சனி, 7 ஏப்ரல், 2012

T N சேஷகோபாலன், கர்ணன், விவேக், ரத்தக்காட்டேரி...வெட்டி அரட்டை.



'அவர்' பார்ப்பதற்கு மிக எளிமையாக இருப்பாராம். கதர் சட்டை, சாதாரண வேஷ்டி என்று. ஆனால் அவர் மிருதங்கத்தை மிகப் பிரமாதமாக வைத்துக் கொள்வாராம். அதற்கு அவ்வப்போது புத்தம் புது ஜிகினா உறைகள் வாங்கிப் போடுவாராம். பார்த்து பார்த்து போஷிப்பாராம். அதற்கு செலவு செய்யத் தயங்க மாட்டாராம். ஒரு முறை திருவையாறில் அவர் வருவதற்கு முன் அவரின் இரண்டு மிருதங்கங்களைப் பையோடு தோளில் சுமந்து வந்து மேடையில் ஒருவர் வைத்தாராம். அதற்கே அந்த இடமே அதிருமளவு கிளாப்ஸாம் . இத்தனைக்கும் 'அவர்' இனிமேல்தான் வரவேண்டும்! நேரில் கண்ட இவருக்கு புல்லரித்துப் போனதாம். 

'அவர்'..பாலக்காட்டு மணி.


கல்யாணி ராகத்தில் அமைந்த ஒரே ஒரு சோகப் பாடல் "துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே.."

இரண்டையும் சொன்னது மதுரை டி என் சேஷகோபாலன். ஜெயா டிவி மனதோடு மனோ நிகழ்ச்சியில். (கொஞ்ச நாள் முன்பு)



அவர் நடித்த (ஒரே) படமான 'தோடி ராகம்' பற்றியும் பேசினார். அதிலிருந்து போட்டுக் காட்டிய ஒரு பாடல் கேட்க நன்றாக இருந்தது.

உடனே நினைவுக்கு வரும் இன்னொரு தகவல் முகாரியில் அமைந்த ஒரே பழைய காதல் பாடல்! (இதற்கான விடையை பின்னூட்டத்துக்கு வாய்ப்பாக வைத்து விடுகிறேன்)

======================================

ஒரு பொதுவான தகவல்...

நான் எந்த ப்ளாக் படித்தாலும் அங்கு தமிழ்மணம், இன்டலி, தமிழ் 10, யுடான்ஸ் உட்பட (அங்கு இணைத்திருக்கும் ) என்னால் போட முடியக் கூடிய எல்லா வோட்டும் போட்டு விடுவது வழக்கம். தவற விடுவது இல்லை! சும்மா ஒரு தகவலுக்கு...

=====================================

சென்ற வாரம் படித்த இரண்டு செய்திகள். ஒன்று சுவாரஸ்யம், இன்னொன்று 'கடுப்பேத்தறார் மை லார்ட்" டைப்! படித்து விட்டு எது எந்த டைப் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!

1) வடநாட்டில் (ஊர் பெயர் மறந்து விட்டதால் பொதுவாகப் போடுகிறேன்...படித்துக் கொஞ்ச நாட்களாகி விட்டது...ஹி...ஹி....) ஒரு டாக்டர் தம்பதி வெளிநாடு செல்லும்போது தன் வீட்டில் வேலை செய்யும் (செய்த?) சிறுமியை வீட்டுக்குள் வைத்துப் பூட்டி விட்டு சென்று விட்டார்களாம். 

2) ஆம்பூர் பக்கம் ரத்தக்காட்டேரி நடமாட்டமாம். இரவு நேரங்களில் வீட்டிலுள்ள பொருட்கள் அந்தரத்தில் பறக்க ஆரம்பிக்க, காற்று பலமாக வீச, வெளியே ஓடிவந்து பார்த்தால் நிறைய வீடுகளில் இது போலவே நடந்திருப்பது தெரிய வந்ததாம். அந்த ஊர் ஆஸ்தான மந்திரவாதியின் ஆலோசனைப்படி 'இன்று போய் நாளை வா...' என்று தமிழில் பாடி, ச்சே, எழுதி திரிசூலம் படம் போட்டிருக்கிறார்களாம்..

உள்ளே உறங்கிக் கொண்டிருந்த ரத்தக் காட்டேரியை எங்கள் ப்ளாக் பதிவு தட்டி எழுப்பி விட்டு விட்டதோ....! மூன்றாம் சுழியிலும் உலவப் போயிருக்கிறதே....!

===================================

சமீப காலத்தில் அடிக்கடி முணுமுணுக்கும் வரிகள்....  
"முத்தமிட்ட இதழே பாலாக,
முன்னிடை மெலிந்து நூலாக,
கட்டி வைத்த கூந்தல் அலையாக,
கன்னங்கள் இரண்டும் விலையாக..."

======================================

யாரிடமும் சொல்லாமல் (யார் கிட்ட சொல்றது??!!) உள்ளேயே நடத்திய மௌனப் போராட்டத்துக்கு இறுதியில் வெற்றி!

சமீப கால சந்தோஷங்களில் ஒன்றாக கூகிள் பின்னூட்டங்களைத் தொடரும் வசதியைத் திருப்பி அளித்திருப்பது! எனக்கும் கீதா மேடத்துக்கும்தான் ரொம்ப சந்தோஷம் என்று நினைக்கிறேன்!! 

நன்றி கூகிள்...!

===============================


டிஜிட்டலில் வெளியான கர்ணன் திரைப் படம் தமிழ்நாடு முழுக்க அரங்கு நிறை காட்சிகளாக ஓடுகிறதாம். நல்ல செய்தி! இது பற்றியும், அந்தப் படத்தின் பாடல்கள் பற்றியு ஒரு விரிவான அலசலாகவும் திரு நெல்லை கண்ணனின் புதல்வர், 'மூங்கில் மூச்சு', மற்றும் 'அம்மன் சன்னதி' புகழ்,   குஞ்சுவின் நண்பர் (!) சுகா தன் வேணுவனம் வலைத் தளத்தில் எந்தெந்தப் பாடல்கள் என்னென்ன ராகம் என்று சொல்லி அவற்றைக் கேட்கப் பாடல்களுக்குச் சுட்டியுடன் எழுதியிருக்கும் பதிவு வெகு சுவாரஸ்யம்.  சுகாவின் எழுத்துகளுக்கு இருக்கும் சுவையைக் கேட்கவும் வேண்டுமோ...'சுகா'னுபவம்!

==============================


பொதுவாக விவேக் நகைச் சுவைகளை அதிகம் ரசிப்பதில்லை.  ஜெயா டிவி ஆட்டோகிராஃபில் விவேக்குடன் உரையாடினார் நிகழ்ச்சியை அளிக்கும் சுகாசினி. விவேக் பற்றி அறியாத தகவல்கள் சில அறிந்து கொள்ள முடிந்தது. அவரது நட்பு பற்றி, மனிதம் பற்றி, சிறுவயது சேட்டைகள், திறமைகள் பற்றி.... .  இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாடகர் மனோ கர்ணனில் கிருஷ்ணராக நடித்த என் டி ராமராவ், 'க்ளோசப்' ஷாட்களில் முகத்தை வைத்துக் கொள்ளும், அல்லது முகத்தில் செய்யும் சேஷ்டைகளைப் பார்த்த போது தத்ரூபமாக இருந்தது. சிரிப்பும் வந்தது!


படங்களுக்கு நன்றி கூகிள்.

35 கருத்துகள்:

  1. ரசனை மிகு தொகுப்புகல்.. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  2. எனக்கும் கீதா மேடத்துக்கும்தான் ரொம்ப சந்தோஷம் என்று நினைக்கிறேன்!! //

    same blood! thankeeessssssssssss!!!!

    பதிலளிநீக்கு
  3. Rajarajeswari, திடீர்னு "கல்"லைத் தூக்கிப் போட்டிருக்கீங்களே? கவனிக்கக் கூடாதா? :)))))))))) தப்பாய் எடுத்துக்காதீங்க. :))))

    பதிலளிநீக்கு
  4. டி.என்.சேஷகோபாலனைச் சின்ன வயசிலே இருந்து தெரியும், என் அண்ணாவின் கிளாஸ்மேட். இப்போ நினைவு வைச்சுட்டு இருக்காரோ என்னமோ! :)))))))

    பதிலளிநீக்கு
  5. எண்ணம் எல்லாம் இன்பக் கதை பேசுதே, பாடலா? முகாரி ராகமானாலும் சந்தோஷமான பாடல் இது. படம்??? எம்ஜி ஆர் நடிச்சது. என்னபடம்? திரும்ப வரேன்.

    பதிலளிநீக்கு
  6. வேணு கானம் தென்றலோடு சேர்ந்த பின்னாலே????????????

    பதிலளிநீக்கு
  7. நல்லவேளையா ரத்தக் காட்டேரியை மூன்றாம் சுழி குத்தகைக்கு எடுத்துக் கொண்டது. பிழைச்சோம்.

    பதிலளிநீக்கு
  8. மத்ததுக்கு மத்தவங்க பின்னூட்டம் போடட்டும் னு "பெருந்தன்மையா" விட்டு வைக்கிறேன்.

    நீங்க முணுமுணுக்கிற பாட்டு கேட்டதில்லை; எந்தப் படம்???

    பதிலளிநீக்கு
  9. முகாரி ராகக் காதல் பாடல் என்னவெண்டு இப்போதே சொல்லி விடுவதா...அப்புறம் சொல்வதா...!

    முனுமுனுக்கும் பாடல் விடையையும் சற்று தள்ளிப் போடலாமோ ...! இரண்டையுமே மீனாக்ஷி சொல்கிறாரா என்று பார்க்கத்தான்..!
    நன்றி கீதா மேடம், ராஜராஜேஸ்வரி மேடம்....

    பதிலளிநீக்கு
  10. kandu pidichachu. padam kuzanthai ullam. pattu keta ninaippu illai. anal pazaiya padam. ennadappa engal blog 100kku mele vayase, puthu patu eppadinu yosichen.:))))))

    பதிலளிநீக்கு
  11. பின்னூட்டங்களைத் தொடரும் வசதியா.. என்ன அது? விளக்குங்க ஸார்... நீங்க முணுமுணுக்கற பாடல் எனக்குத் தெரியல. ஆனா நான் முணுமுணுக்கற பாடல்
    ஞாயிறு என்பது கண்ணாக, திங்கள் என்பது பெண்ணாக, செவ்வாய் கோவைப் பழமாக,,, எப்பூடி? வேணுவனம் நான் முதல்லயே படிச்சிட்டேனே..!

    பதிலளிநீக்கு
  12. வேணுவனம் நான் முதல்லயே படிச்சிட்டேனே..! //

    ??????????

    பதிலளிநீக்கு
  13. கணேஷ், இப்போ உங்க பின்னூட்டத்தை என்னோட மெயில் பாக்சிலே பார்த்துட்டு உடனே உங்களைக் கேட்டிருக்கேன் பாருங்க ஒரு கேள்வி; அது பின்னூட்டங்களைத் தொடரும் வசதியால்! :)))))))

    வேணுவனம்னா என்னங்க?? யார் எழுதிய புத்தகம்????

    பதிலளிநீக்கு
  14. கணேஷ்...உங்கள் கேள்விக்கு கீதா மேடம் பதில் சொல்லி விட்டார்... கமெண்ட் பெட்டியில் பப்ளிஷ் பட்டன் கிளிக் செய்யுமுன் கீழே உள்ள ஃபாலோ கமெண்ட்ஸ் பட்டன் கிளிக் செய்தால் இந்த வசதி கிட்டுமே...நீங்கள் அறியாததா என்ன?

    கீதா மேடம், வேணுவனம் மேலே கிளிக் செய்து அந்தப் பக்கம் சென்று படிக்கவும்.

    பதிலளிநீக்கு
  15. எங்கள் ப்ளாக்... இந்த வசதி உண்மையிலேயே நான் அறியாததுதான். விளக்கி உதவிய உஙகளுக்கும் கீதா மேடத்துக்கும் மிக்க நன்றி.

    கீதா மேடம்... வேணுவனம்ங்கறது புத்தகம் இல்ல... திரு.சுகா அவர்களோட ப்ளாக்கின் பெயர்.

    பதிலளிநீக்கு
  16. என்னைப்போலத்தான் நீங்களும் ஒரு பொதுவான தகவல் !

    கர்ணன் படம் எத்தினை தரம் பாத்தாச்சு.இப்பவும் அதே ஆவல் !

    எங்களையும் கேட்டிருக்கலாமெல்லோ என்ன பாட்டு முணுமுணுக்கிறீங்கள் எண்டு !

    பதிலளிநீக்கு
  17. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  18. 'வாடாமலரே தமிழ் தேனே' டி.எம்.எஸ். பானுமதி ரெண்டுபேரும் பாடினது. 'அம்பிகாபதி' படம். சரியா?

    'வேணுகானம் தென்றலோடு சேர்ந்த பின்னாலே' கீதா மேடம் இந்த பாட்டு 'மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு' பாட்டுல வர வரிகள். இதுவும் 'அம்பிகாபதி' படமேதான். ஆனா இது முகாரி ராகம் இல்லை. ருக்மணி தெருவில சேஷகோபாலன் வீட்டுக்கு ரெண்டு வீடு தள்ளிதான் எங்க அம்மா வீடு இருந்துது. எங்க அப்பா அவரோட ரெண்டுமூணு தரம் பேசி இருக்கார்.

    முணுமுணுக்கும் பாடல் நானும் முணுமுணுத்து பாத்துண்டு இருக்கேன். ஆனா தெரியல. நீங்களே கொஞ்சம் சொல்லிடுங்க. 'கன்னங்கள் இரண்டும் விலையாக' வரியை படிக்கும் போதே 'கன்னங்கள் கோடி பெறுமோ' என்னோட favorite பாட்டுதான் ஞாபகம் வருது. :)

    பதிலளிநீக்கு
  19. விடை தெரியாட்டாலும் கண்டுபிடிக்க முயற்சி பண்ண மாட்டோமா! :)
    'முத்துசிபபுக்குள்ளே ஒரு பூ வண்டு'
    http://www.inbaminge.com/t/k/Kuzhandai%20Ullam/Muthu%20Chippikulle.eng.html

    பாடலை ஒரு முறை கூட கேட்டதில்லை. நன்றி கூகிள்!

    பதிலளிநீக்கு
  20. ‘குழந்தை உள்ளம்’ங்கற படத்துல இப்படி ஒரு பாடலா? நான் கேட்டதேயில்லை. எப்படிக் கண்டுபிடிச்சீங்க மீனாக்ஷிம்மா? குருன்னா குருதான்!

    பதிலளிநீக்கு
  21. சரியான விடை middilclaasmaadhavi, மற்றும் மீனாக்ஷி... கூடவே மீனாக்ஷி ஒரு புதிர் போட்டுட்டீங்க...நீங்கள் சொல்லியிருக்கும் ஒரு வரியை வைத்து என்ன பாடல் என்று சொல்ல முடியவில்லை! தேடிப்பிடித்து 'முத்துச் சிப்பிக்குள்ளே' பாடலையும் எடுத்து விட்டீர்கள்!

    கீதா மேடம், மீனாக்ஷி.... சேஷகோபாலனை டாக்டர் KVA கிளினிக்கில் அருகருகில் அமர்ந்து காத்திருக்கும்போது நானும் கிட்டத்தில் பார்த்திருக்கேன்...!! ...

    ஹேமா... என்ன பாட்டு இப்போ நீங்க முணுமுணுக்கறீங்கன்னு கேட்டாத்தான் சொல்லணுமா என்ன... நம்ம செலக்ஷன்ல எப்பவுமே அந்த பாட்டு லிஸ்ட் அப்பப்போ மாறிகிட்டே இருக்கும்...உங்களுக்கும் அப்படித்தானே....இந்த நிமிஷம் என்ன பாட்டு உங்க மனசுல ஓடுதுன்னு சொல்லுங்களேன்...

    பதிலளிநீக்கு
  22. இந்தப் பாட்டு கேட்டுப் பாருங்க கணேஷ்... அழகிய எஸ் பி பி பாடல். ஒரு குறை என்ன என்றால் நல்ல குவாலிட்டியில் இந்தப் பாடல் இணையத்தில் கிடைக்க மாட்டேனென்கிறது. மீனாக்ஷி கொடுத்துள்ள சுட்டியில் நல்ல குவாலிட்டிதான்...ஆனால் ஸ்லோவாகப் போகிறது பாடல்!

    பதிலளிநீக்கு
  23. ரத்தக்காட்டேறி பத்தி மட்டும் நினைக்கவே கூடாது. நினைச்சா போச்சு. ரத்தக்காட்டேறி உலாத்திட்டே இருக்கும். பிலாக்ல எழுதிட்டு இப்ப என்னாச்சு பாருங்க. ஆம்பூர்லந்து அமெரிக்கா வந்துரும். பாத்துட்டே இருங்க. அங்கிருந்து யாருனா அதை அனகாபுத்தூர் அனுப்புற மட்டும் சுத்திட்டே இருக்கும்.

    ரத்தக்காட்டேறிக்கு இட்லி மட்டும் தரக் கூடாது. ஞாபகம் வச்சுங்க.

    பதிலளிநீக்கு
  24. கன்னங்கள் கோடி பெறுமோ,
    கைகளில் ஆடி வருமோ,
    எண்ணங்கள் பொங்கி வருமோ,
    இன்பத்தில் பங்கு தருமோ!

    இப்ப என்ன பாட்டுன்னு தெரியுதா? 'கன்னி நதியோரம்...'

    பதிலளிநீக்கு
  25. kandu pidichachu. padam kuzanthai ullam. pattu keta ninaippu illai.//

    அநியாயம், அராஜகம், அக்கிரமம், முதல்லே நான் சொல்லி இருக்கேன், குழந்தை உள்ளம் படப் பாட்டுனு. மீனாக்ஷிக்குப் பொற்காசுகள் கொடுத்ததை வன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்மையாய்க் கண்டிக்கிறேன்.:))))))))

    ஒரு வேளை குழந்தை உள்ளம்னு சொன்னதை என்னை நானே சொல்லிக்கிறதா நினைச்சுட்டீங்களோ?? :))))))

    பதிலளிநீக்கு
  26. ரத்தக்காட்டேறிக்கு இட்லி மட்டும் தரக் கூடாது. ஞாபகம் வச்சுங்க. //

    அடப் பாவமே, அப்பாவி தங்கமணியோட இட்லியைச் சாப்பிட்டுடுத்தா?? :)))))))

    பதிலளிநீக்கு
  27. கீதா மேடம்.. நீங்களும் சரியான விடை சொன்னீர்கள்தான் ...படம் பெயர் சரிதான். பாட்டு சொல்லலையே...ஹி..ஹி...(தப்பு செஞ்சதை எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு)
    ரத்தக் காட்டேரி உலா மூன்றாம் சுழி பக்கம்தானே...கவலை இல்லை அப்பாதுரை...
    கீதா மேடம், ஆம்பூர்க் காரங்களுக்கு அப்பாவியிடம் சொல்லி இட்லி பார்சல் அனுப்பச் சொல்லலாமோ....! :))))

    பதிலளிநீக்கு
  28. மீனாக்ஷி உங்கள் பாட்டு புதிருக்கு விடை சொன்னதற்கும் நன்றி...

    பதிலளிநீக்கு
  29. //என்னால் போட முடியக் கூடிய எல்லா வோட்டும் போட்டு விடுவது வழக்கம். தவற விடுவது இல்லை//

    வோய்.. இது சுத்த பொய் எனக்கு பின்னூட்டம் போட்டாலும் நீர் ஓட்டு எனும் "மொய்" வைத்து நான் பார்த்ததே இல்லை

    பதிலளிநீக்கு
  30. //பாடல்களுக்குச் சுட்டியுடன் எழுதியிருக்கும் பதிவு வெகு சுவாரஸ்யம்.//

    Yes I too enjoyed that post

    பதிலளிநீக்கு
  31. மோகன்....தஞ்சாவூர் மண் என்று நிரூபிக்கிறீர்களே....!

    பதிலளிநீக்கு
  32. ஸ்ரீராம்: மொய் என்று சிரிப்புக்காக சொன்னேன். உண்மையிலும் கூட தமிழ் ப்ளாக் உலகில் ஓட்டு என்பது மொய் மாதிரி தானே இருக்கிறது ! நமக்கு யார் ஓட்டு போட்டார்களோ அவருக்கு நாம் ஓட்டு போடுவோம் என்கிற கடமை உணர்வுடன் தான் செயல்படுகிறோமே அன்றி எழுத்தின் தரம் பார்த்து யார் ஓட்டு போடுகிறார்?

    பதிலளிநீக்கு
  33. தொடர ரகசியம் இதுதானா!!
    பாட்டு கன்னி விழி மேடையோ?
    மோகன்குமார் சொல்வது பாதி நிஜம். நான் பின்னூட்டம் இடாமலேயே அச்சோ பாவம் என்று படிக்க வருபவர்கள்தான் ஜாஸ்தி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!