சனி, 28 ஏப்ரல், 2012

வாசிப்பது நீங்கள்; யோசிப்பது எங்கள்!


மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் 
மாணவர்கள் உள்ளே இருந்து படித்தால்தான் ஆச்சரியம்! 

இன்றும் உண்ணாவிரதம் 
அதோடு சேர்த்து மௌனவிரதமும் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். 

சார்க் நாடுகள் தேர்தல் கமிஷனர்கள் கூட்டம 
கமிஷன் எவ்வளவு? 

ஒலிம்பிக் தகுதி பெற்றார் காஷ்யப் 
வாழ்த்துகள். அடுத்தது தங்கப் பதக்கத்தைத் தட்டி வரவேண்டும். 

கேரள தம்பதியிடம் ரூ. 3 லட்சம் நகை திருட்டு 
ஹூம் 'ஆங்காங்கே' கோடிக் கணக்கில் திருடுகிறார்கள் - இங்கே வெறும் மூன்று லட்சம்தானா? 

இந்தியா - அமெரிக்கா ஆயுத ஒப்பந்தம் 
அவல் எது? உமி எது? 

இடைத்தேர்தலில் தனித்து போட்டி: ஐ.ஜே.கே., 
ஐ ஜே கே = எல் எம் என்? ஓ பி க்யூ ?? 

சர்வதேசகோர்ட் நீதிபதியாக இந்தியர் தேர்வு 
வழக்கு என்ன? போஃபர்ஸ்? 

அமெரிக்கா வளர்ச்சி எதிர்பார்த்தபடி இல்லை 
யார் எதிர்பார்த்தபடி? 

சாமிக்கு மீண்டும் ஜாமின் மறுப்பு 
பூசாரிக்கு? 

யார் வந்தாலும் ஏற்க தயார்:வீரபாண்டி 
நாங்க வரலைப்பா இந்த விளையாட்டுக்கு!
                       

11 கருத்துகள்:

  1. யாரு காஷ்யப்? எந்தப் போட்டியில் தகுதி பெற்றார்? அவரைப் பற்றி இன்னும் ரெண்டு வரி யோசித்திருக்கக் கூடாதோ?

    பதிலளிநீக்கு
  2. வரிக்கு வரி நன்றாகத்தான் யோசனை போகிறது:)

    பதிலளிநீக்கு
  3. எங்கள் ப்ளாக்28 ஏப்ரல், 2012 அன்று 7:51 PM

    இந்திய பாட்மின்டன் வீரர் பி.காஷ்யப் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளார்.டில்லியில் நடைபெற்று வரும் இந்தியன் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடரில் வெள்ளியன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் காலிறுதி போட்டியில் இருந்து காயம் காரணமாக சீன வீரர் சென் ஜின் வெளியேறியதையடுத்து, அவரை எதிர்த்து மோதவிருந்த காஷ்யப் அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

    பதிலளிநீக்கு
  4. அரசியலை எம்பிக் கூட பார்க்காத டெண்டுல்கர் எம்பி ஆனது பற்றி 'எங்கள்' கருத்து ப்ளீஸ்..

    பதிலளிநீக்கு
  5. நன்றாகவே யோசித்திருக்கிறீர்கள்!

    பதிலளிநீக்கு
  6. எல்லாமே நல்லாத்தான் இருக்கு !

    பதிலளிநீக்கு
  7. டென்டுல்கர் எம்பிஆ? அட வம்பி!

    பதிலளிநீக்கு
  8. நான் என்னவோனு நெனச்சேன்.. பேட்மிந்டனா? ஓகே ஓகே.

    பதிலளிநீக்கு
  9. எங்கள் ப்ளாக்29 ஏப்ரல், 2012 அன்று 7:27 AM

    Madhavan Srinivasagopalan said...
    அரசியலை எம்பிக் கூட பார்க்காத டெண்டுல்கர் எம்பி ஆனது பற்றி 'எங்கள்' கருத்து ப்ளீஸ்..

    அப்படியாவது அவர் கிரிக்கட்டிலிருந்து விருப்ப ஓய்வு வாங்கிக் கொள்வாரா என்று பார்க்கிறார்களோ?

    பதிலளிநீக்கு
  10. ஹி.. ஹி. சொன்னாக் கோச்சுக்க மாட்டீங்களே..

    உங்க “யோசனைகளைப்” பார்த்து எனக்கும் ஒரு “யோசனை” வந்தது.. அது...

    "An idle mind is a devil's workshop..."

    அதையே எனக்கும் திருப்பிச் சொல்லப்படாது, ஆம்மா!! :-)))))

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!