Saturday, January 31, 2015

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.1) தாய்மையின் அன்புக்கு வயதேது?

2)  எப்படி வேண்டுமானாலும் வாழ்பவர்களும் இருக்கிறார்கள்.  இப்படித்தான் வாழவேண்டும் என்று இருப்பவர்களும் இருக்கிறார்கள் - இவரைப்போல.
 
 


3)  இதுவரை எந்த ஆட்சியாளரும் இப்படிச் செய்தது இல்லை என்று நினைக்கிறேன்.  (சிலசமயம் இப்படி மீட்கப்பட்டவர்கள் மறுபடி பழைய தொழிலுக்கே சென்று விடுவார்கள்) கோவை கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் 
 


4)  நாடென்ன செய்தது  எனக்கு, என்று கேள்விகள் கேட்பது எதற்கு?  நீ என்ன செய்தாய் அதற்கு? என்று நினைத்தால் நன்மை உனக்கு!"  தற்கொலைகளைத் தடுத்து நிறுத்தியதால், 'டிசைன் பார் சேஞ்ச்' என்ற சர்வதேச அமைப்பின் விருது பெற்ற ஆங்கில ஆசிரியர் ஆனந்த்
 


5)  பரத் செய்தது அவர் பெற்றோருக்கு எப்படி இருந்ததோ,  அவரைப் பொறுத்தவரையும் அவர் நண்பர் அஷ்வினைப் பொறுத்தவரையும் அசாதாரணமானது.  அஷ்வினின் விடாமுயற்சியும் திறமையும் பாராட்டுக்குரியது.
 6) 2002 லிருந்து புகை, மது பழக்கங்களிலிருந்து விடுபட்ட கிராமம்.  பாராட்டுக்கும், போற்றுதலுக்கும் உரிய நாகபூஷணா.
 7)  சின்னஞ்சிறு வீரர்கள்.  இளம் சிறார்கள்.
 


8) பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் உதவுவதற்கான அமைப்பு. ACT நிவேதிதா தேசாய்.
 9) தொழில் பயிற்சி.  நல்ல முயற்சி.


12 comments:

நாரதன் said...

நல்ல பதிவு

G.M Balasubramaniam said...

செய்தி -1. ஆதரவற்ற இருவர் ஒருவருக்கொருவர் துணை.
செய்தி-2 திருவள்ளுவர் தினத்தன்று இவரிடம் இரு டீ வாங்கிக் குடிக்கவேண்டும்.
செய்தி 3ம்4ம் ஏற்கனவே படித்தது.
செய்தி5 நட்பிற்கு இலக்கணம்..!
பரிந்துரைக்கப் படாத எத்தனை brave hearts இருக்கிறார்களோ.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

தமிழ் தமிழ் என்றுமுழங்கிக் கொண்டிருப்பவர்கள் செய்யாததை எல்லாம் அந்த ஏழைப் பெரியவர் செய்து விட்டார். இதுதான் உண்மையான தமிழ் தொண்டு

Thulasidharan V Thillaiakathu said...

தாய்மைக்கு வயதில்லை...அருமை...ஆனால் மனம் என்னவோ செய்கின்றது.

செவிக்கு உணவில்லாத போது வயிற்றிற்கு என்பது போய், செவிக்கும் தருகின்றேன், என்று டீயுடன் குறளும் ஆற்றும் டீ மாஸ்டர் வாழ்க!

அடுத்த இரண்டும் பார்த்தவை...

நண்பேண்டா!!! என்ற நட்பின் இலக்கணம்! அருமை!

குடியும், சிகரெட்டும் இல்லாமல் இப்படி எல்லா ஊர்களும் மாறினால் எப்படி இருக்கும்...சாரே ஜகான் ஸே அச்சானு பாடலாமே கம்பீரமா..

வீரமான இளம் சிறார்களைப் போற்றுவோம். பாராட்டுக்கள் அவர்களுக்கு...

ஆஅக்ட் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்!

Bagawanjee KA said...

Bravery Award பெற நம் மாநிலத்தில் இருந்து ஒருவர்கூட தேர்ந்தெடுக்கப் பட வில்லையே ?

திண்டுக்கல் தனபாலன் said...

தெருவுக்கொரு நாகபூஷணா தேவை...

Yarlpavanan Kasirajalingam said...

சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்

மதுரையில் யாழ்பாவாணனைச் சந்திக்க விரும்புவோருக்காக
http://eluththugal.blogspot.com/2015/01/blog-post_31.html

Mythily kasthuri rengan said...

இத்தனை ரோல் மாடல்களை ஒரே பதிவில் அறிந்துகொள்வது அசாத்தியமாய் இருக்கிறது சகோ! வாழ்த்துகள்!

வெங்கட் நாகராஜ் said...

பாசிட்டிவ் மனிதர்கள் தரும் பாசிட்டின் எனர்ஜி பரவட்டும்......

Geetha Sambasivam said...

கொஞ்சம் பொறுமையாப் படிக்கணும் போலிருக்கு. படிச்சுட்டு வரேன்.

Ranjani Narayanan said...

ஒரு ரூபாய்க்கு டீ கொடுத்து திருவள்ளுவர் தினம் கொண்டாடும் தங்கவேலனாருக்குப் பாராட்டுக்கள்.
கோவை கலெக்டருக்கு ஒரு பூங்கொத்து. எல்லா கலெக்டர்களும் இவரை பின்பற்றலாமே.
பெற்றோர்களின் தற்கொலையை தடுத்து நிறுத்தியதன் மூலம் எத்தனை குழந்தைகளுக்கு மனஅமைதியை கொடுத்திருக்கிறார் ஆங்கில ஆசிரியர் ஆனந்த்!

ஒரு நல்ல நண்பனின் இலக்கணத்தை எழுதியிருக்கும் பரத் வாழ்க!
தனது விடாமுயற்சியினால் ஒரு கிராமத்தையே மாற்றியிருக்கும் நாகபூஷனாவிற்குப் பாராட்டுக்கள்.
வீரச் சிறுவர்களுக்குப் பாராட்டுக்கள்.

ஆதரவற்ற பெண்களுக்கும், சிறுமியருக்கும் மறுவாழ்வு தரும் ACT நல்லதொரு முயற்சி.

மனநலம் குன்றியவராலும் தங்கள் வாழ்வை தாங்களே அமைத்துக் கொள்ள முடியும் என்ற செய்தி மனநிறைவைத் தருகிறது. இந்த முயற்சி வெற்றி பெற வேண்டும்.
பாசிடிவ் செய்திகள் சில சந்தோஷத்தையும், சில யோசிக்கவும் வைத்தன. உங்களின் இந்த சேவைக்கு ஒரு பெரிய மலர்கொத்து!

yathavan nambi said...

அன்பு தமிழ் உறவே!
ஆருயிர் நல் வணக்கம்!

இன்றைய வலைச் சரத்தின்,
திருமதி R.உமையாள் காயத்ரி அவர்களின்
"வலை - வழி - கைகுலுக்கல் - 2"
சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!
வாழ்த்துகள்!

வலைச் சரம் வானத்தில் வானவில்லாய்
உமது பதிவின் எழில் முகம் கண்டேன். களிப்புறேன்.
உவகை தரும் பதிவுகள் உயிரோவியமாய் திகழட்டும்!
தேன் தமிழாய் சுவைக்கட்டும்! திகட்டாமல் திக்கெட்டும்.

நட்புடன்,
புதுவை வேலு
WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM
(குழலின்னிசையின் உறுப்பினராகி உவகை தர வேண்டுகிறேன் நன்றி)

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!