சர்க்கரை நோய் என்பது குறைபாடே தவிர, நோயல்ல.
இது மருத்துவர்கள் நோயாளிகளை உற்சாகப் படுத்தச் சொல்லும் வரிகள்.
உண்மையும் கூட!
ஆரம்ப நிலையில் இந்தக் குறையைக் கண்டறிந்து, சரி செய்யாமல் விட்டு விட்டால்தான் அது நோயாகிறது. சரி செய்யாத பட்சத்தில் இரத்த அழுத்தம், கொழுப்பு, இதய நோய்களைத் துணைக்கு சேர்த்துக் கொள்வதோடு, கண்கள் பறி போவது, கிட்னி செயலிழப்பது போன்ற செயல்கள் நிகழ்கின்றன.
கணையத்தில் இன்சுலின் சுரப்பி போதுமான அளவு சுரக்காததே காரணம்.
அடிக்கடி சிறுநீர் கழித்துக் கொண்டே இருப்பதால் நீரிழிவு நோய்.
இரண்டு வகை டைப் 1, டைப் 2.
டைப் ஒன்று என்பது பெரும்பாலும் பெரியவர்களுக்கே வருகிறது. இன்சுலின் இல்லாமல் இந்த நிலையில் சரி செய்ய முடியாது.
டைப் இரண்டு என்பது உணவுக் கட்டுப்பாட்டிலும், சிலசமயம் மாத்திரைகள் துணையோடுமே சரி செய்யப்படலாம். விலை குறைந்த பழைய வகை மாத்திரைகளோடு, விலை கூடிய பலவகை மாத்திரைகள் இப்போது கிடைக்கின்றன.
பிறந்த குழந்தைக்குக் கூட சர்க்கரை நோய் வரலாம். சிறுநீர் கழித்துக் கொண்டே இருப்பதை வைத்தோ வேறு சில அறிகுறிகளை வைத்தோ உடனேயே ரத்தம் சோதிக்கப் படும். சில குழந்தைகளுக்கு ரீடிங் 1000 என்று கூட இருக்குமாம்.
உங்களுக்கு இப்போது நோய் இருக்கிறதா என்று பார்க்கலாம் என்றால் நான்கு முக்கிய கேள்விகள்...
1) வயது என்ன... முப்பத்தைந்து வயதுக்கு மேல் வாய்ப்பு அதிகம்.
2) அப்பா, அம்மா..... யாருக்கேனுமோ, இருவருக்குமேயோ சர்க்கரை நோய் உண்டா.... எனில் வாரிசுகளுக்கும் வாய்ப்பு அதிகம்.
3) உடற்பயிற்சி செய்கிறீர்களா.... இல்லை என்றாலே தப்புத்தான். தினசரி நடைப் பயிற்சியாவது அவசியம்.
4) 'மெஷரிங் டேப்' எடுத்துக் கொண்டு வயிற்றுச் சுற்றளவை அளவெடுங்கள். ஆணாயிருந்தால் 90 (cm)க்கு மேலும், பெண்ணாயிருந்தால் 80 (cm)க்கு மேலுமிருந்தால் சர்க்கரை நோய் இருக்கிறதா என்று பரிசோதிக்கக் கிளம்பி விடுங்கள்.
Fasting Test டில் 110 க்குக் கீழ் ரீடிங் இருந்தால் கவலை இல்லை.
110 முதல் 125 வரை இருந்தால் சர்க்கரை நோய் ஆரம்ப நிலை, பார்டர் லைன், மதில் மேல் பூனை.
125 க்கு மேல் இருந்தால் சர்க்கரை நோய் இருக்கிறது.
Glucose Tolerence Test டில் ரீடிங் 145 க்குக் கீழ் இருந்தால் சர்க்கரை நோய் இல்லை.
150 முதல் 199 வரை ரீடிங் இருந்தால் பார்டர் லைன், அல்லது சர்க்கரை நோய் ஆரம்ப முன் நிலை.
200 க்கு மேல் ரீடிங் என்றால் சர்க்கரை நோய் இ...ரு..க்.கி....ற....து!
இந்த பார்டர் லைன் என்கிற ஆரம்பகட்ட நோய் நிலை இருக்கிறதே... அது கோல்டன் பீரியட். அந்த நிலையில் கண்டறியப்பட்டிருந்தால், உடல் எடையை நாலைந்து கிலோக்கள் குறைத்தாலே நல்ல பாதுகாப்பு. சிலபல வருடங்களுக்கு சர்க்கரை நோயை மறந்திருக்கலாம். உணவுக் கட்டுப்பாட்டிலும் சிறிய உடற்பயிற்சிகளிலும் நோயைத் தூர ஓட்டிடலாம்.
சர்க்கரை நோயில் வைட்டமின் D யின் பங்கு :
வைட்டமின் D சர்க்கரை நோய் வருவதைக் குறைத்து இதய நோய் வருவதையும் தவிர்க்கிறது. வைட்டமின் D குறைபாடு இருப்பின் டைப் 2 சர்க்கரை நோய்க்கு அது இட்டுச் செல்கிறது. இது ஆஸ்திரேலிய ஆராய்ச்சியின் விளைவு. (Dr. Claudia Gagnon). இரண்டாம் வகை சர்க்கரை நோய் வருவதைத் தடுக்கவும், சர்க்கரை நோயைத் தொடர்ந்து இதய நோய் வராமல் தடுக்கவும், எலும்புறுதிக்குத் தேவையான அளவை விட வைட்டமின் D அதிகமாக இருத்தல் நலம்.
[மேலே பகிரப் பட்டிருக்கும் தகவல்கள் பொதிகைத் தொலைக் காட்சியில் அழகாக தலை நரைத்த ஒல்லியான சர்க்கரை நோய் மருத்துவர் சொன்ன தகவல்களிலிருந்து.... பெயர் தெரியாது... ஆரம்பித்துக் கொஞ்ச நேரம் கழித்துதான் பார்த்தேன். வழக்கமாக சித்ரஹார் பார்க்கும் நேரம். பாடல் போரடிக்கவே, பொதிகை வைத்த போது, இந்நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருந்தது! நிகழ்ச்சி முடியும்போது ஒருமுறை பெயர் சொல்வார்கள் என்று எதிர்பார்த்து ஏமாந்ததோடு சரி. அடுத்த புதன் கிழமையும் (இந்திய நேரம்) இரவு ஏழரை மணிக்குத் தொடருமாம் இந்நிகழ்ச்சி.
வைட்டமின் D தகவல் எனக்கு வந்த மெயிலிலிருந்து எடுத்தது]
உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கின்றதா அல்லது வருமா என்று தெரிந்துகொள்ள, கீழே காணப்படும் சுட்டியில் சொடுக்கி, அங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளியுங்கள்.
ஒருத்தரையும் காணோம்!பின்னூட்டம் போட்டால் சர்க்கரைன்னு சொல்லிடுவாங்களோ:)
பதிலளிநீக்குசர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உடற்பயிற்சி அவசியம்.கட்டுப்படுத்த இயலாத நிலையில் இன்சுலின்,மாத்திரைகள் அவசியம்.சர்க்கரையின் அளவு அதிகரிகப்பதாலும்,கவனக்குறைவாலும் காலை இழக்கக் கூடிய அபாயம் இருக்கிறது.
பதிலளிநீக்குநல்ல பதிவு. அனைத்துமே உபயோகமான தகவல்கள். சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் வைக்கப்படாவிடில் கால் மட்டுமல்ல, கண்கள், சிறுநீரகம் இவையும் பாதிக்கப்படும். முக்கியமாக, சிறுநீரில் புரதம் அதிக அளவில் வெளியேறுகிறதா என்பதை அடிக்கடி கவனிக்க வேண்டும். இதைப்பற்றி நானும் விரிவாக பதிவு எழுதியுள்ளேன் கீழ்க்கண்ட இணைப்பில்.
பதிலளிநீக்குhttp://www.muthusidharal.blogspot.com/2012/01/blog-post_25.html
பயனுள்ள பதிவு. இது மாதிரி எழுதினால் சில பேர் உங்களுக்கு சர்க்கரை இருக்கான்னு கேட்பாங்க. :)) கண்டுக்க படாது
பதிலளிநீக்குபின்னூட்டத்துக்கே அப்படி கேட்பாங்கன்னு ராஜ நடராசன் எழுதிருக்கார்
நிகழ்ச்சியை கவனமாகக் கேட்டு தகவல்களைத் தொகுத்துத் தந்திருக்கிறீர்கள். நல்லதொரு பகிர்வு. நன்றி.
பதிலளிநீக்கு//பொதிகைத் தொலைக் காட்சியில் அழகாக தலை நரைத்த ஒல்லியான சர்க்கரை நோய் மருத்துவர் சொன்ன தகவல்களிலிருந்து.... பெயர் தெரியாது...//
பதிலளிநீக்குஒருவேளை நானோ !! ஆனால் நான் ஒல்லி கிடையாதே !!
எனக்கே அந்த தொல்லை உண்டு - இதில் யாருக்கு அறிவுரை கூற எனக்கு அருகதை - மன்னிக்கவும் - அறிவு !!
நடக்கவே நேரம் இல்லாமல் வாழ்க்கை ஓடிக்கொண்டு இருக்கின்றது. என் முப்பத்தைந்து வருட நண்பன் போன மாதம் நாப்பத்தெட்டு வயதில் இறந்து போனான். அவனுக்கும் இந்த குறைபாடு உண்டு. உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று யோசித்து செய்யுமுன் இருந்த இடத்தில் புல் முளைத்துவிடும் போலிருக்கு !!
தனியார் தொலைக்காட்சி வருமுன் அதன் முன்னே உட்கார்திருந்த மக்கள் இப்போது உருப்படாத நடிக / நடிகையரின் ஆட்டத்தை நம்பியுள்ள அங்கே இருப்பதால் பொதிகையில் வரும் நல்ல நிகழ்ச்சிகளுக்கு விளம்பரதாரும் கிடையாது - நான் நிறைய நிகழ்ச்சிகள் இங்கே காண்பேன் (இங்கே இருக்கும் போதும் !) - செய்திகள் இவர்களுடையது யாரையும் சார்ந்து இருப்பதில்லை - அது உட்பட
பயனுள்ள பதிவு.
பதிலளிநீக்குவருமுன் காப்போம்.நல்ல செய்தி !
பதிலளிநீக்குபடம் பார்த்துக் கவிதை தந்த உங்களுக்கு உப்புமடச்சந்தியில் விருது ஒன்று காத்திருக்கிறது.எடுத்துக்கொள்ளுங்கள் ஸ்ரீராம்,கௌதம்,பாஹே !
http://santhyilnaam.blogspot.com/2012/04/blog-post_17.html
வைட்டமின் டி பற்றின தகவல் மிகவும் பயனுள்ளது. தனியே கிடைக்குமான்னு பார்க்கணும்.
பதிலளிநீக்குகைகால் மரத்துப் போவதற்கும் என்ன பரிகாரம்னு பார்க்கணும். ஏற்கனவே ஏகப்பட்ட மாத்திரைகள்.:) வெகுவாகக் கவனம் எடுத்துக் கொள்ளவேண்டிய விஷயம்.பொதிகை நானும் பார்ப்பேன். இந்த ஒளிபரப்பைப் பார்க்கவில்லை. செய்திக்கு மிகவும் நன்றி.
நன்றி ராஜ நடராஜன்... யார் என்ன நினைத்தால் என்ன? இருப்பதாக நினைத்தால்தான் என்ன...சர்க்கரையால் பாதிக்கப் படுவோர் எண்ணிக்கை ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டே வருகிறது... வருமுன் காப்பது நல்லதுதானே...
பதிலளிநீக்குமனோ மேடம்...உங்கள் பதிவு படித்தோம்...பயனுள்ள தகவல்கள்... ரொம்ப டெக்னிகலாக பயமுறுத்தாமல் பொதிகையில் நான்கு வரிகளில் அவர் விளக்கியது சுவாரஸ்யம். இந் நிகழ்ச்சியின் தொடர்ச்சி இன்று (18/4 IST) இரவு ஏழரை மணிக்கு பொதிகையில் காணலாம்!
யார் சிரித்தால் என்ன, இங்கு யார்...என்ன நினைச்சால் என்ன...! மோகன் குமார்...! நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.
நன்றி ராமலக்ஷ்மி
//எனக்கே அந்த தொல்லை உண்டு - இதில் யாருக்கு அறிவுரை கூற எனக்கு அருகதை - மன்னிக்கவும் - அறிவு !! //
அவதிப் படறவங்கதான் இன்னும் அழுத்தமா அடுத்தவங்களுக்குச் சொல்லலாம் சாய்...நீங்கள் சொல்வது போல பொதிகையில் நிறைய நல்ல நிகழ்ச்சிகள் வருகின்றன... ஆனால் செய்திகள் யாரையும் பாதிக்கக் கூடாது, நடு நிலை என்ற பெயரில் உப்புசப்பில்லாமல் இருக்கும்.
நன்றி மோ சி பாலன், .
ஹேமா.. விருதுகளுக்கும் சேர்த்தே நன்றி!
வல்லி மேடம்... வைட்டமின் டி சூரிய ஒளியில் கிடைக்காததா... ஊசிகளாகவும் கிடைக்கின்றன...உங்கள் குடும்ப மருத்துவர் ஆலோசனை கேட்டு எடுக்கலாமே...கைகால் மரத்துப் போவதைத் தடுக்க நிறைய தண்ணீர் குடித்து வாக்கிங்
போனாலே பயனிருக்கும் என்கிறார் 'எங்கள்' ஆசிரியர்களில் ஒருவர். மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்! நிறைய வெங்காயம் சமையலில் சேர்ப்பது, அதுவும் இந்தக் கோடைக்கு, நிறைய பயனளிக்கும். இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் பொதிகையில் இன்று இரவு ஏழரை மணிக்கு இருக்கிறது. பாருங்கள்!
ஆமாம்...கீதா மேடம் எங்கே ஆளையே காணோம்...
பதிலளிநீக்குகீதா திருச்சியில் இருந்து நாளை வந்துவிடுவார். பால் காய்ச்சி சாப்பிட்டாச்சு. இன்று ஆநந்தம் ஸ்பீட் போஸ்டில் அவங்களுக்குப் போய்விடும்:)
பதிலளிநீக்குசூரிய ஒளியில் விட்டமின் டி கிடைக்கும்னு ஐந்தாவதில் படித்திருக்கிறேன்:)
வயசாச்சு இல்லையா மறந்து போய்விட்டது. வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம். மிகவும் நன்றி எங்கள் ப்ளாG. இன்றைக்குப் பொதிகை விசிட் உண்டு.
நல்ல பகிர்வு
பதிலளிநீக்குதொடரட்டும் உங்கள் பணி
உபயோகமான பகிர்வு.அவசியமான தகவல்கள்.பக்ர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குfor more information you can visit www.sugarfreekovai.blogspot.in
பதிலளிநீக்குthis blog explains all about diabetics
Very useful info especially for my mother.thanks.
பதிலளிநீக்குNice information. Thanks Engal Blog. Heard about Vitamin D's role in Type 2 Diabetes. Just a little info to add to that - Type 2 diabetes mostly effects pregnant women (which is also called Gestational Diabetes. They must consult with "Endocronologist" and control the sugar levels. Otherwise, it will effect the baby as well mother
பதிலளிநீக்கு//'மெசரிங் டேப்' //
பதிலளிநீக்குமெஷரிங் டேப் தானே? உங்களுக்குக் கூட 'ஷ' அவர்ஷன் உண்டா?.. ஆங்கில வார்த்தையை எழுதும் போது கூட தமிழ் அபிமானமா? அந்த அபிமானம், ஆங்கில வார்த்தைகளை அப்படியே எழுதுவதில் இல்லையே,ஏன்?
எப்படியோ போகட்டும். பதிவை, பகிர்ந்து கொண்டிருப்பதோடு அடுத்த 'பொதிகை' நிகழ்ச்சியையும் பாதிப்புற்றோர் நேரடியாகப் பார்த்துத் தெரிந்து கொள்ள தகவலளித்திருப்பது
உங்கள் அக்கறையைக் காட்டுகிறது.
இன்னொன்று. மருத்துவ சமாச்சாரங்களை மேலோட்டமாக வேனும் எப்படி நேரேட் செய்வது என்பதற்கு இந்தக் கட்டுரை ஒரு எடுத்துக்காட்டு-- அந்த மருத்துவர், 'பொதிகை'பொறுபாளர்கள் எல்லாரும் பொறாமைப்படும் அளவிற்கு பிரமாதம்.
//மெஷரிங் டேப் தானே?//
பதிலளிநீக்குCorrected Sir! Thank U!
என்னோட ஓட் எப்போவும் பொதிகைக்கே! தூர்தர்ஷன் லோக்சபா சானலும் பாருங்க. நல்ல நல்ல நிகழ்ச்சிகளெல்லாம் வருது. முக்கியமா நல்ல சினிமாக்கள். :))))
பதிலளிநீக்குசர்க்கரை பத்தி எழுதினதும் என்னோட நினைவு வந்ததுக்கு நன்றி. தகவல் தெரிவித்த வல்லிக்கும் நன்றி. :))))) சர்க்கரை பற்றிய என்னுடைய இரு பதிவுகளின் சுட்டியும் அப்புறமாத் தரேன்.
பொதிகையில் ஒவ்வொரு வியாழனும் (மாலை நான்கு மணிக்கு) திரு கிஷோர் அவர்களின் சமையல் குறிப்புகள் குறிப்பாக மூலிகைகள் குறித்த தகவல்களோடும், முக்கியமான உணவுகள் குறித்த விழிப்புணர்ச்சி நிகழ்ச்சியாகவும் மாலை நான்கு மணிக்குப் பார்க்கலாம். மூலிகைக்கீரைகளில் சமைப்பது குறித்தும் செய்முறை விளக்கங்கள் உண்டு.
பதிலளிநீக்குpathivukku nandri
பதிலளிநீக்குநல்ல பகிர்வு.
பதிலளிநீக்கு