புதன், 21 ஜனவரி, 2015

கிருஷ் ஸ்ரீக்காந்த், பி ஹெச் பாண்டியன், புத்தகக் கண்காட்சி, காழியூர் நாராயணன் - வெட்டி அரட்டை


                                          


புத்தகக் கண்காட்சி இன்றுடன் நிறைவடைகிறது.

வாங்க நினைத்துச் சென்ற புத்தகங்கள் வாங்கவில்லை.  வேறு புத்தகங்கள் சில வாங்கினேன்.  பிரசவ வைராக்கியம் போல, அடுத்த முறை பு.கா போக வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.

விலை ஏறியபிறகு வெளியில் டீ 7 ரூபாய், 8 ரூபாய்.  உள்ளே என்றில்லை, புத்தகக் கண்காட்சி உள்ளேயும் வெளியேயும்  மொபைல் டீ போல கேனுடன் சுற்றியவர்கள் ஒரு டீ, அல்லது காபி (என்றுதான் அதைச் சொல்ல வேண்டும்) 12 ரூபாய் என்று விற்றார்கள் ஆதி கேட்டரிங். இணையச் சேவை எனக்கு வரவில்லை.  



வீதிகள் அகலமாய் வசதியாய் இருந்தன.  காலச்சுவடு பதிப்பகத்தில் எவ்வளவு ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்குகிறோமோ, அதில் பாதி அளவுக்கு இலவசமாய் சில புத்தகங்களைக் காண்பித்து எடுத்துக் கொள்ளச் சொன்னார்கள்.  அதில் பாதி அமவுண்ட்டை அவர்களுக்கே விட்டுக் கொடுத்து விட்டேன்!

நான் வாங்கியவற்றில் மௌனியின் படைப்புகளும், கு.ப.ரா சிறுகதைகளும் அடக்கம்.

=====================================================


                                                                                      

துக்ளக்கில் ஸ்ரீகாந்த் பேட்டி.  வாசகர்களுடன் உரையாடல்.  வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.  அவருடைய பலம், பலவீனங்களைச் சொல்லி இருக்கிறார்.  'காடா சுத்துறான்' னு தானே சொல்வீங்க' என்று கேட்டிருக்கிறார்!
 
                                                                                     
ஸ்ரீக்காந்த்துக்கு அப்போது ஏகப்பட்ட ரசிகர்கள்.  அதிரடி விளையாட்டை அதிக அளவில் பிரபலப்படுத்தியவர்.  விவ். ரிச்சர்ட்ஸ் ஒருமுறை பேட்டியில் தனது சாதனையை முறியடிக்க ஸ்ரீகாந்த்தால்தான் முடியும் என்று சொல்லி இருந்தார்.

கிரிக்கெட்டில் விவ். ரிச்சர்ட்ஸ், ஷேன் வார்னே, வாசிம் அக்ரம், இம்ரான்கான், அரவிந்த் டிசில்வா, ரணதுங்கா போன்ற வெளிநாட்டு கிரிக்கெட் ஆட்டக்காரர்களின் ஆட்டங்கள் இன்றும் பார்க்கப் பிடிக்கும்.

======================================================


                                                                   

எஸ் வி சேகர் மைலாப்பூர் எம் எல் ஏ வாக இருந்தபோது 300 கோடி ரூபாய்க்கு வேலைகள் நடந்தன. அதில் ஒரு பைசா கூட கமிஷன் வாங்காத நேர்மையான எம் எல் ஏ என்று இன்றளவும் மக்களால் புகழப்படுகிறார்.. 

"ஒருவரைத் திருப்திப்படுத்துவதற்காக தரம் தாழ்ந்து ஒரு விமர்சனத்தைச் செய்யக்கூடாது.  இங்கு அரசியலில் யாருக்குமே விசுவாசம் இல்லை.  பயம்தான் இருக்கிறது.  உண்மையான விசுவாசத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்" என்கிறார். இது கல்கியில்.

===================================================

                                                                
பி ஹெச் பாண்டியன் "என்னிடம் வரும் கட்சிக் காரரிடம் 'இந்தக் குற்றத்தை நீ செய்தாயா?' என்று நான் கேட்பதில்லை" என்கிறார். மகாபாரதத்தில் போரைத்தொடங்க சகாதேவனிடம் நாள் குறித்துக் கேட்ட துரியோதனை உதாரணமாகச் சொல்கிறார். 

அவர் சந்தித்த சுவாரஸ்யமான கிரிமினல் வழக்குகள் பற்றிய புதிய தொடர் கல்கியில்.

========================================================

                                                                              
ஒருவரது ஜாதகத்தில் பத்தாம் இடத்தில் சூரியன் சிறப்பான முறையில் இருந்தால் அவருக்கு அரசு வேலை கிடைக்குமாம். இதுவும் கல்கியிலேயே புதிய பகுதி.  காழியூர் நாராயணிடம் கேள்வி கேட்டு பதில் பெறலாம்.  ஜாதகத்தில் எது எப்படி இருந்தால் பொதுவாக  இந்த,இந்தத் தேவைகள் நிறைவேறும் என்று கேட்கிறார்கள்.

=========================================================



மாடு மேய்க்கத்தான் லாயக்கு என்று சொல்லப் படுவதை எதிர்க்கிறார்கள் இரண்டு (மாடு மேய்க்கும்) கிராமத்துத் தொழிலதிபர்கள். செய்து பாருங்கள் என்கிறார்கள்.  மாடு மேய்ப்பவர்களுக்கு ஒரு நாளைக்கு 400 ரூபாய்ச் சம்பளமாம்.  சமீபத்தில் வறுத்த (வருத்த!!)  விற்க 12,000 ரூபாய் சம்பளம் என்று விளம்பரம் பார்த்தது நினைவுக்கு வருகிறது.

=====================================================
.

25 கருத்துகள்:

  1. சின்னச் சின்னச் செய்திகளாய் இருந்தாலும் அருமையான தொகுப்பு...
    வாழ்த்துக்கள் அண்ணா...

    பதிலளிநீக்கு
  2. அனைத்தையும் அறியத் தந்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  3. ஜெயா சூர்யாவுக்கு முன்பாக முதல் ஓவர்களில் ரன்குவிக்கும் ட்ரெண்டை துவக்கியவர் ஸ்ரீகாந்த்
    செய்தித் தொகுப்பு
    புத்தகக் கண்காட்சி சற்று அலுத்துவிட்டது போல்தான் தோன்றுகிறது. 50 ரூபாய் சீசன் டிக்கெட் வாங்கியும் இரண்டு முறை மட்டுமே போய்வந்தேன்.
    எஸ்.வி சேகரைப் போன்றவர்களை மக்கள் தேர்ந்தெடுப்பதில்லையே.

    பதிலளிநீக்கு
  4. புத்தகக் கண்காட்சிக்கும் டிக்கெட்டா? அநியாயமா இருக்குதே?

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்
    ஐயா.

    தகவலை நானும் அறிந்தேன்... பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  6. இது எப்போப் போட்டீங்கனு தெரியலை. லேட்டா அப்டேட் ஆகுது; அல்லது ஆகிறதே இல்லை. :) நல்ல தொகுப்பு.

    பதிலளிநீக்கு
  7. பல சமயங்களில் பல பதிவுகள் மிஸ் ஆகிவிடுகின்றதுதான்....

    வெட்டி அரட்டையும் ரசனையாகத்தான் இருக்கின்றது. எஸ்.வி சேகரைப் பற்றிய ஒரு புதிய தகவல்.....(துளசி, கீதா)

    மாடு மேய்க்கும் கண்ணா என்று என் பையனும் மாடுதான் மேய்க்கின்றான்....ஹஹஹஹ மாட்டை வயலில் மேய்த்தாலும் சரி, கிளினிக்கில் மேய்த்தாலும் சரி....அவர்கள் சொல்லுவது போல் வாழ்க்கையை ஓட்ட பணம் கிடைக்கும்.....கூடவே அதிர்ஷ்டம் என்ற ஒரு வார்த்தையையும் சேர்த்துக் கொண்டால்.....அது கொஞ்சமேனும் வேண்டும்....இல்லை என்றால் உழைப்பு இருந்தாலும் ஊத்திக்கும்.....அனுபவம் பேசுகின்றது.....கீதா

    பதிலளிநீக்கு
  8. உண்மை நேர்மை என சுவாரஸ்யமான தகவல்கள்...

    பதிலளிநீக்கு
  9. அருமையான தகவல் தொகுப்பு. பார்ப்போம் அடுத்த வருடமமும்
    "/அடுத்த முறை பு.கா போக வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.//"
    இதைத்தான் சொல்கிறீர்களா என்று!!!

    பதிலளிநீக்கு
  10. அப்ப இந்த புக்ஃபேர்லயும் என் புக் அன்னபட்சி வாங்கல. அப்பிடித்தானே தப்பிச்சிட்டதா சந்தோஷப் படாதீங்க நேர்ல பார்க்கும்போது கொடுப்பேன். ஹாஹாஹா ( என்னா ஒரு வில்லத்தனம் எனக்கு . :)

    ஆமா ஸ்ரீகாந்த பேட்டிங்க தம்பி சித்தப்பாக்கள் எல்லாம் கட்டை போடுறது இல்லாட்டி தோசை திருப்புறதுன்னுல்ல சொல்வாங்க. நான் கிரிக்கெட்ல அப்டேட் ஆகல அதுக்குப் பின்னாடி.:)

    பதிலளிநீக்கு
  11. bating. இது பாட்டிங்கா பேட்டிங்கா தமிழ்ல எப்பிடி. புதுசா இன்னொரு ஐடில தமிழ க்ளிக்கிட்டா அது ஃபேஸ்புக்குலேயே இருக்குன்னு சொல்லிச்சா. என்ன ஆச்சுன்னா எல்லாமே தமிழ்மயமாகி கொஞ்ச நேரம் புரில. பிடித்திருக்கிறதா பிடிக்கவில்லையான்னு.

    சொல்லப் போனா நாம் எல்லாம் தமிழ் கில்லிங்கன்னு சொல்லி ரவிநாக்தான் பரிந்துரைச்சிருக்காரு. காலக் கொடுமை. சும்மா விடமாட்டேங்குறாங்க . இருக்க வேலையப் பார்க்கவே முடில. இதுல ஃபேஸ்புக்குல தமிழ் அட்வைஸா. :)

    பதிலளிநீக்கு
  12. ஸ்ரீகாந்தின் பேட்டிங் போலவே பவுலிங்கும் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று! ஒரே கல்கி விளம்பரமா இருக்கே! ஆனாலும் சுவையான பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
  13. நல்ல அருமையான செய்தி தொகுப்பு.

    பதிலளிநீக்கு
  14. எஸ்.வி.சேகர் கிட்டேப் பிடிக்காத விஷயம் அடிக்கடி அவர் கட்சி மாறுவது தான். :) மற்றபடி கிரிக்கெட்டில் ஸ்ரீகாந்துக்கு அப்புறமா யாருமே தமிழ்நாட்டிலிருந்து சொல்லிக்கிறாப்போல் வரலை! பாலாஜி வருவார்னு நினைச்சேன். என்னவோ ஆயிடுச்சு. ஒரே ஒரு முறை பாகிஸ்தானில் ஆடினப்புறமா அவர் தேர்ந்தெடுக்கப்படவே இல்லை!

    பதிலளிநீக்கு
  15. கல்கி படிக்கிறதே இல்லை. அவ்வளவு ஏன்? வார இதழ்கள் படிச்சே எத்தனையோ வருடங்கள் ஆகின்றன. விகடனில் இப்போது சொல்லிக்கொள்ளும்படியாகக் கதைகள் வருவதாகவும் கேள்விப் பட்டேன். உண்மையா?

    பதிலளிநீக்கு
  16. பரிவை சே. குமார்
    உமையாள் காயத்ரி
    டி என் முரளிதரன்,
    பழனி. கந்தசாமி ஸார்,
    ரூபன்,
    கீதா சாம்பசிவம்,
    துளசிதரன்ஜி, கீதா சிஸ்டர்,
    டிடி,
    சொக்கன் சுப்பிரமணியன்,
    தேனம்மை லக்ஷ்மணன்,
    தளிர் சுரேஷ்,
    வெங்கட் நாகராஜ்,
    கோமதி அரசு மேடம்,

    அனைவருக்கும் நன்றி... நன்றி...

    பதிலளிநீக்கு
  17. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  18. புத்தகக்கண்காட்சியும், சில புத்தகங்களும் சுவையான தொகுப்பு சகோ! reCAPTCHA ரொம்ப படுத்துது சகோ:((

    பதிலளிநீக்கு
  19. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  20. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  21. புத்தகக்கண்காட்சியும், சில புத்தகங்களும் சுவையான தொகுப்பு சகோ! reCAPTCHA ரொம்ப படுத்துது சகோ:((

    பதிலளிநீக்கு
  22. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  23. புத்தகக்கண்காட்சியும், சில புத்தகங்களும் சுவையான தொகுப்பு சகோ! reCAPTCHA ரொம்ப படுத்துது சகோ:((

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!