சனி, 17 ஜனவரி, 2015

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.1) கல்கியில் முதலில் படித்தேன். எப்படி அதற்கு லிங்க் தருவது என்று யோசித்தபோது உதவிக்கு வந்திருக்கிறது தினமலர்! தொழு நோயாளிகளுக்கு கொசு விரட்டி, 'ஸ்டிக்கர்'களைத் தயாரித்து இலவசமாக வழங்கும் காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டைச் சேர்ந்த சையத் தாஜுதீன்.
 


2) அஜய் ஷர்மா.  தெய்வத்தந்தை. மூளையில் ரத்தக்கசிவால் ஏற்பட்ட கோமாவிலிருந்து 15 நாளில் மீண்ட அஜய் ஷர்மா, தனது இரண்டாவது ஜென்மம் கடவுளால் ஒரு அர்த்தத்துக்காகவே வழங்கப் பட்டிருக்கிறது என்று உணர்ந்து.....
 


3) சுனாமிகாவும் உமா பிரஜாபதியும்!
 4) சோம்பேறி வாழ்க்கையா, கைவிடப்பட்ட வாழ்க்கையா, கவலை இல்லாத வாழ்க்கையா?  காரணங்கள் நூறு உண்டு. ஆனாலும் நாலுகால் ஜீவன்கள் மீது இவர் காட்டும் பாசம் நேர்மையானது என்பது அவைகள் காட்டும் பதில் அன்பில் தெரிகிறது! படத்தைப் பாருங்கள்.
 


5) கொஞ்சம் பழைய கதை. ஆனால் மறுபடியும் நினைத்துப் பார்க்கக் கூடிய கதை. நாகா நரேஷ்.. இவர் வாழ்வில்தான் எத்தனை பாஸிட்டிவ் மனிதர்களைச் சந்தித்திருக்கிறார்!
 


6) பார்வதி.  பணக்காரக் குடும்பத்தில் பிறந்து, தந்தை வழியில் யானைகளை நேசிக்கத் தொடங்கி, இன்று அநேகமாக உலகின் ஒரே பெண் யானைப் பாகன் - பாகி!
 


7) கொஞ்சம் பழைய செய்தி.  ஒருவேளை முன்னரே சொல்லியிருக்கவும் கூடும்.  மலையைக் குடைந்து பாதை அமைத்த மனிதன்.
 


 

21 கருத்துகள்:

 1. நாகா நரேஷ் - என்னவொரு மன திடம்...

  அன்பிற்கு எல்லை இல்லை என்பதற்கு செல்வம் அவர்கள் சிறந்த உதாரணம்...

  பதிலளிநீக்கு
 2. அஜாய் சர்மா மனித நேயத்திற்கு ஒரு முழு உதாரணம் ஆவர்..

  லக்ஷத்தில் ஒருவர் கூட இவர் போல் இருக்க இயலாது.

  சுப்பு தாத்தா.
  www.subbuthatha.blogspot.com

  பதிலளிநீக்கு
 3. Dear Sriram,

  Great work, your persevarance is commendable.

  The outcome of your work, i feel, is that it has begun to make a change in the media through a 15 minute programme by thanthi TV, "Nalla Seithi"

  http://www.thanthitv.com/schedule/schedule.aspx?pgid=1109

  Please continue your good work.

  With warm regards,
  R.Sridhar

  பதிலளிநீக்கு
 4. சாப்பிட்டபின் மீண்டும் அந்த
  தெருநாய்களை தன் பிள்ளைகளாய் நினைக்கும் பெரியவர் வாழ்க!

  ஊனத்தை கண்டு வீட்டுக்குள் முடங்கி விடாமல், வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு சாதித்துக் காட்டிய நாகா நரேஷ் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்.

  நிறைய படித்தது உங்கள் பகிர்வில் பேஸ் புக்கில்.
  அனைத்து பாஸிடிவ் செய்திகளுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. நன்றி பாசிடிவ் செய்திகளுக்கு

  பதிலளிநீக்கு
 6. நாகா நரேஷ்....மனத்திடம்
  அனைத்து பாஸிட்டிவ் செய்திகளுக்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 7. அனைத்து செய்திகளும் நன்று. பெண் பாகியான பார்வதி கடந்து வந்த பாதை சுவாரஸ்யம்+திகில் நிறைந்ததாய்...

  பதிலளிநீக்கு
 8. அருமையான நம்பிக்கை தரும் செய்திகள்! வாழ்த்துக்கள்! நன்றி!

  பதிலளிநீக்கு
 9. வணக்கம்

  சிறப்பான தகவல்கள்...பகிர்வுக்கு நன்றி...
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 10. சையத் தாஜுதீனின் சேவை, அஜய் சர்மாவின் சேவை மிகவும் போற்றுதர்குரியது.

  சுமாமிகா பொம்மைகள் அழகு உமா ஆஹா!

  பாசிட்டிவ் செய்தியில் டாப் பரதேசி செல்வம் காட்டும் னேர்மையான பாசம் அதுவும் நாலுகால்களிடம்....யாஐப் பாகன்/பாகி பார்வதி (இவரைப் பற்றி அறிந்திருக்கின்றோம்.) அருமை அருமை.....

  நாக நரேஷின் மனோதிடம்...வாழ்த்துக்கள்!

  ஆம் மலைஅயிக் குடைந்த மனிதன் வாசித்திருக்கின்றோம்....

  பதிலளிநீக்கு
 11. ஆஹா! அருமையான தொகுப்பு ஸ்ரீ சகோ:)

  பதிலளிநீக்கு
 12. சொல்ல மறந்துவிட்டேன். இந்த சுனாமிகா கதை ஆறாம்வகுப்பு ஆங்கிலப்பாடத்தில் வருகிறது சகோ:)

  பதிலளிநீக்கு
 13. தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும்

  இந்த வாரமும் நிறைய தன்னம்பிக்கை மனிதர்களை தெரிந்து கொள்ள முடிந்தக்து.
  இவர்களின் மனோதிடம் ஆச்சிரியப்பட வைக்கிறது.

  பதிலளிநீக்கு
 14. தன்னம்பிக்கைப் பகிர்வுகள் அருமை. முன்னரே கொசு விரட்டி தயாரித்துக் கொடுப்பவர் பற்றி எதிலேயோ படித்தேன். :)

  பதிலளிநீக்கு
 15. அனைத்துமே நல்ல செய்திகள்.... அனைவருக்கும் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 16. சையத் தாஜூதீன் ஏற்கெனவே படிச்சேன். அஜய் ஷர்மா அதிசயிக்க வைத்தால் சுநாமிகா பிரமிக்க வைத்துவிட்டாள். நாய் வளர்க்கும் கிழவரின் பொறுமையும் நாகா நரேஷின் தன்னம்பிக்கையும் வியக்க வைத்தது. யானைப் பாகி கொடுத்து வைச்சவர். என்றாலும் கொஞ்சம் பயம்மாவும் இருக்கு! :) மலையைக் குடைந்து பாதை அமைத்தவரைக் குறித்து எப்போதோ படித்த ஞாபகம்.

  பதிலளிநீக்கு
 17. ரொம்ப வருடம் கழிச்சு நன்மனத்தின் பின்னூட்டம் பார்க்க சந்தோஷம்! :)

  பதிலளிநீக்கு
 18. நாகா நரேஷின் சாதனை அளப்பற்கரியது. அவரது மன உறுதியையும் உழைப்பையும் பாராட்ட வார்த்தைகள் இல்லை .
  நல்ல + செய்திகள்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!