திங்கள், 1 ஜூலை, 2013

ஆதாரம் என்றும் நீதானே!

மொத்தம் வாக்களித்தவர்கள்: 55

வாங்கிவிட்டேன் என்று கூறியவர்கள்: 11

வாங்கிவிடுவேன் என்று கூறியவர்கள்: 26

தேவை இல்லை என்று கூறியவர்கள்: 3

வேறு நாடு என்றவர்கள்:                        5

@#$%%^&&&@ என்றவர்கள்:                  10 

ஐந்தாவது ஆப்ஷன் என்ன என்று யாராவது கேட்பார்கள் என்று நினைத்தேன். 

முதலில் நான் என்ன நினைத்து, அந்த ஐந்தாவது ஆப்ஷன் கொடுத்தேன் என்று கூறிவிடுகின்றேன். 

#1 மேலே கூறப்பட்டுள்ள நான்கு ஆப்ஷன்களும் தங்களுக்கு சரியாக இல்லை என்று நினைப்பவர்களுக்கு. 

#2 None of the above என்று மார்க் செய்ய நினைப்பவர்கள். 

#3 தமிழ் தெரியாதவர்கள் ஆனால் ஓட்டு அளிக்கவேண்டும் என்று நினைப்பவர்கள். 

#4 யார் என்ன பதிவு இட்டாலும் - அங்கே வந்து யாரையாவது திட்டுபவர்கள் எப்பொழுதும் இருப்பார்கள். அவர்களுக்கு இந்த ஆப்ஷன் உதவும்(!) என்று நினைத்தேன். 

#5 வேறு ஏதேனும் காரணம் இருந்தால் அதை கூறுபவர்கள் இங்கே கூறலாம். 

ஐந்தாவது ஆப்ஷனில் ஓட்டு அளித்தவரில் ஒருவர் மாதவன். அவர் முக நூலில், தான் முதலில் ரேஷன் கார்டு வாங்கவேண்டும் - அதனால் ஆப்ஷன் ஐந்தை தேர்ந்தெடுத்தேன் என்று கூறியிருந்தார் (என்று நினைக்கிறேன்!) 

கடைசியாக நான் கேட்பது : 'தேவை இல்லை' என்று கூறியவர்களும், ஆப்ஷன் ஐந்தைத் தேர்ந்தெடுத்தவர்களும், ஓட்டு போடாமல் விட்டவர்களும், இங்கே, பின்னூட்டத்தில் தேர்ந்தெடுத்ததின் / ஓட்டு போடாததன் காரணத்தை கூறவேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். 

முழு விவரங்கள் கிடைத்ததும் அவற்றை அப்படியே அண்ணன், நந்தன் நிலேகனி அவர்களுக்கு எங்கள் ப்ளாக் சார்பாக அனுப்பி வைக்கின்றேன். 

நன்றி.

வணக்கம்! 
               
22 கருத்துகள்:

  1. ஆதாரம் பற்றி லேட்டஸ்ட் புதுத் தகவல்கள் ஏதாவது கிடைக்கும் என்று ஆவலுடன் வந்து பார்த்தால்..

    அந்த 11-ல் நானும் ஒருவன்.

    பதிலளிநீக்கு
  2. ஜீவி சார். புதுத் தகவல்தானே, இதோ சொல்கிறேன்.
    பெங்களுரு ஹிந்து பேப்பரில் சென்ற வாரம் ஒரு காஸ் கம்பெனி விளம்பரத்தில் சொல்லியிருந்தார்கள். "இன்னும் பதினொன்று வாரங்கள்தாம் உள்ளன. அதற்குள் ஆதார் எண் வாங்கி, உங்கள் வங்கிக் கணக்கு எண்ணையும் சேர்த்து எங்களிடம் கொடுத்தால்தான் உங்கள் சமையல் வாயு கன்ஷஷன் உங்களுக்குக் கிடைக்கும். இல்லையேல் சமையல் வாயுவிற்கு உங்களிடமிருந்து அதிகத் தொகை பெறவேண்டியது இருக்கும்." தமிழ்நாட்டில் இந்த விளம்பரம் வந்ததா என்று தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  3. ஒரு ஆதார் தானே?.. ஒரு தடவை வாங்கினால் போதும் தானே?..

    இதான் லேட்டஸ்ட் குழப்பம்.

    ஹி..ஹி.. தெரிந்தால் தெரிவியுங்கள். தெளிவடைவேன்.

    பதிலளிநீக்கு
  4. நம்பள் #5 ஓட் போட்டானு நிம்பள் நீலக்கண்ணு கிட்டே சொல்றான்.

    பதிலளிநீக்கு
  5. //அப்பாதுரை said...
    நம்பள் #5 ஓட் போட்டானு நிம்பள் நீலக்கண்ணு கிட்டே சொல்றான்.//

    இவன் நீலக்கண்ணு கைல சொல்றான். ஆனா அவன் ஏன் என்று கேட்கிறான். அஞ்சாம் நம்பர்லே ஏன் ஓட்டு குத்தினான்னு ஜல்தி சொல்லோனும்கறான்!

    பதிலளிநீக்கு
  6. தேவையில்லை என்றுதான் நானும் முதலில் நினைத்தேன். பின் எங்கள் குடியிருப்புக்கே வந்து 3 வாரங்கள் இருந்து வழங்கியதால் மனம் மாறி வீட்டில் நான் மட்டும் கடைசி நாள் கடைசி நபராக (காத்திருப்பைத் தவிர்க்க) சென்று வாங்கி விட்டேன்:)! அந்த விளம்பரத்தை பிறகுதான் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
  7. இந்த திட்டமே தேவையற்றது...

    இருக்கிற பல குழப்பங்களில் இதுவும் இன்னொறாக சேரப்போகிறது...

    திட்டதின் நோக்கமே தனியார் கையாளூம் தகவல் வங்கியை அரசு செலவில் உருவாக்குவது...

    அதாவது அம்பானியும் பிர்லாவும் டாட்டவும் யாரு எந்த பொருள் எந்த நேரத்தில் எவ்வளவு தேவைப்படும் என துல்லிய்மாக கணக்கிட்டு சேதரமில்லாமல் விற்று .. லாபம் பார்க்க .. தகவல் வங்கி தேவை..
    (அப்பாதுறை சாரின் பதிவு ஒன்றில் ரீடேயில் மார்கேட் பற்றி சொல்லியிருந்தாரே..)

    இதுமட்டுமல்லாமல் இன்னம் பல தேவைகளை.. மக்களை உளவு பார்ப்பது உட்பட செய்ய இது வசதி கொடுக்கும் (Indian version PRISM)??

    அதை அரசு .. அரசு செலவில் அதாவது நம் செலவில் செய்யும்... பயனடைவது இவர்கள்... எப்படி இருக்கு கதை? அரசில் இருக்கும் ஒவ்வொறு பைசாவும் நம்முடையது தான். நாம் வரியே கட்டாவிட்டாலும் அது நம் பணம் தான். நம்மிடம் பிடுங்கியது தான்..

    உண்மையில் தகவல் வங்கியே தேவையில்லை.

    சரி முதலாளிகளுக்கு அடிமை சேவகம் தான் செய்வோம் என்றால் அதை செய்ய திட்டமிடுவதும், சுற்றி வளைத்து செய்யும் அதே செலவு பிடிக்கும் முறை..

    குழந்தை பிறப்பில் இருந்து
    1) பிறப்பு சான்றிதழ்,
    2) சாதி சான்றிதள்,
    3) வருவாய் சான்றிதழ்,
    4) குடியிருப்பு சான்றிதழ்,
    5) ரேசன் கார்டு
    6) வங்கி கணக்கு,
    7) டிரைவிங் லைசன்சு,
    8) வாக்காளர் அடையாள அட்டை
    9) வோட்டர் லீஸ்ட்,
    10) பள்ளி கல்லூரி..
    11) பத்திர பதிவு அலுவலகம்னு..
    12) வேலை பார்க்கும் இடம்,
    13) பங்கு மார்க்கேட்
    டஜன் கணக்கில் மக்களின் தகவல்கள் கொட்டி கிடக்கும் இடம் நாடு முழுவதும் இருக்கு...

    உண்மையில் வேலையை சிக்கணமாக முடிக்க நினைப்பவர்கள்.. இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து.. பட்டியல் தயார் செய்து நம்மை கூப்பிட்டு .. இதோ .. இத்தான் உன்னை பற்றிய அரசிடம் இருக்கும் மொத்த தகவல் சுருக்கம் .. இதில் உனக்கு ஆட்சேபனை உண்டானல் சொல்.. இல்லயெனில் இதுவே இறுதி என்று எடுத்த்கொள்வோம் என்று சொல்லவேண்டும்...

    அப்படி செய்தால்.. உண்மையான் இறுதி பட்டியல் கிடக்கும். அதை மட்டும் வைத்துகொண்டு மற்ற தகவல்களை இதன் இணைப்பாக.. வைத்து கொள்ளலாம். உதாரணமாக ..இப்போ பள்ளியில் படிக்கும் பையன் படிசச்சு முடிச்சதும் , இருக்கும் தகவல் களஞ்சியத்தில் அவன் படிப்பு விபரங்களை மட்டும் சேர்த்தால் போதும்.

    இதற்கு ஒரு நல்ல அலுவககமும் திறமையான பணியாளர்களூம் 1 அல்லது 2 வருட நேரமும் போது.

    இதை விடுத்து கோடிகோடியாக செலவு செய்து ஊர் ஊர்காக போட்டோ எடுத்து ( தனியார் கம்பனி செய்தாலும்..அரசு அதற்கு செலவு செய்யத்தானே வேண்டும் ?)

    ஒருங்கிணைத தகவல் அமைப்பு முழுமையானது , சிக்கணமாது , அனைவருக்கும் பயன்படக்கூடியது..

    படிக்கும் பையன் மேற்படிப்புக்கு சான்றிதழ்களை தூக்கிகொண்ட்டு கல்லுரி கல்லூரியாக அலைய வேண்டியதில்லை.

    சேர விரும்பும் போய் தன் கல்லுரியில் அடையாள எண்ணை மட்டும் சொன்னால் அவன் LKG யில் இருந்து எப்படி படித்தான் என்பதை கணினி சொல்லும்.

    ஒவ்வொரு வேலைக்கும் நகல், அட்டஸ்டேசன் , ஜெராக்ஸ்ன்னு செயலவு செய்ய அலைய வேண்டியது இல்லை.

    ஆனால் 10 இடத்தில் சொத்துவைக்க முடியாது, போலி பெயரில் சொத்து வாங்க முடியாது, மொத்ததில் நேர்மையான மக்களுக்கு நல்லது

    அதனால் இருக்கும் தொல்லையுடன் நம் செலவில் நம்மகு இன்னன் ஒரு தொலையய் சேர்க்கிறார்கள்.

    இதில் இந்த குப்பையை எப்படியும் திணித்தே ஆக வேண்டும் என்பதற்கே கேஸ் மானியம் இதில் தருகிறேறொம் உங்கள் பணம் தருகிறோம் என பூச்சி காட்டுகிறார்கள்...

    இப்படிபட்ட அரசும் அணையமும் தான் நம்மு இருக்கு நினைக்கவே வெட்கபட வேண்டியதா இருக்கு..

    என்னா "In a democracy, people get the government they deserve," and often attributed to Alexis de Toqueville "

    அப்படின்னா எதையும் சிந்திக்காத முட்டள்கள் நாம்னு தானே ஆகுது ?

    பதிலளிநீக்கு
  8. இந்த திட்டமே தேவையற்றது...

    முக்கியமாக கள்ள வோட்டு போட முடியாது...

    அதனால் இருக்கும் தொல்லையுடன் நம் செலவில் நம்மகு இன்னன் ஒரு தொலையய் சேர்க்கிறார்கள்.

    இதில் இந்த குப்பையை எப்படியும் திணித்தே ஆக வேண்டும் என்பதற்கே கேஸ் மானியம் இதில் தருகிறேறொம் உங்கள் பணம் தருகிறோம் என பூச்சி காட்டுகிறார்கள்...

    இப்படிபட்ட அரசும் அணையமும் தான் நம்மு இருக்கு நினைக்கவே வெட்கபட வேண்டியதா இருக்கு..

    என்னா "In a democracy, people get the government they deserve," and often attributed to Alexis de Toqueville "

    அப்படின்னா எதையும் சிந்திக்காத முட்டள்கள் நாம்னு தானே ஆகுது ?

    பதிலளிநீக்கு
  9. ஆதார் கார்டு குறித்த புதுத்தகவலை என் முக நூல் பக்கத்தில் பகிர்கிறேன் நன்றி...

    பதிலளிநீக்கு
  10. எப்ப ஓட்டெடுப்பு நடத்தினீங்க? நான் மிஸ் பண்ணிட்டேனே! நான் ஆதார் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து விட்டேன். போஸ்டில் அனுப்புவதாக எஸ். எம்.எஸ்ஸிம் வந்துவிட்டது. எ.பி.ஜி மாணியம் பெறுவதற்கு இந்த ஆதார் எண் முக்கியம் என்றும் கேள்விப்பட்டேன்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  11. விண்ணப்பித்து விட்டீர்களா?.. எப்படி?
    ஆன்லைனிலா?..

    அப்படி என்றால் இது தான் புதுத்தகவல்.

    பதிலளிநீக்கு
  12. இது என்னா பெஜார் பண்றான் நிம்பள்? மொதல்லே நம்பர் மேலே ஓட்டு போடுனு அஞ்சாம் நம்பர் சாய்சு கொடுக்றான், அப்புறம் ஏன் போட்டேனு நோண்ட்றான்..

    பதிலளிநீக்கு
  13. விளாசல் வினோத்குமார் :)

    இதைப் பற்றி அதிகம் அறியாதிருந்தேன். இந்தப் பதிவுக்குப் பிறகு விக்கி மற்றும் இணையத்தகவல்கள் கொஞ்சம் மேய்ந்து வந்தபின், அதிகம் புரியவில்லை என்றாலும், இது எதற்கு புதிதாக என்ற கேள்வி தோன்றியது. இதன் தேவைக்கான காரணங்கள் மற்றும் பெறுவதால் உண்டாகும் பலன்கள் தெளிவாக இல்லை என்பதால் பொதுமக்களிடம் இதை "பயமுறுத்தி விற்க" வேண்டிய நிலை வந்ததோ?

    பதிலளிநீக்கு
  14. @ வினோத்குமார் நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    @ 'தளிர்' சுரேஷ்... விண்ணப்பிப்பதா? எப்படி? இணையத்திலா? சாத்தியமில்லையே..... பு.ப எடுத்து விவரங்கள் கொடுக்க எந்தத் தேதியில் வரவேண்டும் என்று பதிவு செய்யவே நேரில் செல்ல வேண்டுமே.... கொஞ்சம் விளக்கவும்!

    பதிலளிநீக்கு
  15. ஆதாரகார்டு இன்னும் இங்கு வரவில்லையே !
    போட்டோ எடுத்து சென்று இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  16. ஆதார் அட்டை வாங்கவில்லை என்று வாக்களித்திருந்தேன், 2011 இல் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது NPR என்று சொல்லக் கூடிய National Population Register என்ற பதிவேட்டை உருவாக்கினார்கள். அதில் பெயர் உள்ளவர்களுக்கு மட்டுமே ஆதார் அட்டை கிடைக்கும். எங்கள் பகுதி மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது விடுபட்டுவிட்டது.
    வேடிக்கை என்னவெனில் இப்பணியில் வேறு ஒரு பகுதியில் கண்காணிப்பாளராக பணியாற்றினேன்.
    எங்கள் பகுதிக்கு கணக்கெடுக்க வரவில்லை என்று பலமுறை சொல்லியும் யாரும் வரவில்லை.

    பதிலளிநீக்கு
  17. இந்தியர்கள் கழுத்தில் ஒரு நாய்ப்பட்டி கட்டி, பல அடையாள அட்டைகள் மாட்டிவிடும் நாள் வெகு தொலைவில் இல்லை.

    ஆதார், NPR, PAN, குடும்ப அட்டை, அலுவலக அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமை, என ஒவ்வொன்றாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஒன்று இருந்தால், மற்றொன்று இல்லையா எனக் கேட்கும் அரசு அதிகாரிகள், படுத்துகிறார்கள்!

    நிற்க, தில்லியில் ஆதார் அட்டை ஏற்கனவே புழக்கத்திலிருக்கிறது. NPR எனக்கு இன்னும் வரவில்லை.

    பதிலளிநீக்கு
  18. //தில்லியில் ஆதார் அட்டை ஏற்கனவே புழக்கத்திலிருக்கிறது. NPR எனக்கு இன்னும் வரவில்லை.//

    அன்புள்ள வெங்கட் நாகராஜ்,

    தில்லியில் புழக்கத்தில் இருக்கும் ஆதார் அட்டை, நந்தன் நிலேகனி பொறுப்பில் இருந்த பொழுது வழங்கப்பட்டதா?..
    தெரிந்து கொள்ள ஆவல்.

    பதிலளிநீக்கு
  19. ஆமாம் ஜிவி சார். நந்தன் நிலேகனி பொறுப்பேற்ற பிறகு தான் எனக்கு ஆதார் கிட்டியது.

    தில்லியில் உள்ள பல இடங்களில் ஏற்கனவே ஆதார் வந்து விட்டது. என்.பி.ஆர். குழப்பத்திற்குப் பிறகு இப்போது அதற்காகவும் இரண்டு கை விரல்கள், IRIS என மீண்டும் எடுத்திருக்கிறார்கள். என்.பி.ஆர். இருந்தால் ஆதார் அவர்களாகவே தர ஏற்பாடு செய்வார்களாம் ஆனால் ஆதார் மட்டும் இருந்தால் என்.பி. ஆர் தர மாட்டார்கள் - மீண்டும் ஒரு முறை படையெடுக்க வேண்டும்!

    பதிலளிநீக்கு
  20. நன்றி, வெங்கட் நாகராஜ்!

    //என்.பி.ஆர். இருந்தால் ஆதார் அவர்களாகவே தர ஏற்பாடு செய்வார்களாம் ஆனால் ஆதார் மட்டும் இருந்தால் என்.பி. ஆர் தர மாட்டார்கள் - மீண்டும் ஒரு முறை படையெடுக்க வேண்டும்! //

    இதைத் தான் இன்னொரு ஆதார் அட்டையா என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். தெளிவான தகவலுக்கு மிகவும் நன்றி.
    ஸ்ரீராம்! கவனிக்கவும். உங்கள் இரண்டாவது பதிவுக்கு இங்கே பதிலிருக்கிறது.

    என்.பி.ஆர். பதிந்ததற்கு பிறகு கிடைக்கும் அட்டையில், பழைய ஆதார் எண்ணே இருக்கும் என்று நினைக்கிறேன். இல்லையென்றால் தான் கோளாறு.

    பதிலளிநீக்கு
  21. இந்தப் பதிவை இப்போது தான் பார்க்கிறேன். நன்றி ஜீவி சார்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!