புதுக்கோட்டை இடைத் தேர்தல் ஆளும் கட்சி சுறுசுறுப்பாகக் களத்தில் இறங்கி விட்டது என்றும் கம்யூனிஸ்ட் பார்ட்டி திகைத்து முதல்வரிடம் பேசுவோம் என்றும் சொல்வதாகச் செய்தி! எங்களுக்குத் தோன்றுவது...
ஆளும் கட்சி: விட்டுக் கொடுக்க வேண்டும்
ஏற்கெனவே போட்டியிட்டு வென்றிருந்த கட்சி : ஆளும் கட்சியைக் கூட்டணிக்குக் கெஞ்சாமல் மறைந்த தன் கட்சி வேட்பாளரின் எளிமையை நம்பி தைரியமாக தனியே நிற்க வேண்டும்.
முக்கிய எதிர்க் கட்சி : இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் ஆகாமலிருக்க எதிர்த்து வலுவான ஆளை நிறுத்த வேண்டும். ...
தேர்தல் ஆணையம் : ஆளும் கட்சி உட்பட எந்தக் கட்சி விதிமுறைகளை மீறினாலும் பணம் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(இந்தப் பதிவு வலையேற்றிய பின் ஆளும் கட்சி வேட்பாளரையே அறிவித்து விட்ட செய்தி வந்துள்ளது!)
(இந்தப் பதிவு வலையேற்றிய பின் ஆளும் கட்சி வேட்பாளரையே அறிவித்து விட்ட செய்தி வந்துள்ளது!)
--------------------------------------------------------------------------------------
வெட்டி அரட்டையில் கர்ணன் செய்தி வராவிட்டால் எப்படி?
கர்ணன் திரைப்படம் தமிழகமெங்கும் அரங்குநிறைக் காட்சிகளாக ஓடுவது ஆங்காங்கு படிக்கும் செய்திகளில் தெரிகிறது.
மறுபடியும் அதே கதையை மணிரத்னம் எடுத்தார் 'தளபதி'யாக. இந்த இரண்டு நவீன கர்ணனுக்கும் இசை இளையராஜா... பட்டாக் கத்தி பைரவன் பாடல்கள் இனிமையானவை. (எங்கெங்கோ செல்லும், யாரோ நீயும் நானும் யாரோ, தேவதை ஒரு தேவதை) பொதுவாகச் சொல்லப் போனால் மூன்று படங்களிலுமே பாடல்கள் பெரிய ஹிட்.
========================================================
ரத்தக்காட்டேரி விஜயம்...
செய்தித்தாள் செய்தி.... அப்பாதுரை கவனிக்கவும். வேலூர், ஆம்பூர் என்று முன்னேறிக் கொண்டிருந்த ரத்தக் காட்டேரி காஞ்சிபுரம் வந்து விட்டது. . சென்னைக்குள் புக சில நாட்களே உள்ளன போலும்.... கதவில் எழுத வேண்டும்...
அதைத் தடுக்க நடந்த பூஜையில் நாற்பது பவுன் நகையுடன் பெண் கடத்தல் என்றும் செய்தி மேலும் கூறுகிறது!
====================================================
நண்பர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். பேசிக் கொண்டிருந்தோம். திடீரென அவர் அலைபேசி உள்ளே எங்கேயோ அடிக்கும் சத்தம் கேட்டது. விரைந்து எழுந்து சென்றவர் வழியில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த அவர் மகனைத் தாண்டிக் குதித்துச் சென்று அலைபேசியை எடுத்துப் பேசினார்.
அவர் தாண்டிச் செல்லும்போதே "அப்பா" என்று குரல் கொடுத்த மகன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.
பேச்சு நீண்டு கொண்டே போனது. அப்போது மகனின் நண்பன் வந்து இவனை அழைக்க, அவன் சற்றுத் தயங்கி தன் அப்பாவைப் பார்த்துக் கொஞ்சம் காத்திருந்தவன் அப்புறம் அவனிடம் பேசப் போனான்.
நண்பர் பேசி முடித்து விட்டு என்னிடம் வந்து விட, தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். நண்பனிடம் பேசி விட்டுப் பழைய இடத்துக்குத் திரும்பிய அவர் மகன் அங்கிருந்தே தன் அப்பாவுக்குக் குரல் கொடுத்தான்.
இவர் கவனிக்காது பேச்சில் ஈடுபட்டிருந்தார். போதிய இடைவெளிகளில் அவர் மகன் அழைத்துக் கொண்டே இருந்தான்.
"பையன் கூப்பிடறான் போலேருக்கே.." என்றேன்.
"அவன் கிடக்கான்.." என்றவர், அவன் பக்கம் திரும்பி "உதைக்கப் போறேன்" என்று குரல் கொடுத்தார்.
அவன் எழுந்து வந்து விட்டான்.
"வாப்பா.... ஒரு தரம் தாண்டிட்டே.... போய் அங்கேயே உட்கார்றேன் மறுபடி அந்தப் பக்கத்துலேருந்து தாண்டிடுப்பா..." என்றான்.
விஷயம் இதுதான்...... உட்கார்ந்திருக்கும் நபர்களின் காலைத் தாண்டக் கூடாதாம். தாண்டினால் மறுபடி இந்தப் பக்கம் தாண்டி விட வேண்டுமாம்!
அவன் மறுபடி பழைய இடத்தில் உட்கார்ந்து, நண்பர் மறுபடி அந்தப் பக்கத்திலிருந்து தாண்டும் வரை அவன் அவரை விடவில்லை!
அப்புறம் இதற்கு விளக்கமாக நண்பர் சொன்ன தகவல் இது. சிரிப்பாய் வந்தது.
"எங்கேருந்துதான் கிடைக்குதோ இவனுக்கு இது மாதிரி விஷயங்கள்.... இது பரவாயில்லை.... கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும், 'மிதிச்சிட்டேன், கால் பட்டிடுச்சி'ன்னுட்டு தாண்டிட்டுப் போற எல்லாத்தையும், எல்லாரையும் தொட்டுத் தொட்டுக் கும்பிடுவான்...நிறுத்தவே முடியாது. பேசும்போது எச்சல் தெறிச்சிடுச்சின்னுட்டு அவங்களை ஸாரி கேட்டே கொன்னுடுவான்... அவங்களைத் தொட்டுத் தொட்டு தன்னோட தாவாங்கட்டையைத் தொட்டுக்குவான்.... அப்புறம் ஏதாவது வேலையைத் தொடங்குமுன் கழுத்தில் இருக்கும் டாலரை ஆயிரம் முறை தொட்டுத் தொட்டுக் கண்ல ஒத்திக்குவான்... ஐயோ திட்டித் திட்டி இப்போ இது மட்டும்தான் மிச்சம்..."
=========================================
கல்விமுறையில் மாற்றம் செய்ய வேண்டுமா, மாணவர்களுக்கு மனவுறுதிப் பாடம் எடுக்க வேண்டுமா தெரியவில்லை... இந்த வாரம் இன்னொரு மாணவி கல்வியின் கனத்தைத் தாங்க முடியாமல் தற்கொலை. செய்த செயலுக்கு பொருத்தமில்லாத பெயர். தைரியலட்சுமி.
இவ்வாறு செய்பவர்கள் மற்ற மாணவ, மாணவியருக்கு மோசமான முன்னுதாரணம் ஆகிறார்களா, தெரியவில்லை. கல்விக் கூடங்களும் பெற்றோர்களும் உடனே கவனிக்க வேண்டிய விஷயம்.
நன்னெறி வகுப்புகள் இப்போதெல்லாம் நடக்கின்றனவா தெரியவில்லை. பள்ளிக் காலத்திலிருந்தே மாணவர்களின் மனவுறுதியைக் கூட்ட முயற்சிகள் எடுக்க வேண்டிய நேரம் இது.
இந்தப் பதிவு எழுதி நான்கைந்து நாட்கள் ஆன நிலையில் இன்றைய செய்தித் தாள் செய்தி உட்பட எல்லா நாட்களிலும் பத்தாம் வகுப்பு மாணவர், பொறியியல் கல்லூரி மாணவர் (பைக் வேகமாக ஓட்டக் கூடாது என்று மாமா சொன்னாராம்) ப்ளஸ் டூ மாணவி என்று தினமுமே ஒரு தற்கொலையாவது நடந்து வருகிறது. இதற்கு எப்படி உடனே முற்றுப் புள்ளி வைப்பது?
=========================================
கல்விமுறையில் மாற்றம் செய்ய வேண்டுமா, மாணவர்களுக்கு மனவுறுதிப் பாடம் எடுக்க வேண்டுமா தெரியவில்லை... இந்த வாரம் இன்னொரு மாணவி கல்வியின் கனத்தைத் தாங்க முடியாமல் தற்கொலை. செய்த செயலுக்கு பொருத்தமில்லாத பெயர். தைரியலட்சுமி.
இவ்வாறு செய்பவர்கள் மற்ற மாணவ, மாணவியருக்கு மோசமான முன்னுதாரணம் ஆகிறார்களா, தெரியவில்லை. கல்விக் கூடங்களும் பெற்றோர்களும் உடனே கவனிக்க வேண்டிய விஷயம்.
நன்னெறி வகுப்புகள் இப்போதெல்லாம் நடக்கின்றனவா தெரியவில்லை. பள்ளிக் காலத்திலிருந்தே மாணவர்களின் மனவுறுதியைக் கூட்ட முயற்சிகள் எடுக்க வேண்டிய நேரம் இது.
இந்தப் பதிவு எழுதி நான்கைந்து நாட்கள் ஆன நிலையில் இன்றைய செய்தித் தாள் செய்தி உட்பட எல்லா நாட்களிலும் பத்தாம் வகுப்பு மாணவர், பொறியியல் கல்லூரி மாணவர் (பைக் வேகமாக ஓட்டக் கூடாது என்று மாமா சொன்னாராம்) ப்ளஸ் டூ மாணவி என்று தினமுமே ஒரு தற்கொலையாவது நடந்து வருகிறது. இதற்கு எப்படி உடனே முற்றுப் புள்ளி வைப்பது?
நன்னெறி வகுப்பா? போங்க சார். என் பெண்ணுக்கு வாரம் ஒரு PT கிளாஸ் கூட கிடையாது. அனைத்து வகுப்புகளும் பாடம் மட்டுமே !
பதிலளிநீக்குநாம் படிச்சப்ப டிராயிங்குக்கு ஒரு கிளாஸ் இருக்கும். craft-க்கு கூட வாரம் ஒரு கிளாஸ் உண்டு. ஆண்கள் மரத்தை போய் இழைப்பார்கள். அதே நேரம் பெண்கள் தையல் கிளாஸ் போவார்கள். பள்ளிகளில் கிராப்ட் வாத்தியார், தையல் டீச்சர் எல்லாம் இருந்தாங்க. நன்னெறி வகுப்பில் எனக்கு தெரிந்து மகாபாரதம் மாதிரி கதை தான் சொன்னாங்க
நிற்க கல்லூரி பசங்க தற்கொலை சீரியஸ் விஷயம் தான்.
பட்டா கத்தி பைரவன் பார்த்திருக்கேன். கர்ணன் கதை என்கிற மாதிரி நினைவில்லை. அப்போல்லாம் சிவாஜி திருடனா வந்தா கூட கோட் தான் போடுவார். நீங்க சொன்ன எங்கெங்கோ செல்லும் பாட்டிலும் கோட் உடன் தான் நடித்திருப்பார். இந்த படம் செம பிளாப் என ஞாபகம்
புதுக்கோட்டை? ஓவரா ஆசைப்படுறீங்க ஆளும் கட்சி நிற்கும் ஜெயிக்கும்
முதல் பின்னூட்டம் போட்டு வடையை அபேஸ் பண்ணதுக்கும் விரிவான பின்னூட்டத்துக்கும் ஸ்பெஷல் பரிசு உண்டா? :))
பதிலளிநீக்குintha vaaram ettettu eillaya..
பதிலளிநீக்குஉங்கள் நண்பர் வீட்டு சின்னைப்பையனின் நம்பிக்கை அசரடித்துவிட்டது.
பதிலளிநீக்கு// @ மோகன் குமார் (who)said...
பதிலளிநீக்குமுதல் பின்னூட்டம் போட்டு வடையை அபேஸ் பண்ணதுக்கும் விரிவான பின்னூட்டத்துக்கும் ஸ்பெஷல் பரிசு உண்டா? :)) //
பரிசா... இங்கலாம் பாயிண்ட்டு மட்டும்தான் கெடைக்கும்..
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குநல்ல பகிர்வு நண்பா.
பதிலளிநீக்குஏற்கெனவே போட்டியிட்டு வென்றிருந்த கட்சி : ஆளும் கட்சியைக் கூட்டணிக்குக் கெஞ்சாமல் மறைந்த தன் கட்சி வேட்பாளரின் எளிமையை நம்பி தைரியமாக தனியே நிற்க வேண்டும். //////
சொல்வது சரிதான் நண்பரே.இதற்கு முன் இருந்தவர் நல்லவராமல்லவா
தொடரும் மாணவர் தற்கொலைகளைத் தடுக்க பள்ளிகளும் பெற்றோரும் புரிதலுடன் மாணவர்களை அணுகுதல் அவசியமாகிறது. பரபரப்பான உலகம் எதைதான் சீரியஸாக எடுத்துக் கொள்கிறது? செய்திகளாகக் கடந்தபடி...:((!
பதிலளிநீக்கு//"எங்கேருந்துதான் கிடைக்குதோ//
வீட்டுப் பெரியவர்களிடமிருந்துதான் கிடைச்சிருக்கும்:)!
ஏன், வருத்தம் தாங்காம ரத்தக் கலரா பதிவு?! :-))
பதிலளிநீக்குமாரல் சயின்ஸ் கிளாசெல்லாம் மாத்சுக்கும் சயின்சுக்கும் போயிடுதே! புராணக் காரக்டர் யார் பெயராவது குழந்தைகளிடம் கேட்டுப் பாருங்கள்! (நாம் வீட்டில் சொல்லிக் கொடுத்தால் தான் உண்டு!)
பட்டாக் கத்தி பைரவனை இன்னும் ஞாபகம் வெச்சிருக்கீங்களா? எங்கெங்கோ செல்லும் பாட்டு எஸ்.பி.பி.யால இப்பக் கேட்டாலும் இனிமைதான். விஷுவலாப் பாக்கத்தான் கஷ்டம். தொப்பை வெச்சு, கோட் போட்ட சிவாஜி அவர் வயசுல பாதி இருக்கற (இருந்த) ஜெயசுதாவோட டூயட்? கொடுமைடா சாமி!
பதிலளிநீக்குஅப்பாஜி...கவனிக்கவும்.இரத்தக்காட்டேரி !
பதிலளிநீக்குநம்பிக்கை நம்ம வீட்லயும் இதேமாதிரி நடந்திருக்கு.ஞாபகம் வருது.தாண்டின ஆளுக்குக் கட்டு வருமாம் !
//தடுக்க நடந்த பூஜையில் நாற்பது பவுன் நகையுடன் பெண் கடத்தல்
பதிலளிநீக்கும்.
பட்டாக்கத்தி பைரவனெல்லாம் பார்க்கக்கூடாது. இதே ரேஞ்சில் வந்த தொப்பை சினிமாக்கள் எதுவும் பார்க்கக் கூடாது.
பதிலளிநீக்குஏன் தான் ஒத்துக் கொண்டு நடித்தாரோ. திரிசூலம் படத்தில் அப்பா மட்டும் நல்லா இருப்பார். மற்ற இரண்டு சிவாஜிகளும் சுமார்.
மாரல் சயன்ஸ், பிடி பீரியட், மியூசிக் ச்ளாஸ், சோயிங் க்ளாஸ். எல்லாம் உண்டு, சந்தோஷமான நெரங்கள்.
தற்கொலைகள் பாதி. ஏரிகளில்,குளங்களில் மூழ்கும் ஸ்டூடெண்ட்ஸ் ஒருபக்கம். என்ன ஆச்சு நம்ம ஊருக்கு.