வியாழன், 12 ஏப்ரல், 2012

ஒரு சீறுகதை - பாஹே

              
கையெழுத்து மறையும் நேரம். சூழல் தெளிவாக இல்லை. மங்கலான இருட்டு.
  
'புஸ புஸ' என்று சீறல் ஓயாமல் கேட்க, மரத்தடியில் நின்ற அவர் அச்சத்துடன் சுற்றுமுற்றும் பார்த்தார். 
  
தான் நின்ற இடத்துக்கு வெகு அருகில் உயரமாக இருந்த அந்தப் புற்றில் அப்போதுதான் கண்ணில் படுகிறது.

இப்போது இன்னும் பயம். மரத்தின் கீழ் உதிர்ந்திருந்த இலைச் சருகுகள் காற்றில் எழுப்பும் சலசலப்பு ஓசை அச்சத்தைக் கூட்டுகிறது. 
  
ஓடத் தொடங்கினார். மூச்சிரைக்க இரைக்க...... சரசரவென்று பின்னாலேயே அது வேகமாகப் பாய்ச்சலில் வருவது மாதிரி பயம். 

எதிர்ப்பட்டவர் இவரை நிறுத்துகிறார். "ஏன் இப்படி ஓடறீங்க?" 

"அதோ மரத்துக்குக் கீழே நாகப் புற்று இருக்குதுங்க.... அதுலேயிருந்து 'அது' என்னைத் துரத்திகிட்டே வருது"

"பயப்பட வேண்டாங்க.... அது என் மனைவிதானே!"
   
"என்னது...! பாம்பு உங்க ஒய்ஃபா?"

"ஆமாங்க, இதுல என்ன அதிசயம்... இப்போ என்னை சரியாப் பாருங்க...!"

அவர் திடீரென கீழ்ப்பக்கமாகக் குறுகினார்..... அவர் நின்ற இடத்தில் படமெடுத்து சீறி நின்றது ஒரு நாகம். 
   
அவ்வளவுதான்.... ஒரே பாய்ச்சலில் அவர் மறுபடி ஓடத் தொடங்கினார். 

மெயின்ரோடுக்கு வந்ததும் எதிர்ப்பட்ட கார் நிறுத்தப்பட்டு அதிலிருந்து கீழே இறங்கியவர் வியப்புடன் "அப்பா... அப்பா... உங்களைத்தான் தேடிகிட்டிருந்தேன் ... காலைல கிளம்பினீங்களாம்  .. ரொம்ப நேரமாக் காணோமேன்னு அம்மா கவலைப் படறா"

அவருக்குக் காலின் கீழ் 'புஸ' சீறல் மறுபடி. எதிரே 'மகன்' மாதிரி வந்திருப்பவன் 'அது'வாக இருக்குமோ...
   
பயம்.... பயம்.... பயம்.....

ஏன் இப்படி மறுபடி தலைதெறிக்க ஓடுகிறார் என்று அந்த நிஜ மகன் குழம்பி நிற்கிறான். 
       

13 கருத்துகள்:

 1. சும்மாவே பயம் பயமா கனவு வருது... இப்ப இதை வேற படிச்சனா, இன்னைக்கி தூங்கின மாதிரி தான்...:)

  பதிலளிநீக்கு
 2. //'புஸ புஸ' என்று சீறல் ஓயாமல் கேட்க,//

  //அவருக்குக் காலின் கீழ் 'புஸ' சீறல் மறுபடி..//

  -- பாம்புகள் 'புஸ்.. புஸ்.. என்றல்லவா சீறும்?.. இந்த 'புஸ புஸ'வைப் படித்ததுமே, அது பாம்பு இல்லை என்று தெரிந்து விட்டது..

  பையனுக்குக் கூட 'நாகு..' என்று பெயர் கொடுத்திருக்கலாமோ என்று தோன்றியது!

  எப்படிப் பார்த்தாலும் அந்த சீறும் தலைப்புக்கே விடாது கைதட்டி அப்படியே பாம்பு என்றாலும் தூரத் துறந்தி விடலாம்!

  பதிலளிநீக்கு
 3. நல்லா ‘படம்’ காட்டுகிறது ‘சீறு’கதை:)!

  பதிலளிநீக்கு
 4. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சார்!

  பதிலளிநீக்கு
 5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 6. நல்லாதான் பயமுறுத்த ட்ரை பண்ணீங்க. ஆனா நான் பயபடல. ஏன்னா, நான் 'நீயா' படம் பாத்திருக்கேன். :)
  கடைசி பாம்பு படம் பாக்க ஜோரா இருக்கு.

  பதிலளிநீக்கு
 7. இப்ப இரவு 1.57.தேவையா இங்க வந்து இந்தப் பதிவை வாசிக்க.பா....ம்...பு !

  பதிலளிநீக்கு
 8. மீனும்மா...நீங்க தைரியசாலிதான்.நம்பறோம்.நாளைக்கு ராத்திரிக்கு தலையணை அடியில கையை வச்சுப் பாத்திட்டுப் படுங்க.படுக்கப்போறப்போ கட்டாயமா இந்தப் பின்னூட்டம் ஞாபகம் வரும் பாருங்களேன் !

  பதிலளிநீக்கு
 9. நாளைக்காவது ராத்திரியாவது, இப்பங்க! இப்ப இங்க ராத்திரி எட்டரை மணி. ஏதோ தெரியாத்தனமா இப்ப இந்த கதையை படிச்சுட்டேன். உள்ளுக்குள்ள கொஞ்சம் உதறலா இருந்தாலும், வெளிலயாவது கொஞ்சம் தைரியமா இருக்கா மாதிரி பாவ்லா பண்ணலாம்னா, நீங்க இப்படி எல்லாம் கிளப்பி விடறீங்களே!
  ஏன் ஹேமா ஏன்! :) உங்களுக்கு ஒண்ணு தெரியமா, நான் எப்பவுமே தூங்க போகும்போது தைரியமா தூங்கிடுவேன். ஆனா பாதி ராத்திரி முழிப்பு மட்டும் வந்துது அவ்வளவுதான், போச்சு! இதெல்லாம்தான் ஒண்ணு மாத்தி ஒண்ணா சொல்லிவெச்சா மாதிரி வரிசையா ஞாபகம் வரும்.
  உங்களுக்கு இன்னொரு நடந்த விஷயம் சொல்றேன். இந்த கதையை விட பயமா, த்ரிலிங்கா இருக்கும். ஆனா இப்ப வேண்டாம். ஏன்னா ஏற்கெனவே உங்களுக்கு ராத்திரி ஒரு மணிக்கு மேல ஆயிடுத்து. நாளைக்கு சொல்றேன். பயப்படமா தூங்குங்க. இதை எனக்கும் நானே சொல்லிக்கறேன். :)

  பதிலளிநீக்கு
 10. பாம்புகள் அதுங்களை நாம தொந்தரவு பண்ணினாதான் கடிக்கும்னு கேள்விப்ப்ட்ருக்கேன். மீனாக்ஷி மேடம் சொன்ன மாதிரி நீயா மாதிரி படமும் பாத்துட்டதால எனக்கு பயமில்லப்பா. எங்கள் ப்ளாக்கைச் சேர்ந்த அனைவருக்கும் என் இதயம் நிறைந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 11. எல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
  நல்ல சொப்பனங்களே வரட்டும்
  அதிசயம் என்னன்னா,
  நான் நேற்று என் தம்பி வீட்டுக்குப் புத்தகங்கள் கொடுக்கப் போயிருந்தேன். அப்பொழுது சிங்கம் காரை நிறுத்தும் வேளையில் பக்கத்து வீட்டுப் புத்தரிலிரிந்த் 3 அடி நீளத்து பழுப்பௌ வர்ணத்தில் பெயர் சொல்லாதது நெளிந்து விரைந்தது.
  நான் அதை மகனிடமும் இவரிடமும் காண்பிப்பதற்குள் அது மறைய, இவர் என் கண் மற்றும் பார்வையைச் சந்தேகிப்பவராக இருப்பதால் அது கீரியா இருந்திருக்கும் என்று சொன்னார்.
  ஏம்பா கீரிக்கும் அதற்கும் வித்தியாசமில்லையா.
  என்னமோ போ ஒண்ணுமே புரியலை. தம்பியிடம் மட்டும் சொல்லிவிட்டு வந்தேன். அங்கே இருக்கிற குப்பை செத்தை மலையைச் சுத்தம் செய்யத் தோட்டக்காரைடம் சொல்லப் போவதாக அவனும் சொன்னான்.
  இங்கே வந்தால் இன்னோன்னு சீறுகிறது:)

  பதிலளிநீக்கு
 12. நல்ல அழகான பயப்டுத்துற கதை

  இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்


  இன்றைய பதிவு50 தேடுஇயந்திரங்களில் உங்கள் பதிவுகளை இனைக்கலாம்

  பதிலளிநீக்கு
 13. இனிய நந்தன வருட வாழ்த்துக்கள் எல்லாருக்கும் !

  மீனும்மா பாம்புக் கதை சொல்லி வையுங்க வந்து கேட்டுக்கிறேன்.அன்பான இனிய நந்தன வருட வாழ்த்துக்கள் உங்களுக்கும் !

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!