ந்யூ டே தானேன்னு வெட்டி பேச்சு பேசி, சிரிச்சுட்டு வந்திடுவாங்க. இந்த நியூ டே ஹாஃப் அ டே யா இருக்கறதுனால லாங் அவுட்டிங் போக முடியாது,தீம் பார்க்குக்க்கு போனா டைம் பத்தாது, மெரீனா பீச்சுக்கு போன வெயில், கோவில் 10 மணிக்கெல்லாம் மூடிடுவாங்க.. இப்படி ஏகப்பட்ட சிக்கல் இருப்பதால் ஆட்டோ, பஸ் ஆகியவைக்கும் பெருசா வருமானம் ஒண்ணும் இருக்கப்போவதில்லை. இதே மாதிரி கேளிக்கை ஸ்தாபன வருமானங்களும் ஏறுமான்னு எனக்கு சந்தேகம் தான்.. இதுனால இவங்கெல்லாம் ஒண்ணு கூடி ஒரு யூனியன் ஃபார்ம் பண்ணுவாங்களா இருக்கும்.. அதன் மூலம் ஞாயிறு முழுவதும் இரவு ஏதாவது ஒரு ஆஃபர் போட்டு புள்ளை குட்டியெல்லாம் தண்ணில விளையாடுற பார்க்ஸ், ஃபன் ரைட்ஸ், எணடர்டெயின்மெண்ட் இப்படி எல்லாம் பண்ணுவாங்க.ஸோ, அல்டிமேட்லி, ஞாயிறு ராத்திரி பூரா வெளியில எஞ்சாய் பண்ணிட்டு, நியூடே கார்த்தால தூங்க ஆரம்பிச்சு, மத்தியானம் லேட்டா எழுந்து ஆபீஸுக்கு ஓடுவாங்க.. இவ்ளோ தான் தோணுது.
    உண்மையா சொல்லணும்னா பெருசா ஒரு மாற்றமும் இருக்காது.

    பதிலளிநீக்கு
  7. அந்தக் கிழமைக்கு நட்சத்திரக் கிழமை (ஸ்டார் டே ) என்று பெயர் வைக்கலாம் (மத்த நாட்களுக்கு கிரகங்களின் பெயர்கள் என்பதால் இந்த யோசனை). ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகள் இடையே வைத்து விடலாம். அலுவலகத்தில் ஒரு பிரிவினருக்கு ஞாயிறும் மற்ற பிரிவினருக்கு நட்சத்திரக் கிழமையும் விடுமுறை என்று அறிவித்து விடலாம். இதனால் அலுவலகப் பணிகள் ஒரு நாள் கூட இடைவெளியில்லாமல் நடைபெறும்.

    வாரத்துக்கு எட்டு நாட்கள் இருப்பதால் எந்தப் பெரிய மாற்றமும் வராது. ஏனென்றால், மாதத்துக்கோ, வருடத்துக்கோ எத்தனை நாட்கள் என்பதில் மாற்றமில்லையே.
    ஆனால், ஒரு மாதத்துக்கு மூன்று முழு வாரங்களும், ஒரு வருடத்துக்கு 45 முழு வாரங்களும் ஆகிவிடும்.
    24 x 7 என்ற டிவி சானல் 24 x 8 என்று மாற்றப்படும்.

    சில வருடங்களுக்கு பிறகு, எங்கள் ப்ளாகில் "ஒரு வாரத்துக்கு ஒன்பது நாட்கள் என்றால், ஒன்பதாவது கிழமைக்கு என்ன பெயர் வைக்கலாம்?" என்று ஒரு பதிவு வரலாம். அப்போது அதற்கு என்ன பெயர் வைப்பது என்பது பற்றி இப்போதே யோசித்துக் கொண்டிருப்பதால், மேற்கொண்டு தொடர முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  8. //அந்தக் கிழமைக்கு நட்சத்திரக் கிழமை (ஸ்டார் டே ) என்று பெயர் வைக்கலாம் (மத்த நாட்களுக்கு கிரகங்களின் பெயர்கள் என்பதால் இந்த யோசனை). ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகள் இடையே வைத்து விடலாம்//

    amazing னா நான் என்ன சொல்ல நினைத்தேனோ அதை பெயர் சொல்ல விருப்பமில்லை சொல்லிவிட்டார் :))

    --

    அதனால ஃப்ரீ டே அப்படின்னு வெச்சிடலாம் புதனுக்கும் வியாழனுக்கும் நடுவுல வர மாதிரி, அன்னிக்கு எல்லா எடத்துலயும் காசோ பணமோ கொடுக்காம எல்லா விதமான அரசாங்க/தனியார் சேவைகளையும் இலவசமா கிடைக்க வைக்கலாம். :)

    இன்னிக்கேத்த ட்ரெண்டா சொல்லி இருக்கேன். பார்க்கலாம்!

    பதிலளிநீக்கு
  9. //அந்தக் கிழமைக்கு நட்சத்திரக் கிழமை (ஸ்டார் டே ) என்று பெயர் வைக்கலாம் //

    'ஞாயிறு' என்பது ஒரு கிரகம்(not a planet) அல்ல, நக்ஷத்திரமே(but a star).. (அறிவியல் படி)

    பதிலளிநீக்கு
  10. அந்த நாளுக்கு, 'எங்கள்-கிழமை' எனப் பெயர் சூட்டலாம். அன்று விடுமுறை விடலாம்.. அண்டிய தினத்தில் 'engal blog' online live chat வைக்கலாம்.
    மேலும்.. ஸ்பெஷலாய் அன்றைய தினம் அரசாங்கம் எல்லோருக்கும் FREE Internet, கரண்ட் தரலாம்.... (அடுத்த எலெக்ஷனுக்கு போட்டியிடும் கட்சிகளுக்கு நல்ல யோசனை..)

    பதிலளிநீக்கு
  11. 'எர்த் டே'க்கு கொஞ்சம் பப்ளிசிடி சேர்க்க சில வருடங்கள் முன்னால் இந்தக் கேள்வியை டிவி பேப்பர் பள்ளிக்கூடம் கச்சேரி என்று எல்லா இடத்திலும் கேட்டு கேட்டு நச்சரித்தார்கள்; மறந்து போனதே என்று மூச்சு விட்டால்...

    பதிலளிநீக்கு
  12. எழு கிரகங்களுக்கும் கிழமை உண்டு. சாய கிரகங்களான ராகு கேதுவிற்கு இல்லை. எனவே Dragon's Day என்று பெயரிடலாம்

    ஞாயிறுக்கு அடுத்த நாள் வைக்கலாம்

    பாம்பு புற்றிற்கு பால் வைக்க, துர்க்கைக்கு விளகேற்ற அந்நாள் உபயோகப்படும்.

    விஜய்

    பதிலளிநீக்கு
  13. வாரத்துக்கு ஒரு நாள் அதிகமா..? ( & வருடத்துக்கு சராசரியாக 52 வாரத்தை குறைக்கலேன்னா )
    அப்படின்னா பெண்களுக்கு கொண்டாட்டம் தான் -- எப்படின்னு கண்டுபிங்க ? (நா அப்புறமா சொல்லுறேன்)

    பதிலளிநீக்கு
  14. இந்த எக்ஸ்ட்ரா நாளுக்கு நிரந்தரமா ஒரு பேரு வைக்காமல் பெரிய விஞ்ஞானிகள் பேரை வச்சு வருஷத்துக்கு ஒருதடவை மாத்திட்டே இருக்கனும்.

    சன்டேக்கு அடுத்த நாளா வைக்கனும்... அந்த விஞ்ஞானிக்கு மரியாதை கொடுத்து ஒருநாளாவது ஆபிஸ்போறவங்க ஆணி புடுங்கலாம், படிக்கிறவங்க புக்கை தொறந்து படிக்கலாம்.

    ஆங் சொல்ல மறந்துட்டேன்... அடுத்த வருஷம் இதை ஆரமபிச்சா பிரதாப் என்ற பெரிய விஞ்ஞானியோட பேரை சேர்த்து பிரதாப் டே -ன்னு ஆரம்பிச்சா நல்லாருக்கும்னு... பட்சி சொல்லுது...

    பதிலளிநீக்கு
  15. சூரியனை நாம் வசிக்கும் பூமி ஒரு முறை சுற்ற 365 1 /4 நாட்கள் என்பதை மாற்ற முடியாது . அதனால் நம்ம விளையாட்டு 365 1 /4 நாட்களை அடிப்படையாக கொண்டுதான் ......

    1 . ஒரு வாரத்துக்கு எட்டு நாட்கள் ..அதனால் 45 வாரமாக குறைந்து விடுகிறது ... வார இறுதி கொண்டாட்ட காரர்களுக்கு 7 வார இறுதி போச்சு .... அதை பின்னாடி சரிபண்ண பார்ப்போம் .

    2 . மாதத்திற்கு 3 வாரங்கள் என்று மாற்றி 15 மாதமாக பெருக்கிகொள்வோம் ..ஹை...15 ஒண்ணாந்தேதி குஷி.. ( வாடகைக்கு குடியிருப்போர், வீட்டு சொந்தக்காரர்களிடம் இந்த புது காலண்டர் விஷயத்தை மறைத்து விட வேண்டும் )

    3 . சனி க்கும் ஞாயிறுக்கும் நடுவில் போட்டு ..நம்மை படுத்தும் சனியாரை திருப்தி படுத்த அவரது துணைக்கோள் ஒன்றின் பெயரை வைத்து கொள்வோம் ...titan day ....தைத்தான் கிழமை (சைத்தான் அல்ல ).

    4 . தைத்தான் கிழமையை வார இறுதியில் சேர்த்து கொள்வோம் .( இந்த நாளில் தையத்தக்கா தையத்தக்கா என்று குதிப்பதற்கு வசதியாக )
    வருடத்திற்கு 7 வார இறுதி குறைந்துவிட்டதே என்றிருப்பவர்களுக்கு ஆறுதல் படுவார்கள் ..

    5 . வார விடுமுறையை ஒரு நாள் மட்டும் (ஞாயிறு ) என்பதை இரண்டு நாட்கள் (சனி , ஞாயிறு ) மாற்றுவதற்கு மாநில அரசாங்கங்கள் முதலில் சொன்ன காரணம் .. இரண்டு நாள் விடுப்பளித்தால் போக்குவரத்து , நிர்வாக , அலுவலக பராமரிப்பு செலவுகள் குறையுமாம் ( என்னே உற்பத்தி மனப்பான்மை ? ) முன்று நாட்கள் விடுப்பு அளிக்கும்பொழுது அந்த காரணங்கள் இன்னமும் வலுப்பெறுகின்றன ,,,,

    இப்போதைக்கு இவ்வளவு மொக்கைகள் தான் தேர்த்த முடிந்தது ...இனி ஆபிஸ் முடிந்து விட்டுக்கு போக வேண்டும் ...

    பதிலளிநீக்கு
  16. எல்லா நாட்களும் நவகிரஹங்களின் பெயரிலேயே இருப்பதால், இதுவும் அதனுடன் தொடர்புடையதாக இருந்தால் பொருத்தமாக இருக்கும். பெயர் ராகுவும், கேதுவும் இணைந்து இருக்குமாறு 'கேதார' என்று இருக்கலாம். இது சனி கிழமைக்கு அடுத்து வந்தால்தான் சரியாக இருக்கும். ஏனென்றால், ஞாயிறு, திங்கள் என்று சனி வரையில் வரிசையாக இவ்வளவு காலம் நம் வழக்கில் இருந்ததால் அது அப்படியே மனதில் பதிந்து விட்டது. அதனால் இந்த புதிதாக வருவதை இந்த வரிசையின் இடையில் புகுத்தாமல், சனி கிழமைக்கு அடுத்ததாக சேர்த்து விடலாம்.

    என்னை பொறுத்தவரை இனி வாரத்திற்கு எட்டு நாட்கள். மற்ற நாட்களை போல் இதுவும் ஒரு நாள் அவ்வளவுதான். மாற்றங்கள் என்று ஒன்றும் பெரிதாக இருக்கபோவதில்லை. மாற்றங்கள் என்பது மனிதர் மனங்களில் தோன்றினால்தான் உண்டு.

    பதிலளிநீக்கு
  17. >>Blogger பத்மநாபன் said...
    சூரியனை நாம் வசிக்கும் பூமி ஒரு முறை சுற்ற 365 1 /4 நாட்கள் என்பதை மாற்ற முடியாது . அதனால் நம்ம விளையாட்டு 365 1 /4 நாட்களை அடிப்படையாக கொண்டுதான் ......//

    current fact பத்மநாபன், but not true :)
    பூமி தன்னையும் சூரியனையும் சுற்றும் வேகத்தைப் பொறுத்தது; பூமிச்சுற்றின் வேகம் காலத்தால் மாறுவது நிரூபிக்கப் பட்டிருக்கிறது.

    இரண்டு பிலியன் வருடங்களுக்கு முன் பூமி சூரியனை வேகமாகச் சுற்றியது; அடுத்த சில மிலியன் ஆண்டுகளில் பூமிச்சுற்றின் வேகம் குறைந்தால் (சாத்தியம்) நாள் கணக்கைச் சரிக்கட்ட எட்டாவது நாள் சேர்ப்போமோ என்னவோ? அல்லது நாளின் மணிக்கணக்கை கூட்டுவோமோ என்னவோ?

    பதிலளிநீக்கு
  18. eighth day பெயர் வைக்கலாம்


    அந்தக் கிழமை ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகள் நடுவே வரவேண்டும் என்று நினைக்கிறேன்.

    உலகில் ஏற்படும் மாற்றங்கள்:-
    இந்திய வல்லரசு ஆகும்!
    இலங்கையில் விடுதலைப்புலிகள் தலைமையில் தமில்யீழம் என்ற சுதந்திரநாடு அமையும்!
    உலகில் தீவிரவாதிகலே இருக்கமாட்டார்கள்!
    மக்களுக்கு லஞ்சம்,சண்டை, பசியென்றால் என்னவேன்றே தெரியாது!
    (இப்படியெல்லாம் கண்டிப்பாக நடக்கும் வாரம் எட்டு நாள் என்று செய்து பாருங்கள்).

    பதிலளிநீக்கு
  19. //உலகில் ஏற்படும் மாற்றங்கள்:-//

    முக்கியமாக பவர்கட்டே இருக்காது.(பாதிப்பு)
    உலகில் எல்லோருக்கும் தமிழ் தவிர வேறு மொழியே தெரியாது.

    பதிலளிநீக்கு
  20. குரோம்பேட்டைக் குறும்பன்15 ஜூன், 2010 அன்று PM 10:30

    Sunday க்கும் Monday க்கும் நடுவில் புதிய கிழமை என்றால், Funday என்று வைக்கலாம்.
    தமிழில் சொன்னால் ஞாயிறு, எங்கள், திங்கள் என்று சொல்லிக்கொள்வோம்.
    அன்றைக்கு எல்லோரும் படைப்பாற்றல் பயிற்சி ஏதாவது ஒன்றை (அவர்களுக்குப் பிடித்ததை) செய்தே ஆகவேண்டும்.
    அவரவர்களுக்கு எது சந்தோஷம் அளிக்கிறதோ (ஆனால் மற்ற உயிர்கள் எதற்கும் துன்பம் அளிக்காததை) செய்யவேண்டும்.

    பதிலளிநீக்கு
  21. - எட்டாவது நாள்னே வெக்கலாம் தப்பில்ல...

    - இல்லைனா ப்ளாக் டேனு வெக்கலாம்... அன்னிக்கி பூரா ப்ளாக் மட்டும் தான் படிக்கணும் இல்லைனா எழுதனும்... (இப்போ மட்டும் என்ன செய்யறேன்னு கேக்க கூடாது).

    - அதுவும் இல்லைனா "லேடீஸ் ரெஸ்ட் டே" னு வெயுங்க...அன்னிக்கி நோ சமையல் nothing doing னு எங்களை நிம்மதியா விட்டுடுங்க...

    - கண்டிப்பா சனி ஞாயிறுக்கு நடுவுல வரணும்... அதுவும் லீவு நாளா இருக்கணும்

    - என்ன விளைவுகள்னா? நன்மைகள் பெருகற அளவுக்கு தீமைகளும் பெருகும். நல்ல விதமா அந்த நாளை use பண்றவன் உருப்படுவான்...மத்தவன் கஷ்டம் தான்... (கண்டிப்பா வீட்டுல சண்டை அதிகமாகும்...)

    பதிலளிநீக்கு
  22. அப்பாதுரை அவர்களுக்கு நன்றி....இப்போதைக்கு மாற்றமுடியாது என்று நான் குறிப்பிட்டு இருக்கவேண்டும்.. அதுவும் நன்மைக்கே, உங்களிடமிருந்து சூரியன் பூமி சுழலும் இயற்கையின் அற்புதத்தை படிக்கமுடிந்ததே..மாற்றமில்லாதது எது இந்த அகண்ட பிரபஞ்சத்தில்.

    பதிலளிநீக்கு
  23. முன் கிழமை - கிழமையைத் தொடக்கி விடும் நாள்.

    சுடர் கிழமை - வெளிச்சமான நாள்.

    தூக்கக் கிழமை - சனி ஞாயிறில் வேலை இல்லையென்றாலும் வீட்ல நிறைய வேலை.விருந்தினர் வருகை.அதெல்லாம் இல்லாமல் ஓய்வு நாள்.

    மறதிக் கிழமை - கிழமை முழுக்க இருக்கிற பிரச்சனையெல்லாம் மறந்திட்டு இருக்கிற நாள்.

    பதிலளிநீக்கு
  24. //வாரத்தில் சேர்க்கப்படும் எட்டாவது கிழமைக்கு என்ன பெயர் வைக்கலாம்?//
    பெயர் = "இருப்பு"

    //* அந்தக் கிழமை எந்த இரண்டு கிழமைகளுக்கு நடுவே வரவேண்டும் என்று நினைக்கிறீர்கள், ஏன்?//
    ஞாயிறு மற்றும் திங்கள் நடுவே வரவேண்டும். ஏன்னா... சூரியனில் இருந்து தெறிக்க போகும் ஒரு பொதுவெளி பூமி மீது மோத - பூமி சுத்து வட்டம் மற்றும் சாய்வு கோனத்தில மாத்தம் வரும். அப்ப ஞாயிறு மற்றும் திங்கள் நடுவே "இருப்பு" சுத்திகிட்டு இருக்கும்.

    //வாரம் எட்டு நாள் என்று செய்வதாலும், புதிய கிழமை ஒன்று அதிகமாகச் சேர்வதாலும், என்னென்ன மாற்றங்கள் உலகில் ஏற்படும் என்று நினைக்கிறீர்கள்? //
    - ஒரு நாளுக்கான நேரம் அதிகமாயிருக்கும்.
    - வருடத்தோட நாள் என்னிக்கை கூடி இருக்கும்.
    - மோதலின் காரனமா பூமிய பத்தின ஆராய்ச்சி செயற்க்கை கிரகத்தில இருந்து கொஞ்ச் நாள் நடந்துகிட்டு இருக்கும், வேறு கிரகம் வாழ கிடைச்சா அந்த ஆராய்ச்சி தொடரும் இல்லைனா இயற்க்கை தொடரும்.

    பதிலளிநீக்கு
  25. நன்றி பத்மனாபன்.
    எல்லாமே சாத்தியம் சார்.
    சூரியன் சூபர்னோவா ஆகும் பட்சத்தில் செவ்வாய் வரை இருக்கும் கோள்களை சுவாகா செய்துவிடும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். இன்றைய ஹைட்ரஜன் ஹீலியம் ஸ்டாக்கை வைத்து சூரியன் சூபர்னோவா ஆவதற்கு பிலியன் சில்லறை ஆண்டுகள் ஆகும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். (அப்பாடி, நான் பிழைத்தேன். கடவுளே, என்னை மட்டும் காப்பாத்து).
    அப்படி சூபர்னோவா ஆகும் பட்சத்தில் பூமியைப் பிழைக்க வைக்க முடியுமா என்று அறிஞர்கள் சில வருடங்களுக்கொரு முறை கூடி விவாதித்து ஐடியாக்களை எதிர்கால அறிஞர்களுக்கு சமர்பிக்கிறார்கள். இன்றைக்கு தொழில் நுட்பம் இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் இருக்கும் என்ற நம்பிக்கையில் சொல்லப்பட்ட ஒரு ஐடியா இது:
    பூமியின் சுழற்சியை அதிகரித்து (சந்திரனின் இழுப்பு + காந்த சக்தியை உபயோகித்து) அதற்குப் பின் ஸ்லிங்க் ஷாட் முறையில் பூமியை தற்போதைய பாதையிலிருந்து அலேக்கா மாத்தி இன்னொரு பாதையில சுத்திவிட்டா பூமி சூரியனை விட்டுத் தாண்டி செவ்வாய் வியாழனை நோக்கிப் பயணிக்கும். சந்திரன், செவ்வாய் என்று ஒவ்வொரு கோளின் இழுப்பை உபயோகித்து மறுபடி ஸ்லிங்க் ஷாட் என்று பூமியைத் தள்ளிக் கொண்டே போனால் சூபர்னோவா நேரத்தில் பூமி செவ்வாயைத் தாண்டிப் போய்விடும். அப்படி நடந்தால் நாளாவது கிழமையாவது? என்ன சொல்கிறீர்கள்?
    பூமி ஒரு கிரகம் என்று இன்றைக்குப் பார்க்கிறோம். சில பேர் பூமி ஒரு விண்கலம் என்று இன்றைக்கே பார்த்துவிட்டார்கள்.

    பதிலளிநீக்கு
  26. அடுத்த வருடத்திலிருந்து, ஒரு வாரத்திற்கு எட்டு நாட்கள்.

    வாரத்தில் சேர்க்கப்படும் எட்டாவது கிழமைக்கு என்ன பெயர் வைக்கலாம்?

    யுரேனஸ் (OURSDAY) நம்மநாள் - எப்பிடி நம்ம தமிழ்பெயர்? :))))))
    (யுரேனஸ் என்பது ஒளராஸ் என்ற கிரெக்க கடவுளின் பெயரிலிருந்து உருவானது பெரும்பாலான கோள் களின் பெயர்கள் இப்படி மருவியே வந்திருக்கிறது எப்டி நம்ம பேரு?)

    அந்தக் கிழமை எந்த இரண்டு கிழமைகளுக்கு நடுவே வரவேண்டும் என்று நினைக்கிறீர்கள், ஏன்?

    சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளுக்கு இடையில்..

    வாரம் எட்டு நாள் என்று செய்வதாலும், புதிய கிழமை ஒன்று அதிகமாகச் சேர்வதாலும், என்னென்ன மாற்றங்கள் உலகில் ஏற்படும் என்று நினைக்கிறீர்கள்?

    Nothing use, காலண்டர்களில் இதுவரை அச்சிட்டுவந்த முறையில் நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டியிருப்பதால் நிறைய பணம் விரயம் ,ஆதலால் காலண்டர் டயரிகளின் விலை கூடும், அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களின் அலுவலக கணக்கு வழக்கு மாற்றத்தினால் ஆண்டு இறுதி கணக்குவழக்கில் பயங்கர இடி விழலாம், வாரத்திற்க்கு எட்டுநாட்களாக இருப்பினும் விடுமுறை ஒரு நாள் என்பதால் சந்தோசம் ஒன்றும் ஏற்படப்போவதில்லை, அந்த நாளுக்கு ஆங்கிலத்தில் விரைவில் ஏதோ ஒரு பெயரை வைத்துவிடுவார்கள் ஆனால் தமிழில் அதற்க்கு பெயர்வைப்பதற்க்கு நிறைய போராட்டங்கள் கண்டனங்கள் சமயத்தில் ஆட்சி கவிழ்ப்பும் நிகழ வாய்ப்பிருக்கிறது, வாரத்தில் ஒரு நாள் அதிகமாவதால் தொலைக்காட்சிகள் அந்த நாளுக்கு புரோகிராம்களை எப்பவும் போல் அரைப்பார்கள் இனி ஐந்து நாள் சீரியல் ஆறாக கூட உயரும், டேட் வாட்ச் கட்டியிருக்குறவன் எல்லாம் அதை தூக்கி குப்பையில் போட வேண்டி வரும், உலகத்தில் இருக்கும் அனைத்து மொபைல்,கம்ப்யூட்டர்ஸ் எல்லாத்திலும் டேட் அண்ட் டைமிங்ஸ் மாற்றியே ஆக வேண்டும் தேவையில்லாத வெட்டிச்செலவு,இன்னும் இன்னும் பல லாம்....

    ****************************************************************************************************************


    இப்படி எங்கள் பிளாக்கில் கேள்வி கேட்டு நம் அறிவுப்பசியை தூண்டிவிட்டுவிட்டனர் அவர்களுக்கான எனது பதில் தேடப்போய் கிடைத்த யோசனைகள் சில தகவல்களும் சேர்த்து.... இங்கே...

    http://priyamudanvasanth.blogspot.com/2010/06/blog-post_16.html

    நன்றி...

    பதிலளிநீக்கு
  27. holiday ன்னே பேர் வச்சி சனி ஞாயிறுக்கு இடையில் வைக்கலாம்

    பதிலளிநீக்கு
  28. அப்பாதுரை சார் ..இப்ப நீங்க எனக்கு ரொம்ப வேண்டியவர் ஆய்ட்டிங்க ...அருமை யா சொல்றிங்க ..இப்படி இயற்கை அற்புதங்களை அனுபவிச்சு படிச்சோம்னா , அரசியலாவது இன்னொன்னாவது . /// சில பேர் பூமி ஒரு விண்கலம் என்று இன்றைக்கே பார்த்துவிட்டார்கள் // இது ஆலகால பிரபஞ்ச சுற்றுபயணம் .புரிஞ்சு சகபயணிகளோடு உற்சாகமாக இருக்கவேண்டியதுதான் ... மிக்க நன்றி சார் ...இந்த பொறியை தட்டிவிட்ட எங்கள் ப்ளாக் க்கும் மிக்க நன்றி ...

    பதிலளிநீக்கு
  29. ஆஹா அப்பாதுரை ஜி,
    அல்டிமேட் விளக்கம்!

    பதிலளிநீக்கு
  30. நான் சொல்ல நினைச்ச எல்லாத்தையும் எல்லாரும் கொத்து போட்டு முடிச்சுட்டாங்க.. ஆக, பூமி சுழற்சி, மொத்தம் வாரம் குறையுமா ஒரு வருஷத்துக்கு இல்ல அதே தானா, போன்ற கேள்வியெல்லாம் விட்டு விட்டு பெயர் மட்டும் என்னனு சொல்லறேன்:

    kodiday/ கொடிநாள்.(கிழமை எல்லாம் இல்ல.) பேரு வெக்கற என் பேரை வெக்காம?! and after sunday, for a 3 day weekend.

    பதிலளிநீக்கு
  31. இந்த மாதிரி வாசகர் பதில் கேட்டு இருக்கற பதிவுக்காவது மாடரேஷன் வெக்கலாமே? இல்ல நான் தான் லேட்டா வந்துருக்கேனா?

    பதிலளிநீக்கு
  32. // Porkodi (பொற்கொடி) said...
    இந்த மாதிரி வாசகர் பதில் கேட்டு இருக்கற பதிவுக்காவது மாடரேஷன் வெக்கலாமே? இல்ல நான் தான் லேட்டா வந்துருக்கேனா?//

    இல்லை. நீங்க லேட்டு இல்லை. இன்னும் பார்க்கப் போனால், படைப்பாற்றல் பற்றிய பதிவுகளுக்கு எப்பொழுது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் பதில் பதியலாம். படைப்பாற்றலின் முக்கிய அம்சமே, ஒரு பதிலோடு நின்றுவிடக் கூடாது. ஏராளமான பதில்கள் இருக்கும். எல்லாவற்றையும் சொல்லும் பொழுதுதான், நம்முடைய அறிவு எல்லை தாண்டி அற்புதங்கள் நிகழ்த்தும்.
    எங்களுக்கு வருகின்ற பின்னூட்டங்கள் - அது பழைய பதிவில் பதியப்பட்டதாக இருந்தால் கூட, எங்களுடைய ஜி மெயில் உள்பெட்டியில் பதிவாகும். அவற்றை நாங்கள் படிக்காமல் விடுவதில்லை.
    வாசகர்கள் தயங்காமல் தங்களுக்குத் தோன்றியதை, பதிந்து, மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
  33. //இல்லை. நீங்க லேட்டு இல்லை. இன்னும் பார்க்கப் போனால், படைப்பாற்றல் பற்றிய பதிவுகளுக்கு எப்பொழுது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் பதில் பதியலாம். படைப்பாற்றலின் முக்கிய அம்சமே, ஒரு பதிலோடு நின்றுவிடக் கூடாது. ஏராளமான பதில்கள் இருக்கும். எல்லாவற்றையும் சொல்லும் பொழுதுதான், நம்முடைய அறிவு எல்லை தாண்டி அற்புதங்கள் நிகழ்த்தும்.//

    I appreciate the initiative taken by this blog which really leads to some useful thinking instead of just 'vetti pechu'(chitra sister.. forgive me, I am not targetting you.... Chummaa..)

    பதிலளிநீக்கு
  34. பெண்களுக்கு என்ன கொண்டாட்டம்? அப்புறம் சொல்றேன்னுட்டு Madhavan ... எப்புறங்க?
    ஹையோ....சஸ்பென்ஸ் தாங்கலியே..

    பதிலளிநீக்கு
  35. //அப்பாதுரை said...
    பெண்களுக்கு என்ன கொண்டாட்டம்? அப்புறம் சொல்றேன்னுட்டு Madhavan ... எப்புறங்க?
    ஹையோ....சஸ்பென்ஸ் தாங்கலியே..
    //
    என்ன பெரிய கொண்டாட்டம் இருக்கப் போவுது? கூடுதலா ஒரு நாள் புருசனை திட்டலாம். கூடுதலா ஒரு பத்து டிவி சீரியல் பாக்கலாம். வாரத்துக்கு எட்டு புடவைன்னு ஒரு புடவை கூடுதலா கிடைக்கும். வேறேதாவது இருக்கா, மாதவன்?

    பதிலளிநீக்கு
  36. இன்னொரு நாள் சீரியல் பாக்கலாம்னு சொல்லப் போறார் மாதவன்.. :) அது இப்போ பெண்களுக்கு மட்டுமில்லையே, வேற வழி இல்லாம பாத்து பாத்து ஆண்களும் எப்போவோ சீரியல் அடிக்ட் ஆகிட்டாங்க! :D

    பதிலளிநீக்கு
  37. மாதவன் இன்னும் அவர் எதை நினைத்து 'பெண்களுக்குக் கொண்டாட்டம்தான்' என்று எழுதினாரோ அதைச் சொல்லவில்லை. எல்லோரும் யூகங்களின் அடிப்படையில் கும்மி அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.
    மாதவா, முகுந்தா - வாரம் எட்டு நாட்கள் என்று ஆனால் பெண்களுக்கு எப்படிக் கொண்டாட்டம் என்று சீக்கிரம் சொல்லுங்க !

    பதிலளிநீக்கு
  38. //(அப்பாடி, நான் பிழைத்தேன். கடவுளே, என்னை மட்டும் காப்பாத்து) //

    துரை - இப்போமட்டும் என்ன கடவுள் வெங்காயம் என்று ?

    பதிலளிநீக்கு
  39. வாரத்துக்கு எட்டு நாள் ? நல்லா இருக்கே ஐடியா.

    - மூன்றாவது விடுமுறை நாள் வேண்டாம். "ஐ.டி. இண்டஸ்ட்ரியில்" வாரக்கடைசி என்று இரண்டு நாள் வீட்டில் இருப்பதே பெண்டாட்டியிடம் திட்டு வாங்கி முடியவில்லை ?
    - விற்பனை துறையில் இருக்கும் எனக்கு இன்னும் ஒரு நாள் ஜாஸ்தியா பொய் சொல்ல வேண்டிய கட்டாயம் வரும் !!
    - எனக்கு சம்பளம் 4 நாள் ஜாஸ்தி வரும் ? அதனால் பெண்டாட்டி இன்னும் கிரெடிட் கார்டை தேய்க்க உதவும் !!
    - அரசாங்க துறை மக்களுக்கு (மைனஸ் மாதவன் - போதுமா மாதவன் !) - நான்கு நாட்கள் கிம்பளம் ஜாஸ்தி கிடைக்கும்
    - இது எப்படி - ஒரு நாளைய இருபத்து நாலு மணி நேரத்தை கொஞ்சம் கொஞ்சம் அறுத்து பண்ணபோறீங்களா "எங்கள் ப்ளாக்" ? அறுப்பது ராத்திரியை வேண்டாமே என்று சோம்பேறிகள் சொல்லுவார்கள் - எனக்கு பரவாயில்ல !
    - பெயர் - தமிழ்நாட்டுக்கு "கே.கே டே" அல்லது "ஜே.ஜே டே தான்" !! இல்லே இப்போ "கேப்டன் டே" வா ? ஐயோ சாரி "ஸ்டாலின் டே"
    - இந்தியன் "ஐ.டி. இண்டஸ்ட்ரி" Y2K மாதிரி - இந்த கூத்தை வைத்து இன்னும் பல வருடங்களுக்கு "வீக் எக்ஸ்ட்ரா டே" புது செர்விசெஸ் விற்கலாம் ?
    - பிறந்த நாள் ஒரு 12 -14 நாள் லேட்டாக வரும் .
    - அது சரி, "திதி" எல்லாம் உதைக்குமே ? என்ன இருந்தாலும் நான் ஐயரு பையன் !!

    பதிலளிநீக்கு
  40. //Madhavan Said...வாரத்துக்கு ஒரு நாள் அதிகமா..? ( & வருடத்துக்கு சராசரியாக 52 வாரத்தை குறைக்கலேன்னா) அப்படின்னா பெண்களுக்கு கொண்டாட்டம் தான் --//

    Madhavan Continues....
    A) வாரத்துக்கு 7 நாட்கள், வருடத்துக்கு 52 (சராசரியா) வாரம்னா.... ie 365 or 366 நாட்கள்.
    B) வாரத்துக்கு 8 நாட்கள்., வருடத்துக்கு 52 (சராசரியா) வாரம்னா.... ~416 நாட்கள்.

    A-யின் படி பத்து (10 ) வயசு முடிஞ்சா, Bயின் படி எட்டே முக்கால் (8 .75) வயசுதான்.. &&

    A-யின் படி இருபது(20 ) வயசு முடிஞ்சா, B-யின் படி பதினேழரை (17.5) வயசுதான்..

    பெண்களுக்கு வயச குறைச்சு சொன்னா பிடிக்கும் / கொண்டாட்டம் இல்லீங்களா?

    டே "மாதவா".... எப்படிலாம் யோசிக்குறே ?... என்ன்னவோ போடா..

    பதிலளிநீக்கு
  41. - //சாய்ராம் கோபாலன் said...அரசாங்க துறை மக்களுக்கு (மைனஸ் மாதவன் - போதுமா மாதவன் !) -//


    --- Thanks Sir, for the exception..

    பதிலளிநீக்கு
  42. வாரத்தின் முதல் நாளை FRIDAY ஆக்கலாம். அதற்கு அடுத்த நாள் SRIDAY(ஹி..ஹி...என் பெயர் ஸ்ரீதர்)
    FRIDAY,SRIDAY இரண்டு நாளும் ஜாலியா லீவ்! ஜாலியா என் ஜாய் பண்ணுங்க!
    சனியனேன்னு சனிக்கிழமை ஆஃபீஸ் போலாம்!!

    பதிலளிநீக்கு
  43. எட்டாவது நாளா இருக்கப் போறதினால் அதற்கு க்ருஷ்ணா டேன்னு பேரு வைக்கலாம்.
    அவரவர் இஷட்ப்படி அவரவர் கோவிலுக்குப் போகலாம். சத்சங்கம் அமைக்கலாம்.
    வீட்டைத் தவிர மத்த எல்லாருக்கும் உதவி செய்யலாம்.
    or
    யாரையும் யாரும் கேள்வி கேட்கக் கூடாது. ஸ்வதந்திரமா இருக்கலாம்.:)

    பதிலளிநீக்கு
  44. அதனால் வார நாட்களை ஒன்பது நாட்களாக மாற்றி விட்டு ஒன்பது கிரகங்களின் பெயரை வைத்து விடலாம்!
    அந்த கூடுதலான இரண்டு நாட்களும் அரசியல்வாதிகளில் மந்திரி முதல் கவுன்சிலர் வரை யாரும் பர்செண்டஜே லஞ்சம் வாங்காமல் அரசு திட்டங்களை செய்ய வேண்டும்!

    பதிலளிநீக்கு
  45. antha naalin peyar pasunthinam (green day).
    athu sanikkizhamaikkum sundaykkum idayil amaiya vendum.
    Antru naam avvarathil iyarkkaiyai maasupaduthum vithamaaga seithavatrai eedu seyya marankalai nadavo, antu muluvathum thani vaganankalai thavirththo, antru muluvathum min (current) sikkanam seiyyavo alladhu piravatrai...seyyavo vendum .
    Kattaayamaaga antru vidmuraithaan aanal athu vazhakkamaana vidumuraigalil seyyum pozhuthu pokkugalaiyo, meedham ulla velaikalaiyo seyya koodaathu.
    iyarkkai maasai kattupaduththuvathe annaalin nokkam.
    "Antraya thinam iyarkkaiyai patriya akkarai varuvthaal adhu marunaalaana sundayilum silaper kadaipidithu pothuvaaga sundaykkalil agum adhaika massuvai kuraikkalaam.(so that period is selected)"
    KURIPPU.(ANTUR SAMAIYAL EDHUVUM SEYYA KOODAATHU IYARKKAI NAMAKKU UANAVAAGA ALITHTHA PACHAI KAYKARIKALAI MATTUME SAAPPIDA VENDUM)

    பதிலளிநீக்கு
  46. எங்கள் பிளாக் சிந்தனையில் கிடைத்த
    எக்ஸ்ட்ரா நாளுக்கு
    எங்கள் நாள்
    என்றே பெயர் வைக்கலாம்..

    வெளிநாடுகளில்
    வெட்னஸ் டே மார்க்கெட் என்று புதன் கிழமைகளில் வைத்திருக்கிறார்கள் ..

    வார இறுதியான் ஞாயிற்றுக்கிழமையை பொருள்கள் வாங்க முடியாமல் தவறவிட்டவர்கள் பயன்படுத்திக்கொள்ளவாம்..

    ஞாயிற்றுக்கிழமைக்கும் திங்கட் கிழமைக்கும் இடையில் வைத்துக்கொள்ளலாம்..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!