Monday, January 5, 2015

திங்கக் கிழமை 150105 :: மசாலாப் பூரி.

               
தேவையான பொருட்கள்: 
கோதுமைமாவு : 2 கப். 
மைதா மாவு : 2 கப். 
மிளகு : ஒரு டீஸ்பூன். 
சீரகம்: இரண்டு டீஸ்பூன். 
மஞ்சள் தூள் : ஒரு சிட்டிகை. 
நெய் : இரண்டு டீஸ்பூன். 
தயிர் : அரை கப். 
நல்லெண்ணெய்: நானூறு மி லி 
உப்பு: தேவையான அளவு. 
பூரி இடுகின்ற பலகை. 
பூரிக் கட்டை (காணோம் என்றால், கணவரிடம் கேட்கவும். அவர் முன்னெச்சரிக்கையாக எடுத்து எங்காவது ஒளித்து வைத்திருப்பார்!) 
கொஞ்சம் பொறுமை. 
                 
கோதுமை மாவையும், மைதா மாவையும் நுண்ணிய துளைகள் கொண்ட சல்லடை மூலம் சலித்து, ஒன்றாக ஒரு பாத்திரத்தில் போடவும். 
  

மிளகையும், சீரகத்தையும் லேசாக வறுத்து, பொடி செய்து மாவுடன் சேர்க்கவும். பின்பு, தயிர், மஞ்சள் தூள், உப்பு, நெய் ஆகியவற்றைப் போட்டு, சிறிது தண்ணீர் விட்டு, மாவை கெட்டியாகப் பிசையவேண்டும். 
            
பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, அப்பளமாக இட்டுக்கொள்ள வேண்டும். 
         


ஒரு வாணலியில் நல்லெண்ணெயை ஊற்றி, அடுப்பில் வைக்கவும். (அடுப்பைப் பற்றவைக்கவும்) எண்ணெய் காய்ந்தவுடன், இட்டு வைத்த அப்பளங்களை ஒவ்வொன்றாக எண்ணெயிலிட்டுப் பொரிக்கவும். 
            
கவனமாக இருங்கள்: அப்பளம் ஒருபுறம் பொரிந்ததும், கண்கரண்டியால், அதைத் திருப்பி விடவேண்டும். இரு புறமும் மொறு மொறுவென்று பொரிந்ததும், கண்கரண்டியால் பூரியைத் தூக்கி, எண்ணெயை வடித்துவிட்டு, பூரியை ஒரு தட்டில் போடவும். 
           

இந்த வகையில் எல்லா பூரியையும் பொரித்து எடுத்துக்கொள்ளுங்கள். 
           

மசாலா பூரி தயார். 

இதை, தேங்காய் சட்னி அல்லது உருளைக்கிழங்கு மசாலா தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்! 
   
      

15 comments:

ரூபன் said...

வணக்கம்
ஐயா.
பிடித்த உணவு பற்றிய செய்முறை விளக்கம் நன்றாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

சாந்தி மாரியப்பன் said...

தேவையான பொருட்களின் பட்டியலிலும், செய்முறையிலும் அடுப்பைப் பற்ற வைக்கத்தேவையான பொருளைக்குறிப்பிடவில்லை. ஆகவே எப்படிப் பற்ற வைப்பது என்று தெரியாமல் முழித்துக்கொண்டிருக்கிறோம் யுவர் ஆனர்..

சாந்தி மாரியப்பன் said...
This comment has been removed by the author.
kg gouthaman said...

சாந்தி மாரியப்பன் said...
தேவையான பொருட்களின் பட்டியலிலும், செய்முறையிலும் அடுப்பைப் பற்ற வைக்கத்தேவையான பொருளைக்குறிப்பிடவில்லை. ஆகவே எப்படிப் பற்ற வைப்பது என்று தெரியாமல் முழித்துக்கொண்டிருக்கிறோம் யுவர் ஆனர்..

ஹா ஹா ஹா !!!!

திண்டுக்கல் தனபாலன் said...

சூப்பரு...!

G.M Balasubramaniam said...


இந்த மாவுக் கலவையை தயிர் நீர் சேர்த்துப் பிசைவதற்கு பதில் வேக வைத்த உருளைக் கிழங்கில் நீர் சேர்க்காமல் பிசைந்து எடுத்துக் கொண்டு பூரி இட்டால் அதுவே இன்னும் ஒருவித பட்டூரா ஆகும்.

Ranjani Narayanan said...

பண்ணிப் பார்த்துவிட வேண்டியதுதான்!

kg gouthaman said...

// Ranjani Narayanan said...
பண்ணிப் பார்த்துவிட வேண்டியதுதான்!//
அதுதான் சரி. சாப்பிட வேண்டாம்!

சென்னை பித்தன் said...

யாராவது செய்து கொடுத்தால் சாப்பிடலாம்!அருமை

-'பரிவை' சே.குமார் said...

மசாலா பூரி... அஹா... சாப்பிடணும்ன்னு ஆசை வந்தாச்சு...

‘தளிர்’ சுரேஷ் said...

படிக்கும் போதே ருசிக்கிறது! சமையல் குறிப்பையும் ருசியாக எழுத உங்களால் எப்படி முடிகிறது? அருமை! பகிர்வுக்கு நன்றி!

Thulasidharan V Thillaiakathu said...

இது செய்வதுண்டு. மிளகு சீரகம் வறுக்காமல் அப்படியே பொடி செய்து போட்டு.....எண்ணையில் பொரிக்கும் போது அதுவும் பொரிந்துவிடுமே....

மசாலா பூரி என்றவுடன் பொதுவாக வட இந்திய சாட் வகையைச் சேர்ந்த மசாலா பூரியோ என்று நினைத்தோம்....ம்ம்ம் வறுத்து பொடி செய்து சேர்த்தும் செய்து பார்த்து, டேஸ்டும் பார்த்துட்டா போச்சு...எண்ணைல பொரிச்சா எந்த பூரியும் நல்லா இல்லாமலா இருக்கப் போகுது...

ராமலக்ஷ்மி said...

கவனமாகத் தரப்பட்ட குறிப்புகள், செய்முறை. நன்றி :) !

Geetha Sambasivam said...

இதுக்குத் தொட்டுக்கல்லாம் ஒண்ணும் வேண்டாம். பண்ணி வைத்துக் கொண்டால் தினம் தினம் மாலை கொறிக்கவும் வைச்சுக்கலாம். வெளியூர்ப் பயணத்தில் சாப்பாடாகவும் வைச்சுக்கலாம். கூடவே கொஞ்சம் தக்காளி, காரட், வெங்காயம் உப்புச் சேர்த்துத் தூவிக் கொண்டு சாப்பிட்டால் சாப்பாடுப் பிரச்னை தீர்ந்தது. பல சமயங்களில் கை கொடுத்திருக்கு. :)

வல்லிசிம்ஹன் said...

Same product less maidha. comes out very well. pooris look yummy. thanks EB.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!