வெள்ளி, 12 செப்டம்பர், 2014

வெள்ளிக்கிழமை வீடியோ 140912 : சினிமாப் பாடல்தான்... ஆனால் சிறுமி என்ன Bhaaவத்துடன் பாடுகிறாள்...


மன்னிக்கவும்! தலையைச் சாய்த்துப் பார்க்கும் தண்டனையைப் பொருட்படுத்த மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன். வீடியோவைப் புரட்டிப் பதியும் டெக்னிக் எனக்குத் தெரியவில்லை!


24 கருத்துகள்:

 1. ரொம்ப ரொம்ப மன்னிக்கணும், என்னால் ரசிக்க முடியலை. இத்தகைய "பா"வங்களைப்பார்க்க என்ன பாவம் செய்திருக்கேனோ என்றே தோன்றுகிறது. குழந்தை, குழந்தையாகவே இருக்க வேண்டும். இம்மாதிரியான "பா"வங்களைச் சொல்லிக் கொடுத்துப் பாடி ஆட வைப்பதில் பெற்றோருக்கு வேண்டுமானால் மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால் குழந்தையின் உணர்வுகள்???? இந்த வயதிலேயே அந்தக் குழந்தை முதிர்ச்சியை அடைந்துடுமோனு பயம்மாவும் இருக்கு!

  என் பயம் காரணமில்லாமல் இல்லை. எங்களுக்குத் தெரிந்த ஒருத்தர் வீட்டில் குழந்தையை இப்படித் தான் சினிமாப் பாடல்களுக்கு அதுவும் விரகதாபமான பாடல்களுக்கு அபிநயங்கள், பாவங்கள் சொல்லிக் கொடுத்துக் கஷ்டப்படுத்தியதில் அந்தக் குழந்தைக்குப் படிப்பில் புத்தியே போகவில்லை. :((((((

  பதிலளிநீக்கு
 2. இந்தப் பின்னூட்டத்தை கூகிளே முதல்லே ஏத்துக்கலை, எரர்னு சொல்லிடுச்சு, அது மண்டையிலும் ஒரு போடு போட்டேன். :))))

  பதிலளிநீக்கு

 3. உங்கள் வீட்டுக் குழந்தையா.?முதலில் திருஷ்டி சுற்றிப் போடுங்கள். என்னிடமும் இப்படியான சாய்ந்து பார்க்க வைக்கும் வீடியோ இருக்கிறது. அதுவும் குழந்தையுடையது. ஆனால் பாடுவதுபோல் அல்ல . ஆடுவது போல்.குழந்தைகள் செய்து காண்பிப்பதை பகிர்ந்து கொள்ள பெற்றோர்கள் விரும்புகிறார்கள். ரசிப்போமே.

  பதிலளிநீக்கு
 4. தலையை வளைக்காமல் கணினியைப் புரட்டிப் பார்த்தேன். பரவாயில்லையா?

  சிறுமியின் பாவங்கள் அட்டகாசம். கீதா சாம்பசிவம் அவர்கள் சொல்வது புரிந்தாலும் இதை ஏன் விரசமாகப் பார்க்கவேண்டும் என்று புரியவில்லை. பெற்றோர்கள் சொல்லித் தருகிறார்களா? not sure. இந்தச் சிறுமியே சினிமா பார்த்துக் கற்றுக் கொண்டதாக இருக்கும். அதனால் தான் it seems cute.

  ஆனா அந்தக் குட்டிப் பொண்ணு என்ன பாடுறானு தெரியலியே?

  பதிலளிநீக்கு
 5. திருப்பாவையில் இல்லாத விரகம் விரசமா? இதையெல்லாம் பிள்ளைகளுக்குச் சொல்லித் தரவில்லையா? சொல்லித் தருவதோடு நிற்காமல் தினம் அதிகாலைக் குளிரில் குளிக்க வைத்து சொன்னால் தான் ஆச்சு என்று அதிகாரம் வேறே!

  பதிலளிநீக்கு
 6. இதுபோல் பாவங்கள் தவறாகத் தெரிந்தாலும் அந்தக் குழந்தையின் திறமை அருமை அண்ணா...

  பதிலளிநீக்கு
 7. இவ்வளவு சின்னக் குழந்தையைக் குளிரில் குளிக்க வைத்துத் திருப்பாவையைச் சொல்லச் சொல்வதெல்லாம் இல்லை. அததுக்கு ஒரு வயசு இருக்கு. :(

  பதிலளிநீக்கு
 8. //திருப்பாவையில் இல்லாத விரகம் விரசமா?//

  also
  ashtapathi composed by Jayadeva.

  entha slogam ethanaavathu varinnu sollattumaa?

  appaadurai sir ! why dont you translate ashtapadhi written by Jayadeva in our language?

  subbu thatha.


  பதிலளிநீக்கு
 9. அய்யோ பாவம் என்று சொல்லும் அளவிற்கு இல்லையென்றாலும் phaaவம் அருமை !

  பதிலளிநீக்கு
 10. வணக்கம்
  ஐயா
  சிறுமியின் ஆட்டம் பார்ப்பவர்களை திகைக்கவைக்கும்...பகிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 11. குழந்தை அழகு. அதன் பாவங்களும் அழகு.பாட்டும் வயசும் பொருந்தவில்லை.இத்தனை திறமை இருக்கும் குழந்தையை வேற பாடல் சொல்லிக்கொடுத்து ஆட வைத்திருக்கலாம்.

  பதிலளிநீக்கு
 12. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ரேவதிக்கு நன்றி சொல்லிப் போட்ட கமென்ட் எங்கே போச்சு? காக்காய் இங்கேயும் வருது?

  நன்றி ரேவதி. இதைக் குறித்து எழுதறதுனா பக்கம் பக்கமா எழுதலாம் அப்படினு சொல்லி இருந்தேன். :)

  பதிலளிநீக்கு
 13. Bhaaவம் என்கிற வார்த்தையை தமிழில் எழுத ரொம்ப சிரமப்பட வேண்டாம்.

  பாவம் என்று இப்படி எழுதினால் போதும். HTML tag 'b' உபயோகித்தும் சரியாக பதிவாக வில்லை. 'பா' எழுத்தை மட்டும் போல்ட் எழுத்தில் போட்டு விட்டால், Bhaaவம் ஆகிவிடும்!

  பதிலளிநீக்கு
 14. இங்கே அங்கே சிதறியிருக்கிறதை எடுத்து வைத்து, குனிந்து நிமிர்ந்து சுத்தம் பண்ணி.. பின்புலத்தில் என்ன அழகாய் வீட்டுவேலை நடக்கிறது,
  பாருங்கள்.. யாருமே கண்டுக்கக் காணோமே!

  பதிலளிநீக்கு
 15. பாவம்!

  பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை.... டி.வி. அனைத்தையும் சொல்லிக் கொடுக்க தயாராகக் காத்திருக்கிறது!

  பதிலளிநீக்கு
 16. ஜீவி சார் சுட்டிக்காட்டியதும் தான் மீண்டும் வீடியோவைக் கவனித்ததில் பின்னால் வண்டி துடைக்கிறவர் தென்பட்டார். :))

  குழந்தைகளை வணிகரீதியாகவே இன்றைய பெற்றோர் அணுகுகின்றனர் என்பதைப் பலரும் ஆதரிப்பது ஆச்சரியத்தை அளிக்கவில்லை.

  பெற்றோருக்கு இதன் பலாபலன் தெரியவரும்போது தான் தப்பு, சரி என்பது புரியவரும். :(((((

  பதிலளிநீக்கு
 17. உண்மைதான் கீதா.அறியாத பெண்குழந்தைகள்.தொலைக்காட்சியில் பார்த்துக் கற்றுக் கொள்ள இந்தப் பாடல் எந்தச் சானலில் வந்ததோ. தோல்வி கண்ட படம் இது. யூடியூபிலும் பாட்டு மட்டும் கேட்பேன். பெற்றோர்கள் இதைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டாம். அஷ்டபதி விசாரம் எனக்கு வேண்டாம்.ஆண்டாளின் திருப்பாவையில் விரசம் கிடையாது.நாச்சியார் திருமொழியில் வேண்டுமானால் அந்த மொழி வரலாம்.நப்பின்னை வரும் பாசுரம் ஒன்றில் மட்டும் இருக்கும்.அந்தக் காலத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிரயோகமாக இருக்கலாம்.நானே மேல்சட்டை அணியாத பாட்டிகளையும் மங்கைகளையும் கண்டிருக்கிறேன்.அது அந்தக் காலப் பாரம்பரியம்.

  பதிலளிநீக்கு
 18. கீதா மேடத்தோட கருத்துக்களை வழிமொழிகிறேன்.

  பதிலளிநீக்கு
 19. லோகத்துலே இது விரசம்,இது தான் விரசம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு எதுவுமே இல்லை. எல்லாமே நம் பார்வையிலே தான் இருக்கிறது.

  திருப்பாவையிலும் சரி, (அந்த நப்பின்னை உட்பட) அஷ்டபதியிலும் சரி, நாம் எப்படி அதற்கு அர்த்தம் சொல்லிக்கொல்கிரோமோ அல்லது புரிந்து கொள்கிறோமோ அதற்கு உட்பட்டது தான் நமது புரிதல்.

  ஒரு ஆன்மா பரமனை அடைய விழையும் காட்சியாக பார்ப்பவர்கள் ஒரு ரகம். விரக தாபத்தினால் மனம் அலைபாயும் ஒரு கன்னி தன் கண்ணையும் கருத்தினையும் கலைத்தவன் அவனைக் காணத்துடிப்பது போல நோக்குவது அடுத்த ரகம்.


  இரண்டையுமே ஒருங்கிணைத்து ஒரு கவிதை காவியம் இலக்கியம் படைத்த கவிஞ்ன் , அவரவர் மன நிலைக்கேற்றார்போல அதைப் பொருள் கொள்ள அமைத்திருக்கிறானே , அது தான் அது தான் சிறப்பு.

  கோவிலுக்குச் செல்கிறோம். அம்பாளின், தாயாரின் தரிசனம் கிடைக்கிறது.மெய் மறந்து நிற்கிறோம். கண்களில் நீர் பெருக,
  தாயே சரணம் அஹம் ப்ரபத்யே என்று சொல்லாமல் சொல்லி நிற்கிறோம்.

  அதே சமயம், நம்மில் சிலராவது, அந்த வைடூரியம், புஷ்பராகம்,மாணிக்கம், மரகதம், அப்படின்னு நவரத்ன மாலை ஜொலிக்கிறதே அது போல எனக்கு எப்பத்தான் இந்த ஆத்துக்காரர் வாங்கித் தரப்போராரோ என்று நினைப்பதையும் தவறு என்றா சொல்ல முடியும் ?

  யூ பிகம் வாட் யூ திங்க் .

  அது தான்.

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
 20. லோகத்துலே இது விரசம்,இது தான் விரசம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு எதுவுமே இல்லை. எல்லாமே நம் பார்வையிலே தான் இருக்கிறது.

  திருப்பாவையிலும் சரி, (அந்த நப்பின்னை உட்பட) அஷ்டபதியிலும் சரி, நாம் எப்படி அதற்கு அர்த்தம் சொல்லிக்கொல்கிரோமோ அல்லது புரிந்து கொள்கிறோமோ அதற்கு உட்பட்டது தான் நமது புரிதல்.

  ஒரு ஆன்மா பரமனை அடைய விழையும் காட்சியாக பார்ப்பவர்கள் ஒரு ரகம். விரக தாபத்தினால் மனம் அலைபாயும் ஒரு கன்னி தன் கண்ணையும் கருத்தினையும் கலைத்தவன் அவனைக் காணத்துடிப்பது போல நோக்குவது அடுத்த ரகம்.


  இரண்டையுமே ஒருங்கிணைத்து ஒரு கவிதை காவியம் இலக்கியம் படைத்த கவிஞ்ன் , அவரவர் மன நிலைக்கேற்றார்போல அதைப் பொருள் கொள்ள அமைத்திருக்கிறானே , அது தான் அது தான் சிறப்பு.

  கோவிலுக்குச் செல்கிறோம். அம்பாளின், தாயாரின் தரிசனம் கிடைக்கிறது.மெய் மறந்து நிற்கிறோம். கண்களில் நீர் பெருக,
  தாயே சரணம் அஹம் ப்ரபத்யே என்று சொல்லாமல் சொல்லி நிற்கிறோம்.

  அதே சமயம், நம்மில் சிலராவது, அந்த வைடூரியம், புஷ்பராகம்,மாணிக்கம், மரகதம், அப்படின்னு நவரத்ன மாலை ஜொலிக்கிறதே அது போல எனக்கு எப்பத்தான் இந்த ஆத்துக்காரர் வாங்கித் தரப்போராரோ என்று நினைப்பதையும் தவறு என்றா சொல்ல முடியும் ?

  யூ பிகம் வாட் யூ திங்க் .

  அது தான்.

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!