Saturday, June 12, 2010

'இரண்டு வார்த்தைகள்' ஜாலங்கள்

பெயர் சொல்ல விருப்பமில்லை (எங்கள் பாராட்டுக்கள் பெ சொ வி இங்கே இருப்பவைகள் அதிகம் நீங்கள் எழுதிய சுருக்கங்கள்தாம்), அநன்யா மஹாதேவன், ஹுஸைனம்மா, எங்கள், நாஞ்சில் பிரதாப், சித்ரா மற்றும் குரோம்பேட்டைக் குறும்பன் ஆகியோர் அளித்த விவரங்கள் வைத்து இந்த இரண்டு வார்த்தைப் பட்டியல் உருவாக்கப் பட்டுள்ளது. 

ஒரு ஜெம் க்ளிப்பை வெவ்வேறு கோணங்களில் சிலர் பார்த்ததில் உருவானது, இந்தப் பட்டியல்.
மாற்று சாவி
பல் சுத்தி
குத்து ஊக்கி
தூக்கு கருவி
வரலாறு செதுக்கி
கார்டு சுரண்டி
காகித சொருகி
அலங்கார மாலை
பொழுது போக்கி
சிக்கல் போக்கி
பழுது நீக்கி
பண்டம் மாற்று
கடித திறவி
காது நோண்டி
கழுத்துப்பட்டை சேர்த்தி
ரகசிய காப்பான் 
வம்பர் விரட்டி
குறிப்பு ஊக்கி
வரைய உதவி
கல்வி உதவி
கம்பியூட்டர் பழுதுநீக்கி
நினைவு சின்னம்
கொசுவத்தி தாங்கி
திரை பிணைப்பான்
துணி காப்பான் 
கொண்டை ஊசி
சேலைமடிப்பு காப்பான்
ஸ்டவ் சுத்தி
மீன் சுரண்டி
துளையிடும் கருவி
ஆழ மானி
எய் அம்பு
தராசு முள்
மேலாளர் குத்தி
விசைப்பலகை சுத்திகரிப்பான்
சுவர் செதுக்கி
ஊக்கும் ஊக்கி
இப்போ நமக்கு இடது பக்க பிரிவில் முப்பத்தேழு வார்த்தைகளும், வலது பக்கப் பிரிவில் முப்பது வார்த்தைகளும் கிடைத்துள்ளன. இவைகள் இரண்டையும் ஒன்றுக்கொன்று மாற்றி இணைத்தால், (உதாரணம் : மாற்று சுத்தி, மாற்று செதுக்கி .... பல் ஊக்கி, ... குத்து கருவி, ...... அலங்கார ஊக்கி ..... ) 37 X 30 = 1110 ஜோடி சொற்கள் கிடைக்கும். இந்த ஜோடி சொற்களைப் படிக்கும்பொழுது, நமக்கு ஏற்கெனவே இருக்கின்ற சில பொருட்களோ அல்லது புதிய பொருட்களோ அல்லது கற்பனை வடிவங்களோ தோன்றக் கூடும். அவைகள் ஜெம் களிப்புக்கு சம்பந்தம் இல்லாதவையாகக் கூட (இல்லாதவையாகத்தான்) இருக்கும். ஆனால் புதிய சிந்தனைகள் உருவாக கற்பனைகள் தோன்ற, நாம் ஜெம் களிப்பிலிருந்து எவ்வளவு சமாச்சாரங்களை உருவாக்கி இருக்கிறோம் பாருங்கள்.  

குறைந்தபட்சம் நமக்கு சில புதிய தமிழ்த் திரைப்படப் பெயர்கள் கூட கிடைத்திருக்கும் ! (ரகசிய மாலை, சுவர் சுரண்டி - இந்த மாதிரிப் பெயர்களை நாம் பதிவு செய்து வைத்துவிடுவோம் !!)  
இப்போ வாசகர்களுக்கு ஒரு கேள்வி. உங்கள் பார்வையில், அலங்கார ஊக்கி - எது?  ஏன்? பின்னூட்டமிடுங்கள்.  இந்தப் பட்டியலிலிருந்து உங்களுக்கு வேறு ஏதாவது சுவாரஸ்யமான இரட்டைச் சொற்கள் கிடைத்ததா? அதையும் எழுதுங்கள்.
(படைப்பாற்றல் சம்பந்தப்பட்ட சமாச்சாரங்கள் இன்னும் நிறைய இருக்கின்றன. அவ்வப்போது வந்துகொண்டே இருக்கும்)

21 comments:

thenammailakshmanan said...

அலங்கார ஊக்கி என்றால் புரூச் என்றும் கொள்ளலாம்..அலங்காரத்தஊக்குவிப்பது என்றும் சொல்லாம்..

மற்றது நிறைய இருக்கு..

Software Engineer said...

வணக்கம்,
அற்புதமான பதிவு!
அன்பு பதிவர்களே/நண்பர்களே,
என்னுடைய முதல் பதிவு இங்கே போட்டு இருக்கிறேன். தயவு செய்து பாருங்கள், பிடித்தால் ஓட்டு போடுங்கள்!
http://kaniporikanavugal.blogspot.com/

குரோம்பேட்டைக் குறும்பன் said...

அலங்கார ஊக்கி = முகம் பார்க்கும் கண்ணாடி. இதைப் பார்த்தவுடன், பொட்டு சரி செய்து கொள்பவர்கள், சீப்பு எடுத்து தலை வாரிக் கொள்பவர்கள் இவர்கள் எல்லோரும் என் கட்சிக்கு வோட்டுப் போடுங்க

பத்மா said...

ஒரு பெண்ணுக்கு அலங்கார ஊக்கி ஆண் தான் .
என்ன நான் சொல்வது?
சிலசமயம் சில பெண்கள் கூட்டமும் அலங்கார ஊக்கியாய் மாறக்கூடும். அலங்காரம் for the sake of a crowd ..

அப்பாதுரை said...

>>ஒரு பெண்ணுக்கு அலங்கார ஊக்கி ஆண் தான்

very nice haiku!

சாய்ராம் கோபாலன் said...

//அப்பாதுரை said... >>ஒரு பெண்ணுக்கு அலங்கார ஊக்கி ஆண் தான் ....very nice haiku! //

ஏங்காணும் உமக்கு போஜனம் ஆயிந்தா?

ப்ரியமுடன்...வசந்த் said...

//ஒரு பெண்ணுக்கு அலங்கார ஊக்கி ஆண் தான்//

வவ்வவ்வவ்வே....

ஆச தோச அப்பள வடை...

ஒரு ஆணுக்கு அலங்கார ஊக்கி தன்னம்பிக்கை... gents beauty booming with self confidential forever ...

ப்ரியமுடன்...வசந்த் said...

we want meenakshi..

மீனாட்சி பாட்டி எங்கிருந்தாலும் எங்கள் ப்ளாக்கிற்க்கு வரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்....

குரோம்பேட்டைக் குறும்பன் said...

பெண்ணுக்கு அலங்கார ஊக்கி ஆணாகவும், ஆணுக்கு அலங்கார ஊக்கி பெண்ணாகவும் இருக்கலாம். ஆனால் ஆண் பெண் இருவருக்குமே அலங்கார ஊக்கி, முகம் பார்க்கும் கண்ணாடி. எனவே, இப்பவும் என் கட்சிதான் மெஜாரிட்டி.

Chitra said...

Beauty Salon la kappam katturavanga... ha,ha,ha,ha,ha...

ஜெகநாதன் said...

கார ஊக்கி: மிளகாய்
அலங்கார ஊக்கி: வரமிளகாய்??

meenakshi said...

ஹலோ வசந்த்,
நான் இங்க நம்ம ஏரியாலதான் இருக்கேன். உங்களைதான் நம்ப ஏரியால காணோம். இங்க ஒரே மூளைக்கு வேலை குடுக்கறாங்களா, அதான் அங்க ஓடிட்டேன்.
ஆமாம், ஊர்ல என்ன வெய்யல் ஜாஸ்த்தியோ?? திரும்பி வந்ததும் என்னை 'பாட்டின்னு' கூப்பிடறீங்க!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//அலங்கார ஊக்கி - எது?//

என்னைப் பொறுத்தவரை அலங்கார ஊக்கி என்றால் நம்முடைய தோற்றத்தைப் பற்றி மற்றவருடைய விமரிசனம்தான். அதுதான் நம்முடைய தோற்றத்தை அழகுபடுத்த ஊக்குவிக்கிறது.

Hair-Pin கூட அலங்கார ஊக்கி தான். அதாவது அலங்காரத்துக்கு பயன்படும் "ஊக்கி"

@ குரோம்பேட்டை குறும்பன்
கண்ணாடியை "அலங்கார உதவி" என்று வேண்டுமானால் சொல்லலாம். அது நம்முடைய அலங்காரத்தை பிரதிபலிப்பதோடு சரி.

குரோம்பேட்டைக் குறும்பன் said...

பெ சொ வி - அலங்கார உதவிக்கும் அலங்கார ஊக்கிக்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பது போல எனக்குத் தோன்றுகிறது.
எப்பவோ சின்ன வயதில் கிரியா ஊக்கி (catalyst) பற்றி படித்தது ஞாபகம் வருகிறது. அது இருந்தால் ரசாயன மாற்றம் வேகமாக நடக்கும். ஆனால் அது மாறும் பொருளாகவோ அல்லது மாறிய பொருளாகவோ இருக்காது.
இதன்படி வைத்துப் பார்த்தால்
அலங்கார உதவி என்பவை, சோப்பு, சீப்பு, ஸ்நோ, பவுடர் போன்றவை.
அலங்கார ஊக்கி - முகம் பார்க்கும் கண்ணாடிதான். அதை மேக் அப ஆகப் போட்டுக்கொள்ள முடியாது; அதுவும் மேக் அப போட்டுக் கொள்ளாது.
நீங்க ஹோட்டல்களில் வாஷ பேசினுக்கு அருகில் சற்று நேரம் நின்று அல்லது உட்கார்ந்து பாருங்கள். கை கழுவ வருபவர்களில் பெரும்பான்மையானவர்கள், அந்தக் கண்ணாடியில் தங்கள் பிம்பத்தைப் பார்த்தவுடன் என்னென்ன சேட்டைகள் செய்கிறார்கள் என்று.
அப்போது தெரியும், ஒரு கண்ணாடி என்பது எவ்வளவு சதவிகிதம் அலங்கார ஊக்கியாக இருக்கிறது என்று.

சாய்ராம் கோபாலன் said...
This comment has been removed by the author.
எங்கள் said...

இப்போ எங்களுக்கு இன்னொரு உண்மையும் தெரிஞ்சிப் போச்சு. ஜெம் கிளிப் வைத்து நிறைய கற்பனைகளுக்கு அடிகோலலாம். தமிழ் சினிமாப் பெயர்கள் கிடைப்பது ஒரு பக்கம். அடுத்து நீயா நானா போன்று நிறைய பட்டிமன்றத் தலைப்புக்கள் கிடைக்கின்றன. முகம் பார்க்கும் கண்ணாடி என்பது, அலங்கார ஊக்கியா அல்லது அலங்கார உதவியா. (கோபிநாத்தின் நெஞ்சார்ந்த ????)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//எங்கள் said...
இப்போ எங்களுக்கு இன்னொரு உண்மையும் தெரிஞ்சிப் போச்சு. ஜெம் கிளிப் வைத்து நிறைய கற்பனைகளுக்கு அடிகோலலாம். தமிழ் சினிமாப் பெயர்கள் கிடைப்பது ஒரு பக்கம். அடுத்து நீயா நானா போன்று நிறைய பட்டிமன்றத் தலைப்புக்கள் கிடைக்கின்றன. முகம் பார்க்கும் கண்ணாடி என்பது, அலங்கார ஊக்கியா அல்லது அலங்கார உதவியா.
//

What about the vote results?

எங்கள் said...

//பெயர் சொல்ல விருப்பமில்லை said...

What about the vote results?//

வோட்டுகள் பதிவானவரை, பெயர் சொல்ல விருப்பமில்லை (அலங்கார உதவி) அதிக வாக்குகள் பெற்றார்.
தொடர்ந்து இரண்டு நாட்கள் 'கூகிள் வாக்கெடுப்பு' காட்ஜெட் படுத்தியதால் அதை பதிவிலிருந்து நீக்கவேண்டியதாகிவிட்டது.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

// எங்கள் said...
//வோட்டுகள் பதிவானவரை, பெயர் சொல்ல விருப்பமில்லை (அலங்கார உதவி) அதிக வாக்குகள் பெற்றார்.
//

Thank you, voters!

குரோம்பேட்டைக் குறும்பன் said...

நான் இதை ஒப்புக்கொள்ளமாட்டேன்.
என்னுடைய ஆதரவாளர்களை எல்லாம் திரட்டிக்கொண்டு வோட்டுப் போட வந்து பார்த்தால், நீங்க போலிங் பூத்தை இழுத்து மூடிவிட்டு, என்னுடைய ஆதரவாளர்களை வோட்டுப் போடாமல் தடுத்து, 'அலங்கார உதவி' ஜெயித்துவிட்டது என்று அறிக்கை வேறு விடுகிறீர்கள்!
வோட் எடுப்பு ஒரு வாரம் தொடர்ந்திருந்தால் என்னுடைய கட்சியாகிய 'அலங்கார ஊக்கி'தான் ஜெயித்திருக்கும்.
எங்கள் ப்ளாக் ஊஊட்டி --- வாச்சான்குளி ---- வெவ்வவவ்வே!!!

வல்லிசிம்ஹன் said...

ரொம்ப மன்னிக்கணும்...
இந்த வோட் போடறதுன்னா என்ன. தமிழிஷில் ஓட்டுப் போட்டால் என்ன் நன்மை. ஐ மீன் வோட்டுப் பெற்றவருக்கு. ஏன் எல்லாரும் மறக்காம் வோட் போட்டுட்டுப் போங்கோன்னு வேற சொல்றாங்க.:)))

எங்க ப்ளாக் அப்படீங்கறதுன்னால் இந்த சந்தேகத்தைக் கேட்டேன்.
இப்படிக்கு ஒரு க.கை.நாட்டு.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!