இந்த தடவை ரொம்ப சிம்பிள் கேள்விகள் கேட்டு விடுகிறோம். கீழே, மூன்று படங்கள் கொடுக்கப் பட்டுள்ளன. அனைத்துமே நெட்டிலே சுட்டவைகள்தான்.
ஒவ்வொரு படத்தின் மீதும் ஆங்கிலத்தில் இரண்டு வரிகள் எழுதப்பட்டுள்ளன. தமிழ்ப் படங்கள்தான். அநேகமாக பாடல் காட்சிகள் என்று தோன்றுகிறது.
நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் இவ்வளவுதான்:
ஒவ்வொன்றும் என்ன (தமிழ்) பாடல் என்று எழுதவேண்டும். இங்கே காணப்படுவது எந்த வரிகள் என்று எழுதினாலும் ஓ கே. ஒவ்வொரு படத்தைப் பற்றியும் சுவையான மேலதிக தகவல்கள் பகிர்வோருக்கு சி சி சி பட்டம் அளிக்கப்படும். (சி சி சி = சினிமா உலக சிந்தனை சிற்பி!)
பங்கு பெறுங்கள்; பட்டம் பெறுங்கள்! வாழ்த்துகள்!
பறக்கும் பந்து பறக்கும் பாட்டுனு நினைக்கிறேன். டென்னிஸ் கோர்ட் தெரிகிறது.
பதிலளிநீக்கு''சிரிக்கும் அழகு சிரிக்கும் அது சிரித்தோடி வரும் மாது'' :)
முதல் பாட்டு ஆச்சா.
ரெண்டாவது....
''நெத்தியில பொட்டு வச்சேன்
உன் நெஞ்சை அதில் தொட்டு வச்சேன்''
என்ன படம்.???
நம் நாடா?ஜயலலிதா எம்ஜியார் படம்.
மூன்றாவதும் அம்மாவும் ஐய்யாவும் தான்.
செக் பண்ணிட்டு சொல்றேன்:)
முதல் படம் பணக்காரக் குடும்பம்
பதிலளிநீக்குரெண்டாவது புதிய பூமி:)
பதிலளிநீக்குஎங்கள் ப்ளாக் நடத்துறவங்க எல்லாம் அம்புட்டு வயசானவங்களா? அட பாவமே !
பதிலளிநீக்குஅனுஷ்கா, அஞ்சலி, அமலா பால் மாதிரி புது நடிகர் நடிகை நடிச்ச படங்களை போடுங்கப்பா ! அப்ப தான் நாங்க என்டர் ஆவோம் . நாங்கெல்லாம் யூத்து !!
வல்லிசிம்ஹன் மேடம் நான் உங்களை சொல்லலை கோச்சுக்காதீங்க. :))
பதிலளிநீக்குஹா ஹா. 64 வயசு ஆகப் போகுது. நானே வயசான பாட்டிதான் .அதனால சங்கடமே இல்லை. மோகன்குமார்:) மன்னிப்பு எல்லாம் கேட்கக் கூடாது.
பதிலளிநீக்குமோகன் குமார் - எங்களுக்கு ஒய் திஸ் கொலவெறி பாட்டும், அதற்கு அப்புறம் வந்த இலக்கியப் பாடல்களும்தான் தெரியும். இதெல்லாம் எதுவுமே பார்த்ததில்லை. அதனாலதான் இங்கே கேள்வியா கேட்டுட்டோம்!
பதிலளிநீக்குமுதல் படத்தில் சரோஜாதேவியும் எம்ஜியாரும் பந்தடிக்கும் சத்தத்திற்கு ஏற்ப ஆக்ஷன் கொடுப்பதும், இந்தப் படத்தில் பாட்டுக்கு இசையமைத்த விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையும் மட்டையும் பந்தும் செய்யும் டக் சத்தமும் வெரீஈஈஈஈஈஇ ஃபேமஸ்:)
பதிலளிநீக்குவீட்ல வயசானவங்க யாராச்சும் இருந்தா கேட்டுச் சொல்றேன் :-)))))
பதிலளிநீக்குஅச்சோ...அச்சோ...அச்சோ....என்னைப்பாத்து மத்தவங்க குறிப்பா மோகன்குமார் சிரிக்கணும்ன்னே இப்ப 4-5 பதிவு போய்க்கிட்டே இருக்கு.வன்மையாகக் கண்டிக்கிறேன் எங்கள் புளொக் ஐங்கடவுளர்களை.ஒரு பாட்டாவது புதுப் பாட்டு போடுங்கோ.அப்பாஜி எங்க இருக்கிறீங்க.உடன வாங்க எங்க புளொக்குக்கு!
பதிலளிநீக்குவல்லிம்மா, கீதா மேடம் புட்டுப் புட்டு வைப்பாங்கன்னு நினைத்துக் கொண்டேதான் வந்தேன் ரீடரிலிருந்து:))!
பதிலளிநீக்குi 'll ask my gran ma and give the answers after half an hour
பதிலளிநீக்குBeauty will *email!* That is the girl who comes, by *emailing!*
பதிலளிநீக்குஎன்று முதல் பாடலைப் படித்தேன்!
If you do everything correctly, your name will be included in the history!
Otherwise?
Your name will be included in the arrears list!!
என்றும் நினைத்துக் கொண்டேன்!
இதெல்லாம் நான் பிறக்கறதுக்கு முன்னேயே வந்திருக்கு போல! நான் பார்த்ததே இல்லை; சின்னப் பொண்ணுங்க, என்னைப் போய்ச் சொல்லி இருக்காங்களே இந்த ரா.ல. :))))))
பதிலளிநீக்குMovies பக்த ஜெயதேவ் (இந்தியாவின் முதல் கார்ப்பரேட் சாமியார் நடித்த முழு நீள திகில் படம்), மடசாம்பிராணி, டம்பாச்சாரி, பவளக்கொடி, மின்னல்கொடி, மன்னார்சாமி, ராஜமன்னார் சாமி, பாரத் கேசரி மாதிரி சமீபத்திய படங்கள் என்றால் நான் ஆட்டத்திற்கு ரெடி.
பதிலளிநீக்குhaahaa, ithileyum follow up option irukku, athukaka
பதிலளிநீக்குmmmm??வல்லி, பறக்கும், பந்து பறக்கும் பாட்டில் சரோஜாதேவி இந்த உடையா உடுத்தி இருப்பார்?? சந்தேகமா இருக்கே? ஸ்போர்ட்ஸ் உடையல்லவோ உடுத்தி இருப்பார்?
பதிலளிநீக்குமுதல் ரெண்டையும் வல்லி மேடம் சொல்லிடாங்க. கடைசி நல்லா தெரியும், மனசுலேயே இருக்கு. ஆனா டக்குன்னு ஞாபகம் வரமாட்டேங்குது. நானும் காலம்பரலேந்து யோசிச்சுண்டு இருக்கேன். என்ன இருந்தாலும் எனக்கு வயசாச்சு பாருங்க. ம்ம்ம்ம்...என்ன பண்றது! :)
பதிலளிநீக்குஹை, சங்குப் பூவில் இருந்து எப்போ மாறினீங்க மீனாக்ஷி??
பதிலளிநீக்குஹை! நீங்க பாத்துடீங்களா! இப்பதான் மாத்தினேன். நீங்க பாக்கணும் அப்படிங்கறதுக்காகதான் உங்க பின்னாடியே வந்தேன். :))))
பதிலளிநீக்குசும்மாதான் கீதா மேடம். சங்குபூவை எப்பவுமே நான் ரொம்ப ரொம்ப ரசிப்பேன். அதை எங்க பாத்தாலும் ஒரு நிமிஷமாவது அங்கேயே நின்னுடுவேன். அதே நேரம் தாமரை பூவை அதோட இயல்பான தன்மைக்காகவே ரொம்ப ரொம்ப பிடிக்கும். தாமரையோட இயல்புதான் எவ்வளவு அற்புதமானது. நீரோட மட்டம் உயர உயர, அதுல மூழ்கிடாம தன் தண்டை உயர்திண்டு நீர் மேல அழகா நிற்கும். அதனாலேயே தாமரை பூ எனக்கு ரொம்ப ஸ்பெஷல்.
எல்லாரோட ஐடியிலேயும் என்ன படம் போட்டிருக்காங்கனு பார்ப்பேனே, குழந்தை தானே! படம் பார்க்கத் தான் செய்யும். :))))))
பதிலளிநீக்குதாமரைப் பூ எனக்கும் பிடிக்கும்.
கலக்கல்! :))))))
பதிலளிநீக்குஎது?? கேள்விங்க தானே?? விடை தெரியும்; ஆனாச் சொல்ல மாட்டேனே! அப்புறமா வயசாச்சுனு சொல்லிடுவாங்க. :))))))
பதிலளிநீக்குமூன்றாவது கண்போன போக்கிலே கால் போகலாமா பாடலா?
பதிலளிநீக்குhttp://www.youtube.com/watch?feature=player_detailpage&list=PLD9194ED5E94C6469&v=-kFMG2nMl0I பறக்கும் பந்து பறக்கும்
பதிலளிநீக்குhttp://www.youtube.com/watch?feature=player_detailpage&v=nQABRwTF2T4 நெத்தியிலே பொட்டு வச்சேன் ---- படம் புதியபூமி
பதிலளிநீக்குhttp://www.youtube.com/watch?feature=player_detailpage&v=UemUJDlF-Ic அடி யாத்தீ......யாருக்கு நீ பேத்தி... படம் கணவன்
பதிலளிநீக்குவாவ் பொன்சந்தர் ,அந்தப் பாட்டு ''கணவன்'' படமா.
பதிலளிநீக்குவாழ்த்துகள். நேற்று மண்டையே பிய்த்துக் கொள்கிற அளவு ஆராய்ச்சி. அப்புறம் மின்வெட்டு.
காய்ஞ்சே போச்சு:)
மீனாக்ஷி, கீதா குழந்தைக்கு ஒண்ணும் தெரியாது.:)
ஓ! அப்படியா! அப்ப ரொம்ப சமத்தா!:)
பதிலளிநீக்குஓ! அப்படியா! அப்ப ரொம்ப சமத்தா!:)//
பதிலளிநீக்குரொம்ப ரொம்பச் சமத்து. ஊட்டாமல் நானே சாப்பிடுவேனாக்கும்! :)))))
சி சி சி பட்டம் இருவருக்குக் கொடுத்துவிடுகிறோம். வல்லிசிம்ஹன் மற்றும் பொன்சந்தர்.
பதிலளிநீக்குசரியான விடைகள்:
பறக்கும் பந்து பறக்கும் :: பணக்காரக் குடும்பம்.
நெத்தியிலே பொட்டு வெச்சேன் :: புதியபூமி.
அடி ஆத்தீ :: கணவன் (பாடல் வரிகள் - அதை உருப்படியா செஞ்சி வெச்சா சரித்திரம் மதிக்கும்! )
நன்றி நன்றி நன்றி. சினிமாப் பாடல்களில் ரேனக்குக் கிஃபடைத்த பட்டத்தை என் தந்தைக்குக் சமர்ப்பிக்கிறேன்.
பதிலளிநீக்குஅவர் இல்லாத போது கேட்ட ஞானம் அல்லவா;)
ஓய் எங்கள் ப்ளாக் ! மேலே புது பாட்டு மட்டும் தான் தெரியும்; அதான் கேட்குறோம்னு சொல்லிட்டு இப்போ சரியான பாட்டு இது தான் அனவுன்ஸ் பண்றீரா? உம்ம வயசு 60 ப்ளஸ் என தெரிஞ்சு போயிடுச்சு ஓய் :))
பதிலளிநீக்குமோகன் குமார் சார். அது எங்களுடைய ஞானம இல்லை. கூகிள் ஆண்டவரின் ஞானம்!
பதிலளிநீக்கு