சனி, 14 ஏப்ரல், 2012

ஊசல் பெண்டுலம்


பள்ளிக்கூட நாட்களிலோ அல்லது கல்லூரி நாட்களிலோ நீங்கள், சிம்பிள் பெண்டுலம் பரிசோதனை நடத்தி இருப்பீர்கள். அல்லது உங்கள் பௌதிக ஆசிரியர் (வாஞ்சிநாதனோ அல்லது வரதராஜனோ அல்லது ராமமூர்த்தியோ) உங்களுக்கு ஊசல் பெண்டுலம் பற்றிய பரிசோதனையையும், L / T * T = K என்பதையோ நிரூபித்துக் காட்டி இருக்கலாம். ஒரு ஜி (2G இல்லை) கண்டுபிடிக்கக் கூட அந்தப் பரிசோதனையை நீங்கள் செய்திருப்பீர்கள்! 



இந்தப் பரிசோதனையில், ஊசல்களைக் கணக்கெடுக்கும் பொழுது, குண்டு, மேலே காட்டப் பட்டிருக்கின்ற, நடு நிலையான B என்னும் நிலையில் ஆரம்பித்து, மீண்டும், அதே நிலைக்கு, அதே திசையில் பயணிக்கும் நிலை வரும்பொழுது, ஒன்று என்று (B > C + C > B + B > A + A > B = 1) ஆரம்பித்து, பிறகு இதே வகையில், தொடர்ந்து கணக்கீடு செய்வார்கள். 

கணக்கீடு செய்வதற்கு, 'A'  நிலையையோ அல்லது 'C' நிலையையோ ஏன் எடுத்துக் கொள்வதில்லை? 

கணக்கீடு செய்ய 'B' யை தொடக்க / முடிவு நிலையாக வைத்துக் கொள்வதற்கும், வருடத்தின் முதல் நாளாக சித்திரை முதல் தேதியை வைத்துக் கொள்வதற்கும் ஓர் ஒற்றுமை உள்ளது. அது என்ன? 
                      

11 கருத்துகள்:

  1. ஊசலின் A மற்றும் C முனை குறுகிக்கொண்டே வரும் நிலையில்லாதது மற்றும் மையத்தில் தான் நிலையாற்றல் சம அளவில் இருக்கும்

    பதிலளிநீக்கு
  2. சின்ன வயசுலயே நான் வீக்கா இருந்தது கணக்கில மட்டும் தானாக்கும்... இந்த விஷயத்துக்கு நான் சரியான ஆளில்லை... எஸ்கேப்!

    பதிலளிநீக்கு
  3. என்ன புதுவருட சாப்பாடு சற்று அதிகமோ? தூக்கம் வராமல் போய்விட்டதா? வழக்கம் போல தலையை குடையும் வேலைதான். இருந்தாலும் ரசமாக உள்ளதே(வேப்பம் பூ ரசமல்ல )

    நீங்கள் விளக்கிய படி போன்றும் கொள்ளலாம் வேறுவிதமாகவும் ஊசலை அளக்கலாம்.
    அதாவது ஒரு முனையில் இருந்து ஆரம்பித்து மைய புள்ளியை கடந்து அடுத்த மறு முனை சென்று மீண்டும் அங்கிருந்து மைய புள்ளியை கடந்து மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே ஊசல் வருவதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். எனினும் இவைகள் இரண்டின் மூலம் கிடைக்கும் விடையோ ஒன்றுதான்.

    சரி, நீங்கள் இங்கு விளக்க வந்த செய்தியே வேறு. பூமி பந்து சூரியனை சுற்றும் பாதை நீள் வட்டம். குறுக்கு வாட்டிலோ அல்லது நெடுக்காகவோ குறுகி அல்லது அகன்று விரியும் பாதையில் சமமான ஒரு புள்ளி வேண்டும் அப்போதுதான் பூமியின் ஒரு வருட சுழலில் ஒரு குறிப்பிட்ட இடத்தை மையமாக வைத்து ஒரு வருட காலத்தை சமமாக ஆறு ஆறு மாதங்களாக பிரிக்க இயலும்.

    சித்திரை முதல் நாள் அது போன்ற ஒரு நாடு நிலையான இடத்தை பூமி அடைகிறது.எனவே அதனை ஆண்டின் தொடக்கமாக கொண்டிருக்கலாம்.

    ஒரு வேலை பூமியின் சுழல் பாதை ஒரு ஒழுங்கான வட்ட பாதையில் இருந்திருந்தால்
    கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்களுக்கு வீண் வேலைகள் இல்லாமல் போயிருக்கும்.

    ஏதோ தோன்றியதை சொன்னேன். அடிக்க வராதீர்கள்.

    பதிலளிநீக்கு
  4. பூமி சூரியனை நீள் வட்ட பாதையில் வலம் வருவதால் தான் பருவ காலங்கள் என்பது சாத்தியம் என்பதை நினைவில் கொள்ளவும்.

    பதிலளிநீக்கு
  5. யார் யாருக்கு எவ்வளவு மூளை இருக்கெண்டு எங்களோட அறிவைக் கணக்கெடுக்கப்போட்ட கணக்குப்போலத்தான் இருக்கு.என்ன ஒரு புத்திசாலித்தனமப்பா !

    பதிலளிநீக்கு
  6. Thanks கக்கு - மாணிக்கம் ....

    // பூமி சூரியனை நீள் வட்ட பாதையில் வலம் வருவதால் தான் பருவ காலங்கள் என்பது சாத்தியம் என்பதை நினைவில் கொள்ளவும். //

    I remember to have read that the inclined angle about its own axis (of earth) causes seasonal changes..

    May be the combination what you said, and what I said might be the reason.

    Thanks for engal for a nice information

    பதிலளிநீக்கு
  7. ஸயின்சுல கொஞ்சம் வீக்... ஹிஹி...

    நன்றி சுக்கு-மாணிக்கம்!

    பதிலளிநீக்கு
  8. இதெல்லாம் சாய்ராமுக்குத் தான் தெரியும்.

    பதிலளிநீக்கு
  9. பெண்டுலம் படித்தது பிஸிக்ஸ் பாடம்தானே. கைனடிக் எனர்ஜி, பொடென்ஷியல் எனர்ஜி தான் நினைவு இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  10. பூமி தன்னைத்தானே சுழலும் சுழற்சியின் அச்சும், பூமி சூரியனை சுற்றும் பாதையின் தளமும் ஒன்றுக்கொன்று செங்கோணமாக இல்லாமல் செங்கோணத்திலிருந்து 23.44 பாகை சாய்வாக உள்ளதால் பருவகாலம் ஏற்படுகிறது.

    பூமத்திய ரேகையிலிருந்து வடக்கே 23.44 பாகையில் அமைந்த ரேகையை கடகரேகை என்றும் பூமத்திய ரேகையிலிருந்து தெற்கே 23.44 பாகையில் அமைந்த ரேகையை மகரரேகை என்றும் கூறுவார்கள்.

    ஜாதகக் கட்டங்களில் கடக, மகர ராசி எனக் குறிப்பிடப்படுவதும் அதையொட்டித்தான். ஒரு வருட சுழற்சியின் போது பூமி, கடகரேகைக்கும் மகரரேகைக்கும் இடையே உள்ள பகுதிகளை சூரியனுக்கு நேர்குத்தாக அமைத்து கொள்வதைத்தான் சூரியனது பயணம் என்கிறோம்.

    ஒரு வருடத்தில் இந்த பயணத்தில் சூரியன் பூமத்திய ரேகையை இருமுறை (Equinox மார்ச் 20, செப்டம்பர் 22) ஆகிய சம பகலிரவு நாட்களில் கடக்கிறது.

    மகர, கடக ரேகையை ஒருமுறையும் (Soltice டிசம்பர் 21, ஜூன் 21) கடக்கிறது. ஆங்கிலேயர்கள் மகர Soltice ஒட்டி தங்களது புத்தாண்டை வைத்துக் கொண்டனர்.

    தமிழர்கள் நட்சத்திரத்தை வைத்து கணக்கிடப்படும் (Sidereal vernal equinox April 14). ஐ ஒட்டி , அதாவது பூமத்திய ரேகையிலிருந்து, அதாவது 0 டிகிரியிலிருந்து சூரியன் பயணத்தை ஆரம்பிக்கும் போது தங்களது புத்தாண்டை வைத்துக் கொண்டனர். ஆகவே சித்திரை மாதத்தில் (Sidereal vernal equinox April 14). புத்தாண்டை வைத்துக் கொள்வதில் ஒரு நியாயம் உள்ளது. (starting from 0 position)

    பதிலளிநீக்கு
  11. சூரியன் உத்தராயணத்திற்குத் திரும்புதல்

    நனி ஆடல் அனற்கடவுள், யமன், நிருதி, நண்ணு திசை, நாள்கள்தோறும்
    முனியாமல் நடந்து இளைத்து, 'முன்னையினும் பரிதாபம் முதிர்ந்தது' என்று,
    தனி ஆழித் தனி நெடுந் தேர்த் தனிப் பச்சை நிறப் பரியை, சயில ராசன்
    பனியால் அவ் விடாய் தணிப்பான், பனிப்பகைவன் பனி செய்வோன் பக்கம்சேர்ந்தான்.

    வில்லிபாரதம்- வில்லிபுத்தூரார்

    பனிப் பகைவனான சூரியன் ஒப்பற்றதான ஒற்றைச் சக்கரத்தோடு கூடிய தேரினைச் செலுத்தும் பச்சை நிறமுடைய குதிரையை, அதுவரை அக்கினி தேவன், யமன் மற்றும் அரக்கர் குலத்தைச் சேர்ந்த நிருதி ஆகியோரின் இடமான தென் திசையில் சஞ்சரித்துக் கொண்டிருந்தமையால் நேர்ந்த களைப்பைப் போக்குவதற்காக மலை அரசனான இமவானின் பனியால் தன் குதிரையின் தாபத்தைத் தீர்ப்பதற்காக பனி செய்பவனாகிய இமவானின் வட திசை நோக்கித் திருப்பினான்.
    சூரியன் ஆறு மாதங்கள் கிழக்கு திசையில் உதிக்கும் பொழுது அத்திசையின் வடகோடியில் இருந்து சிறிது சிறிதாக நகர்ந்து தென் கோடி வரை வந்து மேற்கு திசையின் தென் கோடியில் இருந்து சிறிது சிறிதாக நகர்ந்து அத்திசையின் வட கோடியில் மறைகிறான். இது உத்திராயணம் என்று கூறப்படுகிறது. அடுத்த ஆறு மாதங்கள் கிழக்கு திசையின் தென் கோடியில் இருந்து சிறிது சிறிதாக நகர்ந்து அத்திசையின் வட கோடியில் உதித்து மேற்கு திசையின் வடகோடியில் இருந்து சிறிது சிறிதாக நகர்ந்து தென் கோடி வரை வந்து மேற்கு திசையின் தென் கோடியில் மறைகிறான். இது தட்சிணாயனம் என்று கூறப்படுகிறது, இந்த சூரியப் பெண்டுலத்தின் சுழற்சியில் முறையே சித்திரை முதல் நாளும், ஐப்பசியின் முதல் நாளும் நேர் கிழக்கில் சூரியன் உதித்து நேர் மேற்கில் மறைகிறான். இந்த நாட்கள் விஷு எனப்படுகிறது. இதில் சித்திரை முதல் நாள் சூரியன் நடுவான கிழக்கு திசையிலிருந்து வடகிழக்கு திசைக்கு நகர ஆரம்பிக்கிறான்.

    இது வரை தென் திசைக்கு அதிபதிகளான அக்கினி (தென்கிழக்கு), யமன் (தெற்கு), நிருதி (தென் மேற்கு) போன்ற உக்கிரமான தெய்வங்களின் அருகாமையால் அவ்வெப்பத்தினால் களைப்படைந்து வேகம் குறைந்த தன் ஒரு சக்கரமே உடைய தேரினைச் செலுத்தும் குதிரையை இமய மலையின் குளிர்ந்த பனியால் அதன் தாகம் தீர்க்கும் பொருட்டு, பனியின் பகைவனாகிய சூரியன், பனியை செய்பவனாகிய இமய மலையை நோக்கிச் செலுத்தினான் என்று, இயற்கையாக நிகழும் சூரியனின் சுழற்சியை, சித்திரை மாதப் பிறப்பை கற்பனை நயத்தோடு இவ்வாறு கூறுகிறார் ஆசிரியர்.

    அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு (நந்தன) வாழ்த்துக்கள்!

    ithu poruththamaka irukkuma?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!